Monday, August 15, 2011

நம்ம தவத்தை கலைக்க வந்த ஆன்டி


தாத்தாவை போட்டு தள்ள தாத்தா கிட்டயே ஐடியா கேட்டானுவளாம். அவரும் சொன்னாராம்.(பீஷ்மர் Vs பாண்டவர்கள்) அதைப்போல ஆத்தாவுடனான அனுபவங்களை பத்தி எழுத ஆத்தாகிட்டயே ரோசனை கேட்கிற மாதிரி ஆயிருச்சு.

ஒரு பக்கம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை (புதனே காரகன்) இன்னொரு பக்கம் பதிவு (புதனே காரகன்) டபுள் அக்கவுண்ட் ஆயிடறதால இந்த லொள்ளுன்னு நினைக்கிறேன். இத்தனைக்கும் நாம பேராசை படறதில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவு -ரெண்டு ஜாதகத்துக்கு பலனுன்னுட்டு ரேஷன் வச்சுத்தான் செய்யறோம்.

பதிவோட ஹிட்ஸையும் தக்கவச்சுக்கனும். குவாலிட்டியும் (?) மெயின்டெய்ன் பண்ணனும். ஞாயிறு திங்கள் லீவுங்கறதால சனம் மாமியா வீட்டுக்கு -சொந்த ஊருக்கு ட்ரிப் அடிச்சுட்டாப்ல இருக்கு. வருகையில் துண்டு. அதை கவர் பண்ண ரஜினியை சந்தித்தேன்.சுதந்திர நாள், ஹசாரே உண்ணாவிரதம்னு இறங்கினா பத்தோட பதினொன்னாயிரும்..

இப்படி எத்தனையோ ஃபேக்டர்ஸ் நம்மை எழுத்தை பாதிக்குது. ஆனாலும் தொடரை தொடர்ந்தே ஆகனும்னு ஒரு சங்கல்ப்பம். பல காலமா ஸ்க்ரிப்டாவே இருந்த தெலுங்கு கவிதைகளை ( அம்மன் குறித்தவை) கணிணியில் பதிக்க ரெம்ப நாளா திட்டம். அதுக்காகவே குறைஞ்ச கன்ஃபிகரேஷன்ல -ப்ளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு சிஸ்டம் ரிசர்வ்ல வச்சிருந்தோம். அதுக்கு ஒரு ஆள் கிடைச்சது. சிஸ்டத்தை ஷிஃப்ட் பண்ணிட்டம்.

சரி .. சரி.. சரி .. பதிவுக்கு போயிருவம்.

2000 டிசம்பர் 23 ஆம் தேதி துவங்கின சாதனை + அனுபவங்களை சொல்ல ஆரம்பிச்சு 2 வருச கதையை கூட முடிக்க முடியலை.அதுக்குள்ளாற தர்ம சந்தேகம் வ்ந்துருச்சு.

உலகியல் ரீதியில சாதனைன்னா Achivementனு அருத்தம். ஆன்மீக ரீதியில சாதனைன்னா முயற்சி/பயிற்சின்னு அருத்தம். சங்கீத சாதகம்னா பாடி பார்க்கிறது/வாசிச்சு பார்க்கிறது . சாதனைங்கறது அந்த சாதகம்ங்கற சொல்லில் இருந்து வந்த சொல்லா இருக்கும் போல.

சாதனையாகட்டும் - சாதனையின் பலனா நிகழ்ந்த சம்பவங்களாகட்டும் நடந்து ரெம்ப காலம் ஆச்சு. அதுகளையெல்லாம் ரிகலெக்ட் பண்ணி எழுதும் போது அந்த சம்பவங்களின் கோர்வை மாறிப்போகுது. இதையாச்சும் மன்னிக்கலாம். ஆனால் அந்த சம்பவங்களின் வீரியம் குறித்த நினைவே தேசலாகிப் போச்சு.

சாதனைன்னா பெருசா விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஜெபம் -ஜெபம் -ஜெபம் தான். பலன் தான் ஒவ்வொரு தடவையும் ரெம்ப ஸ்வாரஸ்யமா - புதுசு புதுசா ஏற்பட்டது . இந்த பலனால லைஃப்ல நிரந்தர மாற்றம்னு எதுவும் ஏற்படாவிட்டாலும் யதார்த்த வாழ்க்கையில அந்த நேரத்து தேவை நிறைவேறும். நம்ம பயணப் பாதை கரீட்டுதாங்கற எண்ணம் வலுப்பெறும்.

மத்தபடி நம்ம ஃபிசிக்லயோ - ப்ரொடக்டிவிட்டியிலயோ பெருசா நிரந்தரமா ஏதும் மாற்றம் கிடையாது. ஆனால் அற்புதம் நடக்கும் போது மட்டும் விட்டலாச்சார்யா ,ஏ.பி நாகராஜன் படம்லாம் பிச்சை வாங்கனும் அந்த ரேஞ்சுல நடக்கும். நம்ம மண்டைக்குள்ள நட்சத்திரங்கள் வெட்டும்.

