Showing posts with label ஆடியோ ஜோதிட பாடம். Show all posts
Showing posts with label ஆடியோ ஜோதிட பாடம். Show all posts

Saturday, September 24, 2011

பிறக்காத குழந்தைக்கு ஜாதக பலன்





அண்ணே வணக்கம்ணே!

நேத்து பிறந்து 44 வயசான பார்ட்டியோட ஜாதக அலசலை கேட்டிங்க. ( ஹி ஹி நம்மோடதுதேன்) இன்னைக்கு இன்னம் பிறக்காத குழந்தைக்கான ஜாதக அலசலை கேளுங்க. கூடவே பரிகாரங்களும் தந்திருக்கேன். Read More

Friday, September 23, 2011

ஏன் ஆத்தா..ஏன்?

ஏன் ஆத்தா..ஏன்?
இந்த பதிவோட தலைப்பை நம்ம வடிவெலு மாடுலேஷன்ல படிக்கனும். அப்ப அருஞ்சொற்பொருள் விளக்கம், தெளிவுரை ,கருத்துரைல்லாம் தேவைப்படாது. நாம ஏதோ நிர்வாண உண்மைகள்னு ப்ளாக் வச்சுக்கிட்டு நான் ஒன்லி அண்டர் தி சன்/ வானுக்கு கீழானவை மட்டுமல்லன்னு ஒரு ஸ்லோகன் வச்சுக்கிட்டு மனம் போன போக்குல கிறுக்கிக்கிட்டிருந்தம்.

படக்குனு நம்ம சரண் சார் வந்து அனுபவஜோதிடம் வலைதளத்தை ஏற்படுத்தி கொடுத்துட்டாரு. " நீங்க என்ன வேணம்னா எழுதுங்க ..ஆனா அதுக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பு இருந்தாதான் நல்லாருக்கும்னுட்டாரு. இதுவும் பெட்டராவே இருந்தது.

தனித்தனி மேட்டரா போட்டுக்கிட்டிருந்தா ஹிட்ஸ் கூடி குறையறதை பார்த்து பொங்குவதும், வடிவதுமா இருக்கிறது பிடிக்காம சின்ன சின்ன தொடரா போட்டுக்கிட்டிருந்தோம். இதுவும் நாட் பேட் தான்.

அவன் -அவள்-அதுங்கற தலைப்புல நம்மோட சாக்தேய அனுபவங்களை எழுத ஆரம்பிச்சோம்.ஆத்தா தன் திருவிளையாடலை ஆரம்பிச்சுட்டா. ஹிட்ஸ் அபவ் தவுசண்ட்லருந்து 900 க்கும் ஆயிரத்துக்கும் இடையில ம.மே.பூனை கணக்கா மாறிருச்சு.

என்னங்கடா இது 2 வருச ரெக்கார்டு நாறிருமோன்னு ஜோதிட பால பாடம்னு ஒரு சீரியலை துணைக்கு எழுத ஆரம்பிச்சோம்.

இதுவும் வசதியாதான் இருந்துச்சு. அப்பப்போ ஸ்பார்க் ஆற பாய்ண்டை அப்படியே போட்டுக்கிட்டு வந்தம். ஆனால் சனம் வரிசையா இல்லை அது இதுன்னு கிளறிவிட ஆடியோ லெசன்ஸ் ஆரம்பிச்சம். தாளி ஆரம்பிச்ச பிறவுதான் உறைக்குது இது வெறும் சீரியல் இல்லை. மெகாசீரியலுன்னு.

நம்ம லக்னத்துக்கு (கடகம்) மெகா சீரியல் எல்லாம் ஒத்துவராதுன்னு தெரிஞ்சும் இதை ஆரம்பிக்க வச்சுட்டு நம்மை கடன் காரன் கணக்கா கலங்க வச்சுட்டா ஆத்தா. அவன்-அவள் -அது சீரியலை ஆரம்பிச்ச இன்ஸ்பிரேஷன்ல ஆத்தாவுக்காக நாம தெலுங்குல எழுதியிருக்கிற கவிதைகளை வலையேற்றம் செய்யும் "கெட்ட" எண்ணம் வந்துருச்சு.

