Showing posts with label ஆண். Show all posts
Showing posts with label ஆண். Show all posts

Monday, July 11, 2011

ஆண் பெண் வித்யாசம் ; 7 ஆம் பாவம் தொடர்ச்சி 2


மத்த 11 பாவங்களை விட்டுத்தள்ளுங்க. தாளி 7 ஆம் பாவம் ஒன்னு கரீட்டா இருந்தா போதும் தூள் பண்ணிரலாம். கிரக நிலை எப்படி இருந்தா அனுகூலம் ? எப்படி இருந்தா பிரதி கூலம்னு கேப்பிக. பதிவு ஆண்,பெண் வித்யாசத்தை பத்தி தேன். அதனால இந்த மேட்டரை பொருத்தவரை அம்பேல். ஓவர் டு வித்யாசங்கள்.

ஆண்களை பொருத்தவரை இந்த பாவம் சுபபலமா இருந்தாலும் ஜல்சாதேன். கெட்டாலும் குஜிலிதேன். பெண்களை பொருத்தவரை இந்த பாவம் சுபபலமா இருந்தாலும் லொள்ளுதேன். கெட்டாலும் லொள்ளுதேன். எப்படினு பார்ப்போம்.

7 ஆம் பாவம் கெடுதல் :

களத்ர பாவம் கெட எந்த கிரகம் காரணமாயிருந்தா என்னா மாதிரி ரிசல்ட் கிடைக்கும்னு குத்து மதிப்பா சொல்லியிருக்கேன். இந்த கிரக வரிசையை கமெண்ட்ல கரீட்டா சொன்னா ஒரு சோப்பு கவர் பரிசு.


1.கணவன்/ மனைவிக்கு ஆளுமை ஓவரா இருக்கறது - தேன் நிற விழிகள் - அடர் புருவம் - சோடாபுட்டி கண்ணாடி . தூக்கமின்மை ஜாயிண்ட் பெய்ன்ஸ் - முதுகுவலி

2.மனம் , நுரையீரல் சிறு நீரகம் தொடர்பான தொல்லைகள் - கற்பனை தேரினில் பறந்து செல்லும் தன்மை

3.ரத்தம் எரிச்சல் கோபம் தொடர்பான வியாதிகள் - வாழ்க்கை துணையை எதிரியா பாவிக்கிறது -படக்குனு கிரோசினை தலை மேல கவுத்துக்கிட்டு தீப்பெட்டிய தேடறது - மணிக்கட்டை அறுத்துக்கறது -ப்ளக்ல கை வைக்க ஓடறது இந்த லட்சணங்கள் இருந்தா தம்பதி பிரியலாம் - செத்தே போகலாம் (தீயில் கருகி /ரத்தவெள்ளத்தில்) இவிக மேல தாக்குதல் கூட நடக்கலாம்.

4.-சினிமா லாட்டரி மது கவரும். மேற்கத்திய கலாசாரத்துல ஈடுபாடு. ஃபிசிக்ல டிஃப்ரன்ஸ் இருக்கும் - ஐமீன் ஒல்லி பீச்சானா இருக்கலாம் - அல்லது நீர் உடம்பா இருக்கலாம் - ஃபுட் பாய்சன் , மெடிக்கல் அலர்ஜி , விஷம்னு எழுதின பாட்டிலை க்ளோசப்ல கேமராவுக்கு காட்டி படக்குனு வாய்ல கொட்டிக்கிறது. சட்டவிரோதமாவாச்சும் லட்சக்கணக்கா பணம் வரனும்னு துடிக்கிறது. இவிக ஒன்னு அண்டர் கிரவுண்டுக்கு போயிருவாய்ங்க அ விஷமருந்தி சாகலாம்.

5. ஞா மறதி -அஜீரணம்- வாயு கோளாறு - இதயம் தொடர்பான பிரச்சினைகள் -ஏழை & செல்வாக்கில்லாத குடும்பத்து பெண்/ஆண் வாரிசா இருக்கிறது .

6.வாழ்க்கைத்துணை நிறம் மட்டா இருக்கலாம் - ஏழையா இருப்பாய்ங்க. கல்வி இருக்காது. நாகரீகம் இல்லாத என்விரான்மென்ட்ல நாட்டுப்புறமா வளர்ந்திருப்பாய்ங்க. .ஊனம் ஏற்படலாம் - முக்கியமா கால் தொடர்பான ஊனம். நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம். . பார்க்க கிழவன்/கிழவி போல இருக்கிறது அ கண்ணாலமான சில காலத்துலயே அந்த பர்சனாலிட்டி வந்துர்ரது . நோயாளியா இருக்கலாம் - கஞ்ச பிசினாறியா இருக்கலாம். சோம்பேறி /சுத்த பத்தம் இல்லாத பார்ட்டியா இருக்கலாம்.

7.ஊர் வம்புல ஆர்வம் -தெரிஞ்சவன் தெரியாதவன்லாம் ஃபோன் போட்டு மணி கணக்கா பேசுவான். பார்க்க ஆண் பெண் போலவும் -பெண் ஆண் போலவும் தெரிவாய்ங்க. தோல் -கீல் -அண்டம் தொடர்பான வியாதிகள் இருக்கலாம் . வேலி தாண்டலாம்

8.மந்திர தந்திரங்களில் ஆர்வம் - சதா பிரமைகளில் வாழ்வது - அகாரணமா ஆர வேணம்னா எதிரியாக்கிக்கறது - புண்கள் - பாடில அப்பர் பார்ட்ல அடையாளம் தெரியாத வலி - பலகீனம் இருக்கிறது. ( டயக்னசிஸ்ல க்ளீன் ரிப்போர்ட் வரும் -ஆனா பிரச்சினை தொடரும். போலி சாமியாருக்கு சொத்தையே எழுதிக்கொடுத்துர்ர கேஸா இருக்கும்.

9. அதி காமம் இருக்கலாம் - இது சில மாசத்துலயே ஃபணால் ஆகி கில்மால ஆர்வமே இல்லாம போயிரும். கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரும். காதல் /கள்ளக்காதல் விவகாரம்லாம் வரும்.

.சரி தம்பதிகள்ல ஆணுக்கு மேற்படி பிரச்சினைகள்ள எந்த பிரச்சினை இருந்தாலும் பெண் " நாம கொடுத்து வச்சது இவ்ளதான் - அவரு ஆம்பிளை என்ன ஆட்டம் வேணா போடலாம் - நாம தேன் அடங்கி போகனும்" அது இதுன்னுக்கிட்டு காலத்தை கழிப்பாய்ங்க.

சப்போஸ் பெண்னுக்கு மேற்படி பிரச்சினைகள்ள எதாவது மாட்டிக்கிட்டா இவன் பாடு கொண்டாட்டம் தேன். கண்ணாலமாகாத குட்டிங்களுக்கு கண்ணாலமான ஆம்பளன்னா ஒரு ஜொள்ளு ( இவிகளுக்கும் அதே இழவுதேன் - ங்கொய்யால எச்சிலைக்கு ஏண்டா அலையறிங்கனு கேட்டா தூறெடுத்த கிணறுல தண்ணி தூளா இருக்கும் மாமேங்கறாய்ங்க. இப்பல்லாம் ஆன்டினு ஸ்டைலிஷா சொல்றாய்ங்க.

என் ஜட்ஜிங் என்னன்னா அந்த ஆன்ட்டி மெனோஃபஸ் ஸ்டேட்ல இருப்பா. தன் பெண்மைய பரிசோதிச்சுக்க இந்த பிக்காலிய டெஸ்டிங் டோஸா யூஸ் பண்றா போலும்.

பொஞ்சாதி மேட்டர்ல எதுனா சின்ன பிரச்சினை வந்தா போதும். குட்டிகளோட மேற்கண்ட டேஸ்டை உபயோகிச்சு அனுதாபம் தேடியே அக்கம்பக்கத்துல மேய ஆரம்பிச்சுருவான் புருசன் காரன்.

உபரியா சின்ன வீடு ,பலான வீடு , சதா தண்ணி போடறது , க்ளப்ல சீட்டாடறதுனு புருசன் காரன் கொண்டாட ஆரம்பிச்சுர்ரான்.

தாளி .. கெட்டு கீரைவழியா போவேங்கற பிக்காலி சீதையே பொஞ்சாதியா வ்ந்தாலும் நாறித்தான் போவான் அது வேற கதை. ஆனால் இவிகளுக்கு இது ஒரு சாக்கு.

டாப் சீக்ரெட் என்னன்னா இந்த பன்னாடைக்கு வரப்போறவ எப்படி இருக்கனும்னு இவன் ஜாதக்ம் தான் டிசைட் பண்ணுது.

