Tuesday, August 9, 2011

கழுத்தளவு நீரில் மந்திர ஜெபம்


தூங்காம தூங்கறது ,அறிதுயில், செத்தார் போல் திரியறது,யோக நித்திரை இப்படி பல பல வார்த்தை பிரயோகங்கள் செலாவாணியில இருக்கு. இது மாதிரி அனுபவம் நம்ம லைஃப்லயும் க்ராஸ் ஆச்சுன்னு சொன்னா ஆரும் நம்ப மாட்டாய்ங்க. ஏன் நமக்கே நம்பத் தோன மாட்டேங்குது.

இத்தனைக்கும் குரு உச்சம் மேட்டர் மாதிரி நம்ம சாதனையோட சாரத்தையும் பல தாட்டி சொல்லியாச்சு.அதாவது ஹ்ரீம்ங்கற பிஜாட்சரத்தை மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டே இருக்கிறது ஒன்னுதேன் நம்ம சாதனை.

இதுல நம்ம கேள்வி ஞானம் -கன்வினென்ஸ் - திடீர் ஞானோதயங்கள் இத்யாதியை எல்லாம் கேள்வியே கேட்காம சேர்த்துக்கிடறதும் உண்டு. அதுக்கெல்லாம் நமக்கே உரிய லாஜிக்கும் நிச்சயம் இருக்கும்.

உதாரணமா கழுத்தளவு தண்ணியில ஜெபம் பண்றது. இதுல என்னா நடந்துரும்னு கேப்பிக. சொல்றேன். ஹ்யூமன் பாடியோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி. மின்சாரம் கடத்தும் திறனை கண்டக்டிவிட்டினு சொல்றாய்ங்க. மிக குறைந்த உஷ்ண நிலையில் இந்த கண்டக்டிவிட்டி அதிகரிக்கும்ங்கறது விஞ்ஞான உண்மை.

ஹ்யூமன் பாடில மிக குறைஞ்ச அளவு மின்சாரம் இருக்குங்கறது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மின்சாரத்தை நீள வாக்கில் ஓட விட்டா என்ன எஃபெக்ட் ? வட்டவடிவில் ஓடவிட்டால் என்ன எஃபெக்டுங்கறதை முன்னொரு பதிவில் சொன்னதா ஞா.

ஏன் இமயமலைக்கு இத்தனை டிமாண்டுன்னு இப்ப புரியுதா? மேலும் சங்கீத சாதனை செய்றவுகளும் இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணுவாய்ங்களாம். கடும் குளிரால் தாக்கப்படும் குண்டலி மேல் நோக்கி எழ வாய்ப்பிருக்கு. அப்படி அந்த குண்டலி விசுத்தியை (கழுத்து பகுதி) தொட்டுட்டா ஆட்டோமெட்டிக்கா குரல் இனிமை ஏற்பட்டுருமில்லியா?

எச்சரிக்கை:
இதை படிச்சுட்டு முன்ன பின்னே யோசிக்காம கோதாவுல இறங்கிராதிங்க. சளி,தும்மல்,அலர்ஜி,ஈஸ்னோஃப்லியா,ஆஸ்மா இத்யாதி பிரச்சினைகள் உள்ளவுக இந்த சா(சோ)தனையில இறங்கிராதிங்க. எக்கு தப்பா எதுனா ஆகிப்போச்சுன்னா நாம பொறுப்பு கிடையாது.

நாம செய்தோம்.ஒர்க் அவுட் ஆச்சு.அதுவரைக்கும் நெஜம்.

