Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Friday, April 18, 2014

2020 ல் ஒரு பேட்டி : ஜஸ்ட் ..ஒரு கற்பனை தான்

" இந்தியாவின் கோடானு கோடி மக்களால் நேரிடையாக இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.ஆனாலும் உங்கள் பேச்சில் அந்த  ஆண்மை, முழக்கம் இல்லையே ஏன்?"

‘ உண்மையில் எனக்குள் பெண்தன்மை அதிகம். இதை ஓஷோ ஏற்புத்தன்மை என்பார். சரித்திரத்தின் உன்னத அத்தியாயங்களை, உன்னத மனிதர்களை நான் ஏற்றுக்கொண்டேன். அவர்களைப் போல் வாழ கனவு கண்டேன். என்னில் அதற்கான தகுதிகள் இருந்ததில்லை.இப்போதும் இல்லை "

‘பின்னே இந்த நாட்டை கடந்த 6 மாதங்களாக சிறப்பாக வழிநடத்தி வருகிறீர்களே. இது எப்படி சாத்தியமானது.’

‘இதில் என் பங்கு ஏதுமில்லை. இந்த நாடு கேபிள் இணைப்பு கொண்ட தரமான டி.வி. போல் இருந்தது. ஓடிக் கொண்டிருந்த சேனல்தான் சரியில்லை. ரிமோட்டில் பேட்டரி தீர்ந்து போயிருந்தது. நான் பேட்டரி மாற்றி சேனலை மாற்றினேன். அவ்வளவுதான். இதற்கு சுஜாதா பாஷையில் சொன்னால் கடிகாரத்துக்கு இருக்கு மூளையே போதுமானது.

மே. 2020-ல் நிகழ்ந்த அழிவு சம்பவங்கள் ஏராளமான மனித உயிர்களை பலி கொண்டிருந்தாலும் நாட்டின் ஆத்மாவை திருப்பிக் கொடுத்துவிட்டது. மக்கள் மனம் மாறியிருந்தது. இல்லையென்றால் அரசு இயந்திரத்தை, அரசியல் சாசனத்தை, இந்தியன் பீனல் கோடை நான் திருத்தியமைத்த வேகத்திற்கு புரட்சி வெடித்து இந்தியாவே சுடுகாடாகியிருக்கக்கூடும்.

‘நீங்கள் இந்த நாட்டை ஆளும் நாள் வரும் என்று என்றாவது நினைத்ததுண்டா?’

‘1986 முதல் நான் கண்ட கனவே இதுதான். ஆனால் இந்த வாய்ப்பு குறைந்தபட்சம் ஐந்து (அ) பத்து வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால் 2020 அழிவின் விளைவுகளை பாதியாவது குறைத்திருக்க முடியும். தமிழ் சினிமாவில் போலீஸ் போல் கடைசி காட்சியில் என்ட்ரி கொடுத்திருக்கிறேன்.’

‘நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள். இதற்கான ஆரம்பங்கள் உங்கள் இளமையில் தலை காட்டினவா?’

‘நாணயமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை. ஆனால் என் தாயின் தியாகம், தந்தையின் எளிமை ஓரளவுக்கு என் உயர்வுக்கு காரணம் என்று சொல்லலாம்.’

‘எந்த வயதில் உங்களின் தலைமை பண்மை உணர்ந்தீர்கள்?’

‘தலைமைப் பண்பு என்னில் இருந்ததேயில்லை. பட்டவர்த்தனமாக சொன்னால் நான் ஒரு எஸ்கேப்பிஸ்ட். ஜஸ்ட் ஒரு மேஜிசியன் மாதிரி. போகிற போக்கில் ஏதோ தோன்றும். அதை வெளியிடுவேன். அதை பின்பற்றி எவரேனும் வெற்றியடைந்தால் அதற்கு சொந்தம் கொண்டாடுவேன். தோல்வியுற்றால் என் நிலைப்பாடு மொத்தமாக மாறிவிடும்.

