Sunday, January 2, 2011

முகத்தில் குத்திய முருகேசன்_வாங்கிய சுகுமார்ஜி

நான் மீண்டு வந்திருக்கிறேன்... என் நேரத்தையும், என மூளையையும் அவ்வப்பொழுது தின்று கொண்டிருந்த என் வீட்டில் இருந்த வலையுலக தொடர்பை நிறுத்தம் செய்துவிட்டேன். (பில் கட்டாதனால டிஸ்கனெக்ட் பண்ணிட்டாங்க _ மன சாட்சி)

கடந்த முறையும் இப்படி ஆன பிறகு கிட்டதட்ட 2500 பணம் செலுத்தி, அப்பொழுது இருந்த வேலைப்பளு காரணமாக மீண்டும் வரப்பெற்றேன். அந்த தொடர்பில்லா நாட்களுக்கும் ஒரு மாத கட்டணத்தை போட்டு தீட்டி விட்டார்கள்... அலுவலகம் சென்று முறையிட்டால்...

“உன்னை யாரு ஒரு மாதத்திற்கு பிறகு 2500 கட்டசொன்னது”

“ஏங்க. உபயோக படுத்தினவங்க கட்ட வேனாமா?”

“நீ ஏன்யா 9ம் தேதி கட்டின? 11ம் தேதி அக்கவுண்டே குளோஸ் ஆகிருக்குமே?”

“அப்போ... பணம் கட்டவேணாமா?”

“கட்டணும்... ரெண்டு மாதம் மட்டும் கட்டவேண்டி இருந்திருக்கும்... டிஸ்கனெக்ட்ல பணம் கட்டினதுனால கண்டியூடிக்காக ஒரு மாசம் சேர்த்து அழு”

அடப்பாவிகளா? போங்கடா... நீங்களும் உங்க பிராட்பேண்டும்... அப்படின்னு,

“சரி அழுவுறேன்... ஆனா... அடுத்தாப்படியும் பணம் கட்டமாட்டேன். டிஸ்கனெக்ட் பண்ணிக்கங்க... எல்லாம் சேர்த்து கடைசில அழுவுறேன்”

“என்னமோ பண்ணுங்க... அப்புறம் புதுசாத்தான் கனெக்சன் வாங்கனும்”

“போய்யா... அந்த சாத்தானே வேணாம்”

ஒரு மாதம் பில் கட்டவில்லை என்றால் டிஸ்கனெக்ட் ஆகும். ரெண்டு மாதம் பில் கட்டவில்லை என்றால் டிஸ்கனெக்ட் ஆகும் என்று பார்த்தால் மூன்றாவது மாத இறுதியில் டிஸ்கனெக்ட்  ஆகிடுச்சு. அப்பாடா. என்னைவிட ச்ந்தோஷம் அடைந்தவர் என் மனைவி...

ஆனால் என் பிழைப்பே பிராட்பேண்ட்லதாங்க ஓடுது... அதுனால அலுவலகத்தில் மட்டும் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். எல்லாமே வெளி நாடுகளில் உள்ள நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பணிகள். அப்ப உள்ளூரில்... அதாவது திருச்சியில்... சில பணிகள் மட்டுமே... இந்த மாட்டின் விலையை நிர்ண்யித்து பேசக்கூடிய நிபுணர்கள் இல்லை... நான் நல்லா உழைப்பேன்ங்க... அதனால் கேவலமான விலைக்கு விலைபோகாத மாடு நான்.

திருச்சில என்ன பண்றேன்னு (நண்பர்களை தவிர) ஒரு பயலுக்கும் தெரியாது... (பயல் அப்படின்னா பையன்னு அர்த்தம்... ஒரு வேளை புயல் தான் பயலா மாறிடிச்சோ? இப்பல்லாம் பையன்கள் எல்லாம் சக்தி இழந்த (இழந்தா எப்படிங்க புயல்லா இருக்கும்?) புயல் போலத்தானே இருக்காங்க...)

ரொம்ப ரோசிச்சா இப்படித்தாங்க... :)

சரி... பிராட்பேண்டுக்கு வருவோம்... டிஸ்கனெகட் ஆன பிறகு கட்டினாத்தானே வம்பு... சரியா... நம்ம கணக்கு காலியாகுற காலம் பார்த்து, அதாவது 3 மாத்திற்கு பிறகு பணம் செலுத்தினா ஓவர்... என்ன இறுதி எச்சரிக்கைனு பில் வரும்... கட்டிடனும்... அனுபவிச்சிருக்கோம் கட்டித்தான ஆகணும்?

