லக்னாதிபதி எட்டில்:
லக்னாதிபதி உங்களை காட்டும் கிரகம். எட்டு மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி எங்கே இருந்தாலும் நன்மை செய்யனும்.அவர் மரணத்தை காட்டும் இடத்துல நின்னாரு. இதன் பொருள் என்ன? உங்க லக்னாதிபதி மரணத்தின் மூலம் நன்மை செய்வார் அந்த மரணம் உங்க போட்டியாளரோடதா இருக்கலாம் -உங்க எதிரியோடதா இருக்கலாம் - அல்லது உங்கள் உறவினரா இருக்கலாம். அந்த மரணத்தின் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு -சொத்து -சுகம் வரலாம் என்பது இதன் பொருள். ஒரு வேளை நீங்க எதுனா பெரிய விபத்தில் சிக்கி நஷ்ட ஈடு இத்யாதி வரலாம்.
ரோகாதிபதி இரண்டில்:
நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் ஜாதகர் வீண் பேச்சு,வெட்டிப்பேச்சால் வம்புகளை விலை கொடுத்துவாங்குவார். அல்லது மிக அவசியமான நேரத்தில் கூட வாய் திறந்து பேசாது இருந்துவிடுவார்.அதனால் பல நஷ்டங்கள் ஏற்படும்.நோய்கள்,கடன்,விரோதங்களேற்படலாம். கண்,தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் வே ஆஃப் ப்ரசண்டேஷனில் பிரச்சினை வரலாம்.
லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றால்:
லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.
லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன் எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.
ஆக லக்னாதிபதி உச்சம் பெற்றால் அது மினிமம் கியாரண்டி ஜாதகம்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிரலாம்.
இதுல ஒரு மைனஸ் பாய்ண்டும் இருக்கு.ஓஷோ சொல்வாரு " நீங்க மத்தவுகளை விட உயர்ந்துட்டா பிரச்சினை அதிகம்"
மத்தவுக குண்டூசி தவறி விழுந்ததுக்கு பதறிப்போயி காட்டுக்கத்தல் கத்த "யார் கால்லயாச்சும் குத்திர ப்போவுதுப்பா மொதல்ல அதை பொறுக்கி எடுத்து அதுக்கான டப்பாவுல போடு"ன்னு சொன்னா எதிராளிக நொந்துபோய்ருவாய்ங்க
மேலும் எதிர்காலத்துல நீங்க என்னவா மாறப்போறிங்களோ இளமையில அதுவாவே இருப்பிங்க இதை சாமானியர்கள் டைஜஸ்ட் பண்ணிக்க முடியாம நொந்துப்போயிருவாய்ங்க. உங்களை நோகடிக்கவும் கூடும்.
எந்த கிரகம் கெட்டால் - எந்த கிழமையில் - எந்த கடவுளை வழிபடலாம்:
சூரியன் -ஞாயிறு -சூரிய நமஸ்காரம்,காயத்ரி
சந்திரன் -திங்கள் கிழமை -கன்னியாகுமாரி
செவ்வாய் -செவ்வாய் கிழமை - சுப்பிரமணியர் -ரத்த தானம்
ராகு -வெள்ளிக்கிழமை (காலை 10.30 முதல் 12 க்குள்) புற்றுள்ள -அய்யர் பூசை பண்ணாத அம்மன் கோவில்
குரு -வியாழகிழமை - தட்சிணா மூர்த்தி அ எவரேனும் குரு
சனி - சனிக்கிழமை - ஆஞ்சனேயர் அ கிராமதேவதை
புதன் - புதன் கிழமை - நாமம் போட்ட சாமி (எதுவானாலும் சரி) எஸ்பெஷலி கிருஷ்ணர்
கேது - திங்கள் காலை 7.30 முதல் 9 க்குள் வினாயகர்
குரு சுபனாகி/அசுபனாகி தனித்து நின்றால்;
அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம்:
இது ஒரு ஜோதிட பழ மொழி. அந்தணன் என்பது குருவை குறிக்கு சொல். இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னா ..
குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம். ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும்.( மேலும் உங்க ஜாதகத்துல செய்தொழிலை காட்டற 10 ஆமிடத்துக்கும் குருவே அதிபதியா இருக்காருங்கறதால இந்த பலன் ரொம்பவே ஒர்க் அவுட் ஆகும்)
யுவார் ஓகே. ஆனால் உங்களை சுத்தி உள்ளவுகளும் ஆரோக்கியமான உடலும்,மனசும் பெற்றிருக்கனுமில்லையா? அப்படி இல்லேன்னா என்ன ஆகும்?
உடல்,மன ஆரோக்கியம் காரணமா நீங்க உற்சாகம், எனர்ஜியோட இருப்பிங்க. அதெல்லாம் சேர்ந்து உங்களை சந்தோஷமா இருக்க வைக்கும்.
ஸ்தூல நிலை வேறயா இருந்தாலும் சந்தோஷமா இருப்பிக.
அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக .அதைப்பார்த்து நாலு பேர் உங்களை நக்கலடிக்கலாம். ஏன் உங்களுக்கு தீமை கூட செய்யலாம் (சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான்)
குரு தனியா நின்னா என்ன ஆயிரும்னு கேப்பிக சொல்றேன். குருன்னா டூ குட்.( Too good/ do good) குருவோட இன்னம் ஏதோ ஒரு கிரகம் சேர்ந்தா இதை கட்டுப்படுத்தும். இல்லாட்டி அரண்மனை வாசக்காலை வெட்டிக்கொடுத்த கர்ணன் கதையா போயிரும்.
தர்மம் பண்ணியே போண்டியான குடும்பம் ஊருக்கு நாலிருக்குல்லியா? நல்லதை பண்றது ஓகே.ஆனால் எதுக்காக பண்றோம்னு ஒரு கேள்வி வருமில்லியா?
கூட வேற ஏதாச்சும் கிரகமிருந்தா அந்த கிரக காரகத்வத்துக்குட்பட்ட ஏதோ ஒரு நோக்கத்துக்காக பண்றான்னு ஜனம் அஜீஸ் பண்ணிப்பாங்க.
அப்படியில்லாம குரு தனிய நின்னா நல்லது பண்றதுக்காகவே நல்லது பண்ண ஆரம்பிச்சுருவம்.
இதை ஜீரணிச்சுக்க முடியாத சனம் உங்க நற்செயலுக்கு விபரீதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து கதை கட்ட ஆரம்பிச்சுரும்.
உதாரணமா நீங்க ஒரு ஏழக்குடும்பத்துக்கு உதவறிங்கனு வைங்க. அந்த வீட்டு பெண்ணை கணக்கு பண்ணத்தான் பண்றிங்கனு கதை கட்டிருவாய்ங்க.
கோவிலை புதுப்பிக்க இறங்கினிங்கனு வைங்க. மூலவர் அடியில புதையல் இருக்குப்பா அதை குறிவச்சுத்தான் இந்த வேலைல இறங்கியிருக்கானு சொல்லிருவாங்க.
குரு தனிய நின்னா வர்ர பிரச்சினை இதான்.
மேலும் குரு ஞாபகசக்தியை,திட்டமிடும் திறமையை,பொறுமைய தரக்கூடிய கிரகம்.வெற்றிக்கு இதுகள விட்டா வேற வழி ஏது? குரு உச்சம் பெற்றதால குரு காரகத்வம் கொண்ட எல்லா மேட்டருமே நல்லா ஒர்க் அவுட் ஆகும் .(பார்க்க: இணைப்பு நெம்பர் டூ )மனுசன் வாழ்க்கையில உசர உசர தனிமைப்பட்டு போயிருவான்.
இதுல குரு வேற தனிய இருந்தா நீங்க தனிமையை விரும்ப ஆரம்பிச்சுருவிங்க. சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.
குருங்கறது பிராமண கிரகம். பிராமணன் தனித்து நின்னு எதையும் கழட்ட முடியாது. அவனுக்கு அரசாங்கத்தோட,சமூகத்தோட ,மக்களோட உதவி தேவை. குரு தனியே நின்னா ஜாதகர் பாட்டுக்கு சோலோவோ தான் செய்ய நினைச்சதை செய்துக்கிட்டு போய்க்கினே இருப்பார்.
அப்ப சனம் தங்களோட கற்பனை சிறகை படபடனு அடிச்சு வதந்தீகளை கிளப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. இதைத்தான் நிந்தனைங்கறது.
6 ல் சந்திரன்: ரோக பாவம்:
இங்கே சந்திரன் நின்னாரு.இங்கு சந்திரன் நின்றதால் தீடீர் என்று உடல் நிலை ட்ரபுள் கொடுக்கும், மந்திரம் போட்டாப்ல குணமாயிரும். அதனால சின்ன சின்ன ஹெல்த் ட்ரபுள்ஸுக்கு மருந்துமாயம்னு போகாதிங்க போச்சுனு நினைச்சா மறுபடி தலை காட்டும்.(அவை வேறேதேனும் பெரிய பிரச்சைனைக்கு முன் அடையாளமா இல்லாதவரை) கடனும் திடீர்னு ஏற்படும் விளையாட்டா தீர்ந்துரும்னு நினைக்காதிங்க. வாழ் நாள் முழுக்க தொடர்ந்தாலும் தொடரும். அதனால் கடன் வாங்கறச்ச ஒரு முறைக்கு பல முறை யோசனை பண்ணி இறங்குங்க. வழக்கு,விவகாரம்,சண்டையும் இதே கேட்டகிரிதான். "அம்பாளே பார்த்துப்பா"ன்னுட்டு விலகி வந்துருங்க.
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன யதார்த்தத்தை புத்தியில் இருந்து மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். எதிரிகள் நண்பர்களா மாறுவாய்ங்க. நண்பர்கள் எதிரிகளா மாறுவாய்ங்க.