Showing posts with label ஆத்தா. Show all posts
Showing posts with label ஆத்தா. Show all posts

Tuesday, January 24, 2012

அவன்-அவள்-அது : 22


அண்ணே வணக்கம்ணே !

நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)

ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.

நாம சத்தியத்தை காத்திருந்தா - தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.

எத்தனையோ தியான முயற்சிகள் - ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.

நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.

ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.

அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் " சண்டிவை ,துர்கவை"னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா " "சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா"ன்னுட்டு வரும்.

அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு "பிக் பாங்கே" நடந்தது.

அந்த வரிக்கு அருத்தம் " சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா"


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா - சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.

நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து "ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க"ம்பான்.

நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.

இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.

சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.

"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..

நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு "அவன் தானே" என்றார்.

அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?""ஹெட் கான்ஸ்டபிள் சார்"உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.

" உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.

Tuesday, August 16, 2011

கில்மாவும் ஆன்மீகமும்


காமி கானி வாடு மோட்சகாமி காலேடு - இது தெலுங்கு பழமொழி. இதுக்கு " காமத்தை விரும்புபவனாய் இல்லாதவன் மோட்சத்தை விரும்புபவனாக முடியாதுன்னு அருத்தம். கில்மா ஒரு படப்பாடல்னா ஆன்மீகம் சூப்பர் ஹிட் இரவு காட்சி.

2000 டிசம்பர் 23 முதல் நாளிது வரையிலான என் ஆன்மீக அனுபவங்களை சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். அனுபவங்கள்னா இதுல கில்மாவும் அடக்கம் தானே.

அதை விட்டுட்டு எழுதினா இது எப்படி முழுமையான அனுபவமாகும். 1984 ( சம்மர் ஹாலிடேஸ்) முதல் 1986 ஜனவரி 1 வரை காஞ்ச மாடு கம்பங்கொல்லையில விழுந்த கணக்கா எக்கு தப்பா -தப்பு தப்பா - நிறைய தப்பு பண்ணாலும் - 1986 ல ஒரு 3 மாசம் பிரம்மச்சரியத்தை முயற்சி பண்ணாலும் -அது அசம்பவம்ங்கற ஞானோதயம் நடந்துட்டதால இந்த மேட்டர்ல ஒரு கன்க்ளூஷனுக்கு வந்தாச்சு.

ஓஷோ புக்ஸ் படிக்கிறதுக்கு மிந்தியே பிரம்மச்சரியத்துக்கும் - காமத்துக்கும் உள்ள சரியான லிங்கை புரிஞ்சிக்கிட்டாச்சு. நமக்குன்னு ஒரு விதியை ஏற்படுத்திக்கிட்டாச்சு. 1988 - 1989 லயே நமக்குள்ள ஒரு அவதானம் - நிதானம் ஏற்பட்டு போச்சு.

செக்ஸ் வித் ரெகுலர் இன்டர்வெல்ஸ் ஒன்னுதேன் பிரம்மச்சரியத்துக்கு உதவும்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டம். 1991 நவம்பர்ல திருமணமும் நடந்தாச்சு. என்னதான் வாழ்க்கை போராட்டங்கள் இருந்தாலும் கில்மா மேட்டர்ல நவகிரகங்களால வேலை செய்யமுடியாம போயிருச்சு. இதுக்கு காரணம் சின்ன புரிதல்தான்.

2000 டிசம்பர் 23 ல பீஜாக்ஷர ஜெபம் ஆரம்பிக்கிறச்ச கில்மாங்கறது நம்ம லைஃப்ல இன்னொரு ட்ராக்ல பேர்லலா போயிட்டிருக்கும். உடல் ரீதியான தேவை ஏற்படும் போது அந்த ட்ராக்ல கிராஸ் ஆகி கில்மாவுடன் சின்ன கைகுலக்கல். அதுக்கப்பாறம் நம்ம லட்சிய பயணத்தை தொடர்ரதுன்னு ஒரு டிசிப்ளின் ஏற்பட்டு போச்சு.