இதுக்காவ ஆள் தேட ஒரு சோம்பேறி கிராஸ் ஆக நாம ஒரு சிஸ்டத்தை கொண்டுபோய் அவன் கிட்டே வைக்க நாலு நாள்ள திருடங்க வந்து மானிட்டரை தூக்கிட்டு போக..விடாபிடியா ஒரு செகண்ட்ஸ் கலர் மானிட்டர் கொண்டுவைக்க மாசமா.. ஒன்னரை மாசமா தெரியலை . நாள் என்னமோ ஓடிப்போச்சு. கொய்யால ஒரு பாரா கூட டைப் அடிச்ச பாடா காணோம்.

இவனுக்கு அக்டோபர் 1 வரை வாயிதா கொடுத்திருக்கேன். ஒன்னும் பேரலைன்னா கழண்டுக்குவேன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லியாச்சு.

அவன்-அவள் -அது சீரியலையும் திராட்டுல விட்டாச்சு. இப்படி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை வேலையும் நகரமாட்டேங்குது - தொடர்களும் நொண்டியடிக்குது. பட்டா..குரு லக்னத்துக்கு பத்துல இருந்தப்பயே பெட்டரா இருந்துச்சு. இப்பம் என்னடான்னா எல்லாமே ட்ராகிங்ல இருக்கு.( இது குரு வக்ரமானதோட எஃபெட்க்டு போல - இதுல நம்ம ஜீவனாதிபதியான செவ்வாயும் நீசம்)

குருவக்ரம்:

இந்த நிலை டிசம்பர் 25 வரை தொடரும். இது தனுசு,மீன ராசிக்காரவுகளுக்கு ஆப்புவைக்கிற ஐட்டம்.

செவ் நீசம்:

இந்த நிலை விருச்சிக,மேஷ ராசிக்காரவுகளுக்கு விசேஷ ஆப்பு

நம்முது ஒரு பிரபலமான பஞ்ச் " எத்தனை உக்ரமான யுத்தம் பண்ணாலும் - சமாதானத்துக்குன்னு ஒரு சன்னலை திறந்துவைக்கனும். - என்னதான் அமைதி ஒப்பந்தம் கை.எ ஆனாலும் எதிர்கால யுத்தத்துக்கு ஒரு பாய்ண்டை கேட்ச் பண்ணி வச்சுரனும்"

இதே சீக்வென்ஸ்ல இன்னொரு பஞ்ச்:

எத்தனாம் பெரிய ப்ராஜெக்டை ஆரம்பிச்சாலும் பாதியில கழண்டுக்க ஒரு விண்டோவை (சன்னலுங்கோ) ஓப்பன்ல வைக்கனும். ( நாலு பக்கம் நெட் போல்ட் போட்டுட்டா நம்ம லக்னக்காரவுகளுக்கு மூச்சு திணற ஆரம்பிச்சுரும்.)

பாதியில கழண்டுக்க ஒரு ஜன்னலை சட்டம் அடிக்காம விட்டிருந்தோம்.அதை இப்பம் ஓப்பன் பண்றோம். நாளிதுவரை போட்ட ஆடியோ பதிவுகளை (கேட்டு பயன்பெற்ற) சீடப்பிள்ளைகள் ஒழுங்கா இன்னொரு தாட்டி கேட்டு - உபமானம்,உபமேயம் -சொந்தக்கதை - எல்லாத்தையும் வெட்டி டெக்ஸ்ட் ஃபைலா அடிச்சு நமக்கு மெயில் பண்ணனும். அல்லது அவிகளே நேரடியா சைட்ல போஸ்ட் பண்ணவும் வாய்ப்பு தரப்படும்.

