Monday, August 8, 2011

அவன் அவள் அது : 11?


அண்ணே வணக்கம்ணே.. ஆத்தாவுக்கும் நமக்கும் எப்படி கனெக்சன் ஆச்சு - ஆத்தாளை நாம எப்படி அப்ரோச் பண்ணோம் -ஆத்தா நம்மை எப்படி அப்ரோச் பண்ணாள்?

நம்ம டீலிங் எப்படியிருந்தது -ஆத்தாவுக்கு நாம என்ன கொடுத்தோம் ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்தா கொடுத்துக்கிட்டிருக்காங்கறதை பத்தி ஒரு தொடர்பதிவு போட நினைச்சு ஆரம்பிச்சோம். அது ஏனோ எதுக்கோ எப்படியோ அப்படியே நின்னுப்போச்சு. ஆமை முட்டை வச்ச இடத்தை நினைச்சா அது பொரியுமாமே அதுமாதிரி ஆத்தா எங்கருந்தோ நம்மை ஆப்பரேட் பண்றாள். நாமளும் ஆடிக்கிட்டிருக்கோம்.

தொடரை எந்த லைன் அப்ல ஆரம்பிச்சோம்.எதுவரை வந்ததுனு கூட ஞா இல்லை. நாம என்ன வீக்லியில தொடரா எழுதறோம் சினாப்சிஸ் -வச்சுக்கிட்டு போன வாரம் என்ன எழுதினோம்னு பார்த்துக்கிட்டு எழுத .

பணம் காசு வர மந்திரம் கேட்டோம் - பீஜங்களின் தொகுப்பே தந்துட்டாய்ங்க. ஜெபிக்க ஆரம்பிச்சோம்.ஸ்தூலமா லெமன் - மஞ்ச தண்ணி (அப்பாறம் பட்டை லவுங்கம் சேர்ந்துக்கிச்சு)

உடுப்பி ஹோட்டல் சாப்பாடு கணக்கா இருக்கவேண்டிய சாப்பாட்ல தொடர்ந்து காரம் மஞ்ச தண்ணிய டேஸ்ட் பண்ணி பார்த்தா பயங்கர காரம். அப்பாறம் மஞ்ச தூள் ப்ராண்டை மாத்திட்டம்.

மஞ்ச தண்ணி வைக்க லேட்டானா ரத்த காயம் அ ருத்ர தாண்டவம். மேற்படி மந்திரத்துக்குரிய ஐ மீன் ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரிய அம்மன் பேரு புவனேஸ்வரி. முன் அனுமதியில்லாம இந்தம்மாவோட அந்தப்புரம் வ்ரை போய் தகவல் சொல்லும் அதிகாரம் படைச்சவுக ரெண்டு பேரு ஒருத்தர் ஆஞ்சனேயர். இன்னொருத்தர் கிளி முகம் கொண்ட ரிஷி (பேர் என்னங்கண்ணா? மறந்து போச்சு)

ஒரு நா ஒரு கிளி நம்ம போர்ஷனுக்குள்ள நுழைஞ்சுருச்சு.ஒரு 9 நாள் தங்கியிருந்துச்சு. நாம தியானம் பண்ணிக்கிட்டிருக்க ( ஐமீன் பீஜ ஜெபம்) பாம்பு வந்துருச்சு. எட்செட்ரா எல்லாம் சொல்லியிருப்பன்.

இந்த செனேரியோல நடந்த ஒரு சம்பவம் மட்டும் ரெம்ப த்ரில்லா இருக்கும். ஒரு இடைவெளிக்கப்புறம் இந்த தொடரை படிக்கிற உங்களுக்கும் ஒரு இன்வால்வ்மென்ட் வரும்.

அப்படியே நம்மை உரசிப்பார்க்கலாம்னு ஆருக்குனா எண்ணம் இருந்தா தயவு செய்து விட்டுரனும்னு தேன் அந்த சம்பவத்தை சொல்றேன். அனானி கமெண்ட் போடற பார்ட்டி என்னமோ அநியாயத்துக்கு "அவாளை" கோர்த்து விடுது.

அவாள்ளாம் ரெம்ப சென்சிட்டிவ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ங்கறாப்ல அவிக நம்மை உரசிப்பார்த்து மேட்டர் இன்னான்னு புரிஞ்சுக்கிட்டு ல்லாம் அபவுட் டர்ன் அடிச்சி பல காலம் ஆச்சு. மேலும் இழந்தவந்தேன் தலையில அடிச்சிக்கிட்டு அழுது கூப்பாடு போடுவானே தவிர அடிச்சுக்கிட்டு போனவன் கமுக்கமாதேன் இருப்பான்.இதை ஆருனா அந்த அனானிக்கு புரியறாப்ல சொல்லுங்க.

சரி சரி ஆத்தா மேட்டருக்கு வந்துர்ரன். வருசம் 2000 மாசம் ஜூனுக்கு பிறகான ஏதோ ஒரு மாசம். வாணியம்பாடியில அக்பர் கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு வந்துட்டம். தியாகய்யருக்கு உஞ்ச விருத்தி மாதிரி நமக்கு சோசியம். ஒரு நாளைக்கு அம்பதோஅறுவதோ கிடைச்சா போதும். ஒழுங்கு மரியாதையா கோட்டையில சேர்த்துட்டு நகர்வலம் ஆரம்பிச்சுருவம். நாட்டு நலன் நாடி சாக்ரடீஸ் கணக்கா இழுத்து வச்சு பேச ஆரம்பிச்சுருவம்.

அப்படி நகர்வலம் வரும்போது அங்கங்கே ஒவ்வொரு க்ரூப்ல டச் ஆயிருவம்.அப்படி ஒரு க்ரூப்ல டச் ஆன பார்ட்டியை பத்தி ஒரு அறிமுகம். நிறம் ரஜினிக்கு சாஸ்தி -வி.காந்துக்கு கம்மி. நடுத்தர உயரம். எப்பவும் இன்செர்ட் பண்ணின சட்டை. புதுசா சொந்த வீட்டை இடிச்சு கட்டவும் ஆரம்பிச்சிருந்தாப்ல. ஜாதகம்னா மிதுனலக்னம் 2 , 8 ல ராகு கேது.

எவனோ ஒரு கிரானைட் காரனுக்கு எதையோ சொல்லப்போக அது எக்குத்தப்பா ஒர்க் அவுட் ஆகி ஃபீஸு பத்தி கேட்டா ரூ500ல் ஆரம்பிச்சு பல ஆயிரம் வரை வாய்க்கு வந்ததை சொல்லுவாப்ல. நாம எதையும் கண்டுக்கறதில்லை. பயங்கர பீலா விடுவான்.இதுல நம்மையும் இழுத்துக்கறது "நாமல்லாம் நினைச்சா"ன்னு ஆரம்பிச்சு எதை எதையோ உளற வேண்டியது.

ஊரு விட்டு ஊருவந்த இளைப்பு களைப்பெல்லாம் தீர்ந்து க்ளாக் வைஸ் லைஃபுக்கு வந்துட்ட தைரியத்துல மார்க்கெட் சவுக்ல மாடியில லிஃப்ட் சைஸுல ஒரு ஆஃபீஸ் ரூம் ஒன்னு அமைய கடை விரிச்சுட்டம்.

அந்த சமயம் பார்த்து நம்ம கணிப்பு உண்மையாகி சி.எம் ஆன புரட்சி தலைவி ரெசிடென்ஸ்லருந்து ஒரு தேங்க்ஸ் கார்டு வந்தது. இந்த தகவல் தீயா பரவலின்னாலும் ஒரு மாதிரியா பரவிருச்சு. மேற்சொன்ன பார்ட்டி நம்ம ஆஃபீஸுக்கு வந்தான்.

வந்தவன் மொத நாள் ஒழுங்கு மரியாதையா ஜெ மேட்டர்ல சோசியம் பலிச்சதுக்கு வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டான். ஆனா அடிக்கடி வர ஆரம்பிச்சவன் ஏதோ அவருதான் ஜெ ஜாதகத்தை கணிச்சு ஓரலா சொன்னாப்லயும் நாம ஏதோ படியெடுத்து அனுப்பினாப்லயும் உளறி கொட்ட ஆரம்பிச்சுட்டான்.

"கொய்யால ..மூடறா ரெண்டையும்" ங்கறதுக்கு ரெம்ப நேரம் பிடிக்காதுதான். ஆனால் அதென்னமோ ஒரு வித தயக்கம். எங்க பக்கத்துல மூ முலாஜானு சொல்வம்.அதை பார்த்து சகிச்சுக்கிட்டிருந்தன். போக போக அவன் வரவு பேச்செல்லாம் தலை மூசனையாயிருச்சு.

ஆத்தா என்னடி இது சோதனைன்னு புலம்பவே ஆரம்பிச்சுட்டன். ஆத்தா கொடுத்த தீர்ப்பு இருக்கே.யப்பா.. என்ன பிரச்சினையோ என்ன இழவோ விசாக பட்டினம் கடற்கரையில பிணமா ஒதுங்கினான் ஆசாமி.