நாம எந்த கவலையும் இல்லாம செக்யூர்டா இருந்தது தாயோட கருப்பையில தான். உடலுறவுங்கறதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சின்னு சைக்காலஜி சொல்லுது.அந்த கருப்பையில தண்ணியிலதான் மிதந்துக்கிட்டிருந்தோம். (பனிக்குட நீர்)

அந்த பனிக்குட நீருக்கும் கடல் நீருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதா பல தடவை சொல்லியிருக்கேன். இப்பம் எந்த டவுன்ல நன்னீர் இருக்கு. எல்லாம் சால்ட் வாட்டர் தானே .அந்த உப்பு தண்ணியில கழுத்துவரை தண்ணிக்குள்ளாற உட்கார்ந்து ஜபம் பண்ணிட்டிருந்ததுல சாதா ஜபத்துக்கும் இதுக்கும் நிறைய வித்யாசங்களை உணர முடிஞ்சது.

பாய்ண்ட் நெம்பர்: 1

எப்படியா கொத்த பனிக்காலமா இருந்தாலும் -மழை காலமா இருந்தாலும் தொட்டி தண்ணி ஐஸ் கணக்கா இருந்தாலும் உள்ளாற இறங்கும்போதுதேன் ஜிலீர்ங்கும். அப்பாறம் பாடி தன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்குது. ( ஆரா?) நம்ம போஸ்சர் மாறும் போது மறுபடி ரெண்டு செகண்டு குளிரும் அம்புட்டுதேன். மறுபடி பாடி பாலன்ஸ் பண்ணிக்குது.

பாய்ண்ட் நெம்பர் 2

எண்ணங்கள் கட்டுப்படுது. எதுவோ ஒன்னு (பாடி கிடையாது) குளிர்ல தவிக்கறதையும் மேனோக்கி பாயத்துடிக்கிறதையும் உணர முடியுது. உடலில் -ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க முடியுது. அங்கத்துடிப்புகள் - முதுகெலும்பி ஏற்படும் சலனங்கள் எட்ஸெட்ரா கிறிஸ்டல் க்ளியரா தெரியுது.

இப்படி எத்தனையோ ப்ளஸ். இது போதாதுன்னு வெளிய வந்த பிறகும் மந்திர ஜெபம் தொடர்ந்துக்கிட்டே இருக்கும். அர்த பத்மாசனம் ,பத்மாசனம் ( இந்த போஸ்ச்சர்ல அப்படியே படுத்துக்கிட்டு தொடர்ரதும் உண்டு) சவாசனம் இப்படி எது கன்வினென்டா இருக்கோ அந்த ஆசனத்துல ஜெபம் தொடரும்.

முதுகெலும்பு புண்ணா வலிக்கும். டோன்ட் கேர். அப்படியே ஆர்ட்டிஃபிஷியல் (ஸ்டீல்) ஸ்பைனல் கார்டா மாறிருச்சோன்னு தோனும். டோன்ட் கேர். திடீர்னு கழுத்துவரை உண்ர்ச்சியே இல்லாம போயிரும் .டோன்ட் கேர். கழுத்தை மட்டும் 180டிகிரியில சுழற்றி பார்த்தா சாட்சியின் பார்வை கை வரும்.டோன்ட் கேர்.

ஜபம் மட்டும் தொடர்ந்து கிட்டே இருக்கும். சவாசனத்துல ஜெபத்தை தொடரும் போது நடு நெற்றியில் அழுத்தம் ஏற்படும். கண்ணெல்லாம் மேனோக்கி செருகிக்கும். இதெல்லாம் ஆரம்ப கட்டம். நம்முது கடக லக்னம்.லக்னாதிபதி ரெண்டே கால் நாளைக்கொருதாட்டி ஸ்டேஷன் மாறிருவாரே.

ஒரு நாள் திடீர்னு என்னென்னமோ கணக்கு மைண்ட்ல ஓட ஆரம்பிச்சது.. குண்டலி சக்தி வடிவம். சஹஸ்ராரம் சிவ ரூபம். சிவம் சிவனேனு தான் கிடக்கும்.சக்தி தான் சிவனை போய் சேரனும். ஹ்ரீம்ங்கறது சக்தி வடிவம்.ஓம்ங்கறது சிவரூபம். இப்படியெல்லாம் குருட்டு தனமா ரோசிச்சு சுவாசம் +ஹ்ரீம்ங்கற பீஜ ஜெபம் மூலாதாரத்துலருந்து புறப்படறாப்லயும் அங்கே தன் வாலை தானே கடித்தபடி சுருண்டு கிடக்கும் பாம்பு அசையறாப்லயும் கற்பனை செய்துக்க வேண்டியது.