மேலும் நான் ஒரு கவிஞன்.எனக்கு பாட்டுடை தலைவன் தேவை.தலைவர்களாய் இருந்தவர்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட -மிச்சமிருந்தவர்கள் எல்லாம் நீர்த்துவிட நானே தலைவனாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ராணுவத்தின் 60 சதவீதத்தை வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளேன். 70 % நிதியை விவசாயத்துக்கு திருப்பியுள்ளேன். முடிவெடுக்கும் பணியை இயந்திரங்களும் முடிவை அமல்படுத்தும் பணியை மனிதர்களும் செய்யும்படி மாற்றினேன்.

Wednesday, October 19, 2011

ரஜினி காந்த் பரபரப்பு பேட்டி



கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்துல திடீர் உடல் நல பாதிப்பால் மீடியா வெளிச்சத்துல இருந்து ஒதுங்கி இருந்த ரஜினி நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு அஃபிஷியலா தானே நிருபர்களை சந்திச்சு பேட்டி கொடுக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம்.

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி (கீழ்) வந்த ரஜினி , அங்கே காத்திருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியில் ரஜினி சொன்னதாவது:

என் ஹெல்த் நல்லாவே இருக்கு. ரசிகர்களின் பூஜைகளாலதான் நான் மீண்டு வந்தேன். ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்" ராவண் " படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ( ஆருப்பா அது ரஜினி நடிக்கவே இல்லைன்னு பதிவு போட்டது ) ரெண்டு மூனு மாசத்துல ராணா ஷூட்டிங் ஆரம்பிக்கும். ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் வந்திருந்தார் ரஜினி. இரவு 7.30 க்கு ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்

ஹி ஹி.. இப்படித்தாண்ணே சனம் துண்டு துக்கடா பதிவு போட்டு ஹிட்ஸை அள்றாய்ங்க. ( பேட்டி மட்டும் நெஜம் தேன்)

கொசுறு:

தமிழ்மணம் பெரியார் வழிக்கு வந்துருச்சு. சோதிடப்பதிவுகளையெல்லாம் நீக்கப்போறாய்ங்களாம். ( நம்முதை நாமே நீக்க சொன்ன பிற்காடு நீக்கியிருக்காய்ங்க. -ஸ் அப்பாடா மரியாதை பிழைச்சது) அடுத்தது ஆன்மீக பதிவா? சொல் தமிழ்மணமே..!

Sunday, August 14, 2011

ரஜினியை சந்தித்தேன்


2009 மே மாசத்துல ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சதுலருந்து அவுட் டோர் கன்சல்டன்சிக்கு போறதே கிடையாது. இருந்தாலும் நம்ம கெட்ட நேரம் ஒரு மெட்ராஸ் பார்ட்டி நை நைன்னு நச்சரிச்சுட்டே இருக்கவே தெரியாத்தனமா புறப்பட்டோம். அதிகாலை பாலவினாயகரை பிடிச்சு கோயம்பேடுல இறங்கி நண்பருக்கு ஃபோன் போட்டோம்.

நண்பர் நம்மை பிக் அப் பண்ண வழக்கமா டூவீலர்ல தான் வருவார். நேத்தென்னவோ பந்தாவா இன்னோவால வந்தார். கார் சென்னை சாலைகளில் பறக்க ஆரம்பிச்சது. நாமும் வழக்கப்படி பராக்கு பார்த்துக்கிட்டே கிடந்தோம்.

படக்குனு கார் நின்னது.ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம்னு ஒரு போர்டு தெரிஞ்சதும்..திகீர்னுச்சு " "என்னப்பா இது ரஜினியோட கல்யாண மண்டபம் மாதிரி இருக்கு"ன்னு கேட்டம். நண்பர் சிரிச்சிக்கிட்டே நீங்க சந்திக்கப்போறது ரஜினி சாரை தான்னு சொன்னார்.

' இதென்னடா வம்பா போச்சு. நாம கேள்விபட்டது நிஜமா இருந்தா ஆர்.எம்.வீ இருந்தப்ப எதுனா அட்வென்சர் பண்ணிட்டு அவரோட ஆஃபீஸ்ல போய் உட்கார்ந்துக்குவாரு. இப்பம் ஆர்.எம்.வீயே பிரச்சினை வந்தா எந்த ஆஃபீஸுக்கு போறதுன்னு தெரியாம கிடப்பாரு. எந்த தைரியத்துல நம்மை கூப்பிட வச்சிருப்பான் மன்சன்."ன்னு சிந்தனைகள் ஓட நண்பரை பின் தொடர்ந்தோம். ஓடினா துரத்துவாய்ங்க.துரத்தினா பிடிச்சுருவாய்ங்க. ச்சொம்மா ஆயாசம் தேன் மிச்சம்.

