Showing posts with label ஜோதிடம் கற்க. Show all posts
Showing posts with label ஜோதிடம் கற்க. Show all posts

Sunday, September 4, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (3)


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னம் கடகம்னு ஆரம்பிச்சா சித்தூருக்கு பஸ்ஸை விஜாரிக்க ஆரம்பிச்சுருவிங்க.( வேற எதுக்கு கடுப்புல தேடிப்பிடிச்சு ஒதை கொடுக்கத்தான்) ஆனால் என்ன பண்றது நடப்பு லக்னத்தை ஞா படுத்துதே. ஜோதிட பால பாடம் துணுக்கா -டெக்ஸ்டா ஆரம்பிச்சு ஆடியோவா அவதாரம் எடுத்து இன்னைக்கு 3 ஆவது நாள்.(மழை எப்படி ஆரம்பமாகுமோ அப்படி- கடகத்துக்கு அதிபதி சந்திரன் -அவர் ஜலகாரகன்)

தாளி .. வார்த்தையில முழுக்க கொண்டு வரமுடியலியே தவிர செவ்வாயை பற்றி மட்டும் ஒரு செமினாரே நடத்திரலாம் போல இருக்கு. சரிங்ணா ஆடியோ பாடம் தானே .வருது வருது இந்த "லேகியம் விக்கிற கணக்கா எழுதினதே அதை பத்தித்தானே..

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. கருத்து மழைக்கு கமெண்ட் மழை நிச்சயம்தானே .

Saturday, August 27, 2011

ஜோதிட பால பாடம்:9 & குரு வக்ர பலன்




அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்னைக்கும் தொடருது.இதை வரிசையா தரமுடியலை. படிச்சுட்டு நீங்க கேட்கிற கேள்விகளுக்கு பதில் தர முடியலை.(ஏற்கெனவே கேட்டு வச்சிருக்கிறவுக மன்னிக்கனும். கேட்க நினைக்கிறவுக ரோசிக்கனும்).

டோன்டுவின் பதில்கள் மாதிரி கேஸில்லை இது. டோண்டு சார் மொதல்ல பதிலை ரெடி பண்ணிக்கிட்டு அப்பாறம் கேள்வி கேட்டுக்குவாரோ அ டோன்டு சார் இப்படியா கொத்த கேள்விகளுக்குத்தான் பதிலளிப்பாருன்னு சனம் கேள்வி கேட்குதோ தெரியாது..

நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் நாளா பொழுதா உட்கார்ந்து அடிச்சாலும் முழு பதில் தரமுடியாது. சோசியம் ஒரு சமுத்திரம் ( ஏழு சமுத்திரம்னு சொல்றாய்ங்க - நாம பாஆஆஆஆஆஅர்த்தது ஒரு சமுத்திரம்தானு வச்சிக்கங்க).

அதிலயும் நாம பதில் சொல்லனும்னா கால காலமா இருந்து வர்ர அப்செஷனையும் சொல்லனும். அதுல எதெல்லாம் இன்னைக்கும் பொருந்துது எதெல்லாம் பொருந்தாது ஏன் பொருந்தாதுன்னும் சொல்லனும்.
பார்ப்போம்.வாக்குல கீற சனி கழண்டுகிடட்டும் . குரல் பதிவானா போட்டு அசத்திருவம்ல. நெஜமாலுமே நேரம் இல்லிங்ணா.

வேலை செய்யறது எவ்வளவு முக்கியமோ அந்த வேலைக்கு தொடர்பில்லாம வெட்டியா கொஞ்ச நாழியாவது இருக்கிறதும் அவ்வளவே முக்கியம். இது நம்ம செயல் திறனை இரட்டிப்பாக்கும். அதனால வெட்டியாவும் கொஞ்ச நாழி அலையவேண்டியதா இருக்கு. மேலும் ..........

நாம லோக்கலா நடத்திட்டு வர்ர பத்திரிக்கை ரம்ஜான்+ வினாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தயாராகிவருது ப்ளஸ் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை எல்லாம் சேர்ந்து கழுத்தை நெறிக்குது. நம்ம சுகுமார்ஜி மணி,போன்றவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வாய்ங்கன்னு ஒரு நம்பிக்கை.பார்ப்போம்.

ஹசாரே செயிச்சுட்டாரு. வாழ்க்கையில ஒரு குரூரமான விதி என்னன்னா சிலர் வெற்றியின் போது புத்தி சாலியா காட்சி தந்து தோத்துட்ட பிற்காடு மகாமடையர்களா எக்ஸ்போஸ் ஆயிருவாய்ங்க. ( மதுரை வீரர்களை பார்க்கிறிங்கல்ல)

சிலர் தோல்வியில மகா புத்திசாலிகளா ,உத்தமர்களா காட்சி கொடுத்து வெற்றியின் போது முட்டாள்களா, மகா கெட்டவுகளா எஸ்டாப்ளிஷ் ஆயிருவாய்ங்க. (அம்மா சம்ச்சீர் கல்வியில மாட்னாய்ங்களே- எமபுரத்து கதவை தட்டறவனுக்கு இதயத்துக்குள்ளாற நேரடியா இறக்கின ஊசி மருந்து அது)

வெற்றி தோல்வி ரெண்டுலயும் ஒரே மாதிரி காட்சி தரக்கூடிய பார்ட்டி உலகத்துல நாம ஒருத்தந்தேன்.
( மடையனா). நாம மக்கள் பார்வையில மடையனா இருக்க காரணம் இப்டி இருந்தாதான் ஆத்தா டொக்கா வந்து சி(ரி)க்கறா.

நம்ம சைட்ல திடீர்னு ரெட்டிங்கல்லாம் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டாய்ங்க. (ரெம்ப சந்தோசப்படாதிங்க) இதுவும் நம்ம ஜா.ராவோட லீலைகள்தான். அவரு ஹாரம்னு ஒரு மல்ட்டி லிங்குவல் அக்ரகேட்டர்ல மெம்பரு.அங்கன தெலுங்கு பிரிவுல பிடிச்ச பேரை வச்சுக்கிட்டு புல்க்கு காட்டறாரு.