ஆன்மிக சாதனை (பயிற்சி) லௌகீக சாதனைகளுக்கு ( அச்சீவ்மென்ட்) நிரந்தர உதவியை அளிக்க கொஞ்சம் காலம் பிடிக்கும். நம்ம கேஸ்ல 7 வருஷம் பிடிச்சது. அதனால இதை படிக்கிறவுக நாமும் ஜெபத்தை ஆரம்பிச்சுருவம்னு வேட்டிய வரிஞ்சு கட்டிராதிங்க.

மந்திர ஜெபத்தால் நமக்கு கிடைக்கிற அரைகுறை ஃப்யூயல் கூட நமக்கு ஆப்பாவேமுடியவும் சான்ஸ் இருக்கு. மேலும் நாம பெற்றுள்ள வசதி வாய்ப்புகள்ள நமம் கருமங்கள் மிங்கிள் ஆகி இருக்கிறதால எல்லாத்தையும் புதுசா ஆரம்பிச்சாத்தான் வேலைக்காகும்னு ஆத்தா டிசைட் பண்ணி ஒழிச்சு கட்ட ஆரம்பிச்சுருவாள்.

அந்த மாதிரியான அனுபவங்கள்ள் ஒன்னை இப்ப பார்ப்போம்.

நம்ம மேட்டர்ல அப்படித்தேன் நடந்தது.மந்திரோபதேசம் கிடைச்ச க்ரூப்புக்கு ஒரு சென்டர். அங்கன கூடி முன் தினத்து சாதனைகள் - அச்சிவ்மென்ட்ஸை பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவம். மாலையில காலேஜ் கிரவுண்டுல சத்சங்கம்.

இந்த சிச்சுவேஷன்ல ஒரு நா சென்டருக்கு சொந்தக்காரன் ஃபுட் மேட்டை உதறிப்போட சொன்னான். உதறிப்போட்டுட்டு ( அவனையும் ) கழண்டுகிட்டோம்.

அப்பம் ஏரியா தலைவருக்கு ஏரியா சனத்துலயே சில ஆள்காட்டிங்க பயங்கர ஆப்பா வச்சி தள்ளியிருக்க அவர் பேண்டை அவுத்து எப்படியெல்லாம் புண்ணாயிருக்குன்னு காட்ட ரெடியாயிட்டாரு. நாம ஆறுதல் சொல்லி நான் இருக்கேன்னு அபயம் கொடுத்தோம்.

அவரோட காம்ப்ளெக்ஸ் மாடியில ஒரு சின்ன ரூம்பு . அதுல ப்ராக்டீஸு. 1989 ல துவங்கின ப்ராக்டிஸ் பீக் ஸ்டேஜுக்கு போனது அங்கனதான். நமம் ரூம்பு என்னவோ சின்னது. ஆனால் நம்ம விசிட்டர்ஸ் பால்கனியை நிரப்பியிருப்பாய்ங்க.

வாணியம்பாடியிலருந்து காணிக்கு கியாரண்டி இல்லாம வந்த நமக்கு ஆத்தா ஒரு ஆஸ்தானத்தையே ஏற்பாடு பண்ணி தந்துட்டா. இதுவரை ஓகே.

பீஜாக்ஷர ஜெபத்தால் இப்படி ஆகர்ஷண சக்தி (வசியம்) எக்கு தப்பா எகிறி போச்சு. தாய்குலத்தோட மென்டாலிட்டி பத்தி ஆண் பெண் வித்யாசம் தொடர்ல விவரமா எழுதியிருக்கேன். அவிகளுக்கு தேவை கொஞ்சம் போல அன்பு.

காய்கறி வண்டி காரன் என்னக்கா டல்லா இருக்கிங்கன்னு கேட்டுட்டாலே ஊர்ல இருக்கிற தம்பியா நினைச்சு கொட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க. நாம சொல்யூஷன் வேற தந்து தொலைச்சுர்ரமா அதனால
பல ஆன்டிகள் நமக்கு சம்பளமில்லாத பி.ஆர்.ஓவா மாற நாமதேன் அவிகளை கழட்டி விட வேண்டியதாய்ருச்சு.இதுல சில ஆன்டிகள் கோவிச்சுக்கிட்டதும் உண்டு. நமக்கு செக்யூரிட்டியா மகளை ஆஃபீஸ்ல கூட வச்சுக்க ஆரம்பிச்சேன். இதுவாச்சு பரவால்லை நாம குடியிருந்த இடத்துல பக்கத்து போர்ஷன் தாய்குலம் வேற நம்மை கச்சா முச்சான்னு சீண்ட ஆரம்பிச்சுருச்சு.

