Showing posts with label தூக்கு தண்டனை. Show all posts
Showing posts with label தூக்கு தண்டனை. Show all posts

Sunday, March 25, 2012

உதயகுமார் மீது கஞ்சா வழக்கு

அண்ணே.. வணக்கம்ணே !

சமீபத்துல நாம ஏற்படுத்திக்கிட்ட விதிப்படி வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பை பத்தியும் ,அடுத்த 3 நாள் சோசியத்தை பத்தியும் பதிவெழுதனும். ஆனால் சனம் மட்டும் மறுமொழி எழுத மாட்டாய்ங்க. ஜா.ரா உட்பட. யாவும் நன்மைக்கே. இதுவும் ஒரு சீசன் போல. நடக்கட்டும்.

நாட்டு நடப்புன்னா எழுத எத்தனையோ இருக்கு. ரயில்வே பட்ஜெட்ல டிக்கெட் விலையை ஏத்தினதுக்கு பேயாட்டம் போட்ட மம்தா அக்கா மந்திரியை மாத்தி அதை இறக்கினாய்ங்க. ஆனால் லோக்கலா
எதையெல்லாம் ஏத்தனுமோ ஏத்திட்டதா கேள்வி.அரசியல்னாலே இந்த ரெட்டை வேடம்தான் போல.

முலாயமோட ரெட்டை வேடம் மட்டும் யுபிஏவுக்கு அஜீரணத்தை உண்டாக்கியிருக்கும். ஒரு பக்கம் ஆதரவு கேட்டு வர்ரவுகளை வரவேற்கிறாரு. இன்னொரு பக்கம் இடைத்தேர்தல் வருங்கறாரு. சரத் பவாரு காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை காப்பாத்தலைங்கறாரு..

ஆந்திராவுல இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ்ல குடுமிப்பிடி சாஸ்தியாயிருச்சு.பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு அல்லா தலீவர்களும் தில்லிக்கு காவடி தூக்குவாய்ங்க போல." டீச்சர் டீச்சர் ..இவன் என்னை கிள்ளிக்கிட்டே இருக்கான் டீச்சர்"

கூடங்குளம் விவகாரத்துல நாம ஆரம்பத்துலருந்தே விலகியிருக்க காரணம் அதை தடுத்து நிறுத்தும் சக்தி போராட்டக்காரர்களுக்கோ நமக்கோ இல்லைங்கறதுதேன்.

இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். ரஷ்யா காரவுக வாழ்ந்து கெட்ட பணக்காரன் மாதிரி. அவிக ஏதோ அவிக "பொளைப்பை"ஓட்ட எதையோ ஒன்னை ஒப்பேத்தி வித்து காலத்தை ஓட்டறாய்ங்க.

ரன்னிங்ல உள்ள கம்பெனி ப்ராடக்டை வாங்கினாலே சர்வீஸுன்னு போனா அவன் மூஞ்சி அஞ்சு நயா பைசா மாதிரி ஆயிரும்.

இதுல க்ளோஸ் ஆன கம்பெனி ப்ராடக்டை வாங்கினா நான் சன்னி பைக்கை வாங்கிட்டு அவதி படறாப்ல படவேண்டியதுதான்.

அப்படியா கொத்தது உசுருக்கும், சனம் பிளைப்புக்கும் உலை வைக்கக்கூடிய ஒரு உலையை நம்ம நாடு வாங்குதுன்னா அதுல ஆள்றவுகளுக்கு என்னமோ ஆதாயம் இருந்திருக்குன்னு அருத்தம்.

அமெரிக்காவோட நிலைமை எப்டின்னா எங்க சத்யம் ராமலிங்கராஜு மாதிரி பொய்க்கணக்கு காட்டி கெத்தா காட்டிக்கிட்டு கிடக்கிற நாடு. அவிக காசு பணம் செலவழிச்சு உலைய மூடவைக்கப்பார்க்கிறாய்ங்கன்னா நம்பறது கஷ்டம் ரெம்ப கஷ்டம்.

கேண்டோம் - டு டே காப்ஸ்யூல் - அபார்ஷன் ஸ்டேஜ்ல எல்லாம் தூங்கி வழிஞ்சுட்டு லேபர் வார்ட்ல வந்து அலப்பறை பண்ற அளவுக்கு அமெரிக்கா காரவுக கூமுட்டைன்னா நான் நம்பமாட்டேன்.