இந்த காரியம் முடிஞ்ச பிற்பாடுதேன் அடுத்த ஆடியோ பாடம். (உஸ்.. அப்பாடா)

இதை படிச்சுட்டு ஒடனே அந்த புண்ணியாத்மா சுடுகாட்டு பூஜை அது இதுன்னு ஆரம்பிச்சுருமோ என்னமோ? முந்தா நாள் கூட கால் டஜன் கமெண்ட்ஸ். வோர்ட் ப்ரஸ்ல போட்டா ஐ.பி நெம்பரை ட்ரேஸ் பண்றோம்னு ப்ளாகர்ல வந்து பேண்டு வைக்குது.

ஆத்தாளுக்கும் நமக்கும் உள்ள கம்யூனிகேஷன் மட்டும் பக்காவா தான் இருக்கு. ( பக்கா =கனிந்து) காரியத்துல பார்த்தா எல்லாமே கச்சா தான் ( கச்சா = காய்). இந்த மாதிரி சிச்சுவேஷன்ல தான் "ஏன் ஆத்தா ஏன்?"னு மனசு கூவுது.

விடை இப்ப வருமோ? எப்ப வருமோ? 2001 வாக்குல டீப் மெடிட்டேஷனுக்கு பிறகு சவாசனத்துல அதை தொடர்ரப்ப விஜயவாடா நித்யானந்தம்னு ஒரு வார்த்தை காதுல ஒலிச்சது. இப்பம் அதே பேர் கொண்ட பார்ட்டியோட கம்ப்யூட்டர் வைரஸ் அட்டாக்ல கோமால கிடக்கு.

அதை ரெக்டிஃபை பண்ணி தர்ரதா கமிட் ஆனேன். பார்ட்டிக்கு நேரம் இல்லை(யாம்) . கல்லைகண்டா நாயை காணோம் நாயை கண்டா கல்லை காணோம்னு நாள் ஓடிட்டிருந்தது. இன்னைக்கு தாளி சி.பி.யுவை கழட்டி வச்சுரு. நான் கொண்டு போய் ரெடி பண்றேன்னு சொன்னேன்.

அந்த ஜ.சோ என்னபண்றானோ ஆத்தாளுக்குத்தேன் வெளிச்சம். ஒரு வேளை அந்த கம்ப்யூட்டர் ரெடியாறதுக்கும் நம்ம ஸ்பிரிச்சுவல் அச்சீவ்மெண்டுக்கும் எதுனா தொடர்பு இருக்குமோன்னு ஒரு ஹேஷ்யம். பார்ப்போம்.


இந்த மந்த நிலைமைக்கு இன்னொரு காரணமும் இருக்கு. நமக்கு ராசிக்கு ரெண்டுல சனின்னு பல் வைத்தியர் கிட்டே போகாமயே இருந்தம். சரி சனி 3 ஐ பார்க்கிறாரேன்னு போயிட்டம். அழகா சிரிக்கம். சனி கொவிச்சுக்கிட்டாரு போல. போனசா சூரிய சனி சேர்க்கை

எது எப்படியோ மெகா ப்ராஜெக்டுல இருந்து கழண்டுகிட்டோம். ( நாட்ல என்னென்னமோ நடக்கிறச்ச வெறுமனே ஜோதிஷத்தை கட்டி அழறது கில்ட்டிய கொடுக்குது -இனி அல்லாத்தையும் கிழிக்கலாம்ல) தயவு செய்து ஆரும் ஆடியோவை டெக்ஸ்டா மாத்திராதிங்கண்ணா.