நேற்றைய பதிவுல கம்ப்யூட்டர் திருடு போச்சுன்னு சொல்லியிருந்தேன். நமக்கு வந்த தகவலை வச்சுத்தேன் பதிவெழுதினன். மேட்டர் இன்னாடான்னா மானிட்டரை மட்டும் லபக்கிக்குனு பூட்டுக்கிறானுவோ. சிபியுவை கவுத்து போட்டுட்டு போய்க்கிறானுவோ. அதுக்கு பவர் ப்ளக் எல்லாம் போயி ஒரு வண்டி இன்சுலேஷன் டேப் போட்டு ஒப்பேத்தி வச்சிருந்தம். இதுல அப்பப்போ டிம் அண்ட் டிப் அடிக்கும். இது நம்ம கிட்டே இருக்கிறப்பவே பார்த்துட்டு ..........

நம்ம ஃப்ரண்ட் ஒருத்தரு ( ஹார்ட் வேர் கம் சாஃப்ட்வேர் சர்வீஸ்) "யப்பா.. பெரிய சைஸ் ப்ளாக் அண்ட் வைட் மானிட்டருங்க கேப்பார் மேப்பார் இல்லாம நம்ம கிட்ட டஜன் கணக்கா விழுந்து கிடக்கு ஒன்னை கொண்டு போயி வச்சுக்க. நான் என்ன காசு பணமா கேட்கறேன்" னு ரெம்ப நாளா சொல்லிக்கினு இருந்தாரு. நாம தேன் சொம்மா வந்தா கருமமும் சேர்ந்து வரும்னு ப்ரேக் பண்ணி வச்சிருந்தம். நாளைக்கு மானிட்டர் ரெடி நாமினலா நூறோ இரு நூறோ கொடுத்துட்டு கொண்டு வைக்கனும். ஆத்தா புகழ்பாடும் தெலுங்கு கவிதைகளை வலையேற்றியே தீர்ரதுன்னு ஒரு கெட்ட முடிவு எடுத்திருக்கமில்லை.

வர்ர நவராத்திரிக்குள்ள ஏதோ ஒரு அற்புதம் நடந்தே தீரனும். அதேன் டார்கெட்டு.

அப்பாறம் ரெம்ப முக்கியமான சமாசாரம் 2011 ,ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 25 வரையிலான குரு வக்ரகாலம் பத்தி சில வரியாச்சும் சொல்லனும்.

திருடு போன கடைக்கு சொந்தக்காரனோட ராசி ரிஷப ராசி. குரு இப்பம் மேஷத்துல இருக்காரு. ஆகஸ்ட் 30 முதல் வக்ரம்.. இந்த் எஃபெக்ட் ஒரு மாசம் முந்தியே வந்திருச்சு. ( மகனோட ஃபீஸ் மேட்டர் கடந்த ப்திவுலயே சொல்லியிருக்கன்) குரு அஷ்டமாதிபதி இவரு 12ல மறைஞ்சா யோகத்தை தானே தரனும். ஏன் ஆப்படிச்சுட்டாரு? அதான் வக்ரத்தோட ஸ்பெஷாலிட்டி .

நல்லது செய்யற இடத்துல இருந்து கிரகம் வக்ரமானா கெட்டதை செய்யும். கெட்டது செய்ற இடத்துல வக்ரமானா நல்லதை செய்யும்.

ஆனால் அந்த கிரகம் லக்னாதிபதின்னா மட்டும் எங்கன வக்ரமானாலும் நாஸ்திதேன். இதுலயும் ஒரு ப்ளஸ் இருக்கு.

நாம கடந்த சிலகாலமா சிங்கிள் டீக்கு சிங்கியடிச்சுக்கினு கீறோம்னு வைங்க. அப்பம் பார்த்து நம்மலக்னாதிபதி வக்கிரமானா அந்த வக்கிர காலம்வரை ஏக் தின் கா சுல்தான் கணக்கா இருக்க சான்ஸ் இருக்கு. இதுவே நாம க்ளாக் வைஸ் லைஃப்ல இருக்கிறச்ச லக்னாதிபதி வக்ரமானா டப்பா டான்ஸ் ஆடிரும். இதே விதியை உறவு -பிரிவு , நோய் -உடல் நலம்னு அப்ளை பண்ணிக்கிடுங்க.

குரு தனுசு மீனங்களுக்கு அதிபதிங்கறதால இந்த ரெண்டு ராசிக்காரவுக 2011 மே 8 க்கு அப்பாறம் இருந்த நிலைக்கு மாறான நிலை இப்பம் ஏற்படும்ங்கறதை புரிஞ்சிக்கிட்டு உசாரய்யா உசாரு.

மத்த ராசிக்காரவுகளை பொருத்தவரை குரு நல்லது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா கெட்டது .கெட்டது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா நல்லது. அடிபப்டை விதி இது . இதை வச்சு 12 ராசிக்கும் ஆருனா வக்ரகால பலன் எழுதினா பிரசுரிக்க காத்திருக்கம்.

ஆரும் எழுதலைன்னாலும் டோன்ட் ஒர்ரி இங்கே அழுத்தி உங்க ராசிக்கான 2011 குரு பெயர்ச்சி பலனை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க. அந்த பலனுக்கு நேர் எதிரிடை பலன் தான் நடக்கும். உடுங்க ஜூட்..