இதாவது பரவாயில்லீங்க... நம்ம அனுபவிச்சோம், பணம் கட்டுறோம். வாழ்க்கைல நாம ஏங்க கஷ்டத்தை அனுபவிக்கனும்... கேட்டா போன பிறவில பண்ணின பாவம் தொடருதுங்குறாங்க... நான் எங்கய்யா பாவம் பண்ணினேன். போன பிறவியே ஞாபகம் இல்லீயேயா? அதெப்படியா கன்டினியூ ஆகும்? அப்படி இல்லாத கொடுமைக்கு (மப்புக்கு) நான் என்ன ஊறுகாயா? ரொம்ப நாளா மண்டைய கொடைஞ்ச கேள்விங்க... பதில்தான் கிடைக்கல...

ஓஷோ என்ன சொல்றாருன்னா... போன பிறவிய பொதி சுமக்க நீ என்ன கழுதையா? நீ புதுசுடா... புத்தம் புதுசு... இப்பொ தான் நீ பொறந்திருக்க... அதுனாலதான் அவர் சமாதியில் இவன் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, சிறிது காலம் பூமியில் வாசம் செய்தான்... அப்படின்னு எழுதியிருக்காங்க... அவருக்கு எழுதுவாங்க... நமக்கெல்லாம்?

அப்படியான யோசனை ஓடிகொண்டிருந்த ஒரு நேரத்தில, நம்ம முருகேசனோட ஒரு சாட் பண்ணினேங்க... (எத்தன பண்ணி பாருங்க... நம்ம கவிக்கோ அப்துல் ரகுமான்... இப்ப உள்ள இளைஞர்கள் பண்ணித்தமிழ் பேசுறாங்கன்னு சொல்லிருக்காருங்க... அவருக்கு ஒரு வணக்கம் பண்ணிடலாம்... )

அந்த சாட்ல,

“என்னங்க எல்லாபேருடைய வாழ்க்கையும் கடினமாத்தான் ஓடுது”

“இல்ல சுகுமார்ஜி... இந்த வாழ்க்கையே நீங்க தேர்ந்தெடுத்தது தான்” அப்படின்னு (ஆப்படி) சொன்னாருங்க... பட்டாருன்னு மூஞ்சில குத்தின மாதிரி தோணுச்சு எனக்கு... அதை மனசில வச்சிட்டு, சாட் முடிச்ச பிறகு நானே யோசித்து பார்த்தேன்.

எவனொ என்ன பிறக்கவச்சானு நினைச்சிட்டு இருந்தது ஒரு காலம்... பாவத்தால் பிறப்பு நிகழ்ந்ததுன்னு இருந்தது ஒரு காலம். பாவம் தீர்க்க பிறந்தேன்றது ஒரு காலம்... இதென்னடா புதுசா இருக்கு? நானே தேர்ந்தெடுத்தேனா? அடடா... தெரிஞ்சிருந்தா எதாவது ஏலியனுக்கு பிறந்திருக்கலாமே? இல்லேனா பில்கேட்சுக்கு மகனாவாவது,  மகளாவாவது பிறந்திருப்பேனே? :(

என் நண்பர் சொல்லுவாரு அவரு டென்சனான நேரத்தில... “எல்லாம் எங்கப்பன் வே... அவுத்த நேரம்னு...” அவருக்கு நான் பதில் சொல்லுவேன்...  “நீதானய்யா... முட்டைக்குள்ள புகுந்தே... அதனால தான்  நீ பிறந்தே... தப்பு உன் மேலதான்... அதோட அத்தனை லட்சங்களையும் மீறி நீ பிறந்தது சாதனைதான்... நீ வெற்றியாளனையா” என்று விளக்கமளிப்பேன்... அப்படி பதில் தரும் எனக்கே “இந்த வாழ்க்கையே நீங்க தேர்ந்தெடுத்தது தான்” என்கிற பதில் மண்டை குடைச்சலாக இருந்தது...

யோசிக்கிறேன், யோசிக்கிறேன், யோசித்துக்கொண்டே இருக்கிறேன்... தலைவேற பாரமா இருக்கு... ஆனா... பதில் இன்னும் கிடைத்தபாடில்லை... நல்ல பதில் கிடைச்சா அப்புறம் பகிர்ந்துகிறேன்ங்க...

நீங்களும் டைம் கிடைச்சா யோசிச்சிப்பாருங்க... பிளிங் ஆச்சுன்னா நம்ம கவிதை07 ல ஷேர் பண்ணுங்க... இல்லேனா பகிர்ந்துக்கங்க... :)