Showing posts with label ஆண்-பெண். Show all posts
Showing posts with label ஆண்-பெண். Show all posts

Saturday, August 6, 2011

ஆண் பெண் வித்யாசம்:விரய பாவம்


அண்ணே வணக்கம்ணே ..

ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்ல கடைசி அத்யாயம் இது. விரய பாவ காரகத்வங்கள் என்ன?

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள் இத்யாதிய காட்டுவது விரய பாவம். பொதுவிதிப்படி பார்த்தா இந்த பாவம் காலியா இருக்கிறது நல்லது. காலியாவே இருந்தாலும் இந்த பாவாதிபதியோட நிலைய பொருத்து மேற்படி சமாசாரங்க அதும்பாட்டுக்கு அது நடக்கும்.

உபரியா இந்த பாவத்துல கிரகங்கள் வேற இருந்தா கில்மா, தீனி,தூக்கம் இத்யாதி டபுள் ஆகவும் வாய்ப்பிருக்கிறதால இப்படி ஒரு விதியை ஏற்படுத்தியிருக்கலாம். இருந்தாலும் இன்னொரு சந்தர்ப்பத்துல இங்கன சுபகிரகங்கள் இருந்தா நல்லதுன்னும் ஒரு விதி சொல்லப்படுது.

சுபகிரகங்கள்னா நைசர்கிக சுபர்களா? லக்னாத் சுபர்களான்னு ஒரு கேள்வி வரும். உதாரணத்துக்கு குரு பாவியாக உள்ள ஒரு லக்னம். விரயத்துல குரு உட்கார்ராருனு வைங்க.

குரு சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற செய்யும் ஒரு கிரகம். எனவே ஜாதகர் தூக்கம்,தீனி,செக்ஸ் எல்லாத்துலயும் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற ட்ரை பண்ணுவாரு.

ஆனால் இவரோட லக்னதிபதி பாபகிரகம்னு வைங்க.அப்ப இவரோட மைண்ட் செட் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானதா இருக்கும். நினைப்பது ஒன்று செய்வது ஒன்று. இது மனக்குழப்பத்துக்கு ஹேதுவாகி எலி தரைக்கிழுக்க ,தவளை தண்ணிக்கிழுத்த கதையாயிரும். இந்த முரண்பாடு ஓவரா போனா மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கூட வரலாம் ( அன்னியன் பார்த்திங்கல்ல)

இதுவே ஒரு லக்னத்துக்கு குரு சுபர், அவரேவிரய பாவத்துல உட்கார்ந்தாருன்னு வைங்க.அப்ப எண்ணமும் செயலும் ஒன்னா இருக்க வாய்ப்பு ஏற்படுது.ஆக லக்னாத் சுபர்கள் இங்கன உட்கார்ரதே நல்லது.

பாபர்கள் உட்காரும்போது அவர்களது தீனி,செக்ஸ் இத்யாதி சாஸ்திர விரோதமானதா இருந்தாலும் அவிக மனசு ஒப்பி அதன் அடி நடக்கும்போது அவர்களது செயல் சட்டவிரோதமா இருக்கும் பட்சத்தில் கைக்கு காப்பு வரலாமே தவிர மனக்குழப்பம் - காம்ப்ளெக்ஸ் இத்யாதிக்கு சான்ஸிருக்காது.

இது ஆண் பெண் அனைவருக்கும் பொருந்தக்கூடிய விஷயம்.சரீ........இ இ வித்யாசம்னு தலைப்பை வச்சுட்டு வித்யாசத்தை சொல்லலின்னா எப்படி?

செலவு:
இன்னைக்கு பெண்கள்ள எத்தனை சதவீதம் பேரு பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்காய்ங்கனு பார்த்தா ஒரு பத்து அ இருபது சதவீதம் கூட தேறாது. பொருளீட்டும் சுதந்திரம் வேணம்னா இருக்கலாமே தவிர செலவழிக்கும் சுதந்திரம் உள்ளவுக அதுல பாதி தேறினா யதேஷ்டம்.இவிக செலவுக்கு ஆத்துக்காரரோ
மாமனார் மாமியாரோ ஜீ.ஓ பாஸ் பண்ணாம இருக்கிறது துர்லபம்.

இல்லத்தரசிகள் பற்றி சொல்லவே வேணா. ஆண் பெண்களுடைய செலவெல்லாம் மரணத்தின் நிழல்களோட போராடறதிலேயே வந்து நிக்கும். உ.ம் தனிமை , முதுமை (மேக்கப் செலவு) , நிராகரிப்பு,

அதுலயும் பெண் வீக்கர் செக்ஸ் இவளுடைய எண்ணங்கள் ஒரு குறுகிய வட்டத்தை ஃபோக்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கும். ஆணாவது செக்ஸ்ல வீரிய ஸ்கலிதத்தின் போதான ப்ளாக் அவுட்டை குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அதனால மரணத்தோட ஓரளவாச்சும் அவனுக்கு பரிச்சயம் இருக்கு.ஆனால் பெண்? அதுலயும் இந்திய பெண்? இந்த விஷயத்துல ரெம்ப துரதிர்ஷ்ட சாலி.

இதனால பெண்ணுக்கு மரணத்தை நினைவு படுத்தும் எதுவுமே நடுக்கத்தை கொடுத்துருது. முதுமைங்கறது மரணத்துக்கு முந்திய ஸ்டாப். அதனாலதான் ஏழை -பணக்காரி,படிச்சவ -படிக்காதவ எல்லாருமே வயசை குறைக்க என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்றாய்ங்க.

நாலு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு மூளைய வளர்த்துக்கிட்டா சீக்கிரம் வயசாயிரும்னோ என்னமோ அரசியல் -இலக்கியம் -சினிமா எதை பத்தி கேட்டாலும் " அதென்னமோ எனக்கு தெரியாது. எங்க வீட்டுக்காரர் தான் சதா சர்வ காலம் மல்லாடிக்கிட்டிருப்பாரு" ன்னு சொல்ற தாய்குலம் சாஸ்தி. முதற்கண வருமானம் கிடையாது. அப்படியே இருந்தாலும் செலவழிக்கிற அதிகாரம் கிடையாது. அப்படியே கிடைச்சாலும் அவிக செலவெல்லாம் காலத்தை -காலச்சக்கரத்தை சுழலாம நிறுத்தறதுலயே நின்னுருதுங்கோ.

தீனி:
உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு - அதாவது பெண் சாஸ்தி சாப்பிட கூடாது.(ஏன்னா இவன் 7 -அவள் 23 - இன்னம் சத்தா சாப்பிட்டு கெத்தா வளர்ந்து நின்னா இவன் பாடு கோவிந்தாவாயிருமே) . மிச்சம் மீதியை திங்கறது - நேத்து முந்தா நேத்து சரக்கை வீணாப்போகுதேனு திங்கறது - அள்ளிப்போட்டுக்கறது . இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஆக பெண் ஜாதகத்துல விரயஸ்தானம்ங்கறது செலவையும் -தீனியையும் தர்ரது ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். பின்னே என்னாத்ததான் தருது?

செக்ஸ்:

இதை பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு? செக்ஸோட நோக்கமே ஆர்காசம்தான் (உச்சம்) ஆனால்வாழ் நாள்ல விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு ஆர்காசங்களை கூட பெண்கள் எய்துவதில்லைங்கறது சர்வே முடிவு.

தூக்கம்:

இவ என்னவோ நாம கொடுத்துவச்சது இவ்ளதான்னு தூங்க ஆரம்பிப்பா. அந்த நேரம் பார்த்து "இவரு" சுரண்டுவாரு. திரும்பி படுடி. தலைவாழை இலை வச்சு தண்ணி தெளிச்சு ஒரு சோறா,காயா ,கறியா,பருப்பா சாம்பாரா, ரசமா, மோரா ஒரு இழவும் பரிமாறாம படக்குனு பாயாசத்தை கவுத்துட்டு விருந்து முடிஞ்சதுன்னு தூங்க ஆரம்பிச்சுருவாரு.

கொய்யால அவளுக்கு முறையான செக்ஸும் போச்சு.வவுத்தெரிச்சல்ல தூக்கமும் போச்சு. பின்னே பெண்கள் ஜாதகத்துல இந்த விரயஸ்தானம் என்னாத்ததான் தருது?

முக்திய தரும்னு வேணம்னா சொல்லலாம். அ ஏழேழு பிறவிகளின் கருமங்களெல்லாம் ஒழிஞ்சு அடுத்த
பிறவியிலயாவது குத்து மதிப்பா சுமாரான வாழ்க்கைய பெற வழி ஏற்படலாம் தட்ஸால்.

ஆணினமா ஆண்மை இழந்து - பெண்ணின் தேவைய நிறைவேற்ற முடியாத குற்ற உணர்ச்சியில தவிக்குது. ஒரு சில மெச்சூர்ட் மைண்ட் செட் உள்ள ஆண்கள் பாவம் இவளுக்கு " அதை தான்" தரமுடியலை .. ஏதோ அவள் விருப்பத்துக்கு எதையாவது திங்கட்டும்னு ஃப்ரிட்ஜை நிரப்பிர்ராய்ங்க. அல்லது அவள் காலச்சக்கரத்தை நிறுத்த ப்யூட்டி பார்லர், நாவல்ட்டிஸ் அது இதுன்னு செலவழிச்சா கண்டுக்காம விட்டுர்ராய்ங்க.

அன் மெச்சூர்ட் மைண்ட் செட் உள்ள ஆண்கள் தங்களோட குறைய மறைக்க சாடிஸ்டுகளா மாறி உயிரோட கொல்றாய்ங்க.

பின் தூங்கி முன் எழுதல்னு ஒரு விதியை வச்சிருக்காய்ங்க . அதாவது ஆத்துக்காரரு தூங்கின பிற்பாடுதேன் இவள் தூங்கனும்.அவரு எந்திரிக்கிறதுக்கு மிந்தி இவள் எந்திரிச்சுரனும்.தூக்கம் மதர்மதர்ப்பை தந்துரும். 7 -23 வித்யாசம் இன்னம் சாஸ்தியாயிரும்ங்கற பீதி.

ஒரு ஆண் ஒரு இரவில் மேக்சிமம் இரண்டு மூன்று ஆர்காசங்களுக்கே நாக் அவுட். ஆனா பெண்? கவுண்ட்லெஸ் ஆர்காசம்ஸை பெற தாக்கத் உடையவள்னு பயாலஜி சொல்லுது. இப்ப ஒரு திருமணமான பெண் ஜாதகத்துல விரய பாவத்துல எந்தெந்த கிரகங்கள் இருந்தா என்ன பலன்? நம்ம அனுபவஜோதிடம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

1.சூரியன் :

ஆர்காசம் இல்லாத உடலுறவுக்கு பின் விடியல் வரை விழித்திருப்பது.

2.சந்திரன்:

தான் ஆர்காசம் பெற்றுவிட்டதாக கற்பனை செய்து கொள்வது .

3.செவ்வாய்:

ஆர்காசம் இல்லாத உறவு தேவையாங்கற எரிச்சல்ல எனக்கு தூக்கம் வருதுன்னுட்டு முரண்டு பிடிக்கிறது ரத்த காயத்தோட ஏறக்குறைய ரேப்

4.ராகு:

ரெண்டு பெக் போட்டா கில்மால தூள் கிளப்பலாம்னு எவனோ பிக்காலி சொன்ன யோசனைய சிரமேற்கொண்டு லாலா போட்டுட்டு வந்த ஆத்துக்காரரை சகிச்சுக்க வேண்டி வர்ரது

5.குரு:

தன் இயலாமையை மறைக்க ஆத்துக்காரர் உபதேச மஞ்சரி கணக்காய் உபன்யாசம் செய்ய கேட்டுக்கொண்டு தூங்க முயற்சிப்பது.