மொரார்ஜி தேசாயையே சி.ஐ.ஏ ஏஜெண்டுன்னு சொன்ன காவாலிங்கள கண்ட நாடு இது. உதயகுமாரை ஏன் இன்னும் டிக்ளேர் பண்ணலைன்னு புரியலை.

இப்பத்தேன் தீவிரவாதிங்க ஊடுருவி இருக்காய்ங்கனு ஆரம்பிச்சிருக்காய்ங்க.போனியாகாத பெருமாள் கோவில்ல பூஜை பண்ணிட்டு . உடுப்பி ஓட்டல்ல ஆமை வடை சாப்டுட்டு வெளியவர்ர குடுமி ஐயரை என்கவுண்டர் பண்ணிட்டு செட் ப்ராப்பர்ட்டீஸை அரேஞ்ச் பண்ணி "சீன்" கிரியேட் பண்ண நம்ம போலீஸால முடியும். கஞ்சா கேஸை ஆருமேலல்லாம் போட்டாய்ங்க ஞா இருக்குல்ல.இதெல்லாம் சகஜமப்பா.. உதயகுமார் மேல கஞ்சா கேஸு போடுவாய்ங்கன்னு எதிர்பார்த்தேன். ஏமாத்திட்டாய்ங்க.

எது எப்படியோ இத்தீனி மேட்டர் தெரிஞ்சிருந்தாலும் தடுக்க முடியாத ஒன்னை தடுக்க ட்ரை பண்ணி எதுக்கு சக்தி விரயம்னுதேன் இந்த உலை மேட்டர்ல இருந்து விலகியிருந்தோம். வை.கோவை வருசக்கணக்கா உள்ளாற வச்சாலே நாட்ல நாதியில்லை.

இதுல நாம வாக்கு ஸ்தானத்துல வக்ர சனியை வச்சுக்கிட்டு உளறிக்கொட்டு நம்மை தூக்கி உள்ளாற போட்டா நாறிருவம். நமக்கு எதுக்கு இமிசைங்கற அறிவார்ந்த சுய நலமும் . இதில் அடக்கம்.

கொய்யால பகிரங்க விசாரணை -விசாரணைய தொடர்ந்து தூக்குல போட்டுருவாய்ங்களா கேட்டு சொல்லுங்க கிளிச்சுரலாம். தாளி அவமானப்படுத்திருவானுவ. அதனாலதேன் தயக்கம்.

விக்கிலீக்ஸ் காரனை பண்ணலையா? உதயகுமாரை பண்ணலியா? நமக்கு அவமானம்லாம் தாங்காதுங்கோ.
அதுக்குன்னு அணு உலையை எதிர்க்கிறதே பிற்போக்குத்தனம் போல சிலர் தொடர்ந்து வலை தளங்கள்ள எழுதிக்கிட்டிருக்காய்ங்க.

பிரதமர், நாராயண சாமி மாதிரி பார்ட்டிங்க சொல்றாய்ங்கன்னா அது அவிக தலை எழுத்து .புரிஞ்சுக்கலாம் ( ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்) - கலாம் மாதிரி பார்ட்டிங்க விஷயத்துல கொஞ்சம் சைக்காலஜி தெரிஞ்சா புரிஞ்சுக்கலாம். இதெல்லாம் அம்பது வயசு கிளவி ப்யூட்டி பார்லர் போயி வந்து ஃபோட்டோ ஷூட் பண்றாப்ல ( ஸ்ரீதேவி இப்படித்தேன் போனிகப்பூரை திவாலாக்கிட்டாளாம்)

அட ப்ரிண்ட் மீடியாவை கூட புரிஞ்சுக்கலாம். அவிகளுக்கு ப்ராக்டிக்கலா பல நிர்பந்தங்கள் இருக்கு. ( விற்பனை வருமானத்தை நம்பி எவனும் பத்திரிக்கை நடத்தலை- ப்ரைவேட் அட்வர்ட்டைஸ்மென்டை மட்டும் நம்பி ..ரெம்ப கஷ்டம்.

ஒதகாத அடையாள அட்டை வாங்க இந்த டிபிஆர் ஓ ஆஃபீஸ்ல பண்ற அலப்பறை இருக்கே.அப்பப்பா.. இதைவிட பேசாம திருப்பதியில மொட்டை அடிக்க போயிரலாம். ஆதாரமா பவர் பிடுங்கிட்டா டப்பா டான்ஸ் ஆடிரும்.

