Wednesday, August 10, 2011

அவன் அவள் அது : 12


அடிக்கடி ஆத்தா பார்த்துப்பா -அம்பாள் பார்த்துப்பான்னு நாம ஃபிலிம் காட்டறதா சிலர்/பலர் நம்மை தப்பா நினைச்சிருப்பாய்ங்க. கொய்யால எவந்தான் அம்மன் பேரை சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சுப்பான்னு கடுப்பாகியிருப்பாய்ங்க .அவிகளுக்கெல்லாம் ஒரு க்ளேரிஃபிகேஷன் தந்தாப்லயும் இருக்கும் - நமக்கும் ஒரு மலரும் நினைவுகளா இருக்கட்டும்னு அவன் -அவள் -அது என்ற தலைப்பில் ஒரு தொடரை ஆரம்பிச்சோம். இடையில டீல்ல விட்டுட்டம். அப்பாறம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிச்சோம்.

இந்த அம்மன் பிசினஸ்ல தலை கொடுக்க முக்கியமான காரணம் அவளை நாட எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயமும் தேவையில்லைங்கற ரிலேக்சேஷன் தேன். நாமதேன் விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே.(எங்க பக்கத்துல அர்ரா கட்டைனு சொல்வாய்ங்க - ஆமா இதுக்கென்ன அருத்தம்?)

நாம ஒன்னும் இமய மலைக்கு போய் தபஸ் எல்லாம் பண்ணலை. நாம ஒன்னும் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு இல்லை. ஆனாலும் ஜா.ரா மாதிரி ஆட்களோட கம்பேர் பண்ணிக்கிட்டோ என்னவோ ஆத்தாவே நம்மை "சரி இப்படி ஒரு கேரக்டரும் இருக்கட்டும்"னு தன் சபையில சேர்த்துக்கிட்டா.

நம்ம யோகி சார் நம்ம அனுபவங்களை படிச்சுட்டு " பார்த்துங்க ..இதெல்லாம் எதுனா யட்சிணி வேலையா இருக்கப்போகுதுன்னு பேதிக்கு கொடுக்கிறாரு." நம்ம கையில சனி மேடு பள்ளத்துல இருந்தாலும் அதுல ஒரு சதுரக்குறியும் , புத்தி ரேகைக்கு கீழே நேஷ்னல் ஹைவே கணக்கா சனி ரேகையும் இருக்குதுங்ணா.

1967 ,ஆகஸ்ட் ,7 ஆம் தேதி காலை 6.10க்கு நாம பிறக்கிறோம்னா கரீட்டா நிமிசம் முந்தி அதாவது 6.09 க்கு பக்கத்து பெட்ல சந்தேகம் பிறந்துருச்சு. மேலும் நாம ராமகிருஷ்ண பரமஹம்சரோட வெறித்தனமான ஃபேன். ரிசர்வ் பேங்க் சேர்மனே செக் கொடுத்தா கூட பாஸ் ஆயிரும்லன்னு ஆரூடம் பார்க்கிற கேஸு. நம்ம ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு வளையம் வேற கீது. நம்ம ஜட்ஜிங் கரீட்டா இருக்கும். ( உணர்ச்சி வசப்படாம இருக்கிற வரை)

ரா.கி சொன்னாப்ல ஆரு சொன்னாலும் - ஆரு தந்தாலும் -அது காலணா கருத்தா இருந்தாலும் -காசா இருந்தாலும் அது செல்லுமா செலாவணியாகுமான்னு செக் பண்ணிட்டுத்தேன் ஆக்செப்ட் பண்ணுவம்.

இந்த காளியாத்தா ,மாரியாத்தா மாதிரி கேஸ்களே நம்மை பெருசா கவர்ரதில்லை . நம்ம ஊர்ல ஒரு பிரபலமான அம்மன் கோவில் இருக்கு. அங்கிட்டு போனா உள்ளாற போறது -கன்னத்துல போட்டுக்கறதுல்லாம் இருக்காது. கூட வந்தவுக போய்ட்டு வர்ரவரைக்கும் காம்பவுண்டுக்கு வெளிய இருந்து தம் போட்டுக்கிட்டே அந்த அம்மன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்துவம். அம்புட்டுதேன்.

நம்ம லட்சியத்தை ( 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம் -சிறப்பு ராணுவத்தை கொண்டு இந்திய நதிகளின் இணைப்பு) ஞா படுத்தினா ஆத்தாளே . வடிவேலும் ரேஞ்சுல " உஸ் .. உன்னை வச்சுக்கிட்டு என்னால முடி..யலடா..முடியலை" ன்னு பெருமூச்சு விடறாள். .யட்சிணி கிட்சிணியெல்லாம் நம்ம பக்கம் கூட திரும்பாது பாஸ். அலறி அடிச்சுக்கிட்டு ஓடிரும்.

சரி மேட்டருக்கு வருவம். ( இது மஸ்தா பேரு சொல்ற ஒழுங்கான தமிழ்ல இருக்கும்)

ஒவ்வொரு உயிருக்கும் பின்னால் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. அதை உணர்வதும்,வளர்த்துக் கொள்வதும் சிலருக்கே சாத்தியமாகிறது.அந்த சிலரில் நானும் ஒருவன் என்று மிகுந்த தயக்கங்களுக்கு பிறகு தான் சொல்ல முடிகிறது.