மற்ற கிரகங்கள் இருந்தா என்ன பலன்னுட்டு சபையில உள்ளவுக சொல்லலாம்.


- ஆண் பெண் 12 வித்யாசங்கள் தொடர் முற்றும் -

Friday, August 5, 2011

ஆண் பெண் வித்யாசம் : 11 ஆம் பாவம்


ஜாதகத்துல 11 ஆம் பாவத்தை லாபஸ்தானம்ங்கறாய்ங்க. மூத்த சகோதர ஸ்தானம்ங்கறாய்ங்க. பெண்ணோட வாழ்க்கையில லாபம்னு துவங்கறதெல்லாமே நஷ்டமா போயிர்ரது. உ.ம் தாயோட கருப்பையில உயிர் தரிச்சோம் லாபம்னு நினைச்சா உடனே ஸ்கான்ல ஆணா பெண்ணா தெரிஞ்சுக்கிட்டு சங்கு ஊதிர்ராய்ங்க. அல்லது எருக்கங்குச்சி எட்செட்ராவ வச்சு நஷ்டமாக்கிர்ராய்ங்க.

சரி அதையும் மீறி பிறந்து வந்து அப்பாடா ஒரு வாழ்க்கை லாபம்னு நினைக்கிறதுக்குள்ள மூச்சை நிறுத்திர்ராய்ங்க. இப்படியே ஒவ்வொரு ஸ்டெப்லயும் அவள் லாபம்னு நினைக்கிறதெல்லாம் நஷ்டமாவே போயிர்ரது. அதனாலதேன் நிறைய பெண்களோட ஜாதகத்துல 11 ஆவது பாவம் லாபஸ்தானமா ஒர்க் அவுட் ஆகாம மூத்த சகோதர ஸ்தானமாவே ஒர்க் அவுட் ஆகுது.

மூத்த சகோதரம்னா அது அக்காவா இருக்கலாம், அண்ணனாவும் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு அக்காவால கிடைக்க கூடிய லாபங்கள் என்ன? நஷ்டங்கள் என்ன? அண்ணனால கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்கள் என்னங்கறதை இந்த பதிவுல பார்ப்போம்.

அக்கா:
அக்கான்னா யாரு? அம்மாவோட டூப்ளிக்கேட். அம்மா யாரு? இவள் பிறந்ததும் பார்த்த ஸ்பரிசித்த முதல் ஆண்மகனான அப்பாவோட அன்பை பங்கு போட்டுக்கற காம்ப்படிட்டர். அதனால இவள் மைண்ட்ல அம்மா -அக்கா ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க.

அப்பா தன் மனசுல தன் பொஞ்சாதி மேல ( இவளோட அம்மா) உள்ள மோகமெல்லாம் வடிஞ்சு இவள் மேல் தன் பார்வையை திருப்பும் வரை காத்திருக்க வேண்டி வந்துருது. இந்த இழவுல அவரோட அன்புலஅக்ர பாகம் (முதல் பாகம்) அக்காவுக்கு போயிருது.. அதை தக்க வச்சுக்க அவள் மெனக்கெட வேண்டி வந்துருது. இது ஒரு வ்யூ.

இன்னொரு வ்யூல பார்த்தா இவள் அச்சான அதே பதிப்பகத்துல அச்சான - இவளுக்கு முந்திய பதிப்புத்தான் அக்கா. இவளை விட அவளுக்கு பெண்ணுக்கெதிரான கொடுமைகள் பற்றிய ஞானம் அதிகம்.

கொடுமைகளுக்கு இலக்கான மனசு ரெண்டு வகையில ரெஸ்பான்ட் ஆகும். 1. தான் பட்ட கொடுமையை வரிசையில அடுத்து உள்ள பார்ட்டி அனுபவிக்கக்கூடாது 2.கொய்யால நான் பட்ட அவதியை பின்னால
வர்ரவளு(னு)ம் அனுபவிக்கனும்.

இதுல அக்காக்காரி மொதல் ஜாதியா இருந்தா உங்க லாப ஸ்தானம் சூ..ஊ ........ப்பரு. அவளே ரெண்டாவது ஜாதியா இருந்தா டர்ர்ரு.

இது ஒரு வ்யூ. இன்னொரு வ்யூல பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சேம் செக்ஸ். அதனால ஒருத்தர் மேல ஒருத்தருக்கு கவர்ச்சி இருக்காது. மேலும் பருவ வயசுல ஒருத்தருக்கொருத்தரு போட்டியா மாறவும் வாய்ப்பிருக்கு. இதெல்லாம் மைனஸ்.

வயசு வித்யாசம்:
உங்க அதிர்ஷ்டம் நல்லாருந்து உங்க அக்காவுக்கும் உங்களுக்கும் வயசு வித்யாசம் அதிகமா இருந்தா அவிக உங்க அம்மாவோட ரோலை ப்ளே பண்ண சான்ஸ் இருக்கு. நீங்க பிறந்த சமயம் அம்மா கொஞ்சம் போல களைச்சு - பிள்ளை வளர்ப்புல சலிப்பு இருந்தால் உங்களை தன் மூத்தமகள் கிட்டே தள்ளி விட்டுர சான்ஸ் இருக்கு.

ஆண் குழந்தை வளர்ந்து பெருசாகி -ஒன்னை பெத்தாலும் -அதை வளர்த்தாலும் -அட கட்டியே கொடுத்துட்டாலும் - அட அது ஒன்னை பெத்து அதை தூக்கி கொஞ்சினாலும் கூட முழுமையான அப்பனா ஆகமுடியாம போயிரலாம்.

ஆனா பெண்குழந்தைய பொருத்தவரை அது பிறக்கும் போதே தாயாத்தான் பொறக்குது. அவளோட இதயமும் மடியும் ஒரு குழந்தைய தூக்கி வச்சுக்க -கொஞ்சி மகிழ துடிக்குது.

எனவே வயசு வித்யாசம் அதிகமா இருக்கும் பட்சத்துல உங்க அக்கா உங்களுக்கு அம்மாவா மாற வாய்ப்பிருக்கு.

அண்ணன்:
அண்ணன்னா யாரு? அப்பாவோட மறு பதிப்பு. நீங்க யாரு ? அம்மாவோட மறு பதிப்பு. அப்பாவை பொருத்தவரை அம்மா மோகத்துல உங்க பக்கம் பார்வைய திருப்ப அவகாசம் தேவைப்படும். மேலும் வாழ்க்கை போராட்டம் - தொழில்,வேலை உத்யோக கவலைகள் எட்செட்ரா எட்செட்ரா.

ஆனா அண்ணன்? அவன் மொதல் மொதல்ல தவழ்ந்த நெஞ்சு தாயோடது. அவனுக்கு உணவு கொடுத்து அவனோட உயிரை நிலைக்க வச்ச மார்பு தாயோடது. அவன் எந்த கவலையும் இல்லாம செக்யூர்டா இருந்த கருப்பை அவனோட தாயோடது.

அவன் அடிமனசுல மறுபடி தாயின் கருப்பைக்குள் நுழையும் உத்வேகம் இருக்கும்னு சைக்காலஜி சொல்லுது. ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் வேற சப்ஜெக்ட். ஆனால் இதுவும் ஆண் குழந்தைக்கு தாயின் பால் ஏற்படும் ஈர்ப்புக்கு ஒரு காரணம்தேன்.

இந்த தீவிரமான உள் மன கொந்தளிப்புகளுக்கு வடிகாலா இருக்கிறது தாயோட ஸ்பரிசம் -கிள்ளல் -முத்தம். அவன் டீன் ஏஜை தொடும்போது தாய் ஸ்பரிசத்தை அவாய்ட் பண்ண அவனையே அவாய்ட் பண்ண ஆரம்பிக்கிறா. "எருமை மாதிரி மேல விழாதே"

உங்கள் தந்தையின் மறுமதிப்பான உங்க அண்ணனுக்கு - உங்கள் தாயின் மறுமதிப்பான உங்க மேல ஈர்ப்பு வர்ரது சகஜம். (ஜாடை முக்கியம் - ஐ மீன் அண்ணனுக்கு அப்பா ஜாடை வந்திருக்கனும் -உங்களுக்கு அம்மா ஜாடை வந்திருக்கனும் )

அப்பா தன் வயதுக்குரிய கடமைகளின் ப்ரஷரால உங்க மேல அன்பை கொட்ட முடியாத தருணத்தில் - அம்மா தன் வயதுக்குரிய உபாதைகள் -களைப்பு -சலிப்பு காரணங்களால் தன் மகன் மேல் அன்பை கொட்ட முடியாத தருணத்தில் கடமைகள் ஏதுமில்லாத அண்ணன உங்க மேல அன்பை காட்ட முடிவது சகஜம்.

பால்யத்துல ஆண் பெண் குழந்தைகளிடையில் பெருசா வித்யாசம் தெரியறதில்லை. பெண் குழந்தையும் ஆண்குழந்தைக்கு சமமா மாங்காய் அடிக்குது - குதிக்குது ஓடுது -அதனால அண்ணன் தங்கை பாச பிசினஸ் எல்லாம் அந்த வயசுல தேசலாத்தான் இருக்கும். இன்னம் சொல்லப்போனா அண்ணன் உங்களை தனக்கு போட்டியா கருதவும் -வெறுக்கவும் - நீங்க எலியும் பூனையுமா இருக்கவும் சான்ஸ் இருக்கு.

ஆனா பருவத்தின் வாசலில் நிற்கும்போது தான் நீங்க ஆணில்லை பெண் - தன் தாயின் மறுபதிப்புங்கற விஷயம் அவன் மனசுக்கு உறைக்குமோ என்னவோ?

வயசு வித்யாசம்:
வயசு வித்யாசம் அதிகமாகும் பட்சத்துல உங்க அண்ணன் அப்பாவோட ரோலை ப்ளே பண்ண ஆரம்பிச்சா தலைவலிதான். அங்கே நிக்காத - செல் ஃபோன்ல என்ன பேச்சு இத்யாதி ..

என்ன நம்ம ஜாரா திடீர்னு சுறுசுறுப்பாயிட்டாரு ? ஓகோ புதுசா ஏதோ வண்டை வார்த்தை ஸ்ட் ரைக் ஆயிருச்சாம்..

Wednesday, August 3, 2011

தொழில் உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே,

நேத்து தொழிலை கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம்.அதனால நேற்றைய பதிவு கொஞ்சம் போல சோனியாயிருச்சு. அதை ஈடுகட்ட இன்னைக்கு நோன்டி நுங்கெடுத்துரனும்னுதேன் ஆரம்பிக்கிறேன்.ஆத்தா விட்ட வழி.

ஆணோ பெண்ணோ எந்த உயிரா இருந்தாலும் அதனுடைய சப்கான்ஷியஸ் மைண்ட்ல இயற்கை பொதிஞ்சு வச்சிருக்கிற பேசிக்கல் கமாண்டுகள் ரெண்டு

1.உயிர் வாழ்தல் 2.பரவுதல்

இந்த ரெண்டு கான்செப்டுக்காக செய்யும் போது தொழில் உத்யோகத்துல ஆண் பெண்களிடையில் எந்த வித்யாசமும் வர்ரதில்லை.