இவன் எத்தீனி கண்ணாலம் கட்டினாலும் முளையடிச்சு கட்டின கன்னுக்குட்டி மாதிரி குறிப்பிட்ட கிரகத்தோட ஜூரிஸ்டிக்சன்லதான் கனெக்சனே மாட்டும். பல்பு பல்புதேன்.

ஆனால் இவர் என்னமோ மம்மத ராசா போலவும் - கடவுளு -அப்பா அம்மா அல்லாரும் ரவுண்ட் டேபிள் கான்ஃபிரன்ஸ்ல பேசி சதி பண்ணி "மாட்டிவிட்டுட்டதாவும்" ஒரு ஃபீலிங்.

சரிங்ணா பதிவே போடுவமா இல்லியாங்கற கண்டிஷன்ல இந்த பதிவை இந்த அளவுக்கு போட்டதே நம்ம பெரியாரோட அருள்.

பெரியாரை நினைச்சு நான் செய்த பிரார்த்தனை ஒர்க் அவுட் ஆச்சுன்னா வண்டை வண்டையா நக்கலடிச்சு ஒரு நாய் கமெண்டியிருந்தது.

ஆனா ராசா சொன்னதை படிச்சிங்களா? பெரியாருக்கு சூனியம் வைக்கச்சொன்ன ராசா அவுட்டு. அந்த ஆன்மா உடல்ங்கற சிறையில அடைபட்டு இருந்தப்பயே இந்த ரேஞ்சுல பல்புன்னா ஆன்மவடிவத்துல எப்படி எந்த ரேஞ்சுல இருக்கும். ரோசிங்க.

கடவுள் இருக்காருன்னு சொல்ல எந்தவித புரிதலோ -சாதனையோ - கடவுளோட கம்யூனிகேஷனோ தேவையில்லை. கடவுள் இல்லேங்கறதுக்கு இதெல்லாம் கட்டாயம் தேவை.

என் கெஸ்ஸிங் என்னன்னா பெரியார் ஏதோ ஒரு லைன் அப்பை சிக்குனு புடிச்சிருக்கனும். அவாளோட லொள்ளையெல்லாம் கட் பண்ணனும்னா அதுக்கு ஸ்டார்ட்டிங் பாய்ண்ட் கடவுள் தானே. அதையே இல்லைன்னுட்டா போலியான்னு சகமனிதர்கள் மேல கருணையோட தான் நாத்திகத்தை தூக்கிப்பிடிச்சுருக்கனும்.

எது எப்படியோ ஒரு பெரிய ரவுண்டு முடிஞ்சுருச்சு. புதுசா ஆரம்பிச்சிருக்கேன். இனி முயல் வேகம் - புயல் வேகம் தேன்.

வாழ்க பெரியார் ! ஓங்குக பகுத்தறிவு !

Thursday, July 7, 2011

ஆண் பெண் வித்யாசம் : 7ஆம் பாவம்

நேற்றைய பதிவுல நம்ம தனிக்காட்டு ராசா எந்த வரிகளை கோட் பண்ணி பாராட்டியிருந்தாரோ (அது கதவை சாத்தற மேட்டருங்ணா)  அதே வரிகளை அப்ஜெக்ட் பண்ணி ஒரு  அம்மா ஃபோன் பண்ணாய்ங்க.

அவிகளுக்கு நான் சொன்ன பதில் :

மூளைய பொருத்த வரை செக்ஸ் மையத்த ஒட்டித்தான் அறிவுமையம் கூட அமைஞ்சிருக்காம். செக்ஸ் மையத்துல ஏற்படற அதிர்ச்சிகள் அடுத்துள்ள அறிவு மையத்தை தாக்கினா விஞ்ஞானி ஆயிர்ராய்ங்களாம்.

7 ஆம் பாவங்கறது ஃப்ரண்ட் , லவர் , பார்ட்னர் ,ஹஸ்பண்ட் (கணவர்) ஆகியோரை காட்டும்.  இந்த பாவத்தோட முக்கியத்துவத்தை கருதி  "மனைவி அமைவதெல்லாம்" 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ?" "ஆசை60 நாள் மோகம் 30 நாள்" "கில்மாவும் 7 ஆம் பாவமும்" ங்கற தலைப்புல எல்லாம் தொடர் பதிவும் - தனிப்பதிவுகளும் மஸ்தா எழுதி இருக்கேன்.

உங்களுக்கு எட்டு இடமும் குளிர்ந்திருக்கிற சமயம் -தின ராசி பலன்ல சுகம்னு போட்ட நாட்களிலும் தேடி -படிங்க.

இப்பம்  இந்த பதிவுல ஆண்பெண் வித்யாசத்தை மட்டும்தேன் பார்க்கப்போறோம்.

கொஞ்சம்  போல காலம் மாறியிருக்கிறதால கு.ப நண்பர்கள் என்ற விஷயத்துல பெண்களுக்கு கொஞ்சம் போல ரிலாக்சேஷன் கிடைச்சிருக்கு.(இதுவும் பெரு நகரம், மா நகரம், நகரம் ,வரைதேன்)

இந்த நண்பர்கள்ங்கற பொசிஷன் வித்யாசமானது . காதலன் என்ற போஸ்டுக்கு அப்ரண்டிஸ் மாதிரி சிலர் நினைக்கிறாய்ங்க - சிலர் தொகுப்பூதிய அடிப்படையில வேலை கிடைச்ச மாதிரியும் கூடிய சீக்கிரமே நிரந்தரமாயிரும்னும்  நினைக்கிறாய்ங்க. இந்த ஹிப்பாக்கிரசிக்கு பெண்களும் ஒரு காரணம்.

பார்க்க சுமாரா இருந்தா போதும் அவளை படுக்கப்போட ஒரு கூட்டமே வேலை செய்துக்கிட்டிருக்கும். இந்த கூட்டத்துல காதலனும் ஒரு டிக்கெட்டு.

இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டில ஒரு ஆண் எத்தீனி குட்டிகளை படுக்கப்போட்டா அந்தளவுக்கு அவன் புலி. பெண் ஒரே ஒரு தாட்டி ராங் செலக்சனுக்கு நாக்கை கடிச்சுக்கிட்டு  ஆளை மாத்தினா உடனே அவளை லோலாயின்னிர்ராய்ங்க.

இதை தங்களுக்கான வாய்ப்பா நினைச்சு தந்தை குலம் வாலை அவிழ்த்துவிட்டா என்னாகும்ங்கறதுக்கு நம்ம லைஃபே ஒரு உதாரணம்.

ஒரு ஆண்,ஒரு பெண் காதல் கொண்டோ ?  களவு நெறிகண்டோ? வெறி கொண்டோ?  இணைஞ்சா உடனே அவிக ஜாதகத்திலுள்ள கிரக பலங்கள்/பலகீனங்கள் ஒன் ப்ளஸ் ஒன் ஆகி டிவைடட் பை டூ ஆயிருதுங்ணா.

லக்னத்துல உள்ள கிரகங்கள் 7 ஐ பார்க்கும். 7 ல் உள்ள கிரகங்கள் லக்னத்தை பார்க்கும். அதாவது நீங்க உங்க பார்ட்னரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவிங்க. உங்க பார்ட்னர் உங்களை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாய்ங்க. டெல் மீ யுவர் ஃப்ரெண்ட் ஐ வில் டெல் யு வாட் யுவார்ங்கறாய்ங்கல்ல.

7 ஆம் இடத்தை ஜூம் பண்ணி பார்த்தா உங்க பார்ட்னரோட உயரம்,பருமன், நிறம்,டேஸ்ட், மென்டாலிட்டி, பிறந்த இடம், இவ்ள ஏன் அவிக பேரை கூட கெஸ் பண்ணிரலாம்.

இன்னொரு மெத்தட் இருக்குங்கோ அது என்னன்னா உங்க ஜாதகத்துல 7ஆவது ராசியை லக்னமா வச்சு கணிக்கிறது. இந்த மெத்தட்ல உங்க உட் பி அ மனைவியோட பயோடேட்டாவே வந்துரும். பலான மேட்டர்ல அவிக விருப்பம்/விருப்பமின்மை கூட .

7ஆவது இடம் ஜஸ்ட் உங்க உட் பி அ மனைவியை மட்டும் காட்டறிதில்லிங்கோ. காதலி,கள்ளக்காதலி, மனைவி,முன்னாள் மனைவி எல்லாத்தயும் காட்டுது. 

நாம வேலி தாண்டினது - கையில பிடிச்சுக்கிட்டு அலைஞ்சதுல்லாம் ( நான் லவ் லெட்டரை சொல்றேன்)  ஜஸ்ட் ரெண்டு வருசம்தேன்.