ஏன்?ஏன்? ஏன்?னு பல ராத்திரி என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். உலக வாழ்க்கைங்கறது பத்து வட்டிக்கு வாங்கி செலவழிக்கிறாப்ல. ஆத்தா நேஷ்னலைஸ்ட் பேங்க் மாதிரி. குறைஞ்ச வட்டிக்கு ( என்ன கொஞ்சூண்டு பக்தி -விஸ்வாசம்) தர தான் காத்திருந்தும் -சனம் கொத்து பரோட்டா போடற பத்து வட்டிக்கே
அலை பாயறதை பார்த்து அரண்டு தன்னை அண்டினவுகளை தக்க வச்சுக்க தன் அருமை பெருமைய உணர்த்த எந்த ரேஞ்சுக்கு வேணா போயிர்ராங்கறது புரிஞ்சது.

இப்ப அனானி கமெண்ட் ஆசாமியையே எடுத்துக்கங்க. இப்பத்துக்கே ஆசனத்துலருந்து குடம் குடமா ரத்தம் கொட்டிக்கிட்டிருக்கும்.ஆனால் அந்த மன்சன் வீம்புக்காவ தன் சில்மிசத்தை தொடர்ந்துக்கிட்டே இருக்கான். இந்த கிராக்கியை எல்லாம் ஆஃப் பண்ணனும்னா விஜயகாந்த் மாதிரி ஆஃப் அடிக்கனுங்கற அவசியம் கூட இல்லை.ச்சொம்மா ஜுஜுபி.

கெட்டவனுக்கு நாம கெட்டவனாகி என்னத்த பண்ணிர முடியும்? ஆத்தா நினைச்சாள்னா வாய் வழியா கழியவும் -ஆசனம் வழியா திங்கவும் வச்சிருவா.அதையெல்லாம் நாம பண்ணனும்னா எத்தீனி ஆப்பரேஷன் பண்ணனும்.. அதெல்லாம் நடக்கிற கதையா? அதனாலதேன் ஃப்ரீயா உட்டாச்சு. நம்மால முடிஞ்ச எச்சரிக்கை எல்லாம் பண்ணியாச்சு. இனி நாம அம்பேல். தி பால் ஈஸ் இன் தி கோர்ட் ஆஃப் அம்பாள்.

Sunday, August 7, 2011

கற்பனைக்கும் எட்டாத வக்கிரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
வக்கிரம்ங்கற வார்த்தைக்கு ஜோதிஷத்துல ரெம்ப இம்பார்ட்டன்ஸ் இருக்கு. கடிகார முள் ரைட் டு லெஃப்ட் சுத்துது.இதை க்ளாக்வைஸுங்கறாய்ங்க. இதுக்கு எதிர்பதமா சுத்தறதை ஆன்டி க்ளாக் வைஸுங்கறாய்ங்க.

ஜோதிஷத்துலயும் ராகு கேதுக்களை தவிர்த்து இதர கிரகங்களோட சுழற்சி க்ளாக் வைஸுதேன். ராகு கேதுக்கள் மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ். க்ளாக் வைஸுங்கறது ச+க்ரம் அதாவது ச - நல்ல , க்ரம் - மெத்தட் /முறை. இதுக்கு மாறா (ஆன்டிக்லாக்வைஸ்) நடக்கிற சுழற்சியை வ+க்ரம்னு சொல்றாய்ங்க.

கிரகங்கள் வக்ரமாகும் போது தங்கள் இயல்புக்கு எதிர்பதமான பலனை தரும்ங்கறது விதி. உம். நம்ம ஜாதகத்துல 9 ல சனி. அப்பன் கூலிக்காரனா இருக்கனும். ஆனால் அவரு வக்ரம். அதனால அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாரு.

இந்த பதிவு ஜோதிஷத்திலான வக்ரங்களை பற்றியது அல்ல.மனித மனங்களிலான வக்ரங்களை பற்றியது. சமீபத்துல ஒரு கிழவனாரை பார்த்துட்டு வர போயிருந்தம். தொண்டையில ஒட்டை போட்டு ஒரு ட்யூப் செட் பண்ணியிருக்க புனல் வழியா கஞ்சி போகுது.

கூட வந்த பார்ட்டிக்கிட்டே 'இன்னாபா கோராமை இதெல்லாம்"னு ஃபீல் பண்ணேன்.

அதுக்கு அவரு " சாமீ! நீங்களா இப்படி பேசறது . கடவுளென்னா டீ மாஸ்டரா டீ கேட்டவனுக்கு காபியும், காபி கேட்டவனுக்கு டீயும் மாத்தி கொடுத்துர"னு பஞ்ச் பேசற பார்ட்டி நீங்க. இவன் பாஸ்ட் தெரிஞ்சா ஃபீல் பண்ண மாட்டிங்க.

இந்த நாதாரி வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டிருந்தப்போ ஒரு பெரிய மன்சன் பொஞ்சாதி விதவையானதுக்கு அப்பாறம் இவனுக்கு மாட்டிக்கிச்சு. அவள் அப்பமே பேத்தி எடுத்திருந்தா. கிழவனாரு செமை யூத்தா கீறாரு.

இந்த பிக்காலி ராத்திரி ஆன்டிய வேலை எடுத்துட்டு -ஆன்டி அசந்து தூங்கறச்ச விடியல்ல பேத்திய வேலை எடுக்கும் தெரியுமா உனக்கு"ன்னாரு.

ஓஹோ..மைண்டு வக்கிரமா போகும் போது மைண்டும் அதை ஃபாலோ பண்ணிரும் போல..ஹும் வக்ரங்கள்..

ஒரு லாயரு. கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்சாப்ல இருப்பான்.பல்லுல்லாம் சோழி. சோடாபுட்டி கண்ணாடிக்குள்ள முட்டை விழி. கையில் சதா புகையும் சிகரட். அஞ்சடி தொலைவுலயே குப்புனு தூக்கற வியர்வை நாற்றம்.

ஒரு நா மதியம் ஃபோன் பண்ணி வரச்சொன்னான். போனேன். ஹால்ல வெய்ட் பண்ணிட்டிருந்தேன்.அவிக சம்சாரம் வந்து "உள்ளே வரச் சொல்றாரு" ன்னு சொல்லுச்சு. சங்கடமாவே போனேன். தரையில பெட். பெட்டை தட்டி உட்கார சொல்றான். நாம தான் 'ஜெய் ஆஞ்சனேயாவாச்சே" ஆளை விடுன்னு தரையில உட்கார்ந்தோம்.

அப்ப அவன் ஒரு வேலை செய்தான். (தாய்குலம் மன்னிக்கனும் -இப்படியா கொத்த வக்ரங்களும் இருக்குன்னு கோடி காட்டத்தேன் இதை சொல்றேன்) அப்பத்தான் வேலை முடிச்ச காண்டமை எடுத்து வாயால ஊதி ரூம்புக்குள்ளாற பறக்க விட்டான். அது ஃபேன்ல பட்டு உவ்..........வே...

இந்த மாதிரி ஆயிரம் வக்ரங்களை வாழ்க்கையில பார்த்திருக்கேன். இதையெல்லாம் எழுத்துல கொண்டுவர பார்த்தா சனம் கல்லாலயே அடிச்சு கொன்னுரும். நான் என்னவோ விபரீதமா எழுதிர்ராப்ல ஒரு சிலருக்கு ஃபீலிங் இருக்கலாம். எழுதாத விஷயங்களோட கம்பேர் பண்ணா இதுவரை எழுதினதெல்லாம் ஜ்ஜுஜுபி.

இந்த மாதிரி நாத்தம் பிடிச்ச மேட்டர் எல்லாம் மண்டையில தேங்கி அகாலத்துல ஞா வந்து இம்சை கொடுக்கிறதால மேலோட்டமா வாச்சும் சுத்தி கரிச்சு வெளிய அனுப்பிர்ரது.

ஆரம்ப காலத்துல நான் ஒரு நாவல் எழுதினேன். சினிமா கதை மாதிரி சொல்றேனே.(காசா ,கால்ஷீட்டா)
பிரகாஷ் ராஜ் -சங்கீதா லவர்ஸ். ரெண்டு பேரும் ஏழைங்க.பிரகாஷ் ராஜுக்கு ஒரு ஆஃபர் வருது .சவுண்ட் ஃபேமிலில வீட்டோட மாப்பிள்ளையா போயிர்ராரு. சங்கீதா முட்டி மோத பிரகாஷ் ராஜ் வில்லத்தனமா பேசி அனுப்பிர்ராரு.சங்கீதாவும் பிரகாஷ் ராஜோட மனைவியும் ஒரே நேரத்துல கர்பம். ஒரே நர்சிங் ஹோம்ல பிரசவம். மனைவிக்கு குழந்தை செத்து பிறக்குது. சங்கீதாவுக்கு லட்டாட்டம் ஆண் குழந்தை .