மன ரீதியான வக்ரங்கள்,தூண்டுதல்கள் எல்லாம் எகிறிப்போயிருக்க இந்த கில்மா மேட்டர்ல மட்டும் ஒழுங்கு மரியாதை பாடியோட அஜெண்டா படி போக ஆரம்பிச்சிருந்தோம்.அதனால நம்ம தபஸ் எந்த வித இன்டரப்ஷனுமில்லாம பக்காவா கன்டின்யூ ஆச்சு.

2003 ஜூன்ல பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு போன பிற்பாடு இந்த மேட்டர் எப்படி நம்மை எஃபெக்ட் பண்ணுச்சுங்கற விசயத்தை அப்பாறம் பார்ப்பொம்.

பிரம்மச்சரியம் தான் தியானத்தை தரும். தியானம் யோகத்தை தரும் .யோகம் முக்தியை தருங்கறது சனங்க வ்யூ. நம்மை பொருத்தவரை தியானம் -யோகம் இத்யாதி காரணமா ஜஸ்ட் ஏஸ் எ பை பிராடக்ட் பிரம்மச்சரியம் கை வரும்.

ஓஷோ மேட்டர்ல ஒரு சுவாரஸ்யம். மொதல் மொதலா ஓஷோவை பத்தி படிச்சப்ப /ஓஷோவை பற்றி யாரோ ஒரு ப்ரொஃபெஷ்னல் கன்டென்ட் ரைட்டர் எழுதினதை படிச்சதாலயோ என்னமோ மனசுக்கே வரலை.

ஆனால் காலக்கிரமத்துல ஓஷோவின் நேரடி பேச்சுக்களின் மொழிபெயர்ப்புகள் படிக்க கிடைச்ச பிற்பாடு லோக்பால் மசோதாவுக்கு பாராளுமன்ற ஒப்புதல் கிடைச்சா அன்னா ஹசாரே எப்படி துள்ளிக்குதிப்பாரோ அப்படி ஒரு மன நிலை நமக்கு ஏற்பட்டது.

கில்மாவை பொருத்தவரை ஓஷோ கிட்டே கத்துக்கிட்டதுன்னு பார்த்தா ரெம்ப குறைவுதான்.ஆனால் கில்மாவை பற்றிய என் பார்வைக்கு அங்கீகாரம் கிடைச்சதென்னவோ ஓஷோவின் பேச்சுக்களில் தான்.தியானம் - கடவுள் - படைப்பு இத்யாதி குறித்த விளக்கங்களை பொருத்தவரை ஒஷோ தான் நமக்கு சுப்ரீம்.

கில்மாவுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்புங்கற விஷயத்தை பற்றி ஏற்கெனவே திகட்ட் திகட்ட எழுதிட்டதாலயும் - சனம் நம்ம பழைய பதிவுகளை நோண்டி நுங்கெடுக்கிறாதாலயும் இந்த டச் போதும்னு நினைக்கிறேன்.

உபரியா ஒரு அனுபவத்தை இந்த பதிவின் மூலம் ஷேர் பண்ணிக்கிறேன்.

1997 நவம்பர்ல பூர்விக சொத்து செட்டில்மென்ட்ல ஒரு லட்சத்து ரெண்டாயிரம் வந்ததுல ரெண்டு வட்டிக்கு விட்டு நாறிப்போன கதையை ஏற்கெனவே சொல்லியிருப்பேன்.

அப்படி வாங்கிக்கிட்ட பார்ட்டி ஒருத்தனை வேட்டையாடிக்கிட்டிருந்த சமயம் . ஐ மீன் ஆள் காணவில்லை ரேஞ்சுக்கு போயிட்டான். அவிக ஏரியால முகாமிட்டு கேட்ச் பண்ணனும். ரோட்ல வெய்ட் பண்ண வேண்டியது. திடீர்னு ஏதோ ஒரு பிக்காலி "இன்னாபா இங்க வெய்ட் பண்றே.அவன் இப்பத்தான் வீட்டுக்குள்ள போனதை பார்த்தேன்"னு ஊத்திவிட்டதும்..மறுபடி அவன் வீட்டண்டை போக வேண்டியது.
ஏமாந்து மறுபடி ரோட்டுக்கு வரவேண்டியது இதே ரேஞ்சுல ஷட்டில்.