அந்த ரெண்டுவருசத்துல ( 1984 &  1985 ) போட்ட கெட்ட ஆட்டத்துக்கப்பாறம் பூர்வ புண்ணியமோ நமக்குள்ள பை பர்த் இருந்த இன்ட்யூஷனாலயோ   அந்த மேட்டர்லருந்து கழண்டுக்கிட்டோம்.

அப்பாறம்தேன் தமாசு. அப்பம் என்ன தசை என்ன புக்தி நடந்ததோ ஞா இல்லை. ஆனால் அதற்கடுத்த வருடங்கள்ள நம்ம ஜாதகத்துக்கு சம்பந்தமே இல்லாத "சம்பவங்கள்" எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது.

1989 பிப்ரவரியில முத ஜோசியரை சந்திச்சு - 1990 மார்ச் மாசம் ப்ராக்டிஸ் ஆரம்பிச்ச கேஸு நாம.

நம்ம ஸ்பெஷாலிட்டியே என்னன்னா  ஒரு மேட்டரு உண்மைன்னு பட்டா உலகமே எதிர்த்தாலும் எட்டுக்கு எட்டு பாம்லெட்டாச்சும் போட்டு உலகத்துக்கு சொல்லிருவம்.

நமக்கு பொய்யினு பட்டா - அந்த மேட்டர்ல என்டர் ஆகமாட்டோம். ரெம்ப சீண்டினா "வேட்டி வரிஞ்சு கட்டுதேன்"

ஜோதிடத்து மேல நம்பிக்கையோடதேன் ஆஃபீஸ் போட்டோம் - சனத்துக்கும் சொல்ல ஆரம்பிச்சோம்.

யதார்த்தத்துல பார்த்தா நம்ம ஜாதகத்துக்கு சம்பந்தமே இல்லாத "சம்பவங்கள்" எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது. "என்னங்கடா இது? ஐயா/அம்மா தப்பு நடந்துபோச்சு ஜாதகம்/சோசியம்லாம் டுபுக்கு போல இருக்கு- இத்தீனி நாள் நான் சொன்ன சொசியம்லாம் ரத்து  "னு பாம்லெட் போட்டுரலாமாங்கற நிலை.

அப்பத்தேன் மேற்சொன்ன ஜோதிட விதி (7+7 = எக்ஸ் டிவைடட் பை டூ) ஸ்பார்க் ஆச்சு. ஒரு காலத்துல ( அதாங்க அந்த  ரெண்டு வருசத்துல)  நாம டீல் பண்ண குட்டிங்க கண்ணாலம் கட்டி - குட்டி போட்டு மேட் ஃபார் ஈச் அதர் கணக்கா சோசியம் பார்த்துக்க ஜாதகம் கொண்டுவந்தப்பதேன் அவிக ஜாதகங்களை பார்த்தேன். பீதியில பேதியாயிருச்சு.

இந்த எஃபெக்ட் 2007 வரைக்கும் கொஞ்சமோ நஞ்சமோ  கன்டின்யூ ஆயிட்டே இருந்ததுங்ணா.

ஆட்டம் 2 வருசம். தாளி அதனோட விளைவு ? (1986 முதல் 2007 வரை). இத்தனைக்கும் ராம நாம உச்சாடனம் 1986 ஜனவரி 1 ஆம் தேதியே ஆரம்பிச்சுருச்சு.

கடா குட்டியான நமக்கே இந்த கதி. ஆனால் இந்த மேட்டர்ல எங்களுக்கும்  சுதந்திரம் வேணம்னு பாப் வச்ச மாமிகள் வுமன்ஸ் க்ளப்கள்ள தீர்மானமே போடறதா கேள்வி.

இந்த 7 ஆம் பாவத்துல எத்தீனி கிரகமிருந்தா/ இதை எத்தீனி கிரகம் பார்த்தா அத்தீனி புருசன்/அத்தீனி பொஞ்சாதின்னு நினைப்பிக. அது எந்த அளவு நிஜம்?

இங்கன லக்னாத் பாவ/சுப  கிரகங்கள் இருந்தா என்னாகும்? இந்த பாவத்துல எந்த பாவாதிபதி நின்னா என்ன எஃபெக்ட்? அந்த எஃபெக்ட் நெகட்டிவா இருந்தா அதுலருந்து எஸ்கேப் ஆக என்ன பண்ணனும்?

இந்த அம்சங்களோட  எஃபெக்ட் ஆண்களை எப்படி பாதிக்கும்? பெண்களை எப்படி பாதிக்கும்? பரிகாரம் ஆண் - பெண்களுக்கு ஒன்றேதானா? அதுலயும் வித்யாசம் உண்டா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அடுத்த பதிவில்..




Wednesday, July 6, 2011

ஆண் பெண் வித்யாசம் : 6 ஆம் பாவம்

மொதல்ல 5 ஆம் பாவத்துக்கு ஒரு ஃபினிஷிங் டச் கொடுத்துருவம்.இது பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம், ஆகியவற்றை காட்டும். இதுல கடேசியா சொன்ன தியானத்தை கேட்ச் பண்ணி ரோசிச்சா மேற்சொன்ன ஐட்டங்கள்ள எது முக்கியம்னு படும்னும் சொல்லியிருந்தோம்.

நாம ஒன்னும் தியானியும் கிடையாது -ஞானியும் கிடையாது. ஒரு குன்ஸா நம்ம கருத்தை சொல்லி வைக்கிறோம்.

பிள்ளைகள்:
இவிகதான் உலகம்னு அஞ்சாம் பாவத்து பவர் எல்லாத்தையும் இவிகளுக்கு திருப்பி விட்டுட்டா மத்த ஐட்டங்கள் தேசலாயிரும். டிம் அண்ட் டிப் அடிக்கும். இன்னம் சொல்லப்போனா ஓவர் லோட் காரணமா பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போயிர்ரது - உதட்டு மேல லேசா கருமை படர ஆரம்பிச்சதுமே "வில் யு ஷட் அப்"ங்கற தும் நடக்க ஆரம்பிச்சுரும்.

நீங்க ஒரு வாசல். உங்க பிள்ளைகள் உங்கள் மூலம் இந்த பூமிக்கு வந்திருக்காய்ங்க. அவிக மேல உங்களுக்கு எந்த ரைட்டும் கிடையாது. (ஓஷோ)

டச் மீ நாட் கணக்கா கடமை என்று கருதி செயல்பட்டா "டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேடா "முடியறதை தவிர்க்கலாம். மத்த ஐட்டங்களுக்கும் கொஞ்சம் போல பவர் கிடைக்கும். பசங்களும் உருப்படுவாய்ங்க.

மன நிம்மதி:
நிம்மதிங்கறது ஆழ்ந்த நம்பிக்கை காரணமாகவோ (மஹா விஸ்வாசம்) - உங்க டேபிள்ள இருக்கிற ஃபேக்ட்ஸை வச்சோ, பிரச்சினைனு வந்தா சமாளிச்சிரக்கூடிய உங்க சக்தி சாமர்த்தியங்களை கொண்டோ கிடைச்சா நோ அப்ஜெக்சன் யுவர் ஆனர்.

ஆனால் அந்த நிம்மதி இக்னரன்ஸாலயோ, எஸ்கேப்பிசம் காரணமாவோ,ஓப்பனா சொன்னா மடமையாலயோ கிடைக்குதுன்னா அது கிரிமினல் வேஸ்ட்.

அந்த பொய்யான ,ஆபத்தான  நிம்மதியை விட சூட்சும புத்தியோட யதார்த்தத்தை உணர்ந்துக்கிட்டு டென்ஷன் பார்ட்டினு பேர் வாங்கினாலும் நோ பிராப்ளம்.

பெயர் புகழ்:
ங்கொய்யால ! பேர் புகழ் எதை வச்சு வருதுனு பார்க்கனும். சுயத்தை , சுதந்திரத்தை அடகு வச்சுட்டு / தனிப்பட்ட கனவுகளை புதைச்சுக்கிட்டு  "அந்த அக்காவை  பாரு .. அந்த மாமா ஃபுல் தண்ணியில பாதி ராத்திரி வீட்டுக்கு வந்தாலும் காத்திருந்து சோறு போட்டு - காலங்கார்த்தால எந்திரிச்சு துளசிமாடத்தை சுத்திக்கிட்டு இருக்கு" ரக பெயர் புகழ் கேன்சர் மாதிரி. அழிச்சுரும்.

