Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, October 24, 2011

ஒரு அனுபவம் - சில பாடங்கள்


சின்னவயசுல சித்தி வீட்டுக்கு போறச்ச -மூட்டை முடிச்சை இறக்கிவச்சுட்டு நாம வாய திறந்தா அந்த வீட்ல எந்த வேலையும் ஓடாது. அல்லாரும் நம்ம வாய பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. அந்த வீட்ல நமக்கு ஒரு அக்கா, நாலு தங்கச்சினு ஞா. சித்தி மட்டும் என்னவாம் ஒரு பக்கம் திட்டித்தீர்த்துக்கிட்டே கரண்டியும் கையுமா சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தபடி இருப்பாய்ங்க. நம்ம வாய் சாலம் அப்படி.

அந்த வயசுல முக்கியமா பட்ட மேட்டர்லாம் இப்பம் சப்பை மேட்டராயிருச்சு. அதனால வயசு பிள்ளைங்க கிட்ட எதையாவது பேசனும்னா ரோசிக்க வேண்டியதாயிருக்கு. துருக்கி பூகம்பம்தேன் நம்மை அதிகமா பாதிக்குது. இப்பம் கேரளா ,தமிழகத்துல 3.5 வருசத்துல பூகம்பம் கியாரண்டின்னு சொல்றாய்ங்க.

பூகம்பத்தை விட அதை ஃபேஸ் பண்ணக்கூடிய நிலையில இல்லாத அரசு இயந்திரம்தேன் பேதியாக்குது.பசங்க கிட்டே இடையில என்னப்பா போரடிக்கிறேனா? ச்சொம்மா என் திருப்திக்கு சொல்லாதே..போரடிச்சா சொல்லிருன்னு பேசவேண்டியதாயிருக்கு.

நியூஸ் பேப்பரை எடுத்தா சில பிள்ளைங்க கிரிக்கெட் -சினிமா மட்டும் பார்த்துட்டு (அண்டர்லைன்) போட்டுர்ராய்ங்களா பகீருங்குது. அத்வானியோட மொத ரதயாத்திரையின் போது ஹின்டுவை கூட படிக்கவேண்டியதாயிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இதனால வீட்ல சின்ன உலகயுத்தமே நடக்கும்.

ஆனால் நம்ம பசங்க ஊஹூம்.. தெலுங்கு பேப்பர்ல தாய்குலத்துக்குன்னு ஒரு இணைப்பு வச்சிருப்பாய்ங்க. வாழைப்பழத்துல அழுகின பாகத்தை கிள்ளிபோடறாப்ல அதை கழட்டி வீசினப்பறம் தான் நாம பேப்பரையே படிக்க ஆரம்பிப்போம்.ஆனால் அதை என்னமோ எஸ்.எஸ்.சி ரிசல்ட் வந்த பேப்பர் மாதிரி என் பொண்ணு வாரிக்கிட்டு போறதை பார்த்தா பகீருங்குது.

நம்ம வாய் சாலத்து மேல நம்பிக்கைய வச்சு ஒரு மேட்டரை சொல்லலாம்னுதேன் இந்தபதிவை ஆரம்பிச்சோம். ரெம்ப சாதாரணமான சம்பவங்கதேன்.ஆனால் இந்த சம்பவங்களை இயற்கை கோர்க்கிற விதமிருக்கே ச்சொம்மா சொல்ல கூடாது நெசமாலுமே தூள் தான்.

நாம விளம்பரத்தையே உள்ளடக்கமா கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்தறது உங்களுக்கு ஞா இருக்கலாம். ஆரம்பத்துல டிடிபி,டிசைன்னு ரெம்பவே அல்லாட வேண்டியிருக்கும்.

இடையில மக டிசைன்ல விளையாட ஆரம்பிச்சபிறகு இம்சை குறைஞ்சது. ( நம்ம சுகுமார்ஜி அவளோட டிசைனை பார்த்துட்டு கண்ணு வலிக்குதுன்னுட்டாரு - அப்படி சொன்னதோட நிக்காம கலர் செலக்சனுக்கு ஒரு சூட்சுமத்தையும் சொல்லிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கிட்டாரு.) இப்பம் தீபாவளி ஸ்பெஷல் டிசைன் பண்ணிக்கிட்டிருக்கம்.

நாம வாழறது தெலுங்கு தேசத்துலயாச்சே அதனால என்னதான் வெறுமனே விளம்பரம்னாலும் சுந்தரதெலுங்குலயும் மேட்டர் வரும். வந்தே தீரும். இந்தபிரச்சினைய ராம்பாபு சாஃப்ட்வேரை வச்சு சமாளிச்சிட்டிருந்தோம். சிஸ்டத்தை ஃபார்மட் அடிக்கிறப்ப பேக் அப் எடுக்காம கோட்டை விட்டாச்சு.