ஆனால் இந்த வலையுலகத்துல கூட அணு உலைக்கு ஆதரவா எளுதறாய்ங்கன்னா புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

இதுக்கு காரணம் அறியாமையா? அல்லது வெகுஜன ஊடகங்களின் பிரபாவமா? 3 ஆவது நாய் சைக்காலஜியா ? நெஜம்மாவே புரியலை.

இந்த ரேஞ்சுல ஆங்காங்கே ஒரு சில விசயங்க கண்ல பட்டாலும் இந்த மேட்டர் கொஞ்சம் இர்ரிடேட் பண்ணிருச்சு. அதை மட்டும் பார்த்துருவம்.

//அன்பு நண்பர்களே, சமூக வலை தளங்களில் தொடர்ந்து 'கூடங்குள கூப்பாடு' போட்டு வரும் தோழர்களுக்கு இந்த பதிவின் மூலம் பதிலளிக்க விரும்புகிறேன்//

மேற்படி பத்தியில வர்ர கூப்பாடுங்கற வார்த்தை ரெம்பவே இர்ரிட்டேட் பண்ணிருச்சு. இந்த ஒரு வார்த்தைதான் இந்த பதிவுக்கே உந்து சக்தி.

என்னா நக்கலு?

//இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றிய அனுபவம் உடைய திரு. சி.ஜெயபாரதனின் வார்த்தைகளை அப்படியே இங்கு தருகிறேன் //

நான் கூட சுய இன்பம் ,ஹோமோ ,ஓரல் செக்ஸ்லருந்து , தண்ணி கஞ்சான்னு எல்லாத்தையும் ட்ரை பண்ண பார்ட்டிதான் .

ஸ்வப்ன ஸ்கலிதத்துல சிக்காம தப்பிச்சேன். எய்ட்ஸ் கூட போடா பொங்கின்னுருச்சு, ஆல்க்கஹாலிக் ஆகல்லை. கஞ்சாவுக்கு அடிக்ட் ஆகல்லே.

அதனால நான் எனக்கு ஏதும் ஆகலை.அதனால நீங்களும் சுய இன்பம் ,ஹோமோ ,ஓரல் செக்ஸ்லருந்து , தண்ணி கஞ்சான்னு எல்லாத்தையும் ஒரு ரவுண்டு பார்த்துருங்கன்னு சொல்ல முடியுமா? தப்பித்தவறி சொல்லி அதை நாலு பய புள்ளைக ஃபாலோ பண்ணிட்டா அதுக்கு ஆரு பொறுப்பு?


//இதை படித்த பின்பாவது, இதற்கு பின் இருப்பது பெரிய 'உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு அரசியல் சதுரங்கம் என்பதைப் புரிந்து அமைதி காக்க..! //

அணு உலை விவகாரத்துல உள் நாட்டு வெளி நாட்டு அரசியல் சதுரங்கம், மூணு சீட்டு, உள்ளே வெளிய எல்லாம் இருக்கிறது எங்களுக்கும் தெரியும்

//இப்போதும் திரு. ஜெயபாரதனின் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார். மருமகனும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார். //

இவரு என்ன சொல்லவராருன்னா .. மேற்படி புதல்வி - மருமகன் ஹார்லிக்ஸ் பேபி கணக்கா இருக்காய்ங்க.அதனால அணு உலையால எந்த ஆபத்தும் இல்லைன்னு ஸ்தாபிக்க முற்படறாரு.

ஹைதராபாத்ல இப்பம் கூட ஸ்வான் ஃப்ளூ கேஸு வருது.டாக்டருங்க ட்ரீட் பண்றாய்ங்க. போன சீசன்ல ட்ரீட் பண்ண ஒரு டாக்டர் டிக்கெட் போட்டுட்டாரு. ஸ்வான் ஃப்ளூ தானா வர்ர தலைவலி மாதிரி. கொய்யால அணு உலை அப்டியில்லையே.. ஹைவேல போற சனியனை வீட்டு ஹாலுக்கு கூப்பிடற மாதிரியாச்சே..

//ஒரு முக்கிய குறிப்பு: இவர்கள் எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை. //

இந்த பாராவுல அவர் சொல்ல வர்ர விசயம் என்னடான்னா அந்த ரெண்டு பேருக்கு கதிரியக்கம் பாதிப்பை தரலை. அதனால ஆருக்கும் பாதிப்பு இருக்காதுங்கறதுதேன். என்ன ஒரு கேணத்தனம் பாருங்க.