இனி ஜோதிட பால பாடம் ...........
7ஆமிடம் கெட்டால்:
ஜாதகருக்கு காதல்திருமணம் அ பெரியோரில் சிலருக்கேனும் விருப்பமில்லா திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அனைவரையும் எதிர்த்து மணந்தாலும் மனைவி வகையிலும் இவருக்கு நிம்மதி கேள்விக்குறியே.
லக்னத்தில்/ஐந்தில் சூரியன் பகை நீசம் பெற்றால் /சனி -ராகு-கேதுவுடன் சேர்ந்தால் :
தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம்.வலது கண்ணில் பிரச்சினை வரலாம். ஜாதகரை மறதி வாட்டும். அகந்தை மிக்கவராக இருந்து பின் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக மாறுவதோ , அல்லது ஆரம்பத்தில் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக இருந்து அகந்தை மிக்கவராகவோ ஆவார். ஆனால் இரண்டுமே ஜாதகருக்கு நலம் பயக்காது. சலாம் போட்டால் சட்ட விரோத சக்திகளுடன் உறவு ஏற்பட்டு விசாரணக்குட்பட வேண்டி வரும். அகந்தை மிக்கவராக இருந்தால் மேற்படி சட்ட விரோத சக்திகளால் தொல்லைகள் ஏற்படும்.
விரய பாவம் கெட்டால்:
ஜாதகருக்கு டீப் ஸ்லீப் இருக்காது. விழிப்பும்,தூக்கமும் மாறி மாறித்தொடரும்.இதனால் கனவுகள் அதிகம், சில நேரம் வாய்விட்டு உளறவும் கூடும்.
பரிகாரம்
மார்னிங்க்,ஈவினிங்க் வாக் செய்யவும்.( சூரிய ஒளி பாடி மேல படனும்) தந்தை வழி முன்னோர்களை நினைத்து தலை தொடர்பான பிரச்சினகள் உள்ளவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவும்.
சந்திர வீடு:
வீடு அமைந்திருக்கும் பகுதி நீர் நிலையை ஒட்டியதாகவோ, பள்ளமான பகுதியாகவோ இருக்கலாம். யார் எவ்ள நேரம் இருப்பாய்ங்கனு தெரியாத கட்டிடத்தை ஒட்டி இருக்கலாம். உ.ம் திருமண மண்டபம் -காய் கறி மார்க்கெட்
செவ்வாய் தொழில்:
போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே, எலகட்ரானிக்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங், ஹோட்டல் ,நெருப்பு ,மின்சாரம் தொடர்பானவை
குரு தொழில்:
கோல்ட்,ஃபைனான்ஸ், டீச்சிங், பாலிடிக்ஸ், கோர்ட், சேவை நிறுவனங்கள், கோவில்,மத நிறுவனங்களில் வேலை.
சூரிய தொழில்:
தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்தல் அத்யாவசிய பொருட்கள், விளம்பரத்துறை, விற்பனை துறை (அட் டோர் ஸ்டெப்ஸ்)
சந்திர தொழில்:
ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் தொடர்பான சினிஃப்ளெக்ஸ்,ஏர் போர்ட்,பஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன்,திருமண மண்டபம், லாட்ஜு போன்ற துறைகள் , அழுகும் பொருட்கள் ,திரவ வடிவிலானவை, ரெண்டே கால் நாட்களுக்குள் முடிந்து விடக்கூடிய டீலிங்குகள், தினசரி செய்தித்தாள் விற்பனை/ஏஜென்சி
கடக குரு:
வாழ்வின் முற்பகுதியில் பயங்கர கடன் காரராகவும்,குடும்பத்துடன் ஒத்து போகாதவராகவும், தொண்டை ,கண் பகுதியில் நோய் உள்ளவராகவும் இருப்பார். ஆனால் பிற்பகுதியில் பெரும்பணக்காரராகவும், சொத்துக்கள் சேர்ப்பவராகவும், தர்ம காரியங்கள் செய்பவராகவும் இருப்பார். வயதான (பழுத்த) ஒரு தம்பதியை பராமரிப்பார்.( தாய்,தந்தையராகவும் இருக்கலாம்).
ராகு தொழில்:
லாட்டரி, சினிமா , சாராயம், லைசென்ஸ் இல்லா(வாங்காத) தொழில்கள் அனுகூலம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் . இருட்டில், இரவில் செய்யும் தொழில்
சனி மனைவி:
99.9 சதவீதம் காதல்+கலப்பு திருமணம் நடக்கலாம். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமானால் தம்பதிகள் பிரிவர். அ மனைவி நோய்வாய்படுவார். மனைவி ஏழை குடும்பத்தில் பிறந்திருப்பார். ஜாதகரை காட்டிலும்மூத்தவராக இருக்கலாம் அ தோன்றலாம். சாலையில் மனைவியுடன் சென்றால் அக்காவா வீட்டு வேலைக்காரியா என்று பார்த்தவர்கள் நினைப்பர்.மேற்கு திசையில் இருந்து அல்லயன்ஸ் வரும். புதிய உறவில் தான் அமையும். ஒரு வேளை ஜாதகர் தமது ஊழியர் எவரையாவது மணக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Friday, August 26, 2011

ஜோதிட பாலபாடம்: 8

லக்னாதிபதி எட்டில்:
லக்னாதிபதி உங்களை காட்டும் கிரகம். எட்டு மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி எங்கே இருந்தாலும் நன்மை செய்யனும்.அவர் மரணத்தை காட்டும் இடத்துல நின்னாரு. இதன் பொருள் என்ன? உங்க லக்னாதிபதி மரணத்தின் மூலம் நன்மை செய்வார் அந்த மரணம் உங்க போட்டியாளரோடதா இருக்கலாம் -உங்க எதிரியோடதா இருக்கலாம் - அல்லது உங்கள் உறவினரா இருக்கலாம். அந்த மரணத்தின் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு -சொத்து -சுகம் வரலாம் என்பது இதன் பொருள். ஒரு வேளை நீங்க எதுனா பெரிய விபத்தில் சிக்கி நஷ்ட ஈடு இத்யாதி வரலாம்.