நெட்ல தேடு தேடுன்னு தேடறோம். ஒன்னும் பெயரலை. தேடலின் சமயம் மாலை 4.30 முதல் 7 வரை. பொஞ்சாதி டிவி ரிமோட்டை தேட நொந்து போயிட்டம். கொய்யால தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறதெல்லாம் பீலாவா? எவனோ ஒருத்தனுக்கு அம்பதோ நூறோ கொடுத்து அடிச்சுவிடாம இந்த ஸ்ட்ரெய்ன் தேவையான்னு ஆயிருச்சு.

சில அட்வர்டைசர்ஸை சந்திக்கவேண்டியிருந்ததால தேடும் பணியே பணியா கொள்ளாம வெளிய புறப்பட்டாச்சு. ஒரு பார்ட்டி ஃபோட்டோ கொடுக்க அதை ஸ்கான் பண்ணியாகனும். வீட்ல மெகாசைஸ் ஸ்கானர் இருந்தாலும் அதை கனெக்ட் பண்ணா தாளி கீ போர்ட் வேலை செய்யாது அ மௌஸ் வேலை செய்யாது அ ரெண்டும் வேலை செய்யாது.

இந்த லொள்ளை தாங்கமுடியாமயே ஸ்கான் பதிவுக்கெல்லாம் லாங் லீவ் விட்டாச்சு.அதனால ஓரளவு பழக்கமான நெட் சென்டருக்கு போய் ஸ்கான் பண்ண சொன்னேன்.

கொக்குக்கு ஒன்னேமதிங்கற மாதிரி டொக்கா நெட் ஆசாமிய தெலுங்கு சாஃப்ட்வேர் பற்றி விஜாரிச்சேன். அவரு அங்குர் சாவ்ட் வேரை சிபாரிசு பண்ணதோட சி.டி.கொண்டாங்க லோட் பண்ணித்தரேன்னாப்ல.

ரூ.25000 ஐ ஒரே நாள்ள செலவழிச்ச ரிக்கார்டுக்கு சொந்தக்காரங்கற பயத்துல வெளியவர்ரச்ச ரூ30க்கு மேல கொண்டு வர்ரதில்லை. அந்த ரூ30 செலவழியற வரை வீடு திருமபறதில்லை. செலவழிஞ்சுட்டா வெளிய நிக்கறதில்லை.

பையில பார்த்தா சிடிக்கு தான் தேறும் போல.என்னதான் சாஃப்ட் வேர் ஓசின்னாலும் ரைட்டிங் சார்ஜாச்சும் தரனும்னு வீட்டுக்கு ஃபோன் அடிச்சு சில்லறை கொண்டுவரச்சொன்னேன். அம்பதா கொண்டுவந்தாய்ங்க.

சரி இருக்கட்டும்னு வச்சுக்கிட்டு நெட் ஆசாமிக்கு ரைட்டிங் சார்ஜு கொடுத்துட்டு ரூ40 ஐ பையில வச்சுக்கிட்டு பஜாருக்கு போனேன்.

ம்னசுல எல்லையில்லாத தகிரியம் தாளி எவனையும் போய் கெஞ்சத் தேவையில்லை. தன் கையே தனக்குதவின்னு அடிச்சு தூள் கிளப்பலாம்.( நம்முது சிம்மராசி -சனி ரெண்டுலருந்து மூணை பார்க்கிறாரு)

அங்கருந்து நேர சத்யாவோட நகைக் கடை. ச்சொம்மா இருந்தவனை தீபாவளி பூஜைக்கு ஆந்தை வாகனத்தோட லட்சுமி சிலை வச்சு செய்யுன்னு ஜும் ஏத்தி விட்டாச்சு. ஆனா ஆர்டர் கொடுக்கிற சமயம் இன்னொரு ஆசாமி சத்யாவுக்கு டபுள் டோஸா வினோலாக்ஸ் கொடுக்க ஆந்தை வாகனம் கான்சல். ஆனாலும் சிலை ஓகே.

அன்னைக்கப்பாறம் சத்யாவுக்கு கான்டாக்டல போகலை. இந்த கேப்ல சென்னை போய் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு வந்திருக்காரு போல. நம்மை பார்த்ததும் கண்ணனை பார்த்த ராதை கணக்கா வா வா ..னுட்டு கடைய விட்டு இறங்கி வண்டியேறிட்டாப்ல ( அவரோட வண்டிதான்)

ஷகரான கடை பூஜை முடிக்க பகல் 12 ஆகும் (இடையிடையில வியாபாரம்) டிஃபன் 2 மணிக்கு சோறு நாலு மணிக்கு ராத்திரி சோறு பன்னெண்டு மணிக்குத்தேன்.