கலிகாலத்துல நல்ல காரியம்லாம் பண்ணப்படாது. அப்பாறம் உங்க இஷ்டம். ( எனக்கு கஷ்டம்)

Thursday, September 22, 2011

ஜோதிட ஆடியோ பாடம்: சுக்கிரன் (7 To 12)


அண்ணே வணக்கம்ணே ! ஆடியோ ஜோதிட பால பாடத்துல இன்னைக்கு சுக்கிரன் 7 முதல் 12 ஆம் பாவங்களில் நின்னா என்ன பலன்னு சொல்லியிருக்கேன். வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. உங்க கருத்துக்களை தெரிவிக்கலாம். ,சந்தேகங்களை கேட்கலாம்.

Monday, September 19, 2011

அலித்தன்மைய தரும் புதன்


அண்ணே வணக்கம்ணே..
உங்கள்ள சோதிட பிரியரா உள்ளவுக சுள்ளுன்னு ஒரு காதலை கேட்டு டிஸ் அப்பாய்ண்ட் ஆயிருக்கலாம். உங்களை திருப்திப்படுத்தவே அகாலமா இந்த ஆடியோ ஜோதிடபால பாடத்தின் தொடர்ச்சியை போஸ்ட் பண்றேன்.

இன்னைக்கு புதன் 7 முதல் 12 பாவங்களில் இருந்தால் ஏற்படக்கூடிய பலனை விவரிச்சிருக்கேன். வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Saturday, September 17, 2011

அம்மனுக்கும் வேசிக்கும் ஒற்றுமை



அம்மனுக்கும் ( நம்ம ஒக்காபிலரில ஆத்தா) வேசிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னன்னு சொல்றவுகளுக்கு என்ன கொடுக்கலாம்னு நீங்களே சொல்லுங்க. (ஆத்தா பல்பு கொடுத்துருவான்னு ஆருனா சொன்னா நம்பாதிங்க.

அதுசரி அனுபவஜோதிடத்துக்கும் வேசிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன்.அதுக்கு இன்றைய ஆடியோ பதிவை கேட்டே ஆகனும். வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Wednesday, September 14, 2011

குரு : A டு Z 360 டிகிரி பார்வை


அண்ணே வணக்கம்ணே,
குரு என்னவோ தான் இருக்கும் இடத்துலருந்து 5,7,9 பார்வையைத்தான் கொண்டிருக்காரு.(இதுல 7 ஆம் பார்வை சொத்தையாம்)
அதுக்குன்னு நாம அவரை முழுசா பார்க்கலின்னா எப்படி அதனாலதேன் 360 டிகிரி பார்வைன்னு சொல்லியிருக்கேன்.

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க. மக்கள் கருத்து என்னவோ டெக்ஸ்டுக்கு தான் ஆனால் பெண்டிங்ல உள்ள ஜாதகங்கள் காரணமா ஆடியோ தொடர்ரேன்.

கூடிய சீக்கிரம் டெக்ஸ்டு.. உடுங்க ஜூட்டு

Monday, September 12, 2011

ஜோதிட பால பாடம் : குரு A டு Z பலன்


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு துவாதசபாவங்களில் குரு நின்றால் ஏற்படக்கூடிய பலனை ஒரு புதிய கோணத்துல சொல்லியிருக்கன். நாளைக்கு ரொட்டீனாவும் பார்ப்போம்.

வழக்கம்போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்கி கேட்டுருங்க.சோனியா காந்திக்கு யோசனை கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன் .ஆனால் ஆரும் கண்டுக்கிடலை (ஐ மீன் ஐடியா கொடுக்கலை - திருந்தாத ஜென்மம்னு முடிவு பண்ணிட்டிங்கனு நினைக்கிறேன். )

Wednesday, September 7, 2011

ஒரு நானோ கார் இலவசம்


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கும் ஆடியோ பாடம் தொடருது. நேத்து ராகு கேதுக்கள் பற்றிய முன்னோட்டம் + துவாதச பாவங்களில் ராகு நின்ற பலனை பார்த்தோம். இன்னைக்கும் ராகு -கேது பற்றிய முன்னோட்டம் தொடருது ( நேத்து மிஸ் பண்ண டேட்டா) .

