Saturday, August 13, 2011

வசிய மந்திரம்


அவன் அவள் அது :13


ஆத்தாளை அடுத்த பிற்பாடு 2000 டிசம்பர் 23 முதல் ஏற்பட்ட என் ஆன்மீக அனுபவங்களை ஒன்னு விடாம சொல்லனுங்கற உத்தேசத்தோட தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். எந்த மேட்டரா இருந்தாலும் க்ளைமாக்ஸ் கண்ணுக்கு தெரியற வரைதேன் ப்ரிப்பரேஷ்ன்லாம். அதுக்கப்பாறம் காட்டடிதேன்.
எந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாம ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுருவம்.

கில்மா மேட்டர் எழுதினப்பல்லாம் இந்த ஃபார்முலா நல்லா தான் போயிட்டிருந்தது . அவளை பத்தி எழுத ஆரம்பிச்சா எல்லாமே முரண்டு பிடிக்குது. இந்த ஃபார்ம் இல்லாத ஃபார்ம் தான் அவளுக்கு இஷ்டம் போல.அப்பத்தானே என்னை குழப்பின மாதிரி படிக்கிறவுகளையும் குழப்ப முடியும். சரி.. ஆத்தா விருப்பமே நம்ம விருப்பமும்.

ஆத்தாளுக்கு நாம கொடுக்கிற மாமூல் ரெம்ப சிம்பிள்.தினசரி ஒரு தம்ளர் மஞ்சள் நீர் வாரத்துக் கொருதரம் பத்து ரூவா பட்டை லவுங்கம். பத்து ரூவா எலுமிச்சம்பழம்.அம்புட்டுதேன். பட்டை லவுங்க சமாசாரம் சஸ்பென்ஸ்.

தினசரி வெளிய கிளம்பும் போது அந்த மஞ்சத்தண்ணியில ஒரு ஸ்பூன் விட்டுத்தேன் சந்தனம் உரைச்சு நெத்திக்கிட்டுக்கறது.

பூஜை ,புனஸ்காரம்லாம் ஒரு மண்ணும் கிடையாது.மைண்டுல ஒரு ட்ராக்கை ஆத்தாளுக்கு ஒதுக்கியாச்சு.அதும்பாட்டுக்கு ஓடிக்கினு இருக்கும்.அந்தாசா மாசத்துல ஒரு தினம் ரெம்ப சுஸ்தா இருந்தா க்ரூப் ஸ்டடி மாதிரி சகல தேவதா ஸ்தோத்திரத்துல ஆத்தாளுக்குன்னு நாம ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கிற சங்கல்ப்ப ஸ்லோகம் உட்பட ஒரு பாட்டம் சொல்லிருவம்.

எப்பயாச்சும் ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க கழுகு தளத்துலல்லாம் போய் போலி கமெண்டு போட்டா ம்னசு கொஞ்சம் சங்கடமாயிட்டா சத நாமாவளியை ஒரு தாட்டி சொல்லிருவம்.

சத நாமாவளி சொல்ற சந்தர்ப்பம் வர 3 மாசம் 6 மாசம் கூட ஆகும். எப்பயாச்சும் மனசு பஸ்டான லாரி ட்யூப் மாதிரி ஆயிட்டா ஊருக்கு வெளிய இருக்கிற அம்மன் கோவிலண்டை போய் காம்பவுண்டுக்கு வெளிய இருந்து தம் போட்டுக்கிட்டே கொஞ்ச நாழி சாட் பண்ணிட்டு வந்துருவம்.

இதுக்கே ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்திருக்கான்னு கணக்கெடுத்தா பயங்கர கில்ட்டி வருது. நாம வாழ்ந்த வீடுகளோட லட்சணங்களை சொன்னா வா.வெ.

கதவில்லாத வீடு ,கரண்டில்லாத வீடு ,கழிவறை இல்லாத வீடு ,குளியலறை இல்லாத வீடு , கூரையே இல்லாத வீடு,விலாசமில்லாத வீடு இப்படி ஒன்னிலை ..ஒன் டு ஃபைவ் வாடகை தரனும்னா ஒன்னாம் தேதிக்கு ஒரு வாரம் முந்தி வரை ஆயிரமாயிரமா வந்து போயிருக்கும். ஆனால் இனி எந்த கமிட்மெண்டும் இல்லை . வாடகை ஒன்னுதேனு நினைக்கும் போது லெச்சுமி அக்கா அவுட் ஆஃப் ஸ்டேஷன் ஆயிருவா.

ஆனால் ஆத்தாவுக்கு நம்ம ஹார்ட்ல இடம் கொடுத்ததுலருந்து நமக்குன்னு ஒரு இடம் சந்தில,மந்தியில நிக்காம நாலு பேரை போல "குட்டா" (ரகசியமா) வாழ்ந்துக்கிட்டிருக்கம். ஒரு வகையில ஜெ மந்திரி சபையில மந்திரி மாதிரி வச்சுக்கங்களேன். ஆத்தா ஒருத்திக்கு ஹார்ட் ஃபுல்லா ஹானஸ்டா இருந்துட்டா ஒரு பிரச்சினையும் கிடையாது.

பிரச்சினை வரும். ஆனால் அதுவும் நமக்கு ஜாக்பாட்டாவே முடியும். பழக்க தோஷத்துல (ஈகோ) சொல்யூஷனுக்கெல்லாம் ட்ரை பண்ணுவம். ஒரு ஸ்டேஜ்ல ரியலைஸ் ஆகி அப்படியே டீல்ல விட்டுர்ரது.டீல்ல விட்டதும் பிரச்சினை ஃபணால்.

