Wednesday, August 31, 2011

இளமையில் வரும் சுக்கிரதசை+கில்மா


பால்யத்தில் வரும் சுக்கிர தசை ஏன் பலன் தராது:
இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார். டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்

இதற்கு தீர்வுகள்:
1.ஜாதகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாது (பெரும் பிரச்சினைகளில் சிக்காது) விட்டு விட்டு 30 வயதுக்கு பிறகு இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்தல்.
2. இவருக்கு 18 வயது நிறைவடைந்ததும் இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை தேடி மணமுடித்து வைத்துவிடுவது. மணவாழ்வின் ஆரம்பத்தில் ஏற்படும் சிக்கல்களை பெரியவர்கள் பொறுப்பாய் கண்காணித்து தீர்த்துவைப்பது .

30 வயதுக்கு முன் ஏன் பலன் தராது:
முப்பது வயதுக்கு மிந்தி ஆணுக்கு பெண் என்பவள் ஒரு அதிசயம். தன்னை கண்டு அதிசயிப்பவனை பெண் அலட்சியம் செய்வாள். தப்பித்தவறி அவளும் அவனை விரும்பினால் அவர்களுக்கிடையில் இளமை வேகத்தால் என்ன நிகழும்? கில்மாதான்.

30 வ்யதுக்கு பின் எப்படி பலன் தரும்:
இவனுக்கு பெண் குறித்த பிரமைகள் விலகியிருக்கும். " பொயப்பை பார்க்கனும்டா சாமி"ங்கற தெளிவு வந்திருக்கும். ஆனாலும் இவனோட சுக்ர சை பெண்களை இவனை நோக்கி இழுக்கும். இவன் மனமோ விலகியிருக்கும். அப்பம் அந்த பெண் இவனை வேறு வழிகளில் சரிக்கட்ட இவனுக்கு லாபங்களை அள்ளித்தருவாள். நெஜமாலுமே சுக்ரதசை அடிக்கும். ( ஐ மீன் தோட்டம்,துறவு,வீடு ,வாசல் ,ஷேர்ஸ் இப்படி அவள் மூலம் லாபமடைவான்)

ஹி ஹி.. இந்த பதிவு ஜோதிட பால பாடத்தோட 12 ஆவது அத்யாயந்தான். கொஞ்சம் கேரா இருக்கட்டுமேன்னு இந்த பாடத்தை மேல போட்டேன். இப்பம் பாடம் தொடருது.
அஷ்டம சனிக்கு பரிகாரம்:
ஹனுமான் டாலர் அணிவிக்கவும். ( டி.வியி வரும் விளம்பர டாலர் அல்ல. கடைகளில் விற்கும் சாதாரண டாலர்) நிரந்தரமாக ராம நாமம் ஜெபிக்கவும். ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமனுடைய சான்னித்தியம் ஏற்படும்.குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்ததானம் செய்யவும்.

5க்கு அதிபதி விரயம்:
இதனால் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புவார்.இல்லாத பொல்லாத சகுன பைத்தியம்,சென்டிமென்ட்ஸ் இருக்கும். மன நிலையில் திடீர் மாற்றங்கள் இருக்கும்.சொந்த புத்தி இருக்காது.எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்.
உங்க ஜாதகத்துல களத்ர புத்ர தோஷங்கள் இருந்தால்:
தங்கள் முன்னோர் வகையில் ஒருவருக்கு இரண்டு திருமணங்கள் ந்டைபெறுவது,திருமணத்துக்கு முன்பே இறப்பது, அகால மரணங்கள்,துர்மரணங்கள், வாரிசின்றி அல்லது ஆண் வாரிசின்றி இறப்பது, போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவேயல்லாது வாரிசில்லாத சொத்து ஏதோ முன்னோர் காலத்தில் குடும்பத்துக்கு வந்துள்ளது என்று பொருள்.

முக்கிய விதி:
ஜோதிஷத்தில் மரணம், பிரிவு, தீராத வறுமை எல்லாம் சமமே.


கோசாரத்தில் ஆறுல சனி ( தற்சமயம் ரிஷபராசிக்கு இந்த பலன் பொருந்தும்-சனி தரும் முன் கூட்டிய பலனால்)
இரண்டரை வருடங்களுக்கு ஜாதகர் வெற்றிவீரராக வலம் வர வாய்ப்புள்ளது. ஆனால் சமீப காலமாய் ஜாதகர் மனதில் எதிராளிகளை பற்றிய ஒரு அலட்சிய பாவம்/தான் சொன்னதே சரி என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. இது ஓவராகாமல் பார்த்துக்கொள்ளவும்.
மகர லக்னம்/கும்ப லக்னத்துக்கு லக்னாதிபதி சனி எட்டில்
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். சதா ஒரு வித களைப்பு,ஆயாசம், தனிமை உணர்வு,தோற்றுப்போனது போன்ற ஃபீலிங் இருக்கலாம். நரம்பு,ஆசனம் தொடர்பான தொல்லைகள் வரலாம். நெகட்டிவ் தாட்ஸ், பெரிய,பெரிய ஆசைகள் அதே நேரம் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிகளை தொடர முடியாத மானசிக பலவீனம். நெருங்கிய உறவினர் மரணத்தால் லாபம் ஏற்படும். ( நஷ்ட ஈடு,எல்.ஐ.சி பணம் வரலாம்) உயில் மூலம் ஒரு சொத்து கிடைக்கலாம்.
தங்களுக்கு கேடு தரும் துறைகள்;
யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹேண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் ,வில்லங்க சொத்து, ஜப்தியான சொத்து, கஷ்டத்தில் விற்பவன் சொத்து, மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினர், 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமை.
பரிகாரம்:
பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். ( சனி தசா புக்தி காலங்களில் கட்டாயம் செய்யவும்)

கடேசி வரை படிச்ச உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி நம்ம சைட்/ப்ளாக்ல எல்லாம் வந்து சாக்கடை கமெண்டுகள் போட்டுக்கிட்டிருந்த சிவயசிவ புகழ் ஜானகிராமனின்  நீச  செயலுக்கு காரணங்களை காட்டும் அவரது   கண்ணீர் கடிதங்களை இங்க அழுத்தி படிக்கலாம் ( நமக்கு எழுதினதுதேன்)

Tuesday, August 30, 2011

ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் அல்ல (தற்போதைக்கு)


ஜோதிடக்கலையின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கான அடித்தளம் எது?
அவரவரது புரிதலோ/ஆழந்த ஞானமோ இதற்கு காரணம் என்றால் நான் இதை வரவேற்கிறேன்.

யதார்த்த நிலை அப்படியில்லையோ என்று தோன்றுகிறது.
காரணம் ஜோதிடம் என்பதை ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை நம்பிக்கை சார்ந்த ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஜோதிடம் ஒரு விஞ்ஞானம். அது வெறுமனே நம்புபவர்களுக்கு மட்டுமானதல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கானது. இதை ஒட்டு மனித குல மேன்மைக்கு பயன்படுத்த வேண்டுமானால் ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை விஞ்ஞான நோக்குடன் அணுக கற்கவேண்டும்.

ஜோதிடரை கேட்டால் "என்னமோங்க யார் விஷயத்துல நடக்குதோ நடக்கலையோ என்னை பொருத்தவரை நான் சொன்னதெல்லாம் நடக்குது" என்று சொல்லும் நிலைதான் உள்ளது.

ஜோதிட ஆர்வலரை கேட்டால் " எனக்கு யார் மேலயும் நம்பிக்கையில்லைங்க பலானவர் சொன்னாதான் எனக்கு நடக்கு என்று சொல்லும் நிலையுள்ளது.
இவை ஜோதிடத்தின் விஞ்ஞான தன்மையை கடுமையாக பாதிக்கின்றன. எனவே தான் ஜோதிடம் தற்போதைக்கு விஞ்ஞானமாக மாற முடியாது இருக்கிறது.

ஜோதிடர்கள் ஜோதிட நிபுணதுவத்தை தம் தனி நபர் சொத்தாக பாவிப்பதும், ரகசியமாய் வைப்பதும் கூட இதற்கு ஒரு காரணம்.

ஜாதகசக்கரத்தில் இன்ன கிரகம் இன்ன இடத்திலிருந்தால் இந்த பலன் என்று அனேக ஜோதிஷ கிரந்தங்கள் கூறுகின்றன. இவற்றை ஜஸ்ட் மனப்பாடம் செய்து பலர் அப்படியே வாந்தி பண்ணும் நிலைதான் உள்ளது.

குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரம் என்று சொல்லு நிலை கவலை தருகிறது.எங்கோ ஆகாய வெளியில் பல கோடி மைல் தூரத்தில் உள்ள கிரகங்கள் மனிதனை எப்படி பாதிக்கின்றன ? என்று கேள்வி கேட்டால் எத்தனை ஜோதிடர்களால் பதில் சொல்ல முடியும் என்பது கேள்விக்குறியே.

இன்ன பலன் நடக்கும் என்று தகவல் சொல்கிறார்கள்.அந்த பலன் நடைமுறையில் எப்படி எந்த வழியில் மெட்டீரியலைஸ் ஆகிறது என்று சொல்வதில்லை (சொல்ல முடிவதில்லை)

மனித உடல்,மனம்,மூளை மீதான கிரகங்களின் பாதிப்பு உண்மையேயானாலும் ரிஷிகள் ,மகரிஷிகளேயானாலும் சரி என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எழுதி வைத்த பலன் இன்றைக்கும் அப்படியே நடக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி.அவிக முட்டாளுங்கனு சொல்ல வரலை.

அவிக பலன் எழுதின காலத்துக்கும், இந்த காலத்துக்கும் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கு. அப்போ மன்னராட்சி, இப்போ மக்களாட்சி, அப்போ மாட்டுவண்டி,குதிரை வண்டிதான் வாகனம். மண் ரோடு. சனத்தொகை கம்மி. ட்ராஃபிக் கம்மி. இன்னைக்கு சிக்ஸ் ட்ராக் ரோடிருக்கு, லட்ச ரூபால இருந்து கோடி ரூபா வரை விலையுள்ள கார்கள் இருக்கு. இப்ப கூட இது பைக்குன்னா பைக்கில்ல, காருன்னா காரில்லைனு ஒரு விசித்திரமான வாகனத்தை விட்டிருக்காங்க.

அப்போ சனம் சூரியன் உதிக்கறப்பவே தாங்களும் விழிச்சு , வேலை வெட்டினு பார்த்து சூரியன் அஸ்தமிக்கிறப்பவே வீட்டை போய் சேர்ந்து முடங்கிக்கிட்டிருந்தாங்க. கூட்டுக்குடும்பம் இருந்தது. விவசாயம்தான் முக்கிய தொழிலா இருந்தது. சொந்தம்,பந்தம்ங்கற அட்டாச்மென்டெல்லாம் பக்காவா இருந்தது.

பொம்பள பசங்க 17 ,18 வயசுல மெச்யூர் ஆகிட்டிருந்தாங்க. பத்து வயசுலயே கல்யாணம் நடந்து கிட்டிருந்தது.காத்து,தண்ணி, எரி பொருள் எல்லாமே ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல கிடைச்சிட்டிருந்தது. அப்பல்லாம் பண்டிகை காலத்துல தான் அரிசி சோறு. இப்போ 365 நாளும் அதுவே .

அப்போ டீ,காஃபி கிடையாது. இப்போ அது இல்லன்னா ஆயே வராது. அப்போ படிப்புன்னா இலக்கணம்,இலக்கியம்,புராணம் ,இதிகாசம் தான் படிப்பு. இப்போ ?
இப்படி தனி மனிதவாழ்வு மட்டுமில்லே, வானும்,மண்ணும்,கடல் காற்றும் ஏன் தாய்பால் கூட மாறியிருக்கு.

மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதிவச்ச பலன்களை இன்னைக்கும் ஈயடிச்சான் காப்பி மாதிரி சொல்லிக்கிட்டிருந்தா வேலைக்காகுமா? இந்த கோணத்துல யாராவது யோசிச்சதுண்டா?

ஜோதிஷம் உண்மைன்னா, அது ஒரு விஞ்ஞானம்னா எந்த ஜோதிடர் யாருக்கு பலன் சொன்னாலும் அது நடக்கனுமில்லயா? ஜோதிடர்கள் தாங்கள் சொல்லி நடந்த விஷயங்களை மட்டும் தினசரிகளில் விளம்பரமாக கொடுத்து பந்தா பண்ணுகிறார்களே தவிர தாம் பலன் சொல்லி நடக்காமல் போன சந்தர்ப்பங்களை மட்டும் வசதியாய் மறந்து போகிறார்கள்.

