Saturday, August 20, 2011

ஜோதிட பாலபாடம்: 2


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்றும் தொடருது. அதுக்கு மிந்தி சின்ன எச்சரிக்கை. இதெல்லாம் ஏதோ ஒரு ஃபேக்டரை /ஒரு கிரக ஸ்திதியை வச்சு எழுதினது. அந்த கிரக ஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணக்கூடிய வேறொரு கிரகஸ்திதி ஜாதகத்துல இருந்தா பலன் மாறும். இதை கவனத்தில் வச்சு படிங்க.

உதாரணமா:

பாவகிரகம் லக்னாதிபதியானால்:
லக்னாதிபதி என்பவர் ஒரு ஜாதகத்துக்கு தாய் மாதிரி. புலியே ஆனாலும் தன் குட்டிக்கு தாயாகவே இருப்பதை போல் பாபகிரகம் லக்னாதிபத்யம் பெற்றாலும் அவர் உங்க ஜாதகத்துக்கு லக்னாதிபதி என்பதால் நல்லதையே செய்யவேண்டும்

இது வே இவர் 6 ,8 .12லயோ இருந்தா நற்பலன் தருவாரா? மாட்டார். இது வே இவர் 6 ,8 .12அதிபதிகளோட சேர்ந்தா நற்பலன் தருவாரா மாட்டார்.

அவன் அவள் அது தொடரும் தொடருது. தொடரோட 18 ஆவது அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க

கிரகங்களின் இயல்பு: (தன்னிலை)

பொதுவா எங்களுக்குன்னு ஒரு நேச்சர் இருக்கு......... நாங்க எந்த அளவுக்கு வலிமையா இருக்கோமோ அந்த அளவுக்கு தீயபலனை குறைச்சு, நற்பலனை கூட்டி கொடுப்போம். அதேமாதிரி எந்த அளவுக்கு வீக்காகறமோ அந்த அளவுக்கு தீய பலனை கூட்டி ,நற்பலனை குறைச்சு கொடுப்போம்.

ஸ்வ புக்தி அ சுய புக்தி:
ஒரு தசை முழுக்க முழுக்க நற்பலன் தருவதாயின் அதன் சுய புக்தி (முதல் புக்தி ) பலன் தரக்கூடாது. அதே நேரம் ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்க வேண்டுமேயானால் தன் சுய புக்தியில் (முதல் புக்தி) யோக பலனை தரவேண்டும்.
சனி தசை
யாருக்கு அவர் வாழ் நாளில் சனி தசை முழுக்க ( 19 வ) நடைபெறுகிறதோ அவருக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பிக்கை உள்ளது. நல்லதோ கெட்டதோ முழுக்க முழுக்க அனுபவித்துவிடுவார்கள் என்பதால் இந்த நம்பிக்கை
புதன் விரயத்தில்:
முக்கியமாக மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவுகளில் விற்பனை துறையை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.
விரயாதிபதி மூன்றில்:
உடன் பிறப்புகள் வகையறாவிலும் நஷ்டம்,மனக்கஷ்டமே நேரிடும். அப்படியானால் லேசான செவிட்டு தன்மையும் ஏற்படலாம்.அல்லல் அலைச்சலிருக்கும். விரக்தி ஏற்படும்.
சுக்கிரன் சுபபலமானால்:
நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியனவும் அனுகூலம் தரும்.
ஜன்ம செவ்வாய் / லக்ன செவ்வாய் / செவ்வாய் நீசம்/ 7ல் செவ்வாய்:
அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) வரலாம்.இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.
லக்னாதிபதி நீசம்:
இதன் பலனாக ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி .6 அடி ஆழத்துக்கு போடவேண்டிய க்டைக்காலை 3 அடியில முடிச்சிட்டா கிரவுண்ட் ஃப்ளோர் வரைகும்னா சமாளிக்கலாம். ( ஐ மீன் பேச்சிலர் லைஃப் - உத்யோகம் ) ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போட்டா ரிஸ்க். ( ஐ மீன் திருமண வாழ்க்கை - சொந்த தொழில் ) அதுக்கு மேல போனா டப்பா டான்ஸ் ஆடிரும்
லக்னாதிபதி விரயம்:
ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி . நீங்க 32 ஆம் நெம்பர் ஃப்ளாட்ல வீடு கட்டனும்னா கடைக்காலும் 32 ஆம் நெம்பர் ஃப்ளாட்ல தானே போடுவிங்க. பக்கத்து ஃப்ளாட்ல போட்டுட்டா என்னாகும்? அதே நிலைதான் இந்த ஜாதகத்துக்கும்.இதனால்
சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது, ஸ்திரமான அபிப்ராயம் இல்லாது போதல் போன்ற குணங்கள் ஏற்படும். அல்லல் அலைச்சல் தூக்கமின்மை , விரயமான பிரயாணங்கள்,இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது போன்ற பலனும் ஏற்படும். சேல்ஸ் லைனில் இருந்தால் மட்டுமே சாதனைகள் செய்யலாம். தாங்கள் உற்பத்தி/சேவை துறைகளில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர்.
சந்திரன் கெட்டால் பரிகாரம்;
தண்ணீர் பந்தல் வைத்தல், லாப நோக்கற்ற அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கு மாதம் ஒரு டாங்க் தண்ணீர் ஸ்பான்சர் செய்யலாம்.
செவ் கெட்டால் பரிகாரம்:
முருகன் கோவிலுக்கு எரியும் பொருட்களை அன்பளித்தல். (உம்: பல்பு , விளக்கு. விளக்காயின் செம்பாகில் உத்தமம். செம்பு பூஜா பாத்திரங்களும் தரலாம் அ உடல் அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்)
9 ஆமிடம் குருவால் பலம் பெற்றால்:
சமூகத்தில் நல்ல மரியாதையை பெற்றிருப்பர். ஊர் பொது வேலைகள், சேவைகள், சங்கம் , கோவில் தேவஸ்தானம் போன்றவற்றில் பங்கிருக்கலாம்.
செவ்வாய் லக்னாதிபதியாகி நீசம்
சோம்பலுடையவர் என்று கூற முடியாது. சரியான திட்டமிடல் இன்றி, மனோபலம் இன்றி, வேலைகளை குழப்பி விடலாமே தவிர உடல் நலம் ஒத்துழைக்காது போகலாமே தவிர சுறு சுறுப்பானவர் என்றே சொல்லலாம்.
ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்
சனியால் பிரச்சினைக்கு பரிகாரம் :
கிராம தேவதையை பூசித்தல்
2 ஆம் பாவம் கெட்டால்:
தனம்,வாக்கு,குடும்பம், கண்கள் ஆகிய வகைகளில் கஷ்டம் ,மனக்கஷ்டம், நஷ்டம் ஏற்படலாம்.
5 ஆம் பாவம் கெட்டால்:
பிள்ளைகள், மன நிம்மதி, பெயர் புகழ் இத்யாதிக்கு பாதிப்பு
நான்கில் சூரியன்:
தந்தை வழியில் கூரையிழந்த வீடோ, காலி இடமோ கிடைக்கலாம். அது மலை பிரதேசத்தில் அ குக்கிராமத்தில் இருக்கலாம்.