பிரகாஷ் ராஜ் எத்தனையோ தமிழ்சினிமாக்கள் மாதிரி கையூட்டு கொடுத்து குழந்தையை மாத்திர்ராரு. ஆக சங்கீதாவின் குழந்தை பிரகாஷ் ராஜ் கிட்டே வளருது . பொஞ்சாதியும் செத்துப்போயிர்ரா. பதினெட்டு வருடங்களுக்கு பின்.

சங்கீதா தஸ்லீமா நஸ்ரின். மாதிரி எழுத்தாளராவோ - நம்ம ஹுசைன் மாதிரி ஓவியராவோ பெரும்புகழ் பெற்று ரிட்டர்ன்ஸ் ஃப்ரம் லண்டன். என்ன 18+18 = 36 வயசு முதிர் கன்னியா (?) சங்கீதாவோட மகன் ஒரு ரசிகனா நெருங்கறான்.

பிரகாஷ் ராஜ் பதறித்துடிக்கிறாரு. இது சங்கீதாவுக்கு டைம்பாஸா இருக்க .. வேணம்னே பிரகாஷ் ராஜ் மகனை (தன்) பைத்தியமா அடிக்கிறா. இதான் நாட்டு. க்ளைமேக்ஸ்ல விளக்கை அணைக்கறதுக்கு முந்தி அவன் தன் மகன் தான்னு சங்கீதாவுக்கு தெரியவரும். பைத்தியம் பிடிச்சுரும்.

நான் இந்த நாவலை எழுதின காலத்துல இன்டர் நெட் -ஃபேஸ்புக் -ப்ளாகர்லாம் கிடையாது. இருந்திருந்தா இது அப்பமே வக்கிரங்கள்ங்கறதலைப்புல அரங்கேறி பட்டைய கிளப்பியிருக்கும். இப்பம் இன்னொரு கேஸ் ஸ்டடி.

ஒரு பார்ட்டி . லவஸ் பண்ணி கண்ணாலம் கட்டறாரு.பொஞ்சாதிக்கு ஸ்பைனல் கார்ட்ல பிரச்சினை
( முதுகெலும்பு). இதுல கர்பம் வேற. எனக்கென்னவோ இந்த ஆளு துவைச்சு எடுத்துத்தான் இந்த நோயே வந்திருக்கும்னு தோனுது. ஸ்பைனல் கார்டு தேஞ்ச பொம்பளைய கர்பமாக்கிறாருன்னா என்ன அர்த்தம். இந்த ஆளு நிச்சயம் ஒரு நிம்ஃபோவா இருக்கனும்.

கடனை உடனை வாங்கி வைத்தியம் பார்க்கிறாரு. ( குற்ற மனப்பான்மை )பொஞ்சாதி காலி. விசம் குடிச்சு தற்கொலைக்கு ட்ரை பண்றாரு.(எஸ்கேப்பிசம்) அப்பம் அக்கம் பக்கத்துல உள்ள ஒரு கேரக்டர் வந்து ஆறுதல் சொல்லுது. நம்ம பார்ட்டி அந்த கேரக்டரை பிக் அப் பண்ணிருது.

எனக்கென்னவோ விசம் குடிச்சதே இந்த மாதிரி ஒரு கேஸை பிக் அப் பண்ணவோன்னு தோனுது. இப்பம் நிலைமை என்னடான்னா பார்ட்டி ஏதோ கோவில்ல அர்ச்சனை டிக்கெட் விக்குது.மாசம் பொறந்தா பஸ் சார்ஜி போக ரூ.1000 கைக்கு வருது. பொஞ்சாதி ஏதோ நாலு வீட்ல வேலை செய்து "கும்பம்" கொட்டுது. வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிற இந்த ஆசாமியோட பாஸ்ட் - நிம்ஃபோ தனம் - என்விரான்மென்ட் -ஏழ்மை -சோம்பல் - பொம்பளை சம்பாத்தியத்துல வவுத்தை ரொப்பறோங்கற தன்னிரக்கம் எல்லாம் சேர்ந்து மன நோயாளியாவே ஆக்கிருச்சு.

தினசரிகள்ள பார்த்தா பூஜாரி,ஃபாதர்,சாமியார்லாம் பொம்பளைங்க கிட்டே எக்கு தப்பா நடந்துக்கிட்டு போலீஸ்ல மாட்டறது தொடர்கதையா இருக்கு. இதுக்கு என்னடா காரணம்னா..

வீடுன்னு இருந்தா அடுப்பிருக்கும்.சமையல் நடக்கும்.புகை வரும். அந்த புகை வெளிய போக புகை கூண்டு இருக்கனும். இல்லாட்டி என்ன ஆகும் வீடெல்லாம் புகை சுத்திக்கும்.அதை அவசரமா வெளியேற்ற ஃபேனை ஹை ஸ்பீட்ல வச்சா சொல்லவே வேணா.நாறிரும்.

மனுஷன்னா அவன் பாடியோட சென்டர் /மைண்டோட சென்டர் எல்லாமே செக்ஸுதேன். இந்த சென்டரை விட்டுட்டு - ஐ மீன் ஜெயிச்சுட்டதா பாவிச்சு - தங்களோட பாடியில இருக்கிற அந்த உறுப்பு வெறுமனே உச்சா போறதுக்குத்தேன்னு ஆட்டோ சஜஷன் கொடுத்துக்கிட்டு வாழ்ந்து கிட்டிருந்தாலும் சமையல் நடக்கும் ( காம நினைவுகள்) புகை வரும் ( பேச்சு /பாடி லேங்குவேஜ்/கனவுகள் / செயல்பாடுகள்) இதையெல்லாம் விரட்ட ஹை ஸ்பீட்ல ஃபேன் போட்ட மாதிரி ஆன்மீகத்தை கொண்டு வந்து குழப்பினா
எதிர்க்க இருக்கிறது கிழவியா -கான்சர் பேஷண்டான்னெல்லாம் உறைக்காது.

ஆஃப்டர் ஆல் கிட்னி தன் செயல்திறனை இழந்தாலே -ஆல்புமின் -யூரிக் ஆசிட் -இத்யாதியெல்லாம் கச்சா முச்சான்னு ரத்தத்துல கலந்துருது.

அப்படியா கொத்தது மூளை /பாடி காமக்கழிவுகளை வெளியேற்றலின்னா டோட்டல் மைண்ட் செட்டும் ஸ்பாயில் ஆயிரும். அப்பாறம் பார்வை- சொல் -செயல் எல்லாமே காமமயமாயிரும்.

வக்கிரங்களை எழுத்தாவோ ஓவியமாவோ வெளிப்படுத்திர்ரது நல்ல உத்தி. இல்லின்னா பைத்தியக்கார ஆஸ்பத்திரிதேன்.நம்ம ப்ளாக் & சைட்ல ஆபாச கமெண்ட் போடற பார்ட்டியை இன்னம் விட்டு வச்சிருக்க காரணம் இதுதேன். மனித நேயம். இந்த பதிவை மாஞ்சு மாஞ்சு அடிக்கிற நேரத்துல சைபர் கிரைமுக்கு ஒரு மனு அடிக்க எவ்ள நேரம் ஆகும்ங்கறிங்க..

Saturday, August 6, 2011

ஆண் பெண் வித்யாசம்:விரய பாவம்


அண்ணே வணக்கம்ணே ..

ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்ல கடைசி அத்யாயம் இது. விரய பாவ காரகத்வங்கள் என்ன?

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள் இத்யாதிய காட்டுவது விரய பாவம். பொதுவிதிப்படி பார்த்தா இந்த பாவம் காலியா இருக்கிறது நல்லது. காலியாவே இருந்தாலும் இந்த பாவாதிபதியோட நிலைய பொருத்து மேற்படி சமாசாரங்க அதும்பாட்டுக்கு அது நடக்கும்.

உபரியா இந்த பாவத்துல கிரகங்கள் வேற இருந்தா கில்மா, தீனி,தூக்கம் இத்யாதி டபுள் ஆகவும் வாய்ப்பிருக்கிறதால இப்படி ஒரு விதியை ஏற்படுத்தியிருக்கலாம். இருந்தாலும் இன்னொரு சந்தர்ப்பத்துல இங்கன சுபகிரகங்கள் இருந்தா நல்லதுன்னும் ஒரு விதி சொல்லப்படுது.

சுபகிரகங்கள்னா நைசர்கிக சுபர்களா? லக்னாத் சுபர்களான்னு ஒரு கேள்வி வரும். உதாரணத்துக்கு குரு பாவியாக உள்ள ஒரு லக்னம். விரயத்துல குரு உட்கார்ராருனு வைங்க.

குரு சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற செய்யும் ஒரு கிரகம். எனவே ஜாதகர் தூக்கம்,தீனி,செக்ஸ் எல்லாத்துலயும் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற ட்ரை பண்ணுவாரு.