நான் இந்த துறைக்குள் அடியெடுத்து வைத்தது வெறுமனே ஈகோவாலதான். நான் வாழ்க்கையில் சந்தித்த முதல் ஜோசியன் பிளாட்ஃபாரத்து ஆசாமி சொன்ன பலன் ஆக்யுரேட்டாய் நடந்துவிடவே என் ஈகோ மரண அடி வாங்கியது.
அதன் பின் அதே ஆசாமியை அணுகியும் அவரால் சரியாய் பலன் சொல்ல முடியாமல் போயிற்று. அடுத்தடுத்து நான் அணுகிய நபர்களும் ரொம்பவே அந்தாசா பலன் சொல்லவும்தான் நானே களத்துல குதிச்சேன்.என் எதிர்காலத்தை நான் முழுக்க அறியவே ஜோதிஷம் கற்றேன்.

எத்தனை ஜோசியர்களுக்கு ஜோசியத்து மேல நம்பிக்கையிருக்கோ எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்பறேன். பாருங்க நானும் நம்பிக்கைங்கற வார்த்தைய உபயோகிக்கிறேன். நம்பிக்கை என்ற வார்த்தையே அது தர்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது மாதிரி தொனிக்கிறது.

1989 முதல் என்னை அணுகிய ஆர்வலர்களுக்கு நான் என்ன சொன்னேன் என்ன நடந்தது. எத்தனை சதவீதம் சக்ஸஸ் ஆச்சு, எத்தனை சதவீதம் ஃபெயில் ஆச்சுங்கற தகவல் ஸ்தூலமா இல்லாட்டியும் ஒரு குன்சா ஞா இருக்கு. ரஜினி ஸ்டைல்ல சொன்னா கியாபகம் இருக்கு. ஆனால் இது ஆராய்ச்சிக்கு உதவாதுதான் .

இருந்தாலும் ஆயிரம் பேரை கொன்னா அரைவைத்தியங்கற மாதிரி பல பலன்கள் தவறினாலும் அது ஏன் தவறிப்போச்சுனு விடாப்பிடியா ஆராய்ச்சி பண்ற ஈகோ, பிடிவாதம்,சின்சியாரிட்டி இருந்ததால அனுபவ ஜோதிடம் னு தனியா ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கேன்.

அனுபவ ஜோதிடத்தோட சாரம் என்னடான்னா ஜாதக சக்கரத்துல ஒரு கிரகம் நின்னிருக்கிறதை பார்த்ததுமே படபடனு பலனை சொல்லிர்ரதுல்ல. அந்தந்த கிரகங்களை வச்சு முதல்ல ஒன்னு ரெண்டு பாயிண்டை சொல்லி அது நடந்திருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கனும். ஒரு வேளை நடக்கலன்னா ஏன் நடக்கலை அந்த கிரகஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்றமாதிரி வேற ஏதானா அம்சமிருக்கா பார்க்கனும். உ.ம் கிரக பாதசாரம், பாவச்சக்கரத்துல பலம் பெற்றுள்ளது

இப்படி ஒவ்வொரு கிரகத்தையும், ஒவ்வொரு பாவத்தையும் செக் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம்தான் பலன் சொல்லனும்.

லக்னம்னா அது ஜாதகரோட உடல், மனம்,புத்தியை காட்டுது. லக்னத்துல நின்ன கிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலாம், மனசு மேல வேலை செய்யலாம். இல்லே புத்தி மேல வேலை செய்யலாம். இத்தனை ஆப்ஷன் இருக்கு. லக்னத்துல சனியிருக்காருனு வைங்க . சனி பாடி மேல வேலை செய்தா பார்ட்டி கருப்பா இருக்கலாம், கால் ஊனமா இருக்கலாம். இரும்பு ,ஆயில் தொடர்பான வேலை செய்யலாம். ஒரு வேளை மனசு மேல வேலை செய்யறதா இருந்தா மனுஷன் கஞ்ச பிசினாறியா இருப்பார். கூலிக்கு மாரடிக்கிற் பார்ட்டியா இருக்கலாம். புத்தி மேல வேலை செய்தா ட்ராப் அவுட்டா இருக்கலாம். ( ஒரு வேளை சனி யோகத்தை தரக்கூடிய ஜாதகமா இருந்து , சனி பலம் பெற்றிருந்தா இந்த பலன் தலை கீழா மாறும்)

ஆக கிரக பலன் நீங்கள் கருப்பா, சிவப்பா, மணமானவரா இல்லையா? மணமாகாவிட்டால் பலான பெண்களை அணுகுபவரா இல்லையா? அப்பா அம்மாவை வைத்து போஷிப்பவரா இல்லையா? நல்லது கெட்டதுக்காவது அக்கா,மாமா, அண்ணா,தம்பிகளை கூப்பிடறவரா இல்லையா? வேலைக்காரவுங்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கிறவரா இல்லையா இப்படி பல அம்சங்களை பொருத்து மாறிவிடுகின்றன.

எனவே கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை குறித்து 1989 முதல் ஆராய்ந்து வருகிறேன்.அவ்வப்போது பதிவுகளும் போட்டு வருகிறேன். இந்த முயற்சி தொடரும்.

எனவே ஜாதகத்தை பார்த்து ஜோதிடர் கூறும் பலன்கள் 100 சதம் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும் என்ற அவஸ்யமில்லை. நீங்கள் அவரை அணுகும் சமயம் நடக்காத பலன்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.
ஆகவே ஜோதிடர் கூறும் பலன் 60 சதவீதம் நடந்தாலே அவர் சூப்பர் ஜோதிடர் என்பதை மனதில் வைத்து பலனை படிக்கவும் .

முக்கிய விஷயம் என்னவென்றால் ஜோதிஷம் வேதத்துல ஒரு பாகம்னு பம்மாத்து பண்ணி, அதை தங்கள் இனத்துக்கு மட்டுமே உரிமையானதாக்கிக்கிட்டு ஆர்வமிருக்கோ இல்லையோ, தகுதி இருக்கோ இல்லையோ ஜோதிஷத்தை தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுக்கொடுத்தபடி , பிராமணர்களில் பலர் இல்லாத பொல்லாத சீக்ரஸி மெயிண்டெயின் பண்ணதால இந்த விஞ்ஞானம் தலைமுறைக்கு தலைமுறை ஹோல்சேலா எக்சேஞ்ச் ஆகாம, பார்ஷியாலிட்டி காரணமா பார்ஷியலா தான் எக்ஸ்சேஞ்ச் ஆச்சு. இப்போ நாங்க சொல்ற ஜோசியமெல்லாம் ஜோசியமே இல்லனு கூட சொல்லலாம்.

என்ன செய்ய அவிக அன்னிய படையெடுப்பு சமயத்துல அன்னியர்கள் பூட்ஸை நக்கி, பர பாஷை கத்துக்கிட்டு துபாஷிகளா மாறி கிச்சன் கேபினட்டா
தயாராய்ட்டாய்ங்க.ராஜ சேவைக்கே அங்கிதமாயிட்டாய்ங்க.

வேதங்களை போலவே ஜோதிஷத்தையும் குப்பைல போட்டுட்டாங்க. என்னை மாதிரி சூத்திர பசங்க அதை பொறுக்கி எடுத்து ஸார்ட் அவுட் பண்ணி ஏதோ கதை பண்ணிக்கிட்டிருக்கம். ( எங்கள்ளயும் பலர் போலி பிராமணர்களா பில்டப் கொடுக்கிறதுலயே தங்கள் சக்தியை வீணடிச்சுர்ராய்ங்க)

ஹூம் .. நம்ம சனம் கொடுத்து வச்சது அவ்ளதான்.

இப்பவும் சான்ஸ் இருக்கு ஐபிஎல், அது இதுனு அலையற இளைஞர் கூட்டம் இந்த தலைமுறைல மிச்சமிருக்கிற ஜோதிஷ (விஞ்) ஞானத்தையாவது பாதுகாக்க முயற்சி பண்ணனும். அடுத்த தலைமுறைக்கு இதை சிந்தாம சிதறாம எக்சேஞ்ச் பண்ண நான் காத்திருக்கேன்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...

 

நெறைய பொண்ணுகளுக்கு அரவிந்தசாமி மாதிரி தான் பையன் வேணும்மாமே??

செவப்பான பொண்ணுதான் வேணுமுன்னு  சொல்லுற பையனுக்கும் ... செட்டில் ஆனா பையன் தான் வேணுமுன்னு சொல்லுற பொண்ணுகளுக்கும்...

அண்ணன் கவுண்டமணியின் evergreen டயலாக் 

பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா ???? :)
 

Monday, August 29, 2011

ஜோதிட பாலபாடம்: 11


இரண்டுக்கு அதிபதி 12 ல்:
தாராளமாக பேச தயங்குவீர்கள் அல்ல து சொல்ல நினைத்தது ஒன்றாய் இருக்க சொல்வது வேறு ஒன்றாய் முடியும்.குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். கண்பார்வை மங்கலாகலாம். வீண் விரயங்கள் ஏற்படும்.
10க்கு அதிபதி 11ல் அ பத்து பதினொன்று அதிபதிகள் இணைந்து சுபபலமாதல்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களில் ஈடுபடலாம்.
கேது சுபபலமாகி ஜீவன பாவத்துடன் தொடர்பு கொண்டால்:
எந்த தொழிலில் இறங்கினாலும் அதில் மாடர்ன் டெக்னிக்ஸ், லேட்டஸ்ட் இன்னோவேசன்ஸை உபயோகிப்பிங்க. வெளி நாட்டு தொடர்பிருக்கும்.
3 ல் சுக்கிரன் அ கேந்திர சுக்கிரன் (7 அ 10) :
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். நீங்க செய்றிங்களோ இல்லையோ அதைபத்தி நிறைய யோசிப்பிங்க. நிறைய பேசவும் செய்யலாம். இங்கே ஒரு சின்ன ரகசியத்தை சொல்லனும் யாரெல்லாம் அதை பத்தி நிறைய யோசிக்கிறாய்ங்களோ ,பேசறாய்ங்களோ அவிக சீக்கிரம் அது மேல இருக்கிற கவர்ச்சியை இழந்துருவாங்க காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால், விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
லக்னாதிபதி விரயத்தில் அ விரயாதிபதி லக்னத்தில்:
உங்க யோசனைகள் உங்களுக்கு பயன்படாது. பிறர் விஷயத்துல ஒர்க் அவுட் ஆகும்.
செவ் சுபபலமாகி லக்னத்தில் /ஐந்தில் :
நீங்க ஜஸ்ட் ஒரு சோல்ட்ஜர் தான். உங்களை உரிய பாதையில செலுத்த ஒரு கமாண்டர் ஒரு அட்வைசர் தேவை.
6க்கு அதிபதி 10ல் :
தொழில் வியாபாரத்துல கடன் ஏற்படலாம். போட்டி இருக்கலாம், விரோதம் வரலாம். பயப்படாதிங்க. இறுதி வெற்றி உங்களுக்கே. சற்று தாமதமாகவேனும் சதுர்ஜயம்,ருண விமுக்தி, ரோக நிவர்த்தி கிடைக்கும்.
7 ஆமிடத்துடன் சுக்கிரன் தொடர்பு கொண்டால்( இருந்தாலும்):
தென் கிழக்கு திசைல இருந்து வரலாம். அவிக வீட்ல பெண் ஜனத்தொகை அதிகமா இருக்கலாம். ஏரியா பேர் கூட பொம்பள பேரா இருக்கும். துர்கா காலனி எட்ஸெட் ரா. அவிக வாழ்க்கைல ( வீட்டு எண்,கிராஸ் நெம்பர்,பிறந்த தேதி முதலியன) 6 ஆம் நெம்பர் ரொம்பவே விளையாடியிருக்கும்.
பழம், பூ,லட்சுமி, தொடர்பான பேர் கொண்டவுகளா இருப்பாங்க. அழகிய தோற்றம், அழகியல் உணர்வு உள்ளவங்க. கலைத்துறைல ஈடுபாடு இருக்கும்.
பத்தில் சந்திரன் :
வெறும் இரண்டே கால் நாட்களில் 20 வருடங்களுக்கும் தீராத பிரச்சினையை க்ரியேட் செய்துவிடுவார். அதே நேரம் 20 வருடங்களாய் தீராத பிரச்சினையை வெறும் இரண்டே கால் நாட்களில் தீர்த்துவிடுவார்.
2ல் சந்திரன்:
தன் இரண்டே கால் நாள் வருமானத்திலிருந்தே ஒரு சொத்தை வாங்கினாலும் ஆச்சரிய பட முடியாது. அதே சமயம் சொத்தை விற்று தின்றபடி காலத்தை ஓட்டினாலும் ஆச்சரிய பட முடியாது.
லக்னாதிபதி+ரோகாதிபதி:
கடனை முதலாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டால் சக்ஸஸ் ஆகலாம்.
தனுசு லக்ன்ம:
இவரது மைண்ட் செட்டை புரிந்து கொள்வது கடினம். வயிற்றுக்கு கூட தாரளமாக செலவழிக்காது சேமிப்பை மேற்கொள்வார். அந்த சேமிப்பில் இருந்து சொத்து வாங்குவார். ஆனால் வாழ் நாள் பூரா சொத்து வாங்குதல், அதன் மீது விவகாரங்களை எதிர்கொள்ளுதலிலேயே இவர் நேரம் செலவழிந்து போகும். இவர் இருக்கும் இடத்தில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது. முக்கியமாய் பூனை . (முடி உதிர்க்கும் எந்த பிராணியும் வேண்டாம்)
இவர் மீது தந்தையின் இம்பாக்ட் அதிகம். தந்தை மகன் உறவை மீறி எல்லா தொழில்,வியாபார விஷயங்களிலும் கலந்து வேலை செய்யும் வாய்ப்பு உள்ள