அக்கா  கக்கூஸை என்னமா கழுவி வச்சிருக்கு. கண்ணாடி மாதிரி பளபளக்குது  - ஷோ கேஸை என்னமா அடுக்கி வச்சுருக்கு பாணி பேர் புகழ் எல்லாம் போதை மருந்து மாதிரி. பச்சையா சொன்னா நாய்க்கு போடற பிஸ்கத்து மாதிரி ..

இந்த மாதிரி வெத்து பேரு /புகழ்ங்கற போதையில வாழ்ந்துட்டு -திடீர்னு விழிச்சா மூளைகலங்கிரும். சாக்கிரதை.

அதிர்ஷ்டம்:
அதிர்ஷ்டம்ங்கறது வரதட்சிணையில 10% தள்ளுபடி கிடைக்கிறதோ - மச்சினன் பாத்ரூம் கதவு ஓட்டை வழியா பார்க்கறதில்லைங்கறதோ -கொளுத்த நினைச்சப்ப வீட்ல மண்ணென்ணை இல்லைங்கறதோ இல்லை.

இந்த அஞ்சாமிடம் தேன் புத்தியை காட்டுது. அண்ணா சொன்ன மாதிரி புத்தியை தீட்டி வச்சுக்கிட்டா அதான் அதிர்ஷ்டத்தை தரும்.

தாளி அதிர்ஷ்டமே இல்லாட்டாலும் -துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமா மாத்திக்கிறது எப்படிங்கற 'குன்ஸ்" வந்துரும்.

ஓகேவா உடுங்க ஜூட். இப்பம் ஆறாம் பாவத்துக்கு போயிரலாமா/ ஐ மீன் ஆறாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

இந்த பாவம் வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு
ஆகிய அம்சங்களை காட்டும்.

ஹவுஸ் வைவ்ஸ்:

ஹவுஸ் வைஃபை பொருத்தவரை ருண உபாதைகள் அதிகமா இருக்காதுனு நினைக்கிறேன். ஆத்துக்காரரு கிம்பளம் வாங்கி ஏசிபில மாட்டினாலோ -ஆட்குறைப்புல வீட்டுக்கு வந்துட்டாலோ இன்ன பிற காரணங்களாலயொ இவிகளுக்கும் கடன் தொல்லைகள் ஏற்படலாம்.

சத்ரு உபாதைகள்னா அது மாமியாரு, நாத்தி தேன்.இந்த மாமியாரு -மருமக பஞ்சாயத்துகளை பத்தி ஒரு காலத்துல இரண்டு பெண்கள்னுட்டு தனிப்பதிவே போட்டிருக்கன். பொறுமை உள்ளவர்கள் பாக்கியசாலிகள் அவர்கள் தேடி படிக்கக்கடவர்.

கொஞ்சம் போல சைககலஜி தெரிஞ்சா இந்த பார்ட்டிகளையெல்லாம் சாலாக்கா டேக்கிள் பண்ணிரலாம். மாமியாரு நாத்தி ஒரு ரகம் -மாமனாரு , மச்சினன் வேறு ரகம்.

அது ஆணோ பெண்ணோ செக்ஸ் லைஃபை ஒழுங்கா ப்ளான் பண்ணிக்கிட்டு வாழ்ந்தா பிரச்சினையே இல்லை - வாழ்ந்து முடிச்சிருந்தா அடுத்து வாழவர்ரவுகளுக்கும் பிரச்சினை ய்ல்லை. இதுல பிரச்சினை இருந்தாதேன் பிரச்சினையே ஸ்டார்ட் ஆகுது.

இதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டு நரி இடமா போனா என்ன வலமா போனா என்ன மேல விழுந்து பிடுங்கலின்னா சரின்னு வெஸ்டர்ன் ஸ்டைல்ல போயிக்கினே இருக்கனும்.

அடுத்தது ரோகம் இதை பத்தியும் அன்னையர் தினத்துனன்னைக்கு ஒரு விசேஷ பதிவே போட்டதா ஞா. இந்த 6 ஆம் பாவத்தை பொருத்தவரை ஒரு சிக்கல்.

எப்படியா கொத்த யோக ஜாதகமா இருந்தாலும் சத்ரு -ரோகம் -ருணம்ங்கற 3 உபாதையில ஏதாச்சும் ஒரு உபாதைய ஃபேஸ் பண்ணியே ஆகனும். இதுல எது பெட்டருன்னு அவிகவிக சிச்சுவேஷனை பொருத்து சூஸ் பண்ணிக்கலாம்.

உ.ம் :

பாடி காட்பாடி ஆயிருச்சு - தேர்ரது கஷ்டம். உங்க பேர்ல கடன் வாங்குங்க (அஞ்சு பத்துல்லாம் கடியாதுங்க ஆன்டி! உங்க நோயோட தீவிரத்தை  பொருத்து -ஃபிகரை டிசைட் பண்ணுங்க )
ர்
ஹஸ்பெண்ட் புதையல் எடுக்கறேன் - லட்ச ரூபா ஃபாரின் கரன்சியை மாத்தறேன் - ரைஸ் புல்லிங் விக்கறேன்னு ஷெட் ஆயிட்டாரு. கடன் தொல்லை கழுத்தை நெறிக்குது. அப்பம் மருந்து மாத்திரை டாக்டரை எல்லாம் மறந்துருங்க. சின்ன சின்ன நோய்களை ஃபேஸ் பண்ணுங்க (அவை தீவிர  நோய்களுக்கான முன்னோட்டமா இல்லாதவரை)

புனைப்பெயர் ஒன்னை வச்சுக்கிட்டு - பக்கத்து அப்பார்ட்மெண்ட் தாய்குலத்துக்கு உங்க புனைப்பெயரை சொல்லாதிங்க - லோக்கல் பிரச்சினைகளை பற்றி லெட்டர் டு எடிட்டர் எழுதுங்க. ஊரை சொன்னா பேரை சொல்லாம -பேரை சொன்னா ஊரை சொல்லாம உங்க எதிரிகளை பத்தி கதை எழுதுங்க -பத்திரிக்கைகளுக்கு மட்டும் அனுப்பாதிங்க. வேணம்னா நம்ம மெயில் ஐடிக்கு அனுப்புங்க . ரிப்பேர் பண்ணி ஒப்பேத்தி போட்டுவிட்டுருவம்.

திரும்பி வராதுன்னு தெரிஞ்சு - வராட்டாலும் பரவால்லைங்கற தொகைகளை கை மாத்தா கொடுங்க -கேளுங்க -ஆனால் நாசூக்கா -வராட்டாலும் பரவால்லைங்கற டோன்ல கேளுங்க. தோஷம் கட்டுப்படும்.
வேலைக்காரியோட குழந்தை சாவுக்கு கொடுத்த இரு நூற்று சில்லைறை ரூபாய்க்கு கயிறு கட்டாதிங்க.

நல்ல சர்க்கிள் இருந்தா பட்டிமன்றங்கள் நடத்துங்க. தலைப்பு: எந்த சீரியல்ல நிறையே பேர் கற்பிழக்கிறார்கள் மாதிரி வேணா. இதைவிட கடன் , நோய் ,எதிரிகள் தொல்லையில நாசமா போங்க. ஐ டோன்ட் கேர்.

நான் சிபாரிசு செய்யும் தலைப்புகள் ஊழலுக்கு காரணம் ஆண்களா ? பெண்களா? (தீர்ப்பு சொல்ல என்னை கூப்ட்ராதிங்க) பட்டிமன்றத்துல பேசும்போது சொந்த மேட்டரை எல்லாம் அவுத்து உடாதிங்க.

கணிணி அறிவு இருந்தால் மூஞ்சி புஸ்தவத்துல போயி விஐபி  எல்லாரையும் கிழிங்க ( ஆம்பளை பேரா வச்சுக்கிடுங்க - எவனும் சீந்தமாட்டான்)


இந்த கேட்டகிரியில வர்ர நோய்கள் விஷயத்துல ஒர்க்கிங் விமன் -ஹவுஸ் வைவ்ஸுக்கு இடையில நிறைய வேறுபாடுகள் இருக்கலாம்.( ஆண்களுக்கு வர்ர எல்லா பிரச்சினையும் ஒர்க்கிங்க வுமனுக்கு வருதுங்ணா உ.ம் ரத்தக்கொதிப்பு ,அல்சர் ,முதுகு வலி ,தோள்பட்டை வலி ,மூட்டுவலி ,ஷுகர்)


உங்க முழு முதல் எதிரிகள் வேறே. அவிக பட்டியலை தரேன். முடிஞ்சா அவிகளை கிழிங்க. ஆட்டோமெட்டிக்கா சத்ரு ரோக ருண உபாதைகள் நீங்கி தன்னிரக்கம் காரணமா நிலத்தில் கால் பாவாதா சீரியல்களுக்கு அடிமையாகாம வாழலாம்.