ரோகாதிபதி இரண்டில்:
நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் ஜாதகர் வீண் பேச்சு,வெட்டிப்பேச்சால் வம்புகளை விலை கொடுத்துவாங்குவார். அல்லது மிக அவசியமான நேரத்தில் கூட வாய் திறந்து பேசாது இருந்துவிடுவார்.அதனால் பல நஷ்டங்கள் ஏற்படும்.நோய்கள்,கடன்,விரோதங்களேற்படலாம். கண்,தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் வே ஆஃப் ப்ரசண்டேஷனில் பிரச்சினை வரலாம்.

லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றால்:

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன் எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

ஆக லக்னாதிபதி உச்சம் பெற்றால் அது மினிமம் கியாரண்டி ஜாதகம்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிரலாம்.

இதுல ஒரு மைனஸ் பாய்ண்டும் இருக்கு.ஓஷோ சொல்வாரு " நீங்க மத்தவுகளை விட உயர்ந்துட்டா பிரச்சினை அதிகம்"

மத்தவுக குண்டூசி தவறி விழுந்ததுக்கு பதறிப்போயி காட்டுக்கத்தல் கத்த "யார் கால்லயாச்சும் குத்திர ப்போவுதுப்பா மொதல்ல அதை பொறுக்கி எடுத்து அதுக்கான டப்பாவுல போடு"ன்னு சொன்னா எதிராளிக நொந்துபோய்ருவாய்ங்க

மேலும் எதிர்காலத்துல நீங்க என்னவா மாறப்போறிங்களோ இளமையில அதுவாவே இருப்பிங்க இதை சாமானியர்கள் டைஜஸ்ட் பண்ணிக்க முடியாம நொந்துப்போயிருவாய்ங்க. உங்களை நோகடிக்கவும் கூடும்.

எந்த கிரகம் கெட்டால் - எந்த கிழமையில் - எந்த கடவுளை வழிபடலாம்:

சூரியன் -ஞாயிறு -சூரிய நமஸ்காரம்,காயத்ரி
சந்திரன் -திங்கள் கிழமை -கன்னியாகுமாரி
செவ்வாய் -செவ்வாய் கிழமை - சுப்பிரமணியர் -ரத்த தானம்
ராகு -வெள்ளிக்கிழமை (காலை 10.30 முதல் 12 க்குள்) புற்றுள்ள -அய்யர் பூசை பண்ணாத அம்மன் கோவில்
குரு -வியாழகிழமை - தட்சிணா மூர்த்தி அ எவரேனும் குரு
சனி - சனிக்கிழமை - ஆஞ்சனேயர் அ கிராமதேவதை
புதன் - புதன் கிழமை - நாமம் போட்ட சாமி (எதுவானாலும் சரி) எஸ்பெஷலி கிருஷ்ணர்
கேது - திங்கள் காலை 7.30 முதல் 9 க்குள் வினாயகர்


குரு சுபனாகி/அசுபனாகி தனித்து நின்றால்;

அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம்:
இது ஒரு ஜோதிட பழ மொழி. அந்தணன் என்பது குருவை குறிக்கு சொல். இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னா ..


குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம். ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும்.( மேலும் உங்க ஜாதகத்துல செய்தொழிலை காட்டற 10 ஆமிடத்துக்கும் குருவே அதிபதியா இருக்காருங்கறதால இந்த பலன் ரொம்பவே ஒர்க் அவுட் ஆகும்)

யுவார் ஓகே. ஆனால் உங்களை சுத்தி உள்ளவுகளும் ஆரோக்கியமான உடலும்,மனசும் பெற்றிருக்கனுமில்லையா? அப்படி இல்லேன்னா என்ன ஆகும்?

உடல்,மன ஆரோக்கியம் காரணமா நீங்க உற்சாகம், எனர்ஜியோட இருப்பிங்க. அதெல்லாம் சேர்ந்து உங்களை சந்தோஷமா இருக்க வைக்கும்.

ஸ்தூல நிலை வேறயா இருந்தாலும் சந்தோஷமா இருப்பிக.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக .அதைப்பார்த்து நாலு பேர் உங்களை நக்கலடிக்கலாம். ஏன் உங்களுக்கு தீமை கூட செய்யலாம் (சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான்)

குரு தனியா நின்னா என்ன ஆயிரும்னு கேப்பிக சொல்றேன். குருன்னா டூ குட்.( Too good/ do good) குருவோட இன்னம் ஏதோ ஒரு கிரகம் சேர்ந்தா இதை கட்டுப்படுத்தும். இல்லாட்டி அரண்மனை வாசக்காலை வெட்டிக்கொடுத்த கர்ணன் கதையா போயிரும்.

தர்மம் பண்ணியே போண்டியான குடும்பம் ஊருக்கு நாலிருக்குல்லியா? நல்லதை பண்றது ஓகே.ஆனால் எதுக்காக பண்றோம்னு ஒரு கேள்வி வருமில்லியா?

கூட வேற ஏதாச்சும் கிரகமிருந்தா அந்த கிரக காரகத்வத்துக்குட்பட்ட ஏதோ ஒரு நோக்கத்துக்காக பண்றான்னு ஜனம் அஜீஸ் பண்ணிப்பாங்க.

அப்படியில்லாம குரு தனிய நின்னா நல்லது பண்றதுக்காகவே நல்லது பண்ண ஆரம்பிச்சுருவம்.

இதை ஜீரணிச்சுக்க முடியாத சனம் உங்க நற்செயலுக்கு விபரீதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து கதை கட்ட ஆரம்பிச்சுரும்.

உதாரணமா நீங்க ஒரு ஏழக்குடும்பத்துக்கு உதவறிங்கனு வைங்க. அந்த வீட்டு பெண்ணை கணக்கு பண்ணத்தான் பண்றிங்கனு கதை கட்டிருவாய்ங்க.