உயிர் வாழ்தல் இரண்டு விதம்:

உயிர் வாழ்தல்னா "உசுரை கையில பிடிச்சுக்கிட்டு" வாழறது ஒரு விதம். இது பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

உயிர் வாழ்தல்னா தான் உயிர் வாழ்வதை உலகத்துக்கே கம்யூனிக்கேட் செய்தபடி -தன் சர்வைவலை பன்முறை உறுதி செய்துகொண்டபடி வாழறது இன்னொரு விதம் இது பலம் வாய்ந்தவர்களின் லைஃப் ஸ்டைல்


பரவுதல் ரெண்டு விதம்:

பரவுதல்னா விந்தை கொட்டுதலோ அ கொட்டப்பட்ட விந்தை ஏற்று பெற்றுத்தள்ளுதலோ பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

பரவுதல்னா தங்கள் பேரும் புகழும் படைப்பும் படைப்புத்திறனும் உலகெங்கும் பரவ வாழறது பலவான்களின் லைஃப் ஸ்டைல்.

ஆண் ஃபிசிக்கலி ஸ்ட்ராங், (சரீர பலம்) . பெண் சைக்கலாஜிக்கலி ஸ்ட்ராங். (மனோ பலம்).

ஆணின் சரீர பலம் உச்சத்தில் இருக்கும்போது சரீர பலம் / முரட்டுத்தனம் தேவைப்படும் துறைகளில் உச்சத்துக்கு போகிறான்.

பெண்ணின் மனோபலம் உச்சத்தில் இருக்கும்போது மனோபலம் தேவைப்படும் துறைகளில் பெண்கள் உச்சத்துக்கு போகிறார்கள்.

ஆணின் சரீர பலத்தை பற்றி பலமுறை சொல்லியிருக்கேன். ஆனால் இதுல ஒரு சின்ன கரெக்சன். ஆணோட சரீர பலம் கொண்டு ஒரு கல்லுரலையே நகர்த்திரலாம். ஏன் இடுப்பு வரை தூக்கியும் காட்டலாம்.

ஆனால் தாளி அவனால ஒரு படி அரிசி கூட அரைக்க முடியாது. எப்படியா கொத்த பாடிபில்டரா இருந்தாலும். (பத்து பதினைஞ்சு நாள் ப்ராக்டிஸு பண்ணி 16 ஆவது நாள் செய்து காட்டலாம் அது வேற விஷயம்)

ஆனால் கண்ல மட்டும் உயிர்வச்சுக்கிட்டு -ஒல்லி பீச்சானா இருக்கிற பொம்பளை மூச்சிரைக்காம பக்கத்து வீட்டு அக்கா கிட்டே தெருவுக்கு புதுசா குடிவந்த பொம்பள டாக்டர் வாக்கிங் போற அழகை பத்தி பேசிக்கிட்டே அசால்ட்டா அஞ்சு படி அரிசியை அரைச்சுரமுடியும்.

இவனுக்குள்ளே சக்தி என்னவோ அதிகமா தான் இருக்கு. ஆனால் அவனால அதை கண்டிஷனிங் செய்து தொடர்ச்சியா வெளிப்படுத்த முடியறதில்லை. அதுக்கு ஒரு ப்ளானிங் வேணம். சக்தியை கட்டுப்படுத்தி கொஞ்சமா - கன்டின்யுவஸா வெளிப்படுத்தன்ம். ஆனால் இந்த டெக்னிக் ஆண்களுக்கு தெரியாது.பெண்களுக்கு தெரியும்.

இந்த மாதிரியான பவர் கண்டிஷனிங் டெக்னிக் தேவைப்படற ஃபீல்ட் ஒர்க்ல கூட ஆண்களால சோபிக்க முடியாது. இது ஃபிசிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா தேவைப்படற தொழில்,உத்யோகங்கள் உண்டு.அவற்றிலும் பெண்கள் தான் நிறைய சாதிக்க முடியும்.

1.உருவாக்குதல் - சூட்சுமமான அசெம்ப்ளிங்ல எல்லாம் பெண்கள் நின்னு விளையாடறாய்ங்க.

2.பராமரிப்பு & பதப்படுத்துதல்: இதுவும் பெண்ணோட இயல்புக்கு ஏற்ற துறை .

( இதுக்கான காரணம் என்னன்னா கருவில் குழந்தை உருவாகிறது வெறும் உயிரியல் தொடர்பான மேட்டர் கிடையாது.அவளோட சப்கான்ஷியஸ்ல இருந்து புறப்படும் கமாண்ட்ஸ் அந்த குழந்தையின் உருவாக்கத்திற்கு நிறைய உதவுது. உருவாக்கும் -பதப்படுத்தும் -பராமரிக்கும் துடிப்பு மற்றும் திறன் இயல்பாகவே பெண்ணில் அமைந்திருக்கிறது)

3. வினியோகித்தல் : இங்கே வரும்போது ஆண்கள் கொடி கட்டி பறக்கிறாய்ங்க.

4..கண்டுபிடிப்புகள்:
இது ஏறக்குறைய ஒரு கற்பழிப்பு மாதிரி தான். வேணம்னா முதலிரவுல நடக்கும் படிப்படியான நிர்வாணப்படுத்துதலை போன்றதுன்னு சொல்லலாம். (குவாரி,சுரங்கம்லாம் கற்பழிப்பே) அதனாலதான் 90 சதவீத கண்டுபிடிப்புகள் ஆண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

உடலுறவின் போது கூட ஆண்தான் பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்க துடிக்கிறான்.ஆனால் பெண் தன் நிர்வாணத்தை கூட தான் ரசிக்கிறதில்லை.

சரிங்ணா இந்த பதிவோட சாரத்தை இப்படி வச்சுக்கலாம் .பெண்ணோட ஜாதகத்துல ஜீவனபாவம் பலம் பெறுவது அவளது உருவாக்கும்,பதப்படுத்தும்,பராமரிக்கும் திறனை அதிகரிக்கும்.

ஆணோட ஜாதகத்துல ஜீவன பாவம் பலம் பெறுவது இன்ன பிற துறைகளிலான அவனது திறமையை அதிகரிக்கும்.

ஜீவன பாவம் ஏறுமாறா இருக்கும் போது ஆண் பெண்கள் தங்கள் இயல்புக்கு மாறான துறைகளில் ஈடுபாடு கொண்டு நுழைந்து அதையும் சீரழித்து தங்கள் முன்னேற்றத்தையும் மூளியாக்கிக்குவாய்ங்க.

Sunday, July 17, 2011

ஆண் பெண் வித்யாசம்; 8 ஆம் பாவம் (தொடர்ச்சி)


ஜாதகத்துல எட்டாம் பாவம் அடிமைத்தனததை காட்டுது. அந்த அடிமைத்தனத்தால பல நன்மைகள் கிடைக்குதுன்னு சொல்லியிருந்தேன். ஆணும் ஏதோ ஒருவகையில அடிமையாத்தான் இருக்கான். ஆனால் அவனோட அடிமைத்தனத்துக்கு பிரதிபலன் கிடைக்குது. பெண்ணோட அடிமைத்தனத்துக்கு கிடைக்கும் பிரதி பலன் என்ன? இந்த உலக உருண்டையத்தனை பெரிய பூஜ்ஜியம். அதனால பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் சுபபலமா இருந்தா கண்ணாலமாகுது அவள் அடிமையாகிறாள். அடிமையானதுக்கு . அவளுக்கு ஒரு மசுரும் கிடைக்கறதில்லை. இதனாலதேன் தாய்குலத்துக்கு ஆயுள் சாஸ்தி. (கம்பேரிட்டிவ்லி)

அவள் அடிமையா இருக்கிறதால எட்டாமிடம் கெட்டால் ஏற்படக்கூடிய பல தீயபலன் அவாய்ட் ஆயிருது. சுதந்திரம்னு இறங்கினாத்தேன் எட்டாம் பாவத்தோட இதர காரகத்வமெல்லாம் ஆப்பு வைக்குது . உ.ம் சீட்டுப்போட்டா /ஐ.பி போட வேண்டி வருது / தலைமறைவாகவேண்டி வருது/காவல் நிலையம் -கோர்ட்டுனு அல்லாட வேண்டி வருது. சுதந்திரம்னு ட்ராஃபிக்ல டூ வீலர்ல பறந்தா உயிர் ஆக்சிடென்ட் நடக்குது. சுதந்திரம்னு ஆளை மாத்தினா அரிவாள் வெட்டு கிடைக்குது. தன்னைத்தான் கேள்வி கேட்டுக்கிட்டா தற்கொலை பண்ண வேண்டி வருது . புருசனை கேள்வி கேட்டா அவன் கொலை பண்ணிர்ரான். இன்னும் கட்டற்ற சுதந்திரம்னு காண்டொம் யூஸ் பண்ணாம திரிஞ்சா இன உறுப்புல நெருப்பு வச்ச கணக்கா எரியற வியாதியெல்லாம் வந்துருது.

இப்ப ஒடனே என் நெம்பரை டயல் பண்ணி "என்னண்ணே சொல்ல வர்ரிங்க? பெண் அடிமையாவே இருந்துட்டா சேஃப். சுதந்திரம்னு கேட்டா ஆஃப்ங்கறிங்களா? "னு கேட்க போறிங்க. அப்டித்தானே?

கூல்! கூல் ! ஹ்யூமன் லைஃப்ல - வாழ்க்கை சக்கரத்துல - இயற்கையோட சட்ட திட்டங்கள்ள ஒரு வினோத விதி இருக்கு. அதுக்கு ரிவர்ஸ் எஃபெக்டுனு பேரு. (ஓஷோ இதுக்கு சிம்பிளா சின்னவயசுல சிறுவர்கள் சிறுவர்களையும் /சிறுமிகள் சிறுமிகளையும் மட்டுமே விரும்பறதை உதாரணமா சொல்வாரு)

பெண் மட்டுமல்ல எந்த உயிரும் விரும்புவது சுதந்திரத்தை தேன். ஏன்னா அதனோட உண்மையான இறுதியான வடிவம் ஆன்மா. அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆத்தாளை " சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா"ன்னு போற்றிப்பாடறாய்ங்க.

நாமெல்லாம் அவளோட பிள்ளைகள். தாயை போல பிள்ளைங்கறதை அனானி கமெண்ட் போடறதுல தான் ப்ரூவ் பண்றோம் அது வேற விஷயம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ( அனாவசியமா இதுல கலைஞர் -கனிமொழியை போட்டு குழப்பிக்காதிங்க) ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரின்னா நாமளும் சர்வ சுதந்திரர்களாதானே இருக்கனும். ஏன் இப்படி அடிமைப்பட்டு போனோம்.

பாய்ண்ட் நெம்பர் ஒன் இந்த பாடி. பேபி லைட் மேல கவுத்து போட்ட கோழிக்கூடை மாதிரி கிடக்கு. அடுத்து நம்மளோட பிரமைகள். .

எட்டாமிடம் மரணத்தை காட்டுமிடம். மரணம் விசித்திரமானது . ஒரு வகையில நம்மை கவரவும் செய்யுது.
அதனாலதேன் லவ் பண்றோம். ( லவ்வரோட மாமன் மிலிட்டரி பார்ட்டியா இருந்து பொட்டுன்னு சுட்டுருவானே) இன்னொரு வகையில டர்ராக்கவும் செய்யுது..தூக்குப்போட்டு தற்கொலை செய்துகிட்டவுக கழுத்துல ஒன்னுக்கு மேல தூக்குக் கயிறோட அடையாளம் இருக்கும். ஏன்னா கடைசி நொடியில வாழனுங்கற எண்ணம் வந்திருக்கும். இவன் அதை விலக்க ட்ரை பண்ணியிருப்பான்.

