Friday, August 19, 2011

அவன் அவள் அது: 17


இந்த தொடரை எழுத ஆரம்பிச்சதால ஆத்தாவுக்கும் நமக்கும் உள்ள கனெக்சன் தீட்டப்பட்டதா சொன்னேன். கனெக்சன் தீட்டப்பட்டுருச்சுங்கறதுக்கு ஆதாரம் இந்த லேட்டஸ்ட் சம்பவம்.

ஆத்தாவுக்காக நாம தெலுங்குல எழுதின கவிதைகளை வலை ஏற்ற ஜகத் சோம்பேறியும் - அந்த கால டைப்ரைட்டிங் ஹையர் பாஸ் கேஸுமான பார்ட்டிக்கு ஆப்பரேஷன் அம்ப பலுக்குவிற்காகவே ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்ததா சொல்லியிருந்தேன்.

அவனும் நம்ம ஏஜ் க்ரூப்தான் இருந்தாலும் டிகிரி இன் கம்ப்ளீட்டாகி - அன் எம்ப்ளாய்டாவே துவங்கி - அப்பன் சொன்ன பொண்ணை கண்ணாலம் கட்டி அப்பன் கேர் ஆஃப்லயே சேஃப்டி ஜோன்லயே காலம் கழிக்கிறதால ஒரு வித மசபசப்பு உண்டு.

இவன் எந்த காலத்துக்கு அடிச்சு (கவிதைய சொன்னேங்க) நான் எந்த காலத்துக்கு வலை ஏத்தறதுன்னு பேதியாகி கிடந்தப்போ நம்மளோட இன்னொரு க்ளாஸ்மெட் கார்த்தி எனக்கும் கொஞ்சமா கொடுப்பான்னு அடிச்சுதரேன்னு சொன்னாரு. இதையும் கடந்த பதிவுல சொல்லியாச்சு.

இப்பம் அப்டேட் என்னடான்னா சிஸ்டத்தை கொண்டு வச்சுட்டு வந்த மறு நாளே அந்த மச மச ஒரு குண்டை தூக்கி போட்டான். குண்டு அவனோட வார்த்தைகளிலேயே

// என் பையன் அரசு கல்லூரியில ................. கோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருந்தான். நாங்க கவுன்சிலிங் போற அவசரத்துல இன்கம் சர்ட்டிஃபிகேட் வாங்க ட்ரை பண்ணோம்.

வருவாய்த்துறை பிரகஸ்பதிகள் என் பேரை போடாம என் பையன் பேரையே அடிச்சு விட்டுட்டாய்ங்க போல . நாங்களும் தூக்கிக்கினு போயிட்டம். ஆனால் கவுன்சிலிங்குக்கு இன்கம் சர்ட்டிஃபிக்கேட் எல்லாம் தேவையில்லைன்னு கல்லூரி சைட்ல சொல்லிட்டாய்ங்க.

ஆனா ..சீட் அல்லாட்மெண்ட்ல இன் கம் சர்ட்டிஃபிக்கேட் வைக்காததால அடிஷ்னலா ரூ.31 ஆயிரம் கட்டுரான்னிட்டு காயிதம் வந்துருச்சு.. //

சாதாரண / நார்மலான ஆட்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி( பணத்தை பத்தி சொல்லலை - பிரச்சினைய பத்தி சொல்றேன்) அடுத்து என்ன செய்யலாம்னு ரோசிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ஆனால் நம்மாளு கொலாப்ஸ் ஆயிட்டிருந்தான்.

ஏதோ ஒரு 3 ஆயிரம் குறையுதுப்பான்னா கொடுத்துரலாம்.ரூ.31 ஆயிரத்துக்கு எங்கே போவம்? கையறு நிலையயும் - நம்மால முடிஞ்ச யோசனைகளையும் சொல்லிட்டு வந்துட்டம்.இனி வலையேற்றமாவது மசுராவது .குடலேற்றம்தான்னு முடிவே பண்ணியாச்சு.

இருந்தாலும் மைண்டுல ஒரு நப்பாசை. ஆத்தா நினைச்சா இதெல்லாம் ஜுஜுபி. ஆனால் நினைக்கனுமே..

ரெண்டு நா கேப் கொடுத்துட்டு "ச்சொம்மா வேடிக்கை பார்ப்போம்'னு அவனை பார்க்க போயிருந்தேன். நாம கொடுத்த ரோசனையை செயல்படுத்தாம - எந்த பெரிய மன்சனோட ரெக்கமெண்டேஷனுமில்லாம இவிகளோட ஃபோன் நச்சரிப்புக்கு ரெஸ்பாண்ட் ஆகி - ஹ்யுமேனிட்டேரியன் கன்சிடரேஷன்ல காலேஜ் காரவுக ரூ.31 ஆயிரத்தை வஜா பண்ணிட்டாய்ங்களாம்.

பார்ட்டிக்கு ஒரே குஜிலி ." உன் ஆத்தாதான் அவன் மனசை மாத்தியிருக்கனும்.மொதல்ல இன்னா அலட்சியமா பேசினான் தெரியுமான்னு ஆரம்பிச்சு அந்த டெலிஃபோன் உரையாடல்களையெல்லாம் விவரிக்க ஆரம்பிக்க புல்லரிச்சு போயிட்டன்...