அண்ணே வணக்கம்ணே !
ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் தொடருது .
26.திவ்யாயை
கொளந்தை ஆடினா திவ்யமா இருக்கும் – மாமி ! காஃபி திவ்யமா இருக்கு
இது அவா ஒக்காபிலரி.இதுல திவ்யம் ங்கற வார்த்தைக்கு ” நல்லா இருக்கும்”ங்கற நீர்த்து போன அருத்தம் தான் வருது. அமானுஷ சக்திகளுக்கு தெலுங்குல திவ்யசக்தின்னு சொல்வாய்ங்க. இங்கே திவ்யங்கற வார்த்தைக்கு “அதிசயம்”ங்கற அருத்தம் வருது.
ஆத்தாவே ஒரு அதிசயம் தானே. செயலும் அவளே , செயல்படுபவளும் அவளே, செய்யப்படும் வினையும் அவளே. லாஜிக் உதைக்குதுன்னாலே அது அதிசயம் தானே.
27.ஈஸ்வர்யை
ஓனர் ,தலைவின்னு சொல்லலாம். இந்த படைப்புக்கு ஓனர் அவள் தானே.. இன்னைக்கு செலாவணியில உள்ள தலைவியரோட லொள்ளை பார்க்கிறோம். அவிக இருப்புக்கும் வரவுக்கும் சனம் கொடுக்கிற அலப்பறைய பார்க்கிறோம்.
வெந்ததை தின்னு விதி வந்தா சாகப்போற இந்த தலைவிகளுக்கே இம்மாம் பில்டப்புன்னா ஆத்தாளுக்கு எம்மாம் பில்டப் கொடுக்கனும்.
ஆனா ஆத்தா அப்படியில்லை. ஸ்தோத்திர பிரியைன்னு ஒரு நாமா இருந்தாலும் – தன்னை கழுவி கழுவி ஊத்தினாலும் டென்சன் ஆறதில்லை, அவதூறு வழக்கு பாயறதில்லை, கைது பண்ணி ஜில்லா ஜில்லாவா சுத்தல்ல விடறதில்லை.
க.க ஊத்தறதை கூட நிந்தா ஸ்துதின்னு ஏத்துக்கிட்டு ஃபேவர் பண்ணிர்ரா. ( நம்ம மேட்டர்ல இதான் ஒர்க் அவுட் ஆச்சு. சீன் மாறிப்போச்சு.அன்னைக்கு பிடிச்ச சூடு ..இதோ 8 வருசமாகியும் ஆறவே இல்லை. வண்டி ஓடிக்கிட்டிருக்கு.
28 குண.த்ரய சம்யுக்தாயை :
தமோ..ரஜோ,சத்வ - இதை திரிகுணங்கள்னு சொல்வாய்ங்க. (திரி=3 ) சம்யுக்தா என்றால் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பவள்னு அருத்தம்.
29.கௌரி மாத்ரே..
மாத்ரே =அம்மா ,கௌரி ? கௌரிங்கற வார்த்தைக்கு”ப்ரைட்”னு அருத்தம் வருதுங்கோ. க்ளோ,க்ளோரிங்கற வார்த்தைக்கும் கௌரிங்கற வார்த்தைக்கு என்னா ஒத்துமை?
ஆனால் கௌரிங்கற வார்த்தையோட வேர் சொல் கிரியா இருக்கும்னு ஒரு ஹஞ்ச். இன்னொரு நாமா கிரி ராஜ ஸ்துதாயைனு வருது. கிரிராஜனோட மகள் அல்லவா அவள். அப்பா பேரை வச்சு இன்னும் சில பேர் எல்லாம் உண்டு. ஹைமாவதி ,கிரிஜா
30.காயத்ரி மாத்ரே
தமிழ் க்யூப் டாட்காம் அடிச்சு பார்த்தா Mother of the Vedas , Goddess Saraswati னு வருது.காயத்ரி மந்திரத்தையும் மென்ஷன் பண்ணியிருக்காய்ங்க. காயத்ரின்னாலே அது ஏதோ அவாளோட பேடன்ட் ரைட் மாதிரி ஒரு ஃபீல் வரும். பிராமணாள்னா காயத்ரி மந்திரம் செபிச்சே ஆகனும். ஆனால் ஒரு முரண் என்னனா காயத்ரியை தந்தவனே ஒரு சத்திரியன், விஸ்வாமித்திர மகரிஷி .