நம்ம டோட்டல் லைஃபையும் மரணம்தேன் வழி நடத்துது. ஒன்னு மரணம் குறித்த அச்சம். இன்னொன்னு மரணத்தின் மீதான கவர்ச்சி. எப்படி பார்த்தாலும் மரணம்தான் " எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"ன்னு ஒவ்வொருத்தர் லைஃப்லயும் சோலோவா பாடுது.

கொய்யால மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம் . உனக்கு இந்த உலகத்தை முழுசா தெரியாது. உலகத்துக்கு ? உன்னை தெரியவே தெரியாது. சாவை சிந்திக்கிறது வேற ..சந்திக்க துணியறது வேற சந்திக்கிறது வேற.

சந்திக்க துடிக்கிறது - கச்சாமுச்சான்னு டர்ராகி ஒதகாத மேட்டரையெல்லாம் - இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு - மரணத்தோட முடிச்சு போட்டு அதோட எல்லாம் போராடி என்னைக்கோ வர்ர சாவை இன்னைக்கே வெத்தலைபாக்கு வச்சு கூப்பிடறது வேற.

இந்த மாரி மரணத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துட்டு தெனாலி கமல் மாதிரி பயம் பயம் பயம் அதுலயும் மரண பயம். மரணத்துக்கும் நம்ம பயத்துக்கும் என்ன சம்பந்தம்னே தெரியாத பயம்.

பயம் பலவீனத்தை தருது .பலவீனம் பிரமைகளை அதிகரிக்குது. சத்தியத்தை மறைக்குது. மன்சன் ஜஸ்ட் மரணத்துக்கு மட்டும் பயந்தா கூட இந்த அளவுக்கு நாறியிருக்க மாட்டான். அல்லாரும் ஆடு,மாடு மாதிரி இலை தழைய தின்னுக்கிட்டு ராம் தேவ்பாபா மாதிரி யோகா பண்ணிக்கிட்டு லுல்லாவை ச்சூ ச்சூ போறதுக்கு மட்டும் உபயோகப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்திருப்போம்.

இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு -தூரம் -பள்ளம் -திறந்தவெளி - இப்படி ஒன்னுதானில்லை சகலத்துக்கும் மரணத்தோட ஒரு முடிச்சை போட்டு பயந்து சாகிறோம். இந்த மரணத்தோட நிழல்களோட மோதி மோதி சாகிறோம் ( முன் கூட்டி)

குழந்தைக்கு குண்டலி ஆக்னால இருக்குமாம். அது ஆணையிடற பொசிஷன்ல இருக்கும். அது ஆருக்கும் அடிமையில்லை. அது அழ ஆரம்பிச்ச பிறவு தாவுத் இப்ரஹீமே ஃபோன் லைன்ல வந்து "மூச்" னுட்டு ஹை டெசிபல்ஸ்ல கத்தினாலும் அதும்பாட்டுக்கு கத்திக்கினே தான் கடக்கும்.

( பேச/பாட முடிஞ்சா - நான் ஆணையிட்டால்னு ஆரம்பிச்சு டி.எம்.எஸ் மாதிரி சோலோ கூட பாடும். ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் சுதந்திரத்தை இழந்துருது. விட்ட குறை தொட்ட குறையா எதுனா வெளிப்புற தூண்டுதல் ஏற்பட்டாலன்றி தின்னு -கழிஞ்சு - மிஞ்சிப்போனா கெட்டகாரியம் பண்ணியே அழிஞ்சு போயிருது.


இப்படி சுதந்திரம்ங்கறது ஆண்குழந்தைக்கு மட்டுமில்லை -பெண்ணுக்கும் பை பர்த் தரப்படுது. அம்மா ஊட்ல அம்மாக்காரி எதுனா நச் அடிச்சா அப்பங்காரன் " அடச்சீ.. அது போற இடத்துல எப்படி இருக்குமோ என்னமோ .. இங்கன கூட ச்சொம்மா கடுப்படிச்சுக்கிட்டு"ன்னு சப்போர்ட் பண்ணுவான்.

அப்பன் காரன் எதுக்குனா சீறிப்பாய்ஞ்சா அம்மாக்காரி " யோவ்.. கைய அடக்கு அது வளர்ந்து அடுத்த வீட்ல வாழப்போற பொண்ணு"ன்னுட்டு ப்ரேக் போடுவாள்.

ஆனால் மனித மனம் விசித்திரமானது அது நிகழ்காலத்தை மதிக்கிறதே இல்லை. எதிர்காலத்தை தேன் கனவு காணுது .அல்லது கடந்த கால நினைவுகள்ள மூழ்கிப்போகுது.

பெண் இயற்கை அவளுக்குள் விதைத்திருக்கும் பொறுப்பின் உந்துதலாலோ பருவம் தரும் துடிப்பாலோ முகம் தெரியாத ஒருத்தனை கனவு காண ஆரம்பிக்கிறாள்.

கனவுக்கு பட்ஜெட் பிரச்சினைல்லாம் கிடையாதே. அந்த கனவு தரும் மதர்மதர்ப்பில் தாய் வீட்டை வெறுக்க ஆரம்பிச்சுர்ரா. எப்பதான் இங்கனருந்து ஒழிவேனோன்னு முனுமுனுக்க ஆரம்பிச்சுர்ரா.

எதையுமே இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமை தெரியுது. அருமை தெரிஞ்சு அதை பொத்தி வச்சுக்கலாம்னு பார்க்கிற நேரத்துல அது திரும்பி வர்ரதே இல்லை.

அப்படித்தேன் பெண் தாய் வீட்டை இழந்துர்ரா. சரி ஒழிஞ்சு போவட்டும் புகுந்த வீட்லயாவது இது நான் கனவு கண்ட சொர்கம்னு அஜீஸ் ஆயிர்ராளான்னா இல்லை. அக்கரைக்கு இக்கரை பச்சை மாதிரி இப்பம் தாய் வீட்டு சுக போகங்களை (?) எண்ணி ஏங்கறா.

இந்த சிச்சுவேஷனுக்கு நான் ஒரு ஜோக் எழுதினேன்.

மனைவி: எங்க வீடு கோவில் மாதிரிங்க
கணவன்: அப்ப தெருத்திண்ணையில கிடக்கிற உங்கப்பன் பிச்சைக்காரனா?

ஆன்மா கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆனால் நாம ஆன்ம வடிவுல இருந்தப்ப உடல் என்ற சிறையை வேண்டி தவம் இருக்கோம். கொய்யால உடலோட இருக்கும்போது ஆஸ்ட்ரோ ட்ராவல் - காத்துல பறக்கறதுனு ஜல்லியடிக்கிறோம். இதெல்லாம் தேவையா?

இந்த எட்டாம் பாவத்துக்கும் அது தர்ர அடிமைத்தனத்துக்கும் ஒரு வேட்டு வைக்க வழியே இல்லையா? முக்கியமா தாய்க்குலம் - சனத்தொகையில சரி பாதி - அடிமைகளா இருந்தா - எப்படா எஜமானனுக்கு பெரலிசிஸ் ஸ்ட்ரோக் வரும் -எப்படா இவன் ஐ.பி போடுவான்னு புரட்சி பண்ண காத்துக்கிட்டிருந்தா -அந்த குடும்பம் என்ன ஆறது ? அந்த குடும்பத்து பிள்ளைகள் நாளைக்கு ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் ஆனா எப்டி? எல்லாத்தையும் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Thursday, July 14, 2011

ஆண் பெண் வித்யாசம்: 7 ஆம் பாவம் தொகுப்புரை






"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
இதில் ஒன்று மட்டும் இல்லை என்றால் எந்த வண்டி ஓடும்"

இங்கன சக்கரம்னா ஆண்,பெண் .ஐ மீன் புருசன் பொஞ்சாதி .ரெண்டு சக்கரத்தையும் ஒரு செயின் லிங்க் பண்ணனும். ஐ மீன் அன்பு .ஒரு சக்கரத்துல கூட சைக்கிள் ஓட்டலாம். ஆனால் அது சர்க்கஸ் ஆயிரும்.

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இது அந்த ஜாதகருக்கு மட்டுமில்லிங்ணா அந்த வைஃபோட சிஸ்டர்ஸ் , அந்த ஹஸ்பண்டோட ப்ரதர்ஸ்க்கு கூட பாதிப்பை தரக்கூடிய பாவம்.

அக்கா மாமன் கிட்டே லோல் படறானு தெரிஞ்சா தங்கச்சி காரி "தாளி நாளைக்கு புருசன்னு.ஒருத்தன் வந்தா அவனை நம்ம கட்டுப்பாட்ல வச்சுக்கனுங்கற முடிவுக்கு வந்துர்ரா - அண்ணிக்கிட்ட மாட்டி அவஸ்தை படற அண்ணனை பார்த்த தம்பி "கொய்யா கல்யாணமும் மானா ஒரு மசுரும் வேணா"னு ரோசிக்க ஆரம்பிச்சிர்ரான்.

சதா சர்வகாலம் வெட்டி மடியற ஆத்தா அப்பனுக்கு பொறக்கறதுங்களும் இதே மாதிரி தயாராயிருதுங்க. அக்கம்பக்கத்து குழந்தைகளோட சைக்காலஜி கூட பாதிக்கப்படுது.

பை மிஸ்டேக் இந்த தம்பதியில ஆரோ ஒருத்தரோ ரெண்டு பேருமோ டீச்சரா போனா அவிக கிட்ட படிக்கப்போற மாணவ/மாணவிகளோட சைக்காலஜியும் பாதிக்கப்படுது.. அதனாலதேன் 7 ஆம் பாவத்தை இம்மாந்தூரம் இஸ்துக்கினு வன்டன்.

பை தி பை இன்னைக்கு ரெண்டு தனி சிறப்பு பதிவுகளும் போட்டிருக்கேன்

1. நம் பதிவை நக்கலடிக்கும் கல்கி வார இதழ்


2. திருவிளையாடலில் பெண்ணடிமை கருத்துக்கள்



ஓவர் டு தொகுப்புரை ...............

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இயற்கையோ /ஆபாசமா சொன்னா கடவுளோ எந்த வித்யாசத்தையும் படைக்கலை.

வித்யாசம்லாம் சமூக அமைப்பை பொருத்துதான் வருது. மாதா -பிதா செய்தது மக்களுக்கு - ஜனனீ சவுக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிக்கா

ருணானுபந்த ரூபேணா பசு பத்னீ சுதாலயா - தன்வினை தன்னை சுடும் - வீட்டப்பம் ஓட்டை சுடும் - ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்.

எனவே தற்சமயம் அன் மேரீடா -லவ்ஸ் -கிவ்ஸுனு போகாதவுக மேரீட் பர்சன்ஸை - காதல் சோடிகளை நக்கலடிக்காதிங்க - கேவலமா நினைக்காதிங்க -கேவலமா பேசாதிங்க.

"இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று"ங்கற கவிஞர் வாக்கை ஞா வச்சுக்கங்க. ஆண் பெண் வித்யாசம் ஜஸ்ட் இனப்பெருக்க வசதிக்குத்தேன். என்ன 24 மணி நேரமும் "ஷோ"போடமுடியுமா என்ன?

விதைப்பதற்கு ஒரு காலம் உண்டு -அறுப்பதற்கு ஒரு காலம் உண்டு. நான் விதைக்க வ்ரமாட்டேன்னா அறுக்கற வேலையும் இருக்காது.

அன்பை விதைக்கனும். அப்ப அன்பு அறுவடையாகும். அன்புன்னா ஊர்பணத்தை ஆட்டைய போட்டு சென்ட்ரல் ஏசி போட்டா கிடைக்கிற அன்பு இல்லை.

