பதிவர் :கிருஷ்ணா ( X தனி காட்டு ராஜா )
நாம் வாழ்வதற்கு கடவுள் தேவையா என்றால் உண்மையில் நாம் வாழ நாம் தான் தேவை.
இப்போது இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் போது எனக்கு "ஒன்னுக்கு " :) வருகிறது. கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்கிறார்கள்...இந்த சமாசாரம் கடவுளுக்கு தெரியுமா ?? :)
இந்த பூமி தன்னை தானே வெகு வேகமாக சுற்றி கொள்கிறது..ஆனால் நாம் யாரும் விழ வில்லை..அதுவும் ஆகாய வெட்ட வெளியில்...
அது போதாது என்று பூமி வேறு சூரியனை சுற்றி வருகிறது...இது போதாது என்று சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் அனைத்தும் சூரிய மண்டலம் முழுதும் கலாக்ஸ்சியை சுற்றி வருகிறது...
ஆனால் நாம் ஒரு கட்டிங் உள்ளே விட்டால் மட்டும் தான் பூமி சுற்றுவதை உணர முடிகிறது.
இந்த படைப்பு எவ்வளவு அற்புதமாக செயல் படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் என்ன வேண்டும்...
ஆனால் நமக்கோ இது அதிசயமாக அற்புதமாக தோண வில்லை .
எவனோ ஒரு டோப்பா தலையன் மோதிரம் வரவைத்தான் என்பது அதிசயமாக தெரிகிறது .அந்த மனிதனை கடவுளாக நினைத்து ஒரு கூட்டம் வழிப்பாடு செய்கிறது.
உண்மையில் படைப்பு எங்கே வேலை செய்கிறது...டோப்பா தலையிடம் மட்டுமா??
படைப்பு எல்லா இடங்களிலும் ...எல்லா உயிர்களிலும் ..எல்லா நேரங்களிலும் நீக்கமற நிறைந்து....வேலை செய்கிறது...
இருப்பது படைப்பு மட்டுமே....
பூமி சூரியனிடம் இருந்து பிறந்தது..படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றது.படிப்படியாக அழிந்தும் போய் விடும்.
இந்த படைப்பின் இயல்பே சுயம்பு நிலை .இங்கே தனிப்பட்ட கடவுள் என்று யாரும் இல்லை.அனைத்தும் அதற்கு யுரிய இயல்பின் அடிப்படையில் நடக்கும்.
கடவுளின் மகன்...கடவுளின் வைப்பாட்டி மகன் என்று யாருக்கும் இங்கே உரிமை இல்லை.உண்மையில் கடவுளுக்கும் (படைப்புக்கும் ) இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...சில கூட்டம் அவ்வாறு உளறி கொள்கிறது.
யாராக இருப்பினும் அவனவன் செயலுக்கு யுரிய பலனை அவன் தான் அனுபவிக்க வேண்டும்.
முதன் முதலில் பாரத தேசத்தில் ஒரு காட்டுவாசி படைப்பின் உண்மை தன்மையை சுயம்பு நிலையை தான் சுயம்புவாய் இருப்பதை உணர்ந்தான்.அவனை தான் சிவன் என்று சொன்னார்கள்.
காலபோக்கில் தமிழ் சினிமா ஹீரோவை போல சிவனை வைத்து நெறைய உப கதைகள் வெளி வந்தன.உண்மையில் சிவனுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.
சுயம்பு நிலையில் நாம் உணர்வது ஒன்றே ஓன்று தான்..இங்கே இருப்பது படைப்பு மட்டும்..கடவுள் மட்டுமே..
இந்த சுயம்பு நிலையை யார் வேண்டுமானாலும் உணரலாம்..அது நமது உரிமை..நம் வீட்டுக்குள் நாம் சென்று உறங்குவது போல...யாரும் அதை தடுக்க முடியாது..
நம் அனைவருக்கும் தற்சமயம் பைத்தியம் தலைக்கு மேல் ஏறி விட்டதால் ...நம் வீட்டுக்கு போகாமல் ...தெருவில் சுற்றி கொண்டு உள்ளோம்...தெருவில் அம்மணமாக திரியும் நம்மை போன்ற சில பைத்தியங்களை கடவுள் என்றும் கடவுளின் மைந்தன் என்றும் நினைத்து கொள்கிறோம் .
இன்னும் முற்றி போன சில பைத்தியங்கள் தாங்கள் மட்டும் ஆசிர்வதிக்க பட்டவர்கள் என்று தெருவுக்கு தெரு மைக் வைத்து கூவுகிரார்கள்.
படைப்பின் தன்மையை சிவனாலும் or அல்லாவாலும் வேறு எந்த கொம்பானாலும் மாற்ற முடியாது.அது வெறும் சுயம்பு...அந்த சுயம்பு நிலையை உணர்ந்து நாமும் அதில் கரைந்து படைப்பாகவே (கடவுள் தன்மையாக ) மாறி விடலாம்.
இதன் பெயர் தான் ஜீவன் முக்தி.
அவ்வாறு ஜீவன் முக்தி பெற்ற பலரில் சிலர் தான் ரமணர் ,ராம கிருஷ்ணர்,ஓஷோ போன்றோர்.இவர்கள் வாழும் போது எந்த அற்புதத்தையும் நிகழ்த்த வில்லை.
வெறுமனே ஜீவன் முக்தனாய் வாழ்ந்தார்கள்.இவர்கள் உடலும் சாதாரண குப்பன் சுப்பன் உடல் போல நோய் வாய் பட்டுதான் இருந்தது.இறந்தது.ஆனால் உள் நிலையில் கடவுள் தன்மை நிலையில் வாழ்ந்தார்கள்
நம் அனைவருக்கும் ஜீவன் முக்தனாய் வாழும் வாய்ப்பு உள்ளது.
சம்பவாமி யுகே யுகே!