//“அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது so called அறிஞர்களின் கோமாளித்தனம். //

பீடி சுத்தறவுகளுக்கெல்லாம் காச நோய் -புற்று நோய் வருதுன்னு ஆரும் சொல்லமுடியாது.ஆனால் மேற்படி நோய்கள் பீடிசுத்தறவுகளை அதிக சதவீதத்துல பாதிக்குதுன்னு தான் சொல்றாய்ங்க.


//புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிஎறிந்து விட்டு//

பாட்டி கதை இல்லாததாலதான் கண்ணா .. 13 வயசு பெண் எல்லாம் கர்பமாகுது..

//சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.//
வரப்போற அழிவுக்கு நம்ம நம்பிக்கையோட வேலையே இல்லை. அதும்பாட்டுக்கு வந்தே உடுங்கறதுதேன் சோகம்.

// கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ? அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ? //

பாவாடை நாடாவை ஒரே இடத்துல இறுக்கி கட்டினா ஸ்கின் கான்ஸர் வருதுன்னா அதுக்கு புள்ளி விவரம் தேவையில்லை.

அணு உலையால கான்சர் வருதுன்னா மட்டும் புள்ளி விவரம் தேவை. நல்லா கேட்குறாய்ங்கடா டீட்டெய்லு

//அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்.
மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக் கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அந்தப் புற்று நோய்கள், உடல் ஊனங்கள் அணு உலைக் கதிரடியால் உண்டாயின என்பது ஆதாரமோடு நிரூபிக்கப் பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஆறாவது விரல் முளைத்த விந்தைகளைப் பற்றி மக்களிடம் புகாரிடலாம்.//

கட்டிய பின், கட்டுவதற்கு முன் எல்லாம் கணக்கெடுக்கலாம். (ஏற்கெனவே எடுத்தும் இருக்காய்ங்க) கணக்கெடுக்க ஆளிருக்கும்.ஆனால் " நடக்கக்கூடாதது நடந்து தொலைச்சுட்டா" ஆளும் இருக்கமாட்டாய்ங்க.கணக்கும் இருக்காது.

//உலகத்திலே இப்போது இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்று செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும். //

அணு ஒப்பந்த மசோதா பற்றியும் - அதை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டுகள் ஆதரவை வாபஸ் வாங்கியது பற்றியும் - குதிரை பேரம் நடத்தி ஆட்சியை தக்கவைத்துகொண்டதை பற்றியும் அண்ணாச்சிக்கு தெரியாது போல.

ஒரு ஒதகாத போபால் விஷ வாயு மேட்டர்லயே எம்மாம் கறாரா நஷ்ட ஈடு வாங்கினாய்ங்கன்னு பார்த்துக்கிட்டு தானே இருக்கோம்.

//ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.//

உண்மையில மேற்சொன்ன ஆசாமிகளை விட கட்டுரையாளர் தான் ரெம்ப பயமுறுத்தறாரு.. இந்த அளவு பொறுப்பற்ற எழுத்துக்களை எழுதும் ஆசாமிகள் வாழும் நாட்டில் வாழ்வதை விட தாளி எல்லா அணு உலையும் வெடிச்சு நாம அல்லாரும் செத்து தொலைச்சா என்னங்கற அளவுக்கு கடுப்பாகுது. அதனால இந்த உதவாக்கரை கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதை இத்துடன் நிறுத்துகிறேன்.


Friday, August 26, 2011

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

அண்ணே வணக்கம்ணே !

சர்வ நிச்சயமா இந்த பதிவுல மொக்கை தான் போட போறேன். இதுபிடிக்காதவுக ஸ்ட்ரெய்ட்டா அவன் அவள் அது தொடருக்கும் , ஜோதிட பால பாடம் பதிவுக்கும் போயிரலாம். மொக்கை தான் எங்கள் சாய்ஸுங்கறவுக இந்த பக்கத்துல நில்லுங்க.

கிட்ண பரமாத்மா ஜொல்வாரு " பரதர்மம் எவ்ள உயர்ந்ததா இருந்தாலும் சுதர்மம் எவ்ள தாழ்ந்ததா இருந்தாலும் சுதர்மமே பெஸ்டு" அது நெஜம் தான்.. வழக்கம் போல அவன் அவள் அது -ஜோதிட பால பாடத்தோட நின்னிருக்கலாம்.