நாமெல்லாம் நீண்ட நெடும்பயணத்துல தொடர்ர பயணிகள். பயணத்தின் லட்சியம் முக்தி. முக்திக்கு வழி கருமங்களை - பூர்வ கடன்களை ஒழிக்கிறது தேன்.

அதுல முக்கியமான கடன் வாழ்க்கை துணையோட கடன். உலகத்துல எத்தனையோ குட்டிங்க மூக்கும்,முழியுமா,கொப்பும் குலையுமா இருக்க "இவள் தான்" வந்து வாய்க்கனுமானு ஃபீல் பண்ணாதிங்க.

பார்யா ரூபவதி சத்ரு - பொஞ்சாதி அதிகமா பிடுங்கினா நீங்க அறிவி ஜீவி - பெரிய வி.ஐ.பி ஆகப்போறிங்கனு நினைச்சு சந்தோசப்படுங்க. ( உ.ம் சாக்ரடிஸ் , நெல்சன் மண்டேலா).

நல்ல பொஞ்சாதி அமைஞ்சா அது கடன். அந்த கடனை தீர்க்க மறுபடி பிறவி எடுக்கனும். மேலும் முக்திங்கற லட்சியமே மைண்ட்லருந்து எகிறிரும். நம்ம ஆன்மா உடல்லருந்து பிரிஞ்ச பிறவு மத்திய பொதுக்கணக்கு குழு கணக்கா நல்ல பொஞ்சாதி முக்திக்கான முயற்சிகளுக்கு எப்ப்டியெல்லாம் தடையா இருந்தான்னு கணக்கு போட்டு "அடுத்த ஜன்மத்துல பப்ளிக்கா சாணி கரைச்சு தலையில ஊத்தற பொஞ்சாதிதான் வேணம்னு அடம் பிடிச்சு அதுக்கேத்த கிரக நிலைக்காக காத்திருக்கனும்.

நாறிப்போன பொஞ்சாதி கிடைச்சா

விளம்பர இடைவேளை

உலகப் புகழ்பெற்ற மைசூர் பல்கலை கழகத்தின் அஃபிலியேஷன் பெற்ற பிரபல உயர் கல்வி நிறுவனத்தின் அங்கமாக பணி புரிய விருப்பமா? உங்க ஊர்ல இருந்துக்கிட்டே வேலை செய்யலாம். வ்யது கல்வித்தகுதிகளை விட உங்கள் துடிப்பும் -செயல் திறனுமே கருத்தில் கொள்ளப்பட்டு கை நிறைய ஊதியம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
7 நாட்களில் காலை 7 முதல் 9 க்குள் தொடர்பு கொள்ளவும்
செல்: 090000 36777


பதிவுக்கு போயிரலாம்...

நாறிப்போன பொஞ்சாதி கிடைச்சா போன ஜென்மத்துல நல்ல பொஞ்சாதி அமைஞ்சிருந்தாள் . அவள் உங்க முக்திக்கு தடையா இருந்து ஒரு பிற்வியை வீணாக்கிட்டானு அர்த்தம். முக்தி பாதையில ஒரு மைல் முன்னேறியிருக்கிங்கனு அர்த்தம்.

தாய்குலத்துக்கும் இதையேதான் சொல்லனும். கடவுள் பீக் ஹவர் டீ மாஸ்டர் இல்லே. ஸ்ட்ராங் டீ கேட்டவனுக்கு லைட் டீயும் - லைட் டீ கேட்டவனுக்கு ஸ்ட்ராங் டீயும் கொடுத்துர்ரதுக்கு. இன்னைக்கு உங்களுக்கு அமைஞ்சிருக்கிற வாழ்க்கை துணை உங்க கொட்டேஷன் படி ஸ்பெஷலா டை அடிச்சு - கிரைண்டிங் பண்ணி கொடுத்ததுதேன்.

கொட்டேஷன் ஃபார்மை ஃபில் அப் பண்ணும்போது உங்க நோக்கம் முக்தி. இப்ப உங்க நோக்கம் பக்கத்து போர்ஷன் பரிமளா புருசன் மாதிரி உங்க புருசன் இருக்கனும்ங்கறது.

பவர் கட் 2 மணி நேரத்துக்குன்னா நீங்க வாய்ல வயித்துல அடிச்சுக்கிட்டு அழுது புரண்டாலும் அஞ்சு நிமிசம் முன்னாடி கூட கரண்ட் வராது. (இந்த மேட்டர்ல தாளி ரெம்ப பங்க்சுவல் நம்மாளுங்க)

நான் ஏற்கெனவே சொன்னபடி உங்க வாழ்க்கைதுணையோட குணத்துக்கு அவரோட ஜாதகம் மட்டும் காரணமிலலை. உங்க ஜாதகமும் காரணம். கடந்த பதிவுல எந்தவிதமான எஃபெக்ட் இருந்தா அது எந்த கிரகத்தால வந்த எஃபெக்ட் அதுக்கு என்ன பரிகாரம்னு கரீட்டா கொடுத்து கீறேன்.ஃபாலோ பண்ணிக்கங்க.

வலியை சந்தோசமா ஏத்துக்கங்கனு நான் சொல்லமாட்டேன். எனக்கு வலிக்குதுடா பன்னாடைனு முகத்துல செயல்ல காட்டுங்க. இல்லாட்டி ஏதோ சினிமால வடிவேலு " எனக்கு வலிக்கவே இல்லை"ங்கறாரே அந்த மாதிரி ஆயிரும்.

அவன் இன்னம் ரெண்டு பெக் சாஸ்தி போட்டுட்டு வருவான். நமக்கு எது நடந்தாலும் அதுக்கு 50 சதவீதம் நாமும் பொறுப்பு.

எல்லா பொம்பளையையும் எல்லா ஆம்பளையும் எரிச்சுர்ரதில்லையே. சில பொம்பளைகளை சில ஆம்பளை மட்டும் எரிச்சுர்ரான். அவன் எரிக்கிறான்னா இவ ஜாதகம் அவனை எரிடான்னு தூண்டியிருக்கும்.

ஓட்டப்பந்தயத்துலயாகட்டும் -ஃப்ளைட்டாகட்டும் டேக் ஆஃப் ரெம்ப முக்கியம். அது கரீட்டா அமைஞ்சுட்டா வெற்றி நமக்குத்தேன்.

நீங்க பெண் ங்கற மேட்டர் உங்க உரிமைகளை நசுக்க ஆண்களுக்கு இயற்கை கொடுத்த லைசென்ஸ் இல்லை. அதே போல கடமைகள்ளருந்து தப்பிச்சுக்க இயற்கை கொடுத்த எக்செப்ஷனுமில்லை.

நீங்க பெண் என்ற நினைவு கழிவறை -குளியலறை - படுக்கையறையில மட்டும் நினைவுக்கு வந்தா போதும். மத்தபடி நீங்களும் ஒரு உயிர். ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் உங்களுக்கு உண்டு -கட்மைகளும் நிச்சயம் உண்டு.

பொறுத்தார் பூமி ஆள்வார் -பொறுமை பெருமை தரும்னுல்லாம் நான் ஜல்லியடிக்கமாட்டேன். பக்கத்து வீட்டுக்காரன் தன் வீட்டை டெமாலிஷ் பண்றானு வைங்க. நம்ம வீட்டுக்குள்ள தூசு விழும்போதே ' ங்கோத்தா இன்னாடா சோமாறி வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும்.ஒயுங்கா தட்டிகட்டிக்கினு வேலைய செய்"னு சொல்லிரனும்.

தூசுதானேனு இருந்தா தூண் விழும். ஜாதகத்துல 7 ஆம் பாவம் -அதன் அதிபதி -அவரோட சேர்ந்த கிரகங்கள் பார்க்கும் கிரகங்கள் இப்படி அனேக அம்சங்கள் அனேக ஆப்ஷன்ஸை தருது. அதுல உங்க டேஸ்டுக்கு /பொசிஷனுக்கு எது பெட்டரோ அந்த கிரகத்தோட ரூட்ல போங்க.

இல்லறமல்லது நல்லறமன்று - அட இன்னைய தேதிக்கு நல்லா ஸ்டடி பண்ணி - மேட்டரை புரிஞ்சிக்கிட்டு 30 வயசுல கண்ணாலமாகி - ஒரு 15 வருசம் போல ஒயுங்கா வாழ்ந்துட்டா போதும் தலை . அப்பாறம் அதுவே பழக்கமாயிரும் . அதை விட்டுட்டு மொட்டைத்தாத்தன் குட்டையில விழுந்த மாதிரி விழுந்து நாறிராதிங்க.

மஹிளா ஸ்டேஷன் -ஃபேமிலி கோர்ட்டுல்லாம் யதார்த்தத்துல நரகம். பொஞ்சாதிய பார்ட் டைமா ரூட்ல அனுப்பற பிக்காலி கூட அட்வைஸ் பண்ண வந்துருவான். புருசனை காவலுக்கு வச்சுட்டு தொழில் பண்ற பதிவிரதை கூட பழமொழில்லாம் சொல்லி கடுப்பேத்துவா..

தேவை ஒரு புரிதல் மட்டுமே.. ஓகேவா ..

திருவிளையாடலில் பெண்ணடிமை கருத்துக்கள்



இந்த ஆதர்ச திரைப்படத்துல தமிழ் கடவுளுக்கே கவுன்சிலிங் கொடுக்கும் அவ்வையார் கேரக்டரை தவிர எல்லா இடத்துலயும் மேல் சேவனிசம் இந்தியாவுல ஊழல் கணக்கா தாண்டவமாடுது. அவ்வை பாவம் எவ்ள செவ்வையா கவுன்சிலிங் கொடுத்தாலும் முருகன் கிட்டே பருப்பு வேகலை ஊஹூம்.(பருப்பு வேகலைங்கறதுல எத்தனாம் பெரிய சரோஜாதேவித்தனம் இருக்கு தெரீமா ஆருக்குனா தெரீமா -சமீபத்துல சாரு சாட்ல கூட இந்த பிரஸ்தாபம் வந்தாப்ல இருக்கு.

1.ஆத்தா பாவம் .. சினிமா ஆரம்பிக்கிற கட்டத்துல சிவனாரே சக்தியில்லையேல் சிவமில்லைனு ஸ்தாபிச்சிருந்தாலும் படியில பூவெல்லாம் போட்டு பூஜையே பண்றாள்.

2.முருகன் கோவிச்சுக்கிட்டு போறாருன்னதும் சிவாஜி ஒரு தாட்டிதேன் தந்திர காட்சியில படக்குனு வந்து நின்னு நில்லுங்கறாரு. பாவம் சாவித்திரியம்மாதேன் .. மகளுக்கு அம்மாக்காரி அட்வைஸ் பண்ற ரேஞ்சுல (ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான் - நாமதான் அஜீஸ்பண்ணிக்கிட்டு போகனும் ..வகையறா) அட்வைஸ் பண்றாய்ங்க.

3.மீனவரா வர்ர கதையில குட்டியா ஒரு ரேப்புக்கே ட்ரை பண்ற ரேஞ்சுல இருக்கு சிவனாரோட முயற்சிகள்.
மீனவர் தலைவனா வர்ர தாத்தாவும் - மீனவர்களை "சுறா" கொன்னு போடறதை பத்தி பேசற பேச்சும் நம்ம தாத்தாவையும் - சாவித்திரியம்மாவோட பேச்சு ஜெயலலிதாவையும் ஞா படுத்துது.

4.ஹேம நாத பாகவதர் எபிசோட்ல பரவால்லை. பாணபத்திரர் ஐ.சி ல புலம்ப ( தாழ்வு மனப்பான்மை) அவரோட மனைவி தெளிவா பேசறாய்ங்க.