லக்னம் ரிஷபமாகி லக்னத்தில் சனி:
அதே போல் 9/10 க்கு அதிபதியான சனி லக்னத்தில் நின்று டெக்னிக்கல் ப்ரெயின், புண்ணாக்கிலிருந்து கூட எண்ணெய் எடுக்கும் அத்தனை சாலாக்கை தந்திருந்தாலும் சொத்து சேர்க்கும் யோகத்தை தந்தாலும் அவர் ஏழையும் பார்த்து மனைவியாரின் உடல்,மன நலன் ,அவருடனான தங்கள் ஒற்றுமையையும் பாதிக்கிற நிலையில் உள்ளார். எனவே சனி தொடர்பான தொழில், மனிதர்களையும் தவிர்ப்பது நல்லது.
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள்:
4,13,22 , 7,16,25 எண்கள் தேதிகளை தவிர்க்கவும்.
இரண்டில் செவ்வாய்:
இது தனபாவம் என்பதால் வீண் விரயம், வாக்குஸ்தானம் என்பதால் எதிராளியை இர்ரிட்டேட் செய்யும் பேச்சு, நேத்திர ஸ்தானம் என்பதால் கண்களுக்கு ,வாய்,தொண்டைக்கு பாதிப்பு ஏற்படும்.குடும்பஸ்தானம் என்பதால் குடும்பத்திலும் கலகம் பெருகும்.
பரிகாரம்:
முருகன் மூலமந்திரத்தை வாய் விட்டு ஜெபித்தல் . யுத்தம் தொடர்பான சினிமாக்களை டிவிடியில் பார்த்தல். கழுத்தில் வேல், சூலம் போன்ற ஆயுதம் பொறித்த டாலர் அணிதல்.
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
(Om sowm sarahanabhava sreem hreem kleem klowm sowm namaha
4ல் சனி :
இது குடும்ப வறுமையை, வீட்டின் பாழடைந்த தன்மையை காட்டும். வீட்டை புதுப்பித்தால் ஏழ்மை வரும். இதை தவிர்க்க புதுப்பித்த பிறகு ஹாலில் விவசாயம் தொடர்பான சீனரியை வால் பேப்பராக ஒட்டவும்.ஆனால் தாய்க்கு தீர்காயுவை தரும் (ஆனால் அவருக்கு கால் தொடர்பான தொல்லையையும் தரும்) படிப்பில் தடை, வாகன யோகம், ஆனாலும் சிறு விபத்து ஒன்றும் நிகழலாம்,
4ல் சந்திரன்:
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். தாயின் உடல் ,மன நிலையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும்.
7ல் புதன்:
இது ஜாதகரின் நடத்தை குறைவை காட்டுகிறது (பெண்கள் விஷயத்தில்) தோல் அண்டம் தொடர்பான பிரச்சினயையும் தரலாம்.

Sunday, August 28, 2011

அன்னா அசாரே ஒரு அரசியல் பஃபூன்


நாம ஏதோ ஒழுங்கு மரியாதையா அவன் அவள் அது , ஜோதிட பால பாடம்னு உடுப்பி ஹோட்டல் தனமா எழுதிக்கிட்டிருக்கம். ஆக்சுவலா இது சேஃப். சேஃப்டி ஜோன். நம்ம வாழ்க்கையில என்னைக்கு நாம ஒழுங்கா பொளப்பை பார்த்தோம்.

நாம எழுதறதையும் நாலு பேரு படிக்கிறாய்ங்க. அவிகளுக்கு ஆன்மீகம் - ஜோதிடத்தை தாண்டியும் ஒரு தாகம் இருக்கும். ஒரு தாக்கம் இருக்கும். நமக்கும் ஒரு பொறுப்பிருக்கு. இப்படி ஆன்மீகம் -ஜோதிடம்னு மூழ்கியிருந்தா நாளைய தலைமுறை காறி துப்பும்.

அதனாலதேன் இந்த " அன்னா ஹசாரே ஒரு அரசியல் பஃபூன் " என்ற பதிவு இவ்ளோ பீடிகை எதுக்குன்னா அன்னா ஹசாரேவை நக்கல் அடிச்சு எழுதற பார்ட்டிகளை ஒரு பிடி பிடிக்கத்தான். அப்போபாலபாடம் கோவிந்தாவான்னு டென்ஷன் ஆயிராதிங்க.அதும்பாட்டுக்கு தொடருது.அதை படிக்க இங்கே அழுத்துங்க.

அன்னா ஹசாரேவுக்கு வக்காலத்து வாங்கறோம்ன ஒடனே நமக்கு பா.ஜ.க கலரை கொடுத்துரப்போறிங்க.

ஏதோ ஒய்.எஸ் .ஆர் மாயையில விழுந்து ஒரு கட்டத்துல காங்கிரஸுக்கு வேணம்னா வக்காலத்து வாங்கியிருக்கலாமே தவிர பா.ஜ.க பக்கம் தலை வச்சு கூட படுத்தது கிடையாது.

நம்ம அரசியல் ஆசான் என்.டி.ஆர் பா.ஜ.கவுடன் கூட்டு வச்சிக்கிட்ட காலத்துல பா.ஜ.க ஒரு அப்பிராணி. சந்திரபாபு காலத்துல பார்கெய்னிங் பொசிஷனுக்கு வந்துட்டாய்ங்க. பாபர் மசூதி இடிப்புக்கு அப்பாறம் நம்ம மைண்ட்ல பா.ஜ.கவுக்கான இடம் சு..த்..தம். ஆய்ருச்சு.

இப்பம் மோடிய வச்சு மோடி வித்தை காட்டறாய்ங்க. நாம அதுக்கெல்லாம் மயங்கற மாதிரி இல்லை. அரசாங்கம்னா 24 மணி நேரம் கரண்டு கொடுத்துட்டா போதும்னு பேசறவுகளும் நாட்ல இருக்காய்ங்க. ஆனால் ஜன நாயகத்துல அதுவும் ரைட் டு ஈக்வாலிட்டிய அடிப்படை உரிமையா தந்திருக்கிற நாட்ல அரசாங்கம் மக்களுக்கு சாதி மத வேறுபாடில்லாம பாதுகாப்பா நல்வாழ்வு வாழச்செய்யனும். அதான் முக்கியம்.

ஒய்.எஸ்.ஜகன் மீதான சி.பி.ஐ வழக்கை விமர்சிச்சு பா.ஜ.க தலைவர்கள் பார்லிமெண்ட்ல பேசியிருக்காய்ங்க. இதனால ஜகன் பா.ஜ.க கூட்டுன்னு அலப்பறை பண்றாய்ங்க. அதை எல்லாம் நம்பாதிங்க. ஸ்டேட் பாலிடிக்ஸ் வேற . சென்டர் பாலிடிக்ஸ் வேற.

சென்டர் பாலிடிக்ஸ்ல காங்கிரஸும் -பா.ஜ.கவும் மார்க்கெட் லீடர்ஸ். இதுல ஒவ்வொரு கட்சி ஒவ்வொரு காலத்துல ஹார்ம்லெஸ்ஸா தோணும். அப்பம் எதிர்கட்சிங்க ஒருத்தரை மாத்தி ஒருத்தரை சப்போர்ட் பண்ணியே ஆகவேண்டிய நிலைமை.

உ.ம் காங்கிரஸ் போஃபர்ஸ் ஊழல்ல சிக்கினப்ப பா.ஜ.கவை சகிச்சுக்கவேண்டியதாயிருச்சு.
பாபர் மசூதி இடிப்புக்கப்பாறம் காங்கிரஸை சகிச்சுக்கவேண்டியதாயிருச்சு.

சரி சரி ஃப்ளாஷ் பாக் போதும். மேட்டருக்கு வந்துர்ரன்.

பதிவுலகத்துல மஸ்தா பேரு அன்னா ஹசாரே மேல கல்லெறிஞ்சிருக்காய்ங்க. எல்லாம் நம்ம கண்ல படும். அந்தமாதிரி எழுத்துக்களுக்கெல்லாம் ரேண்டம் சாம்பிளா என்வழி வலைதள எழுத்துக்களை எடுத்துக்கிட்டு நம்ம கருத்தை சொல்லிரலாம்னு ஒரு ஐடியா.

//அன்னா ஹஸாரேவை தேசப் பிதா காந்தியடிகளை விட ஒரு படி மேலே வைத்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம்//

இங்கே ஒரு கூட்டம்னு சொன்னதை நெல்லா வாட்ச் பண்ணுங்க. காந்தி தாத்தாவை கூட ஒட்டு மொத்த தேசமே தலை மேல வச்சு கொண்டாடலை. அப்பவும் ஒரு கூட்டம் தேன் தாத்தாவை சப்போர்ட் பண்ணுச்சு.

தலை மேல வச்சு கொண்டாடற கூட்டத்துல நாம இல்லை. தாளி எவனும் கண்டுக்கிடலை.கம்யூனிஸ்டெல்லாம் தூங்கறான். பா.ஜ.க பஜனை மடம் மாதிரி ஆயிருச்சு. அங்கனயே ஊழலை பங்கு போட்டுக்கறதுல பங்கு தகராறு .

இன்னம் மாயாவதி, சந்திரபாபு ,லல்லு ,முலாயம் எல்லாம் பாவம் சொந்த பஜனை ,சொந்த சோகங்கள்ள சிக்கி தவிச்சிட்டிருக்காய்ங்க.

மீடியா மீடியான்னு கிழிச்சுக்கறானுவ. இந்த மீடியா என்னத்தை கிழிச்சது . முன்னொரு காலத்துல போஃபர்ஸை வெளிகொண்டு வந்திருக்கலாம். இன்னைக்கு அதே பத்திரிக்கை ஈழத்தமிழர்கள் மேட்டர்ல எப்படியா கொத்த தப்பாட்டம் போட்டதுன்னு நாடறியும்.

இந்த மீடியா ஊழல் மேட்டர்ல என்னத்தை கிழிச்சது.தமிழ் நாட்ல தினசரி முன்னாள் மந்திரியெல்லாம் நில ஊழல்ல மாட்டி செயிலுக்கு போறானுவ. அந்த மந்திரியோட அடிப்பொடிகள் கொடுத்த முழுப்பக்க விளம்பரங்களை பொறுக்கித் தின்னுதானே இந்த மீடியா காலம் தள்ளிட்டு இருந்தது. அப்பம் தெரியாதா இவன் எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்தவன்னு. இது மீடியாவோட இழி நிலை.

Something is better than nothing. சர்க்கஸ்ல பார் விளையாட்டு நடக்குது. ஒரு ஆளு தவறி விழறான். அவனை பிடிக்க சூரர்கள் தவறும்போது அந்த வேலைய செய்ய ஒரு பஃபூன் செய்ய முன் வந்தா அவனை பாராட்டனுமே தவிர நக்கலடிக்கக்கூடாது.