ஆத்தாவுக்கு லீவு விட்டு - ரா முச்சூடும் மன்னாடி அல்லாருக்கும் ஆட் சென்ஸ் பதிவை ஒர்க் அவுட் பண்ணினது தண்டமா போச்சு.( வெட்டி ..லு நித்திரைக்கு கேடு மாதிரி)

இண்ட்யாராக்ஸ் மூலமா கூகுல் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் வாங்கற மேட்டர் ( நேற்றைய பதிவு) அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரா? அல்லது சனம் அசால்ட்டா இருந்துட்டாய்ங்களா தெரியலை. மொத்தத்துல நேரம் வீணாபோச்சு. ஹிட்ஸில் எள்ளளவு கூட வித்யாசமில்லை.

என்ன ஒரு ஆறுதல்னா இரண்டு புதுவரவுகளின் மறுமொழிகள்.

ரா தூக்கம் போச்சு.காலையில தூங்க முடியலை.மதியம் தூங்கமுடியலை. சாயந்திரம் 5மணிக்கு தூங்கி ராத்திரி 9 மணிக்கு எந்திரிச்சன். நமக்கு சனங்களோட இன்டராக்ட் ஆகறது ரெம்ப முக்கியம் . வெளிய இறங்கினம் சரக்கடிக்கிற பார்ட்டி தான் கிடைச்சாரு. கூட போயி ஒரு ஃபேண்டாவும் ரெண்டு சிகரட்டும் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன்.

பால பாடம்ங்கற பேர்ல இந்தாளு கட்டற துணுக்கு தோரணத்தை படிக்க இத்தீனி சொந்தகதையை கேட்கனுமான்னு கோச்சுக்காதிங்கண்ணா. பாரதி சொன்னாரு " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,கவிதை" நம்ம ஸ்டேட்மென்ட் " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,ஜோதிடம்.

ஆன்லைன் ஜோதிட ஆலோசனையில சில்லறை தாராளமாகவே புரண்டாலும் நமக்கு தொழில் ஆன் லைன் ஜோதிட ஆலோசனைங்கற ரேஞ்சு வந்தது ஒரு குடும்ப தலைவனா சந்தோசத்தை தந்தாலும் நாட்டுக்குழைத்தல் எல்லாம் பெண்டிங் ஆயிட்டே வருது. இது கில்ட்டிய தருது. ஆக இன்னைலருந்து இங்கே - இப்பம் - நாட்டுக்கு உழைக்க முடிவு பண்ணியிருக்கன்.

இந்தியாவுக்கு இது ஒரு சந்தியாகாலம். ( சூரியாஸ்தமனத்துக்கும் சந்திரோதயத்துக்கும் இடையிலான இடைவெளி) இந்த சமயம் நம்மை கருத்தை பதிவு செய்யலின்னா எதிர்காலத்துல ரெம்ப மொக்கையாயிருவம். இந்த காலத்துலயே இந்த நிருபர் பசங்க கேட்கிற வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம அரசியல்வாதிங்க பேந்த பேந்த முழிக்கிறாய்ங்க.

நாம நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதி ஆனா கொத்துபரோட்டா போட்டுருவாய்ங்க போல. " இன்னிக்கு கிழிச்சுக்கறியே 2009 - 2011 பீரியட்ல ஆன்லைன்ல சோசியம் சொல்லி கல்லா மட்டும் தானே கட்டினேன்னு கேட்டுட்டா என்ன பண்றது?

அதனாலதேன் கருத்து கந்தசாமி கணக்கா நம்ம கருத்துகளை அவ்வப்போது சொல்லிரலாம்னு உத்தேசம்.

1. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு செப் 9 அன்று மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு.

மனிதர்கள்னாலே குறைபட்ட சிந்தனை ( ஈகோ) - இயற்கையிலருந்து விலகி வந்துட்டதால குறைப்பட்ட உயிரியல் திறன் ( ஐ மீன் கில்மாலருந்து - மோப்பம் - கேட்புத்திறன் வரை) . இதுல தாளி மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எல்லா அமைப்புமே குறைபட்டதுதேன்.

குறைபட்ட திறன் கொண்ட - குறைப்பட்ட மனிதர்கள் ஏற்படுத்தின - குறைப்பட்ட அமைப்பு தரும் தீர்ப்புகள் மனித உயிரை பறிக்கும்னா அதை ஏத்துக்க முடியலை.

தூக்கு தண்டனைங்கறது சோனியாவுக்கு விதிக்கப்பட்டாலும் மொத ஆளா எதிர்ப்பு தெரிவிப்பேன் என்பதை இங்கன பதிவு செய்ய விரும்புகிறேன்.