5.பாகவதர் ஈகோயிஸ்டாவே இருந்தாலும் ரெம்ப சீக்கிரம் ரியலைஸ் ஆகிறாரு. ஸ்போர்ட்டிவா இருக்காரு. தோத்ததா எழுதியே கொடுத்துர்ராரே.. பாகவதருக்கு எதிரா சிவனுக்கு கொம்பு சீவ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோன்னு நேட்டிவிட்டி இஷ்யூவை கொண்டுவர்ரது அக்வார்டா இருக்கு. இசை தனி உலகம். அதுக்கு ஜியாகிரஃபிக்கல் லேண்ட் மார்க் - ஜூரிஸ்டிக்சன் எல்லாம் ஏது?

4. கடவுள் விறகு வெட்டியா வந்து ஆடறாராம். கன்னி பெண்ணை நக்கல் அடிக்கிறாரு (தளதளக்கும் மேனிய பார் பூவும் பொட்டுமா) - ஹவுஸ் வைஃபை கிண்டலடிக்கிறாரு ( எந்த நாளும் இவளுக்கிங்கே கர்ப வேசமா?) கொசுறுக்கு ஏரியா குட்டி ஒன்னு ஜொள்ளுதாம். கூடவே வந்துர்ரன்னுதாம். மிஸ்டர் ஷிவா போனா போகுதுன்னுட்டு ஆல்ரெடி எனக்கு ரெண்டுன்னுட்டு கழண்டுக்கறாராம்.

5.மேலும் தருமியா வர்ர நாகேஷ் சிவாஜி பாட்டை சபைக்கு கொண்டு போக நக்கீரர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லைன்னு வாதடறாரு. சிவாஜியோ இருக்குங்கற மாதிரி பாட்டு எழுதியிருக்காரு. பயாலஜிக்கலா பார்த்தா எஞ்ஜைம்ஸ் காரணமா இயற்கை வாசம் இருக்கத்தான் செய்யும். நம்ம நாசிகள் பெட் ரோல் /டீசல் வாசத்துல மரத்து கிடக்கு.

நமக்கு இன்னைய தேதிக்கு இந்த பாய்ண்டையெல்லாம் படிச்சா என்ன தோணுது. தூத்தேரி படமா எடுத்துக்கிறானுங்க?

பெண் குறித்த இன்றைய நம் கருத்துக்கள் கூட நாளை எதிர்காலத்தில் தூத்தேரி எனப்படலாம். எனவே அப்டேட் பண்ணிக்கங்க.. இல்லினா அவுட் டேட்டட் ஆயிருவிக.

Wednesday, July 13, 2011

ஆண் பெண் அந்தரங்கம்


அண்ணா வணக்கங்ணா !

ஆண் பெண் வித்யாசங்கள் தொடர் எழுதிக்கிட்டிருக்கம். அதுல ஏழாவது பாவத்துல 3 ஆவது தொடர்ச்சி கூட ஆயிருச்சு. இன்னைக்கு நாலுக்கு போகனும். ஞா இருக்குங்ணா. . இந்த பதிவை 4ஆவது தொடர்ச்சியாவும் வச்சுக்கலாம்ணா தனிப்பதிவாவும் வச்சுக்கலாம்ணா. அந்த மயித்துக்கு ஏண்டா கிழவா!.. இந்த வில்லங்கமான தலைப்புன்னு கேப்பிக சொல்றேன். ( இந்த மேட்டரு நடுவுல ஒளிஞ்சிருக்குதுங்னா)

அந்தரங்கம் - வில்லங்கம் அட ரெண்டு வார்த்தையும் சேர்ந்து ஒலிக்கும் போது லக்னமும் 6 ஆம் பாவாதிபதியும் ஒன்னு சேர்ந்தாப்ல ஒரு ஃபீலிங் வருது.

லக்னம்னா நீங்க -உங்க பாடி -உங்க மைண்டை காட்டற இடம்.. 6 ஆம் பாவம் சத்ரு ரோக ருண உபாதைகளை காட்டற இடம். உங்களுக்குள்ள (ஐ மீன் பாடி அண்ட் மைண்ட்ல) எத்த்னையோ அந்தரங்கமான விவகாரங்கள் நடக்கு இதயத்துடிப்புலருந்து சிறு நீர் சேகரிப்பு வரை. உறுப்பு புடைப்புலருந்து அபான வாயு புறப்பாடு வரை. அதனால அந்தரங்கம்னா அது லக்ன பாவம்தேன் . ( அந்தரங்கம்னௌ சொல்லனும்னா நெக்ஸ்ட் ப்ரிஃப்ரன்ஸ் 5 ஆம் பாவம்)

லக்னமே முரண்பாடுகளின் மொத்த உருவம். நல்லவனுக்குள்ள கலிகுலா - கொக்கோக -டெக்காமெரான்-அஜால் குஜால் -தக் ஜம்னு எத்தனையோ கசமுசாக்கள். . சதா சுடிதார் பின்னாடி அலையறவனோட மனசுக்குள்ள தாய் மடி -அது கொடுத்த ஜெட் கேட்டகிரி பாதுகாப்பு குறித்த நினைவுகள்.

இந்த நிலையில லக்னாதிபதியோட 6 க்கு அதிபதி வேற லிங்க் அப் ஆனா நிலைமை எப்படி இருக்குனு ரோசிங்க.

சத்ரு :
தன் சத்ரு ஆருன்னு ஆருனா தெரிஞ்சிக்கிட்டா அதுவே பாதி வெற்றி. ஆனால் ஆப்பு வாய் வரை வந்த பிறவுதேன் "யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு"ன்னு சோலோவா பாடறோம். பலர் சத்ராதிகளோடயே பேசி சிரிக்கிறோம். பகையை நெஞ்சுக்குள்ளாறவே வச்சுக்கிடறோம்.

ரோகம்:
எல்லா நோயும் ரஸ்னா பவுடர் மாதிரி நமக்குள்ளவே தூவப்பட்டிருக்கு. இதுவும் ரகசியம்தேன். இந்த நோய்களை அந்தரங்கமா நாம ஏத்துக்கிட்டாதேன் அட்டாக் பண்ணுதுங்கோ.

ருணம்:
சனம் பத்துவட்டிக்கு கடன் வாங்க பல காரணம் இருந்தாலும் கொடுக்கிறவன் ரகசியம் காப்பான்ங்கற நம்பிக்கையும் ஒரு காரணம். மேலும் கடன் பகிரங்கமா வளர்ரதில்லை.அந்தரங்கமாதான் வளருது.

ஏற்கெனவே அந்தரங்கத்தை காட்டும் லக்னாதிபதி - அந்தரங்கமான சத்ரு ரோக ருணாதி விசயங்களை காட்டுற ரோகாதிபதியோட சேர்ரது ரெம்ப டேஞ்சர்.

கொய்யால ஸ்தூலமா இவன் கடன் காரனானாலோ - நோயாளியானாலோ - லிட்டிகன்டா மாறினாலோ கூட பிரச்சினையில்லை .

இது போன்ற அமைப்புள்ள ஜாதகர் தனக்கு தானே எதிரியாயிரவும் வாய்ப்பிருக்கு. தனக்கு தானே நண்பனா இல்லாதவன் காதலிக்கோ -பொஞ்சாதிக்கோ எங்கன இருந்து நண்பனா இருக்கிறது?

வில்லங்க தலைப்பு காரணம்:

ஒரு காலத்துல இன்றைய இன்ட்லி தமிலிஷ்ங்கற பேர்ல இருந்தப்ப நம்ம பதிவுகள் கச்சா முச்சானு பிரபலம் ஆகும். ஒரு வேளை "புரிந்துணர்வு"பார்ட்டிகள் மொதல்ல இவனுக்கு போடுவம்.இவன் நமக்கு போடுவான்னு நினைச்சாய்ங்களோ என்னமோ? அந்த காலத்துல ஐ மீன் 1984 &1985 எசகு பிசகான நேரத்துல குட்டீஸ் பொய்யான ஸ்டேட்மெண்ட் விட்டு நாம ஓ போடனும்னு எதிர்பார்த்தா உடனே படக்குனு .. ற கேஸு நாம. நானே பெரிய பொய்யன். நிர்வாண உண்மைகள்னு வலைப்பூவுக்கு பேரை வச்சுக்கிட்டு காபரே தனமான மேட்டர்தான் எழுதிக்கிட்டிருக்கேன்.

இதுல பொய்யா பிரபலமாகிறதுல்லாம் நமக்கு வேலைக்காகாதுண்ணே.மூணு மாசத்துக்கு முந்தி தமிழ்மணத்துல ரீ என்ட்ரி கிடைச்சப்ப நம்ம ரேங்க் 1098 இன்னைக்கு ? வளர்ச்சிங்கறது தானா வரனும். பேட் கட்டி, விசேஷமான ஐட்டங்களை வச்சு ஆப்பரேட் பண்றதால வர்ரதெல்லாம் பர்ப்பஸை சர்வ் பண்ணுமா? ஊஹூம்.

அதனால நாம பொய் ஓட்டு போடறதில்லை. நமக்கும் ஆரும் பொய்யா ஓட்டு போடறதில்லை ( நெஜமாலுமே உ.வ பட்டு போடற பார்ட்டிகளுக்கு நமீதாவுடன் ப்ரேக் ஃபாஸ்ட் பிராப்திரஸ்து) .விட்டுது சனி. அதனால இப்பல்லாம் தமிழ்வெளியில டாப் 20ல வந்தாலே கதிமோட்சம் கிடைச்சாப்ல ஆயிருச்சு.

தமிழ்வெளியில டாப் 20 ல நம்ம பதிவு வரணும்னா இப்படி ஒரு தலைப்பு கியாரண்டியா வேணம். அந்தரங்கம்னா என்ன? ப்யூர்லி பர்சனல். ஜன்ய பாகங்கள் தான் ப்யூர்லி பர்சனலா/ நம்ம மனசுல எத்தீனி ம்ஷ்டு ஒளிஞ்சிருக்கு தெரியுமா? அந்தரங்கம்னா நாம மைண்டை தான் நினைக்கனும்.. ஆனால் நம்ம எண்ணம் நாலு கால் பாய்ச்சல்ல ரெண்டு கால் நடுவுல பூருது பாருங்க.

காரணம் என்னன்னா இயல்பான சில உணர்வுகள் அனியல்பா, அனியற்கையா அமுக்கி வைக்கப்பட்டிருக்கு. அதும் எப்டிங்கறிங்களா? ஸ்னாக்ஸ் எதுனா தின்னுக்கிட்டே இந்த பக்கத்தை படிக்கிற பார்ட்டியா இருந்தா இந்த பாராவை ஸ்க்ரால் பண்ணிருங்க

ஒரு காலத்துல ( கொய்யா இந்த ஒ.கா வார்த்தை நாலஞ்சு தடவை வந்துருச்சு - ஒனக்கு வயசாயிருச்சுடோ) கல்யாண மண்டபம்னா ஒரு பெரிய கூடம். மத்தியில நாலு கம்பம். டாப்ல ஓப்பன் ஏர். அங்கனதான் வச்சு தாலி கட்டுவாய்ங்க.