வண்டி நேர புக்ஸ்டோர் போயிருச்சு. அங்கன பூஜைக்கான இன்விட்டேஷனை போட பந்தா கவர் (டிசைன்+ப்ரிண்டிங் நம்ம மகதேன்) , ரெண்டு மார்க்கர்லாம் வாங்கியாச்சு. பையில கைய விடறாரு காசை காணோம் . கொஞ்ச நா இடைவெளிக்கப்பாறம் நம்மை பார்த்த உணர்ச்சி வேகத்துல கல்லாவுல இருந்து காசை எடுக்காமயே கிளம்பிட்டாப்ல.

சித்தூரு ஊரு சின்னதா இருந்தப்ப வேற கதை. ஒவ்வொரு கடைகாரருக்கும் தன்னோட ஒவ்வொரு கிராக்கியோடவும் பர்சனல் டச் இருக்கும். இப்பம் எவன் முகத்தை பார்க்கிறான்? அந்த நிமிசத்துல சத்யாவோட மன நிலைய வர்ணிக்கனும்னா தனிப்பதிவே போடனும். தீபாவளி பர்ச்சேஸ் மட்டும் ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு செய்துட்டு வந்திருக்கிற பார்ட்டி. என்னமா ஃபீல் பண்ணியிருப்பாருன்னு நினைச்சுப்பாருங்க.

பில்லு எவ்ளோங்கறிங்க? கரீட்டா நாப்பது ரூவா. நாம படக்குனு எடுத்து நீட்ட சத்யாவுக்கு ஒரே ஆச்சரியம் . ( இவன் முப்பதுக்கு மேல வச்சிருக்க
மாட்டானே..அதுலயும் நேரம் இப்ப ராத்திரி எட்டாகுதே)

ராத்திரி எட்டுங்கறது சத்யாவோட டீ டைம். கடைலருந்து "டுப்கி"அடிச்சாவது டீ குடிக்கிற கிராக்கி.ஆனால் அவர் கையிலயும் கால் காசில்லை. நம்ம கையிலயும் காசில்லை.

புஸ்தவ கடைக்கும் - சத்யா கடைக்கும் மிஞ்சிப்போனா 100 அடி தூரமிருக்கலாம் அவ்ளதான்.ஆனால் கையறு நிலை.

சத்யாவுது மீனராசி.சனி எட்டை பார்க்கிறாரு. ரெண்டு மூனு வாரத்துக்கு மிந்திதான் 407 வேன் காரன் ரைட்ல பூந்து வண்டியோட டேஞ்சர் லைட்ஸ் காலி, நெம்பர் ப்ளேட் வளைஞ்சு போச்சு. இப்பம் இந்த மாதிரி.

இப்பம் சொல்லுங்க .ஜோதிடம் மூட நம்பிக்கையா?

Thursday, August 18, 2011

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியம்




இந்த தொடர்ல பூஜ்ஜியத்துலருந்து புதுசா ஆரம்பிச்ச நமக்கு ஆத்தா எப்படி ஒரு ராஜ்ஜியத்தையே கொடுத்தாங்கற விஷயத்தை சுருக்கமாவாச்சும் சொல்லத்தான் போறேன். இது ஏதோ என் ஒருத்தனுக்கு கிடைச்ச அனுபவம்னு நினைக்காதிங்க. அவள் ஜகன் மாதா - ஜகத்ஜனனி - லோக மாதா அவளோட பார்வையில எல்லாரும் சமம்தான்.

அவள் பார்வையில போலி முருகேசன் கூட சமம் தான். அவரு இந்த மாதிரி போலி கமெண்ட் எல்லாம் போட்டு ஒரு அவுட்லெட்டை தேடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிருக்கும். அதனாலதேன் ஆத்தா அவருக்கு இப்படி ஒரு வடிகாலை ஏற்படுத்தி கொடுத்திருக்கா.

இந்த அவன் அவள் அது தொடரை படிச்சிக்கிட்டு வர்ரவுக என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வச்சு நான் ஜெபிச்ச அதே மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிச்சா நான் பெற்ற அதே அனுபவங்கள் அதே அளவுக்கு அவிகளுக்கு கிடைக்காட்டாலும் அவிக சாதனைய பொறுத்து நிச்சயமா அவிக லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் வந்தே தீரும்னு உறுதி தர்ரேன்.

அந்த மந்திரம் கீழே:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்

மொதல்ல பெற்றோரை , குல தெய்வத்தை ,இஷ்ட தெய்வத்தை ,உங்க குருவை வணங்கி அவிக அனுமதி வேண்டி பெற்று அதுக்கப்புறம் ஜெபத்தை ஆரம்பிங்க.ஆத்தாளோட மந்திரத்தை ஜெபிக்க ராகு காலம் எமகண்டம் இத்யாதி நிபந்தனையெல்லாம் கிடையாது. ஒரு குழந்தை தன் தாயை எந்த நிலையிலும் அழைக்கலாம். (கக்கா போயிட்டு கழுவாத நிலையிலயும்) . தைரியமா ஆரம்பிங்க. இந்த தொடர் முடியறதுக்குள்ளயே நீங்க , நானு ,நம்ம மானிலங்கள் , நம்ம நாடு எல்லாத்தோட தலையெழுத்தும் மாறிரனும். ஆரம்பிச்சுருவிங்கதானே.