இத்துடன் துவாதச பாவங்களில் கேது நின்ற பலனையும் சொல்லியிருக்கேன். ஆடியோவா டெக்ஸ்டான்னு ஒரு வாக்கு பதிவு ஆரம்பமாகியிருக்கு.

ஆடியோ வடிவத்துக்கு வாக்களிப்பவர்களுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் .( ஹி ஹி..டைரக்ட் எலக்சன் வந்து நாம இந்திய ஜனாதிபதியான பிற்பாடு - )

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயரை அழுத்தி ஆடியோ பாடத்தை கேட்கலாம்.


Sunday, September 4, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (3)


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னம் கடகம்னு ஆரம்பிச்சா சித்தூருக்கு பஸ்ஸை விஜாரிக்க ஆரம்பிச்சுருவிங்க.( வேற எதுக்கு கடுப்புல தேடிப்பிடிச்சு ஒதை கொடுக்கத்தான்) ஆனால் என்ன பண்றது நடப்பு லக்னத்தை ஞா படுத்துதே. ஜோதிட பால பாடம் துணுக்கா -டெக்ஸ்டா ஆரம்பிச்சு ஆடியோவா அவதாரம் எடுத்து இன்னைக்கு 3 ஆவது நாள்.(மழை எப்படி ஆரம்பமாகுமோ அப்படி- கடகத்துக்கு அதிபதி சந்திரன் -அவர் ஜலகாரகன்)

தாளி .. வார்த்தையில முழுக்க கொண்டு வரமுடியலியே தவிர செவ்வாயை பற்றி மட்டும் ஒரு செமினாரே நடத்திரலாம் போல இருக்கு. சரிங்ணா ஆடியோ பாடம் தானே .வருது வருது இந்த "லேகியம் விக்கிற கணக்கா எழுதினதே அதை பத்தித்தானே..

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. கருத்து மழைக்கு கமெண்ட் மழை நிச்சயம்தானே .

Saturday, September 3, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (2)


அண்ணே வணக்கம்ணே!
அனுபவஜோதிடம் ஆடியோ பாடம் தொடருது. இந்த பத்துவரிக்கு கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைன்னாலே பதிவு போடலாமா வேணாமாங்கற மாதிரி தயக்கம் வந்துருது. ஏன்னா ஹிட்ஸ்ல ஒன் பை ஃபைவ் உசோ..(போயிரும்)

இதுல ஆடியோ ஃபைல் வேறயான்னு ஒரு தயக்கம். அதுக்கேத்தாப்ல நாம இந்த குரல் பதிவுக்கு உபயோகிக்கிற http://www.archive.org/ சைட்ல பிரச்சினையா நம்ம கனெக்சன்ல பிரச்சினையான்னு தெரியலை. ரெம்பவே வவுத்தெரிச்சலை கொட்டிக்கிச்சு.

அண்ணன் மட்டும் எப்படி ஆடியோ பதிவு போடறாருன்னு மண்டைய உடைச்சுக்கற தம்பிமாருக்கு (ஹி ஹி இணையத்துக்கு புதுசா வர்ரவுகளைத்தானே அப்படி கூப்ட முடியும்) டிப்ஸ்.

மொதல்ல உங்க பேச்சை உங்க மொபைல்ல பதிவு பண்ணிக்கங்க. கேபிள் மூலமாவோ - ப்ளூ டூத் மூலமாவோ அந்த ஆடியோவை சிஸ்டத்துக்கு கொண்டு வந்துருங்க.

அப்பாறம் மேலே சொன்ன சைட்ல சைன் அப் பண்ணிக்கங்க. ரைட் டாப்ல ஷேர்னு ஒரு பட்டன் தெரியும் அதை சொடுக்குங்க. உங்க ஆடியோ ஃபைலை ச்சூ காட்டிவிட்டுட்டிங்கண்ணா அதும்பாட்டுக்கு அப்லோட் ஆகும். அதுக்குள்ளாற கீழே உள்ள விண்ணப்பத்தை நிரப்பிருங்க.