31.கணேச ஜனன்யை
கணேசனுக்கு அம்மானு அருத்தம். கணேசன்ங்கற வார்த்தைக்கு கணங்களின் தலைவன்னு அருத்தம். பூத கணங்களின் தலைவன் சிவன் தானே. அது செரி அங்கயும் வாரிசு அரசியல் போல.
32.கிரி ராஜ ஸ்துதாயை
திருவிளையாடல் படம் பார்த்திருப்பிங்க. சாவித்திரியம்மா அப்பா பண்ற யாகத்துக்கு போறேன்னு அடம்பிடிப்பாய்ங்க.சிவாஜி வேணாம்னுவாரு. ஞா வருதா. அந்த அப்பா தான் கிரிராஜன். சாதாரணமா குழந்தை தான் பெத்தவுகளை துதிக்கும். இங்க அவள் என்ன வெறும் குழந்தையா? அத்தனை உயிர்களையும் பிரசவிக்கும் மகோதரி அல்லவா? ( மகா+உதரம் =மகோதரம் :பெரிய வயிறு கொண்டவள் -இதையே நெகட்டிவா பார்த்தா எல்லா உயிர்களையும் விழுங்கும் பெரு வயிறு படைத்தவள்னும் சொல்லலாம்). ஆகவே பெத்த தகப்பனே துதிக்கும் மகள் இவள் (தாய்)
33.ஹ்ரீங்கார பீஜாக்ஷர்யை
மொதல்ல பீஜம்னா என்ன? நேரடி அருத்தம் விதை . மந்திரம்ங்கறது செடின்னா -பீஜம்ங்கறது விதை . மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லைம்பாய்ங்க. மனசு செம்மையா இல்லாதவன் தானே ஆன்மீகம் அது இதுன்னு அல்லாடறம். அதனால மந்திரம் தேவை தான். மந்திரம் என்ன பண்ணும்னா .. மனசை செம்மையாக்கும்.
மனதுக்கு வியாதி வரும் (மேற்கத்திய சித்தாந்தம்) மனமே வியாதி (கிழக்கத்திய சித்தாந்தம்) மனசுக்கு பின்னாடி இருக்கிற ஐட்டம் நமக்கு அவெய்லபிள் ஆகனும்னா மனசு ஒழியனும்.
மனசுன்னா என்ன? நினைவுகளின் தொகுப்பு. அது எந்த வடிவத்துல இருக்கு? சொல்.சொல்வடிவத்துல இருக்கு. கொளந்தைங்க மைண்ட்ல வேணம்னா விஷுவலா இருக்கும். ஒரு கட்டத்துல விஷுவல் எல்லாம் ஃபணால் ஆகி வெறும் சொற்கள் தான்.
ஒரு ஆடியோ கேசட்ல என்னென்னமோ இழவெல்லாம் ரிக்கார்ட் ஆகியிருக்கு . அதை ஒழிக்கனும்னா ரெண்டு வழி . ஒன்னு ஏ.சி ரூமுக்குள்ள உட்கார்ந்து -சவுண்ட் ப்ரூஃப் - ரிக்கார்ட் +ப்ளே பட்டனை அழுத்திரனும். அதுக்கு வசதியில்லின்னா ? வேற எதையாவது பதிவு பண்ணிரனும். ஆனால் அது ஒரே ஒரு எழுத்தாவோ -மிஞ்சிப்போனா ஒரு வரியாவோ இருக்கனும். அதுக்கு பெருசா அருத்தம்-உள்ளருத்தம்லாம் இருக்க கூடாது .அதையே மறுபடி மறுபடி ரிக்கார்ட் பண்ணிரனும். இந்த டெக்னிக் தான் மந்திரம். (ஒரு வரி)
பீஜம்ங்கறது பெரிய சப்ஜெக்ட். சமஸ்கிருதத்துல இருக்க கூடிய அம்பது எழுத்துக்களில் எந்த எழுத்துக்கு மிந்தி "ம்" சேர்த்தாலும் அது பீஜம். உ.ம் GAM - இது கணபதி பீஜம்.