//காந்தியடிகளை கேவலப்படுத்துவது என்று முடிவு செய்துவிட்ட பிறகு, என்ன சொன்னாலும் இவர்களுக்கு ‘ஏறப்போவதில்லை//

இந்த சாஃப்ட் வேர் -ஐ பாட்- கால் சென்டர் தலைமுறைக்கு காந்தியடிகளை ஞா படுத்தினதே ஹசாரே தான். இதுல கேவலப்படுத்தறது எங்க வருது தெரியலை.

//மக்களை ஏமாற்றுவதில் ஹஸாரே கைதேர்ந்தவராக திகழ்கிறார். உலகிலேயே பேரம் பேசி உண்ணாவிரதமிருந்த முதல் நபர் இந்த ஹஸாரேதான்.//

மக்கள் என்ன வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்கிற குழந்தைகளா ஹசாரே ஏமாத்திர்ரதுக்கு. கலைஞராலயே ஏமாத்த முடியலை. ஹசாரே எந்த மூலைக்கு?

இத்தீனி காலம் ஜன நாயகத்தின் நாலு தூண்களும் மக்களை ஏமாத்திக்கிட்டிருந்ததை வெளிச்சம் போட்டாரு அன்னா. அப்படி என்னதான் மக்களை மோசம் செய்துட்டாருன்னு சொல்றாய்ங்களோ புரியலை

//கிட்டத்தட்ட ஒரு பிளாக்மெயிலர் ரேஞ்சுக்கு மாறி அரசை மிரட்டிக் கொண்டிருந்த ஹஸாரேவை சூப்பர் ஹீரோவாகக் காட்டுவதில் மீடியாவுக்கு அப்படியொரு அலாதி ஆர்வம்.//

காந்தி தாத்தா அம்பேத்கரை செய்த ப்ளாக் மெயிலை விடவா அதிகம்? சுத்த பேத்தல் . அடுத்து மீடியாவோட ஆர்வம்..

மீடியாவும் ஒரு விபச்சாரி நிலைக்கு வந்து பல காலமாச்சு. அவிகளுக்கு குறிப்பிட்டசெய்தி மேல ஆர்வம் இருந்துட்டா போதாது. ஒன்னு அவிக மக்களுக்கு தர்ர ப்ரோக்ராமை ஸ்பான்ஸர் பண்ண சில்லறை பார்ட்டிங்க வேணம்.அல்லது அந்த ப்ரோக்ராம் நெஜமாலுமே மக்களால பார்க்கப்படனும். மக்களால பார்க்கப்பட்டா ஸ்பான்சரர்ஸ் கிடைப்பாய்ங்க. ஸ்பான்சரர்ஸ் கிடைச்சுட்டா மக்களால் பார்க்கப்படலின்னாலும் காட்டலாம்.

அன்னா மேட்டர்ல இன்னாடா நடந்ததுன்னா த பார்ரா இந்த தாத்தா நம்ம மனசுல வச்சு புழுங்கிக்கிட்டு இருந்த மேட்டரை இம்மாம் தில்லா ஒடைக்கிறாருன்னு சனம் ஃபீல் பண்ணாய்ங்க. அதான் ஹசாரேவோட வெற்றிக்கு காரணம். அவர் சாமானியனோட மனக் குரலை எதிரொலிச்சாரு.

அவரு தமிழ் வருசத்துக்கு மொத தினம் பொங்கலா இருக்கனும்னு உண்ணாவிரதமிருந்திருந்தா முரசொலியில வேணம்னா கலைஞர் இடம் கொடுத்திருப்பாரோ என்னவோ.மத்தபடி சனம் சீண்டியிருக்காது.

//இதன் விளைவு தன் நிலை என்ன என்பதை மறந்து இவர் இஷ்டத்துக்கும் பேச ஆரம்பித்துவிட்டார்.//

அப்படி என்ன தான் ஜன நாயகத்துக்கு விரோதமா -சட்டவிரோதமா பேசிட்டாருன்னு பார்ப்போம்

//அரசு ஹஸாரேவை ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லாமல் செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மன்மோகன் சிங் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளார்//

ஆரம்பத்துலன்னா அவரு சொந்த கிராமத்துல சாராயத்தை ஒழிச்சப்பயா? சனத்துக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தப்பயா? மன்மோகன் சிங்குக்கு வெற்றியாவது தோல்வியாவது . அவர் சோனியா கையில பொம்மைங்கோ. வேணம்னா சோனியான்னு சொல்லுங்க பொருத்தமா இருக்கும்.

//மீடியாக்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய ஒரு பலூனைப் பார்த்து மிரண்டுபோய், அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியது மக்களாட்சிக்கு நேர்ந்த அவமானம்.//

ஊதி ஊதி பெருசாக்கற மேட்டர்லாம் நடக்கனும்னா நீங்க முழுப்பக்க வண்ண விளம்பரங்களை அள்ளிக்கொடுக்கிற ஸ்டேஜுல இருக்கனும். ப்ரஸ் மீட் ஃபாலோட் பை லஞ்சுன்னு ப்ரஸ் க்ளப்புக்கு நோட் அனுப்பி நிருபர் பசங்களுக்கு கெடா வெட்டி விருந்து கொடுக்கனும். வெளி நாட்டு செல்ஃபோன் பரிசா கொடுக்கனும். அல்லது நீங்க ஆட்சியில இருக்கனும். அரசு விளம்பரங்களை அள்ளி விடனும்.மோடி கவர்மென்டு கல்கியோட ஒரு இஷ்யூவை ஸ்பான்சர் பண்ணுச்சே ..அதுதான் ஊதி பெருசாக்கிறதுன்னா.

அரசு பயந்தது ஊதி ஊதி பெரிதாக்கிய பலூனை பார்த்து இல்லிங்க. அன்னா கையிலெடுத்த இஷ்யூ அப்படி. அவர் தெரிவு செய்த மார்கம் அப்படி. அவரோட ஃப்ளாஷ் பேக் அப்படி. அவரோட அச்சீவ்மெண்ட்ஸ் அப்படி.

//சட்டத்தை மீறிய ஹஸாரேவை கைது செய்தது வரை சரியாக செயல்பட்ட அரசு, அடுத்து அவரை விடுதலை செய்ததும், இரண்டு மூன்று நாள் திகாரில் வைத்து போஷித்ததும் மகா கேவலம். அப்படியே குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியே போட்டு ஜெயில் கதவைச் சாத்தியிருக்க வேண்டும். நியாயமாக மற்றவர்களுக்கு இந்த ட்ரீட்மெண்ட்தான் திகாரில் கிடைத்திருக்கும். மீடியாவின் செல்லப்பிள்ளை என்பதால் ஹஸாரேவுக்கு இந்த சிறப்பு மரியாதை போலிருக்கிறது!//

பாஸு ! நீங்க இந்த கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை தந்தது அரசியல் சாசனம் .அது தந்திருக்கிற எழுத்துரிமை (ரைட் டு ஒப்பீனியன்) இது ஆளும் வர்கங்களுக்கு எதிராபோனா நம்மை கூட திகார்ல போட்டுருவாய்ங்க பராவால்லியா?

நாம நம்ம கருத்தை ப்ளாக்ல மட்டும் எழுதறோம். ஹசாரே தெரிவு செய்த மோட் ஆஃப் கம்யூனிகேஷன் உண்ணாவிரதம். அவரை கைது செய்தது சரின்னுட்ட பிறவு நீங்க எழுதறது ஒரு எழுத்து இதுக்கு ..என்னத்தை எதிர்வினை?

//இந்த லோக்பால் முழுவதுமாக சட்ட வடிவம் பெறப்போவதில்லை.//

பார்த்தியா தலை ! ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கு. இந்த அரசு எப்படியா கொத்த அர்ராக்கட்டைன்னு . இதுக்கு உறைக்கறாப்ல சொல்லனும்னு தேன் ஹசாரே ப்ளாக் மெயிலை தேர்வு செய்தாரு.

// இப்போதே அன்னா ஹஸாரே கேட்டது போல பிரதமர், நீதித்துறை, சிபிஐ எதுவும் வலுவான லோக்பாலில் இடம்பெறவும் இல்லை. அவ்வளவு ஏன், ஊழல் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனை, லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசுக்கு குறைந்த அளவிலான பங்கு என்ற நிபந்தனைகளைக் கூட அரசு ஏற்கவில்லை. ஆனால் இவை எதுவும் வெளியில் தெரியாமல் சமாளித்து, வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது ‘டீம் அன்னா//

அது சரி இதெல்லாம் லோக்பால்ல இடம் பெறனும்னு ஒரு ஆசை ஒங்களுக்கும் இருக்கில்லை. ஹசாரே கிழவாடி அவர் விட்டதை நீங்க தொடருங்க பார்ப்போம். டீம் அண்ணா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யலைங்ணா. கொண்டாட அனுமதி தந்திருக்கு. வேணம்னா அய்யரு கணக்கா நாளு நட்சத்திரம் குறிச்சு கொடுத்திருக்கு. மத்ததெல்லாம் தன்னிச்சையாத்தான் நடக்குது.

ஹசாரே தான் சொல்ட்டாரே ..இதுவரை நடந்தது பாதி யுத்தம் தேன் .இன்னம் ஒரு பாதி இருக்குன்னு சொல்ட்டாரே.

//உண்மையில் அரசும் தோற்று,//

இது மட்டும் 100 சதவீதம் கரீட்டு

//உண்ணாவிரதமும் தோற்றுப் போயிருக்கிறது. ஆனால் இதை யாருமே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ போதைக்கு அடிமையானவர்களைப் போல அன்னாவுக்கு வெற்றி என்று கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.//

உண்ணாவிரதம் தோத்துப்போறதுன்னா ஹசாரே சாந்தினி சவுக்ல காம்ப்ளெக்ஸ் வாங்கிக்கினு முடிச்சுக்கினாரா? இல்லை ஒரு கோரிக்கையும் ஏற்கப்படாம செத்துப்பூட்டாரா? இன்னா கான்செப்ட்ல தோத்துப்போச்சுங்கறிங்க புரியலை.

அன்னாங்கறது மக்களோட உணர்வுகளுக்கான பிரதிபிம்பம். அதுதான் ஜெயிச்சிருக்கு. இதை அன்னாவும் சொல்லிக்கீறாரே .இது மக்கள் வெற்றின்னுட்டு.

//மீடியாக்கள் எந்த அளவு மிக ஆபத்தானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.//

மீடியாக்கள் எந்த அளவுக்கு பலகீனமானவர்கள்னு நீங்க தேன் புரிஞ்சிக்கிடலை. அன்னாவை காட்டினா சனம் பார்க்கிறாய்ங்கண்ணே .இல்லைன்னா ரெண்டாவது நாளே கடாசியிருப்பானுவ.

//சரியான நோக்கத்துக்காக இவர்கள் ஒருபோதும் குரல் கொடுப்பதே இல்லை//
இதை ஞானும் ஏத்துக்கிடறேன். அன்னா மேட்டரு ஒரு விதிவிலக்கு.

//ஒரு மனிதன் சாவதை லைவ்வாக காட்டி பரபரப்பேற்படுத்தும் இவர்கள், ஹஸாரேவை வைத்து பரபரப்பு கிளப்பியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.//

உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டரை கூட கிளப்பத்தேன் பார்ப்பாய்ங்க. கிளம்பினாத்தானே. கிளம்பலின்னா திராட்ல விட்டுருவாய்ங்க. அதான் மீடியா நேச்சர். அன்னா மேட்டர்ல " கிளம்பிருச்சுய்யா கிளம்பிருச்சு"ங்கறது தேன் மீடியாவோட அனுபவம்.

//அன்னா ஹஸாரே இவர்களின் இப்போதைய டிஆர்பி மந்திரமாக மாறிவிட்டதால், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அன்னா நாமத்தை பார்வையாளர்களுக்கு போடப் பார்ப்பார்கள்.//

டி.ஆர்.பி மந்திரமா எப்படி மாறினாரு? மக்களோட மனக்குரலை எதிரொலிச்சாரு அதை விட்டுட்டிங்களே

//அன்னா ஹஸாரே… ஊழலைப் போலவே இந்த நாட்டைப் பீடித்த வியாதியாகிவிட்டார். அவரது போலித்தனத்தை ஆண்டவன் வெளிச்சம்போட்டுக் காட்டுவாராக!//

எப்டி? எப்டி? - அதையும் சொல்ட்டிங்கணா நல்லாருக்கும்.