நிலைமையா ரெம்ப மோசம். அந்த பரதேசி 23 ரூவா கிட்டே தரனும். அதுல ஒரு 3 ஐ மட்டும் கொடுத்தாலே ஒரு 3 மாசத்துக்கு பிரச்சினை இல்லாம இருக்கலாம் போன்ற நிலை. இப்படி ரோட்டுக்கும் அவன் வீட்டுக்கும் அலைஞ்சுக்கிட்டு கிடக்கோம்.

அவிக வீடு உள்ள சந்துக்கு டர்ன் ஆறதுக்கு முந்தின தெருவுல ஒரு அம்மன் கோவில். கோட்டை கணக்கா பெரிய ரெட்டை கதவு. கதவுக்கு நேர கர்பகிருகம். லெஃப்ட் அண்ட் ரைட்ல க்ர்பகிருகத்தை வலம் வர்ரதுக்கு விசாலமான இடம்லாம் உண்டு.

கடேசியா அவன் வீட்டண்டை போகப்பொறேன்.ஹவுஸ் ஓனருக்கு வாடகை கொடுத்தே ஆகனும் . அந்த அளவுக்கு டார்ச்சர். அன்னைக்கு கொடுக்க முடியலின்னா மறுபடி எந்த தேதியில பணம் கைக்கு வருதோ கொடுத்துட்டு அன்னைக்கே வெக்கேட் பண்ணி ஆகனும். அந்த அளவுக்கு வலிக்க வச்சுட்டான். அதுக்கு அவனுக்கு என்ன நடந்ததுன்னு இன்னொரு அத்யாயத்துல சொல்றேன். (வெக்கேட் பண்றதுன்னா பேக்கிங் செலவு - புது வீட்டுக்கு அட்வான்ஸ் கூடும் -வாடகை கூடும் - விலாசம் மாறினா ப்ராக்டிஸ் அடிவாங்கும் இப்படி ப்ராக்டிக்கல் சிரமங்கள் தான்.மற்றபடி அட்டாச்மெண்ட் எல்லாம் ஒரு மசுரும் கிடையாது)

மேலும் அந்த வீடு டொமஸ்டிக் லைஃபை விட ஸ்பிரிச்சுவல் லைஃபுக்கு ரெம்ப பொருத்தமான வீடு . அந்த வீட்டிலான எங்க போர்ஷன்ல ஒவ்வொரு சதுர மி.மீலயும் நம்ம அதிர்வுகள் ஸ்டோர் ஆகியிருக்கு. வழக்கமான்னா ஒரு மணி நேர அவகாசத்துல வீடு காலிபண்ணக்கூடிய சாடிஸ்ட் கேஸு நாம.

ரோட்லருந்து சைக்கிளை மிதிச்சுக்கிட்டு அவன் வீடு இருக்கிற தெருவை நோக்கி போறேன். மனசு கனத்து கிடக்கு. ஆத்தா ஆத்தான்னு ஜொள்ளு விட்டோம். அந்த ஆத்தா கூட நல்ல சமயத்துல கை விட்டுர்ரா. இதான் கடைசி சான்ஸ் பார்ப்போம்னு பல எண்ணங்கள்.

திருப்பத்தின் போது ஒரு ரிஃப்லெக்ஸ் மாதிரி கண்ணு மேற்படி கோவிலை அரை குறையா பார்க்குது.
அப்பம் மேற்படி கோவில் -கர்பகிருகம் -இடது புற காலியிடம்லாம் டச் ஆகுது. அந்த காலியிடத்துல சப்பரத்துல அம்மன் சிலை ஒன்னு பக்காவா அலங்கரிக்கப்பட்டு இருக்கு ( நேரம் ; மதியம் 2 க்கு மேல இருக்கும்) ஆக்யுரேட்டா சொன்னா சமய புரம் மாரியம்மனோட வடிவம் -அலங்காரம்.

ங்கோத்தா .. இது ஆடிமாசம் இத்யாதி கூட கிடையாதே.. மே மாசம் அசலே கிடையாது. இந்த பார்ப்பானுங்களுக்கு வேற வேலையே கிடையாது. ஏரியால இருக்கிற சூத்திரங்களோட ஈகோவை தூண்டி விட்டு நல்லாவே கல்லா கட்டறானுவன்னு வஞ்சிக்கிட்டே பார்ட்டியோட வீட்டுக்கு போனேன்.