ஆனால் இவரோட லக்னதிபதி பாபகிரகம்னு வைங்க.அப்ப இவரோட மைண்ட் செட் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானதா இருக்கும். நினைப்பது ஒன்று செய்வது ஒன்று. இது மனக்குழப்பத்துக்கு ஹேதுவாகி எலி தரைக்கிழுக்க ,தவளை தண்ணிக்கிழுத்த கதையாயிரும். இந்த முரண்பாடு ஓவரா போனா மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கூட வரலாம் ( அன்னியன் பார்த்திங்கல்ல)

இதுவே ஒரு லக்னத்துக்கு குரு சுபர், அவரேவிரய பாவத்துல உட்கார்ந்தாருன்னு வைங்க.அப்ப எண்ணமும் செயலும் ஒன்னா இருக்க வாய்ப்பு ஏற்படுது.ஆக லக்னாத் சுபர்கள் இங்கன உட்கார்ரதே நல்லது.

பாபர்கள் உட்காரும்போது அவர்களது தீனி,செக்ஸ் இத்யாதி சாஸ்திர விரோதமானதா இருந்தாலும் அவிக மனசு ஒப்பி அதன் அடி நடக்கும்போது அவர்களது செயல் சட்டவிரோதமா இருக்கும் பட்சத்தில் கைக்கு காப்பு வரலாமே தவிர மனக்குழப்பம் - காம்ப்ளெக்ஸ் இத்யாதிக்கு சான்ஸிருக்காது.

இது ஆண் பெண் அனைவருக்கும் பொருந்தக்கூடிய விஷயம்.சரீ........இ இ வித்யாசம்னு தலைப்பை வச்சுட்டு வித்யாசத்தை சொல்லலின்னா எப்படி?

செலவு:
இன்னைக்கு பெண்கள்ள எத்தனை சதவீதம் பேரு பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்காய்ங்கனு பார்த்தா ஒரு பத்து அ இருபது சதவீதம் கூட தேறாது. பொருளீட்டும் சுதந்திரம் வேணம்னா இருக்கலாமே தவிர செலவழிக்கும் சுதந்திரம் உள்ளவுக அதுல பாதி தேறினா யதேஷ்டம்.இவிக செலவுக்கு ஆத்துக்காரரோ
மாமனார் மாமியாரோ ஜீ.ஓ பாஸ் பண்ணாம இருக்கிறது துர்லபம்.

இல்லத்தரசிகள் பற்றி சொல்லவே வேணா. ஆண் பெண்களுடைய செலவெல்லாம் மரணத்தின் நிழல்களோட போராடறதிலேயே வந்து நிக்கும். உ.ம் தனிமை , முதுமை (மேக்கப் செலவு) , நிராகரிப்பு,

அதுலயும் பெண் வீக்கர் செக்ஸ் இவளுடைய எண்ணங்கள் ஒரு குறுகிய வட்டத்தை ஃபோக்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கும். ஆணாவது செக்ஸ்ல வீரிய ஸ்கலிதத்தின் போதான ப்ளாக் அவுட்டை குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அதனால மரணத்தோட ஓரளவாச்சும் அவனுக்கு பரிச்சயம் இருக்கு.ஆனால் பெண்? அதுலயும் இந்திய பெண்? இந்த விஷயத்துல ரெம்ப துரதிர்ஷ்ட சாலி.

இதனால பெண்ணுக்கு மரணத்தை நினைவு படுத்தும் எதுவுமே நடுக்கத்தை கொடுத்துருது. முதுமைங்கறது மரணத்துக்கு முந்திய ஸ்டாப். அதனாலதான் ஏழை -பணக்காரி,படிச்சவ -படிக்காதவ எல்லாருமே வயசை குறைக்க என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்றாய்ங்க.

நாலு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு மூளைய வளர்த்துக்கிட்டா சீக்கிரம் வயசாயிரும்னோ என்னமோ அரசியல் -இலக்கியம் -சினிமா எதை பத்தி கேட்டாலும் " அதென்னமோ எனக்கு தெரியாது. எங்க வீட்டுக்காரர் தான் சதா சர்வ காலம் மல்லாடிக்கிட்டிருப்பாரு" ன்னு சொல்ற தாய்குலம் சாஸ்தி. முதற்கண வருமானம் கிடையாது. அப்படியே இருந்தாலும் செலவழிக்கிற அதிகாரம் கிடையாது. அப்படியே கிடைச்சாலும் அவிக செலவெல்லாம் காலத்தை -காலச்சக்கரத்தை சுழலாம நிறுத்தறதுலயே நின்னுருதுங்கோ.

தீனி:
உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு - அதாவது பெண் சாஸ்தி சாப்பிட கூடாது.(ஏன்னா இவன் 7 -அவள் 23 - இன்னம் சத்தா சாப்பிட்டு கெத்தா வளர்ந்து நின்னா இவன் பாடு கோவிந்தாவாயிருமே) . மிச்சம் மீதியை திங்கறது - நேத்து முந்தா நேத்து சரக்கை வீணாப்போகுதேனு திங்கறது - அள்ளிப்போட்டுக்கறது . இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஆக பெண் ஜாதகத்துல விரயஸ்தானம்ங்கறது செலவையும் -தீனியையும் தர்ரது ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். பின்னே என்னாத்ததான் தருது?

செக்ஸ்:

இதை பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு? செக்ஸோட நோக்கமே ஆர்காசம்தான் (உச்சம்) ஆனால்வாழ் நாள்ல விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு ஆர்காசங்களை கூட பெண்கள் எய்துவதில்லைங்கறது சர்வே முடிவு.

தூக்கம்:

இவ என்னவோ நாம கொடுத்துவச்சது இவ்ளதான்னு தூங்க ஆரம்பிப்பா. அந்த நேரம் பார்த்து "இவரு" சுரண்டுவாரு. திரும்பி படுடி. தலைவாழை இலை வச்சு தண்ணி தெளிச்சு ஒரு சோறா,காயா ,கறியா,பருப்பா சாம்பாரா, ரசமா, மோரா ஒரு இழவும் பரிமாறாம படக்குனு பாயாசத்தை கவுத்துட்டு விருந்து முடிஞ்சதுன்னு தூங்க ஆரம்பிச்சுருவாரு.

கொய்யால அவளுக்கு முறையான செக்ஸும் போச்சு.வவுத்தெரிச்சல்ல தூக்கமும் போச்சு. பின்னே பெண்கள் ஜாதகத்துல இந்த விரயஸ்தானம் என்னாத்ததான் தருது?

முக்திய தரும்னு வேணம்னா சொல்லலாம். அ ஏழேழு பிறவிகளின் கருமங்களெல்லாம் ஒழிஞ்சு அடுத்த
பிறவியிலயாவது குத்து மதிப்பா சுமாரான வாழ்க்கைய பெற வழி ஏற்படலாம் தட்ஸால்.

ஆணினமா ஆண்மை இழந்து - பெண்ணின் தேவைய நிறைவேற்ற முடியாத குற்ற உணர்ச்சியில தவிக்குது. ஒரு சில மெச்சூர்ட் மைண்ட் செட் உள்ள ஆண்கள் பாவம் இவளுக்கு " அதை தான்" தரமுடியலை .. ஏதோ அவள் விருப்பத்துக்கு எதையாவது திங்கட்டும்னு ஃப்ரிட்ஜை நிரப்பிர்ராய்ங்க. அல்லது அவள் காலச்சக்கரத்தை நிறுத்த ப்யூட்டி பார்லர், நாவல்ட்டிஸ் அது இதுன்னு செலவழிச்சா கண்டுக்காம விட்டுர்ராய்ங்க.

அன் மெச்சூர்ட் மைண்ட் செட் உள்ள ஆண்கள் தங்களோட குறைய மறைக்க சாடிஸ்டுகளா மாறி உயிரோட கொல்றாய்ங்க.

பின் தூங்கி முன் எழுதல்னு ஒரு விதியை வச்சிருக்காய்ங்க . அதாவது ஆத்துக்காரரு தூங்கின பிற்பாடுதேன் இவள் தூங்கனும்.அவரு எந்திரிக்கிறதுக்கு மிந்தி இவள் எந்திரிச்சுரனும்.தூக்கம் மதர்மதர்ப்பை தந்துரும். 7 -23 வித்யாசம் இன்னம் சாஸ்தியாயிரும்ங்கற பீதி.

ஒரு ஆண் ஒரு இரவில் மேக்சிமம் இரண்டு மூன்று ஆர்காசங்களுக்கே நாக் அவுட். ஆனா பெண்? கவுண்ட்லெஸ் ஆர்காசம்ஸை பெற தாக்கத் உடையவள்னு பயாலஜி சொல்லுது. இப்ப ஒரு திருமணமான பெண் ஜாதகத்துல விரய பாவத்துல எந்தெந்த கிரகங்கள் இருந்தா என்ன பலன்? நம்ம அனுபவஜோதிடம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

1.சூரியன் :

ஆர்காசம் இல்லாத உடலுறவுக்கு பின் விடியல் வரை விழித்திருப்பது.

2.சந்திரன்:

தான் ஆர்காசம் பெற்றுவிட்டதாக கற்பனை செய்து கொள்வது .