இப்ப பூஜ்ஜியம் டு ராஜ்ஜியம் டெலிக்ராஃபிக் லாங்குவேஜ்ல - திடீர்னு மூடு கிளம்பினா ஒரே சம்பவத்தோடவே இந்த அத்யாயத்தை முடிச்சுரலாம் .ஆரும் கேட்கப்படாது.

நமக்கு மந்திரோபதேசம் செய்த பார்ட்டி - அவரோட க்ரூப் மற்றும் நமக்கு கேர் ஆஃபா இருந்த கடைக்காரர் ஒரு நாள் ஃபுட் மேட்டை உதறிப்போட சொன்னதும் நாம கழண்டுக்கிட்டதும் அல்லாருக்கும் ஞா இருக்கும்னு நினைக்கிறேன்.

நாம சோகமா நடந்து போயிக்கிட்டிருக்கம். அப்ப நம்ம ஏரியா தலைவரு ஒருத்தரு கிராஸ் ஆனாரு. இன்னா மேட்டருன்னா சனங்க அவரை இஷ்டத்துக்கு போட்டுக்கொடுத்து ஆப்படிச்சு புண்ணாக்கிட்டாய்ங்க போல . வலுக்கட்டாயமா கூட்டிட்டு போய் அவரோட பில்டிங்ல ஆஃபீஸுக்கு வென்யூ கொடுத்தாரு.(தயிருதேன் - நமக்கு ரெப்புட்டேஷன் அதிகரிச்ச பிற்பாடு நாமே நாமினலா ஒரு தொகைய வாடகையா கொடுக்க ஆரம்பிச்சம்)

அங்கருந்து நமக்கு ஒரு விலாசம் - ஸ்திரமான சோர்ஸ் ஆஃப் இன்கம்லாம் ஆரம்பிச்சது. அதே ஏரியாவுல லட்சத்து ரெண்டாயிரத்தோட என்ட்ரி கொடுத்து -கைப்பணத்தை இழந்து - பப்பு வேகாம வாலை சுருட்டி பாக்கெட்ல வச்சுக்கிட்டு திரும்பிட்டது 1998. இப்பம் ரீ என்ட்ட்ரி கொடுத்தது 2001 .

ஜெ தேங்க்ஸ் கார்டு அனுப்பினதும் இங்கனதான். வார்த்தா தெலுங்கு தினசரியில நம்மை பத்தி அரைப்பக்க செய்தி வெளி வந்ததும் இங்கனதான். நமம் சனங்க எந்த அளவுக்கு நொந்து போயிருக்காய்ங்கன்னா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பத்தி அரைப்பக்கம் போட்ட செய்தியில அவிகளை கவர்ந்தது நாம ஜோதிடர்ங்கற தகவல்தேன்.விளைவு நம்ம ப்ராக்டிஸ் ஓஹோ.

ஆபிரகாம் லிங்கன் அடிமை ஒழிப்பு சட்டத்துல கையெழுத்து போடறதுக்கு மிந்தி அவரோட கைகளை குலுக்கியே ஒரு வழியாக்கிட்டாய்ங்களாம். ஏறக்குறைய நமக்கும் அதே நிலை. அப்பல்லாம் நமக்கு செல்ஃபோன் இத்யாதி கிடையாது. ஏரியா தலைவரோட கடைக்குத்தேன் கூப்டுவாய்ங்க.

பேப்பரை படிக்க வேண்டியது நேர நம்ம ஆஃபீஸுக்கு வந்துர வேண்டியது. அவிகளால நம்பவே முடியலை. நாம சாதாரணமா நினைச்சிருந்த பார்ட்டி இத்தனை பெரிய ஆளாங்கற ஆச்சரியம். ஒரு கட்டத்துல தள்ளு முள்ளே ஏற்பட்டுருச்சு. நமக்கு ஸ்தான பலத்தை ஏற்படுத்தி கொடுத்த ஏரியா தலைவருக்கே நம்மை கேட்ச் பண்ணமுடியாத நிலைமை. அவரு பார்த்து பார்த்து கடுப்பாகி "கொய்யால நகருங்கடா நகருங்கடான்னுட்டு சனத்தை தள்ளிக்கிட்டு வந்து ...கை குலுக்கி ..

" தபாருய்யா நீ ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் சோசியம் சொல்ற ஆளுதான்.. ஆனால் உனக்கு நான் சொல்றேன். ங்கோத்தா இன்னிலருந்து நீ தான்யா சீமான் "ன்னுட்டு போயிட்டாரு.

நாம எதிர்காலத்துல தேர்தல்ல கீர்தல்ல நின்னா புதுசா போஸ்டர் எல்லாம் டிசைன் பண்ண தேவையில்லை. மேற்படி க்ளிப்பைங்கை ஸ்கான் பண்ணி போட்டுட்டா போதும். எக்ஸ் பார்ட்டிக்கு டிப்பாசிட் கூட கிடைக்காது.

