Sunday, January 16, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

இந்த தலைப்புல லக்னம்,தனபாவம்,சகோதர பாவம் வரை பார்த்தோம். இப்ப நாலாவது இடமான சுக பாவத்தை பார்ப்போம். சுகம்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லிங்கோ. தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம் எல்லாத்தையும் காட்டற இடம் இது. இதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.


தாய்:
ஒரு பையன் வளர்ந்த பிறவு  கண்ட குட்டிகள் பின்னாடி அலையறான். எதுக்கு? அவன் தன் தாயை தேடறான். அவன் இந்த பூமிக்கு வந்ததும் பார்த்த முதல் பெண் தாய். அவள் தான் இவனுக்கு  எல்லாமா இருந்தா. இவன் கொஞ்சம்போல வளர்ந்ததும் "தத்.. எருமை மாதிரி மேல விழாதடா"ங்கறாள் . இவன் உள்ளுக்குள்ள சுருங்கிப்போறான். அம்மா சுகத்தை அவன் அடி மனசு தேடுது.அந்த தேடல் தான் இவனோட அலையலுக்கு காரணம்.

தாய்வழி உறவு:
சாதாரணமா அப்பா வழி  உறவுக்காரவுக (சித்தப்பா,பெரியப்பா) அப்பாவை போட்டியா நினைச்சிருப்பாய்ங்க. அப்பாவோட நிழலான உங்களையும் போட்டியா நினைக்க வாய்ப்பிருக்கு அ தங்கள் வாரிசுகளோட நிலையோட உங்க நிலையை கம்பேர் பண்ணிக்கவும் வாய்ப்பிருக்கு. ( ஆனால் ஒன்னு ஒம்பதாமிடம் பர்ஃபெக்டா இருந்தா இந்த பிரச்சினைகள் வராது தலை ..டோன்ட் ஒர்ரி)

ஆனா சித்தி,பெரியம்மா  கேசெல்லாம் இப்படி இல்லை. உங்க மேல பாசத்தை பொழிய வாய்ப்பிருக்கு. சொத்து தகராறு ,பங்கு தகராறுல்லாம் இருக்காதில்லையா அதுனால.

வீடு:
கண்ணாலத்துக்கு பையனை தேடும்போது சனம் விஜாரிக்கிற மொத பாய்ண்டு சொந்த வீடு இருக்குதா? சொந்த வீடுங்கறது பலவகையில வசதி. கெட்டாலும் வசதிதான். வெறும் தண்ணிய குடிச்சுட்டு படுத்துக்கிடக்கலாம். எடுப்பு சோறு கொண்டாந்து திங்கலாம். நேரம் நல்லாருந்து க்ளிக் ஆனாலும் சடை நாய் வளர்க்க தடை இத்யாதி லொள்ளெல்லாம் இருக்காதுல்ல. வேலைக்கு ஆப்பு வந்துருச்சுன்னா வீட்டோட தொழில் செய்யலாம். இதெல்லாம் தாம்பத்ய வாழ்வுக்கு ப்ளஸ் பாய்ண்டுதானே.

வாகனம்:
"பையன் கார் மெய்ன்டெய்ன் பண்றான் தெரியுமில்லை"ங்கற பாய்ண்டு ப்ளஸ்தானே. மேலும் விக்கிற விலைவாசில (முக்கியமா பெட்ரோல்,டீசல் ) வாகனம் வச்சிருக்கிறவனுக்கு பக்காவா ப்ளான் பண்ற கப்பாசிட்டி வந்துரும். (ரூட் மேப்புங்கண்ணா) மேலும் வாகனத்தை மெயின்டெய்ன்பண்றது பொஞ்சாதிய மெயின்டெய்ன் பண்ற மாதிரி. வாகனத்தை பக்காவா மெயின்டெய்ன் பண்றவன் பொஞ்சாதியை கூட கரீட்டா வச்சிக்குவான்னு ஒரு கணக்கு. வாகனம் காலம்,தூரத்தை செயிக்க உதவற சமாசாரம்.சிட்டி பஸ்ல நாறிப்போயி வர்ரவன் பொஞ்சாதி மேல எரிஞ்சுதான் விழுவான். மேலும் பந்த்,ஊர்வலம் இத்யாதி காரணமா எப்ப வீடு வந்து சேருவான்னே தெரியாது. இந்த நிலைல கில்மாவுல எங்கருந்து புகுந்து விளையாடறது?