ஸ்வாசம் + ஹ்ரீங்கார பீஜ ஒலி+ஒளி மேனோக்கி உயரும் போது அது சஹஸ்ராரத்தை டச் பண்றாப்லயும் அங்கன ஒலிச்சிட்டு இருக்கிற ஓம்காரம் இந்த ஹ்ரீங்கார பீஜத்தால் + தேஜத்தால் ஆக்டிவேட் ஆறாப்லயும் இமாஜின் பண்ணிக்க வேண்டியது.

இப்படி ஒரு சாதனையை துவக்கினோம்.இந்த மெத்தட்ல ஜெபம் செய்யும் போதுதான் குழந்தை அழுகுரல் சலங்கை ஒலி , சிரிப்பொலில்லாம் கேட்க ஆரம்பிச்சது. வர்ணஜாலம் - வாண வேடிக்கையெல்லாம் காட்சி தர ஆரம்பிச்சது.

படக்குனு நமக்குள்ள ஒரு சந்தேகம். கொய்யால நம்ம ஜாதகத்துல லக்னத்துலயே சூரியன்.லக்ன சூரியன் உள்ளவன் தனக்காக எது செய்தாலும் தேறாதுன்னு ஒரு ஜோதிட விதியிருக்கே.ஒரு வேளை இந்த சாதனைகள் கூட அப்படித்தான் மொக்கையாகுதோ...

அப்போ வருஷம் 2001.என் மகளுக்கு 9 வயசு. அவளை காலை நேரத்துல எதிர்க்க உட்கார வச்சுக்கிட்டு பீஜ ஜெபத்தால நமக்குள்ள அளவுக்கடங்காத சக்தி ஜெனரேட் ஆயிட்டாப்லயும் -லக்னத்துல சூரியன் இருக்கிறதால நமக்கு உபயோகப்படாம போயிட்டாப்லயும் நினைச்சுக்கிட்டு அந்த சக்தியை மகளோட நடு நெற்றி மூலமா அவளுக்குள்ள பாய்ச்சறாப்ல சங்கல்ப்பம் செய்துக்க வேண்டியது. அவளோட நடு நெற்றியை உற்றுப்பார்க்க வேண்டியது.

அந்த சமயம் அவளுக்கு கொட்டாவி மேல கொட்டாவி வரும்.(இத்தனைக்கும் ப்ரஷ் பண்ணி ஃபேஸ் வாஷ் பண்ணி ஒரு டீ காஃபி குடிச்ச பிற்பாடுதேன் செஷன் ஆரம்பமாகும்.) அப்பப்போ தன் நடு நெற்றியை அவள் தடவிக்கிட்டே இருப்பாள். ஏதேதோ முணுமுணுத்துக்கிட்டே இருப்பா.

பத்து பதினைஞ்சு நிமிஷத்துல நாம சுஸ்தாயிருவம். கொஞ்ச நாழி கேப் கொடுத்துட்டு அவளை பேட்டி எடுக்க வேண்டியது. குறிப்பு எடுத்துக்க வேண்டியது. இப்படி சில காலம் செய்துக்கிட்டிருந்தோம். அந்த குறிப்புகள்ள பலதும் நூத்துக்கு நூறு மெட்டீரியலைஸ் ஆச்சுன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்.

சங்கல்ப்ப ஸ்லோகத்துல கடைசி 3 வரி ஞா இருக்கா?

மாதா தேஹி த்ரிகால ஞானம்
மாதா தேஹி அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹி அஷ்ட ஐஸ்வர்யம்

இந்த 3 உருப்படியும் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சது.அது எப்படி ஒர்க் அவுட் ஆச்சுங்கறதை அடுத்த பதிவுகள்ள சொல்றேன்.