அவன் ரேஞ்சுக்கு பத்து பைசா பேராதுன்னு தெரியும். ஆனாலும் நமக்கு வேற சோர்ஸ் இல்லாத காரணத்தால தேன் இந்த வேட்டை. வீட்ல உள்ளவுக மாடியில இருக்கான்னு சொன்னாய்ங்க. நான் மாடிப்படி ஏறி போறேன். லுங்கி பனியன்ல இருக்கான்.

பார்ட்டி எக்கனாமிக்கலா நொந்து போயிருந்தாலும் (சின்னப்பையன்) ராசி சிம்மம். லக்னம் தனுசு.லக்னத்துலயே குரு. நம்மை பார்த்ததும் ஒன்னுமே பேசலை. எழுந்து போய் கோட் ஸ்டாண்ட்ல மாட்டியிருந்த பேண்ட்ல இருந்து கத்தையா நோட்டுகளை எடுத்தான். எல்லாம் நூறு ரூவா தாளு. ஒரே ஒரு தாளை தனக்கு வச்சிக்கிட்டு மொத்தத்தையும் கொடுத்துட்டு " தயவு செய்து நீ ஒன்னும் பேசாத .. கணக்கெல்லாம் அப்பாறம் பார்த்துக்கலாம்"னான். எண்ணிப்பார்த்தா கரீட்டா ரூ.3000 இருக்கு.

அப்பல்லாம் மணி சீக்ரெட்ஸ் நமக்கு தெரியாது. பிணத்துக்கு உசுரு வந்த ஃபீலிங் . எப்பம் வெளிய வந்தேன். எப்பம் சைக்கிள் லாக்கை திறந்தேன்.எப்பம் ஸ்டாண்டை தள்ளினேன்னு கூட தெரியாது. பாடி அவ்ள லேசா இருந்தது.

சந்து திரும்பும்போது ஆட்டோமெட்டிக்கா கண்ணு அம்மன் கோவில் பக்கம் திரும்புச்சு. கோவில் கதவு ஓகே.. கர்ப கிருகம் ஓகே. ரைட்ல வலம் வர இடம் ஓகே. லெஃப்ட்ல சப்பரம் ஓகே. ஆனால் சர்வாலங்கார பூஷிதையா காட்சி தந்த மாரியம்மன் மட்டும் ஆப்சென்ட்.

மண்டைக்குள்ள ஒரு ரங்கோலி .. நெஞ்சுக்குள்ள கிலி. " ஆத்தா"ன்னுட்டு தினத்தந்தி போஸ்டர் சைஸுல கத்தலாம் போல ஒரு உணர்வு.

(தொடரும்)





Monday, August 1, 2011

ரஜினி வாயில் "நாதாரி" என்ற வார்த்தை


ஆமாங்ணா ரஜினி ஒரு படத்துல நாதாரிங்கற வார்த்தைய பஞ்ச்சாவே உபயோகிச்சிருக்காரு. என்ன படம் என்ன படம்னு கேப்பிக. (ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ற பார்ட்டிகளுக்கு பதில் தெரிஞ்சிருக்கலாம்) சொல்றேன்.

அதுக்கு மிந்தி நாதாரிங்கறதுக்கு என்ன அருத்தம்? ஆருனா சொல்லுங்கப்பு. ப்டையப்பாவுல என்ன பஞ்ச்? "என் வழி தனி வழி" இதை தெலுங்குல டப் பண்ணப்ப " நா தாரி ரஹதாரி"ன்னு வச்சிருந்தாய்ங்க. நா = என்னோட தாரி = வழி .

ரஹதாரின்னா = ராஜ பாட்டை /ஹைவே இப்படி அருத்தம்.

நம்ம ஜோலிக்கு வந்தா கோலி காலினு ஜா.ராவுக்கு சொல்லத்தேன் இந்த பதிவு. இது நாலு பேரை போய் சேரனும்ல அதுக்குத்தேன் வில்லங்க தலைப்பு+ லீடு. பதிவுக்கு போயிரலாமா?

