Saturday, August 20, 2011

அவன் அவள் அது : 18


அண்ணே வணக்கம்ணே !

இது ஏதோ என் சுயசரிதை மாதிரி போறதை தவிர்க்க முடியாது. ஏன்னா 23/12/2000 லருந்து ஆத்தாவோட இன்ஃப்ளுயன்ஸ் இல்லாத நாளே நம்ம லைஃப்ல கிடையாது. என்னதான் குரு உச்சம் ,யோக ஜாதகம்னு பீத்திக்கிட்டாலும் ஆத்தாவை அடுத்த பிற்பாடும் லேசா நிமிர்ந்து நிக்கவே 7 வருசம் பிடிச்சது. நம்ம ஆட்டம்லாம் 1967 முதல் 87 க்கே கதம்.

அதுக்கப்பாறம் நம்ம வாழ்க்கையில ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தையுமே இழந்ததைத்தான் பார்க்கமுடியும். இவ்ள எதுக்கு இன்னைக்கும் எதையாவது கடாசினாத்தான் வேறு எதாவது கைக்கு வருது. ஆனால் வருது. இதுவும் ஆத்தா போடற கிரேஸ் மார்க்காலதான் சாத்தியம்னு உறைக்குது.

அதனால ஆத்தாவை பத்தி சொல்ல ஆரம்பிச்சா என்னைப்பத்தியும் சொல்லியாகனும். என்னைப்பத்தி சொல்ல ஆரம்பிச்சா ஆத்தாவை பத்தி சொல்ல ஆரம்பிக்கனும். ( ஆரோ ரெண்டும் ஒன்னுதேன் சீக்கிரம் ஆரம்பிங்கறது கேட்குது)

ஏதோ ஒரு சாப்டர்ல பொஞ்சாதி ஊருக்கு பூட்ட கதைய சொன்னாப்ல ஞா. அங்கருந்து டூ இன் ஒன்னா இருக்கக்கூடிய ஒரு ரெசிடென்ஸை பிடிச்சம். ஐ மீன் பேச்சிலராவும் வாழமுடியும். ஒரு வேளை பொஞ்சாதி ஊர்லருந்து வந்துட்டா அப்படியே ஃபேமிலி லைஃபும் கன்டின்யூ பண்ணமுடியும்.

கடந்த பதிவுல சொன்னாப்ல ஒரு பிரபல தினசரியில அரைபக்க அளவுல செய்தி வந்த பிறவு நம்ம ரெப்புடேஷன் அதிகமாச்சு. அவனவன் பத்திரிக்கை ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி விலாசம் தெரிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சான்.

அஃபிஷியல்ஸ், போலீஸ் பர்சனல் இப்படி வர்ஜியா வர்ஜியமில்லாம வந்து இன்டராக்ட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. இதுல நிருபர்களுக்கும் விதிவிலக்கு இல்லை. அப்படி வந்து கிராஸ் ஆன ஒரு நிருபரை பத்தி சொல்லியே ஆகனும்.

அவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை. நம்மை சந்திச்சப்போ இண்டியன் எக்ஸ்பிரஸ் க்ரூப்லருந்து பிச்சிக்கிட்டு போயிட்ட ஆந்திரபிரபாவுல ஸ்டாஃபரா இருந்தான்.

தற்சமயம் ஆள் தலைமறைவா இருக்கான். கவுன்டர் கூட தரமுடியாது அதனால அடக்கி வாசிக்கிறேன். ஏதோ ஒரு கேஸ்ல ஹை கோர்ட் ஜட்ஜி முன்னாடி பேப்பர் கட்டிங்ஸ் வச்சாய்ங்களாம். அதுக்கு அவரு அம்பது ரூபா செலவழிச்சா பிட் நியூஸ், நூறு ரூபா செலவழிச்சா சிங்கிள் காலம் வரும். இந்த குப்பையை எல்லாம் எடுத்துட்டு ஆதாரங்கள் எதுனா இருந்தா கொண்டாங்கன்னாராம். இந்த நிலைக்கு மேற்படி நிருபர்கள் தான் காரணம்.

அந்த ஆசாமி ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் சித்தூர் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார - ஃபோன் அட்டெண்ட் பண்ண ஒரு உதவியாளர் தேவைன்னும் மாதா மாதம் சம்பளம் தானே கையிலருந்து கொடுப்பதாவும் சொன்னான். நமக்கு ஏற்கெனவே ஜர்னலிசத்துல சொறி ..ஆர்வம் அதிகம். ஆஃபரை ஒத்துக்கிட்டன்,

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌ ஆசாமிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பா ஆஃபிஸ்ல‌ருந்து போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றோம்னாரு .. மேனேஜ‌ர்.

நாம யாருக்கு எதிரா வீறு கொண்ட எழுந்தமோ அந்த ஆசாமி சாதாரண ஆளில்லை. ஜில்லா ஜில்லாவா போய் பழம் தின்னு கொட்டை போட்ட கேஸு.

கோடி ராமகிருஷ்ணாவோட "அம்மன் ' சினிமாவுல க்ளைமேக்ஸ்ல ஒரு பாட்டு வரும் . அதுல ஒரே ஒரு வரி 'சத்யமேவ ஜெயதேனனி லோகானிகி சாடிம்பரா .. கதலி ரா "னுட்டு வரும். அப்பம் ஏற்பட்ட சிலிர்ப்பு இருக்கே வர்ணிக்க வார்த்தையே கிடையாது.

"சத்தியம் ஜெய்க்கும்னு உலகத்துக்கு அறிவிக்க வா "ங்கறது இதனோட அர்த்தம். (மேற்படி பாட்டோட சிச்சுவேஷன் தெரியாதவுக இங்கே க்ளிக் பண்ணி க்ளிப்பிங் பாருங்க.பார்க்கிறதை விட இங்கே அழுத்தி கேளுங்க. குண்டலில ஒரு ஜெர்க் வரும் )


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ள (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். ஆனால் 1997முதல் அந்த நாள் வரை நான் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் அந்த எதிரியை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்தேன்.

அந்த சமயத்தில் என் கான்ஷியஸ் உச்சத்தில் இருந்தது என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த அந்த பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தில் .நடந்ததை சொன்னா " தபார்ரா நல்லாவே விடறான்யா ரீலு" ன்னுருவிங்க.

ஆனாலும் அடுத்த பதிவுல சொல்லத்தான் போறேன்.