கல்வி:
இதைப்பத்தியும் சொல்லனுமா என்ன? படிச்சா (சரியான படிப்பா -  வெறுமனே கதை பண்ணாம - நெஜமாலுமே படிச்சிருந்தா) வேலை நிச்சயம்.கடந்த பத்துவருஷத்துல சிவில் இஞ்சினீரிங் பண்ணவுகள்ள 80% டுபாகூருங்கன்னு ஒரு கணக்கு.  வேலை கிடைச்சா பைசா புரளும், மல்லிகை பூ,அல்வாவுக்கெல்லாம் சில்லறை வேணும்ல

இதயம்:
இதான் பம்பிங் ஸ்டேசன். ரத்தத்தை ஒழுங்கா பம்ப் பண்ண இதயம் வலிமையா இருக்கனும். அப்பத்தான் சவுண்ட் பாடி. அப்பத்தான் சவுண்ட் மைண்ட்.அப்பத்தான் கில்மாவோ கில்மா. மேலும் இது ஸ்தூலமான இதயத்தை மட்டும் காட்டலிங்கண்ணா உங்க மனசையும் காட்டுது.பொஞ்சாதிக்கு பெட்ல மட்டும் இடம் கொடுத்தா அது விபச்சாரம். மனசுலயும் இடம் கொடுத்தாதான் அது சம்சாரம். அப்பத்தான் கில்மா மீட்டர் எகிறும். ஆன்மீகத்தையும் டச் பண்ணிரலாம்.

சரிங்கண்ணா. இந்த இடத்துல எந்த கிரகமிருந்தா நல்லது , எது இருந்தா நல்லதில்லைனு ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.

இது கேந்திரஸ்தானம். இங்கன கோணஸ்தானாதிபதிகள் இருந்தா ஸ்ரேஷ்டம். கேந்திராதிபதியே இருந்தாலும் நாட் பேட். 6,8,12 அதிபதிகள் இருந்தா நாசம். மத்தவுக இருந்தாலும் பரவால்லை.

கேந்திரஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 4,7,10 ஆமிடங்கள் தான் கேந்திர ஸ்தானங்கள்.

கோண ஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 5,9 ஆவதா வர்ர இடங்கள் தான் கோண  ஸ்தானங்கள்.

சுபர்கள் இருந்தா ஸ்ரேஷ்டம். பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு ஒரு விதி. இதென்னடா அநியாயம் பாவகிரகமிருந்தா மேற்சொன்ன  தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம்லாம் அடி வாங்கிருமேனு பதறாதிங்க.

மேற்சொன்ன எல்லா ஐட்டமும் அடிவாங்கிராதுங்கோ. எதுனா ஒன்னு ரெண்டு பிடுங்கிக்கும் தட்ஸால்.  நான் ஏற்கெனவே சொன்னாப்ல 4ங்கறது சுகஸ்தானம். சுகங்கள் வளர்ச்சியை தடுக்கும்,ஆயுளை குறைக்கும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் டேஞ்சர் ரெம்ப சுகம்மா வாழ்ந்துட்டா அப்பால கஷ்டம் வரும்போது நாறிருவம்.

மேலும் அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி மேற்படி சுகங்கள்ள ஒன்னு ரெண்டு பத்தாக்குறையா இருந்தாதான் வளரனும்,சம்பாதிக்கனும்ங்கற துடிப்பே வரும். ரெம்ப துடிச்சா இதய நோய் வந்துரும் ( 4: இதயத்தை காட்டுமிடம்).

சரிங்கண்ணா அடுத்த பதிவுல கில்மாவுல விளையாடனும்னா புத்தி,புத்திர ,பூர்வ புண்ணியஸ்தானமா அஞ்சாவதுஇடம் எப்படி இருக்கனும்னு பார்ப்போம்.