பீஜத்தை உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டுது. வாயும்-ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பமும் முடிவுமா இருக்கு. மூலாதாரம் ஆசனத்துக்கு சற்று மேல இருக்குங்கறாய்ங்க. வினை-எதிர்வினை ஆக்சன்-ரியாக்சன்ங்கற விதிப்படி பீஜம் உச்சரிக்கப்படும் போது என்னமோ நடக்குது .மூலாதாரத்துல அதிர்வுகள் ஏற்படுது .இதனால குண்டலி ஆக்டிவேட் ஆகுது .
இந்த விதிப்படி ஹ்ரீம்ங்கறது ஒரு பீஜம். (சூரியன் -கிட்ணரு-ஆத்தா இப்படி பலரையும் டார்கெட் பண்ற பீஜம் இது) . நாமி -நாமா விதியை நம்ம முன்னுரைல படிச்சிருப்பிங்க. பெயருக்கே அந்த பவர்னா பீஜத்துக்கு? ஆகவே ஆத்தா இந்த பீஜமாவே இருக்காளாம்.
ஹ்ரீம் மாயா பீஜம். புவனேஸ்வரிக்கு உரிய பீஜம். இதன் பெசாலிட்டி செத்துப்போனதுக்கு உசுரு கொடுக்கிறது.மேலும் இந்த ப்ராசஸ் எப்படி நடந்ததுன்னு ஜெபிச்சவனுக்கே தெரியாதுன்னா சுத்து வட்டாரத்துல உள்ளவிகளுக்கு ? ஊஹூம்.ஒன்னமே புரியாது.கன்ஃபீஸ் ஆயிருவாய்ங்க.
கையில காலணா இல்லாம ஹ்ரீம்கார் பப்ளிகேஷன்ஸுன்னு ஆரம்பிச்சு ஒரே நேரத்துல 4 புஸ்தவம் போட்டு 419+419 செட் ஆஃப் புக்ஸ் வித்தம்னா -அதுவும் அந்த நேரம் மவளோட கண்ணால நேரம் கடந்த 15 வருசமா இந்த பீஜத்தை ஜெபிச்சதோட மகிமை இதுன்னு புரிஞ்சுக்கோங்க.
34.ஹ்ரீம் மயீ தேவினே
ஹ்ரீம் = பீஜம் , மயீங்கற வார்த்தை ……மயமா இருக்கிறவளேங்கற பொருளை கொடுக்குது. நாம லேசா பட்டைய போட்டு (விபூதிய சொன்னேன் பாஸ்) வெளிய வந்தாலே என்னப்பா “பக்தி மயமா “இருக்கேம்பாய்ங்க.
இங்கே இந்த மந்திர ஜெபம் பத்தி சின்ன க்ளேரிஃபிகேஷன். அந்த காலத்துல கை பம்பு இருக்கும். தண்ணிய மேல இழுக்கனும்னா மொதல்ல கொஞ்சம் தண்ணிய பம்புல விட்டு அடிப்பாய்ங்க. அதை போன்றது தான் நாம மேன்யுவலா ஜெபிக்கிறதும்.
ஆக்சுவலா மந்திர ஜெபம் நமக்குள்ளே ஏற்கெனவே நடந்துக்கிட்டிருக்கும் பாஸு.ஆனா நாமதேன் உணர்ரதில்லை .ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக்கை கேட்டுக்கிட்டிருக்கும் போது காற்றில் வரும் கீதம் செவிக்கு உறைக்குமா என்ன?
