Wednesday, August 17, 2011

அவன் அவள் அது : 16


வாடகைப் பணம்கொடுக்க முடியாம அல்லாடினது - ஆத்தா கூட சமயத்துல உதவ மாட்டேங்கறாளேன்னு மனம் நொந்தது - ஆத்தா பட்டப்பகல்ல - சமய புரம் மாரியம்மனா காட்சி கொடுத்தது இத்யாதியை கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.

கண்ணாலமாறதுக்கு மிந்தியே ஆஃபீஸ், ஸ்கூல் ,ட்யுட்டோரியல்ஸ் இத்யாதிக்கு ரென்டட் பில்டிங்ல இருந்ததுண்டு - கண்ணாலத்துக்கப்பாறம் ஏவரேஜா வருசத்துக்கு ரெண்டு வீடு மாறினதும் உண்டு. இதை சொல்ல காரணம் அத்தீனி ஹவுஸ் ஓனரை பார்த்த அனுபவம் நமக்கிருக்குன்னு சொல்லத்தேன்.

ஆனால் இந்த பதிவுல சொல்லப்போற ஓனர் மாதிரி ஒரு ஓனரை அதுக்கு மிந்தியும் பார்க்கலை.அதுக்கப்பாறமும் பார்க்கலை. இந்த கேரக்டரை பற்றியும் அவனுக்கு ஆத்தா கொடுத்த ஷாக் பற்றியும் ஏற்கெனவே எழுதி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட் இட். நியூ அட்மிஷன்ஸ் வேணம்னா இங்கே அழுத்தி ஒரு பாட்டம் படிச்சுருங்க.

இன்னாடா இது சித்தூர் முருகேசன் ஃப்ளாஷ் பேக்கா சொல்றாரே கண்டி நேத்து முந்தா நேத்து நடந்தது எதையும் சொல்லமாட்டேங்கறாரு. ஒரு வேளை ஆத்தா கூட கா உட்டுட்டாரா?அல்லது ஆய் பையனாயிட்டாரான்னு சிலர் கேப்பிக சொல்றேன்.

ஆய் பையன்னா ஒரு வகையில கரீட்டுதேன். நம்ம லட்சியங்கள் ரெண்டு. ஒன்னு ஆப்பரேஷன் இந்தியா2000 இதை ஒய்.எஸ்.ஆர் துவக்கிய ஜலயக்னம் மயக்கத்துல டீல்ல விட்டாச்சு. ரெண்டாவது லட்சியம் ஆத்தாளுக்காக தெலுங்குல எழுதின கவிதைகளை வலையேற்றம் செய்யறது. இதையும் டீல்ல விட்டுட்டாப்லதேன். ஏன் தெலுங்கு? தமிழ்ல இல்லியான்னு கேப்பிக. சொல்றேன்.

தமிழ்ல எழுதி வச்சிருந்ததையெல்லாம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஈ.ஓக்கு அனுப்பி தலைமுழுகியாச்சு. அந்த காகிதங்கள்ள ஆரெல்லாம் பட்டாணி கடலை சாப்டாய்ங்களோ? அந்த மதுரை வாசிகள்ளாம் ரெம்ப புண்ணியம் பண்ணியிருக்கனும்.

( ஒரு கட்டத்துல பெருமாள் மேல காதல் எக்கு தப்பா எகிறிப்போயி இதே போல ஆசுகவி தீட்டி - அது பெரிய கதை ஒரு சீரியலே எழுதலாம் - இப்பம் அந்த ஸ்க்ரிப்ட் ஆனந்த விகடன் ஆஃபீஸ்ல இருக்கலாம் - அல்லது அவிகளும் டிஸ்போஸ் பண்ணியிருக்கலாம்)

அதனால மிச்சமிருக்கிறது தெலுங்கு சரக்கு தேன். அதையெல்லாம் வலையேற்றம் பண்ண நான் இறங்கினா ஆன்லைன் ஜோதிட ஆலோசனைய ஊத்தி மூடிரவேண்டியதுதேன். அதனால அதுக்குன்னு குறைஞ்ச கன்ஃபிகரேஷன்ல ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வச்சுக்கிட்டு நம்ம இடத்துக்கு வந்தோ அ அவிக இடத்துல வச்சோ டைப் அடிச்சு தர்ரதுக்கு ஆள் தேடிக்கிட்டிருந்தோம்.