உங்கள் முழு முதல் எதிரிகள்:

1.மதவாதிகள் 2.வேதங்கள் 3.பிராமணர்கள் (ஐ மீன் பிராமணீயம்) 4.ஆட்சியாளர்கள் 5.ஒங்களை பத்தின எந்த அக்கறையும் இல்லாமை எக்சிபிட் பண்ணி-எக்ஸ்ப்ளாயிட் பண்ணி கல்லா கட்டிக்கிற கார்ப்பொரேட் நிறுவனங்கள் -விளம்பர நிறுவனங்கள் -மீடியா 6. உங்கள் ஹிப்பாக்கிரசி - இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் -தன்னம்பிக்கை இன்மை - மடமை -ஒற்றுமை இன்மை


உங்கள் பரிசீலனைக்கு ஒரு சில கொட்டேஷன்ஸ்/ பழமொழிகள்:

"பகைவனுக்கருள்வாய் நெஞ்சே"

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"

கெட்டவனுக்கு கெட்டது செய்ய நாம ட்ரை பண்றதை விட அவனுக்கு நல்லதை செய்து ஆண்டவனுக்கு கெட்டவனாக்கிரனும்.

சொன்னவர்: அடியேன்

Tuesday, July 5, 2011

ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம் (தொடர்ச்சி)

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவுக நம்ம ப்ளாக்/சைட்டை படிக்கிறாய்ங்கன்னா இந்த வெற்றிக்கு பின்னாடி எத்தனையோ அம்சங்கள் இருக்கு. அதுல முக்கியமானது சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் தரும் யோசனைகள்.

பேச்சுத்தமிழ்ல எழுத சொன்ன ஈழத்து சொந்தத்துலருந்து - இன்னைக்கு அதிரடி ப்ராஜக்டுக்கே யோசனை தந்திருக்கிற திரு.இஸ்மாயில் அவர்கள் வரை எத்தனையோ நல்ல உள்ளங்கள் இந்த வெற்றிக்கு பின்னாடி இருக்காய்ங்க. அவிகளுக்கெல்லாம் நன்றி நன்றி நன்றி.

இஸ்மாயில் அவர்கள் முன் வைத்திருக்கும் யோசனை என் ஒருவனால் அமல் படுத்திவிட முடிந்த ஒன்றல்ல. அதனால ஒரு கடிதம் பதிவாகிறது ; இஸ்மாயில் ங்கற பதிவை படிச்சு உங்க கருத்தை தெரிவிங்க ப்ளீஸ் !

உலகத்துல எந்த ஜாதகத்துலயும் - எந்த கிரகம் - எந்த பாவமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது. கிரகங்களோட பாவங்களை பலத்தை பொருத்து அவற்றின் ஜூரிஸ்டிக்சன்ல நமக்கு அத்யாவசியமானதை மட்டும் பொறுக்கிக்கிட்டு மத்ததை விட்டுத்தொலைச்சுட்டா பிரச்சினை கிடையாது.

இதை இன்னொரு உதாரணத்தின் மூலம் சொன்னா கிரக பலம் என்பது பவர் . பவர் கட் வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது. பவர் சப்ளை கரீட்டா இருந்தா ஒன்னும் பண்ண தேவை இல்லை. லோ ஓல்ட்டேஜ் இருந்தா?

மன்சன் தன் அறிவை உபயோகிச்சு தேவையில்லாத பல்பு ஃபேன் மோட்டர்களை நிறுத்திட்டு - சந்தர்ப்பத்தை பொறுத்து கிச்சன்/டைனிங் டேபிள்/ஹால்/பெட் ரூம்ல உள்ள பல்பை மட்டும் போட்டுக்கிட்டு அஜீஸ் பண்ணனும்.

அல்லாத்தையும் ஆன் பண்ணி தொலைச்சா பல்புங்க ஃப்யூஸ் போயிரலாம் -மோட்டர்கள்ள வைண்டிங்க பஸ்மமாயிரலாம், டிவி பிக்சர் ட்யூப் எகிறலாம்.

இதே தியரிதான் கிரகங்கள்/பாவங்கள் விஷயத்திலும் ஒர்க் அவுட் ஆகுது.

ஆண்களை பொருத்தவரை எது முக்கியம் எது முக்கியமில்லைன்னு டிசைட் பண்ற நிலை இருக்கு. ஆனால் தாய்குலத்தை பொருத்தவரை அவிக "அந்த நாள் முதல் இந்த நாள் வரை " அடிமைகளா இருக்கிறதால அவிகளுக்கு ச்சூஸ் பண்ணிக்கிற ஆப்ஷனே இல்லாம இருக்கு.

இது ஒரு இழவுன்னா பெண்ணுரிமைங்கற பேரால அவிகளை ரெண்டு பக்கமும் கொளுத்தப்பட்ட மெழுகுவர்த்தியாவேற ஆக்கிட்டாய்ங்க.

தற்சமயத்துக்கு அடுத்த தலைமுறைக்காச்சும் ஒரு விழிப்புணர்வை ஊட்டத்தேன் இந்த தொடரையே ஆரம்பிச்சோம்.

( இதை படிக்கிற தாய்க்குலம் அப்படியே டின்ல அடைச்சு - தங்களோட வாரிசுகளுக்காச்சும் ஊட்டனும்னு கேட்டுக்கறேன்)

பொதுவாக ஐந்தாம் பாவம் புத்தி பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,
தியானம், ஆகியவற்றை காட்டும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

கடந்த பதிவுல சொன்ன காரணங்களால பெண்கள் வாழ்க்கையில தியானங்கறது . கடேசி ஸ்டாப்பா கீது. தாய்க்குலம் தியானத்துக்கு மொத ப்ரிஃபரன்ஸ் கொடுத்து சினன் வயசுலருந்தே இதை பழக ஆரம்பிச்சுட்டாய்ங்கன்னா ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல வாழ்க்கைங்கற பலாப்பழத்தை பிய்க்கிறதுக்கு மிந்தி தியானங்கற விளக்கெண்ணெயை பூசிக்கனும்.

தியானம்னா என்ன? வசதியான பொசிஷன்ல உட்கார்ந்து எண்ணங்களை வாட்ச் பண்றதுதேன். அப்படி வாட்ச் பண்ணும்போது எண்ணங்களின் எண்ணிக்கையும் -அவை மாறும் வேகமும் குறைஞ்சுக்கிட்டே வரும். அப்பம் இரண்டு எண்ணங்களுக்கு இடையிலான இடைவெளியை கவனிக்கனும்.

நாளடைவுல இந்த இடைவெளி ஜாக்கெட்டுக்கும் - லோஹிப்புக்கும் இடையிலான இடைவெளி பொல அதிகரிக்கும்.

(இன்னைக்கு ஆண்,பெண்களுக்கு தொப்பை விழுக முக்கிய காரணம் லோ ஹிப் சாரியும் -லோ ஹிப் பாண்டும் தான்னு நம்ம ஊரு பாட்டி சொல்லுது)

எண்ணங்கள் உருவாகிறது நம்ம ஈகோவாலதேன். ஈகோ தான் இந்த படைப்புலருந்து நம்மை கட் பண்ணுது. நாம இயற்கையின் பிரிக்க முடியாத ஒரு பாகம்னு உணர முடிஞ்சுட்டா சிந்தனைக்கு தேவையே இருக்காது.

சிந்தனைகள் தான் செயலுக்கு அடிப்படை . இயற்கையின் இணைப்பு கிட்டாத மூளையின் சிந்தனைகள் எல்லாமே சீக்கா தான் இருக்கும். ( சீக்கு = நோய் பிடித்த) சிந்தனைங்கறது எதிர்கால செயல்களுக்கான ரஃப் ஒர்க். சிந்தனைக்கு அடிப்படை கடந்த கால அனுபவங்கள். கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஜெயமாலினிக்கும் - நமீதாவுக்கும் உள்ள அளவு வித்யாசம் இருக்கும். பப்பு வேகாது. மேலும் சிந்தனை யதார்த்தத்துலருந்து தப்பத்தேன் தூண்டும். எதிர்கொள்ள உதவாது. (அக்கணம்)

பச்சையா சொல்றேன். இப்ப ஒரு தாய். அவிக தன் புருசனை முந்தானையில முடிய என்னென்னமோ டெக்னிக்கையெல்லாம் யூஸ் பண்ணியிருப்பாள். அதே டெக்னிக்கை மகன் மேட்டர்ல யூஸ் பண்ண முடியுமா?