//ஹஸாரே என்பவர் எந்த அளவு ஆபத்தான அரசியல்வாதி என்பதற்கு இந்த உண்ணாவிரதத்தில் வெளிப்பட்ட அவரது நேர்மையின்மையே சான்று. முதலில் பிரதமர், சிபிஐ, நீதித்துறை மூன்றையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

ஆனால் உண்ணாவிரதம் முடிவதற்குள் புதுப்புது கோரிக்கைகள், நிபந்தனைகளை அவர் முன்வைக்க, முந்தைய நோக்கங்கள் மறக்கடிக்கப்பட்டன. ஒரு நாள் கீழ்மட்ட அதிகாரிகளும் லோக்பாலுக்குள் வரவேண்டும் என்றார், பிறிதொரு நாள் குடிமக்கள் சாசனம் வேண்டும் என்கிறார். இவை ஏற்கப்பட்டால்தான் உண்ணாவிரதம் வாபஸ் என்று நின்றார். பிரதமரை சேர்க்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தை அவரோடு சேர்ந்து கோஷம் போட்ட மக்கள் உள்பட அனைவரும் மறந்துவிட்டார்கள்.//

அப்டின்னு நீங்க மட்டும் நினைச்சுட்டா எப்டிங்ணா? பேப்பர்ல டிவில துண்டு துண்டா வர்ரதை நம்பாதிங்க. எல்லாம் எழுத்து மூலமாத்தானே நடந்து கிட்டிருக்கு ( உங்க ஒக்காபிலரில பேரம்)

//இந்த லோக்பால் விவகாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட சமாச்சாரம்//

சோனியா அம்மா அவ்ள சீக்கிரம் முடிய விட்டுருவாய்ங்களா என்ன?

//கடந்த இரு தினங்களாக இவர் ( கிரண் பேடி) டெல்லியில் அடித்த கூத்துக்களைப் பார்த்தபோது, இந்தியாவின் அத்தனை அரசியல்வாதிகளும் இந்தப் பெண்மணியிடம் தோற்றுப் போவார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது! எனவே அடுத்த காட்சி மாற்றத்துக்கு அடி போட்டுள்ளனர்.//

யப்பா எவ்ளோ குட் நியூஸுங்ணா .. கிரண் பேடியும் தான் ஜெயிச்சு வரட்டுமே.. (அவிகஜெயிக்கிற மேட்டர் கூட முக்கியமில்லை அத்தனை அரசியல் வாதிகளும் தோத்துருவாய்ங்கன்னு சொன்னிங்களே அதான் செமை மேட்டரு. உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.


//தேர்தல் சீர்திருத்தம் உடனடியாக வேண்டுமாம். இப்போதைக்கு உண்ணாவிரதத்தை ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கிறாராம் ஹஸாரே. தேர்தல் சீர்திருத்தம் கோரி அடுத்த உண்ணாவிரதத்தை விரைவில் ஆரம்பிக்கப் போகிறாராம்.//

ஹும் ..நீங்க செய்தியாளரா இருந்திருந்தா இதை டாப்ல கொண்டு வந்திருப்பிங்க..


//“இப்போது பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் மோசமானவர்கள். இந்த மாதிரி யூஸ்லெஸ் எம்பிக்களை நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்காதீர்கள். இவர்களில் 150 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். நமக்கு தேவையான சட்டங்களை இயற்ற முடியாத பாராளுமன்றத்தில் இவர்கள் இருப்பதே தேவையற்றது,” என்றார். இதை அவர் பேசியபோது காலை 11.15 மணி.//

சூப்பரு.. தாத்தா ஏதோ விளக்கெண்ணையில கழுவுவாரு போலனு நினைச்சிருந்தேன்.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு அடிச்சு விட்டிருக்காரே.

//மாலையில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஒரு கடிதத்தோடு வந்து ஹஸாரேவைச் சந்தித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஹஸாரே இப்படி திருவாய் மலர்ந்தருளினார்:

“பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் நல்ல புரிதலோடு செயல்பட்டுள்ளனர். இந்த சிறந்த முடிவை மேற்கொள்ள உறுதுணையாக இருந்த அத்தனைப் பேரையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்திய மக்களுக்கு வெற்றிகிடைக்கச் செய்த அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”//

ஹய்யோ ஹய்யோ,,, இவ்ளதானா உங்க புரிதல். ஹசாரே எம்பிக்கள் எல்லாம் உத்தமர்கள்னு சொல்லலியே .. புரிதலோடு செயல்பட்டிருக்காய்ங்கனு தானே சொல்றாரு. இதெல்லாம் சபை நாகரிகங்க. இதைப்போயி .............

//அடேங்கப்பா… ஹஸாரே நவீன யோவான்தான் போங்கள். அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவிட்டால் அனைவரும் உத்தமர்கள். இல்லாவிட்டால் தேவையற்றவர்கள், கிரிமினல்கள், யூஸ்லெஸ்கள்…//

கடந்த பாராவே ரிப்பீட்டு. உடுங்க ஜூட்டு ..

ஜோதிட பாலபாடம்: 10


4 ஆம் பாவாதிபதி ஐந்தில்/ ஐந்தாம் பாவாதிபதி 4 ல் :
தங்கள் அம்மா பற்றிய சங்கதியை சொன்னால் நக்கலாக சிரிப்பீர்களோ என்னவோ? ஏன் என்றால் கடந்த ஜன்மத்திலும் அவரே தங்கள் அம்மாவா இருந்திருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆதாரம் 1:
அவர் இன்ஃப்ளுயன்ஸ் இதர குழந்தைகளை விட அதிகமாக தங்கள் மீது இருக்கலாம்.
ஆதாரம்2:
அவரை பற்றி ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)
அவரது மரணத்துக்கு பிறகும் அவர் குறித்த நினைவுகள், விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் தரப்பு வில்லங்கமுள்ள சொத்து அல்லது ரீ சேல் மதிப்பற்ற சொத்து தொடரலாம். அல்லது அவர் தரப்பு உறவினர்கள் குறைந்த பட்சம் அவரது தோழிகளின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

7க்கு அதிபதி 7 ல் ஆட்சி பெற்றால்:
நண்பன்/காதலி /மனைவியின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகம்.

8க்கு அதிபதி 4 ல்:
தாயை ஸ்தூலமாகவோ மன அளவிலோ பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். சிறு வாகன விபத்து / தொழிலகம் அல்லது குடியிருப்பில் சிறு விபத்துக்கு வாய்ப்பிருக்கிறது. உயிர் பிரிவதும் வீட்டிலேயே இருக்கலாம். சிலர் விஷயத்தில் வீடு கை மாறிவிடும்.

9க்கு அதிபதி -4ல் :
தாயே தந்தையை போலோ அல்லது தந்தையே தாயை போலோ தங்களை வளர்த்திருக்கலாம்.

4 ல் புதன் சுபபலம் பெற்றால்:
தாய்மாமன் அ மாமனார் சொந்தஊரில் செட்டிலாகவே வாய்ப்புள்ளது. அது கூட பஜார் தெரு, மக்கள் கூடிக்களிக்கும் இடத்தை ஒட்டி வீடு அமைய வாய்ப்புள்ளது. வீட்டில் தோட்டம் நிச்சயம். அது பிரபல பெருமாள் கோவில் உள்ள ஊராகவோ அ வியாபாரத்துக்கு முக்கியமான ஊராகவோ இருக்கலாம்.

ஜாதகத்தில் புதன் சுபபலமானால் .அதிர்ஷ்டம் தருவன:
எண்: 5
தேதி: 5,14,23
நிறம்: பச்சை
கடவுள்:பெருமாள்
கல்: ஜாதி பச்சை ( இடது சிறுவிரலில் அணியவும்)
ஏரியா: பஜார் தெரு, சந்தை, பீச் (மக்கள் கூடுமிடம்)
சாதி: வைசியர்கள், வியாபாரிகள்,ஏஜெண்ட்ஸ்,டீலர்
மனிதர்கள்: மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,ஜோதிடர்கள்

குரு+சந்திரன்:
இவர் தம் தகுதிக்கு (அதிர்ஷ்டம்) எள்ளளவும் தொடர்பில்லாத வாழ்வை 14 வருடம் வாழவேண்டியிருக்கும். அது எப்போது துவங்கியது என்பதை அவரே தம் அனுபவத்தில் இருந்து கணிக்கவேண்டும்.

ஐந்தில் சுக்கிரன் சுபபலமானால்:
மகாலட்சுமி போன்ற பெண் குழந்தைகள் பிறக்கும். அது நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட், கலர் சென்ஸ் உள்ளவராக வளரும் . அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் போன்ற தொழில்களை துவங்கி நடத்தலாம். மேலும் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், துறைகளும் லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியனவும் அனுகூலம் தரும்.

லக்னம் அ ராசி மகரமானால்:
பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கர்ம யோகம் இவருக்கு ரொம்பவே பொருத்தம். அந்தந்த நேரத்துக்கு தன் உழைப்பின் பலன் எங்கே போகிறது என்று கேள்வி எழுப்புவாரே தவிர பிறகு கண்டு கொள்ளமாட்டார். உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் வேலை செய்து கொண்டே இருக்க விரும்புவார்.

4 -7 பாவங்களுக்கு ஒரே கிரகம் அதிபதியாக இருந்தால்: (இது எந்த லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆகும்னு சொல்லுங்க பார்ப்போம்)
இவரது தாய்க்கும், மனைவி/கணவருக்கு சில ஒற்றுமைகள் அமைந்திருக்கும். பெயரில்,குணத்தில் அ ஜாடையில்.

லக்னம்/ராசி கன்னியானால்:
கடன், நோய்கள், விரோதங்கள்,சொத்து தகராறுகள் இருந்து கொண்டே இருக்கும் . கடன் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பார். விரோதங்கள் இருக்கும் வரை கடன் இராது. ( சில கால கட்டத்தில் மட்டும் மூன்றுமே தொல்லை தரலாம்.) இவை குறித்து கவலை வேண்டாம்.

லக்னம் கடகமானால்:
அம்மா ஏதேனும் ஒரு கலை/அழகு படுத்தும் கலை கைவரப்பெற்றிருப்பார்கள். நல்ல ரசனை இருக்கலாம். ஆனால் இவருடன் ஒருவித ஹேட் அண்ட் லவ் தான் இருக்குமேதவிர அதில் தொடர்ச்சி இல்லாதிருக்கலாம். இவருக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம். (கருப்பை,ஓவரிஸ்,அண்டம்) பாட்டு டீச்சர், ட்ராயிங் டீச்சர் மாதிரி கூட இருந்திருக்கலாம்

சனி ஜீவனஸ்தானத்தில் தொடர்பு கொண்டால்:
ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறை. . எந்த துறையில் இருந்திருந்தாலும் கை,கால் அழுக்காகும் தொழில்/சீட்டில் இருந்திருக்கலாம். ஒர்க்கிங் என்விரான்மென்டில்குறைந்த பட்சம் தூசு, துர்வாசனை இருந்திருக்கும்.
இவருக்கு தொழில் உத்யோகத்தில் எதிர்ப்புகள் இருந்தால்:
காகத்துக்கு சோறு, பசு மாட்டுக்கு அகத்தி கீரை தரவும்.

Saturday, August 27, 2011

ஜோதிட பால பாடம்:9 & குரு வக்ர பலன்




அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்னைக்கும் தொடருது.இதை வரிசையா தரமுடியலை. படிச்சுட்டு நீங்க கேட்கிற கேள்விகளுக்கு பதில் தர முடியலை.(ஏற்கெனவே கேட்டு வச்சிருக்கிறவுக மன்னிக்கனும். கேட்க நினைக்கிறவுக ரோசிக்கனும்).

டோன்டுவின் பதில்கள் மாதிரி கேஸில்லை இது. டோண்டு சார் மொதல்ல பதிலை ரெடி பண்ணிக்கிட்டு அப்பாறம் கேள்வி கேட்டுக்குவாரோ அ டோன்டு சார் இப்படியா கொத்த கேள்விகளுக்குத்தான் பதிலளிப்பாருன்னு சனம் கேள்வி கேட்குதோ தெரியாது..

நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் நாளா பொழுதா உட்கார்ந்து அடிச்சாலும் முழு பதில் தரமுடியாது. சோசியம் ஒரு சமுத்திரம் ( ஏழு சமுத்திரம்னு சொல்றாய்ங்க - நாம பாஆஆஆஆஆஅர்த்தது ஒரு சமுத்திரம்தானு வச்சிக்கங்க).

