பத்திரிகாசிரியர்களுக்கு 10 கேள்விகள் மீதான தமிழ் மலரின் மறுமொழிக்கு எனது விளக்கம்
தமிழ் மலர் அவர்களே,
தங்கள் மறுமொழியிலான அனேக அம்சங்களை மறுக்கப்போகிறேன்.தயவு செய்து தவறாக எண்ணிவிடாதீர்கள். என் உத்தேசம் : பத்திரிக்கைகள் காசு கொடுத்து பத்திரிக்கையை வாங்கும் வாசகனுக்கு உண்மையாக நடக்கவேண்டும் என்பதே. இதனால சில நூறு பத்திரிக்கைகள் மூடப்பட்டாலும் சரி சில ஆயிரம் பத்திரிக்கையாளர்கள் ரோட்டுக்கு வந்தாலும் சரி.
//விளம்பரம் தருபவர்களுக்கு செய்தியிடுவது தவறில்லை. ஆனால் அது செய்திக்கான தகுதியுடையதாக இருக்க வேண்டும்//
செய்தி வெளியிடுவது பத்திரிக்கையின் கடமை. விளம்பரம் கொடுத்தாத்தான் செய்திங்கறது கயவாளித்தனம். மேலும் காசு செலவழித்து. விளம்பரம் கொடுத்தேனும் செய்தி வந்தாகனும்னு நினைக்கிறவன் நிச்சயமா நாணயமானவனா இருக்கமுடியாது.
இதுல செய்திக்கான தகுதி இருந்தா பரவால்லைங்கறது உங்க ஸ்டாண்ட். தகுதியிருந்தா செய்தியாவே போடுங்கறது என் ஸ்டாண்ட். விளம்பரம் கொடுத்தா தான் செய்திங்கறது அவிக ஸ்டாண்டு
//விளம்பரத்தையே செய்தியாக தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. செய்திக்கும் விளம்பரத்துக்கும் போதிய வேறுபாடுகள் வேண்டும்.//
என்னபாஸ் ! வேறுபாடு இப்ப இல்லைங்கறிங்களா? இந்த பன்னாடைங்க என்னதான் விளம்பரத்தை செய்திவடிவத்துல தந்தாலும் உங்களாட்டம் என்னாட்டம் பார்ட்டிங்க ஸ்மெல் பண்ணிர்ரோமே.
இந்த கப்பாசிட்டி சாதாரண வாசகனுக்கு இருக்கும்னு எதிர்பார்க்க முடியாதே
//இன்றைய சூழலில் அச்சுஊடகத்துக்கு தான் மிக அதிக செலவும் மனதவளமும் தேவைப்படுகிறது. //
இந்த மேட்டர்ல நான் டிஃபர் ஆறேன். இன்னைக்கு உள்ள தகவல் தொழில் நுட்பம் காரணமா செலவு பல மடங்கு குறைஞ்சிருக்கு.
//நான் பத்திரிக்கை துறையின் அனைத்து கட்டமைப்புகளிலும் சென்று ஆய்வுசெய்துள்ளேன். ஒரு நாளிதழை வாசகர் கையில் கொண்டு சேர்ப்பது வரை உள்ள பணிகளில் இருக்கும் செலவையும் மனித உழைப்பையும் சாதரணமானதாக கருதிவிட முடியாது.//
அது சரிங்க பாஸ் ! கள்ள நோட்டை அடிக்கிறவன் கம்மியா உழைக்கிறாங்கறிங்களா? அப்ப அதையும் விட்டுரனுமா என்ன?
//ஒரு காலத்தில் பத்திரிக்கைகளுக்கு வரும் வருமானம் விற்பனையை சார்ந்து இருந்தது. ஆனால் இன்று விற்பனை வருமானம் கேள்விகுறியில் உள்ளது. விளம்பரம் தான் முக்கிய வருமானம்.//
கரீட்டு பாஸ்! வாசகன் டிவி பக்கம்,கணிணி பக்கம் நகர்ந்துட்டான். அவனை நழுவவிட்டது ஆரு.. ஆசிரியத்திலகங்கள்தானே. சோறு கிடைக்கலைன்னு வேற "எதையோ"திங்கனுமா?
