Monday, January 17, 2011

கோவில் சிலையின் கண்களிலிருந்து கண்ணீர்

சாதாரணமா பிள்ளையார் பால் குடிச்சார் மாதிரி நியூஸையெல்லாம்  நாம கண்டுக்கிடறதில்லை.ஏன்னா அதுல 99.99% டுபுக்கா தான் இருக்கும். தர்மகர்த்தாவோ, கிராமத்து பெருசுங்களோ கோவில் வருமானத்தை பெருக்க போட்ட ஸ்கெட்சாவே இருக்கும்.

வீட்ல உள்ள பாபா படத்துல விபூதி கொட்டுதுங்கற கேஸை உள்ளாற பூந்து பார்த்தா அது க்ரைசிஸ் ஃபேமிலியா இருக்கும் அல்லது வீட்டு ஓனருக்கும் இவிகளுக்கும் எதுனா தகராறு இருக்கும்.

கோவில் சிலை கண்ல கண்ணீர் வர்ரதுல்லாம் கூட இந்த கேட்டகிரிதான். லேட்டஸ்டா ஆந்திரமானிலம் ,அனந்தபூர் மாவட்டம், தர்ம புரில ஒரு கோவில் சிலை கண்ல தண்ணீர் வர்ரதா புரளி கிளம்பியிருக்கு.

தெலுங்கு சானல் காரவுக சபரிமலையில செத்தவுகளை துரத்தி அலுத்து இப்ப இந்த மேட்டருக்காக கேமராவ தூக்கிக்கினு அலையறானுவ போல.  டைட் க்ளோசப்ல சிலையோட கண்கள் . சுத்தி சிகப்பு கட்டம் வேற ( அந்த காலத்து ஆதித்தனார் டெகினிக் இது)

கண்ல தண்ணி வருது தெரிதுபா. அது கண்ணிரா தண்ணீரா எப்டி தெரியறது? லேப் டெஸ்டுக்கு அனுப்பினிங்களா? ரிப்போர்ட் வச்சிருக்கிங்களா? ஜியாலஜிஸ்டை கேட்டா ஆயிரம் காரணம் சொல்வாய்ங்க.

அதுசரி நைனா இந்த மேட்டரை நம்பாத குறைக்கு இந்த பதிவு எதுக்குனு கேப்பிக. சாமிக்கே சிலை வேணாம்னு சொன்ன பெரியாருக்கு முக்கு முக்குல சிலை வச்ச கணக்கா அவாளோட டுபுக்கையெல்லாம் வெளிச்சம் போட்டு மவனுங்களே பகுத்தறிவோட வாழுங்கடானு சொன்ன நாட் நாட் காலத்து சாமியார் பிரம்மங்காருவோட சிலை கண்கள்ளருந்து  கண்ணீர் வருதுன்னு ஊத்திவிட்டிருக்காய்ங்க பாருங்க. அதான் என்னை கிளப்பி விட்டுருச்சு.


பாஸ்! இந்த சிலை, கண்கள்,கண்ணீர் எல்லாம் தூர வச்சிட்டு மேற்படி பிரம்மங்காருவை நல்லதா நாலு விஷயம் தெரிஞ்சிக்கிடுவிங்கன்னுதான் இந்த பதிவை போட்டேன்.

பிரம்மங்காருவை பத்தி ஒரு வார்த்தையில (ஹி ஹி ஒன்னு ரெண்டு மூணு வார்த்தையில ) சொல்லனும்னா ...

பெரியார்  -காவி கட்டாத பிரம்மங்காரு
பிரம்மங்காரு - காவி கட்டின பெரியாரு

அம்புட்டுதேன் வித்யாசம் .. கீழே உள்ள தலைப்புகள் மேல க்ளிக்கி உடுங்க ஜூட்..


காவி கட்டிய பெரியார் பிரம்மங்காரு



பிரம்மங்காரு பற்றிய எனது ஆங்கில கட்டுரையின் ஸ்கான்


பிரளயம் எப்போ?