அதிலயும் நாம பதில் சொல்லனும்னா கால காலமா இருந்து வர்ர அப்செஷனையும் சொல்லனும். அதுல எதெல்லாம் இன்னைக்கும் பொருந்துது எதெல்லாம் பொருந்தாது ஏன் பொருந்தாதுன்னும் சொல்லனும்.
பார்ப்போம்.வாக்குல கீற சனி கழண்டுகிடட்டும் . குரல் பதிவானா போட்டு அசத்திருவம்ல. நெஜமாலுமே நேரம் இல்லிங்ணா.

வேலை செய்யறது எவ்வளவு முக்கியமோ அந்த வேலைக்கு தொடர்பில்லாம வெட்டியா கொஞ்ச நாழியாவது இருக்கிறதும் அவ்வளவே முக்கியம். இது நம்ம செயல் திறனை இரட்டிப்பாக்கும். அதனால வெட்டியாவும் கொஞ்ச நாழி அலையவேண்டியதா இருக்கு. மேலும் ..........

நாம லோக்கலா நடத்திட்டு வர்ர பத்திரிக்கை ரம்ஜான்+ வினாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தயாராகிவருது ப்ளஸ் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை எல்லாம் சேர்ந்து கழுத்தை நெறிக்குது. நம்ம சுகுமார்ஜி மணி,போன்றவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வாய்ங்கன்னு ஒரு நம்பிக்கை.பார்ப்போம்.

ஹசாரே செயிச்சுட்டாரு. வாழ்க்கையில ஒரு குரூரமான விதி என்னன்னா சிலர் வெற்றியின் போது புத்தி சாலியா காட்சி தந்து தோத்துட்ட பிற்காடு மகாமடையர்களா எக்ஸ்போஸ் ஆயிருவாய்ங்க. ( மதுரை வீரர்களை பார்க்கிறிங்கல்ல)

சிலர் தோல்வியில மகா புத்திசாலிகளா ,உத்தமர்களா காட்சி கொடுத்து வெற்றியின் போது முட்டாள்களா, மகா கெட்டவுகளா எஸ்டாப்ளிஷ் ஆயிருவாய்ங்க. (அம்மா சம்ச்சீர் கல்வியில மாட்னாய்ங்களே- எமபுரத்து கதவை தட்டறவனுக்கு இதயத்துக்குள்ளாற நேரடியா இறக்கின ஊசி மருந்து அது)

வெற்றி தோல்வி ரெண்டுலயும் ஒரே மாதிரி காட்சி தரக்கூடிய பார்ட்டி உலகத்துல நாம ஒருத்தந்தேன்.
( மடையனா). நாம மக்கள் பார்வையில மடையனா இருக்க காரணம் இப்டி இருந்தாதான் ஆத்தா டொக்கா வந்து சி(ரி)க்கறா.

நம்ம சைட்ல திடீர்னு ரெட்டிங்கல்லாம் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டாய்ங்க. (ரெம்ப சந்தோசப்படாதிங்க) இதுவும் நம்ம ஜா.ராவோட லீலைகள்தான். அவரு ஹாரம்னு ஒரு மல்ட்டி லிங்குவல் அக்ரகேட்டர்ல மெம்பரு.அங்கன தெலுங்கு பிரிவுல பிடிச்ச பேரை வச்சுக்கிட்டு புல்க்கு காட்டறாரு.

நேற்றைய பதிவுல கம்ப்யூட்டர் திருடு போச்சுன்னு சொல்லியிருந்தேன். நமக்கு வந்த தகவலை வச்சுத்தேன் பதிவெழுதினன். மேட்டர் இன்னாடான்னா மானிட்டரை மட்டும் லபக்கிக்குனு பூட்டுக்கிறானுவோ. சிபியுவை கவுத்து போட்டுட்டு போய்க்கிறானுவோ. அதுக்கு பவர் ப்ளக் எல்லாம் போயி ஒரு வண்டி இன்சுலேஷன் டேப் போட்டு ஒப்பேத்தி வச்சிருந்தம். இதுல அப்பப்போ டிம் அண்ட் டிப் அடிக்கும். இது நம்ம கிட்டே இருக்கிறப்பவே பார்த்துட்டு ..........

நம்ம ஃப்ரண்ட் ஒருத்தரு ( ஹார்ட் வேர் கம் சாஃப்ட்வேர் சர்வீஸ்) "யப்பா.. பெரிய சைஸ் ப்ளாக் அண்ட் வைட் மானிட்டருங்க கேப்பார் மேப்பார் இல்லாம நம்ம கிட்ட டஜன் கணக்கா விழுந்து கிடக்கு ஒன்னை கொண்டு போயி வச்சுக்க. நான் என்ன காசு பணமா கேட்கறேன்" னு ரெம்ப நாளா சொல்லிக்கினு இருந்தாரு. நாம தேன் சொம்மா வந்தா கருமமும் சேர்ந்து வரும்னு ப்ரேக் பண்ணி வச்சிருந்தம். நாளைக்கு மானிட்டர் ரெடி நாமினலா நூறோ இரு நூறோ கொடுத்துட்டு கொண்டு வைக்கனும். ஆத்தா புகழ்பாடும் தெலுங்கு கவிதைகளை வலையேற்றியே தீர்ரதுன்னு ஒரு கெட்ட முடிவு எடுத்திருக்கமில்லை.

வர்ர நவராத்திரிக்குள்ள ஏதோ ஒரு அற்புதம் நடந்தே தீரனும். அதேன் டார்கெட்டு.

அப்பாறம் ரெம்ப முக்கியமான சமாசாரம் 2011 ,ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 25 வரையிலான குரு வக்ரகாலம் பத்தி சில வரியாச்சும் சொல்லனும்.

திருடு போன கடைக்கு சொந்தக்காரனோட ராசி ரிஷப ராசி. குரு இப்பம் மேஷத்துல இருக்காரு. ஆகஸ்ட் 30 முதல் வக்ரம்.. இந்த் எஃபெக்ட் ஒரு மாசம் முந்தியே வந்திருச்சு. ( மகனோட ஃபீஸ் மேட்டர் கடந்த ப்திவுலயே சொல்லியிருக்கன்) குரு அஷ்டமாதிபதி இவரு 12ல மறைஞ்சா யோகத்தை தானே தரனும். ஏன் ஆப்படிச்சுட்டாரு? அதான் வக்ரத்தோட ஸ்பெஷாலிட்டி .

நல்லது செய்யற இடத்துல இருந்து கிரகம் வக்ரமானா கெட்டதை செய்யும். கெட்டது செய்ற இடத்துல வக்ரமானா நல்லதை செய்யும்.

ஆனால் அந்த கிரகம் லக்னாதிபதின்னா மட்டும் எங்கன வக்ரமானாலும் நாஸ்திதேன். இதுலயும் ஒரு ப்ளஸ் இருக்கு.

நாம கடந்த சிலகாலமா சிங்கிள் டீக்கு சிங்கியடிச்சுக்கினு கீறோம்னு வைங்க. அப்பம் பார்த்து நம்மலக்னாதிபதி வக்கிரமானா அந்த வக்கிர காலம்வரை ஏக் தின் கா சுல்தான் கணக்கா இருக்க சான்ஸ் இருக்கு. இதுவே நாம க்ளாக் வைஸ் லைஃப்ல இருக்கிறச்ச லக்னாதிபதி வக்ரமானா டப்பா டான்ஸ் ஆடிரும். இதே விதியை உறவு -பிரிவு , நோய் -உடல் நலம்னு அப்ளை பண்ணிக்கிடுங்க.

குரு தனுசு மீனங்களுக்கு அதிபதிங்கறதால இந்த ரெண்டு ராசிக்காரவுக 2011 மே 8 க்கு அப்பாறம் இருந்த நிலைக்கு மாறான நிலை இப்பம் ஏற்படும்ங்கறதை புரிஞ்சிக்கிட்டு உசாரய்யா உசாரு.

மத்த ராசிக்காரவுகளை பொருத்தவரை குரு நல்லது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா கெட்டது .கெட்டது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா நல்லது. அடிபப்டை விதி இது . இதை வச்சு 12 ராசிக்கும் ஆருனா வக்ரகால பலன் எழுதினா பிரசுரிக்க காத்திருக்கம்.

ஆரும் எழுதலைன்னாலும் டோன்ட் ஒர்ரி இங்கே அழுத்தி உங்க ராசிக்கான 2011 குரு பெயர்ச்சி பலனை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க. அந்த பலனுக்கு நேர் எதிரிடை பலன் தான் நடக்கும். உடுங்க ஜூட்..

இனி ஜோதிட பால பாடம் ...........
7ஆமிடம் கெட்டால்:
ஜாதகருக்கு காதல்திருமணம் அ பெரியோரில் சிலருக்கேனும் விருப்பமில்லா திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அனைவரையும் எதிர்த்து மணந்தாலும் மனைவி வகையிலும் இவருக்கு நிம்மதி கேள்விக்குறியே.
லக்னத்தில்/ஐந்தில் சூரியன் பகை நீசம் பெற்றால் /சனி -ராகு-கேதுவுடன் சேர்ந்தால் :
தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம்.வலது கண்ணில் பிரச்சினை வரலாம். ஜாதகரை மறதி வாட்டும். அகந்தை மிக்கவராக இருந்து பின் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக மாறுவதோ , அல்லது ஆரம்பத்தில் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக இருந்து அகந்தை மிக்கவராகவோ ஆவார். ஆனால் இரண்டுமே ஜாதகருக்கு நலம் பயக்காது. சலாம் போட்டால் சட்ட விரோத சக்திகளுடன் உறவு ஏற்பட்டு விசாரணக்குட்பட வேண்டி வரும். அகந்தை மிக்கவராக இருந்தால் மேற்படி சட்ட விரோத சக்திகளால் தொல்லைகள் ஏற்படும்.
விரய பாவம் கெட்டால்:
ஜாதகருக்கு டீப் ஸ்லீப் இருக்காது. விழிப்பும்,தூக்கமும் மாறி மாறித்தொடரும்.இதனால் கனவுகள் அதிகம், சில நேரம் வாய்விட்டு உளறவும் கூடும்.
பரிகாரம்
மார்னிங்க்,ஈவினிங்க் வாக் செய்யவும்.( சூரிய ஒளி பாடி மேல படனும்) தந்தை வழி முன்னோர்களை நினைத்து தலை தொடர்பான பிரச்சினகள் உள்ளவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவும்.
சந்திர வீடு:
வீடு அமைந்திருக்கும் பகுதி நீர் நிலையை ஒட்டியதாகவோ, பள்ளமான பகுதியாகவோ இருக்கலாம். யார் எவ்ள நேரம் இருப்பாய்ங்கனு தெரியாத கட்டிடத்தை ஒட்டி இருக்கலாம். உ.ம் திருமண மண்டபம் -காய் கறி மார்க்கெட்
செவ்வாய் தொழில்:
போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே, எலகட்ரானிக்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங், ஹோட்டல் ,நெருப்பு ,மின்சாரம் தொடர்பானவை
குரு தொழில்:
கோல்ட்,ஃபைனான்ஸ், டீச்சிங், பாலிடிக்ஸ், கோர்ட், சேவை நிறுவனங்கள், கோவில்,மத நிறுவனங்களில் வேலை.
சூரிய தொழில்:
தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்தல் அத்யாவசிய பொருட்கள், விளம்பரத்துறை, விற்பனை துறை (அட் டோர் ஸ்டெப்ஸ்)
சந்திர தொழில்:
ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் தொடர்பான சினிஃப்ளெக்ஸ்,ஏர் போர்ட்,பஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன்,திருமண மண்டபம், லாட்ஜு போன்ற துறைகள் , அழுகும் பொருட்கள் ,திரவ வடிவிலானவை, ரெண்டே கால் நாட்களுக்குள் முடிந்து விடக்கூடிய டீலிங்குகள், தினசரி செய்தித்தாள் விற்பனை/ஏஜென்சி
கடக குரு:
வாழ்வின் முற்பகுதியில் பயங்கர கடன் காரராகவும்,குடும்பத்துடன் ஒத்து போகாதவராகவும், தொண்டை ,கண் பகுதியில் நோய் உள்ளவராகவும் இருப்பார். ஆனால் பிற்பகுதியில் பெரும்பணக்காரராகவும், சொத்துக்கள் சேர்ப்பவராகவும், தர்ம காரியங்கள் செய்பவராகவும் இருப்பார். வயதான (பழுத்த) ஒரு தம்பதியை பராமரிப்பார்.( தாய்,தந்தையராகவும் இருக்கலாம்).
ராகு தொழில்:
லாட்டரி, சினிமா , சாராயம், லைசென்ஸ் இல்லா(வாங்காத) தொழில்கள் அனுகூலம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் . இருட்டில், இரவில் செய்யும் தொழில்
சனி மனைவி:
99.9 சதவீதம் காதல்+கலப்பு திருமணம் நடக்கலாம். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமானால் தம்பதிகள் பிரிவர். அ மனைவி நோய்வாய்படுவார். மனைவி ஏழை குடும்பத்தில் பிறந்திருப்பார். ஜாதகரை காட்டிலும்மூத்தவராக இருக்கலாம் அ தோன்றலாம். சாலையில் மனைவியுடன் சென்றால் அக்காவா வீட்டு வேலைக்காரியா என்று பார்த்தவர்கள் நினைப்பர்.மேற்கு திசையில் இருந்து அல்லயன்ஸ் வரும். புதிய உறவில் தான் அமையும். ஒரு வேளை ஜாதகர் தமது ஊழியர் எவரையாவது மணக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Friday, August 26, 2011

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

அண்ணே வணக்கம்ணே !

