Wednesday, January 26, 2011

எட்டாம் பாவமும் இன உறுப்பும்

இந்த தலைப்புல  1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது  ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை காட்டற இடம். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். படத்துல உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம்னு  ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான். சிலருக்கு செல்ஃப் கண்ட்ரோல் பை பர்த் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது.

நாக்கை விடுங்க .அது ஸ்தூலமான வஸ்து . வள்ளுவர் கூட "தீயினாற்சுட்டபுண் உள்ளாறும். ஆறாதே நாவினாற்சுட்ட வடு"ன்னு சொல்லி வச்சாரு. ஜஸ்ட் பார்வைய எடுத்துக்கங்க.

நீங்க விஜய் மாதிரி யூத்தான ஃபிசிக். ஒரு ஆன்டிய கேஷுவலா பார்க்கிறிங்க. என்னடா.. அபுதாபில இருக்கிற நம்ம கசின் மாதிரியிருக்கேன்னு கூட பார்த்திருக்கலாம். ஒரு வேளை அந்த ஆன்டியோட செக்ஸ் லைஃப்ல எதுனா பிரச்சினை இருந்து, புருசங்காரனுக்கு தன் கப்பாசிட்டில சந்தேகம் இருந்து, அதுவே சந்தேக புத்தியாகி புகைஞ்சுக்கிட்டு கிடக்குனு வைங்க.

ஆன்டி ஒரு அரை செகண்ட் யோசிப்பா. இந்த பையன் பார்க்கிறதை ஆத்துக்காரரு பார்த்துட்டா வம்பு நாமளே முந்திக்கிட்டு சொல்லிருவம்னு " என்னங்க ..அந்த பனியன் போட்ட பையன்  குறு குறுன்னு பார்த்துக்கிட்டிருக்கானு என்னனு விஜாரிங்க" ன்னிட்டா மேட்டர் ஓவர்.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா  தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா  பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.


இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும். தெலுகு கங்கா கால்வாய்ல கண்டவன் பைப் போட்டு உறிஞ்சிர மாதிரி உறிஞ்சினா சென்னைக்கு குடி  நீர் வந்து சேராதில்லை.

மேலும் இன்னொரு உபகதை. ஒரு பழைய தோஸ்த். எதிர் வீட்டு பெண்ணை பிக் அப் பண்ண என்ன செய்தான் தெரியுமா? அவனோடது ஓவர் சைஸாம். விடியல்ல அந்த பொண்ணு மாடிக்கு வர்ர நேரமா பார்த்து தூக்கத்துல போல கண்காட்சி ஏற்பாடு பண்ணுவானாம். காக்கா கொத்தி விதைய எடுத்துட்டு போயிட்டா என்னடா பண்ணுவேன்ன பிறவுதான் அடங்கினான்.

மேலும் ஐ.பி போடறது, சிறை ,கொலை தற்கொலைக்கெல்லாம் இவனோட ஜனனேந்திரியம் காரணமாகிற சம்பவங்கள் நிறைய இருக்கு.

ஐ.பி: (மஞ்ச கடுதாசிங்கோ)

ஒரு எலக்ட்ரிக்கல் வைர் மேன். அவனுக்கு கண்ணாலமாகி பொஞ்சாதி,புள்ளை குட்டி எல்லாம் இருக்கு. வயசு முப்பது சில்லறை.  கோ டெனன்டோட மகள் ஒருத்தியோட படிப்பை ( மாசத்துக்கு சில ஆயிரம் ரூபாதேன்) ஸ்பான்சர் பண்ணாரு. அஞ்சு வருசம்.  நல்ல எண்ணத்தோட பண்ணினா தனக்கு மிஞ்சி தர்மங்கற சூத்திரமெல்லாம் ஃபாலோ பண்ணியிருப்பாரு. "கெட்ட' எண்ணத்தோட பண்ண ஆரம்பிச்சு அந்த குட்டியும் "வடை"உனக்குத்தேன்னு சொல்லி (இவர் ஜொள்ளி) சொல்லியே (இவர் ஜொள்ளி ஜொள்ளியே) அஞ்சு வருசம் ஓடிப்போச்சு.

நம்மாளு ஆட்டை தூக்கி மாட்ல போட்டு மாட்டை தூக்கி ஆட்ல போட்டு (வடை நமக்குத்தேங்கற நம்பகத்துல)  அஞ்சு வ்ருசத்தை ஓட்டிட்டாரு. செக்சுவல் எதிர்பார்ப்புகளோட கமர்ஷியல் எதிர்பார்ப்புகளும் இருந்தது.

வடைய காக்கா தூக்கிட்டு போயிருச்சு. நம்மாளு மஞ்ச கடிதாசி கொடுத்துட்டு  ..வரை தாடி வளர்த்துக்கிட்டிருக்காரு.

சிறை:

ஒரு சகோதர பத்திரிக்கையாளர் ( ரெஃபர் டு: பாண்டவர் & கௌரவர்)  ரெண்டு பொஞ்சாதி. தினசரி எப்படியாச்சும் ரூ ஆயிரம் பண்ணிருவாரு. (இத்தனைக்கும் பத்திரிக்கை நிர்வாகம் தர வேண்டிய சம்பள மேட்டர்  லேபர் கமிஷன் டேபிள்ள பெண்டிங்)   ராயலா ஓடிக்கிட்டிருந்தது. ஒரு சமயம் ஏதோ அசந்தர்ப்பமா? இவரோட ஆதாயம் இவரோட லாலா -மசாலாவுக்கே போதலியா தெரியலை. பெரிய வீட்டுக்கு அரிசி மூட்டை அனுப்பலை. தாளி அந்த மாராஜி இவன் மேல டவுரி அட்ராசிட்டி  கேஸை கொடுத்துருச்சு. பார்ட்டி கம்பி எண்ண வேண்டியதாயிருச்சு.