3.செவ்வாய்:

ஆர்காசம் இல்லாத உறவு தேவையாங்கற எரிச்சல்ல எனக்கு தூக்கம் வருதுன்னுட்டு முரண்டு பிடிக்கிறது ரத்த காயத்தோட ஏறக்குறைய ரேப்

4.ராகு:

ரெண்டு பெக் போட்டா கில்மால தூள் கிளப்பலாம்னு எவனோ பிக்காலி சொன்ன யோசனைய சிரமேற்கொண்டு லாலா போட்டுட்டு வந்த ஆத்துக்காரரை சகிச்சுக்க வேண்டி வர்ரது

5.குரு:

தன் இயலாமையை மறைக்க ஆத்துக்காரர் உபதேச மஞ்சரி கணக்காய் உபன்யாசம் செய்ய கேட்டுக்கொண்டு தூங்க முயற்சிப்பது.

மற்ற கிரகங்கள் இருந்தா என்ன பலன்னுட்டு சபையில உள்ளவுக சொல்லலாம்.


- ஆண் பெண் 12 வித்யாசங்கள் தொடர் முற்றும் -

Friday, August 5, 2011

ஆண் பெண் வித்யாசம் : 11 ஆம் பாவம்


ஜாதகத்துல 11 ஆம் பாவத்தை லாபஸ்தானம்ங்கறாய்ங்க. மூத்த சகோதர ஸ்தானம்ங்கறாய்ங்க. பெண்ணோட வாழ்க்கையில லாபம்னு துவங்கறதெல்லாமே நஷ்டமா போயிர்ரது. உ.ம் தாயோட கருப்பையில உயிர் தரிச்சோம் லாபம்னு நினைச்சா உடனே ஸ்கான்ல ஆணா பெண்ணா தெரிஞ்சுக்கிட்டு சங்கு ஊதிர்ராய்ங்க. அல்லது எருக்கங்குச்சி எட்செட்ராவ வச்சு நஷ்டமாக்கிர்ராய்ங்க.

சரி அதையும் மீறி பிறந்து வந்து அப்பாடா ஒரு வாழ்க்கை லாபம்னு நினைக்கிறதுக்குள்ள மூச்சை நிறுத்திர்ராய்ங்க. இப்படியே ஒவ்வொரு ஸ்டெப்லயும் அவள் லாபம்னு நினைக்கிறதெல்லாம் நஷ்டமாவே போயிர்ரது. அதனாலதேன் நிறைய பெண்களோட ஜாதகத்துல 11 ஆவது பாவம் லாபஸ்தானமா ஒர்க் அவுட் ஆகாம மூத்த சகோதர ஸ்தானமாவே ஒர்க் அவுட் ஆகுது.

மூத்த சகோதரம்னா அது அக்காவா இருக்கலாம், அண்ணனாவும் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு அக்காவால கிடைக்க கூடிய லாபங்கள் என்ன? நஷ்டங்கள் என்ன? அண்ணனால கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்கள் என்னங்கறதை இந்த பதிவுல பார்ப்போம்.

அக்கா:
அக்கான்னா யாரு? அம்மாவோட டூப்ளிக்கேட். அம்மா யாரு? இவள் பிறந்ததும் பார்த்த ஸ்பரிசித்த முதல் ஆண்மகனான அப்பாவோட அன்பை பங்கு போட்டுக்கற காம்ப்படிட்டர். அதனால இவள் மைண்ட்ல அம்மா -அக்கா ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க.

அப்பா தன் மனசுல தன் பொஞ்சாதி மேல ( இவளோட அம்மா) உள்ள மோகமெல்லாம் வடிஞ்சு இவள் மேல் தன் பார்வையை திருப்பும் வரை காத்திருக்க வேண்டி வந்துருது. இந்த இழவுல அவரோட அன்புலஅக்ர பாகம் (முதல் பாகம்) அக்காவுக்கு போயிருது.. அதை தக்க வச்சுக்க அவள் மெனக்கெட வேண்டி வந்துருது. இது ஒரு வ்யூ.

இன்னொரு வ்யூல பார்த்தா இவள் அச்சான அதே பதிப்பகத்துல அச்சான - இவளுக்கு முந்திய பதிப்புத்தான் அக்கா. இவளை விட அவளுக்கு பெண்ணுக்கெதிரான கொடுமைகள் பற்றிய ஞானம் அதிகம்.

கொடுமைகளுக்கு இலக்கான மனசு ரெண்டு வகையில ரெஸ்பான்ட் ஆகும். 1. தான் பட்ட கொடுமையை வரிசையில அடுத்து உள்ள பார்ட்டி அனுபவிக்கக்கூடாது 2.கொய்யால நான் பட்ட அவதியை பின்னால
வர்ரவளு(னு)ம் அனுபவிக்கனும்.

இதுல அக்காக்காரி மொதல் ஜாதியா இருந்தா உங்க லாப ஸ்தானம் சூ..ஊ ........ப்பரு. அவளே ரெண்டாவது ஜாதியா இருந்தா டர்ர்ரு.

இது ஒரு வ்யூ. இன்னொரு வ்யூல பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சேம் செக்ஸ். அதனால ஒருத்தர் மேல ஒருத்தருக்கு கவர்ச்சி இருக்காது. மேலும் பருவ வயசுல ஒருத்தருக்கொருத்தரு போட்டியா மாறவும் வாய்ப்பிருக்கு. இதெல்லாம் மைனஸ்.

வயசு வித்யாசம்:
உங்க அதிர்ஷ்டம் நல்லாருந்து உங்க அக்காவுக்கும் உங்களுக்கும் வயசு வித்யாசம் அதிகமா இருந்தா அவிக உங்க அம்மாவோட ரோலை ப்ளே பண்ண சான்ஸ் இருக்கு. நீங்க பிறந்த சமயம் அம்மா கொஞ்சம் போல களைச்சு - பிள்ளை வளர்ப்புல சலிப்பு இருந்தால் உங்களை தன் மூத்தமகள் கிட்டே தள்ளி விட்டுர சான்ஸ் இருக்கு.

ஆண் குழந்தை வளர்ந்து பெருசாகி -ஒன்னை பெத்தாலும் -அதை வளர்த்தாலும் -அட கட்டியே கொடுத்துட்டாலும் - அட அது ஒன்னை பெத்து அதை தூக்கி கொஞ்சினாலும் கூட முழுமையான அப்பனா ஆகமுடியாம போயிரலாம்.

ஆனா பெண்குழந்தைய பொருத்தவரை அது பிறக்கும் போதே தாயாத்தான் பொறக்குது. அவளோட இதயமும் மடியும் ஒரு குழந்தைய தூக்கி வச்சுக்க -கொஞ்சி மகிழ துடிக்குது.

எனவே வயசு வித்யாசம் அதிகமா இருக்கும் பட்சத்துல உங்க அக்கா உங்களுக்கு அம்மாவா மாற வாய்ப்பிருக்கு.

அண்ணன்:
அண்ணன்னா யாரு? அப்பாவோட மறு பதிப்பு. நீங்க யாரு ? அம்மாவோட மறு பதிப்பு. அப்பாவை பொருத்தவரை அம்மா மோகத்துல உங்க பக்கம் பார்வைய திருப்ப அவகாசம் தேவைப்படும். மேலும் வாழ்க்கை போராட்டம் - தொழில்,வேலை உத்யோக கவலைகள் எட்செட்ரா எட்செட்ரா.

ஆனா அண்ணன்? அவன் மொதல் மொதல்ல தவழ்ந்த நெஞ்சு தாயோடது. அவனுக்கு உணவு கொடுத்து அவனோட உயிரை நிலைக்க வச்ச மார்பு தாயோடது. அவன் எந்த கவலையும் இல்லாம செக்யூர்டா இருந்த கருப்பை அவனோட தாயோடது.

அவன் அடிமனசுல மறுபடி தாயின் கருப்பைக்குள் நுழையும் உத்வேகம் இருக்கும்னு சைக்காலஜி சொல்லுது. ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் வேற சப்ஜெக்ட். ஆனால் இதுவும் ஆண் குழந்தைக்கு தாயின் பால் ஏற்படும் ஈர்ப்புக்கு ஒரு காரணம்தேன்.

இந்த தீவிரமான உள் மன கொந்தளிப்புகளுக்கு வடிகாலா இருக்கிறது தாயோட ஸ்பரிசம் -கிள்ளல் -முத்தம். அவன் டீன் ஏஜை தொடும்போது தாய் ஸ்பரிசத்தை அவாய்ட் பண்ண அவனையே அவாய்ட் பண்ண ஆரம்பிக்கிறா. "எருமை மாதிரி மேல விழாதே"

உங்கள் தந்தையின் மறுமதிப்பான உங்க அண்ணனுக்கு - உங்கள் தாயின் மறுமதிப்பான உங்க மேல ஈர்ப்பு வர்ரது சகஜம். (ஜாடை முக்கியம் - ஐ மீன் அண்ணனுக்கு அப்பா ஜாடை வந்திருக்கனும் -உங்களுக்கு அம்மா ஜாடை வந்திருக்கனும் )

அப்பா தன் வயதுக்குரிய கடமைகளின் ப்ரஷரால உங்க மேல அன்பை கொட்ட முடியாத தருணத்தில் - அம்மா தன் வயதுக்குரிய உபாதைகள் -களைப்பு -சலிப்பு காரணங்களால் தன் மகன் மேல் அன்பை கொட்ட முடியாத தருணத்தில் கடமைகள் ஏதுமில்லாத அண்ணன உங்க மேல அன்பை காட்ட முடிவது சகஜம்.