கோவிலை புதுப்பிக்க இறங்கினிங்கனு வைங்க. மூலவர் அடியில புதையல் இருக்குப்பா அதை குறிவச்சுத்தான் இந்த வேலைல இறங்கியிருக்கானு சொல்லிருவாங்க.

குரு தனிய நின்னா வர்ர பிரச்சினை இதான்.


மேலும் குரு ஞாபகசக்தியை,திட்டமிடும் திறமையை,பொறுமைய தரக்கூடிய கிரகம்.வெற்றிக்கு இதுகள விட்டா வேற வழி ஏது? குரு உச்சம் பெற்றதால குரு காரகத்வம் கொண்ட எல்லா மேட்டருமே நல்லா ஒர்க் அவுட் ஆகும் .(பார்க்க: இணைப்பு நெம்பர் டூ )மனுசன் வாழ்க்கையில உசர உசர தனிமைப்பட்டு போயிருவான்.

இதுல குரு வேற தனிய இருந்தா நீங்க தனிமையை விரும்ப ஆரம்பிச்சுருவிங்க. சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.

குருங்கறது பிராமண கிரகம். பிராமணன் தனித்து நின்னு எதையும் கழட்ட முடியாது. அவனுக்கு அரசாங்கத்தோட,சமூகத்தோட ,மக்களோட உதவி தேவை. குரு தனியே நின்னா ஜாதகர் பாட்டுக்கு சோலோவோ தான் செய்ய நினைச்சதை செய்துக்கிட்டு போய்க்கினே இருப்பார்.

அப்ப சனம் தங்களோட கற்பனை சிறகை படபடனு அடிச்சு வதந்தீகளை கிளப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. இதைத்தான் நிந்தனைங்கறது.

6 ல் சந்திரன்: ரோக பாவம்:

இங்கே சந்திரன் நின்னாரு.இங்கு சந்திரன் நின்றதால் தீடீர் என்று உடல் நிலை ட்ரபுள் கொடுக்கும், மந்திரம் போட்டாப்ல குணமாயிரும். அதனால சின்ன சின்ன ஹெல்த் ட்ரபுள்ஸுக்கு மருந்துமாயம்னு போகாதிங்க போச்சுனு நினைச்சா மறுபடி தலை காட்டும்.(அவை வேறேதேனும் பெரிய பிரச்சைனைக்கு முன் அடையாளமா இல்லாதவரை) கடனும் திடீர்னு ஏற்படும் விளையாட்டா தீர்ந்துரும்னு நினைக்காதிங்க. வாழ் நாள் முழுக்க தொடர்ந்தாலும் தொடரும். அதனால் கடன் வாங்கறச்ச ஒரு முறைக்கு பல முறை யோசனை பண்ணி இறங்குங்க. வழக்கு,விவகாரம்,சண்டையும் இதே கேட்டகிரிதான். "அம்பாளே பார்த்துப்பா"ன்னுட்டு விலகி வந்துருங்க.
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன யதார்த்தத்தை புத்தியில் இருந்து மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். எதிரிகள் நண்பர்களா மாறுவாய்ங்க. நண்பர்கள் எதிரிகளா மாறுவாய்ங்க.

Tuesday, August 23, 2011

ஜோதிட பால பாடம்: 5


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னமான கடகத்துக்கு பத்துல குரு வந்து கொஞ்சம் போல சீண்டிப்பார்த்துட்டாரு (வேறென்ன இருக்கிற வேலைய ஒழுங்கா பார்க்க விடாமத்தேன்) அவரு இந்த 30ஆம் தேதி வக்ரமாகப்போறாருங்கோ.
வக்ரம்னா என்ன சுபர் அசுபராயிருவாரு. அசுபர் சுபராயிருவாரு. பத்துல குரு இருந்ததாலத்தானோ என்னமோ ஜா.ரா கெட்ட ஆட்டம் போட்டாலும் "போவட்டும் போவட்டும்னு இருந்தம்.

குரு வக்கிரமாற சங்கதி ஜா.ராவுக்கு தெரியலை போலும். சமீப காலமா (இடையில கொஞ்ச நாளு கேப்) மறுபடி பேண்டு வைக்க ஆரம்பிச்சுட்டாரு.
நம்ம அய்யரு வேற (கோபி கிருஷ்ணன்) "அண்ணா.. அந்த அடாசை இப்படியே விட்டுட்டா எப்படி ? அவன் ஆசனத்துக்கு ஒரு கார்க் அடிங்கோ - நீங்க ஊம்னா நான் அடிக்கறேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரு. நாமளும் ஊம் கொட்டிட்டம். இதை கூட ஜா.ராவுக்கு எச்சரிக்கையா சொல்லியாச்சு. ஊ ஹூம்..

நம்ம கோ.கி ஜா.ராவோட கண்ணீர் கடிதங்களை பதிவா போட்டு தூள் பண்ணிட்டாரு. அதை படிக்க இங்கே அழுத்துங்க .ஜா.ராவோட பிற்கால செயல்பாடுகளுக்கெல்லாம் தேவையான இருமனப்போக்கு - மன அழுத்தம் -இயலாமை - பொறாமை எல்லாத்துக்கும் அவரோட கண்ணீர் கடிதங்களே சாட்சி.
இப்பவும் மிஞ்சிப்போகலை. திருவாளர் ஜா.ரா அல்ப சங்கியைக்கு மட்டும் நவத்வாரங்களை திறந்து மத்த நேரம் பொத்திக்கிட்டு தன் வேலைய தான் பார்த்துக்கிட்டா சரி . உடனே இதை ட்ராஃப்டா மாத்திர சொல்லியிருக்கேன்
சொந்த பஞ்சாயத்து ஓகே. பால பாடம் தொடருது..
9ஆமிடம் கெட்டால்:
தந்தை, தந்தை வழி சொத்து, தூர பிரயாணங்கள், சேமிப்பு,முதலீடு,தூர தேச தொடர்பு வகையிலும் பாதிப்பு ஏற்படும் .
3ல் பாவ கிரகம்:
தங்கள் ஜாதகம் தங்கள் இளைய உடன் பிறப்புகளுக்கும், செவிக்கும் நல்லதல்ல. மித மிஞ்சிய தைரியத்தாலும், சாகசம் செய்யும் இச்சையாலும் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
சந்திரன் கெட்டால்:
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.