ஆக மேன்யுவலா மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிச்ச சில காலத்துல அந்த மந்திர ஜெபம் “தானா” நடக்கனும். காலாகாலத்துக்கும் நான் தான் “வலிந்து” ஜெபிக்கிறேன் என்றால் இத்தனை கால மந்திர ஜெபத்தின் போது உங்க மனசு அங்க இல்லைனு அருத்தம்.
35.ஹேம பூஷித விக்ரஹாயை
தமிழ்ல இமயமலைங்கறம். ஆக்சுவல் உச்சரிப்பு ஹிமாலயம். ஹிமம் -ஹேமம்ங்கறதெல்லாம் ஒரே பொருளை தரும் சொற்கள். ஹிமம் =பனினு அருத்தம். பூஷணம் = அணி கலன். பனியை அணிந்திருப்பவளேனு அருத்தம். இங்கன விக்ரகம்னா சிலைனு புரிஞ்சுக்கப்படாது. விக்ரஹம்னா பாடி.
ஆத்தா ரெசிடன்ஸு இமயம்ங்கறாய்ங்கல்ல -இமயத்துல பனி தானே பாடி மேல படரும். அதனால ஹேம பூஷித விக்ரஹாயை.
சென்னையில வசிக்கிறவுக தூசியை அணிகலனா அணியலையா, காட்டன் மில்லுல பஞ்சை அணியலியா? அப்படித்தான் இதுவும்.
36.ஹூம்கார ஐங்கார ஸ்வரூபிண்யை
ஏற்கெனவே சொன்னேன். அம்பது எழுத்தும் ஆத்தாதா. அந்த எழுத்தோடு “ம்” சேர்ந்து உருவாகும் பீஜங்களும் ஆத்தாதா. இதுல ஹும் , ஐம் ஆகியவையும் பீஜங்களே. அந்த பீஜங்களின் வடிவானவளேன்னு அருத்தம்.
ஹும் – இது ரெம்ப பவர் ஃபுல்லுங்ணா. நாம ஆருக்குனா ஆப்படிச்சு -அவனால எதுவும் பண்ண முடியாத சந்தர்ப்பமா இருந்து நம்மை – நாம செய்த துரோகத்தை நினைச்சுக்கறப்பல்லாம் அந்த சிந்தனையை உதற “ஹும்”னு பெருமூச்சு விடுவான்.
ஒரு கட்டத்துல என்னென்னமோ நடந்து குண்டலி எக்கு தப்பா ரெய்ஸ் ஆயிருச்சுன்னு வைங்க நம்ம வம்சமே காலி.ஆகவே ஆருக்கும் துரோகம் பண்ணிராதிங்க. ஒரு துரோகம் பல பிறவிகளின் ஜப தபங்களை ஸ்வாஹா பண்ணிரும்.
மக்களுக்கு துரோகம் பண்ற அரசியல் வாதில்லாம் நல்லாதானே இருக்கான்னு எதிர்வாதம் பண்ணாதிங்க. கிட்டக்க போயி பார்த்தாதானே தெரியும்.
ஐம் சரஸ்வதி பீஜம். இன்னைக்கு நமக்கு தெரிஞ்ச காலணா தெலுங்கை வச்சு இந்த சத நாமாவளிக்கு பொருள் விளக்கம் தந்துக்கிட்டிருக்கம்னா இதுக்கு காரணம் ஐங்கார பீஜ ஜெபம் தானு நினைக்கிறேன்.
37.ஜனன்யை
ஜனகன் =தந்தை ,ஜனனி =தாய் , நம் அன்னையரை பெற்ற அன்னைங்கறதால பாட்டின்னு சொல்லலாமுங்கோ. அதே சமயம் நாம பண்ற அழிச்சாட்டியத்தை எல்லாம் பொருத்துக்கிட்டு இருக்கிறதால நாம அல்லாருக்குமே தாய் தான் அவள். தாயை தவிர வேறு ஆரால இவ்ள பொறுமையா இருக்க முடியும்.