கொலை,தற்கொலைல்லாம் பேட்டைக்கு எட்டு  நடந்திருக்கும் . ஒரு தாட்டி கொசுவர்த்தி சுருளை உங்க முன்னாடி வச்சு சுத்திப்பாருங்க.

இதான் கில்மாவுக்கு எட்டாமிடத்துக்கும் உள்ள லிங்க். இந்த இடம் காலியாயிருக்கிறது பெஸ்ட். இதனோட அதிபதி கூட 6 அ 12 ஆமிடத்துல நின்னாதான் சேஃப். அப்படி ஏதேனும் கிரகமிருந்தா அது பாபகிரகமா இருந்தா பெட்டர். (பாபர்கள் ஆயுளை கொடுத்து இம்சை +நோயையும் கொடுப்பாய்ங்க. ஸ்டேஷனுக்கே போனாலும் லாக்கப் டெத் நடக்காது - சிறைக்கு கூட்டிப்போறச்ச என்கவுண்டர் நடக்காது .ஒரு மாதிரியா  சமாளிச்சுரலாம்)

ஆனாஇங்கன சுபர்கள் இருந்தா  ரெம்ப லொள்ளு பண்ணமாட்டாய்ங்க.ஆனா திடீர் மரணத்துக்கு  வாய்ப்புண்டு.கில்மாவை பொருத்தவரை இங்கன சுக்கிரன் இருந்தா நல்லதுன்னு ஒரு விதி. எட்டுங்கறது மரணத்தை காட்டுது. சுக்கிரன் கில்மாவுக்குரிய கிரகம். ஆக இந்த அமைப்புல பிறந்தா தெலுங்கு பழமொழி சொல்றாப்ல ( எத்தய்தே துன்னி சாவாலா -மொகவாடைதே ....சாவாலா)  கதை சுபமா ச்சீ சுகம்மா முடியும்.

ஆனால் ஜாதகர் சுக்கிரனோட இதர காரகங்கள்ள ( வீடு வாகனம்) இறங்கிட்டா ஆட்டோ மெட்டிக்கா பேட்டரி வீக் ஆயிரும்.

ஆனால் இந்த அஷ்டம சுக்கிரன் ரிஷப,துலா லக்னத்துக்கு மாட்டினா ஷாமியானாமேல ப்ரேக் டான்ஸ் ஆடின கதையாயிரும்.

இங்கன லக்னாதிபதி மாட்டினா அதீத சுய இன்பங்கள்/ விந்து ஊறுமுன் புணர்ந்து காஞ்ச கருவாடாயிர்ரது/தற்கொலை நடக்கலாம்

இங்கன தனபாவாதிபதி மாட்டினா பிச்சையெடுக்கனும், வீட்டுக்காரி விரட்டிவிட்டுருவா.( இப்படி ஒரு கேஸு இன்னைக்கும் ஒரு  புதையல்  மேட்டரா மந்திரவாதிகளை விரட்டிக்கிட்டிருக்கு), கண் டப்ஸ். ஊமையாகலாம்

சோதராதிபதி இங்கே மாட்டினா சவுண்ட் பாக்ஸ் அவுட். உடன் பிறப்புகளுக்கு டிக்கெட்.அ அவிகளால இவருக்கு டிக்கெட், விபத்து

மாத்ருபாவாதிபதி மாட்டினா: தாய்,வீடு,வாகனம்,கல்வி காலி. ஹார்ட் ட்ரபுள் வரலாம்

புத்ராதிபர் மாட்டினா: மலடாகலாம் . வாரிசுகள் உயிரிழக்கலாம். பெருத்த அவமானம்

ரோகாதிபர் மாட்டினா: சத்ரு ஜயம்,ரோக நிவர்த்தி, ருண விமுக்தி, விவகார ஜெயம்

களத்ராதிபர் மாட்டினா: மனைவிக்கு மரணம், மனைவியால் மரணம், அ மனைவியை கொல்லலாம்

அஷ்டமாதிபர் இருந்தா ( தன் பாவத்துல பாவாதிபதி ஆட்சி பெறுவது)  அதிக வேதனையில்லாத தற்கொலை. அ தன் சொத்தை தானே அழிச்சுர்ரது

பாக்யாதிபதி நின்னா: அப்பாவுக்கு டிக்கெட். அவர் சொத்தெல்லாம் காலி. கண்டம் விட்டு கண்டம் போகையில (தூரபிரயாணத்துல) கண்டம்

ஜீவனாதிபதி நின்னா: நெத்தி வேர்வை நிலத்துல ஒழுக வேலை செய்தா பிரச்சினையில்லை. ஏசி ரூம்ல இருந்தா என்னடா சத்தம்னு வெளிய வந்தா உத்தரம் சரிஞ்சு சாவு

லாபாதிபதி:அண்ணன் அக்கா காலி. அ அவிகளால ஜாதகர் காலி. எல்லாத்துலயும் நஷ்டம்

விரயாதிபதி: கஞ்சனாவார்." தேனிலவே போனாலு தனியாய் தானே போவா(னே)ரே" ரேஞ்சு

சரிங்கண்ணா நாளைக்கு மாமனார்,அப்பா,அவிக வழி சொத்து,  தூரதேச சம்பாத்தியம், சேமிப்பு, பக்தி பரவசங்கள், தீர்த்தயாத்திரைகள்,முழங்கால் எல்லாத்தயும் காட்டற 9 ஆமிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்..

உடு ஜூட்
Post a Comment