விட்ட குறை தொட்ட குறை கணக்காக கடந்த பிறவிகளின் சாதனை காரணமாக தெய்வம் ஒரு சிலர் பின்னால் அலைகிறது. உங்க பேர்ல பெரிய அமவுண்டுக்கு ஒரு வங்கியில மெச்சூர்ட் எஃப்.டி இருக்குன்னு வைங்க. மெச்சூரிட்டி டேட்டுக்கு ஒரு வாரம் முந்தியே மேனேஜர் உங்க பின்னாடி அலைவாரு. முடிஞ்சவரை ரென்யூவல் பண்ண வைக்க. அல்லது வட்டியை ரெக்கரிங் டெப்பாசிட்டா மாத்த. ஆனால் தெய்வங்கள் இந்த விஷயத்துல ரெம்பவே ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட்.

தாங்கள் ஏதோ மனிதர்களுக்கு ` கடன் பட்டுவிட்டதை போல ஃபீலிங்கோட உங்க பின்னாடியே அலையும். நம்ம சனங்க அந்த தெய்வீக சக்தியை பிற்காலத்துல தலைக்கு தீம்பா முடியக்கூடிய காதல் வெற்றிக்காகவோ - நெக்லஸுக்காகவோ - ஃபாரின் சான்ஸுக்காகவோ உபயோகிச்சுர்ராய்ங்க.

இந்த ஆத்தா மேட்டரு நமக்கு ஒர்க் அவுட் ஆகவும் இது போன்ற காரணம்தான் இருக்கனும். இல்லாட்டி நம்மை மாதிரி பார்ட்டிக்கு ஆத்தா துணை நிக்கறதாவது.

துணைன்னா நமக்கு பாசிட்டிவா ஒர்க் அவுட் ஆறது பெருசா ஏதுமில்லைன்னாலும் நம்மை இன்சல்ட் பண்றவுகளுக்கு அவள் கொடுக்கிற தண்டை இருக்கே வேண்டான்டா சாமி..

என் இளைய நண்பர்களுள் ஒருவன். குடும்ப சொத்தான லாட்ஜு ஒன்றை நிர்வகித்து வந்தான் .அதில் சினிமா தியேட்டர் கவுண்டர் அளவில் ஒரு அறை உண்டு. அதில் காலாவதியான நாற்றம் பிடித்த மெத்தைகள்,தலையனைகளை போட்டு வைப்பது வழக்கம். அதில் என்னை பிராக்டீசு (ஜோதிட ஆலோசனை)செய்து கொள்ளும்படி கோரி வந்தான். நானும் ஒரு பலவீன கணத்தில் ஒப்பி ஆரம்பித்து விட்டேன்.

பையன் என்னவோ நல்லவந்தேன்.ஆனால் அவிக குடும்பத்தார் பார்வையில ஜீரோ. அந்த லாட்ஜு அவிக சொத்துக்கள்ளயே பனிஷ்மெண்ட் ஏரியா மாதிரி.

நாமளும் நம்மோட மணி ,மந்திர,வைத்திய சேகரங்களையெல்லாம் அவன்+ அவன் லாட்ஜு டெவலப்மெண்டுக்கு தத்தம் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தோம். அது ஒரு ரேஞ்சுக்கு வந்ததும் அவன் தந்தை அறையை (?) காலி செய்து விடும்படி கூறிவிட்டார். இ.நண்பனாலயும் பெரிதாய் அதை தடுக்க முடியலை.

ஞானிகள் நாயை போன்றவர்கள்போன்றவர்கள் என்று இன்று ஒரு தகவலில் கேட்டதாய் ஞாபகம். நாயை அடித்துக் கொண்டே இருந்தாலும் மறுபடி மறுபடி தேடி வருமாம் , ஒரேயடியாய் அடித்து விரட்டி விட்டால் மறுபடி அந்த பக்கம் திரும்பாதாம்.நான் ஞானியல்லாவிட்டாலும் ஞானியாக நடிப்பவன்.(நடிப்பும் ஒரு நாள் நிஜமாகிவிடும் வாரியார் சொன்ன சலவை தொழிலாளி கதை போல) நான் விலகி விட்டேன்.

சில தினங்களிலேயே அந்த இ.நண்பனின் 50 ஆயிரம் ரூபாய் வண்டியும்,அதை ஒட்டிச் சென்றவனும் காலி. இதையடுத்து சில பல தினங்களில் கிட்னாப்புக்கும் ஆளானான். அதெல்லாம் பெரிய கூத்து.

இப்போதும் நான் அவனையோ ,அவன் தந்தையையோ நீங்கள் வெ.பாக்கு கொடுத்து அழைத்து ,துப்பி அனுப்பியது நியாயமில்லை என்று கூறவில்லை.நியாயமா என்றும் கேட்கவில்லை.

நான் என்னவோ அந்த வெளியேற்றத்துக்கு பிறகு வாழ்வில் முதல் முறையாய் கு.பட்சம் உலகத்தின் பார்வையில் கவுரவமான வேலை பெற்று (வேறென்ன தினத்தந்தியில் நிருபர்) மாதம் ரூ.3000 சம்பளத்துல புது லைஃபை ஆரம்பிச்சுட்டேன்.

இதில் நண்பனின் தந்தைக்கு ஒரு இழவும் நஷ்டமில்லை. இதிலிருந்து நான் அறிந்து கொண்ட ரகசியம் பாவம் செய்பவனை விட அதை தடுக்காதவனுக்குத் தான் ஆத்தா உடனடி லாட்டரி போல் தண்டனை தருவாள் என்பதே)

இந்த தொடர்ல ஒவ்வொரு பதிவுலயும் ஆத்தாளின் அருள் வேட்டலுக்கான என் சாதனையையும் - அவள் அருளையும் பாலன்ஸ் பண்ணிக்கிட்டே வரேன். காரணம் .. இதையெல்லாம் படிச்சாவது நாலு பார்ட்டி சாதனையை ஆரம்பிச்சுராதாங்கற அல்ப்ப ஆசைதேன்.