38.ஜகத் காரிண்யை
ஜகம் = உலகம் ; காரிணி : காரணமானவள் சேர்த்து படிக்கும் போது உலகம் உருவாக- நிலைக்க காரணமானவள்.
39.ஜ்யோதிர்மயீ
ஜோதி வடிவானவள். கண்ட கண்ட சோப்பு,களிம்பு ,வாசனாதி திரவியங்களை போட்டு நம்ம பாடியோட நேச்சுரல் ஸ்மெல் காணாம போயிட்ட மாதிரி பளீர் வெளிச்சங்களை பார்த்து இருட்டின் வெளிச்சத்தை பார்க்க முடியாம ஆயிட்டம்.
ஹை டெசிபல்ஸ்ல சவுண்ட்ஸ் கேட்டு கேட்டு நம்ம பாடிக்குள்ள ஏற்படற சத்தங்களை கேட்க முடியாம ஆயிட்டம். கவனத்தை ஆக்னாவில் வைத்து ( நடு நெற்றி) தியானம் செய்யும் போது தேசலா ஒரு ஜோதி தெரியும். இதை வெளிக்கொணர கை பம்புல தண்ணி ஊத்தி அடிச்சாப்ல நெய் தீபம் ஏற்றி அதை தொடர்ந்து பார்த்து தியானிக்கும் முறையும் ஒன்று உண்டு. அந்த ஜோதி அவள் வடிவம் தான். ஆன்மீகத்துல புறவுலகில் நாம என்ன செய்தாலும் அதெல்லாம் நம்ம அக உலகில் உள்ளதை நினைவுப்படுத்தத்தான். உ.ம் மணியோசை ,பூவலங்காரம், நெய் தீபம் ,கற்பூர ஜோதி .
கண்ணதாசன் டப்பிங் தியேட்டருக்கு வந்ததும் ஊதுவத்தில்லாம் அணைச்சுர சொல்லுவாராம். “பொம்பள,பூ தவிர எல்லாமே அலர்ஜி ஆயிருச்சுப்பா”ம்பாராம். அப்பத்தேன் பாட்டு வரும்.
அதை போல மேற்படி ஜோதி சமாசாரம்லாம் ஒர்க் அவுட் ஆகனும்னா இருட்டை பழகிக்கோனம். உள்ளாற இருக்கிற வெளிச்சத்தை பரிச்சயம் பண்ணிக்க பார்க்கோனும்.
40.ஜ்வாலா முகே
ஜ்வாலா =ஜ்வாலை முகே =முகம். லேட்டஸ்டா மொகர புஸ்தவத்துல ஒரு மேட்டரை பார்த்தேன். நெருப்புக்கு நிழல் கிடையாதாம். நெருப்போட பெசாலிட்டி என்னன்னா அதை தலை கீழா பிடிச்சாலும் மே நோக்கி தான் எரியுமாம். யோகக்கனல் கூட்டிம்பாய்ங்க. நெற்றிக்கண்ணில் இருந்து 6 பொறிகள் கிளம்பிருச்சும்பாய்ங்க. இதெல்லாம் உருவகங்கள் குண்டலி மே நோக்கி பாய இதெல்லாம் சாத்தியமே. யோகினியான ஆத்தா ஜ்வாலா முகியா இருக்கிறதுல ஆச்சரியம் என்ன?
41.காளிகாயை
நாம தமிழ்,தெலுங்குல தான் காளினு சொல்றம். சமஸ்கிருத்துல “காலி” “காலி மா” .தமிழ்ல காலிங்கற வார்த்தைய வசவா உபயோகிக்கிறோம். காலிங்கற வார்த்தையின் வேர் சொல் “கால்” இதற்கு காலம், காலன் என்ற இரண்டு அருத்தம் வருது.