அந்த பத்திரிக்கை செய்தியை தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி உங்க பார்வைக்கு வைக்கத்தான் ஆசை. ரெம்ப கூச்சமா கீதுங்ணா .. அந்த அளவுக்கு புகழ்ச்சி.

இது எல்லாம் எப்படி சாத்தியமாச்சு? நாம ஜெபிச்சிக்கிட்டிருந்த மந்திரம் தான் அந்த பத்திரிக்கை காரவுகளை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுச்சா?ஆமாம்னு தான் நான் சொல்வேன்.

ஏன்னா நாம பாதிரியார் மாதிரி . ப்ரெட் ஹன்டிங் முடிஞ்சதுமே ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றிய பிரச்சாரத்தை ஆரம்பிச்சுருவம். இது நம்ம மாமூல் வாழ்க்கையில் ஒரு அங்கம். அப்படித்தான் சித்தூர் வார்த்தா ஆஃபீஸுக்கும் போனோம்.

அங்கன இருந்த ஸ்டாஃப் ரிப்போர்ட்டரும் ஒன்னும் பெருசா ரெஸ்பாண்ட் ஆகலை. நக்கலெல்லாம் அடிச்சாரு. "பொயப்ப பாருய்யா"ன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாரு. ஆனால் அரைப்பக்க செய்தி. அவரோட மனசை மாத்தினது ஆரு? எது?

நம்ம சோசியத்தை பல வகையா பிரிக்கலாம். 1989 முதல் 1994 வரையிலான நம்ம சோசியம் ரெம்ப ரொட்டீன். அதாவது பஞ்சாங்கம் -ஜோதிட விதிகளையே பிடிச்சு தொங்கற சோசியம். -இது ஒரு கால கட்டம்.

1994 ல பிரம்மங்காருவோட படத்தை வச்சுக்கிட்டு சொல்ல ஆரம்பிச்ச சோசியம். நாம " அப்படி ஆச்சா' "இப்படி ஆச்சா"ன்னு கேப்பம். சோசியம் கேட்க வந்த பார்ட்டி "ஆமாம்" " ஆமாமாம்" னு கூவறச்ச அவனுக்கு எப்படி மெய் சிலிர்க்குமோ அப்படி நமக்கும் சிலிர்த்து போயிரும்.

1997 ல சம்பூர்ண சரணாகதி - அகிம்சைங்கற ரெண்டு ட்ராக்ல வண்டி ஓட ஆரம்பிச்சப்ப சொன்ன சோசியம் அது ஒரு டைப்பு. நேரம் கெட்டதா இருக்கும். ஜாதகம் உருப்படாத ஜாதகமா இருக்கும். இருந்தாலும் அவிக பொசிஷனை பார்த்து ஜாகத்துல உள்ள ஏதோ ஒரு சின்ன ப்ளஸ் பாய்ண்டை கேட்ச் பண்ணி அதை ஹைலைட் பண்ணி ஹோப் கொடுத்து - ஒரு சில பரிகாரங்கள் கொடுத்து இது வரைக்கும் செய்ங்க எல்லாத்துக்கும் மேல கடவுள் இருக்காருன்னு சொல்லி அனுப்ப ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சது ஒரு கட்டம்.

ஆத்தாவோட லைன் அப்ல சங்கல்ப்ப ஸ்லோகத்துல " மாதா தேஹி த்ரிகால ஞானம்"னு கேட்டதாலயோ என்னவோ .. நமக்கிருக்கிற ஒன்றரையணா ஜோதிட அறிவுக்கு 90 சதவீதம்லாம் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுருச்சு. ஐ மீன் ஜாதகப்படி நாம நடந்ததான்னு கேட்கிற விஷயங்கள் 90சதவீதம் நடந்தே இருக்கும்.

மேலும் ஆரு நம்மை தேடி வராய்ங்களோ அவிகளுக்கு சம்பந்தப்பட்டு மைண்டுல ஒரு மாண்டேஜ் ஷாட் ஏற்கெனவே ஓடியிருக்கும் .அட் லீஸ்ட் அவிக கொண்டுவர்ர ஜாதகத்துல இருக்கக்கூடிய ஒரு சில அம்சங்கள் மைண்ட்ல கிராஸ் ஆகியிருக்கும்.

இவ்வளவு ஏன் ஒரு தாட்டி ஒரு ஆசாமி தன்+ தன் பையனோட ஜாதகத்தை கொண்டு வந்திருந்தாரு. பையன் ஜாதகத்தை அவரோடதுன்னு நினைச்சு -அவரோட ஜாதகத்தை பையன் ஜாதகம்னு நினைச்சும் பலன் சொல்லி தொலைச்சுட்டன் . ரெண்டுமே 90% டேலி ஆயிருச்சு. நம்ம எதிர்கால கணிப்பும் பக்காவா மெட்டீரியலைஸ் ஆயிருச்சு.