9ல் கேது/ராகு:
தந்தைக்கும், தந்தை வழி சொத்துக்கும் செதில்,பாம்பு தேள் இத்யாதி விஷ ஜந்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
விரய பாவம் கெட்டால்:
இதனால் தூக்கமின்மை, அகால போஜனம்,அகால நித்திரை ,துரித ஸ்கலிதம் - காதல் அ திருமணத்தில் தடைகள் , மனைவியுடன் தகராறுகள் ஏற்படலாம்.
சுக்கிர சூரிய சேர்க்கை:
சுக்கிர சூரிய சேர்க்கையால் விந்து வறளும். எனவே உடலுறவுகளுக்கிடையே யான இடைவெளியை அதிகரிக்கவும். அல்லது தம்பதியிடையே ஈகோ பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்
சுக்கிரன் கெட்டால்:
வெள்ளி அதிகம் உபயோகிக்கவும். லக்சரி,ஆடம்பரம், ஃபர்னிச்சர், டபுள் காட் பெட், ஹோம் நீட்ஸ்,வாகனம் ,பார்ட்டி, சுப காரியங்களில் நீண்ட நேரம் இருந்து எஞ்ஜாய் பண்ணுவது இத்யாதி தவிர்க்கவும். இதுவும்
3.சுக்கிர செவ்வாய் சேர்க்கை
இன உறுப்பில் காயம் ஏற்படலாம். முடிந்தால் அப்டமன் கார்ட் அணியவும். (ஸ்போர்ட்ஸ் கடைகளில் கிடைக்கும்) பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை
1+12
4.தாங்கள் உற்பத்தி துறையில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர்.

லக்னம் துலாம் அ ரிஷபமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர் துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்யவும்.
லக்னம் கன்னி/மிதுனமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.

குரு+சனி /ராகு/கேது (ரிப்பீட்டு தான் இன்னம் ஸ்ட் ராங்கா சொல்லியிருக்கம்ல)
ஜோதிடனும் ஒரு குருதான். குருஸ்தானத்தில் உள்ள நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனாலும் தங்கள் நலம் நாடி கூறுகிறேன் இன்று முதல் கோவில் குளம், தெய்வம், தெய்வ நம்பிக்கை இத்யாதியை மறந்துவிடுங்கள் .
உங்கள் ஜாதகப்படி அந்த கடவுள் தங்களுக்கு கொடுத்துள்ள சாய்ஸ் 2
முதல் சாய்ஸ்:
தெய்வ நம்பிக்கையுடன் பணரீதியில் நிறைய கஷ்டப்படுவது. திருமணம், மனைவி ,வாரிசுகள் விசயத்தில் நிராசைப்படுவது .
இரண்டாவது சாய்ஸ்:
நாத்திக வாதியாக மேற்கண்ட தொல்லைகள் பெரிதாக பாதிக்காது ஓரளவேனும் நிம்மதியாக வாழ்வது. இதில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்யவும்.

சனி கெட்டால் பரிகாரம்:
பித்ருக்களுக்கு பிண்டம் வைத்தல் , காகத்துக்கு சோறு வைத்தல், நொண்டிக்கு உதவுதல்.
செவ்வாய் தொடர்பான மனிதர்கள்:
வயதில் சிறியவர்கள், இளையவயது போல் தோற்றம் தரும் மூத்தவர்கள், சகோதரர்கள், வன்னியர், ராஜுக்கள் (ஒரு சாதி பெயருங்க),
ராகு தொடர்பான மனிதர்கள்:
அட்டை கரி நிறத்தவர் ,ஓரப்பார்வை பார்ப்பவர், காகம் போல் தலை சாய்த்து பார்ப்பவர் இதர மதத்தவர், இதர மொழியினர் ஆகியோருடன் கூட்டு வியாபாரம் , நட்பு , வேண்ட
ஜன்ம செவ்வாய்:
பரிகாரம்: போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் ,
.
சனி தரும் யோகம்:
தாங்கள் அதிர்ஷ்ட சாலி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிர்ஷ்டம் சற்று தாமதமாய் (முதுகு வளைந்த பின், தலைமுடியெல்லாம் வெளுத்த பின் வரிக்கும். பொறுமை தேவை. யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் தாமதமாக அதிர்ஷ்டம் தரும். மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினரும் 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமையும் கூட அப்படித்தான். பலன் தரும்.
சனி சுபனாகி ஐந்தில் நின்றால்:
முடிவுகள் எடுப்பதில், செயல்பாட்டில் மந்தம் இருப்பின் அதை அப்படியே தொடரவும். அதுவே அதிர்ஷ்டம் தரும். பிள்ளைகள் மட்டும் ரொம்பவே மந்த புத்தி அ கால்,ஆசனம் தொடர்பான தொல்லைகளை சந்திக்கவேண்டி இருக்கும்.
சனிக்கு பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாது,எதற்கும் முன்னே நிற்காது கும்பலில் கோவிந்தா போடவும்.
புதன் கெட்டால்:
புதன் கிழமை கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வரவும்.
10ல் சந்திரன் அ 10 ஆமிடத்ததிபதி +சந்திரன்:
செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
11ல் சந்திரன் நின்றால்:
லாப நஷ்டம் சமமாக இருக்கும். இதுல பயங்கர நஷ்டம் வரும் என்று முடிவு செய்துவிட்ட விஷயத்தில் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புண்டு. லாப விஷயத்திலும் இப்படியே குண்டக்க மண்டக்க நடக்கலாம்
4ல் ராகு/ கேது
பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது.
6+8/12
நீங்கள் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார்,
7ல் சந்திரன் அ லக்ன சந்திரன்:
தங்கள் மனைவியார் உடல் திடீர் என்று புசுபுசுவென்று வந்து , திடீன் என்று ஒல்லியாகிவருவார். பரிகாரம் முத்துமாலை அணிதல். தங்கள் வேலை/தொழில் விசயமாக அவர் கூறும் யோசனைகள் பவுர்ணமிக்கு பின் வரும் காலங்களில் ஒர்க் அவுட் ஆக
சனி கெட்டால்:
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.