அதனால தாய்குலத்துக்கு / ஐமீன் தாய்குலம் மூலமா அடுத்த தலைமுறைக்கு நான் தர்ர சஜஷன் என்னடான்னா.. தியானம் பண்ணுங்க.

சப்பணமிட்டு உட்காருங்க. கைகளை முழங்கால் மேல வைங்க. இங்கன ஒரு வட்டம் ஏற்படுது. இல்லாட்டி உங்க உள்ளங்கால் -உள்ளங்கை வழியா உங்க ஜீவ சக்தி வீணாகிட்டு இருக்கு. அதுக்கு ஒரு 15 நிமிசத்துக்காவது ஸ்டாப் சொல்லுங்க

எலக்ட்ரிக் ஒயரை பார்த்திருப்பிங்க. அதுல மின்சாரம் நீள வாக்குல பாஸ் ஆகுது. மிக குறைஞ்ச அளவு பவர் . அதனால பல்பு எரியுது

ஆனால் ஃபேன்ல பாயும்பொது மட்டும் பேயா சுத்துது எப்படி? அதுக்குள்ளாற வைண்டிங் இருக்கு. வைண்டிங்னா செம்பு கம்பி சுற்றப்பட்டிருக்கும்.

அந்த கம்பி வழியா மின்சாரம் வட்டவடிவத்துல - தொடர் வட்டமா பாய்வதால சக்தி ஏற்படுது.அந்த சக்தியால மோட்டர் பேய் வேகத்துல சுத்துது. அதுல பொருத்தப்பட்ட இறக்கை காற்றை அள்ளி வீசுது. அதுல பொருத்தப்பட்ட ப்ளேடு கண்டதையும் அரைச்சு தள்ளுது. எலக்ட்ரிக் பைக்ல வண்டியை முன்னுக்கு பாய செய்யுது.

ஒரே மின்சாரம் நீள வாக்குல பாயும் போது மிதமான சக்தி . வட்டவடிவுல பாயும் பொது அளப்பரிய சக்தி. நீங்க சப்பணமிட்டு அமர்ந்து , உள்ளங்கைகளை முழங்கால் மேல வைக்கும் போது ஒரு வட்டம் உருவாகுது .உங்களுக்குள்ள இருக்கிற மிக குறைந்த சக்தி வட்டவடிவத்துல பாய ஆரம்பிக்குது.

கண்ணை மூடுங்க. ( மன்சனோட ஜீவ சக்தியில பாதி கண்கள் வழியாத்தேன் செலவழிஞ்சுருது). அந்த சக்தியும் சேவ் ஆகட்டும். கண்ணை லேசா மூடனும்.

முதலிரவு அறையோட கதவு மாதிரி படார்னு சாத்தக்கூடாது. புருசனை ஆஃபீசுக்கு வழியனுப்பிட்டு அவர் வண்டி ஸ்டார்ட் ஆகி தெருமுனை வ்ரை போன பிறகு லேசா சாத்துவிங்களே அப்படி சாத்தனும்.

முதுகெலும்பை லேசா நிமிர்த்தி வைங்க ( அட்டென்ஷன்லாம் வேணாம் -அப்பாறம் முதுகுவலி வந்து தொலைச்சா நாம பொறுப்பு கடியாதுங்கொ) முதுகெலும்புல எத்தனையோ அற்புதங்கள் இருக்கு. அதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா பக்கத்தை மூடிட்டு போயிருவிக.

இப்பம் உங்க பார்வையை மூக்கு நுனியில வைங்க. லேசா - அப்பம் ஆட்டோமெட்டிக்கா உங்க பார்வை இரண்டு கண்களுக்கும் இடையில் பதியும் .

இப்பம் சிந்தனைகளை கவனிங்க. சிந்தனைகளுக்கிடையிலான இடைவெளியை கவனிங்க. இதை தொடர்ந்து செய்தா விட்டலச்சார்யா படம்லாம் உங்க அனுபவங்கள் கிட்டே பிச்சை வாங்கும். இது கூட முக்கியம் கிடையாது.

சிந்தனைகள் கொஞ்சம் போல குறைஞ்சு இடைவெளிகள் கொஞ்சம் போல அதிகரிக்க ஆரம்பிச்ச பிறவு க்ளீன் ஸ்லேட்டா ரோசிக்க ஆரம்பிங்க.

மேற்சொன்ன ஐந்தாம் பாவ காரகங்களான புத்தி, பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம் இதுல எது முக்கியம்? எல்லாமே வேணம்னா வேலைக்காகாது.

ஏதாவது ஒன்னை பெறனும்னா ஒன்னை விட்டுக்கொடுத்துத்தான் ஆகனும். உங்க வாழ்க்கை சூழல் குடும்ப நிலை , சமூக சூழல் ,பொருளாதார சூழலை பொருத்து முடிவெடுங்க.

வாழ்க்கையில எதுக்காகவும் இழந்துரக்கூடாத விஷயம் சுதந்திரம். சுதந்திரத்துக்காக எதை வேணம்னா இழந்துரலாம்.

அடிமைகளா இருக்கிறதுல ஒரு லாபமும் இருக்கு. அது என்னன்னா கிரகங்கள் முடிவெடுப்பவர்களைதான் பாதிக்கும். முக்கியமா சனி அடிமைகளை சீண்டறதே இல்லை. ( சீந்தறதில்லைனு சொல்லனும். ஏன்னா கழிவறை -சாக்கடை -ஆசன வாய் இத்யாதிக்கு காரகம் வகிக்கும் நீச கிரகமான சனிக்கே அடிமைகள்னா அவ்ள அருவறுப்பு.

ஓகே பெஸ்ட் ஆஃப் லக்..

Monday, July 4, 2011

ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம்

அண்ணே வணக்கம்ணே ! ஆண்,பெண் வித்யாசம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டது ஞா இருக்கலாம். அதை தொடர உத்தேசம். தொடர்ந்து எழுதறதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒன்னு சுட்டுர்ராய்ங்க. ரெண்டு நமக்கே போரடிச்சுருது.

ஒரு காலத்துல நம்மை சம்பந்தா சம்பந்தம் இல்லாம கிழிச்சுக்கிட்டிருந்த ஸ்ரீனிவாச அய்யங்கார் ( நம்ம ஊருதேன்) இப்பம் நன்றிக்கடன்ல தத்தளிக்கிறாரு.  தன்னால ஏற்பட்ட டேமேஜுக்கு பரிகாரம் தேடியே தீருவேங்கறாரு.

சில பிக்காலிங்க அய்யரோட அய்யர் தி கிரேட் ப்ளாக்லருந்து அவர் நம்மை அர்ச்சித்ததை   காப்பி பேஸ்ட் பண்ணி பரப்பிக்கிட்டிருக்காய்ங்க.

நம்ம லட்சிய திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி வல்லரசு கனவுகள் ங்கற தலைப்புல கழுகுல ஒரு பதிவை போட்டிருந்தோம். அந்த பதிவுலயும் இந்த காப்பி பெஸ்ட் கஸ்மாலங்க என்ட்ரி கொடுத்திருக்கு. அய்யர் ரெம்ப நொந்து போயிருக்காரு.
கழுகு காரவுகளுக்கு கமெண்ட் போட்டு காப்பி பேஸ்ட் ஒள்ளார ஓளிங்களோட கமெண்டை நீக்க சொல்லி கேட்டிருக்காரு. ஆனால் அவிக இன்னைக்கு ராத்திரி 9.40 வரை நீக்கக்காணோம்.

அதுக்காவ நம்ம ப்ளாக்ல அய்யரை விட்டா நம்மை கல்கி அவதாரம் கணக்கா புகழ்ந்து தள்ளிருவாரு.அதனால அடக்கி வச்சிருக்கேன். சனம் எப்படி சொன்னா அப்படி செய்யலாம்னு உத்தேசம்.

ஓகே தொடர்பதிவுக்கு போயிரலாம்.

ஜாதகத்துல ஆண்பெண் வித்யாசம்னா அது ஆயுள் ஸ்தானம் - சுகஸ்தானத்துக்கு மட்டும் தேன்னு நினைச்சிருப்பிங்க. ஆனால் 12 பாவங்களை பொருத்தும் ஆண் பெண் ஜாதகங்களுக்கு வித்யாசமிருக்கு. அதை வலியுறுத்தித்தேன் இந்த தொடர். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க.


ஏற்கெனவே மொதல் 4 பாவங்களை பற்றி எழுதியாச்சு. படிக்காதவுக வசதிக்காக சுட்டிகள் இங்கே.

