Sunday, August 28, 2011
ஜோதிட பாலபாடம்: 10
4 ஆம் பாவாதிபதி ஐந்தில்/ ஐந்தாம் பாவாதிபதி 4 ல் :
தங்கள் அம்மா பற்றிய சங்கதியை சொன்னால் நக்கலாக சிரிப்பீர்களோ என்னவோ? ஏன் என்றால் கடந்த ஜன்மத்திலும் அவரே தங்கள் அம்மாவா இருந்திருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆதாரம் 1:
அவர் இன்ஃப்ளுயன்ஸ் இதர குழந்தைகளை விட அதிகமாக தங்கள் மீது இருக்கலாம்.
ஆதாரம்2:
அவரை பற்றி ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)
அவரது மரணத்துக்கு பிறகும் அவர் குறித்த நினைவுகள், விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் தரப்பு வில்லங்கமுள்ள சொத்து அல்லது ரீ சேல் மதிப்பற்ற சொத்து தொடரலாம். அல்லது அவர் தரப்பு உறவினர்கள் குறைந்த பட்சம் அவரது தோழிகளின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.
7க்கு அதிபதி 7 ல் ஆட்சி பெற்றால்:
நண்பன்/காதலி /மனைவியின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகம்.
8க்கு அதிபதி 4 ல்:
தாயை ஸ்தூலமாகவோ மன அளவிலோ பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். சிறு வாகன விபத்து / தொழிலகம் அல்லது குடியிருப்பில் சிறு விபத்துக்கு வாய்ப்பிருக்கிறது. உயிர் பிரிவதும் வீட்டிலேயே இருக்கலாம். சிலர் விஷயத்தில் வீடு கை மாறிவிடும்.
9க்கு அதிபதி -4ல் :
தாயே தந்தையை போலோ அல்லது தந்தையே தாயை போலோ தங்களை வளர்த்திருக்கலாம்.
4 ல் புதன் சுபபலம் பெற்றால்:
தாய்மாமன் அ மாமனார் சொந்தஊரில் செட்டிலாகவே வாய்ப்புள்ளது. அது கூட பஜார் தெரு, மக்கள் கூடிக்களிக்கும் இடத்தை ஒட்டி வீடு அமைய வாய்ப்புள்ளது. வீட்டில் தோட்டம் நிச்சயம். அது பிரபல பெருமாள் கோவில் உள்ள ஊராகவோ அ வியாபாரத்துக்கு முக்கியமான ஊராகவோ இருக்கலாம்.
ஜாதகத்தில் புதன் சுபபலமானால் .அதிர்ஷ்டம் தருவன:
எண்: 5
தேதி: 5,14,23
நிறம்: பச்சை
கடவுள்:பெருமாள்
கல்: ஜாதி பச்சை ( இடது சிறுவிரலில் அணியவும்)
ஏரியா: பஜார் தெரு, சந்தை, பீச் (மக்கள் கூடுமிடம்)
சாதி: வைசியர்கள், வியாபாரிகள்,ஏஜெண்ட்ஸ்,டீலர்
மனிதர்கள்: மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,ஜோதிடர்கள்
குரு+சந்திரன்:
இவர் தம் தகுதிக்கு (அதிர்ஷ்டம்) எள்ளளவும் தொடர்பில்லாத வாழ்வை 14 வருடம் வாழவேண்டியிருக்கும். அது எப்போது துவங்கியது என்பதை அவரே தம் அனுபவத்தில் இருந்து கணிக்கவேண்டும்.
ஐந்தில் சுக்கிரன் சுபபலமானால்:
மகாலட்சுமி போன்ற பெண் குழந்தைகள் பிறக்கும். அது நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட், கலர் சென்ஸ் உள்ளவராக வளரும் . அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் போன்ற தொழில்களை துவங்கி நடத்தலாம். மேலும் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், துறைகளும் லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியனவும் அனுகூலம் தரும்.
லக்னம் அ ராசி மகரமானால்:
பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கர்ம யோகம் இவருக்கு ரொம்பவே பொருத்தம். அந்தந்த நேரத்துக்கு தன் உழைப்பின் பலன் எங்கே போகிறது என்று கேள்வி எழுப்புவாரே தவிர பிறகு கண்டு கொள்ளமாட்டார். உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் வேலை செய்து கொண்டே இருக்க விரும்புவார்.
4 -7 பாவங்களுக்கு ஒரே கிரகம் அதிபதியாக இருந்தால்: (இது எந்த லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆகும்னு சொல்லுங்க பார்ப்போம்)
இவரது தாய்க்கும், மனைவி/கணவருக்கு சில ஒற்றுமைகள் அமைந்திருக்கும். பெயரில்,குணத்தில் அ ஜாடையில்.
லக்னம்/ராசி கன்னியானால்:
கடன், நோய்கள், விரோதங்கள்,சொத்து தகராறுகள் இருந்து கொண்டே இருக்கும் . கடன் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பார். விரோதங்கள் இருக்கும் வரை கடன் இராது. ( சில கால கட்டத்தில் மட்டும் மூன்றுமே தொல்லை தரலாம்.) இவை குறித்து கவலை வேண்டாம்.
லக்னம் கடகமானால்:
அம்மா ஏதேனும் ஒரு கலை/அழகு படுத்தும் கலை கைவரப்பெற்றிருப்பார்கள். நல்ல ரசனை இருக்கலாம். ஆனால் இவருடன் ஒருவித ஹேட் அண்ட் லவ் தான் இருக்குமேதவிர அதில் தொடர்ச்சி இல்லாதிருக்கலாம். இவருக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம். (கருப்பை,ஓவரிஸ்,அண்டம்) பாட்டு டீச்சர், ட்ராயிங் டீச்சர் மாதிரி கூட இருந்திருக்கலாம்
சனி ஜீவனஸ்தானத்தில் தொடர்பு கொண்டால்:
ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறை. . எந்த துறையில் இருந்திருந்தாலும் கை,கால் அழுக்காகும் தொழில்/சீட்டில் இருந்திருக்கலாம். ஒர்க்கிங் என்விரான்மென்டில்குறைந்த பட்சம் தூசு, துர்வாசனை இருந்திருக்கும்.
இவருக்கு தொழில் உத்யோகத்தில் எதிர்ப்புகள் இருந்தால்:
காகத்துக்கு சோறு, பசு மாட்டுக்கு அகத்தி கீரை தரவும்.