இப்ப ஆன்லைன்ல சொல்ற ஜோசியம் எப்படி போகுதுன்னு நீங்கதேன் சொல்லனும்.


Tuesday, August 16, 2011

கில்மாவும் ஆன்மீகமும்


காமி கானி வாடு மோட்சகாமி காலேடு - இது தெலுங்கு பழமொழி. இதுக்கு " காமத்தை விரும்புபவனாய் இல்லாதவன் மோட்சத்தை விரும்புபவனாக முடியாதுன்னு அருத்தம். கில்மா ஒரு படப்பாடல்னா ஆன்மீகம் சூப்பர் ஹிட் இரவு காட்சி.

2000 டிசம்பர் 23 முதல் நாளிது வரையிலான என் ஆன்மீக அனுபவங்களை சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். அனுபவங்கள்னா இதுல கில்மாவும் அடக்கம் தானே.

அதை விட்டுட்டு எழுதினா இது எப்படி முழுமையான அனுபவமாகும். 1984 ( சம்மர் ஹாலிடேஸ்) முதல் 1986 ஜனவரி 1 வரை காஞ்ச மாடு கம்பங்கொல்லையில விழுந்த கணக்கா எக்கு தப்பா -தப்பு தப்பா - நிறைய தப்பு பண்ணாலும் - 1986 ல ஒரு 3 மாசம் பிரம்மச்சரியத்தை முயற்சி பண்ணாலும் -அது அசம்பவம்ங்கற ஞானோதயம் நடந்துட்டதால இந்த மேட்டர்ல ஒரு கன்க்ளூஷனுக்கு வந்தாச்சு.

ஓஷோ புக்ஸ் படிக்கிறதுக்கு மிந்தியே பிரம்மச்சரியத்துக்கும் - காமத்துக்கும் உள்ள சரியான லிங்கை புரிஞ்சிக்கிட்டாச்சு. நமக்குன்னு ஒரு விதியை ஏற்படுத்திக்கிட்டாச்சு. 1988 - 1989 லயே நமக்குள்ள ஒரு அவதானம் - நிதானம் ஏற்பட்டு போச்சு.

செக்ஸ் வித் ரெகுலர் இன்டர்வெல்ஸ் ஒன்னுதேன் பிரம்மச்சரியத்துக்கு உதவும்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டம். 1991 நவம்பர்ல திருமணமும் நடந்தாச்சு. என்னதான் வாழ்க்கை போராட்டங்கள் இருந்தாலும் கில்மா மேட்டர்ல நவகிரகங்களால வேலை செய்யமுடியாம போயிருச்சு. இதுக்கு காரணம் சின்ன புரிதல்தான்.

2000 டிசம்பர் 23 ல பீஜாக்ஷர ஜெபம் ஆரம்பிக்கிறச்ச கில்மாங்கறது நம்ம லைஃப்ல இன்னொரு ட்ராக்ல பேர்லலா போயிட்டிருக்கும். உடல் ரீதியான தேவை ஏற்படும் போது அந்த ட்ராக்ல கிராஸ் ஆகி கில்மாவுடன் சின்ன கைகுலக்கல். அதுக்கப்பாறம் நம்ம லட்சிய பயணத்தை தொடர்ரதுன்னு ஒரு டிசிப்ளின் ஏற்பட்டு போச்சு.

மன ரீதியான வக்ரங்கள்,தூண்டுதல்கள் எல்லாம் எகிறிப்போயிருக்க இந்த கில்மா மேட்டர்ல மட்டும் ஒழுங்கு மரியாதை பாடியோட அஜெண்டா படி போக ஆரம்பிச்சிருந்தோம்.அதனால நம்ம தபஸ் எந்த வித இன்டரப்ஷனுமில்லாம பக்காவா கன்டின்யூ ஆச்சு.

2003 ஜூன்ல பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு போன பிற்பாடு இந்த மேட்டர் எப்படி நம்மை எஃபெக்ட் பண்ணுச்சுங்கற விசயத்தை அப்பாறம் பார்ப்பொம்.

பிரம்மச்சரியம் தான் தியானத்தை தரும். தியானம் யோகத்தை தரும் .யோகம் முக்தியை தருங்கறது சனங்க வ்யூ. நம்மை பொருத்தவரை தியானம் -யோகம் இத்யாதி காரணமா ஜஸ்ட் ஏஸ் எ பை பிராடக்ட் பிரம்மச்சரியம் கை வரும்.

ஓஷோ மேட்டர்ல ஒரு சுவாரஸ்யம். மொதல் மொதலா ஓஷோவை பத்தி படிச்சப்ப /ஓஷோவை பற்றி யாரோ ஒரு ப்ரொஃபெஷ்னல் கன்டென்ட் ரைட்டர் எழுதினதை படிச்சதாலயோ என்னமோ மனசுக்கே வரலை.