நான் விரும்பி பார்க்கும் ஒரே சேனல் ஆதித்யா.எப்படியும் தாத்தா அழவைக்கிறாரு. நாமளாச்சும் சனத்தை கொஞ்சமா சிரிக்க வைப்போம்னு வச்சாய்ங்க போல. வாழ்க. அதுல (குழந்தைகள் கூட விரும்பி பார்க்கிறதை கவனிச்சிருக்கேன்) ஆம்பளை சோடா வேணமா பொம்பள சோடா வேணமா - பல்பு ஃப்யூஸ் ஆயிருச்சு - கோழி மிதிச்சு குஞ்சு சாகிறது மாதிரி காட்சியெல்லாம் கச்சா முச்சான்னு வருது.

குழந்தைங்களும் பார்க்கிற சானலே கோலி ஆடும்போது நிர்வாண உண்மைகள்னு பேரை வ்ச்சிருக்கிற ப்ளாக்ல கோலி மேட்டர் வரலாம் தான்.

நம்ம ஜோலிக்கு வந்த பிக்காலிகளுக்கு கோலி எப்படி காலியாச்சுங்கற கேள்விக்கு பதிலா இந்த பதிவு. ஆண் பெண் வித்யாசம் தொடர் ஞா இருக்குங்ணா. ஆன்லைன் கன்சல்ட்டன்சில 30 நாளுக்கு மேல வயசான ஜாதகம்லாம் பெண்டிங் இருக்கிறதால - அடுத்து எழுத வேண்டிய 10 ஆம் பாவம் சிக்கலான சப்ஜெக்டுங்கறதால இந்த பைபாஸ்.

நம்ம ராசா வேற இந்த மேட்டரை எழுதினா நல்லாருக்குமேன்னு கேட்டிருந்தாரு. அதான் இப்படி டைவர்ட் ஆயிட்டன்.

மார்க்கெட் சவுக்ல ஆஃபீஸ் ஓப்பன் பண்ணின புதுசு. எவனோ குடிகார நாயி செத்தான். அதுக்கு எவ்னோ ஒரு கு.நா போதையில நம்ம ஆஃபீஸ் பக்கம் வந்து " இன்னா.. சாமீ.. க.....டையெல்லாம் திறக்க ப்படாது.ஒடனே .மூடு"ன்னான் அம்புட்டுதேன். வேற ஒன்னும் பண்ணலை.

போலி பேர்ல வந்து கமெண்ட் போடலை. நம்ம பேர்ல போலி ஐடி கிரியேட் பண்ணலை. வேற ஒன்னும்.. ஒன்னும் பண்ணலை. ஜஸ்ட் போதையில என்ன பேசறோம் ஆருகிட்டே பேசறோம்ங்கற சொரணையில்லாம வாயு வெளியேறின கணக்கா வந்த பேச்சு இது.

அது இன்னா வருசம்? 1998 . இன்னி வரைக்கும் பாவம் தலை தூக்கலை. அண்ணன் தம்பி வெட்டி மடிஞ்சானுக. நாமதேன் பஞ்சாயத்து. அம்மா ஒரு தாட்டி கோச்சிக்கினு பூட்சி. நாமதேன் ப்ரஸ்னம். அண்ணன் காரன் கவுரதையா ஆட்டோ ஓட்டறான். இவன் கண்னெல்லாம் பஞ்சடைச்சுப்போய் -தாடி மீசையோட - சாயம் போன லுங்கி - ஹவாய் செருப்போட மாசம் ஒரு தாட்டி கிராஸ் ஆகிறான். அவ்ளதேன். நானும் எத்தனையோ தாட்டி ஆத்தா கிட்டே அப்பீல் பண்ணி பார்த்தேன். ஒன்னம் பேரலை.

இதுவாச்சும் பரவால்லை. இன்னொரு கேஸை சொன்னா நம்ம ஜா.ரா நொந்து நூடுல்ஸாயிருவாரு. ஒரு ஆசாமி. இவனோட குணச்சித்திரத்தை விவரிக்க ஒரே வரி போதும். எங்க ஏரியா வடிவேலுன்னு வச்சுக்கங்களேன்,

பெரிய டான் மாதிரி பயங்கர பந்தா பண்ணுவான். எவனாச்சும் வேர்க்குதே வேர்வையில சட்டைகாலர் நனையுதேன்னு கைய கழுத்துக்கு பின் புறமா விட்டா போதும் நம்மாளு ஒன் பாத்ரூம்தேன். ஒரு நாள் வேற ஒரு நண்பரோட வண்டிய பிச்சை எடுத்து எங்கயோ போகவேண்டி வந்தது ( நாம இல்லை.அந்த நாதாரி - அந்த வேலையில நமக்குதேன் கீ ரோல் )