ஃபைல் அப்லோட் ஆனபிற்பாடு ஓகே பண்ணிருங்க. யுவர் பேஜ் க்ரியேட்டட்னு புது விண்டோ தெரியும். அதுல உங்க பேஜ் யு ஆர் எல் -ஐ க்ளிக் பண்ணா ரைட் டாப்ல ஒரு ப்ளேயர் தெரியும். அதுங்கீழே எம்ப்ட் திஸ்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதுங்கீழே உள்ள கோடை காப்பி பண்ணி கொண்டு வந்து உங்க சைட்ல ஒட்டிட்டா ஓவர்.

இதை ரெண்டு விதமா செய்யலாம். ஒன்னு design/add a widget/html னு ஒட்டறது. ரெண்டாவது மெத்தட்ல குரல் பதிவுக்கான விளக்கத்தை ப்ளாகர்ல அடிச்சு முடிச்சுட்டு ரைட் கார்னர்ல கம்போஸுக்கு பக்கத்துல
( ஐமீன் கம்போஸுக்கு லெஃப்ட்லனு நினைக்கிறேன் ) எடிட் ஹெச் டி எம் எல்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதை சொடுக்கி ப்ளேயர் எங்கே வரனும்னு நினைக்கிறிங்களோ அங்க உங்க கோடை பேஸ்ட் பண்ணிட்டு சேவ் பண்ணிட்டா போதும்.

இதான் குரல் பதிவோட சூட்சுமம்.இனி பாடத்துக்கு போயிரலாம். கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்குங்க





Friday, September 2, 2011

ஜோதிட பாலபாடம் ஆடியோ :1

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கெல்லாம் ஒரு இனிய அதிர்ச்சி. ஜோதிட பாலபாடத்தை ஒரு வரிசையில ஆடியோ ஃபைலா தர முடிவு செய்து இன்னைக்கே ஆரம்பிச்சுட்டேன்.

இன்னைக்கு துவாதச பாவங்களில் சூரியன் நின்றால் என்ன பலன் கிடைக்கலாம்ங்கற விஷயத்தை எடுத்துக்கிட்டேன்.

வழக்கமா பாடற பல்லவிதான். இதெல்லாம் கல்வெட்டோ - ஐ.பி.சியோ கிடையாது. பொதுப்பலன் தான். இதுல நாம ப்ரஸ்தாபிச்ச கிரகஸ்திதிக்கு ஆப்படிக்கிற வேற ஒரு அம்சம் ஜாதகத்துல இருந்தா இந்த பலன் எல்லாம் பல்லை இளிச்சுரும்.

இன்னைக்கும் சில பால பாடங்களை துணுக்காவும் தந்திருக்கேன். இதையும் ஒரு ஓட்டு ஓட்டுங்க. கடைசியில உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்கினா ஆடியோ பாடம் ஒலிக்கும்

5 ல் ராகு 11 ல் கேது அல்லது 5 ல் கேது 11 ல் ராகு:

இவர் வாழ்வில் அவமானங்கள் - நடக்கும்போது அதையடுத்து பெரும் அதிர்ஷ்டம் வரிக்கும். அதே போல் எதிர்பாரா லாபங்கள் நிகழும் போது அதையடுத்து அவமானம் எதிர்ப்படும் .டேக் கேர்.

