Thursday, August 11, 2011
தேவப்ரஸ்னம் முடிவுகள் : திகீர் ரிப்போர்ட்
திருவனந்த புரம் பத்ம நாப ஸ்வாமி கோவில் நிலவறைகள் திறக்கப்பட்டு மெக்கன்னாஸ் கோல்ட் சினிமாவுல புதையல் கணக்காய் தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டது தெரிந்ததே. முதல் ஐந்து அறைகளை திறந்த பின் ஆறாவது அறையை திறந்து பார்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. மேற்படி கோர்ட் நடவடிக்கைகளுக்கு காரணமான முதியவர் இறந்தது ஆறாவது அறையை திறப்பது குறித்து வதந்திகளை கிளப்பியவர்களின் வாதத்துக்கு பலம் சேர்த்தது.
ஆறாவது அறையை திறந்தால் கேரள மானிலம் காலி -இந்தியா காலி - பிரளயம் வரும்னு ஆளாளுக்கு அள்ளிவிட்டாய்ங்க. இதையடுத்து தேவப்ரஸ்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது .
தேவப்ரஸ்னத்தில் வெளியான விஷயங்கள் இதோ:
ரகசிய அறைகள் திறக்கப்பட்டதில் ஸ்வாமி கோபமா இருக்காரு.
எண்ணெய் விளக்குக்கு பதில் மின் விளக்குகள் ஸ்வாமிக்கு பிடிக்கலை .
மூல விராட்டில் ( கர்பகிருகத்தில் உள்ள விக்கிரகம்) விரிசல்
வினாயகருக்கு பூஜை நடக்கலை
கோவில் வளாகத்தில் ஒரு சக்தி உலவுகிறது
அது தீய சக்தியா? தெய்வ சக்தியா? இன்னும் தீர்மானிக்க முடியலை. ஆனால் இதனால ராஜ வம்சத்துக்கு ஆபத்து