ரஜினி ஒரு சோஃபால வெள்ளை குர்தாவும் பட்டை கொட்டை இத்யாதி அலங்காரங்களோட இருக்க நண்பர் நம்மை அறிமுகம் செய்தார்.

அதுக்கப்பாறம் நடந்த உரையாடல் இதோ :

"வணக்கம் .. வாங்க இவர் தானே பிரபல ப்ளாகர் முருகேசன் "

"என்ன சார் அமிதாப் மாதிரி ப்ளாக் ஆரம்பிக்கப்போறிங்களா? இந்த மேட்டர்ல தமிழ் நாட்டின் கிங் மேக்கர் ச்சோவை கன்சல்ட் பண்ணா அவரு தன்னோட ப்ளாக் உலக ஏஜெண்டை அறிமுகப்படுத்தி வைப்பாரே"

" நோ நோ ப்ளாக் எல்லாம் எழுத போறதில்லை. உங்களை உங்களுக்காகவே சந்திக்கத்தான் இன்வைட் பண்ணேன் "

" நல்ல வேளை .. நீங்க ப்ளாக் எழுதினா ஹிட்ஸ் என்னவோ பிச்சுக்கும். அப்பாறம் ரசிகர்களுக்கு விருந்து வச்சே தீரனும். இல்லின்னா வண்டை வண்டையா வண்டி வண்டியா கமெண்ட் போடுவாய்ங்க. அதுலயும் ஜா.ரான்னு ஒருத்தர் இருக்காரு .இதுல அவர் ஸ்பெஷலிஸ்ட்"

" ஓ .. நோ நோ .. "

"நல்லது. இல்லைன்னா எம்.கே ஸ்டாலின், ராஜா டிஎம்கே சைட்ஸ் மாதிரி உங்களுதும் போன்டியாகியிருக்கும்"

"அதையெல்லாம் விடுங்க முருகேசன் ! நெறய விஷயங்களை பத்தி எழுதறிங்க..நல்லா இருக்கு. நம்மை பத்தியும் எழுதியிருக்கிங்க நல்லா இருக்கு "

"நன்றி . இங்கே ஆஃபீஸ் ரூம் எங்கே இருக்கு?"

"ஹா ஹா ஹா ஹா .. சிவாஜி படத்தை வச்சு கிண்டலடிக்கிறிங்க"

"இல்லை சார்.. யதார்த்த வாழ்க்கையில நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்திக்கத்தானே உங்க சினிமாவுல எல்லாம் இந்த மாதிரி காட்சியெல்லாம் வைக்கிறிங்க .அதுவாச்சும் பரவால்லை. உங்களை நீங்களேதிரையில வர்ர ரஜினியா நினைச்சு ஏமாத்திக்கிறிங்களே "

"நோ நோ நெவர்.. சினிமா என் தொழில்.தட்ஸால்"

"அ சொம்மா விடாதிங்க சார். படையப்பாவுல ரம்யா கிருஷ்ணனையா கலாய்ச்சிங்க. அம்மாவைத்தானே"

" ஒங்களுக்கு நல்ல இமேஜினேஷன் இருக்கு ..வெரி குட்"

"ஒங்களுக்கு நல்ல இமேஜ் இருக்கு வெரி பேட்'

"ஏன் ஏன் ஏன்?"

"உங்க இமேஜுக்கு ஏத்த ஸ்டாண்ட் எடுக்கமாட்டேங்கறிங்க - இமேஜுக்கு ஏத்த செயல்பாடு இல்லை"

' நான் சாதாரண மனுஷன். என் மேல ஏன் உங்க கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸையெல்லாம் இம்போஸ் பண்ரிங்க"

' இல்லிங்க சார்.. சிவாஜிராவ் மேல ரஜினிங்கற பிக்சர் டபுள் இம்போஸ் ஆயிருச்சு. அதுல எது நீங்கங்கற மேட்டர்ல நீங்களே குழப்பத்துல இருக்கிங்க"

"நீங்க தெளிவா இருக்கிங்களா?"