மறுபடி விற்பனை வருமானத்தை கூட்ட பார்க்கனுமே தவிர காசே குறின்னு விளம்பரத்தை நம்பி பத்திரிக்கை நடத்தறது வேசித்தனமில்லையா?
//இந்த ஒரு வருமானத்தை வைத்து தான் பத்திரிக்கையில் உள்ள 45 துறைகளுக்கும் சம்பளம் செலவினங்கள் செய்யவேண்டி உள்ளது. //
பத்திரிக்கை நடத்தலைன்னா தூக்குல போட்டுருவம்னு அரசாங்கம் சொல்லுதா? ஊத்தி மூடிட்டு போகவேண்டியதுதானே
//முன்னனி பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றி தற்போதும் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராகவும் உள்ள உங்களுக்கு இது தெரியாமல் இல்லை.//
எல்லாம் தெரிஞ்சு போனதாலதானே பாஸ் நிர்வாண உண்மைகள் வலைப்பூ நடத்திக்கிட்டிருக்கேன்.
//பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை நான் கண்டிக்கிறேன். வியாபார யுக்தியில் செய்திக்கு பணம் வாங்குவதை கண்டிக்கிறேன்.//
கண்டிக்கிறதென்ன அரசே தண்டிக்கனும். இவிக என்னமோ சர்வீஸ் பண்ணி கிழிக்கிறாய்ங்கனு அரசாங்கம் மக்கள் வரிப்பணத்துலருந்து என்னென்னமோ சலுகையெல்லாம் கொடுக்குதே. அதனால அரசாங்கத்துக்கு இவிக மேல நடவடிக்கை எடுக்கற தார்மீக உரிமை இருக்கு.
//மற்றபடியுள்ள விளம்பர யுக்திகள் கட்டாயம் தேவை.//
விளம்பர யுக்தின்னா... கிரைண்டர் பரிசு, செல்ஃபோன் பரிசு .. இந்த ரேஞ்சுல போனா பலான நடிகையோட ஒரு நைட்டுன்னு கூட அறிவிக்க வேண்டி வந்துரும். இந்த யுக்தி ஓவரா போயிட்டதால சில வருஷங்கள் முன்னாடி ஜட்ஜுங்க தீபாவளி மலர்களுக்கு தடை போட்டாய்ங்களே ஞா இருக்கா?
//ஆண்மை குறைவு, எயிட்ஸ் போன்ற விளம்பரங்களுக்கு பத்திரிக்கைகள் எடுத்துள்ள நிலைபாட்டில் தவறு இருப்பதாக தெரியவில்லை.//
இல்லிங்க பாஸ் இதெல்லாம் ஐ.பி.சி படியே குற்றம்தான். உங்களுக்கு தவறுன்னு தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் எஸ்.பி லெவல்லயே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு கிழிச்சுரலாம். வழக்கு பதியலாம் .செக்சன் தேவைன்னா சொல்லுங்க அதையும் கோட் பண்றேன்.
//அதுவும் சமுதாய தேவையாக தானே இருக்கிறது.//
சமுதாயத்துக்கு என்னென்ன கருமாந்திரமோ தேவையா இருக்கு .. அதை கூட தந்துரலாமா என்ன?
//அலோபதியில் தோற்றவர்கள் தான் அதுபோன்ற விளம்பரங்களை நாடி செல்கின்றனர்.//
//எந்த டாக்டருமே (உண்மையான டாக்டர் உட்பட) விளம்பரம் தரக்கூடாதுன்னு மெடிக்கல் கவுன்சில் சொல்லுது. இதுல டாக்டரே அல்லாத டாக்டர்கள் மேஜிக் க்யூர் பத்தி விளம்பரம் தர்ரதும் .. பத்திரிக்கைகள் வெளியிடறதும் அக்மார்க் குற்றம் பாஸ்
//அவர்களின் கடைசி நம்பிக்கை அது. அதில் பயனடைந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.//
விஷம் கூட கடைசி நம்பிக்கையா இருக்கும். அதுக்காக விஷத்தை விக்கமுடியுமா என்ன?