ரெகுலர் பவர் கட்டு பத்தி சொன்னேனே.. அப்பம் காசிருக்கிற திமிர்ல யு.பி.எஸ் எல்லாம் வாங்கிட்டன்.படக்குன்னு ரியலைஸ் ஆகி ஸ்டுடியோவுக்கு கொடுத்துட்டன். அப்படி கொடுத்த நாள்லருந்து பவர் கட் சீசன் முடியறவரை என்.டி.ஆர் ரேஞ்சுதேன். விடியல்3 மணிக்கு விழிப்பு வந்துரும். பவர் கட்டாவது மசுராவது..

போன வாரம் வரை கூட மதியம் 1 முதல் 3 வரை தான் பவர் கட். அப்பாறம் அதை தூக்கிட்டானுவ. இன்னைக்கு (சனிக்கிழமை /ஆகஸ்ட் 13,2011) தாளி மெயின்டெய்னன்ஸுன்னு காலையிலருந்து மதியம் 2 வரை பவர் கட்டு. தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அனத்தறாய்ங்க.மொதல்ல ஒழுங்கான மின்சாரத்தை கொடுங்கய்யா.அவிகளை சொல்லியும் புண்ணியமில்லை. கன்சம்ப்ஷன் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே வருது.

கொய்யால வீடு கட்டறானுவ ஒரு சன்னல் கிடையாது ,வென்டிலேட்டர் கிடையாது, அப்படியே இருந்தாலும் சாக்கடை நாத்தம் தேன் வரும்.அல்லது சன்னல் வழியா கம்பி விட்டு திருடறாய்ங்க.என்ன பிழைப்பு இது நாய் பிழைப்பு.

இதையெல்லாம் சால்வ் பண்ணனும்னா பொது நல நோக்கோட செயல்படனும். தாளி .. கூட்டி/காட்டி கொடுத்து ஏர் கூலர் வாங்கறானே தவிர சென்ட்ரல் ஏசிக்கு ப்ளான் பண்றானே தவிர எங்கன கோட்டை விட்டோம்னு எவனும் ரோசிக்கமாட்டேங்கறான்.

அவளை பற்றி எழுத ஆரம்பிச்சாலே இப்படி கச்சா முச்சான்னு ட்ராக் மாறி பூடுது. அது சரி அகஸ்மாத்தா கூகுல்ல எதையோ தேடி இங்கன வந்தவுகஅவள்னா யாருனு கேப்பிக. சொல்றேன்.

அவள்னா அது உங்க அம்மா/எங்க அம்மா நம்ம அம்மாக்களை எல்லாம் பெத்த அம்மாலருந்து நம்ம எல்லாத்துக்கும் மூலமான ஒரு செல் அங்க ஜீவியான அமீபா வரை எல்லாத்தயும் இந்த ஒட்டு மொத்த இயற்கையையும் குறிக்கிற ஒரு சொல்.

அவள் முரண்பாடுகளின் மொத்த உருவம். குழப்பங்களின் கூடாரம். எவளுக்குள்ளயும் ஆணினம் அவளைத்தான் தேடுது. அவளைபத்தி செலாவணியில உள்ள நாமாவளியை சொன்னா பீலா விடறதா தோணும்.

ஆனா எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.

சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் - இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க.

ஸ்தோத்ர ப்ரியேன்னு சொன்னாலும் அவள் தான் . அதுக்காவ விமர்சனம் பண்ணா ஜெ மாதிரி கஞ்சா கேஸ்ல தூக்கி போட்டுரமாட்டா.நிந்தா ஸ்துதின்னாலும் அவளுக்கு பிரியம் தேன்.நான் எல்லாம் ரெம்ப பர்சனலா,வில்லங்கமால்லாம் கேள்வி கேட்டிருக்கேன்.

ஒரு தாட்டி பயங்கர கடுப்புல சத நாமாவளியை எதிர்க்க வச்சுக்கிட்டு அதுல ஒன்னு கூட பொருந்தாதுன்னு எஸ்டாப்ளிஷ் பண்ணி சுந்தர தெலுங்குல எழுதி தள்ளினேன்.அதுக்கப்பாறம் தேன் நம்ம வாழ்வில் பயங்கர ( ஐ மீன் பாசிட்டிவ்) திருப்பங்கள்.

மந்திரம் உபதேசிச்ச பார்ட்டி தான் சொன்ன பீஜாக்ஷர மாலையை வவ்ஷட்னு ஒரு லட்சம் தடவை , ஹும் பட் ஸ்வாஹான்னு ஒரு லட்சம் தடவை வஷக் வஷக்னு ஒரு லட்சம் தடவை சொல்லி முடிக்க சொன்னாப்ல.

நாமதேன் ஏடாகூட பார்ட்டியாச்சே. ஆரம்பத்துலருந்தே வஷக் வஷக்னு முடிக்க ஆரம்பிச்சோம். இதுக்கு வசியமாகுன்னு அர்த்தம் போல. இது ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்ச பிற்பாடு சாலையில நமக்கு முன்னே போறா ஆணோ பெண்ணோ நம்மை திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே போவாய்ங்க.சிலர் நம்ம பார்வை படற பகுதிகளை ( பின்னந்தலை /முதுகு) தடவி விட்டுக்குவாய்ங்க.

இது ஏதோ ஒர்க் அவுட் ஆறாப்ல இருக்குன்னு உறைச்சதும் இதை பிரயோகம் பண்ண ஆரம்பிச்சோம்..மொதல்ல சாமானியர்கள் மேல. அப்பாறம் விஐபிக்கள் மேல கடேசியில கொய்யால எல்லாத்துக்கும் மூல காரணம் காசு பணம்தானே அதை வசியம் பண்ணிட்டா பிரச்சினை ஓவரில்லையான்னு லெச்சுமிக்கே வச்சோம் டார்கெட்டு .அந்த அனுபவங்கள் அடுத்த பதிவுல