" நல்ல வேளையா அவாள் எனக்கு பெண் கொடுக்கிற அளவுக்கு -என்னை சுத்தி சேர்ந்து என்னை குழப்பற அளவுக்கு இன்னம் பெரிய ஆளாகலை "

"எல்லா பெரிய மன்சனும் குழப்பத்துல தான் இருக்காங்கறிங்களா?"

"இல்லையா பின்னே.. அன்னா ஹசாரே மேல ஊழல் புகார் சொல்றாய்ங்கன்னா காங்கிரஸ் குழப்பத்துல இருக்காய்ங்கன்னு அர்த்தம் .அழகிரியை இன்னம் தூக்கலின்னா அம்மா குழப்பத்துல இருக்காய்ங்கன்னு அர்த்தம்"

"ஹோல்டான்.. அரசியல் வேணாமே ப்ளீஸ்"

"இதை நீங்க பாட்ஷா வெற்றி விழாவுலயே சொல்லியிருந்தா பெஸ்ட். "

" கதம் கதம் "

"அது சரி நீங்க உசுப்பேத்தினதுல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் க்கதம் ஆயிட்டாய்ங்களே"

"த பாருங்க முருகேசன் நம்ம ராணாவுல"

"அதான் பேரை மாத்திட்டிங்களாமே.."

" சரி நம்ம படத்துல உங்களை ஒரு சின்ன ரோல் பண்ண வைக்கனும்னு "

' தோடா..தேர்தல் பிரச்சாரத்துல உங்களை திட்டித்தீர்த்த ஆச்சிக்கு வாய்ப்பு கொடுத்து அவிகளை மொக்கை பண்ணாப்ல . நீங்க உத்தமர். உங்களை திட்டினவுகளுக்கு கூட வாய்ப்பு கொடுப்பிங்கன்னு எஸ்டாப்ளிஷ் பண்ணிக்க நான் தான் கிடைச்சேனா.. ராமதாஸ் பாவம் .. மண்டை காஞ்சு கிடக்காரு.அன்பு மணி நல்ல ஹேண்ட்சம் பர்சன் அப்பா -பையனாவே வாய்ப்பு கொடுங்க வில்லனா கொடுத்தா தூள் பண்ணுவாய்ங்க"

"நீங்க ஏன் கடந்த காலத்தை பத்தியே பேசறிங்க.. ?"

" கடந்த காலம் நெகட்டிவ் . வருங்காலம் பாசிட்டிவ். நெகட்டிவை வச்சுத்தானே பாசிட்டிவ் போட முடியும்"

" அப்ப உங்களுக்கு வாய்ப்பு வேணாம்"

" ஏன் சார் உங்க டைம் பாஸுக்கும் இமேஜ் பூஸ்டிங்குக்கும் நாந்தான் கிடைச்சேனா? அதான் பேரன் பேத்தி எல்லாம் எடுத்து வச்சிருக்கிங்களே .அவங்களோட பண்ணுங்க சார் டைம் பாஸு ஆளை விடுங்க "

" நல்லா யோசிச்சு சொல்லுங்க அவசரமில்லை"

"குழப்பத்துக்கு ஆரம்பமே சிந்தனைதான். நாம வைக்கிற ஒவ்வொரு அடி மேலயும் மரணத்தோட அடிகள் பதிஞ்சுக்கிட்டே இருக்கு. இதுல அவசரமில்லைன்னா எப்டி? ஊர்ல இருந்திருந்தா ரெண்டு ஜாதகம் பைசல் பண்ணியிருப்பேன்"

" சரி சினிமாவை விட்டுருவம் .ப்ளாகை பத்தி சொல்லுங்க"

'சுகாசினி அம்மாவ கேளுங்க. ஆனந்த விகடன் ஆசிரியரை கேளுங்க. விவரமா சொல்வாய்ங்க. நமக்கு தலைக்கு மேல வேலை இருக்கு"

"என்ன ஹேர் கட் பண்ணனுமா?"