Monday, August 22, 2011

ஜோதிட பாலபாடம்: 4


அண்ணே வணக்கம்ணே !
பால பாடம் புரியலைன்னு நிறைய புகார் வருது. சனங்களுக்கு அதிகாரம் மட்டும் இருந்திருந்தா நம்மை திகாருக்கே அனுப்பியிருப்பாய்ங்க.அவிக புகார்ல முக்கிய அம்சம் என்னன்னா வரிசைப்படி இல்லை. ஜோதிடம் என்ன முருகன். நாம என்ன ஔவையாரா ஒன்று ரெண்டுன்னு வரிசைப்படுத்திப்பாட. (ச்சொம்மா நக்கல் தேன்)
ஜோதிஷத்துல உள்ளதெல்லாம் 9 கிரகம் , 12 பாவம் தேன். சொந்த சிஸ்டத்துல ப்ரவுஸ் பண்றவுக 9+12 =21 ஃபைல் ஓப்பன் பண்ணி வச்சுக்கிட்டு இந்த தொடர்ல வர்ர மேட்டரை எல்லாம் அந்தந்த கிரகம் அந்தந்த பாவம் தொடர்பான ஃபைல்ல போட்டுக்கிட்டே வந்தா ஒழுங்கான தொகுப்பு தயாராயிரும்.
பாவ வரிசை:
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

கிரக வரிசை;
சூ ,சந், செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்
சமைத்துப்பார் புஸ்தவத்துல தாளி ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தேவை ,செய்முறைன்னு ஒரே முறை ரிப்பீட் ஆயிட்டே இருக்கும். ஆனால் நான் அய்யா சமையலுக்கு தேவை உப்பு,புளி,காரம். சிலதுக்கு கல்லுப்பு,சிலதுக்கு சால்ட் போடுவம் - சிலதுக்கு புளியை அப்படியே போடுவம்,சிலதுக்கு கரைச்சு விடுவம், சிலதுக்கு லெமன் ,காரம்னா சிலதுக்கு காஞ்ச மொளகா,சிலதுக்கு பச்சை மொளகா,சிலதுக்கு மிளகாய் பொடி இதான் சமையலுன்னு சொல்றேன்
வரிசையா எழுதித்தொலைச்சா நீங்க எனக்கு அடிமையாயிருவிங்க. அதே சமயம் நான் கச்சா முச்சான்னு எழுதி நீங்க உங்க சொந்த ஆர்வத்துல தொகுத்து மைண்ட்ல ஏத்திக்கிட்டா நீங்க சுதந்திரர்களா இருக்கலாம். இப்பம் புரியுதா..ஏன் வரிசைப்படி எழுதலைன்னு. (ஸ்..அப்பாடா கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா)

சரி இன்னைக்கும் பால பாடம் தொடருது
கேது கெட்டால்:
தினசரி ஒரு மணி நேரம் - வாரம் ஒரு தினம் (திங்கள்) காவி உடை உடுத்தி வினாயகரை தியானம் செய்யவும். இதர மத நூல்களையும் படிக்கலாம். ( தியானம்னா மனசுக்குள்ள எழும் சிந்தனைகளை கவனிக்கிறது - அந்த கூட்டத்துல வினாயகர் எங்கனா கிராஸ் ஆறாரா பாருங்க போதும்)
சனி காரகம் கொண்ட மனிதர்கள்;
கீழ் சாதியினர் கருப்பாக இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்
இவர்களால் தொல்லை ஏற்பட்டால் பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்யவும். (பன்றி முகத்துடன் விஷ்ணு) அல்லது வாராஹியையும் வணங்கலாம். ( பன்றி முகத்துடன் கூடிய அம்மன்)
செவ்வாய் கெட்டால்:
முருகனை வழிபடச்செய்யவும். செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி கஷாயம் போட்டு குடிக்க சொல்லவும். ரத்த விருத்திக்கு தேவையான ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்ற சொல்லவும். செம்பு காப்பு/வளையல் அணியவும் ஈயப்பூச்சு கொண்ட செம்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நல்லது. குறைஞ்ச பட்சம் இப்படியா கொத்த பாத்திரத்துல வச்சு சாப்பிடுங்க.குடிங்க
சந்திர மனிதன்:
சஞ்சல சுபாவம் கொண்டவராக கற்பனை, பரபரப்பு மிக்கவராக இருந்தாலும் ஆழமான யோசனை உள்ளவராக இருப்பார். தன் கருத்துக்களை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பார். சுற்றுபயணங்கள், பயணங்கள் என்றால் விருப்பம் உள்ளவராக இருக்கலாம்/சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மீது கவர்ச்சி இருக்கும்.
ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதை முழுமூச்சாக முடிக்கும் உறுதி இல்லாவிட்டாலும் பல்வேறு வேலைகளுக்கிடையே அனைத்து வேலைகளையும் தவணையில் சிறிது சிறிதாக முடிக்கும் தனமை இருக்கலாம்.
பரிகாரம்:
வண்ண மீன் வளர்ப்பு, கன்னியா குமாரி வழிபாடு, ஊஞ்சலாடுதல், நிலாச்சோறு, ஸ்படிக மாலை, முத்து மாலை , முத்து மோதிரம்.