அப்பம் ஒரு பழைய க்ளாஸ் மெட் கிராஸ் ஆனான். அவன் படிக்கிற காலத்துலயே ஜகத் சோம்பேறி. கம்பைண்ட் ஸ்டடிக்கு வந்துட்டு ஊர்கதை எல்லாம் பேசிட்டு 'என்னால ஒன்னும்முடியலை ஒரு அரை மணி நேரம் தூங்கிர்ரன்னு தூங்கிருவான். இடி விழுந்தாலும் எந்திரிக்கமாட்டான். ( 1983 -84)

சரி இப்பம் வாழ்க்கையில நிறைய அடிப்பபட்டு இருக்கானே நாமே மாறியிருக்கம். இவன் மாறாத இருப்பானான்னு மேற்படி கம்ப்யூட்டரை கொண்டு அவன் கஸ்டடியில வச்சோம்.அந்த காலத்து டைப்ரைட்டிங் ஹையர் பாஸ் கேஸு. இப்பம் கண்ணெல்லாம் டப்ஸாகி / கம்ப்யூட்டர்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிர்ர ஸ்டேஜு. இருந்தாலும் பார்ப்பம்னு கொண்டு வச்சிருக்கம் இன்னைக்கு இது 3 ஆவது நாள் பார்ப்போம்.

சொல்ல வந்த மேட்டர் இது இல்லை. இந்த சங்கதியை நம்ம இன்னொரு க்ளாஸ்மெட்டும் -ஆந்திராவுல உள்ள நமக்கும் தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் பாலமா செயல்பட்ட கன்னிமரா லெண்டிங் லைப்ரரி கார்த்திகிட்டே சொல்லிக்கிட்டிருந்தம்.

அப்பம் அவரு அட எனக்கும் கொஞ்சமா கொடுப்பா நானும் பண்றேன்னாரு. அதான் சடன் ட்விஸ்ட்.
( இவரும் நம்மை போலவே பன்மொழிப்புலவர்தேன்). ட்ரெய்லர் கணக்கா நாம எழுதின சில தமிழ் கவிதைகளை வலையேற்றியிருக்காரு . ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துரலாமேங்கற தில்லுதுரைகள் மட்டும் இங்கே அழுத்துங்க. தெலுங்கு சரக்கும் சீக்கிரமே ஏறும்னு நினைக்கிறேன்.

அதுக்காவ அம்பபலுக்கு ( அம்பிகையின் சொல் - அம்பிகை சொன்ன சொல் ) ங்கற பேர்ல ஒரு ப்ளாக் கிரியேட் பண்ணி சந்திரமுகி ரேஞ்சுல ஹெடர் இமேஜ் எல்லாம் தயார் பண்ணிவச்சிருக்கம்ல . படம் பார்க்க விரும்புபவர்கள் இங்கே அழுத்தவும்

பல காலமா ஃப்ரீஸ்ல இருந்த ப்ராசஸ் இப்படி ஸ்டார்ட் ஆனதுக்கு பின்னாடியும் ஒரு சென்டிமென்ட்
இருக்கு. நமக்கு ஸ்தூல பூஜைகள் ,விக்கிரக ஆராதனை இத்யாதியில ஆர்வமில்லாட்டாலும் ஒரு சில சமயத்துல ( தேஜஸ் இல்லாம இருக்கிறச்ச - சந்திரன் 6,8,12 ல மாட்டினப்ப - நீசமானப்பல்லாம்) அந்தப்பக்கமா மனசு லேசா ஓரங்கட்டும்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்துல செட்டியாருங்க வீட்ல வரலட்சுமி விரதம் கொண்டாடற சமயத்துல கலசத்தை கழுத்து +உடலா செட் பண்ணி முகமா வைக்க ஒரு பிரதிமை இருக்கும். அதை தங்கம் முதல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் வரை சகல மெட்டீரியல்ஸ்லயும் செய்து விக்கிறாய்ங்க. ( படத்தை பாருங்க)

அது பார்க்க ரெம்ப க்யூட்டா இருக்கும். தாளி இது மாதிரி ஒன்னை வாங்கி சுவத்துலயாச்சும் மாட்டி வைக்கனும்யான்னு நினைச்சேன். நல்லா கவனிங்க ..நினைச்சேன் தட்ஸால்.

வரலட்சுமி விரதத்துக்கு முந்தின நாள் ஆத்தாளும் மவளும் பெரிய பெரிய பையா ரெண்டை தூக்கிக்கிட்டு புஸ்ஸு புஸ்ஸுன்னிக்கிட்டு வர்ராய்ங்க. ஹோம் டிப்பார்ட்மென்ட்ல வரலட்சுமி விரதம் கொண்டாடறதா முடிவு பண்ணிட்டாய்ங்களாம். ( இதெல்லாம் அவிக கேஸ் ஹிஸ்டரியிலயோ -ஜாதகத்துலயோ இல்லாத விஷயங்கள்)

இப்படி நம்ம எண்ணங்களையெல்லாம் ஆத்தா செயலாக்கிர்ரதால நிகழ்காலத்துல சொல்லிக்கிறாப்ல பெருசா த்ரில்லான சம்பவங்கள் ஏதுமில்லிங்ணா.

அடுத்த பதிவுல சந்திப்போம் ..