பால்யத்துல ஆண் பெண் குழந்தைகளிடையில் பெருசா வித்யாசம் தெரியறதில்லை. பெண் குழந்தையும் ஆண்குழந்தைக்கு சமமா மாங்காய் அடிக்குது - குதிக்குது ஓடுது -அதனால அண்ணன் தங்கை பாச பிசினஸ் எல்லாம் அந்த வயசுல தேசலாத்தான் இருக்கும். இன்னம் சொல்லப்போனா அண்ணன் உங்களை தனக்கு போட்டியா கருதவும் -வெறுக்கவும் - நீங்க எலியும் பூனையுமா இருக்கவும் சான்ஸ் இருக்கு.

ஆனா பருவத்தின் வாசலில் நிற்கும்போது தான் நீங்க ஆணில்லை பெண் - தன் தாயின் மறுபதிப்புங்கற விஷயம் அவன் மனசுக்கு உறைக்குமோ என்னவோ?

வயசு வித்யாசம்:
வயசு வித்யாசம் அதிகமாகும் பட்சத்துல உங்க அண்ணன் அப்பாவோட ரோலை ப்ளே பண்ண ஆரம்பிச்சா தலைவலிதான். அங்கே நிக்காத - செல் ஃபோன்ல என்ன பேச்சு இத்யாதி ..

என்ன நம்ம ஜாரா திடீர்னு சுறுசுறுப்பாயிட்டாரு ? ஓகோ புதுசா ஏதோ வண்டை வார்த்தை ஸ்ட் ரைக் ஆயிருச்சாம்..

Thursday, August 4, 2011

சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று?


சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று நோய் ஏற்பட்டதாகவும் ஆப்பரேஷன் ஏற்கெனவே நடந்துவிட்டதாகவும்/ இனிதான் நடக்கப்போவதாகவும் பல்வேறு சேதிகள்.

கருப்பை வாய் புற்று தோன்ற மெடிக்கலா என்னென்ன காரணங்கள் உண்டு என்று இப்ப பார்ப்போம்.

கர்ப்ப வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு இளம் வயதில் திருமணம் செய்துகொள்வது, அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள் வது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளாதது, புகைப்பழக்கம் உடைய வர்களின் அருகில் அதிக நேரத்தைச் செலவிடுவது, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது, முட்டைகள் வெளிவராமல் அடைப்பட்டுப் போவது மற்றும் மனித பாப்பிலோமா என்ற வைரஸ் தாக்குதல் ஆகியவை காரணமாகின்றன.

பதினெட்டு வயதிற்கு மேல திருமணம் செய்து கொண்டாலும், சுகா தாரமற்ற உடலுறவு, ஒரிரு முறை தானே என்று வேற்று ஆளுடன் உறவு வைத்துக் கொள்வது, தரமற்ற கருத்தடைச் சாத னங்களைப் பயன்படுத் துவது, அதிக மான சுய இன்பம் செய் வது போன்றவற் றால் கூட புற்று நோய் வந்து விடும். இவை தவிர ஹார் மோன் சுரப்பிகளின் மாறுபாடுகளாலும், கர்ப் பப்பை வாய்ப்புற திரவ உற்பத்தி போது மான அளவு இல்லாமல் போனாலும் கூட புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

கர்ப்பப்பையில் கருவணு விடு படாமை, ஹார்மோன் பிரச்சினை, சினைப்பை காயம், முன்னதாகவே மாத விலக்கு முற்றுப்பெறுவது, கருவணு தொடர்பான பிரச்சினைகள், உளவியல் காரணம், நோய் தொற்றுகளால் அழற்சி, வயிற்றுப்பகுதி நோய்கள், கருக் கலைப்பு, கருச்சிதைவுகளால் வரும் அழற்சி, எண்டோமெட்ரியோசிஸ் கருப்பை ஒட்டிக்கொள்ளுதல், கருப்பை யில் அந்நியப் பொருட்கள் ஆகிய 12 காரணங்களால் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் வருவதற்கு காரணமாகின்றன.

தகவல் உபயம்: மெடிக்கல் ஆன்லைன்

சரி .. இதுக்கு ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டானு இப்ப பார்ப்போம்.

சோனியா ஜாதகட்தில் கிரகங்கள் நின்ற விவரம்:

கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது ரிசபராசிங்க.

தற்போது 27/8/2011 வரை சனி தசையில் சுக்கிர புக்தி நடப்பு

கான்சருக்கு காரணம் : செவ்+கேது இணைப்பு (இந்த அமைப்பு நம்ம ஜாதகத்துலயும் 4 ல் ஏற்பட்டது -அம்மாவுக்கு யூட் ரஸ் கான்ஸர்)

கருப்பை வாய்ல ஏற்பட்டது ஏன்:
புதன்+செவ் புதன் ஜங்க்சன் பாய்ண்டுக்கெல்லாம் அதிபதி. உ.ம் பஸ் ஸ்டாண்ட்,ஆட்டோ ஸ்டாண்ட் கருப்பைக்கு போவதற்கான வழி கருப்பை வாய் அதனாலதான் கருப்பை வாய்ல புற்று ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை:
சுக்கிர செவ் சேர்க்கை .சுக்கிரன் இன உறுப்பை காட்டும் கிரகம் செவ்: ரத்தப்போக்கு அறுவை சிகிச்சைக்கெல்லாம் காரகர்

இந்த கான்சருக்கு ஆரம்ப புள்ளி என்ன? ஒழுங்கற்ற மாதவிலக்கு. செவ் விரயாதிபதியான புதனோட சேர்ந்தது , அந்த புதனோட கேது சேர்ந்தது எல்லாம் இந்த நிலைக்கு காரணம்.

இது கான்சராக முற்ற காரணம் கேதுவின் சேர்க்கை.

சந்திர ராகு சேர்க்கை: சந்திரன் ஜல காரகன். சிறு நீர்பை ,சிறு நீரகத்துக்கெல்லாம் காரகம் வகிக்கும் கிரகம். இந்த சந்திரனோட ராகு சேர்ந்ததும் இந்த நிலைக்கு ஒரு காரணம்.

மாதவிலக்கு என்பது சீரா -குறிப்பிட்ட இடைவெளியில நடந்தே ஆக வேண்டிய சமாசாரம். இல்லாட்டா வம்புதான்.

லக்னாதிபதியே சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறிவிடுவார். 24 மணி நேரத்துல நட்சத்திரம் மாறுவார். 6 மணி நேரத்துல பாதம் மாறுவார்.

இந்த நிலையற்ற நிலை எல்லா விஷயத்துலயும் இருக்க வாய்ப்பு அதிகம். இதுதான் இந்த நிலைக்கு கொண்டு வந்துருச்சு.

இப்பம் சனி தசை நடக்குது. ( களத்ர + அஷ்டமாதிபதி) களத்ரம் எப்பயோ காலி. அஷ்டமம்னா மரணம். சனி ஸ்டீலுக்கு காரகர். அதனால தான் சர்ஜரி. புக்தி சுக்கிர புக்தி.

சுக்கிரன்னாலே இன உறுப்பு . விரயாதிபதி சேர்ந்ததால கைனகாலஜிக்கல் ப்ராப்ளம் இந்த க்ரூப்ல கேது சேர்ந்ததால கான்சர், செவ் நின்னதால ஆப்பரேஷன்.

சர்ஜரிக்கு செவ் காரகர். லக்னத்துக்கு யோக காரகர்தேன். ஆனால் கேதுவோட சேர்ந்துட்டதால செவ் பலம் காலியாகி -கேதுவோட காரகமான கான்சர் ஜெயிச்சுரவும் வாய்ப்பு இருக்கு.

பார்ப்போம். ஆரு பெத்த புள்ளைன்னாலும் நல்லா இருக்கட்டும்னு தான் நினைக்கிறோம். நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன?

சோனியாவுக்கு அவசர அறுவை சிகிச்சை?


ஆமாங்ணா சோனியா அம்மாவுக்கு அமேரிக்கால ஆப்பரேஷன் பண்ண போறாய்ங்களாம்.ரெண்டு வாரம் அம்மா அவுட் ஆஃப் ஸ்டேஷன் (மட்டும்தான்).
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பை ராகுல்& இன்னபிற முது பெரும்(!) தலைவர்களுக்கு கொடுத்திருக்காய்ங்களாம்.

