Sunday, August 14, 2011

ரஜினியை சந்தித்தேன்


2009 மே மாசத்துல ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சதுலருந்து அவுட் டோர் கன்சல்டன்சிக்கு போறதே கிடையாது. இருந்தாலும் நம்ம கெட்ட நேரம் ஒரு மெட்ராஸ் பார்ட்டி நை நைன்னு நச்சரிச்சுட்டே இருக்கவே தெரியாத்தனமா புறப்பட்டோம். அதிகாலை பாலவினாயகரை பிடிச்சு கோயம்பேடுல இறங்கி நண்பருக்கு ஃபோன் போட்டோம்.

நண்பர் நம்மை பிக் அப் பண்ண வழக்கமா டூவீலர்ல தான் வருவார். நேத்தென்னவோ பந்தாவா இன்னோவால வந்தார். கார் சென்னை சாலைகளில் பறக்க ஆரம்பிச்சது. நாமும் வழக்கப்படி பராக்கு பார்த்துக்கிட்டே கிடந்தோம்.

படக்குனு கார் நின்னது.ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம்னு ஒரு போர்டு தெரிஞ்சதும்..திகீர்னுச்சு " "என்னப்பா இது ரஜினியோட கல்யாண மண்டபம் மாதிரி இருக்கு"ன்னு கேட்டம். நண்பர் சிரிச்சிக்கிட்டே நீங்க சந்திக்கப்போறது ரஜினி சாரை தான்னு சொன்னார்.

' இதென்னடா வம்பா போச்சு. நாம கேள்விபட்டது நிஜமா இருந்தா ஆர்.எம்.வீ இருந்தப்ப எதுனா அட்வென்சர் பண்ணிட்டு அவரோட ஆஃபீஸ்ல போய் உட்கார்ந்துக்குவாரு. இப்பம் ஆர்.எம்.வீயே பிரச்சினை வந்தா எந்த ஆஃபீஸுக்கு போறதுன்னு தெரியாம கிடப்பாரு. எந்த தைரியத்துல நம்மை கூப்பிட வச்சிருப்பான் மன்சன்."ன்னு சிந்தனைகள் ஓட நண்பரை பின் தொடர்ந்தோம். ஓடினா துரத்துவாய்ங்க.துரத்தினா பிடிச்சுருவாய்ங்க. ச்சொம்மா ஆயாசம் தேன் மிச்சம்.

ரஜினி ஒரு சோஃபால வெள்ளை குர்தாவும் பட்டை கொட்டை இத்யாதி அலங்காரங்களோட இருக்க நண்பர் நம்மை அறிமுகம் செய்தார்.

அதுக்கப்பாறம் நடந்த உரையாடல் இதோ :

"வணக்கம் .. வாங்க இவர் தானே பிரபல ப்ளாகர் முருகேசன் "

"என்ன சார் அமிதாப் மாதிரி ப்ளாக் ஆரம்பிக்கப்போறிங்களா? இந்த மேட்டர்ல தமிழ் நாட்டின் கிங் மேக்கர் ச்சோவை கன்சல்ட் பண்ணா அவரு தன்னோட ப்ளாக் உலக ஏஜெண்டை அறிமுகப்படுத்தி வைப்பாரே"

" நோ நோ ப்ளாக் எல்லாம் எழுத போறதில்லை. உங்களை உங்களுக்காகவே சந்திக்கத்தான் இன்வைட் பண்ணேன் "

" நல்ல வேளை .. நீங்க ப்ளாக் எழுதினா ஹிட்ஸ் என்னவோ பிச்சுக்கும். அப்பாறம் ரசிகர்களுக்கு விருந்து வச்சே தீரனும். இல்லின்னா வண்டை வண்டையா வண்டி வண்டியா கமெண்ட் போடுவாய்ங்க. அதுலயும் ஜா.ரான்னு ஒருத்தர் இருக்காரு .இதுல அவர் ஸ்பெஷலிஸ்ட்"

" ஓ .. நோ நோ .. "

"நல்லது. இல்லைன்னா எம்.கே ஸ்டாலின், ராஜா டிஎம்கே சைட்ஸ் மாதிரி உங்களுதும் போன்டியாகியிருக்கும்"

"அதையெல்லாம் விடுங்க முருகேசன் ! நெறய விஷயங்களை பத்தி எழுதறிங்க..நல்லா இருக்கு. நம்மை பத்தியும் எழுதியிருக்கிங்க நல்லா இருக்கு "

"நன்றி . இங்கே ஆஃபீஸ் ரூம் எங்கே இருக்கு?"

"ஹா ஹா ஹா ஹா .. சிவாஜி படத்தை வச்சு கிண்டலடிக்கிறிங்க"

"இல்லை சார்.. யதார்த்த வாழ்க்கையில நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்திக்கத்தானே உங்க சினிமாவுல எல்லாம் இந்த மாதிரி காட்சியெல்லாம் வைக்கிறிங்க .அதுவாச்சும் பரவால்லை. உங்களை நீங்களேதிரையில வர்ர ரஜினியா நினைச்சு ஏமாத்திக்கிறிங்களே "

"நோ நோ நெவர்.. சினிமா என் தொழில்.தட்ஸால்"

"அ சொம்மா விடாதிங்க சார். படையப்பாவுல ரம்யா கிருஷ்ணனையா கலாய்ச்சிங்க. அம்மாவைத்தானே"

" ஒங்களுக்கு நல்ல இமேஜினேஷன் இருக்கு ..வெரி குட்"

"ஒங்களுக்கு நல்ல இமேஜ் இருக்கு வெரி பேட்'

"ஏன் ஏன் ஏன்?"