ஆனால் காலக்கிரமத்துல ஓஷோவின் நேரடி பேச்சுக்களின் மொழிபெயர்ப்புகள் படிக்க கிடைச்ச பிற்பாடு லோக்பால் மசோதாவுக்கு பாராளுமன்ற ஒப்புதல் கிடைச்சா அன்னா ஹசாரே எப்படி துள்ளிக்குதிப்பாரோ அப்படி ஒரு மன நிலை நமக்கு ஏற்பட்டது.

கில்மாவை பொருத்தவரை ஓஷோ கிட்டே கத்துக்கிட்டதுன்னு பார்த்தா ரெம்ப குறைவுதான்.ஆனால் கில்மாவை பற்றிய என் பார்வைக்கு அங்கீகாரம் கிடைச்சதென்னவோ ஓஷோவின் பேச்சுக்களில் தான்.தியானம் - கடவுள் - படைப்பு இத்யாதி குறித்த விளக்கங்களை பொருத்தவரை ஒஷோ தான் நமக்கு சுப்ரீம்.

கில்மாவுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்புங்கற விஷயத்தை பற்றி ஏற்கெனவே திகட்ட் திகட்ட எழுதிட்டதாலயும் - சனம் நம்ம பழைய பதிவுகளை நோண்டி நுங்கெடுக்கிறாதாலயும் இந்த டச் போதும்னு நினைக்கிறேன்.

உபரியா ஒரு அனுபவத்தை இந்த பதிவின் மூலம் ஷேர் பண்ணிக்கிறேன்.

1997 நவம்பர்ல பூர்விக சொத்து செட்டில்மென்ட்ல ஒரு லட்சத்து ரெண்டாயிரம் வந்ததுல ரெண்டு வட்டிக்கு விட்டு நாறிப்போன கதையை ஏற்கெனவே சொல்லியிருப்பேன்.

அப்படி வாங்கிக்கிட்ட பார்ட்டி ஒருத்தனை வேட்டையாடிக்கிட்டிருந்த சமயம் . ஐ மீன் ஆள் காணவில்லை ரேஞ்சுக்கு போயிட்டான். அவிக ஏரியால முகாமிட்டு கேட்ச் பண்ணனும். ரோட்ல வெய்ட் பண்ண வேண்டியது. திடீர்னு ஏதோ ஒரு பிக்காலி "இன்னாபா இங்க வெய்ட் பண்றே.அவன் இப்பத்தான் வீட்டுக்குள்ள போனதை பார்த்தேன்"னு ஊத்திவிட்டதும்..மறுபடி அவன் வீட்டண்டை போக வேண்டியது.
ஏமாந்து மறுபடி ரோட்டுக்கு வரவேண்டியது இதே ரேஞ்சுல ஷட்டில்.

நிலைமையா ரெம்ப மோசம். அந்த பரதேசி 23 ரூவா கிட்டே தரனும். அதுல ஒரு 3 ஐ மட்டும் கொடுத்தாலே ஒரு 3 மாசத்துக்கு பிரச்சினை இல்லாம இருக்கலாம் போன்ற நிலை. இப்படி ரோட்டுக்கும் அவன் வீட்டுக்கும் அலைஞ்சுக்கிட்டு கிடக்கோம்.

அவிக வீடு உள்ள சந்துக்கு டர்ன் ஆறதுக்கு முந்தின தெருவுல ஒரு அம்மன் கோவில். கோட்டை கணக்கா பெரிய ரெட்டை கதவு. கதவுக்கு நேர கர்பகிருகம். லெஃப்ட் அண்ட் ரைட்ல க்ர்பகிருகத்தை வலம் வர்ரதுக்கு விசாலமான இடம்லாம் உண்டு.

கடேசியா அவன் வீட்டண்டை போகப்பொறேன்.ஹவுஸ் ஓனருக்கு வாடகை கொடுத்தே ஆகனும் . அந்த அளவுக்கு டார்ச்சர். அன்னைக்கு கொடுக்க முடியலின்னா மறுபடி எந்த தேதியில பணம் கைக்கு வருதோ கொடுத்துட்டு அன்னைக்கே வெக்கேட் பண்ணி ஆகனும். அந்த அளவுக்கு வலிக்க வச்சுட்டான். அதுக்கு அவனுக்கு என்ன நடந்ததுன்னு இன்னொரு அத்யாயத்துல சொல்றேன். (வெக்கேட் பண்றதுன்னா பேக்கிங் செலவு - புது வீட்டுக்கு அட்வான்ஸ் கூடும் -வாடகை கூடும் - விலாசம் மாறினா ப்ராக்டிஸ் அடிவாங்கும் இப்படி ப்ராக்டிக்கல் சிரமங்கள் தான்.மற்றபடி அட்டாச்மெண்ட் எல்லாம் ஒரு மசுரும் கிடையாது)

மேலும் அந்த வீடு டொமஸ்டிக் லைஃபை விட ஸ்பிரிச்சுவல் லைஃபுக்கு ரெம்ப பொருத்தமான வீடு . அந்த வீட்டிலான எங்க போர்ஷன்ல ஒவ்வொரு சதுர மி.மீலயும் நம்ம அதிர்வுகள் ஸ்டோர் ஆகியிருக்கு. வழக்கமான்னா ஒரு மணி நேர அவகாசத்துல வீடு காலிபண்ணக்கூடிய சாடிஸ்ட் கேஸு நாம.