இந்த தகவலை இவ்ள அவசரமா தர காரணம் சோனியா அம்மாவோட எதிர்காலம் பத்தி நாம ஜோதிட ரீதியா ஒரு சில கட்டுரைகள் எழுதியிருந்தோம். அவற்றில் முக்கியமான பகுதிகளின் ஸ்க்ரீன் ஷாட்ஸை இப்ப பாருங்க.

இதெல்லாம் நம்ம பெருமை பேச இல்லிங்ணா ஜோதிடத்தோட பெருமையை பேசத்தேன்..










படம்: 2

Wednesday, August 3, 2011

தொழில் உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே,

நேத்து தொழிலை கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம்.அதனால நேற்றைய பதிவு கொஞ்சம் போல சோனியாயிருச்சு. அதை ஈடுகட்ட இன்னைக்கு நோன்டி நுங்கெடுத்துரனும்னுதேன் ஆரம்பிக்கிறேன்.ஆத்தா விட்ட வழி.

ஆணோ பெண்ணோ எந்த உயிரா இருந்தாலும் அதனுடைய சப்கான்ஷியஸ் மைண்ட்ல இயற்கை பொதிஞ்சு வச்சிருக்கிற பேசிக்கல் கமாண்டுகள் ரெண்டு

1.உயிர் வாழ்தல் 2.பரவுதல்

இந்த ரெண்டு கான்செப்டுக்காக செய்யும் போது தொழில் உத்யோகத்துல ஆண் பெண்களிடையில் எந்த வித்யாசமும் வர்ரதில்லை.

உயிர் வாழ்தல் இரண்டு விதம்:

உயிர் வாழ்தல்னா "உசுரை கையில பிடிச்சுக்கிட்டு" வாழறது ஒரு விதம். இது பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

உயிர் வாழ்தல்னா தான் உயிர் வாழ்வதை உலகத்துக்கே கம்யூனிக்கேட் செய்தபடி -தன் சர்வைவலை பன்முறை உறுதி செய்துகொண்டபடி வாழறது இன்னொரு விதம் இது பலம் வாய்ந்தவர்களின் லைஃப் ஸ்டைல்


பரவுதல் ரெண்டு விதம்:

பரவுதல்னா விந்தை கொட்டுதலோ அ கொட்டப்பட்ட விந்தை ஏற்று பெற்றுத்தள்ளுதலோ பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

பரவுதல்னா தங்கள் பேரும் புகழும் படைப்பும் படைப்புத்திறனும் உலகெங்கும் பரவ வாழறது பலவான்களின் லைஃப் ஸ்டைல்.

ஆண் ஃபிசிக்கலி ஸ்ட்ராங், (சரீர பலம்) . பெண் சைக்கலாஜிக்கலி ஸ்ட்ராங். (மனோ பலம்).

ஆணின் சரீர பலம் உச்சத்தில் இருக்கும்போது சரீர பலம் / முரட்டுத்தனம் தேவைப்படும் துறைகளில் உச்சத்துக்கு போகிறான்.

பெண்ணின் மனோபலம் உச்சத்தில் இருக்கும்போது மனோபலம் தேவைப்படும் துறைகளில் பெண்கள் உச்சத்துக்கு போகிறார்கள்.

ஆணின் சரீர பலத்தை பற்றி பலமுறை சொல்லியிருக்கேன். ஆனால் இதுல ஒரு சின்ன கரெக்சன். ஆணோட சரீர பலம் கொண்டு ஒரு கல்லுரலையே நகர்த்திரலாம். ஏன் இடுப்பு வரை தூக்கியும் காட்டலாம்.

ஆனால் தாளி அவனால ஒரு படி அரிசி கூட அரைக்க முடியாது. எப்படியா கொத்த பாடிபில்டரா இருந்தாலும். (பத்து பதினைஞ்சு நாள் ப்ராக்டிஸு பண்ணி 16 ஆவது நாள் செய்து காட்டலாம் அது வேற விஷயம்)

ஆனால் கண்ல மட்டும் உயிர்வச்சுக்கிட்டு -ஒல்லி பீச்சானா இருக்கிற பொம்பளை மூச்சிரைக்காம பக்கத்து வீட்டு அக்கா கிட்டே தெருவுக்கு புதுசா குடிவந்த பொம்பள டாக்டர் வாக்கிங் போற அழகை பத்தி பேசிக்கிட்டே அசால்ட்டா அஞ்சு படி அரிசியை அரைச்சுரமுடியும்.

இவனுக்குள்ளே சக்தி என்னவோ அதிகமா தான் இருக்கு. ஆனால் அவனால அதை கண்டிஷனிங் செய்து தொடர்ச்சியா வெளிப்படுத்த முடியறதில்லை. அதுக்கு ஒரு ப்ளானிங் வேணம். சக்தியை கட்டுப்படுத்தி கொஞ்சமா - கன்டின்யுவஸா வெளிப்படுத்தன்ம். ஆனால் இந்த டெக்னிக் ஆண்களுக்கு தெரியாது.பெண்களுக்கு தெரியும்.

இந்த மாதிரியான பவர் கண்டிஷனிங் டெக்னிக் தேவைப்படற ஃபீல்ட் ஒர்க்ல கூட ஆண்களால சோபிக்க முடியாது. இது ஃபிசிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா தேவைப்படற தொழில்,உத்யோகங்கள் உண்டு.அவற்றிலும் பெண்கள் தான் நிறைய சாதிக்க முடியும்.

1.உருவாக்குதல் - சூட்சுமமான அசெம்ப்ளிங்ல எல்லாம் பெண்கள் நின்னு விளையாடறாய்ங்க.

2.பராமரிப்பு & பதப்படுத்துதல்: இதுவும் பெண்ணோட இயல்புக்கு ஏற்ற துறை .

( இதுக்கான காரணம் என்னன்னா கருவில் குழந்தை உருவாகிறது வெறும் உயிரியல் தொடர்பான மேட்டர் கிடையாது.அவளோட சப்கான்ஷியஸ்ல இருந்து புறப்படும் கமாண்ட்ஸ் அந்த குழந்தையின் உருவாக்கத்திற்கு நிறைய உதவுது. உருவாக்கும் -பதப்படுத்தும் -பராமரிக்கும் துடிப்பு மற்றும் திறன் இயல்பாகவே பெண்ணில் அமைந்திருக்கிறது)

3. வினியோகித்தல் : இங்கே வரும்போது ஆண்கள் கொடி கட்டி பறக்கிறாய்ங்க.

4..கண்டுபிடிப்புகள்:
இது ஏறக்குறைய ஒரு கற்பழிப்பு மாதிரி தான். வேணம்னா முதலிரவுல நடக்கும் படிப்படியான நிர்வாணப்படுத்துதலை போன்றதுன்னு சொல்லலாம். (குவாரி,சுரங்கம்லாம் கற்பழிப்பே) அதனாலதான் 90 சதவீத கண்டுபிடிப்புகள் ஆண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

உடலுறவின் போது கூட ஆண்தான் பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்க துடிக்கிறான்.ஆனால் பெண் தன் நிர்வாணத்தை கூட தான் ரசிக்கிறதில்லை.

சரிங்ணா இந்த பதிவோட சாரத்தை இப்படி வச்சுக்கலாம் .பெண்ணோட ஜாதகத்துல ஜீவனபாவம் பலம் பெறுவது அவளது உருவாக்கும்,பதப்படுத்தும்,பராமரிக்கும் திறனை அதிகரிக்கும்.

ஆணோட ஜாதகத்துல ஜீவன பாவம் பலம் பெறுவது இன்ன பிற துறைகளிலான அவனது திறமையை அதிகரிக்கும்.

ஜீவன பாவம் ஏறுமாறா இருக்கும் போது ஆண் பெண்கள் தங்கள் இயல்புக்கு மாறான துறைகளில் ஈடுபாடு கொண்டு நுழைந்து அதையும் சீரழித்து தங்கள் முன்னேற்றத்தையும் மூளியாக்கிக்குவாய்ங்க.

Tuesday, August 2, 2011

போலியின் ஆணவம் (ஆவணம்)


சமீபகாலமாக ஒரு எழுத்துப்புரட்சி, பின்னூட்டங்களாக வந்து கொண்டிருப்பதை அன்பர்கள் அறிவார்கள்... அச்சில் ஏற்றமுடியாததையும், வலை ஏற்றி எங்களை மிக நன்றாக கவனித்து, கவனித்து பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்கும் அந்த போலி... இப்பொழுது தன் வேசம் மாற்றிவிட்டார்... கருப்பு ஆடு, வெள்ளாடாகிக்கொண்டிருக்கிறது... என்றாலும் நாங்கள் அந்த போலியை வாழ்த்துகிறோம்..