"உங்க இமேஜுக்கு ஏத்த ஸ்டாண்ட் எடுக்கமாட்டேங்கறிங்க - இமேஜுக்கு ஏத்த செயல்பாடு இல்லை"

' நான் சாதாரண மனுஷன். என் மேல ஏன் உங்க கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸையெல்லாம் இம்போஸ் பண்ரிங்க"

' இல்லிங்க சார்.. சிவாஜிராவ் மேல ரஜினிங்கற பிக்சர் டபுள் இம்போஸ் ஆயிருச்சு. அதுல எது நீங்கங்கற மேட்டர்ல நீங்களே குழப்பத்துல இருக்கிங்க"

"நீங்க தெளிவா இருக்கிங்களா?"

" நல்ல வேளையா அவாள் எனக்கு பெண் கொடுக்கிற அளவுக்கு -என்னை சுத்தி சேர்ந்து என்னை குழப்பற அளவுக்கு இன்னம் பெரிய ஆளாகலை "

"எல்லா பெரிய மன்சனும் குழப்பத்துல தான் இருக்காங்கறிங்களா?"

"இல்லையா பின்னே.. அன்னா ஹசாரே மேல ஊழல் புகார் சொல்றாய்ங்கன்னா காங்கிரஸ் குழப்பத்துல இருக்காய்ங்கன்னு அர்த்தம் .அழகிரியை இன்னம் தூக்கலின்னா அம்மா குழப்பத்துல இருக்காய்ங்கன்னு அர்த்தம்"

"ஹோல்டான்.. அரசியல் வேணாமே ப்ளீஸ்"

"இதை நீங்க பாட்ஷா வெற்றி விழாவுலயே சொல்லியிருந்தா பெஸ்ட். "

" கதம் கதம் "

"அது சரி நீங்க உசுப்பேத்தினதுல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் க்கதம் ஆயிட்டாய்ங்களே"

"த பாருங்க முருகேசன் நம்ம ராணாவுல"

"அதான் பேரை மாத்திட்டிங்களாமே.."

" சரி நம்ம படத்துல உங்களை ஒரு சின்ன ரோல் பண்ண வைக்கனும்னு "

' தோடா..தேர்தல் பிரச்சாரத்துல உங்களை திட்டித்தீர்த்த ஆச்சிக்கு வாய்ப்பு கொடுத்து அவிகளை மொக்கை பண்ணாப்ல . நீங்க உத்தமர். உங்களை திட்டினவுகளுக்கு கூட வாய்ப்பு கொடுப்பிங்கன்னு எஸ்டாப்ளிஷ் பண்ணிக்க நான் தான் கிடைச்சேனா.. ராமதாஸ் பாவம் .. மண்டை காஞ்சு கிடக்காரு.அன்பு மணி நல்ல ஹேண்ட்சம் பர்சன் அப்பா -பையனாவே வாய்ப்பு கொடுங்க வில்லனா கொடுத்தா தூள் பண்ணுவாய்ங்க"

"நீங்க ஏன் கடந்த காலத்தை பத்தியே பேசறிங்க.. ?"

" கடந்த காலம் நெகட்டிவ் . வருங்காலம் பாசிட்டிவ். நெகட்டிவை வச்சுத்தானே பாசிட்டிவ் போட முடியும்"

" அப்ப உங்களுக்கு வாய்ப்பு வேணாம்"

" ஏன் சார் உங்க டைம் பாஸுக்கும் இமேஜ் பூஸ்டிங்குக்கும் நாந்தான் கிடைச்சேனா? அதான் பேரன் பேத்தி எல்லாம் எடுத்து வச்சிருக்கிங்களே .அவங்களோட பண்ணுங்க சார் டைம் பாஸு ஆளை விடுங்க "

" நல்லா யோசிச்சு சொல்லுங்க அவசரமில்லை"

"குழப்பத்துக்கு ஆரம்பமே சிந்தனைதான். நாம வைக்கிற ஒவ்வொரு அடி மேலயும் மரணத்தோட அடிகள் பதிஞ்சுக்கிட்டே இருக்கு. இதுல அவசரமில்லைன்னா எப்டி? ஊர்ல இருந்திருந்தா ரெண்டு ஜாதகம் பைசல் பண்ணியிருப்பேன்"

" சரி சினிமாவை விட்டுருவம் .ப்ளாகை பத்தி சொல்லுங்க"

'சுகாசினி அம்மாவ கேளுங்க. ஆனந்த விகடன் ஆசிரியரை கேளுங்க. விவரமா சொல்வாய்ங்க. நமக்கு தலைக்கு மேல வேலை இருக்கு"

"என்ன ஹேர் கட் பண்ணனுமா?"

"என்ன சார் ..மண்டபத்துலயே சலூன் கூட வச்சிட்டிங்களா"

"ரொம்ப அக்ரசிவா பேசறிங்க"

"எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.. அப்பாறம் உங்களை விட விவரமா ஜல்லியடிக்க ஆரம்பிச்சுருவன்"

"ஏன் ஏன் ஏன்"

"பைசா சேர்ந்துரும்ல .. ஆமா சனம் மாற்றத்தை விரும்பறாய்ங்கன்னு வசனம் விட்டிங்க. நீங்களே போயஸ் கார்டனை விட்டு மாறிடப்போறதா பேசிக்கறாய்ங்க"

ரஜினி "இவரை நம்ம ஆஃபீஸ் ரூமுக்கு கூட்டிட்டு போங்கப்பா"ன்னதும் பதறியடிச்சுக்கிட்டு ஒடப்பார்க்கிறேன். ஓடவே முடியலை.

அப்பாறம் பார்த்தா படுக்கையில கிடக்கோம். என்ன பதிவு போடலாம்னு ரோசிச்சிக்கிட்டே தூங்கிட்டம் போல.ஹி ஹி.........