4ல் ராகு:
ஜாதகருக்கு படிப்பில் தடை ஏற்படலாம். அன்னிய மொழியில்/ நடைமுறை வாழ்வில் வித்தகராவார்.இதய பகுதியில் மச்சம் இருக்கலாம்.
சூரியன் சுப பலமானால்:(பகல்ல பிறந்திருந்தா)
இவருக்கு சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம்.
சனி தொடர்பான கணவர், மனைவி:
இவர் தகுதிக்கு சமமானவராக இல்லாது போகலாம். தம்பதியிடையில் சச்சரவுகளும் ஏற்படலாம். . சிறு வாகன விபத்தில் கால் தொடர்பான பிரச்சினை. பொருந்தா காதல் போன்ற விவகாரமும் தலை காட்டலாம்.
\பெண் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால்:
பிறப்புறுப்பு கருப்பை தொடர்பான மருத்துவ பிரச்சினைகளும் வரலாம்
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
லட்சுமிக்கு சுமங்கலி பூஜை, எளிய வாழ்வு. ஃபர்னிச்சர்ஸ், ஸ்னேக்ஸ், சுவீட்ஸ், சாட்டிங், டி.வி, ஏ.சி, வாசனா திரவியங்கள்,பார்ட்டி,கெட் டு கெதர் ,சுப காரியங்களில் பங்கேற்பது லக்சரி தவிர்க்கவும்.
11 கெட்டால்:
இவருக்கு முன் பிறந்த மூத்த உடன் பிறப்புக்கு இந்த ஜாதகம் அனுகூலமல்ல.
சனி செவ்வாய் சேர்க்கை:
தனது தாயின் கருவில் இருந்த போதே தூரத்து/ நெருங்கிய உறவில் துர்மரணம் அ அகால மரணம் சம்பவித்திருக்கலாம். மேலும் ரத்தம் கெடுவதால் வரும் நோய்களும் வாட்டலாம் . உ.ம் கட்டிகள், ப்ளட் ஷுகர் ஒரு உயில் மூலமாகவோ நஷ்ட ஈடு வகையிலேயோ தனவரவு ஏற்படலாம்.
பரிகாரம் : குல தெய்வத்துக்கு பலி பூஜை. நட்பு /உறவுக்கு நான் வெஜ் டின்னர் ஜாதகரும் சாப்பிடலாம்.
இரண்டில் ராகு/கேது:
இவருக்கு பேச்சு, கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல், ஈ என் டி பிரச்சினைகள் ( காது, மூக்கு, தொண்டை) தொல்லை தரலாம். குடும்பத்திற்கு கடன் ஏற்படலாம்.
ஜாதகர் அடிக்கடி பேச்சு மாறுதல், திடீர் என்று கிசு கிசுப்பாய் பேசுதல், திடீர் என்று கத்தி பேசுதல் , மிமிக்ரி செய்தல் நடக்கலாம்.
குரு கெட்டால்:
தனக்கு மீறிய தான தருமம் அ கோர்ட்டு நடவடிக்கை அ அரசியல் நடவடிக்கை காரணமாக பொருளாதார நெருக்கடி ,கேஸ்ட்ரிக், பிரச்சினைகள் வரலாம்.
லக்ன சனி:
மேலுக்கு மந்த புத்தி உடையவராக, சோம்பல் கொண்டவராக இருப்பார். சனி லக்னத்துக்கு சுபனாகில் அதிர்ஷ்ட சாலி. டெக்னிக்கலாய் முன்னேறி குறைந்தது 8 பேருக்கு வேலை வாய்ப்பு தருவார்.
சனி தொழில்:
இரும்பு,ஆயில், க்ரானைட்ஸ், செகண்ட் ஹேண்ட் பொருட்கள், விவசாயம் தொடர்பானவை , வெட்டினரி துறை, கருப்பான பொருட்கள், துர் நாற்றம் வீசும் பொருட்களில் நல்ல லாபம் முன்னேற்றம் கிட்டும் .
சனி சுபனாக இருந்து படிக்கும் வயதில் சனி தசை :
கல்வியில் சிறு தடைகள் ,ஆர்வமின்மை, பின் தங்குதல் நடக்கலாம். என்றாலும் கல்வி தொடரும். அது தொழில் நுட்ப கல்வியாக இருந்தால் பிரச்சினை இல்லை.
செவ்வாய் கெட்டால் /முக்கியமா புத செவ் சேர்க்கை::
உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், வெ ந் நீர் , சுடும் எண்ணை , மின்சாரத்தாலும் பிரச்சினை ஏற்படலாம் எச்சரிக்கை தேவை.
சனி கெட்டால் ( முக்கியமாக எட்டாமிடத்துடன் தொடர்பு ஏற்பட்டால்) பலன் + பரிகாரம்:
ஜாதகருக்கு இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.
4ஆமிடம் சுபபலமானால்:
ஜாதகருக்கு சொந்த வீடு, வாகன யோகம் ஏற்படும்.
சூரியன் கெட்டால் பரிகாரம்:
பரிகாரம் : காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம்.
சூரியன் சுபபலமானால்:
ஜாதகர் வாழ்க்கை கல்வி பயின்று ஆஷாட பூதியாக இல்லாவிட்டாலும் தமக்கென்று ஒரு ஃபிலாசஃபியுடன் வாழ்வார்.
லக்னாதிபதி விரயம் :
சதா சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது போன்ற குணங்கள் ஏற்படும்.
கேந்திர சுக்கிரன்:
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால் விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
வெண் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வெள்ளியன்று லட்சுமி பூஜை செய்க.சுமங்கலிகளுக்கு (6 பேர்) தாம்பூலம் வழங்கவும். வெள்ளி ஆபரணங்கள் அதிகம் அணியவும். வெள்ளி பாத்திரங்கள் உபயோகிக்கவும்.