"என்ன சார் ..மண்டபத்துலயே சலூன் கூட வச்சிட்டிங்களா"

"ரொம்ப அக்ரசிவா பேசறிங்க"

"எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.. அப்பாறம் உங்களை விட விவரமா ஜல்லியடிக்க ஆரம்பிச்சுருவன்"

"ஏன் ஏன் ஏன்"

"பைசா சேர்ந்துரும்ல .. ஆமா சனம் மாற்றத்தை விரும்பறாய்ங்கன்னு வசனம் விட்டிங்க. நீங்களே போயஸ் கார்டனை விட்டு மாறிடப்போறதா பேசிக்கறாய்ங்க"

ரஜினி "இவரை நம்ம ஆஃபீஸ் ரூமுக்கு கூட்டிட்டு போங்கப்பா"ன்னதும் பதறியடிச்சுக்கிட்டு ஒடப்பார்க்கிறேன். ஓடவே முடியலை.

அப்பாறம் பார்த்தா படுக்கையில கிடக்கோம். என்ன பதிவு போடலாம்னு ரோசிச்சிக்கிட்டே தூங்கிட்டம் போல.ஹி ஹி.........






Saturday, October 30, 2010

விகடன் நிருபர் என்னை பேட்டி கண்டாரோச்!

என்னங்கடா இது நம்ம முருகேசனோட கொசுத்தொல்லை தாங்கமுடியாம விகடன்லருந்து நிருபரை அனுப்பிட்டாய்ங்களானு நினைச்சு இந்த பதிவை காண (அதாங்க படிக்க) வந்த உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரமாட்டேன். விகடன் நிறுவனம் நிருபரை என்னிடம் அனுப்பியது நிஜம்.அவர் பேட்டிகண்டது நிஜம். அதைப்பற்றித்தான் இந்தபதிவே

பீடிக்கட்டு,சிகரட் பாயிட்டு மேல வெளியிடறமாதிரி தமிழ் பத்திரிக்கைகள் மேலயும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டியது எத்தனை அவசியம்னு இந்த பதிவு சுட்டிக்காட்டும் .

பதிவுக்கு போகலாமா அதாங்க பதிவுக்கான மேட்டருக்கு ..

(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )

எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி,எங்கே வைத்து  கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் வெளியிடுவாய்ங்க போல .

தற்போது 43 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போ விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுக்கிறதில்லை.  அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்னுதான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?

அய்யய்யோ இம்சை தாங்கமுடியலை. மேட்டருக்கு வாங்க முருகேசன் .. என்ன பேட்டி எதைப்பத்தி பேட்டி இதானே உங்க ஃபீலிங் வந்தே உட்டேன்

என் ப்ளாகை படிப்பவர்களுக்கு இந்தியாவை வல்லரசாக்க நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம்.

இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. ஆ..மா நாட்டுக்கு ரெம்ப  தேவைன்னுட்டு  கிடப்புல போட்டுட்டாய்ங்க

நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன்.

இந்த சமயத்தில் அன்றைய என் பொருளாதார நிலைமையையும் சொல்லிரனும். அந்த கம்பெனி கேசட்டோட விலை 31 ரூபானு ஞா. ஏதோ பூர்வீக வீட்டை வித்து லட்ச ரூபா காசு வந்த தைரியத்துல ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ நாடறிய செய்ய என்னென்னமோ பண்ணி தொலைச்சுட்டு சோத்துக்கே ததிங்கணத்தோம் போடற நேரம் அது.

மறுபடி ஒரு வாக்மேன் வாங்கி மறுபடி ஒரு கம்பெனி கேசட் வாங்கி பதிவு பண்ணி இன்னொரு பத்திரிக்கைக்கு அனுப்பற அளவுக்கு வசதியில்லாத ஒரே காரணத்தால கேசட்டை திருப்பி அனுப்பசொல்லி எம்.ஓ அனுப்பினேன்.

ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லை. இவிக அரசு இயந்திரத்தோட மெத்தனத்தை கிழிக்கிறாய்ங்க. கடுப்பாகி  காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது அந்த நாள்ள  ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்கள்ள  பட்டிருக்கு.

உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை.

நான் காந்தி தாத்தா  டைப்ல  (மொக்கை பென்சில் ஞா இருக்கா) என் கேசட்டை எனக்கு கொடுக்கிற வழியப்பாருங்கப்பானு பேசிட்டிருந்தேன்.

வெளிய போய் யாரோடவோ ஃபோன்ல பேசினாரு. அப்புறம் பந்தாவாய் ஆப்பரேஷன் இந்தியா 2000  பத்தி பேட்டியெல்லாம் எடுத்தார் .

அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! விகடன் க்ரூப் பத்திரிக்கைகளுக்கு தலா ஒரு இதழோட விற்பனை அதிகரிச்சிருக்கும்.

நான் தான் மடையன் மாதிரி வாங்கி வாங்கி பார்த்துக்கிட்டிருந்தேனே.. வருசம் 1999ங்கோ. அப்பாறம் எப்பனா என் பேட்டியை  கேப் ஃபில்லிங்ல போட்டு விட்டுட்டாய்ங்களா தெரியாது.

உங்கள்ள யாருக்காச்சும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்கண்ணா..

Wednesday, September 22, 2010

தமிழ்த்தாயுடன் ஒரு பேட்டி

தமிழ்த்தாய்:

என்னப்பா பண்ணிக்கிட்டிருக்கே !



முருகேசன்:

ஒன்..ஒன்னுமில்லை தாயீ நாளைக்கு நம்ம ப்ளாக்ல ஒரு நல்ல ஐட்டமா போட்டுவிடனமுன்னு முக்கிக்கிட்டிருக்கேன்



தமிழ்த்தாய்:

ப்ளாகுன்னா தினசரி ஏவரேஜா நானூத்து சொச்சம் பேரு படிப்பாங்களே அதுவா?



முருகேசன்:

என்னம்மா நீ இவ்ள நெகட்டிவா திங்க் பண்றே.பாசிட்டிவ் அப்ரோச் இருக்கனும்மா. இன்னைக்கு 400+ ஆ இருக்கலாம். அது நாளைக்கோ அடுத்த வாரமோ 4000 அப்புறம் 40 ஆயிரம்னு எகிறிக்கலாமில்லயா?



தமிழ்த்தாய்:

எகிறி என்னத்த கிழிக்க போறே .. தமிழ் நாட்டு கழிவு நீர் கால்வாய்கள்ள பாலும், தேனும் கலந்து ஓடப்போகுதா?



முருகேசன்:

மாற்றம் வரும் தாயே.. என் எழுத்து அதை சாதிச்சே தீரும்



தமிழ்த்தாய்:

பாரதியை விட உன் எழுத்து சக்தி வாய்ந்ததா.. அவனே சோத்துக்கில்லாம செத்தான் தெரியுமில்லியா?



முருகேசன்:

யம்மா ! குக்கிராமத்துல அஞ்சு பத்து ரூபா நோட்டுக்கு உடனே சில்லறை கிடைக்கும் .. ஆயிரம் ரூபா நோட்டுக்கு கிடைக்குமா? அது மாதிரிதான் பாரதியோட தமிழுக்கும் சில்லறை கிடைக்கலை. நம்ம தமிழ் நூறு ரூபா நோட்டு மாதிரி. சந்தேகப்பட்டு சில்லறை இல்லேன்னிருவாங்க. இல்லே அவிக கிட்டே சில்லறை இருக்காது. நாலு கடை ஏறி இறங்கினா கிடைச்சுட்டு போவுது



தமிழ்த்தாய்:

பரவால்லியே சாலாக்கா பேசறே.. ஆமா தமிழ் தமிழ்னு பினாத்தறியே கச்சா முச்சானு இங்கிலீஷ் வார்த்தைகளை போடறே.



முருகேசன்:

தனித்தமிழ்ல எழுதினா 400 நாப்பதாயிருமோனு பயம்.



தமிழ்த்தாய்:

ஆமாண்டா கண்ணு எல்லாத்தலயும் டிஃப்ரண்டா திங்க் பண்ற பார்ட்டி ஆனால் என் மேட்டர்ல மட்டும் சம்பிரதாயமா திங்க் பண்றியே



முருகேசன்:

தாயீ.. நான் இயற்கைக்கு மரியாதை கொடுக்கிறவன். குழந்தை அம்மா வயித்துல இருக்கிறப்பயே அதனோட மூளைல தாய்மொழிக்கான இலக்கணமெல்லாம் குன்ஸா பதிவாயிருதாம். அப்பாறம் எதுக்கு புதுசா கிணறு வெட்டனும்?