அந்த வண்டிக்காரன் வீடு ஒரு காம்ப்ளெக்ஸ்ல இருக்கு. தலைவாசல்ல பெரிய கேட்டு. நம்மாளு கேட்டை திறந்துக்கிட்டு போய் வண்டிய தள்ளி ஸ்டார்ட் பண்ணிட்டான். கேட் சாத்தியிருக்கு. நம்ம பக்கம் பார்த்தான் . அந்த பார்வைக்கு அர்த்தம் "கேட்டை திற"ங்கறது.

நமக்கு தான் இந்த போலி கமெண்டு மாதிரியே போலி கவுரதையும் பிடிக்காதே. ஒழிஞ்சு போனுட்டு கேட்டை திறந்துவிட்டேன். அம்புட்டுதேன்.

என்னாச்சுங்கறிங்க? நாம போன வேலை பத்து நிமிச வேலை . கழண்டுகிட்டோம். பார்ட்டி ஆரோ பார்ட்டி தராய்ங்க - ஓசில குடிச்சு கூத்தடிக்கலாம்னு இன்னொரு வில்லங்க பேர்வழியை சோடி போட்டுக்கிட்டு போயிருக்கான்.

திரும்பி வர்ர வழியில ஆக்சிடெண்ட். கூடப்போனவனுக்கு தாடை நகர்ந்து போச்சு. சவுக்குல என்னடா பேச்சாயிருச்சுன்னா கூட போன வில்லங்க பேர் வழி ஊரெல்லாம் கடன். நம்மாளா சரியான ஆள் காட்டி. இவன் எங்கயோ ஆள் காட்டிட்டான்யா.ப்ளான் போட்டு கூட்டுப்போய் மாட்டிவிட்டுட்டானு அகுடாயிருச்சு. அவன் பொயப்பை பார்க்கனுமே. நா.........றிருச்சு. ஃபைனான்ஸ் கொடுத்துக்கிட்டிருந்த பார்ட்டி ஃபைனான்ஸ் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துட்டான். இதுல டீஃபால்ட்டர் வேற.

ஆடி அமாவாசை ஸ்பெசலா ஒரு சில கவிதைகளை பதிவா போட்டிருந்தோம். ஒரு பார்ட்டி அம்மன் பக்தர்னு எஸ்டாப்ளிஷ் ஆன கிராக்கி. சரி இவ்ளோ பணம் விரயமாக்கறானே. பார்ஷியலா ஸ்பான்ஸர் பண்ணா இன்னம் ரெண்டு பார்ட்டிகளை பிக் அப் பண்ணி அம்மன் கவிதைகளை மலிவு பதிப்பா போட்டு சனத்துக்கு இலவசமா வினியோகிப்போம்னு ஒரு போஸ்ட் கார்டை தட்டிவிட்டேன். லோக்கல் பார்ட்டிதேன்.

பார்ட்டி கண்டுக்கிடலை. போடாங்கொய்யால ஒனக்கு கொடுத்துவைக்கலைன்னு விட்டுட்டன். ஆனால் காலப்போக்குல என்னாச்சுடான்னா சாவற வரை நாம இஷ்யூ போட்டப்ப எல்லாம் ரூ.500 மொழி எழுத வேண்டி வந்துருச்சு.இப்பம் அந்தாளு இல்லை.ஆனாலும் மகன் எழுதிக்கிட்டுதான் இருக்காப்ல.

நாம இன்டர் காஸ்ட் பண்ணிக்கிட்டு வெளிய வந்துட்டம். பெரிய அண்ணன், தம்பி எல்லாம் வெளி ஊரு. சின்ன அண்ணன் தான் வீட்ல .அவன் பொஞ்சாதி இம்சைக்கு அப்பா ஒரு ஓட்டல்ல சாப்பிடறதை வழக்கமா வச்சிருந்தாரு.