சூல் = கரு , சூலி = கருவுற்றவள், சூலம் =ஆயுதம், சூலி = சூலம் தாங்கியவள். இதை போல காலத்தை காலனை தரித்தவள், தாங்குபவள் காளி.
காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் காளி. ராமகிருஷ்ணர் காளி உபாசகர். “சாதகனின் சாதனையின் தீவிரத்தை பொருத்து அவனது சூழல்,உற்றார் பெற்றோர் ஏன் அரசர்களின் மனம் கூட மாறும்”னு சொல்றாரு.
அடிக்கடி “ஹும்..கலிகாலம்” ” ஹும் கலி முத்திப்போச்சுங்கறாய்ங்க. ஆனால் காளி நினைச்சா சாதகனை பொருத்தவரை கலியுகத்தை கூட திரேதாயுகமாவோ ,திரிஷாயுகமாவோ மாத்திர்ராள்.
42.காமாக்ஷ்யை
காம =விரும்பத்தக்க , க்ஷ/க்ஷி =கண்கள் உடையவன்/உடையவள்.விசாலாக்ஷி =அகலமான விழிகளை கொண்டவள் ,மீனாக்ஷி = மீனை போன்ற கண்களை கொண்டவள் .
வேணம்னா தமிழ்ல காமாட்சின்னு தானே சொல்றம். அதனால காம+ஆட்சி = காமத்தை ஆட்சி செய்பவள்/காமத்தை கொண்டு ஆட்சி செய்பவள்னும் அடிச்சு விடலாம்.
43.கன்யகாயை
ஜஸ்ட் 7 பெயர்களுக்கு மிந்தி தான் ஜனன்யைனு படிச்சம். ஜனனி =தாய். ஒருத்தி தாயாகிறாள்னா தன் கன்னித்தன்மையை இழந்தாத்தான் தாயாக முடியும். ஆனால் கோடானு கோடி உயிர்களை பெற்ற ஜகத் ஜனனி அதெப்படி கன்னியா இருக்க முடியும்? கன்னியெனில் தாயாக முடியாது – தாய் எனில் கன்னியாக இருக்க முடியாது . என்ன ஒரு அழகான முரண். அரசியல்ல எதிரியை தூற்ற “முரண் பாடுகளின் மொத்த உருவம்”னு சொல்வாய்ங்க.
ஓஷோ சொல்லும் நொடிக்கு நொடி வாழ்தல் சாத்தியமானால் தாயானபின்னும் கன்னியாவே தொடரமுடியும். பல ஆன்டிங்க இன்னமும் ஸ்டெல்லா மெரீஸ் கணக்கா கொஞ்சி கொஞ்சி பேசறதை பார்க்கிறிங்களா இல்லையா?
ஸ்ரீ தேவி ஆஃப்டர் ஆல் மனிதப்பிறவி . ஒரு படத்துல என்டிஆருக்கு பேத்தியா நடிச்சு பிறவு அவருக்கே சோடியாவும் நடிச்சாய்ங்க.
நாகேஸ்வர்ராவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான். பிறவு நாகார்ஜுனாவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான்.
ஒரு மனிதப்பிறவிக்கே இது சாத்தியம்னா அந்த ஸ்ரீதேவிக்கு பாட்டியை எல்லாம் படைச்ச ஆத்தாவுக்கு எது தான் அசாத்தியம். லூஸ்ல உடுங்க.
44.குமார ஜனன்யை
குமாரன்/குமரன் = முருகன் , முருகனை பெற்றவள்
45.காலாயை
கால்= காலம்/எமன் ( ஏற்கெனவே பார்த்திருக்கம்). மனிதனை மகானாக்கிறது காலம், மகானை குற்றவாளி கூண்டுல ஏத்தறது காலம். ராமராஜனை 10 வருசத்துக்கு புக் பண்ண வச்சது காலம். கலைஞரை 13 வருசம் வனவாசம் செய்ய வச்சது காலம். இப்பம் புரியுதா காலம் எவ்ளோ பவர் ஃபுல்னு. அந்த காலமாகவும் இருக்கிறது ஆத்தா தான்.