தமிழ்த்தாய்:

ஆனா நிறைய பேரு இங்கிலீஷ் இல்லைன்னா ஆயி கூட வராதுங்கறாய்ங்களே



முருகேசன்:

அவிக திருமலைக்கு நடைபயணம் போகட்டும். அங்கன காத்தாட உலவ வர்ர சிறுத்தை அடிச்சு திங்கட்டும்.இப்ப புதுசா கரடி வேற வருதாம்



தமிழ்த்தாய்:

அதென்னப்பா இங்கிலீஷ் மேல அப்படியொரு கடுப்பு.



முருகேசன்:

எனக்கு அறிவாளினு பேரு எனக்கே இங்கிலீஷ்ல மொத்தமா 10,000 வார்த்தை தெரிஞ்சா அதிகம். பத்து வகையான சென்டன்ஸ் ஃபார்மேஷன் தான் தெரியும். ஒரு பெட்டிஷன் எழுதி முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளி போகுது. மேலும் இதை இந்த ஆள்காட்டி பசங்க எழுதினாய்ங்கன்னா அதை படிக்கிறதுக்குள்ள மண்டைதான் காயும். கோர்ட்டுகள்ள இத்தீனி கேஸு பெண்டிங்ல இருக்க லா புக்ஸ் , தீர்ப்பு, ஜீ.ஓக்கள் எல்லாம் இங்கிலீஷ்ல இருக்கிறதுதான் காரணமோனு ஒரு சம்சயம் கூட எனக்குண்டு.



தமிழ்த்தாய்:

ஆள் காட்டிங்கன்னா நீ யாரை சொல்றே?



முருகேசன்:

வேற யாரை சொல்வேன். என் பங்காளிங்க இருக்காய்ங்களே அந்த பஞ்ச கச்சங்களைதான் சொல்றேன். அவிக இங்கிலீஷைத்தானில்லே எந்த பாஷைல எழுதினாலும் சூத்திரன் சட்டை கிழியனும்னே எழுதறானுங்கம்மா?



தமிழ்த்தாய்:

"சாதி இரண்டொழிய வேறில்லை"ங்கறதெல்லாம் தமிழ்ல தானே இருக்கு.



முருகேசன்:

அதை கம்ப்ளீட் பண்ணு தாயீ .. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர். இங்கன காசு பணத்தை மட்டும் கணக்கு வைக்காதிங்க. அறிவு,ஞானத்தையும் மனசுல வச்சு பாருங்க. இண்டர்ல எக்கனாமிஸ் நான் படிச்சு எழுதினேன் 35 மார்க் வந்தது. டப்பாஸானவனுக்கு கத்துக்கொடுத்தேன் 50 மார்க் வந்தது. இந்த தாளிங்க தாலியறுத்துர்ரானுங்கம்மா



தமிழ்த்தாய்:

தமிழ்ல வந்துட்டா மட்டும் அறிவும் ஞானமும் பரவிரும்ங்கறியா?



முருகேசன்:

சான்ஸ் அதிகரிக்குதில்லை..



தமிழ்த்தாய்:

அது சரி. தமிழ் தமிழ்ங்கறியே தவிர திருக்குறளுக்கு அந்தப்பக்கம் போறதே இல்லியே..



முருகேசன்:

கரீட்டா பாய்ண்ட் அவுட் பண்ணிங்க தாயீ. இங்கிலீஷ் மீடிய பார்ட்டிங்க, தமிழ் மீடியம் படிச்சிருந்தாலும் வயித்துப்பொழப்புக்காக தமிழ்ல டச் விட்டுப்போன பார்ட்டிங்க தான் அதிகம். நானே பேச்சுத்தமிழை வச்சுத்தான் தம் கட்டிக்கிட்டிருக்கேன். இதுல வளையாபதி குண்டலகேசின்னா ஓடிப்போயிருவாய்ங்க தாயே..



தமிழ்த்தாய்:

அப்போ அதெல்லாம் தேவையில்லேங்கறியா?



முருகேசன்:

நான் அப்படி சொன்னேனா நாட்ல சுபிட்சம் வரணும். சனம் தங்கள் வாழ்க்கை வளம் பெற 4 மணி நேரம் உழைச்சா போதும்ங்கற நிலை வரணும். அப்பாறம் இந்த புதை பொருள் ஆராய்ச்சியெல்லாம் பண்ணலாம்.



