Sunday, August 21, 2011

அவன் அவள் அது :19


கடந்த பதிவில் ஒரு நிருபனை பற்றி சொல்லியிருந்தேன்.அவன் எந்த அளவுக்கு சாலாக்கான பேர்வழி, பவர் ஃபுல் பர்சன்னு ரெண்டு உதாரணங்கள் மூலமா சொன்னாத்தான் அவனோட மோதினது ஏறக்குறைய தற்கொலை முயற்சி மாதிரிங்கறது உங்களுக்கு புரியும்.

உதாரணம்:1

நம்ம ஊர்ல நம்ம சாதிக்குன்னு ஒரு சங்கம் உண்டு.( எல்லா ஊர்லயும் இதே செனேரியோல தான் சாதி சங்கங்கள் இருக்கும்னு சம்சயம்) சங்கம் பத்தி சொல்ல ஆரம்பிச்சா அகில உலக முதலியார் சங்கம் ஃபத்வா வெளியிடுமோ என்னவோ? ஆமாங்க ஏ.சி அண்ணன் எப்படி இருக்காரு. சத்தத்தையே காணோமே.
அந்த சங்கத்துல ஒரு ஃபுல்டைமர். ஃபைனான்சியலா ஷெட். பஜார்ல ஒரு லட்சம் அட்வான்ஸ், அஞ்சாயிரம் ரூவா வாடகை பெறுமானமுள்ள கடையை பிடிச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாரு. அதை வேற ஒரு பார்ட்டி வாங்கிருச்சு. ( அந்த கடையோட இன்னம் நாலு க்டை சேர்த்து)

சங்கத்து ஃபுல்டைமர் உனக்கும் பெப்பே உங்க தாத்தனுக்கும் பெப்பேன்னு கோர்ட்டை வச்சுக்கிட்டு ஃபிலிம் காட்டிக்கினு இருந்தாரு. அப்பம் கேஸு நம்ம நிருபர் திலகம் டேபிளுக்கு போச்சு.

சங்கம் ஒன்னும் அந்த அளவுக்கு டம்மியில்லை. வெள்ளையும் சள்ளையுமா ஸ்டேஷன்ல போய் உட்கார்ந்து பேசற ரேஞ்சுதேன்.

நம்ம நிருபர் திலகம் என்ன பண்ணாரு தெரீமா.ஒரு மழை நாளா பார்த்து டி.எஸ்.பி ரேஞ்சுல அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பாடு பண்ணி டிப்பரை அனுப்பி ஃபுல்டைமரோட கடைய ச்சொம்மா எத்திவிட்டுட்டாரு.

சங்கம், சாதி சனம் தலைகீழ நின்னு என்னென்னமோ பண்ணாலும் நம்ம நிருபர் திலகம் தனி ஒரு ஆளா நின்னு மேனேஜ் பண்ணிட்டாரு.

உதாரணம் 2:

நிருபர் லேட்டஸ்டா வேலைக்கு சேர்ந்த ஆந்திரபிரபாவுலயும் விளம்பர பணத்தை இஷ்டாத்துக்கு வேட்டு விட்டுட்டாரு. பெரிய்ய அமவுண்டு.ஹைதராபாத்லருந்து ஏடிவிடி மேனேஜரும் -திருப்பதிலருந்து ஏடிவிடி ரிஜினல் மேனேஜரும் சித்தூர் வந்திருக்காய்ங்க.

நிருபருக்கு ஃபோன் பண்ணா மதியம் வரை இங்க இருக்கன் அங்க இருக்கன் ஃபிலிம் காட்டியிருக்கான். கடேசியில வீட்டுக்கு வந்துட்டன் வாங்கன்னுருக்கான்.

ரெண்டு மேனேஜரும் போயிருக்காய்ங்க. ஏதோ டைம் கொடுத்து வார்ன் பண்ணாப்ல இருக்கு. அவ்ளதேன். நம்மாளு நேர போயி என் பொஞ்சாதி கைய பிடிச்சு இழுத்துட்டாய்ங்கன்னு டி.எஸ்.பி கிட்டே கம்பெயிண்ட் பண்ணிட்டான். (2003) இந்த கேஸு இன்னிக்குவரை நடந்துக்கிட்டுதான் இருக்கு. நிருபர் திலகம் மட்டும் தன் பாவம் பழுத்து (புழுத்து) தலைமறைவா இருக்காரு. இத்தனைக்கு பிறகும் அதே பத்திரிக்கையில ஸ்டாஃபரா தொடரும்போதுதேன் நாம ஆருக்கு ஓட்டுப்போடனும் கமாண்ட் பண்ணான்.

நாம வெளிய வந்து ஆந்திரபிரபாவுக்கு அன்றைய நியூஸ் ஃபேக்ஸ் செய்து - நடந்த விஷயத்தை சுருக்கமா சொல்லி - என்னை ஆந்திரபிரபாவுக்கு கொண்டு வந்தது அந்தாளு -அவன் கெட் அவுட்டுன்னிட்டான் - அதனால நான் நிருபனா இல்லையான்னு டிசைட் பண்ணுங்கன்னுட்டு இன்னொரு ஃபேக்ஸும் கொடுத்தேன்.

அதே ஃபேக்ஸ் நெம்பர்ல மேனேஜர் லைனுக்கு வந்து " கொய்யால நீ தான் ரிப்போர்ட்டர். அவன் ரிப்போர்ட்டரா இல்லையான்னு நான் சித்தூர் வந்து டிசைட் பண்றேன்னுட்டாரு.

அப்போ ஆந்திரபிரபா நிதி நிலை ரெம்ப மோசம். (எக்ஸ்பிரஸ் க்ரூப்புலருந்து வெளிய வந்துருச்சு) மேனேஜர் சித்தூர் வந்தாரு. நம்ம ப்ளஸ் ( எழுத்துத்திறமை / கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) மைனஸ்
( விளம்பர சேகரிப்பு ) எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு.. ...........

கொய்யால இனி இந்த ஆஃபீஸ் -பவர் -ஃபோன் எந்த மசுரும் தேவையில்லை. இதுக்கெல்லாம் ஆவற செலவை உனக்கு சம்பளமா தரேன்னுட்டு ஆஃபீஸ் ஃபர்னிச்சர்ஸ் - கம்ப்யூட்டர் எல்லாத்தையும் லாரி சர்வீஸ்ல திருப்பதிக்கு புக் பண்ணிட்டுத்தான் போனாரு.

நம்ம நிருபர்திலகம் என்ன பண்ணாரு தெரீமா? ஆஃபீஸ்ல தன்னோட(?) டேபிள் ட்ராயர்ல டைமண்ட்ஸ், கரன்சி , ஃபாரின் செல்ஃபோன்லாம் வச்சிருந்ததாவும் அதையெல்லாம் மேனேஜர் + ஏடிவிடி மேனேஜர்+ சித்தூர் முருகேசன் என்ற மூவர் ஆட்டைய பொட்டுட்டதாவும் சித்தூர் கிரைம் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் ஃபைல் செய்தாரு..

சி.ஐ .அனுப்பினதா ஒரு ஏட்டு நம்ம வீட்டுக்கு வந்து சி.ஐ.கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னதா இஷ்டத்துக்கு அலப்பறை பண்ணாரு.

இந்த சிச்சுவேஷன்ல ஆத்தா நமக்கு எப்படி துணை நின்னாங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன். -