46.காலாதீதாயை
காலமாகவும் இருக்கிறா. காலனாகவும் இருக்கிறா. இவற்றிற்கு அதீதமானவளாவும் இருக்கா.
47.கர்ம ஃபல ப்ரதாயை
நம் செயல்களுக்கான பலனை தருபவள்.
48.காம கோடி பீடஸ்தாயை
காமம் =விருப்பம்; கோடி விருப்பங்களை பீடமாய் கொண்டு வீற்றிருப்பவள். நம் ஒவ்வொரு விருப்பத்தின் மீதும் பீடமிட்டு அமர்ந்திருப்பவள் அவளே. விருப்பங்கள் உழைக்க தூண்டுகின்றன. கருமம் (வினை) செய்ய தூண்டுகின்றன.அதற்கான பலனை தருபவளும் அவளே. அதே சமயம் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாம எடுக்கிற “ஸ்ட்ரெய்ன் “நம் பூர்வ கருமங்களை ஒழிக்கிறது. விருப்பத்தின் உருவில் நம்மை தூண்டி -பூர்வ கருமங்களை ஒழிக்கவும் அவளே உதவுகிறாள்.(பாசிட்டிவ் அப்ரோச் )
49.லலிதா பரமேஸ்வர்யை
நாம தமிழ்ல கலைகளை நுண்கலைகள், மென் கலைகள்னு சொல்றமில்லையா அதை போல தெலுங்குல லலித களலுன்னு சொல்வாய்ங்க. லலிதம் ங்கற வார்த்தைக்கு மென்மையான,அழகான இப்படி அர்த்தம் சொல்லலாம்.
பரம =அல்ட்டிமேட்? முழுமையான (பரம திருப்தி -பரமானந்தம்) இகம்-பரம்ங்கற கோணத்துல பார்த்தா அவ்வுலக/இவ்வுலகத்துக்கு வெளியிலான , ஈஸ்வரி = தலைவி
ஆக மென்மையான பரலோக தலைவி?
50.லீலா வினோதின்யை
லீலா = ஒரு நோக்கமும் அற்ற செயல்? வினோதம் =புதுமை /பொழுது போக்கு . இந்த படைப்புக்கோ -படைப்பின் போக்கிற்கோ எதாவது நோக்கம் இருக்குனு நம்பறிங்களா? ஊஹூம். எல்லாமே ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் – போய்க்கிட்டே இருக்கு. பிறவிச்சக்கரத்தை பொருத்தவரை என்னை மாதிரி பார்ட்டிங்க.. எல்லாமே ஒரு பர்ஃபெக்சனை நோக்கி போயிட்டிருக்குன்னு சொல்றம். இந்த பிறவிச்சக்கரத்தின் இலக்கு முக்தின்னு சொல்றம்.
ஆனா எது எப்பம் வேணம்னா யு டர்ன் எடுத்துக்கலாம்.சொல்லவே முடியாது. ஒரு ஃபேக்டரிய எடுத்துக்கங்க. ஒரு ப்ராடக்ட் ஃபினிஷ் ஆகனும்னா எத்தனையோ ஸ்டேஜை தாண்டவேண்டியிருக்கு. எங்கயோ ஒரு இடத்துல பல்பு வாங்கிட்டா மறுபடி அது ஸ்க்ராபுக்கு போயிருது. அடியை பிடிடா பரதப்பட்டான்னுஆயிருது.
இதெல்லாம் நமக்கு வேணம்னா வேதனையா இருக்கலாம்,சாதனையா தோனலாம்.ஆனால் ஆத்தாவுக்கு? இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபன். லீலா.வினோதம் தான்.