தமிழ்த்தாய்:

மொத்தத்துல நீயும் பணம் தான் பிரதானம்ங்கறே.



முருகேசன்:

அய்யய்யோ .. போட்டு வாங்கறதுன்னா இதானா. நான் சொல்றது தனிமனித பொருளாதார வளர்ச்சியில்லே. ஒட்டு மொத்த சுபிட்சம். பசி , பட்டினி, ஏழ்மையை வச்சுக்கிட்டு பழந்தமிழ், செந்தமிழ்னு தமிழாராய்ச்சி பண்றது முட்டாள் தனம்.



தமிழ்த்தாய்:

ஓஹோ அதுக்குத்தான் கமிட்டட் டு மேக் இண்டியா ரிச் னுட்டு ஸ்லோகன் போட்டு வச்சிருக்கயா?



முருகேசன்:

தமிழ் வளர்ச்சின்னே இல்லை தாயீ .. மனிதன் மிருகமாயிரக்கூடாதுங்கற முன்னெச்சரிக்கை. மன்சன் சாகலாம். மனிதாபிமானம் சாகக்கூடாது. அடுத்தவேளையாவது உணவு கிடைக்கும்ங்கற கியாரண்டி இருக்கிறதாலதான்

கிரைம் ரேட் கட்டுக்குள்ளிருக்கு. இனி உணவே கிடையாதுங்கற நிலை வந்துட்டா .. என்னை வெட்டிச்சாப்பிடுங்கப்பானு நான் வேணம்னா சொல்லிரலாம். எத்தனை பேர் முன் வருவாங்க?



தமிழ்த்தாய்:

தபார்ரா .. நீ அத்தனாம்பெரிய தியாகியா?



முருகேசன்:

இல்லைம்மா. சின்ன லாஜிக். நானா முன் வராட்டாலும் விரட்டி பிடிச்சு வெட்டி கொன்னு, தின்னுருவாய்ங்க. அப்போ மன்சனும் சாவேன், மனிதாபிமானமும் செத்துரும். நானே முன் வந்தா கு.பட்சம் மனிதாபிமானமாச்சும் வாழுமில்லையா



தமிழ்த்தாய்:

எந்த தைரியத்துல சாகத்துணியறே. ?



முருகேசன்:

நீங்க தான் இருக்கிங்களே உங்களுக்கு அமுதுன்னு இன்னொரு பேர் இருக்காமே ..பொழைக்க வச்சுர மாட்டிங்க



தமிழ்த்தாய்:

அட நீ பாரதி தாசனை கோட் பண்றியா?



முருகேசன்:

ஆமா தாயி..



தமிழ்த்தாய்:

நெஜமாலுமே நீ உயிர்ப்பிக்கப்படுவேன்னு நீ நம்பறியா?



முருகேசன்:

நான் சாகலாம் . ஆனால் நீ தந்த சரளமான சிந்தனையும், எழுத்தும் சாகுமா? என் எழுத்தென்பது என்ன ? என்னோட நீட்சி தானே.



தமிழ்த்தாய்:

எப்படியோப்பா .. அடிமாடு கணக்கா என்னை ஏலம் போட்டுராம வத்தமாட்டை கோசாலைல வச்சு பராமரிக்கிற மாதிரியாச்சும் ப்ளான் பண்ணுப்பா..



முருகேசன்:

பார்த்திங்களா.. ஒட்டக்கறந்துக்கிட்டு வெட்ட விக்கறதுக்கு நானென்ன பார்ப்பானா? உனக்கொரு அவமதிப்புன்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு கிளம்பறவன். என்னை மாதிரி இன்னம் ஆயிரக்கணக்கான மியூசியம் பிறவிகள் இருக்கு. நீ கவலைப்படாதே தாயீ.. நீ வாழனும்னா தமிழன் வாழனும். தமிழன் வாழ்ந்தா நீ வாழ்வே .. நீ வாழ்ந்தாதான் தமிழன் வாழ முடியும் உயர முடியும்.. உன்னை பாதுகாக்கிறதுல எங்க சுய நலமும் அடங்கியிருக்கு. டோன்ட் ஒர்ரி



தமிழ்த்தாய்:

அந்த நம்பிக்கையிலதாம்பா நான் காலத்தை தள்றேன்