தாலி கட்டற சமயம் மும்பை மாதிரி எதுனா வெடிச்சு வச்சுதுன்னா ஓடிவரக்கூட முடியாது. சனம் அப்படி வெல்லத்துல ஈ மாதிரி மொய்ச்சிருக்கும் (புதுமண தம்பதியை) அந்த நேரம் பார்த்து இடுப்புல இருக்கிற புள்ளை கக்கா வருதுன்னா தாய்குலம் ஒடனே அதை ஒரு கைக்குட்டையில சேகரிச்சு முடிஞ்சு வச்சுப்பாய்ங்க. தாலி கட்டி முடிஞ்சு ட்ராஃபிக் க்ளியரான பிற்பாடு டிஸ்போஸ் பண்ணுவாய்ங்க.

அந்த மாதிரி தேன் சமூக கட்டுப்பாடு காரணமா இயல்பான - நம்ம செக்ஸ் உணர்வுகளை முடிஞ்சு வச்சிருக்கம். ஒரு கட்டத்துக்கப்பாறம் பேட் ஸ்மெல் கூட வர்ரதில்லிங்ணா. நம்ம கண், கை,கால் எல்லாமே ஒரு நாலு பேரால (சமூகம்) கட்டுப்படுத்தப்பட்டிருக்கு. (ஈவ் டீசிங்ல போட்டுக்கினு பூர்ராய்ங்களாம்) ஆனா நம்ம எண்ணத்தை எவனாலயும் பார்க்க முடியாது. அது தன் இயல்பான நிலையிலயே இருக்கு. ரெட்டை அர்த்த வசனங்களுக்கு இந்த ரவுசு நிறைஞ்ச மவுசு காலத்துல கூட மவுசு குறையாம இருக்க காரணம் இதுதேன்.

கேவலம் வெண்டைக்காயை முறிச்சு பார்த்து வாங்கற மாமிகள் கூட தங்கள் மகளுக்கு முப்பது வயசுக்கு மேல உள்ள மாப்பிள்ளையை ச்சூஸ் பண்றாய்ங்க.. இது என்ன நியாயம்னே தெரியலை.சரி முத்தலோ தொத்தலோ ஏதோ ஒரு இழவுனு கண்ணாலம் கட்டிவச்சா மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சுர்ராய்ங்க.

நான் இந்த பலான உவமைகளை விட காரணமே (என்ன ராசா ஏற்கெனவே உங்க பேரை ரெஃபர் பண்ணி பதிவுல சொல்ட்டனா? ) மூளையில செக்ஸ் மையமும் - அறிவு மையமும் பக்கம் பக்கமா இருக்குதாம். இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்கும்.. அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்கும்.

லக்னம் -ஏழு இந்த ரெண்டு இடமும் வெரி இம்பார்ட்டண்ட் .எக்சாமினேஷன் பாய்ண்ட் ஆஃப் வ்யூல கூட சாய்ஸ்லயோ காஃபிஸ்லயோ விட முடியாது. அட அப்படியே விட்டாலும் நாட்ல பாதி ஆண்,பெண்களுக்கு ரெண்டு ஒன்னு கரீட்டா இருந்திருந்தா குண்டு வெடிப்பு - தண்டவாள பெயர்ப்புக்கெல்லாம் அவசியமே இருந்திருக்காது.

லஞ்ச லாவணியம்லாம் எப்பயோ அவுட் டேட்டட் ஆகியிருக்கும். வன்முறைங்கற முள் மரம் பட்டுப்போயிருக்கும்.

சப் கான்ஷியஸ்ல பணத்தை செக்ஸுக்கு மாற்றாதான் ச்சூஸ் பண்ணோம். ஆனால் பாருங்க இன்னைக்கு செக்ஸே ரெண்டாம் பட்சமாயிருச்சு.

சப் கான்ஷியஸ்ல வன்முறையை செக்ஸுக்கு மாற்றாதான் ச்சூஸ் பண்ணோம். ஆனால் பாருங்க இன்னைக்கு செக்ஸே ரெண்டாம் பட்சமாயிருச்சு.

பலானது கிடைக்கலை அணையே அடிச்சுட்டு போயிர்ராப்ல இருக்கு சுய இன்பம் ஓகே. இது செக்ஸுக்கு மாற்று. ஆனால் ஒரு கட்டத்துல செக்ஸே ரெண்டாம் பட்சமாயிருதுல்ல அப்படித்தேன் இந்த இழவும் ஆயிருச்சு.

ஏழாம் பாவம் நல்லாயிருந்தா.. அட நாறியே போயிருந்தாலும் உரிய பரிகாரங்களை செய்துக்கிட்டு வந்தா
( ஐ மீன் சேஞ்சிங் லைஃப் ஸ்டைல் ) அந்த சோடி உருப்படும் .இப்படி பல்லாயிரம் சோடி உருப்பட்டா நாடே உருப்படும். அதனாலதேன் இந்த 7 ஆம் பாவத்தை பத்தி நை நைன்னு சொல்லிக்கிட்டே போறேன்.

திருவிளையாடல்ல சிவன் (சிவாஜி) சக்தியை ( சாவித்திரி) போகாதேங்கறாரு. சக்தி போறேன்ங்கறாய்ங்க..
முட்டிக்கிறாய்ங்க.

நாம வீட்ல பொஞ்சாதி 'என்னங்க.. என்னங்க .. ஒரே நா போயிட்டு வந்துர்ரங்க"ன்னு ஆரம்பிச்சா.. " தாராளமா போ.. ஒரு வாரம் பத்து நாள் இருந்துட்டு வா"ங்கறோம்.ஒடனே அவளுக்கு 1984 -85 ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஞா வந்துருது ( கண்ணாலம் என்னவோ 1991 லதேன். ஆனால் நம்ம சல்லாப சரித்திரத்தையே ஒப்புவிச்சாச்சுங்கோ) சரி சரி அடுத்த வாரம் பார்க்கலாம்னு ட்ராப் ஆயிர்ரா. மிஞ்சிப்போனா இன்னைக்கு மதியம் போய் மறு நா மதியம் வந்துர்ரா. (பேரணாம்பட்டு கிட்டக்க )

மிஸ்டர் ஷிவா ஏன் அப்படி இர்ரிடேட் ஆகிறாருன்னா சக்தியம்மா அங்கன தட்சன் கிட்டே யீல்ட் அப் ஆயிருவாய்ங்களோங்கற ஐ.சியா (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இருக்கலாம். ( லக்னாதிபதி விரயத்துல இருந்தா - லக்னாதிபதி விரயாதிபதியோட சேர்ந்தா இது மாதிரி ஒரு மென்டாலிட்டி வந்துருது)

இவரும் கெட்ட ஆட்டம்லாம் போட்டவருதேன். ஹோமோ உட்பட. தாருகாவனத்துல ரிஷிபத்தினிகளையெல்லாம் ஹோல்சேலா சினையாக்கின பார்ட்டிதானே. அதுல சக்தியம்மாவுக்கு எந்தளவுக்கு கம்யூனிக்கேட் பண்ணாரோ என்னமோ ? தட்சன் கசமுசான்னு எதுனா சொல்லி பொஞ்சாதி மனசை கலைச்சுட்டா என்ன பண்றதுன்னு பயந்தாரோ என்னமோ ? (இதெல்லாம் லக்னாதிபதி நீசமானா வர்ர கேரக்டர்)

சரி ஒழிஞ்சு போவட்டும். சாவித்திரியம்மா ஹிப்போ கணக்கா பாடிய வச்சுக்கிட்டு மாங்கு மாங்குனு போயி மொக்கையாகி திரும்பி வர்ராய்ங்க. மன்னாப்பு கூட கேட்கிறாய்ங்க.

ஒடனே இவரு என்ன பண்ணனும். " விட்டு தள்ளு கழுதை.. போயி சீரியல் பாரு"ன்னு ஆறுதலா பேசனும். இவர் என்னடான்னா ருத்ரதாண்டவமெல்லாம் போட்டு எரிச்சு போட்டுர்ராரு. இவருக்கும் வரதட்சிணை கேட்டு பொஞ்சாதிகளை பஸ்மமாக்குற புருச புழுக்களுக்கும் என்ன வித்யாசம்?

7 ஆம் பாவம் 1 - 2 -3 -4 -5 -6 -8-9-10-11-12 ன்னு எல்லா பாவங்களோடயும் இன்டர்லிங் ஆகியிருக்கு. இந்த பாவங்களிலான குறைகளை 7 ஆம் பாவம் ரெக்டிஃபை பண்ணலாம். அல்லது 7 ஆம் பாவமே கெட்டிருந்தா மேற்படி இன்னபிற பாவங்களை மொக்கையும் ஆக்கலாம்.

ஆண் பெண் அந்தரங்கம்னா சைக்காலஜிங்கோ. சைக்காலஜி தெரிஞ்சு இதம் பதமா நடந்துக்கிட்டா சம்சாரங்கற மின்சாரம் ஆட்டோகட் ஸ்டெபிலைசரோட வேலை செய்யும். இல்லின்னா லோ ஓல்ட்டேஜு,ஹை ஓல்ட்டேஜுன்னு உங்க பேட்டரியையே ஸ்மாஷ் பண்ணிரும் சாக்கிரதை.

Saturday, July 9, 2011

ஆண் பெண் வித்யாசம் ; 7 ஆம் பாவம் தொடர்ச்சி


அண்ணே வணக்கம்ணே !

7ங்கறது கேதுவுக்குரிய எண். கேது ஞான காரகன். 7 மனைவியை காட்டும் பாவம். ஒரு ஆண் எதையாவது சாதிக்கிறான்னா அவன் மணவாழ்வு தோல்வியா இருக்கவே வாய்ப்பு அதிகம். ங்கொய்யால வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆண் பின்னாடியும் ஒரு பெண் இருக்கானு சொல்றாய்ங்க.

தாளி ஜெயிச்சுட்டா ஒருத்தி என்ன பசுமந்தை மாதிரி ஒரு கூட்டமே இருக்கும். ஆனால் அவன் ஜெயிக்கனும்னா அந்த பென்ணை தாண்டி வரனும். அப்படி தாண்டி வந்தபின்னாடி அவன் பின்னே அந்த பெண் இருப்பாளா இல்லையா? அதைத்தேன் அந்த மேதாவி "உள் குத்தா' சொல்லியிருக்காரு.

பெண் என்றால் பேயும் இரங்கும்னுவாய்ங்க. என்னருந்தாலும் ஒரே இனம்தானே அதான் இரங்குதுனு ஒரு ஃப்ரெண்ட் சொன்னாரு.சில நேரத்துல பேய் அவிகளுக்குள்ளாற இறங்கவும் செய்யுது. பலகீனம்தான் பாவங்களின் கங்கோத்ரி.

பெண் குழந்தைகளுக்கு சின்ன வயசுலருந்தே சத்தான உணவு கொடுத்து - நீ வேண்டாத விருந்தாளி - இந்த வீடு உனக்கு சாஸ்வதமில்லை - புருசனை முந்தியில முடிஞ்சுக்கோ அது இதுன்னு சீரழிக்காம இருந்தா உடல் உள்ள பலம் சேர்ந்தா இந்த இழவெல்லாம் இருக்கவே இருக்காது.

ஆனால் யதார்த்தத்துல பார்க்கும்போது பலகீனம் . தன்னை சுற்றி ஒரு வட்டம். சின்ன வட்டம். அந்த வட்டத்துல தன்னை ராணியாவோ /ராஜகுமாரியாவோ கற்பனை பண்ணிக்க வேண்டியது. கொஞ்ச நாளு லவர்/ஹஸ்பண்டும் ஒத்து ஊதுவாய்ங்க. மோஜு தீர்ர வரை அப்பாறம் .. லொள்ளுதேன்.