ரோட்லருந்து சைக்கிளை மிதிச்சுக்கிட்டு அவன் வீடு இருக்கிற தெருவை நோக்கி போறேன். மனசு கனத்து கிடக்கு. ஆத்தா ஆத்தான்னு ஜொள்ளு விட்டோம். அந்த ஆத்தா கூட நல்ல சமயத்துல கை விட்டுர்ரா. இதான் கடைசி சான்ஸ் பார்ப்போம்னு பல எண்ணங்கள்.

திருப்பத்தின் போது ஒரு ரிஃப்லெக்ஸ் மாதிரி கண்ணு மேற்படி கோவிலை அரை குறையா பார்க்குது.
அப்பம் மேற்படி கோவில் -கர்பகிருகம் -இடது புற காலியிடம்லாம் டச் ஆகுது. அந்த காலியிடத்துல சப்பரத்துல அம்மன் சிலை ஒன்னு பக்காவா அலங்கரிக்கப்பட்டு இருக்கு ( நேரம் ; மதியம் 2 க்கு மேல இருக்கும்) ஆக்யுரேட்டா சொன்னா சமய புரம் மாரியம்மனோட வடிவம் -அலங்காரம்.

ங்கோத்தா .. இது ஆடிமாசம் இத்யாதி கூட கிடையாதே.. மே மாசம் அசலே கிடையாது. இந்த பார்ப்பானுங்களுக்கு வேற வேலையே கிடையாது. ஏரியால இருக்கிற சூத்திரங்களோட ஈகோவை தூண்டி விட்டு நல்லாவே கல்லா கட்டறானுவன்னு வஞ்சிக்கிட்டே பார்ட்டியோட வீட்டுக்கு போனேன்.

அவன் ரேஞ்சுக்கு பத்து பைசா பேராதுன்னு தெரியும். ஆனாலும் நமக்கு வேற சோர்ஸ் இல்லாத காரணத்தால தேன் இந்த வேட்டை. வீட்ல உள்ளவுக மாடியில இருக்கான்னு சொன்னாய்ங்க. நான் மாடிப்படி ஏறி போறேன். லுங்கி பனியன்ல இருக்கான்.

பார்ட்டி எக்கனாமிக்கலா நொந்து போயிருந்தாலும் (சின்னப்பையன்) ராசி சிம்மம். லக்னம் தனுசு.லக்னத்துலயே குரு. நம்மை பார்த்ததும் ஒன்னுமே பேசலை. எழுந்து போய் கோட் ஸ்டாண்ட்ல மாட்டியிருந்த பேண்ட்ல இருந்து கத்தையா நோட்டுகளை எடுத்தான். எல்லாம் நூறு ரூவா தாளு. ஒரே ஒரு தாளை தனக்கு வச்சிக்கிட்டு மொத்தத்தையும் கொடுத்துட்டு " தயவு செய்து நீ ஒன்னும் பேசாத .. கணக்கெல்லாம் அப்பாறம் பார்த்துக்கலாம்"னான். எண்ணிப்பார்த்தா கரீட்டா ரூ.3000 இருக்கு.

அப்பல்லாம் மணி சீக்ரெட்ஸ் நமக்கு தெரியாது. பிணத்துக்கு உசுரு வந்த ஃபீலிங் . எப்பம் வெளிய வந்தேன். எப்பம் சைக்கிள் லாக்கை திறந்தேன்.எப்பம் ஸ்டாண்டை தள்ளினேன்னு கூட தெரியாது. பாடி அவ்ள லேசா இருந்தது.

சந்து திரும்பும்போது ஆட்டோமெட்டிக்கா கண்ணு அம்மன் கோவில் பக்கம் திரும்புச்சு. கோவில் கதவு ஓகே.. கர்ப கிருகம் ஓகே. ரைட்ல வலம் வர இடம் ஓகே. லெஃப்ட்ல சப்பரம் ஓகே. ஆனால் சர்வாலங்கார பூஷிதையா காட்சி தந்த மாரியம்மன் மட்டும் ஆப்சென்ட்.

மண்டைக்குள்ள ஒரு ரங்கோலி .. நெஞ்சுக்குள்ள கிலி. " ஆத்தா"ன்னுட்டு தினத்தந்தி போஸ்டர் சைஸுல கத்தலாம் போல ஒரு உணர்வு.

(தொடரும்)