அந்த முதலாளிக்கு பெரியபெரிய பின்னணில்லாம் உண்டு. ஆனால் நமக்கு அதெல்லாம் கணக்கில்லை. நாம புள்ளையா இருந்தும் நம்ம அப்பனுகு இவன் சோறு போட்டானேங்கற ஃபீலிங் /கில்ட்டி நமக்கு. அந்த பக்கம் போறச்சல்லாம் இது ஞா வந்துரும்.

என்னாச்சுங்கறிங்க? அந்தாளுக்கு திடீர்னு பாடி பீடி மாதிரி ஆயிருச்சு. அந்தாளுக்குள்ள பெரிய பின்னணியில நாமளும் ஒரு அங்கம். அதனால நம்மை கேர் டேக்கரா போட்டு ஒரு நர்சிங் ஹோம்ல அட்மிட் பண்ணிட்டாய்ங்க. அங்கன நாமதான் பார்ட்டிக்கு சோறாக்கி போட்டோம்.

நானே நினைச்சுக்கறது " ஆத்தா.. இது இன்னா நியாயம்? ஆக்சுவலா அந்தாளு நல்லதை தான் செய்தான். அப்பனுக்கு சோறு போடவேண்டியது மகனா என் கடமை.அதை செய்யமுடியாத நிலைமையில காசு வாங்கிக்கிட்டு தான் போட்டான்னாலும் சோறு போட்டான். எனக்கு லேசா கில்ட்டி. இதுக்குப்போயி அவன் பாடியை ஏன் பீடியாக்கனும்.அவன் ஏன் அட்மிட் ஆகனும்.அவனுக்கு நானே ஏன் கேர் டேக்கரா போகனும். சோறாக்கி போடனும்னு ஆத்தாவை பல தாட்டி கேட்டிருக்கேன். பதில்தான் இல்லை.

இப்படியாகொத்த இன்சிடென்டுங்க நூத்துக்கணக்குல இருக்கு. 1986 ல தேன் ராம நாம ஜெபம் ஆரம்பிச்சோம். 2000 டிசம்பர் 23க்கு அப்பாறம்தேன் ஹ்ரீங்கார பீஜ ஜபம் ஆரம்பிச்சோம். ஆனால் விவரம் தெரியறதுக்கு மிந்தியே.. ரெம்ப சின்ன வயசுலருந்தே நம்மை ஆருனா சீண்டினா - தங்களோட
கண்ட்ரோல்ல கொண்டு வரனும்னு நினைச்சாலே பல்புதேன்.

இதுக்கு ஜோதிட ரீதியா என்ன காரணம்னு அப்பாறம் சொல்றேன். நான் நினைக்கிறது என்னன்னா நம்ம மைண்ட் க்றிஸ்டல் க்ளியரா இருக்கு. நேத்து இன்னைக்குல்ல அம்புலி மாமா,ரத்னபிரபா படிக்கிற காலத்துலருந்தே நம்ம கான்செப்ட் ஒன்னுதேன். கொய்யால .. சரித்திரத்துல நின்னுரனும். அதுக்கு எதுனா செய்துரனும்.

நாளைக்கு பரீட்சைன்னா இன்னைக்கு நோட்ஸ் இரவல் கேட்டாலும் தந்துருவன். இப்படி ஒரு எண்ணம் இருந்ததால இப்படி ஒரு பவர் ஏற்பட்டுதாங்கற சந்தேகமும் நமக்குண்டு. காமம் தலைக்கேறி இருந்த காலத்துல அட .. நாலணா தேவடியாளா இருந்தாலும் நம்ம மொத கேள்வி "சாப்டியா? ஹோட்டல் போலாமா வரவச்சுரலாமா"

ஒரு பன்னாடைன்னா பல்பு வாங்கி வாங்கி நொந்து நோக்காடா போயி - எத்தனை நாளு மனசுல வச்சு குமைஞ்சுதோ - வந்து கேட்டுருச்சு - நீ என்னமோ பண்றே - இந்த கேள்விய கேட்க தில் வர்ரதுக்கு ஒரு ஃபுல் அடிக்க வேண்டி வந்துருச்சாம்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான அனுபவங்கள். இதை வச்சுத்தேன் ஆடி அமாவாசை ஸ்பெசல்ல ஆத்தாளுக்கு

" உன் தாள் பிடித்தவர்களையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை அள்ளி அணைத்த கையை காட்டு"ன்னுட்டு கவிதை எழுதினோம்.