சர்வ நிச்சயமா இந்த பதிவுல மொக்கை தான் போட போறேன். இதுபிடிக்காதவுக ஸ்ட்ரெய்ட்டா அவன் அவள் அது தொடருக்கும் , ஜோதிட பால பாடம் பதிவுக்கும் போயிரலாம். மொக்கை தான் எங்கள் சாய்ஸுங்கறவுக இந்த பக்கத்துல நில்லுங்க.

கிட்ண பரமாத்மா ஜொல்வாரு " பரதர்மம் எவ்ள உயர்ந்ததா இருந்தாலும் சுதர்மம் எவ்ள தாழ்ந்ததா இருந்தாலும் சுதர்மமே பெஸ்டு" அது நெஜம் தான்.. வழக்கம் போல அவன் அவள் அது -ஜோதிட பால பாடத்தோட நின்னிருக்கலாம்.

ஆத்தாவுக்கு லீவு விட்டு - ரா முச்சூடும் மன்னாடி அல்லாருக்கும் ஆட் சென்ஸ் பதிவை ஒர்க் அவுட் பண்ணினது தண்டமா போச்சு.( வெட்டி ..லு நித்திரைக்கு கேடு மாதிரி)

இண்ட்யாராக்ஸ் மூலமா கூகுல் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் வாங்கற மேட்டர் ( நேற்றைய பதிவு) அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரா? அல்லது சனம் அசால்ட்டா இருந்துட்டாய்ங்களா தெரியலை. மொத்தத்துல நேரம் வீணாபோச்சு. ஹிட்ஸில் எள்ளளவு கூட வித்யாசமில்லை.

என்ன ஒரு ஆறுதல்னா இரண்டு புதுவரவுகளின் மறுமொழிகள்.

ரா தூக்கம் போச்சு.காலையில தூங்க முடியலை.மதியம் தூங்கமுடியலை. சாயந்திரம் 5மணிக்கு தூங்கி ராத்திரி 9 மணிக்கு எந்திரிச்சன். நமக்கு சனங்களோட இன்டராக்ட் ஆகறது ரெம்ப முக்கியம் . வெளிய இறங்கினம் சரக்கடிக்கிற பார்ட்டி தான் கிடைச்சாரு. கூட போயி ஒரு ஃபேண்டாவும் ரெண்டு சிகரட்டும் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன்.

பால பாடம்ங்கற பேர்ல இந்தாளு கட்டற துணுக்கு தோரணத்தை படிக்க இத்தீனி சொந்தகதையை கேட்கனுமான்னு கோச்சுக்காதிங்கண்ணா. பாரதி சொன்னாரு " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,கவிதை" நம்ம ஸ்டேட்மென்ட் " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,ஜோதிடம்.

ஆன்லைன் ஜோதிட ஆலோசனையில சில்லறை தாராளமாகவே புரண்டாலும் நமக்கு தொழில் ஆன் லைன் ஜோதிட ஆலோசனைங்கற ரேஞ்சு வந்தது ஒரு குடும்ப தலைவனா சந்தோசத்தை தந்தாலும் நாட்டுக்குழைத்தல் எல்லாம் பெண்டிங் ஆயிட்டே வருது. இது கில்ட்டிய தருது. ஆக இன்னைலருந்து இங்கே - இப்பம் - நாட்டுக்கு உழைக்க முடிவு பண்ணியிருக்கன்.

இந்தியாவுக்கு இது ஒரு சந்தியாகாலம். ( சூரியாஸ்தமனத்துக்கும் சந்திரோதயத்துக்கும் இடையிலான இடைவெளி) இந்த சமயம் நம்மை கருத்தை பதிவு செய்யலின்னா எதிர்காலத்துல ரெம்ப மொக்கையாயிருவம். இந்த காலத்துலயே இந்த நிருபர் பசங்க கேட்கிற வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம அரசியல்வாதிங்க பேந்த பேந்த முழிக்கிறாய்ங்க.

நாம நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதி ஆனா கொத்துபரோட்டா போட்டுருவாய்ங்க போல. " இன்னிக்கு கிழிச்சுக்கறியே 2009 - 2011 பீரியட்ல ஆன்லைன்ல சோசியம் சொல்லி கல்லா மட்டும் தானே கட்டினேன்னு கேட்டுட்டா என்ன பண்றது?

அதனாலதேன் கருத்து கந்தசாமி கணக்கா நம்ம கருத்துகளை அவ்வப்போது சொல்லிரலாம்னு உத்தேசம்.

1. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு செப் 9 அன்று மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு.

மனிதர்கள்னாலே குறைபட்ட சிந்தனை ( ஈகோ) - இயற்கையிலருந்து விலகி வந்துட்டதால குறைப்பட்ட உயிரியல் திறன் ( ஐ மீன் கில்மாலருந்து - மோப்பம் - கேட்புத்திறன் வரை) . இதுல தாளி மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எல்லா அமைப்புமே குறைபட்டதுதேன்.

குறைபட்ட திறன் கொண்ட - குறைப்பட்ட மனிதர்கள் ஏற்படுத்தின - குறைப்பட்ட அமைப்பு தரும் தீர்ப்புகள் மனித உயிரை பறிக்கும்னா அதை ஏத்துக்க முடியலை.

தூக்கு தண்டனைங்கறது சோனியாவுக்கு விதிக்கப்பட்டாலும் மொத ஆளா எதிர்ப்பு தெரிவிப்பேன் என்பதை இங்கன பதிவு செய்ய விரும்புகிறேன்.

மேலும் இத்தினி காலம் சிறையில் வாடிய அந்த பார்ட்டிங்களை தூக்குலயும் போட்டா ரெட்டை தண்டனை ஆயிருமில்லியா? குற்றத்திலான அவர்கள் பங்கை அரசு தரப்பு நிரூபிச்சதுலயே நிறைய ஓட்டை இருக்கிறதா சொல்லும் போது தூக்கு தண்டனைல்லாம் கொலைக்குற்றம்யா.


2.ஜன் லோக் பால்

இந்த மேட்டர்ல ரெஸ்பாண்ட் ஆற சனத்தை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். அன்னா அசாரே உலகத்தை உய்விக்க வந்த ரட்சகர் - அன்னா வாக்கெல்லாம் அருள் வாக்குங்கறது க்ரூப் நெம்பர் ஒன்.

இன்னொரு பகுதி சனம் ஹசாரே பின்னாடி பா.ஜ.க /மதவாத சக்திகள் இருக்கு. அமெரிக்கா இருக்கு. பார்லிமெண்ட் தான் சுப்ரீம். பார்லிமெண்டை ஹசாரே ப்ளாக் மெயில் பண்றாரு - அசாரே அத்வானிக்கு ஒன்னு விட்ட மச்சினன் - சாதி அமைப்பை ஆதரிக்கிறவர்னு கிழிச்சுட்டு இருக்காய்ங்க.

ரெண்டுமே பார்ஷியலா நெஜமா இருக்க வாய்ப்பு இருக்கு. பார்லிமென்டு தான் சுப்ரீமுன்னு பதர்ராய்ங்க. பார்லிமெண்டுன்னா என்ன? எம்.பிங்க. இவிகளை பார்லிமென்டுக்கு அனுப்பினது சோனியா ,ராகுலுக்கு ஜல் ஜக் போடவோ - துட்டுக்கு ஓட்டு போடவோ , கேஷுக்கு கேள்வி கேட்கவோ இல்லை.

இந்திய சனத்தொகை மொத்தமும் பார்லிமெண்டுக்குள்ள நுழைய முடியாது -அக்காமடேட் பண்ணமுடியாதுன்னு தான் இவிகளை அனுப்பினோம். இவிக சதா சர்வ காலம் நம்மோட இன்டராக்ட் ஆகி நம்மை கருத்து என்னனு தெரிஞ்சுகிட்டே இருக்கனும். இதையெல்லாம் பார்லிமென்டுல பேசனும் -சட்டமாக்க ட்ரை பண்ணனும்.

இவிக பொதுசனத்தோட சேவகர்கள் - வேலைக்காரவுக. வேலைக்காரன் சரியில்லை . தினம் தினம் சரக்கடிச்சுட்டு மட்டையாயிர்ரான்னா அவனை வேலைக்கு வச்ச எஜமான வாய்ல விரல் போட்டுக்கிட்டு உட்கார முடியுமா?

சரி கொய்யால இவனை நம்பினா வேலைக்காகாதுன்னு தன் வேலைய தானே செய்துக்க கோதாவுல இறங்கிர்ரான். ஜன நாயகத்துல ஜனம் தேன் சுப்ரீம். ( சுப்ரீம்கோர்ட்டு கூட சுப்ரிம் கடியாதுங்கோ)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நம்மில் குற்றம் குறை இல்லாதவர்கள் ஆருமில்லை. அதனால ஒட்டு மொத்தமா ஜானகிராமன் உத்தமர். முருகேசன் அராத்துன்னு தீர்ப்பு சொல்ல முடியாது. சிவயசிவாவில் பதிவு போடும் போது ஜா.ரா நல்லவர். போலி முருகேசனா கழிசடை கமெண்டு போடும்போது கெட்டவர்.

ஆன்மீக பதிவுகள் போடும்போது முருகேசன் நெல்லவரு. கில்மா ஜோக்கு போட்டு ஹிட் பொறுக்கறச்ச கெட்டவரு. அந்த மேரி அசாரே ஊழலை எதிரிக்கிறப்ப ஆதரிப்போம். சாதியை சப்போர்ட் பண்ணா கிழிப்போம்.


3.மத்திய அரசின் ஆயுள் -இடை தேர்தல்கள்

நாட் நாட் பீரியட்லயே சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு சோதிட பதிவு போட்ட பார்ட்டி நாம இன்னைக்கு உள்ள அரசியல் சீதோஷ்ண நிலைய பார்த்தா மத்திய அரசு இந்த நவம்பர் 8 வரை கூட தாங்காது போல. சீக்கிரமே இடைத்தேர்தல் வரும்னு பட்சி சொல்லுது.

ஜோதிட பாலபாடம்: 8

லக்னாதிபதி எட்டில்:
லக்னாதிபதி உங்களை காட்டும் கிரகம். எட்டு மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி எங்கே இருந்தாலும் நன்மை செய்யனும்.அவர் மரணத்தை காட்டும் இடத்துல நின்னாரு. இதன் பொருள் என்ன? உங்க லக்னாதிபதி மரணத்தின் மூலம் நன்மை செய்வார் அந்த மரணம் உங்க போட்டியாளரோடதா இருக்கலாம் -உங்க எதிரியோடதா இருக்கலாம் - அல்லது உங்கள் உறவினரா இருக்கலாம். அந்த மரணத்தின் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு -சொத்து -சுகம் வரலாம் என்பது இதன் பொருள். ஒரு வேளை நீங்க எதுனா பெரிய விபத்தில் சிக்கி நஷ்ட ஈடு இத்யாதி வரலாம்.

