Wednesday, August 3, 2011
தொழில் உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்
அண்ணே வணக்கம்ணே,
நேத்து தொழிலை கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம்.அதனால நேற்றைய பதிவு கொஞ்சம் போல சோனியாயிருச்சு. அதை ஈடுகட்ட இன்னைக்கு நோன்டி நுங்கெடுத்துரனும்னுதேன் ஆரம்பிக்கிறேன்.ஆத்தா விட்ட வழி.
ஆணோ பெண்ணோ எந்த உயிரா இருந்தாலும் அதனுடைய சப்கான்ஷியஸ் மைண்ட்ல இயற்கை பொதிஞ்சு வச்சிருக்கிற பேசிக்கல் கமாண்டுகள் ரெண்டு
1.உயிர் வாழ்தல் 2.பரவுதல்
இந்த ரெண்டு கான்செப்டுக்காக செய்யும் போது தொழில் உத்யோகத்துல ஆண் பெண்களிடையில் எந்த வித்யாசமும் வர்ரதில்லை.
உயிர் வாழ்தல் இரண்டு விதம்:
உயிர் வாழ்தல்னா "உசுரை கையில பிடிச்சுக்கிட்டு" வாழறது ஒரு விதம். இது பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.
உயிர் வாழ்தல்னா தான் உயிர் வாழ்வதை உலகத்துக்கே கம்யூனிக்கேட் செய்தபடி -தன் சர்வைவலை பன்முறை உறுதி செய்துகொண்டபடி வாழறது இன்னொரு விதம் இது பலம் வாய்ந்தவர்களின் லைஃப் ஸ்டைல்
பரவுதல் ரெண்டு விதம்:
பரவுதல்னா விந்தை கொட்டுதலோ அ கொட்டப்பட்ட விந்தை ஏற்று பெற்றுத்தள்ளுதலோ பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.
பரவுதல்னா தங்கள் பேரும் புகழும் படைப்பும் படைப்புத்திறனும் உலகெங்கும் பரவ வாழறது பலவான்களின் லைஃப் ஸ்டைல்.
ஆண் ஃபிசிக்கலி ஸ்ட்ராங், (சரீர பலம்) . பெண் சைக்கலாஜிக்கலி ஸ்ட்ராங். (மனோ பலம்).
ஆணின் சரீர பலம் உச்சத்தில் இருக்கும்போது சரீர பலம் / முரட்டுத்தனம் தேவைப்படும் துறைகளில் உச்சத்துக்கு போகிறான்.
பெண்ணின் மனோபலம் உச்சத்தில் இருக்கும்போது மனோபலம் தேவைப்படும் துறைகளில் பெண்கள் உச்சத்துக்கு போகிறார்கள்.
ஆணின் சரீர பலத்தை பற்றி பலமுறை சொல்லியிருக்கேன். ஆனால் இதுல ஒரு சின்ன கரெக்சன். ஆணோட சரீர பலம் கொண்டு ஒரு கல்லுரலையே நகர்த்திரலாம். ஏன் இடுப்பு வரை தூக்கியும் காட்டலாம்.
ஆனால் தாளி அவனால ஒரு படி அரிசி கூட அரைக்க முடியாது. எப்படியா கொத்த பாடிபில்டரா இருந்தாலும். (பத்து பதினைஞ்சு நாள் ப்ராக்டிஸு பண்ணி 16 ஆவது நாள் செய்து காட்டலாம் அது வேற விஷயம்)
ஆனால் கண்ல மட்டும் உயிர்வச்சுக்கிட்டு -ஒல்லி பீச்சானா இருக்கிற பொம்பளை மூச்சிரைக்காம பக்கத்து வீட்டு அக்கா கிட்டே தெருவுக்கு புதுசா குடிவந்த பொம்பள டாக்டர் வாக்கிங் போற அழகை பத்தி பேசிக்கிட்டே அசால்ட்டா அஞ்சு படி அரிசியை அரைச்சுரமுடியும்.
இவனுக்குள்ளே சக்தி என்னவோ அதிகமா தான் இருக்கு. ஆனால் அவனால அதை கண்டிஷனிங் செய்து தொடர்ச்சியா வெளிப்படுத்த முடியறதில்லை. அதுக்கு ஒரு ப்ளானிங் வேணம். சக்தியை கட்டுப்படுத்தி கொஞ்சமா - கன்டின்யுவஸா வெளிப்படுத்தன்ம். ஆனால் இந்த டெக்னிக் ஆண்களுக்கு தெரியாது.பெண்களுக்கு தெரியும்.
இந்த மாதிரியான பவர் கண்டிஷனிங் டெக்னிக் தேவைப்படற ஃபீல்ட் ஒர்க்ல கூட ஆண்களால சோபிக்க முடியாது. இது ஃபிசிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா தேவைப்படற தொழில்,உத்யோகங்கள் உண்டு.அவற்றிலும் பெண்கள் தான் நிறைய சாதிக்க முடியும்.
1.உருவாக்குதல் - சூட்சுமமான அசெம்ப்ளிங்ல எல்லாம் பெண்கள் நின்னு விளையாடறாய்ங்க.
2.பராமரிப்பு & பதப்படுத்துதல்: இதுவும் பெண்ணோட இயல்புக்கு ஏற்ற துறை .
( இதுக்கான காரணம் என்னன்னா கருவில் குழந்தை உருவாகிறது வெறும் உயிரியல் தொடர்பான மேட்டர் கிடையாது.அவளோட சப்கான்ஷியஸ்ல இருந்து புறப்படும் கமாண்ட்ஸ் அந்த குழந்தையின் உருவாக்கத்திற்கு நிறைய உதவுது. உருவாக்கும் -பதப்படுத்தும் -பராமரிக்கும் துடிப்பு மற்றும் திறன் இயல்பாகவே பெண்ணில் அமைந்திருக்கிறது)
3. வினியோகித்தல் : இங்கே வரும்போது ஆண்கள் கொடி கட்டி பறக்கிறாய்ங்க.
4..கண்டுபிடிப்புகள்:
இது ஏறக்குறைய ஒரு கற்பழிப்பு மாதிரி தான். வேணம்னா முதலிரவுல நடக்கும் படிப்படியான நிர்வாணப்படுத்துதலை போன்றதுன்னு சொல்லலாம். (குவாரி,சுரங்கம்லாம் கற்பழிப்பே) அதனாலதான் 90 சதவீத கண்டுபிடிப்புகள் ஆண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.
உடலுறவின் போது கூட ஆண்தான் பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்க துடிக்கிறான்.ஆனால் பெண் தன் நிர்வாணத்தை கூட தான் ரசிக்கிறதில்லை.
சரிங்ணா இந்த பதிவோட சாரத்தை இப்படி வச்சுக்கலாம் .பெண்ணோட ஜாதகத்துல ஜீவனபாவம் பலம் பெறுவது அவளது உருவாக்கும்,பதப்படுத்தும்,பராமரிக்கும் திறனை அதிகரிக்கும்.
ஆணோட ஜாதகத்துல ஜீவன பாவம் பலம் பெறுவது இன்ன பிற துறைகளிலான அவனது திறமையை அதிகரிக்கும்.
ஜீவன பாவம் ஏறுமாறா இருக்கும் போது ஆண் பெண்கள் தங்கள் இயல்புக்கு மாறான துறைகளில் ஈடுபாடு கொண்டு நுழைந்து அதையும் சீரழித்து தங்கள் முன்னேற்றத்தையும் மூளியாக்கிக்குவாய்ங்க.