ஆண் பெண் வித்யாசம்: பாவம் 1
ஆண் பெண் வித்யாசம்: பாவம்
ஆண் பெண் வித்யாசம்: பாவம் 3
ஆண் பெண் வித்யாசம்: பாவம் 4

இந்த வரிசையில் இன்று 5 ஆம் பாவத்தை பார்க்கலாம். உடுங்க  ஜூட்

பொதுவாக ஐந்தாம் பாவம் புத்தி  பிள்ளைகள்,பூர்வ புண்ணியம் , மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,
தியானம், ஆகியவற்றை காட்டும்.

இதில் ஒவ்வொன்றையும் பற்றி ஆராய்வோம்.இந்த  ஒவ்வொரு விஷயத்திலும் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் இருக்குது. இதனால லாபம் என்ன நஷ்டம் என்னனு பார்த்துருவம்.

அதுக்கு முந்தி ஒரு சின்ன தர்க்கம். ஒவ்வொரு பாவமும் ஒரு வீடு மாதிரி. அந்தந்த பாவங்கள் பலம் பெறவும் , பல்கீனமடையவும் ஆயிரத்தெட்டு விதிகள் உள்ளன.

என் அனுபவத்தில் எந்த ஒரு ஜாதகத்துலயும் எந்த பாவமும் -எந்த கிரகமும் 100 சதம் சுபபலமாய் இருந்ததே இல்லை.

என்னதான் சக்தி வாய்ந்த ஃபோக்கஸ் லைட்டை ஆன் பண்ணாலும் அதும் பின்னாடியே அதனோட நிழல் விழறாப்ல - இருட்டடிச்சுர்ராப்ல கிரகம் அ பாவம் முழுபலம் பெறும்போது அதனோட சைட் எஃபெக்டா  சில தீய பலன்களும் ஏற்பட்டுருது.

உ.ம் : நம்ம ஜாதகத்துல கடகத்துல (லக்னமே இதான்)  குரு உச்சம். இவர் பஞ்சமாதிபதியா உச்சம் பெற்றது நல்லதுதேன். அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதச்சொரிவுக்கு இதான் காரணம். இது ப்ளஸ்.

ஆனால் இவரே ரோகாதிபத்யமும் பெற்றுள்ளதால் ஏக் தம் ஹெவி சி.எம் க்கு எதிராவே  கோர்ட்டுக்கு போகவேண்டியதாயிருச்சு. இது மைனஸ்.

கூடிய சீக்கிரம் இந்த ஆன்லைன் கன்சல்ட்டன்சியை விட்டு தொலைச்சு க்ஷேத்திராடனம் ( அதாங்க அகில இந்திய சுற்றுப்பயணம்) துவங்கலின்னா உட்கார்ந்து உட்கார்ந்து வெயிட் போட்டு - ஹார்ட் வீக் ஆகி ஹார்ட் அட்டாக் கூட வரலாம். இது மைனஸ்.

புத்திர காரகனான குரு புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் ஆண் வாரிசு இல்லாம போயிருச்சு. (மேல் சேவனிசத்தோட ரோசிச்சா இதுவும் மைனஸ் தேன் - ஆனால் எங்கம்மவே உசுரோட இருந்திருந்தா கூட இந்த ரேஞ்சுக்கு நம்ம கவனிச்சிக்கிட்டிருக்கமாட்டாய்ங்க. அப்பனுக்கு அப்பனா - ஆத்தாளுக்கு ஆத்தாளா கவனிச்சிக்கிற மகள் நிச்சயமா பூர்வ ஜன்ம புண்ணியம்தேன்.

ஆக எந்த பாவமானாலும் அது தரும் எல்லா நற்பலனையும் ஆரும் அனுபவிச்சுரமுடியாதுங்கறது இயற்கையின் குரூரமான விதி. தர்கம். இப்ப மேட்டருக்கு போயிருவம்.


1.புத்தி :
ஒரு காலத்துல பெண்கல்வி இல்லை. (இப்பயும் சமூக ,பொருளாதார பின்னடைவு /விழிப்புணர்வு இல்லாத காரணத்தால   நொண்டியடிச்சுக்கிட்டுதான் இருக்கு -படிக்கலாம் -ஆனால் அது சம்பந்தப்பட்ட வேலைக்கு போக கூடாது -போனாலும் கண்ணாலத்துக்கப்பாற் விட்டுரனும் ) அதனால ஐந்தாம் பாவத்தோட சுப பலம் எல்லாம் பெண்களை "மக்களை பெற்ற மகராசி"யாக்கிக்கிட்டிருந்தது.

இப்பம் இன்ஃபெர்ட்டிலிட்டி அதிகரிக்க பெண் கல்வியும் ஒரு காரணம்னு நான் சொன்னா பாப் வச்ச ஆன்டிங்க சாணி கரைச்சு நம்ம தலையில  ஊத்திருவாய்ங்க.

நம்ம கான்செப்ட் என்னன்னா கல்வி பெறும் தகுதி ( ஐ மீன் ஜோதிட ரீதியிலான கிரக பலம் -பாவ பலம்)  இருந்து படிச்சா கல்வியும் கிடைக்கும் - குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

போதுமான பலம் இல்லாம  கல்வியை பெறும்போது டெபிட் கார்டா இருக்கவேண்டிய ஜாதகம் கிரெடிட் கார்டா மாறிருது. குழந்தை பாக்கியத்துக்கு ஆப்பு வச்சிருது.

லாஜிக்கலா பார்க்கும் பெண்  கல்வி பரவியதால் கு.க ஒர்க் அவுட் ஆச்சு. குழந்தைகள் மேட்டர்ல செலவாக வேண்டிய கிரக பலம் /பாவ பலம் நிலுவை வைக்கப்பட்டதால் புத்தி விகசித்தது - வாரிசுகள் சிறப்புற்றனர்.

என்ன ஒரு சோகம்னா இன்னமும் கு.கன்னா அதை பெண் தான் செய்துக்கனும்னு ஒரு எழுதப்படாத வியாதி இருக்கு அது வேற விஷயம். ( நிச்சயம் மாற்றப்பட வேண்டிய விஷயம்)

2.பிள்ளைகள்:

ஜாதகியின் புத்தி விகசிச்சா பிள்ளைகள் /பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் பின்னடைவு ஏற்பட்டுருது. இன்னைக்கு "கைச்செலவுக்கு" கிரைம் பண்ற யூத்தோட  தாய்மார் எல்லாம் டிகிரிக்கு மேலத்தான் படிச்சிருக்காய்ங்க.

(மறுபடி சொல்றேன். குறிப்பிட்ட பாவம்/கிரகம் முழு பலத்தோட இருந்தா எல்லா அம்சங்களும் பெட்டராவே இருக்கும். பற்றாக்குறை இருந்தாத்தான் இந்த மாதிரி இழவெடுத்துருது.

3.பூர்வ புண்ணியம்:
பெண்ணடிமை இல்லாத காலம் வேத காலம்னு ஜல்லியடிப்பாய்ங்க. அதெல்லாம் விதி விலக்குகளா இருக்கலாமே தவிர பெண் காலா காலத்துக்கும் , யுகம் யுகமா , அனைத்து கல்பங்களிலும் அடிமையாகவே இருக்கிறாள்.

பெண் வீக்கர் செக்ஸ். யுக யுகமாக அடிமைத்தனம் அவளது செல்களுக்கு பாய்ச்சப்பட்டிருக்கிறது. சதா அபத்திர பாவத்தில் இருப்பவள். அவள் என்ன செய்தாலும் ,எத்தனை செய்தாலும்  கருமம் அவளை அண்டுவதில்லை.

அவளை அந்த கருமத்திற்கு , பாவத்திற்கு துரத்திய ஆணின்  கணக்குக்கே அந்த கருமம் மாற்றலாகிவிடுகிறது.

எனவே பூர்வ புண்ணியத்தை பொருத்த வரையில் பெண் அதிர்ஷ்ட சாலிதான். சில பெண்கள் தமக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வானமே இடிந்து விழுந்துவிட்டாற்போல கலங்குகின்றனர்.

உண்மை என்னவென்றால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடாதிருக்க, துரதிர்ஷ்டம் துரத்தி வராதிருக்க  அவர்களது பூர்வ புண்ணியம் செய்த லீலை சந்தானமின்மை.


4.மன நிம்மதி:

ஒரே கூரையின் கீழ் வசித்த படி - ஒரே கட்டிலை -ஒரே உணவை  பகிர்ந்து  வாழ்ந்தாலும் புருசன் உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்கெல்லாம் டென்ஷனாகிக் கொண்டிருக்க பொஞ்சாதி மட்டும் கூலா இருக்கிறதை பார்த்திருப்பிங்க.