தாய்குலத்தை பொருத்தவரை நாம ஒன்னு அப்பனோட ரோலை ப்ளே பண்ணுவம்.அல்லது மகனோட ரோலை ப்ளே பண்ணுவம். இதை மொதல்லயே கான்கிரீட்டா எஸ்டாப்ளிஷ் பண்ணிருவம். அவிக சப்கானிஷியஸா வேண்டுவதும் இதைத்தான்.

ஆனால் மேற்சொன்ன பக்கத்து போர்ஷன் ஆன்டிக்கு இந்த ரெண்டு ரோலும் பிடிக்கலை. நமக்கு இந்த ரெண்டு ரோலை விட்டா வேற ரோல் செய்ய பிடிக்காது. அண்ணா தம்பி பிசினஸ் எல்லாம் அலர்ஜி.

ஒரு நாள் நம்மை சீண்ட - நாம குளிக்க தயாரான சமயம் பார்த்து பாத்ரூம்ல புகுந்துக்கிட்டாள். (காமன் பாத்ரூம்) பொஞ்சாதிக்கு இந்த மேட்டர் பின்னாடி இருக்கிற இன்டென்ஷன் தெரியாது. அவள் ரொட்டீனா
" அக்கா! அவரு குளிக்கனும் ..ஒரு பத்து நிமிசம் வெளிய வாங்க' ன்னு ப்ரப்போஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.

கொய்யால .. நாம பார்க்க அவள் தூக்கி கட்டின பாவாடையோட வெளிய வந்து நமக்கு ஒரு தர்ம தரிசனம் தரனும் இதான் அவளோட ஸ்கெட்ச். இதையெல்லாம் நாம 1984-1986 பீரியட்லயே கச்சா முச்சான்னு பார்த்தாச்சு.

க்ரூப் ஸ்டடியில க்டுப்பாக்கி கட்டிலை சுத்தி ஓடவிட்டு தம் போட்ட பார்ட்டி நாம. இதுக்கெல்லாம் ஜொள்ளுவமா என்ன?

பொஞ்சாதிக்கு கண் ஜாடையில .. உன் வேலைய நீ பார்த்துக்கன்னு சொன்னம். அவள் கேட்ச் பண்ணிக்கலை. மறுபடி பாத்ரூம் கதவை தட்டி " அக்கா! பத்து நிமிசம்"

மிகக்குறுகிய கால அளவுல நான் என்னத்தை சொல்லி பொஞ்சாதிய தடுக்கறது. அவள் அக்மார்க் பொஞ்சாதியாகி என்னை குளிக்க வைக்கிறதே பதிவிரதா தர்மம்னு டிசைட் ஆயிட்டாப்ல இருக்கு.

நமக்கா பயங்கர கடுப்பு.ஆஃபீஸ் என்னோடது . நான் குளிக்காம போகலாம் - லுங்கியில போகலாம் - ட்ராக் சூட்ல போகலாம் - ஏன் பெரமுடால கூட போகலாம் -அட போகாமயே இருந்துரலாம். யாரு நம்மை கேட்க முடியும்.

தூத்தெறி .. ஒரு சின்ன மேட்டர்.. இதை கூட புரிஞ்சிக்காம லொள்ளு பண்றாளேன்னு எரிச்சலாகி கன்னத்துல பளார். நாம ஆஃபீஸ் வந்துட்டம்.மதியம் சோத்துக்கு போனா டிவி பெட்டி மேல லெட்டர் " நான் போறேன்'

ஸ்கூலுக்கு போயி மகளையும் பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருக்காள். அவளோட அக்கா காரி ( அது ரெம்ப ஸ்வாரஸ்யமான கேரக்டர் -நம்ம சைக்காலஜி ஸ்டஃபுக்கு அவளும் அவள் பிஹேவியரும் கூட ஒரு காரணம்) பி.பி நெம்பருக்கு ஃபோன் போட்டு "இங்க தான் வந்திருக்காப்பா.. நாலு நல்லது கெட்டது சொல்லி அனுப்பி வைக்கிறேன்' னாள்

நாம .." அய்யய்யோ .. அவளுக்கு இன்னும் 10 மாசத்துக்கு நேரமே சரியில்லை.அவளை அங்கயே வச்சுக்கங்க நான் சொல்றப்ப அனுப்பினா போதும் " னு கட் பண்ணிட்டம்.

ஆக 2003 ஜூன்ல இருந்து 2004 பிப்ரவரி வரை மறுபடி பேச்சிலர் லைஃபு. பக்கத்துலயா துடியா ஒரு ஆன்டி. ஆத்தா எப்படியெல்லாம் கார்னர் பண்றா பாருங்க.

நாமளா மாட்டுவம்.. 24 ஹவர்ஸ்ல வீட்டை ஷிஃப்ட் பண்ணிட்டு நமக்கு ஸ்தான பலம் உள்ள - ஃபேமிலி லைஃப் + பேச்சிலர் லைஃப் ரெண்டுக்கு சூட் ஆகக்கூடிய ஒரு போர்ஷனை பிடிச்சு யோக சாதனையில முழுகிட்டம்.

(தொடரும்)