2க்கு அதிபதியும் விரயாதிபதியும் சேரும்போது:
உ.வசப்பட்டு பேசும்போது பேச்சு தடைபடலாம். தாராளமாக பேசும் பழக்கம் இருக்காது. அல்லது தேவையற்ற பேச்சுக்களால் விரோதம் வரும். டம்ப பேச்சு அதிகமாக இருக்கலாம். அல்லது சதா தன் ஏழ்மையை பேசும் பழக்கமும் இருக்கலாம். (மொத்தத்தில் உங்கள் பேச்சை சனம் ரசிக்காது. தப்பி தவறி ரசிச்சா அவிக ரசிக்கிற வரை குடும்பமும், நீங்களும் ரொம்பவே கஷ்ட ப்படுவீர்கள்.
3க்கு அதிபதி ஏழில்:
ஜாதகரின் விருப்பப்படிதான் வாழ்க்கை துணை அமையும். அதற்காக இவர் கொஞ்சம் வீர விளையாட்டில் /கண்ணாமூச்சியில்/அல்லது மோடி மஸ்தான் வேலையில் இறங்க வேண்டி வரலாம். ஒரு வேளை சகோதரர் பெண்ணெடுத்த வழியிலும் தாரம் அமையலாம்.ஆனால் திருமணத்துக்கு பின் மனைவிக்கு அல்லல் அலைச்சல் அதிகமாகலாம்.
4க்கு அதிபதி 5ல்:
இவரது பூர்வ புண்ணியங்களின் காரணமாய் வாகன,கிருக யோகம் அமையும். கடந்த பிறவியில் தாயாக இருந்தவரே இந்த பிறவியிலும் தாயாக வந்துள்ளார். எனவே தாயார் மீது சற்று அலட்சிய பாவம் இருக்கலாமே தவிர சப் கான்ஷியசில் உண்மையான பாசம் வைத்திருப்பவர். அதிர்ஷ்டவசமாய் குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ வீட்டுமனை அ வீடு /வாகனம் கிடைக்கும். தாயாரின் மறைவுக்கு பிறகு இவரது மனைவி கருத்தரித்தால் தாயின் மறுபிறவி தோன்றும்.

4 ல் செவ்வாய் கேது:
இங்கு செவ்வாய் ஒருவர் நின்றாலே தாய்க்கு ரொம்ப கெடுதல். 4 என்றால் தாய் செவ்வாய் என்றால் ரத்தம், கேது என்றால் வழக்கத்துக்கு மாறான திடீர் மாற்றங்கள்/ பிரச்சினை.
கூட்டி கழித்து பாருங்கள் . தாய்க்கு பெரிய பிரச்சினையே வரவும் வாய்ப்புள்ளது. உ.ம் மார்பக கேன்சர் அ யூட்ரஸ் கேன்சர். ரெகுலர் செக்கப், முன் கூட்டிய ட்ரீட்மென்ட் ( வேறென்ன அறுத்து எரியவேண்டியதுதேன்) மூலம் யு கென் ரிசால்வ் தி ப்ராப்ளம்.
ஜாதகருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறுமை , பூமிலாபம், சகோதரர் வகையறாவில் பிரச்சினைகள் காரணமாய் இதயத்துக்கு பெரும் அழுத்தம் ஏற்படும் .எனவே ஜாதகர் புகைப்பழக்கத்துக்கு ஆளாகாது பார்த்துக்கொள்ளவும் ( நிச்சயம் இவருக்கு இப்பழக்கம் ஏற்படலாம்) ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் ஈஸ் மஸ்ட்.

எட்டில் குரு:
கடும் உழைப்பாளியாக ( ஃபீல்ட் ஒர்க் ) இருந்தால் தப்பிக்கலாம். அவ்வாறன்றி சுகஜீவனம் வாய்த்தால் திருமணம்,மனைவி,வாரிசு,பொன் ,பொருள் ஆகிய விஷயங்களில் அதிர்ச்சிகள் கட்டாயம்
பரிகாரம்:
சிவலிங்க பூஜை,பிரதி வியாழன் விரதம் ( இயற்கை வைத்திய முறைப்படி முழு பட்டினி). பஞ்சாட்சரி ஜபித்தல் . பொன் பொருள் எதிர்பாராது ஏழை குடும்பத்து பெண்ணை மணத்தல். உடலுழைப்பை விரும்பி ஏற்றல்



http://www.archive.org/details/Anubavajothidam1