ரோகாதிபதி இரண்டில்:
நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் ஜாதகர் வீண் பேச்சு,வெட்டிப்பேச்சால் வம்புகளை விலை கொடுத்துவாங்குவார். அல்லது மிக அவசியமான நேரத்தில் கூட வாய் திறந்து பேசாது இருந்துவிடுவார்.அதனால் பல நஷ்டங்கள் ஏற்படும்.நோய்கள்,கடன்,விரோதங்களேற்படலாம். கண்,தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் வே ஆஃப் ப்ரசண்டேஷனில் பிரச்சினை வரலாம்.

லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றால்:

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன் எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

ஆக லக்னாதிபதி உச்சம் பெற்றால் அது மினிமம் கியாரண்டி ஜாதகம்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிரலாம்.

இதுல ஒரு மைனஸ் பாய்ண்டும் இருக்கு.ஓஷோ சொல்வாரு " நீங்க மத்தவுகளை விட உயர்ந்துட்டா பிரச்சினை அதிகம்"

மத்தவுக குண்டூசி தவறி விழுந்ததுக்கு பதறிப்போயி காட்டுக்கத்தல் கத்த "யார் கால்லயாச்சும் குத்திர ப்போவுதுப்பா மொதல்ல அதை பொறுக்கி எடுத்து அதுக்கான டப்பாவுல போடு"ன்னு சொன்னா எதிராளிக நொந்துபோய்ருவாய்ங்க

மேலும் எதிர்காலத்துல நீங்க என்னவா மாறப்போறிங்களோ இளமையில அதுவாவே இருப்பிங்க இதை சாமானியர்கள் டைஜஸ்ட் பண்ணிக்க முடியாம நொந்துப்போயிருவாய்ங்க. உங்களை நோகடிக்கவும் கூடும்.

எந்த கிரகம் கெட்டால் - எந்த கிழமையில் - எந்த கடவுளை வழிபடலாம்:

சூரியன் -ஞாயிறு -சூரிய நமஸ்காரம்,காயத்ரி
சந்திரன் -திங்கள் கிழமை -கன்னியாகுமாரி
செவ்வாய் -செவ்வாய் கிழமை - சுப்பிரமணியர் -ரத்த தானம்
ராகு -வெள்ளிக்கிழமை (காலை 10.30 முதல் 12 க்குள்) புற்றுள்ள -அய்யர் பூசை பண்ணாத அம்மன் கோவில்
குரு -வியாழகிழமை - தட்சிணா மூர்த்தி அ எவரேனும் குரு
சனி - சனிக்கிழமை - ஆஞ்சனேயர் அ கிராமதேவதை
புதன் - புதன் கிழமை - நாமம் போட்ட சாமி (எதுவானாலும் சரி) எஸ்பெஷலி கிருஷ்ணர்
கேது - திங்கள் காலை 7.30 முதல் 9 க்குள் வினாயகர்


குரு சுபனாகி/அசுபனாகி தனித்து நின்றால்;

அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம்:
இது ஒரு ஜோதிட பழ மொழி. அந்தணன் என்பது குருவை குறிக்கு சொல். இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னா ..


குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம். ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும்.( மேலும் உங்க ஜாதகத்துல செய்தொழிலை காட்டற 10 ஆமிடத்துக்கும் குருவே அதிபதியா இருக்காருங்கறதால இந்த பலன் ரொம்பவே ஒர்க் அவுட் ஆகும்)

யுவார் ஓகே. ஆனால் உங்களை சுத்தி உள்ளவுகளும் ஆரோக்கியமான உடலும்,மனசும் பெற்றிருக்கனுமில்லையா? அப்படி இல்லேன்னா என்ன ஆகும்?

உடல்,மன ஆரோக்கியம் காரணமா நீங்க உற்சாகம், எனர்ஜியோட இருப்பிங்க. அதெல்லாம் சேர்ந்து உங்களை சந்தோஷமா இருக்க வைக்கும்.

ஸ்தூல நிலை வேறயா இருந்தாலும் சந்தோஷமா இருப்பிக.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக .அதைப்பார்த்து நாலு பேர் உங்களை நக்கலடிக்கலாம். ஏன் உங்களுக்கு தீமை கூட செய்யலாம் (சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான்)

குரு தனியா நின்னா என்ன ஆயிரும்னு கேப்பிக சொல்றேன். குருன்னா டூ குட்.( Too good/ do good) குருவோட இன்னம் ஏதோ ஒரு கிரகம் சேர்ந்தா இதை கட்டுப்படுத்தும். இல்லாட்டி அரண்மனை வாசக்காலை வெட்டிக்கொடுத்த கர்ணன் கதையா போயிரும்.

தர்மம் பண்ணியே போண்டியான குடும்பம் ஊருக்கு நாலிருக்குல்லியா? நல்லதை பண்றது ஓகே.ஆனால் எதுக்காக பண்றோம்னு ஒரு கேள்வி வருமில்லியா?

கூட வேற ஏதாச்சும் கிரகமிருந்தா அந்த கிரக காரகத்வத்துக்குட்பட்ட ஏதோ ஒரு நோக்கத்துக்காக பண்றான்னு ஜனம் அஜீஸ் பண்ணிப்பாங்க.

அப்படியில்லாம குரு தனிய நின்னா நல்லது பண்றதுக்காகவே நல்லது பண்ண ஆரம்பிச்சுருவம்.

இதை ஜீரணிச்சுக்க முடியாத சனம் உங்க நற்செயலுக்கு விபரீதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து கதை கட்ட ஆரம்பிச்சுரும்.

உதாரணமா நீங்க ஒரு ஏழக்குடும்பத்துக்கு உதவறிங்கனு வைங்க. அந்த வீட்டு பெண்ணை கணக்கு பண்ணத்தான் பண்றிங்கனு கதை கட்டிருவாய்ங்க.

கோவிலை புதுப்பிக்க இறங்கினிங்கனு வைங்க. மூலவர் அடியில புதையல் இருக்குப்பா அதை குறிவச்சுத்தான் இந்த வேலைல இறங்கியிருக்கானு சொல்லிருவாங்க.

குரு தனிய நின்னா வர்ர பிரச்சினை இதான்.


மேலும் குரு ஞாபகசக்தியை,திட்டமிடும் திறமையை,பொறுமைய தரக்கூடிய கிரகம்.வெற்றிக்கு இதுகள விட்டா வேற வழி ஏது? குரு உச்சம் பெற்றதால குரு காரகத்வம் கொண்ட எல்லா மேட்டருமே நல்லா ஒர்க் அவுட் ஆகும் .(பார்க்க: இணைப்பு நெம்பர் டூ )மனுசன் வாழ்க்கையில உசர உசர தனிமைப்பட்டு போயிருவான்.

இதுல குரு வேற தனிய இருந்தா நீங்க தனிமையை விரும்ப ஆரம்பிச்சுருவிங்க. சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.

குருங்கறது பிராமண கிரகம். பிராமணன் தனித்து நின்னு எதையும் கழட்ட முடியாது. அவனுக்கு அரசாங்கத்தோட,சமூகத்தோட ,மக்களோட உதவி தேவை. குரு தனியே நின்னா ஜாதகர் பாட்டுக்கு சோலோவோ தான் செய்ய நினைச்சதை செய்துக்கிட்டு போய்க்கினே இருப்பார்.

அப்ப சனம் தங்களோட கற்பனை சிறகை படபடனு அடிச்சு வதந்தீகளை கிளப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. இதைத்தான் நிந்தனைங்கறது.

6 ல் சந்திரன்: ரோக பாவம்:

இங்கே சந்திரன் நின்னாரு.இங்கு சந்திரன் நின்றதால் தீடீர் என்று உடல் நிலை ட்ரபுள் கொடுக்கும், மந்திரம் போட்டாப்ல குணமாயிரும். அதனால சின்ன சின்ன ஹெல்த் ட்ரபுள்ஸுக்கு மருந்துமாயம்னு போகாதிங்க போச்சுனு நினைச்சா மறுபடி தலை காட்டும்.(அவை வேறேதேனும் பெரிய பிரச்சைனைக்கு முன் அடையாளமா இல்லாதவரை) கடனும் திடீர்னு ஏற்படும் விளையாட்டா தீர்ந்துரும்னு நினைக்காதிங்க. வாழ் நாள் முழுக்க தொடர்ந்தாலும் தொடரும். அதனால் கடன் வாங்கறச்ச ஒரு முறைக்கு பல முறை யோசனை பண்ணி இறங்குங்க. வழக்கு,விவகாரம்,சண்டையும் இதே கேட்டகிரிதான். "அம்பாளே பார்த்துப்பா"ன்னுட்டு விலகி வந்துருங்க.
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன யதார்த்தத்தை புத்தியில் இருந்து மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். எதிரிகள் நண்பர்களா மாறுவாய்ங்க. நண்பர்கள் எதிரிகளா மாறுவாய்ங்க.

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..


அவன் -அவள்-அது : 22
அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ... நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பால பாடம் இன்னைக்கும் தொடருது. இங்கே அழுத்தி படிங்க.

கருத்து கந்தசாமி கணக்கா சமகால நேஷ்னல் டெவலப்மெண்ட்ஸ் பத்தியும் ஒரு ஐட்டம் தட்டி விட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிங்க

இனி அவன் அவள் அது ..................


கடந்த பதிவு ஒன்றில் ஆத்தாளுக்காவ தெலுங்குல நான் எழுதின தெலுங்கு கவிதைகளை வலையேற்ற ஒரு ஜகத் சோம்பேறிக்கு பிளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்தது ஞா இருக்கலாம்.

இன் கம் சர்ட்டிஃபிகேட் வைக்காததால காலேஜ்ல அவன் பையனுக்கு ரூ.31 ஆயிரம் அடிஷ்னலா கட்டவேண்டி வந்துருச்சு. அதை சாக்கா வச்சு வலையேற்றத்தை அவாய்ட் பண்ணிக்கிட்டு வந்தான். ஆத்தா அருளால காலேஜ் கண்டம் மலையேறிப்போச்சு.

இது நடந்து ஒரு வாரம் போல ஆனாலும் பார்ட்டி வலையேற்றத்தை கண்டுக்கற மாதிரி இல்லை. இத்தனைக்கும் அவனுக்கு எத்தனையோ ஆசையெல்லாம் காட்டினேன். மாசத்துக்கு இவ்ளன்னு காசுதரேன். எலக்ட்ரிசிட்டி போர்ட் ஆஃபீஸுக்கு போற வழியில தான் அவனோட மருந்து கடை . தாளி ஒரு டாட் மேட்ரிக்ஸ் ப்ரிண்டர் வாங்கித்தரேன். ஒரு மனு அடிச்சு கொடுத்தாலும் இருபது ரூபா வரும் இப்படி நிறைய.

ஆனால் பார்ட்டி எதையும் கண்டு்க்கலை. நேத்து ராத்திரி கடை பூட்டை உடைச்சு எல்லாத்தையும் வாரிக்கினு பூட்டானுங்களாம் ( நம்ம கம்ப்யூட்டர் உட்பட)

இதை எப்படி புரிஞ்சிக்கிறது புரியலை. காலையில 7 மணி அளவுல ஃபோன் வந்தது. இப்பம் 11.10 இதுவரை நாம என்ன ஏதுன்னு கண்டுக்கலை. இந்த சம்பவம் ஏன் நடந்தது? வலையேற்றத்தை நிரந்தரமா முடக்கவா? அது ஆத்தாளால கூட முடியாத வேலை.

வாழ்க்கையில லட்சியம்னு ஒன்னை வச்சுக்கிட்டு அதை தவிர மத்த எல்லாத்தையும் திராட்டுல விட்டுட்டு ஃபைட் பண்றவுக மேட்டர்ல கிரகங்கள் தோத்துப்போயிரனும்னு ஆத்தாளே ஒரு சாபம் விட்டு வச்சிருக்காளாமே தெரிமா?

இந்த சம்பவத்தால அசமஞ்சமா இருந்தா நம்மாளோட மைண்ட் உசுப்பப்பட்டு / இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் / கில்ட்டியால முழு வேகத்துல வலையேற்றம் நடக்குமோ?

அல்லது இதையே ஒரு சாக்கா வச்சு திராட்டுல விட்டுருவானோ? நமக்கு கம்ப்யூட்டர் திருடு போனதை பற்றி எள்ளளவும் கவலையில்லை.

எதுனா பூட்சின்னா கர்மம் தொலைஞ்சதுனு நினைக்கிற சாடிஸ்ட் நாம. எதுனா வந்தாதேன் பயப்படுவோம். இதும்பின்னாடி எந்த கருமம் வந்திருக்கோன்னு சிந்திப்பம்.