ஆணுக்கு ஞானத்தை தர்ரதை நமக்கு ஒன்னும் அப்ஜெக்சனில்லை. அப்படியா கொத்த பொம்பளைங்க டன் டன்னா ஞானம் கொடுத்தாலும் அஞ்ஞானத்துலதான் சுவர்கமிருக்குனு வாழற ஆண்கள் அனேகர்.

எங்க ஊர்ல ஒரு டாக்டர் பொஞ்சாதி ஒரே ட்ரைவரோட 3 தாட்டி ஒடிப்பொயிட்டா. அந்தாளு விட்டானா? ஊஹூம். தேடிப்பிடிச்சு கொண்டு வந்து தன் வாழ்க்கைய ஒரே ஒரு மிமீ கூட மாத்திக்காம அதே யந்திர வாழ்வை வாழ்ந்துக்கிட்டிருக்கான்.

சரி 7ன்னா கேது - கேதுன்னா அல்லல் அலைச்சல் ஞானம்லாம் வருது ஓகே.ஏழாம் பாவத்தை அனலைஸ் பண்ண ஆரம்பிச்சதும் 24 மணி நேரத்துல ரெண்டு தாட்டி கணிணிய ஃபார்மட் பண்னவேண்டி வந்துருச்சு. இது மட்டுமா? அவாஸ்தும் சதாய்க்குது. அழகி ப்ளஸ்ஸும் கலாய்க்குது. ஏவிஜி போட்டா அது சிஸ்டம் ஃபைல் எல்லாம் தூக்குது. போதாக்குறைக்கு நம்ம ஏரியால ஏதோ புதுசா மின் கம்பம் நட ஆரம்பிச்சானுவ தாளி காலை 9 மணிக்கு போனது சாயந்திரம் 5.30 க்குதேன் கரண்டே வந்தது.

அட இதுல நியூமராலஜி என்ன தட்டுக்கெடுதுங்கறிங்களா? சனி இப்பம் கன்னியிலருந்து (6 மாசம் முன் கூட்டி) துலாவை பார்க்கிறாரு. ராசிச்சக்கரத்துல துலாம் 7 தானே. 7ன்னா மனைவி தானே. கடந்த ஜூன் 21 லருந்து ஒரு 6 மாசம் டிசம்பர் 21லருந்து ஒரு ரெண்டரை வருசம் நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதில்லாம் வெட்டி மடியனும்போல.

நம்ம பதிவு அதை தடுத்து நிறுத்திரும்னு சனி பகவான் பயந்துக்கனாரா? அல்லது ங்கோத்தா வாக் ஸ்தானத்துல நான் இருக்கேன். என்னை மீறி போயிருவியானு கட்டைய போட்டாரா? தெரியலை. இதோட
களத்திர காரகன் சுக்கிரன். இவருதேன் நமக்கு பாதகாதிபதி.

என்ன இழவோ அல்லா(ரு)மா சேர்ந்து பயங்கர ஆப்பு. இன்னைக்கு பதிவு போடாததுக்கு போதுமா சால்ஜாப்பு.

இப்பம் மேட்டருக்கு வந்துருவம்.

ஒரு பையன் மொதல்ல தாய் -அடுத்து தகப்பன் -அடுத்து ஆசிரியனோட இன்டராக்ட் ஆகனும். இந்த ப்ராசஸ் கரீட்டா நடந்துட்டா - இந்த இன்டராக்ஷன் ப்ரொடக்டிவா அமைஞ்சுட்டா அடுத்து வர்ர காதலி /மனைவியோடவும் "சகலமும்" சல்லுனு முடிஞ்சுரும்.

தாயை காட்டும் நாலாவது இடம் , தந்தை/ ஆசிரியனை காட்டும் 9 ஆவது இடம் கம்ஃபர்ட்டபிளா அமைஞ்சா அடுத்து என்ட்ரி கொடுக்கற பெண்ணுக்கு லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்கும். இல்லின்னா இம்சைதேன்.

ஏற்கெனவே சொன்னபடி ஆம்பளைய பொருத்தவரை அவனோட திருமண முயற்சி எத்தீனி தாட்டி தோத்தாலும் புதுசா ஒரு லட்டு கிடைக்கும் அவ்ளதேன். ( அவன் தலை எழுத்து டென்டர் ஹார்ட்டடா இருந்து ஃபீல் பண்ணா அது அவனோட தனிப்பட்ட தலை எழுத்து.)

ஆனா பெண்ணை பொருத்தவரை ஒரே சான்ஸுதேன். ஜஸ்ட் மிஸ்ஸானா போதும் அவளை வச்சு சரோஜாதேவி கதைகளையே சமுதாயம் எழுதிரும்.

யதார்த்தம் இப்படி இருந்தாலும் ஜோதிட ரீதியா பார்க்கும் போது மணவாழ்வுல தோத்தா ஆணுக்கும் ஆப்புதேன்.

ஒரு குடும்பத்தில் ஆண்,பெண்கள் உரிய வயதில் திருமணமாகாமல் ஏங்குவது - காதல் திருமணம் செய்வது ( செய்து அவதிப்படறவுகளை மட்டும் இந்த கேட்டகிரில கொண்டுவாங்க) - ஓடிப்போவது - ரெண்டாம் தாரமாய் வாழ்க்கை படுவது -வயதில் மூத்த பெண்/இளைய ஆணை மணப்பது - மணவாழ்வில் பிரச்சினைகள் -பிரிவுகள் - இளம் வயதில் வாழ்க்கை துணையை இழத்தல் - வாரிசில்லாமல் போதல் - கள்ள உறவுகளுக்கு துணிதல் இப்படியெல்லாம் அதிகமாக கஷ்டப்பட அக்குடும்பத்து முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு செய்த துரோகமே காரணம்.

துரோகம் மீன்ஸ் கண்ணாலம் கட்டிக்கிறேனு கைவிடறது - கண்டவளை படுக்கப்போடறது - சின்ன வீடு வைக்கிறது -சின்ன வீடா வச்சுக்கிறது - பொஞ்சாதி கண் முன்னாடியே இன்னொரு "சேர்க்கைய"கொண்டு வர்ரது - பெண்களுக்கு கண்ணாலம் பண்ணும்போது மாப்பிள்ளைய பத்தி சரியா விஜாரிக்காம - அல்பாயுசு காரனுக்கு கட்டிக்கொடுத்துர்ரது எல்லாமே துரோகம்தேன்.

இதை ஜோதிட ரீதியாய் வெகு சுலபமாக நிரூபிக்க முடியும். கொய்யாமரத்துக்கு கொய்யாவே காய்க்கும். ஒரு வமிசாவழி கூட மரம் போன்றதே. சமஸ்கிருதத்தில் இதை வம்ச விருட்சம்(மரம்) என்றுதான் சொல்வார்கள். இப்படி பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படியாக வாழ்ந்த ஆண்களை கொண்ட வம்சத்தில் ஆண் வாரிசு இல்லாது போகும். காதல் திருமணங்கள் நடைபெறும். ஆண்களுக்கு அகால துர்மரணங்கள் சம்பவிக்கும். பெண்கள் இளவயதில் விதவையாவார்கள்.

நேரு குடும்பத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நேரு அப்படியும் இப்படியுமாக வாழ்ந்தவர். அந்த காலத்தில் லேடி மவுண்ட் பேட்டனுக்கே ரூட் போட்டவர் என்று பேச்சு உண்டு. அவர் செய்த பாவம் அவருக்கு ஆண் வாரிசின்றி போனது. இந்திரா காதல் திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் ,ராஜீவ் காதல் திருமணம் செய்து கொண்ட் அகால+ துர் மரணமடைந்தனர். மேனகா, சோனியா சிறுவயதிலேயே விதவையானார்கள். தற்போது ராகுல் காந்தி கூட காதல் திருமணமே செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஒரு குடும்பத்துல முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு துரோகம் செய்திருந்தால் அந்த குடும்பத்தில் பிறக்கும் ஆண், பெண்கள் , அக்குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண்கள் (மருமகள்கள்) ஜாதகங்களில் எல்லாம் சுக்கிரன் பலவீனப்படுதல், ஏழாமிடம் கெட்டிருத்தலை காணலாம். செவ் தோஷம்,சர்ப்ப தோஷம்லாம் சர்வ சாதாரணமா அமையும்.

மாதா,பிதா செய்தது மக்களுக்கு. இவற்றை ஜாதகத்துல எந்த கிரகம் கெட்டதுங்கறதை வ்ச்சு பிதுர் சாபம் - சுக்கிர சாபம் -சயன தோஷம் - புத்ர தோஷம் னுட்டு பல பேர்கள்ள குறிப்பிடறாய்ங்க.. இதற்கு பரிகாரமாகத்தான் ஏழை சோடிகளுக்கு திருமணம் சுமங்கலி பூஜை இத்யாதி செய்யப்படுகின்றன.

சயன தோஷம்னு ஒரு தோஷம். அஜால் குஜால் வேலைக்கு சமஸ்கிருதத்துல சய்யா சௌக்கியம்னு சொல்றாய்ங்க. சயனம் - படுக்கை ( உ.ம் அனந்த சயனம்) படுக்கை சுகத்துக்கு இப்படி ஒரு நாகரீகமான பேரு. 12 ஆமிடம் தேன் சயனசுகத்தை காட்டுதுங்கோ..

அங்கன பாபகிரகம் இருந்தா இவன் நெருங்கும்போது அவளுக்கு டைப்ரைட்டர் ரெட் ரிப்பன்ல ஓடிக்கிட்டிருக்கும். இவளுக்கு மதமதன்னு இருக்கிறச்ச அவன் டாரா கிழிஞ்சு தூங்கிக்கிட்டிருப்பான்.

டாக்டர் ஒய்.எஸ்.ஆர் விஷயத்தில் எடுத்துக்கொண்டால் அவரது தந்தை ஃபேக்ஷனிஸ்ட் என்று பெயர் எடுத்திருக்கலாம், அசைண்ட் பூமிகளை (அரசு எஸ்.சி.எஸ்.டி.க்கு ஒதுக்கிய நிலங்களை )பறித்திருக்கலாம். (அவற்றை கூட ஒய்.எஸ்.ஆர் தாம் முதல்வராக இருந்த போது அரசுக்கு ஒப்படைத்துவிட்டார். ) ஆனால் பெண்கள் விஷயத்தில் ஒய்.எஸ்.ஆரின் தந்தையாகட்டும், ஒய்.எஸ்.ஆராகட்டும் எவ்வித புகாருக்கும் கூட ஆளானதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமது ஆதரவாளர் இந்திரா ரெட்டி மறைவுக்கு பிறகு ஒய்.எஸ். ஆர் அவரது மனைவியான சபீதா இந்திரா ரெட்டியை " சேவிள்ள செல்லெம்மா" ( சேவிள்ளாவில் உள்ள தங்கை என்று பொருள்) என்று பாசம் காட்டினார். எந்த புது திட்டமானாலும் சபீதாவின் சேவிள்ளாவில் தான் அறிவிப்பது வழக்கம். தமது இரண்டாவது இன்னிங்ஸில் சபீதாவுவை உள்துறை மந்திரியாக்கி அழகு பார்த்தார். அதனால் தான் 60 வயது வரை நிறைவான வாழ்வை வாழ்ந்தார் ஒய்.எஸ்.ஆர். (ஆங்கில தேதிப்படி 2009 ஜூலை எட்டாம் தேதி சஷ்டியப்த பூர்த்தி/ செப்டம்பர் 2 ஆம் தேதிதான் ஏர் கிராஷ்)

சரிங்ணா டயாக்னசிஸுக்கே இந்த பதிவு சரியா போச்சு அடுத்த பதிவுல ட்ரீட்மெண்டை பத்தி பார்ப்போம்