புருசங்காரன் பத்துவருசத்துக்கப்பாறம் நடக்கப்போறதை  நினைச்சு பேதியாகிக்கிட்டிருக்க பொஞ்சாதி பத்து மணி சீரியல்ல காஞ்சனாவோட கர்பத்துக்கு ஆரு காரணம்னு ரோச்சிக்கிட்டிருக்கிறதை பார்த்திருப்பிங்க.

இது எப்படி சாத்தியம்?

பெண்ணா பிறந்ததுமே  அட  தாயின் கருவில் அவளது பால் நிர்ணயிக்க பட்டதுமே அதிர்ஷ்டம் அவளை கை விட்டுருதுங்ணா . ங்கொய்யால லேபர் வார்டுல ஆரம்பிச்சு சுடுகாடு வரைக்கு பாராபட்சம் தானே. அவமரியாதை தானே.

என்னடா பொட்டை குட்டி தான் பொறந்திருக்கு இதுக்கு போயி பட்டை சாக்லெட்டா கேட்கிற தாய்குலம் இருக்காய்ங்க

இதனால அஞ்சாம் பாவத்து தோஷம் - பெருமளவு கழிஞ்சு போயிருதுங்ணா. அடுத்து புத்திக்கும் - நிம்மதிக்கும் உறவு இருக்கு.

புத்தி உள்ளவன் என்னைக்குமே நிம்மதியா இருக்க முடியாது. ( கல்வி அறிவு வேறு -புத்தி வேறு)  மேலும் பெண் வீக்கர் செக்ஸுங்கறதால  தன்னை உடனடியா  பாதிக்ககூடிய சின்ன விஷயங்களை தவிர  பெரிய விஷயங்களை - பத்து இருபது வருஷங்களுக்கு அப்பாறம் தனனி பாதிக்கக்கூடிய விஷயங்களை  எல்லாம் போட்டு குழப்பிக்கிறதில்லை.

புருசன் லஞ்சம் வாங்கினாலும் - கடத்தல் பண்ணாலும் - ஆக்கிரமிப்பு பண்ணாலும் ,கூட்டி கொடுத்தாலும் -காட்டி கொடுத்தாலும் - தாளி பொதுப்பணத்தை  கொள்ளையே  அடிச்சாலும் பெண் கண்டுக்கறதில்லை.
இன்னம் நிறைய கேஸ்ல பெண்ணே என்கரேஜ் பண்றா. ங்கோத்தா பெரிய மயிரு மாதிரி அடக்கி ஆள்றே இல்லை. மவனே உனக்கு ஆப்பு வரனும்னா நீ இந்த தப்பை பண்ணாத்தானேடானு வெயிட் அண்ட் சீ பண்ற தாய்குலம்லாம் கூட இருக்காய்ங்க.

5.பெயர்,புகழ்:
99.99 பெண்களுக்கு பெயர் புகழ் ( சில சமயம் அவப்பேர் கூட)  வயா ஹஸ்பெண்ட் தான் வருது. நேரிடையா பெயர் புகழ் கிடைத்தவுக கூட  அவற்றை எவனோ ஒரு ஆணுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்துர்ராய்ங்க.

6.அதிர்ஷ்டம்:
நம்ம நாட்ல நிறைய பெண்களுக்கு அதிர்ஷ்டம்ங்கறதே மறு நாள் அவிக உசுரோட எந்திரிப்பாய்ங்களா மாட்டாய்ங்களாங்கற மேட்டர்லதான் தேவைப்படுது.

எனக்கு தெரிஞ்சு மண்ணெண்ணெய் ,கேஸ் விலையெல்லாம் ஏத்தினது பெண்களோட உசுரை காப்பத்தத்தான்னு சோனியா அம்மா சொன்னா அதை கேள்வி கேட்காம நம்பற மன நிலையிலதான் பெண்கள் இருக்காய்ங்க.

7.தியானம்:

ஏற்கெனவே சொன்னபடி பெண் வீக்கர் செக்ஸ் என்பதால் தொலை தூர - எதிர்கால விஷயங்களில் அவளுக்கு பெரிதாக ஆர்வமிருப்பதில்லை. அவிக நோக்கம்லாம் "ஏதோ இதே போல காலம் ஓடிப்போச்சுன்னா போதும்" ங்கறது தேன்.

அதனாலதான் கோவில்கள்ள பெண்கள் கூட்டம் அம்முது. ஆன்மீகத்துல மேலோட்டமான -ஸ்வீட் நத்திங்ஸுக்கு ஆதரவே தாய்குலம் தேன்.

தியானங்கறது மரணம். கோவில்ங்கறது கொண்டாட்டம்.ஏற்கெனவே ஜீவனற்ற மரணம் ஒத்த வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டிருக்கிற பெண்கள் மரணத்தை விரும்புவாய்ங்களா? நெவர்..

ஐந்தாம் பாவத்தோட ப்ளூ ப்ரிண்ட் இது. இதை வாஸ்துப்படி எப்படி கட்டிக்கிட்டா நல்லதுனு அடுத்த பதிவுல பார்ப்போம்.

Wednesday, December 22, 2010

திருப்பதியில் 40 பிரசவம் - ஒரே ஒரு பெண் குழந்தை ஏன்?

திருப்பதி மெட்டர்னிட்டி ஆஸ்பத்திரில கடந்த புதன் கிழமை  டோட்டலா 40 பிரசவம் நடந்தது.இதுல 39 ஆண்குழந்தைகள். ஒரே ஒரு பெண் குழந்தைகள். இந்த விகிதம் திருப்பதில மட்டுமா? இல்லை உலகமெல்லாம் இதே கதியா தெரியலை.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் முக்திங்கறது பிறப்புரிமை. தன் முக்திக்கான சாதனைக்கு அனுகூலமான பிறப்பை எடுக்க ஆத்மாக்கள் காத்துக்கிட்டிருக்கும்ங்கறது என் நம்பிக்கை. தாளி கருவுலயே தீர்த்து கட்டிட்டா எங்கனருந்து சாதனை பண்றது? பப்பாளிப்பழம், எருக்கங்குச்சி பாட்டிலருந்து  ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல உள்ள ஹாஸ்பிட்டல்ஸ் வரை எல்லா நாதாரியும் எமனா இருப்பாய்ங்கன்னா ஆண் பிறப்பை எடுக்க அந்த ஆத்மாவுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.

இப்பமே ஆண் -பெண் பிறப்பு விகிதம் கச்சா முச்சான்னு உதற ஆரம்பிச்சிருக்கு. பெண் கல்வி, வேலை வாய்ப்புல பெண்ணுக்கு முன்னிரிமை மாதிரி காரணங்களால பெண் சிங்கிள் ஹேண்டா மோத ஆரம்பிச்சுட்டா.

பசங்க காலேஜுக்கு கட்டடிச்சு,பான்,பீடா,குட்கா, பீடி,சிகரட்,கஞ்சா, ரஜினி ,கமல்,அஜித்,விஜய், அரசியல்,சாதிசங்கம்னு டைவர்ட் ஆகி கிடக்க பொண்ணுங்கல்லாம் ஒயுங்கா படிக்குதுங்க. அதுங்க கரப்பான் பூச்சி மாதிரி எந்த வேலைலயும் சஸ்டெய்ன் ஆயிரும்.

எதுக்கு கண்ணாலம்னு வைபரேட்டர்களை ஆப்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா மவனுங்களே கோலாட்டம் தேன். இனியாச்சும் திருந்துங்க. ஆண் ஃபிசிக்கலா வேணம்னா ஸ் ட்ராங்கா இருக்கலாம். ஆனால் பெண் தான் பயாலஜிக்கலா,சைக்காலஜிக்கலா இன்னும் பல ஜிக்கலா பவர் ஃபுல். என்னதான் ரவுடித்தனம் பண்ணி ஆட்டம் போட்டாலும் ஆண்  இன்ஃபிரியர் தேன்.

இன்னம் கூட திருந்தாம அவிக பக்கம் எல்லாத்துக்கும் பொம்பள புள்ளைதானாமே அது இதுனு டகுலு விட்டுக்கிட்டிருந்தா ஆம்பளையெல்லாம் ஹோமோ வாயிருவான். எவனும் ரெண்டு காலை சேர்த்து நிக்க முடியாம போயிரும், மனித குலமே நிர்மூலமாயிரும்.

ஊதுற சங்கை ஊதியாச்சு. திருந்திருங்க. காலம் திருத்தினா வலிக்கும். வேணாம் ..வலிக்குது...அழுதுருவன்னு சொன்னா கேட்காது.

எச்சரிக்கை:
என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு மரணம்=செக்ஸ்=பணம்  என்ற வில்லங்கமான பதிவையும் போட்டிருக்கன். மிஸ் பண்ணாம படிச்சுருங்க.