மேலும் இத்தினி காலம் சிறையில் வாடிய அந்த பார்ட்டிங்களை தூக்குலயும் போட்டா ரெட்டை தண்டனை ஆயிருமில்லியா? குற்றத்திலான அவர்கள் பங்கை அரசு தரப்பு நிரூபிச்சதுலயே நிறைய ஓட்டை இருக்கிறதா சொல்லும் போது தூக்கு தண்டனைல்லாம் கொலைக்குற்றம்யா.


2.ஜன் லோக் பால்

இந்த மேட்டர்ல ரெஸ்பாண்ட் ஆற சனத்தை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். அன்னா அசாரே உலகத்தை உய்விக்க வந்த ரட்சகர் - அன்னா வாக்கெல்லாம் அருள் வாக்குங்கறது க்ரூப் நெம்பர் ஒன்.

இன்னொரு பகுதி சனம் ஹசாரே பின்னாடி பா.ஜ.க /மதவாத சக்திகள் இருக்கு. அமெரிக்கா இருக்கு. பார்லிமெண்ட் தான் சுப்ரீம். பார்லிமெண்டை ஹசாரே ப்ளாக் மெயில் பண்றாரு - அசாரே அத்வானிக்கு ஒன்னு விட்ட மச்சினன் - சாதி அமைப்பை ஆதரிக்கிறவர்னு கிழிச்சுட்டு இருக்காய்ங்க.

ரெண்டுமே பார்ஷியலா நெஜமா இருக்க வாய்ப்பு இருக்கு. பார்லிமென்டு தான் சுப்ரீமுன்னு பதர்ராய்ங்க. பார்லிமெண்டுன்னா என்ன? எம்.பிங்க. இவிகளை பார்லிமென்டுக்கு அனுப்பினது சோனியா ,ராகுலுக்கு ஜல் ஜக் போடவோ - துட்டுக்கு ஓட்டு போடவோ , கேஷுக்கு கேள்வி கேட்கவோ இல்லை.

இந்திய சனத்தொகை மொத்தமும் பார்லிமெண்டுக்குள்ள நுழைய முடியாது -அக்காமடேட் பண்ணமுடியாதுன்னு தான் இவிகளை அனுப்பினோம். இவிக சதா சர்வ காலம் நம்மோட இன்டராக்ட் ஆகி நம்மை கருத்து என்னனு தெரிஞ்சுகிட்டே இருக்கனும். இதையெல்லாம் பார்லிமென்டுல பேசனும் -சட்டமாக்க ட்ரை பண்ணனும்.

இவிக பொதுசனத்தோட சேவகர்கள் - வேலைக்காரவுக. வேலைக்காரன் சரியில்லை . தினம் தினம் சரக்கடிச்சுட்டு மட்டையாயிர்ரான்னா அவனை வேலைக்கு வச்ச எஜமான வாய்ல விரல் போட்டுக்கிட்டு உட்கார முடியுமா?

சரி கொய்யால இவனை நம்பினா வேலைக்காகாதுன்னு தன் வேலைய தானே செய்துக்க கோதாவுல இறங்கிர்ரான். ஜன நாயகத்துல ஜனம் தேன் சுப்ரீம். ( சுப்ரீம்கோர்ட்டு கூட சுப்ரிம் கடியாதுங்கோ)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நம்மில் குற்றம் குறை இல்லாதவர்கள் ஆருமில்லை. அதனால ஒட்டு மொத்தமா ஜானகிராமன் உத்தமர். முருகேசன் அராத்துன்னு தீர்ப்பு சொல்ல முடியாது. சிவயசிவாவில் பதிவு போடும் போது ஜா.ரா நல்லவர். போலி முருகேசனா கழிசடை கமெண்டு போடும்போது கெட்டவர்.

ஆன்மீக பதிவுகள் போடும்போது முருகேசன் நெல்லவரு. கில்மா ஜோக்கு போட்டு ஹிட் பொறுக்கறச்ச கெட்டவரு. அந்த மேரி அசாரே ஊழலை எதிரிக்கிறப்ப ஆதரிப்போம். சாதியை சப்போர்ட் பண்ணா கிழிப்போம்.


3.மத்திய அரசின் ஆயுள் -இடை தேர்தல்கள்

நாட் நாட் பீரியட்லயே சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு சோதிட பதிவு போட்ட பார்ட்டி நாம இன்னைக்கு உள்ள அரசியல் சீதோஷ்ண நிலைய பார்த்தா மத்திய அரசு இந்த நவம்பர் 8 வரை கூட தாங்காது போல. சீக்கிரமே இடைத்தேர்தல் வரும்னு பட்சி சொல்லுது.