நமக்கெல்லாம் கோபம் வந்தால் தெருவில் போகிறவனையும், வருகிறவனையும், திட்டவோ அடிக்கவோ முடியுமா? நமக்கு வேண்டிய மனிதர்களிடம் தான் அதை திருப்பி செலுத்த முடியும். அதைத்தான் அந்த போலி செய்து கொண்டிருக்கிறார்... அதோடு... உலகமகா கோபத்தை காட்ட வேண்டுமென்றால், உங்களுக்கு மிக பிரியமான வாழ்க்கை துணையிடம் தான் முடியும். மிக அன்பு எங்கிருக்கிறதோ, அங்கேதான் மிகுந்த கோபமும் பிறக்கும்... அதாவது மிகுந்த அக்கறை....

எங்கள் மேல் அக்கறை காட்டும் அந்த போலியை, அந்த அன்பை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.

ஆனால்... ஒரு வரம்பு மீறி ஒரு ஆள் மாறாட்டம் நடந்துகொண்டிருப்பதை எச்சரிக்கவேண்டிய கட்டாயம் இப்பொழுது இருக்கிறது... ஒரு சட்ட சிக்கலில் அவர் சீக்கிரம் சிக்கிவிடுவதற்காண முயற்சியில் அந்த போலி இறங்கியிருகிறார்... அதற்கான ஆதாரங்கள் திரட்டும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது... அவர் மீதான அக்கறையில் இந்த விளக்கம் தர வேண்டி இந்த பதிவை தருகிறோம்.

இதன் மூலமாக சித்தூர். எஸ். முருகேசன் என்ற பெயரில் வரும் போலியின் பின்னூட்டங்களை அன்பர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

ஒரு விளக்கம்... ஒளிப்படம் வாயிலாக...

இது ஒரிஜினல்...

இது போலி

அன்பர்கள் வித்தியாசம் காண வேண்டுகிறேன்

தொழில்,உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை தர்மஸ்தானம் -10 ஆம் பாவத்தை கர்மஸ்தானம்னு சொல்வாய்ங்க. இந்த ரெண்டு பாவாதிபதிகளும் சம்பந்தப்படறதை தர்ம கர்மாதிபதி யோகம்னு சொல்றாய்ங்க. தொழில்ல முழு ஈடுபாட்டை காட்டறவன் செய்யும் தொழிலே தெய்வம்னு இருந்துருவான்.இதனால கோவில் குளம் தானம் தருமம் இத்யாதி மேல எல்லாம் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. ( இந்த நிலை 10 ஆம் பாவம் பலம் பெற்றா கிடைக்கும்)

அதே போல 9 ஆமிடம் பர்ஃபெக்டா இருந்தா அப்பா குண சீலரா இருப்பாரு.இவன் தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு இருப்பான். புராணம்,இதிகாசம் இத்யாதிகளை படிச்சு அவற்றின் சாரத்தை பிடிச்சுருவான். இதன் விளைவாக "வியாபாரம் த்ரோஹ சிந்தஹா"னு தோனிரும்.அதனால் தொழில்ல ஆர்வமிருக்காது.

இவிக ரெண்டு பேரும் ( தர்ம கர்மாதிபதிகள்) சம்பந்தப்படும்போது தொழிலை தர்மமா செய்வான். தர்மத்தை தொழிலா செய்வான். ஆக ரெண்டுமே தூளாயிரும். ஆனா ஒன்னுங்ணா நான் உழைக்கிறேன், சாண்டல் சோப்பா தேயறேன் (ஓடாங்கறது பழைய பிரயோகமாச்சே) வேர்வை சிந்தறேன்.ஏ.சிலருந்து மூக்கடைப்பு வந்து நான் பட்ட அவதி எனக்கு தெரியும் - இந்த மாதிரியெல்லாம் நாம பில்டப் கொடுத்தாலும் தாளி பைசான்னு வந்தா அதன் பின்னாடியே அந்த கருமமும் இலவச இணைப்பா வந்துரும், அதனாலதேன் பத்தாமிடத்தை கர்மஸ்தானம் - கேந்திரஸ்தானம் -இங்கன பாவியிருந்தாலும் பரவால்லை -பாம்பு இருந்தாலும் பரவால்லைன்னு ரிலாக்சேஷன் கொடுத்திருக்காய்ங்க.


இதெல்லாம் ஆணை பொருத்தவரை ஓகே. பெண்? மொதல்ல ஹவுஸ் வைஃபை பார்ப்போம். அவிக காலையில கண் விழிச்சதுல இருந்து கட்டில்ல/பாய்ல கட்டைய சாய்க்கிற வரை / இவ்ள எதுக்கு புருசங்காரன் சுரண்டினா அவன் பக்கம் திரும்பறது வரை தனக்காகவே - தனக்காக மட்டுமே செய்றது ஒரு மசுரும் கிடையாது.

எல்லாமே ஆத்துக்காரருக்காக /அவரோட ப்ரஸ்டிஜை காப்பாத்தறதுக்காகத்தேன். இது எப்படி கருமம் ஆகும்? காஃபி,டிஃபன்,சோறு,ராத்திரி டிஃபன் எதை சமைச்சாலும் தங்களுக்காகவே (மட்டும்) சமைக்கிறாய்ங்களா? இல்லையே. கழுவி,மெழுகி,அரைச்சி இப்படி எதை செய்தாலும் அது தனக்காக மட்டும் செய்யப்படற வேலை இல்லை. இது எப்படி கருமம் ஆகும்?

ஆணா கணவனை பாருங்க. அவன் செய்ற தொழில்/உத்யோகம் எல்லாமே முதற்கண் தனக்காக - தன் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுக்காக - ஐடென்டிட்டிக்காக - உத்யோகம் புருசலட்சணம்னு மேனேஜர் ஓட்டல் ரூம்ல ஸ்டெனோவோட கெட்ட காரியம் செய்துக்கிட்டிருந்தா இவன் ரிசப்ஷன்ல உட்கார்ந்து லாப்டாப்ல லெட்டர் ட்ராஃப்ட் பண்றானே எதுக்காக தனக்காக.

அந்த வேலை வெட்டி உத்யோகம் இல்லின்னா தன்னை கால் காசுக்கு மதிக்கமாட்டாய்ங்கனு அலறி புடைச்சு செய்யறான். இதனால அவனுக்கு கர்மஸ்தானமாவே ஒர்க் ஆகிற ஜீவனஸ்தானம்.. ஹவுஸ் வைஃப் விஷயத்துல மட்டும் தர்மஸ்தானமா ஒர்க் அவுட் ஆகுது.

ஆண் தொழில் செய்தா கர்மம் கூடுது (ஏன்னா அவன் தன் சுய நலத்துக்காக செய்யறான்) பெண் தொழில் செய்தா அவளோட பூர்வ கருமங்கள் குறையுது.ஒழியுது.

ஒரு விவாகரத்து வழக்குல மனைவி ஹவுஸ் வைஃப்ங்கறதுக்காக அவளுக்கு எந்த நஷ்ட ஈடும் கொடுக்க மாட்டேன்னு ஒரு புருசன் வக்கீல் மூலம் வாதம் செய்தப்ப ஜட்ஜு . ( ஹை கோர்ட்டுலயா சுப்ரீம் கோர்ட்டுலயா ஞா இல்லை) . கொய்யால ஒரு ஹவுஸ் வைஃப் செய்ற சர்வீஸுக்கு மார்க்கெட் ரேட் படி கேல்குலேட் பண்ணி கொடுரா நஷ்ட ஈடுன்னு தீர்ப்பு கொடுத்தாராம்.

கொத்தடிமை ஒழிப்பு சட்டம்னு அலப்பறை பண்றாய்ங்களே மொதல்ல அதை இல்லத்தரசிகள் விஷயத்துல அப்ளை பண்ணச்சொல்லுங்க.

ஷீர்டி சாயிபாபா வாழ்க்கையில ஒரு சம்பவம் நடக்குது. திடீர்னு ரெண்டு பேரை கூப்டு ஒரு ஏணியை தூக்கிக்கிட்டு அங்கிட்டு வா இங்கிட்டு போன்னு லொள்ளு பண்ணிட்டு தலா ரூபா கொடுக்கிறாரு. பக்தாள் " என்ன பாபா இதுல்லாம்"னு கேட்டப்போ சொல்றார். வேலை செய்தவனுக்கு அவனோட வியர்வை உலர்ரதுக்கு மிந்தி கூலி கொடுத்துரனும். இதை உபதேசிக்கத்தேன்னாராம்.

ஆனால் மனைவிங்கற கூலிக்கு நாம தர்ர கூலி என்ன? "சனியனே.. காபியா இது பூனை மூத்திரம் மாதிரி இருக்கு" "ஏண்டி! காஃபியை கொண்டாந்து வச்சயே சொல்லவேணா அறிவில்லை உனக்கு. சிகரட் முடிஞ்சு போச்சு. காஃபி ஆறிப்போச்சு"

ஒரு வேலைய - நம்ம வேலைய இன்னொரு ஆளை வச்சு செய்தாலே கருமம் கூடும். அவன் செய்த வேலைக்கு உரிய கூலி கொடுக்கலின்னா அது இரட்டிப்பாகும். தாளி கூலியும் கொடுக்காம உடையலும் விட்டா ?

இப்படி ஒரு இல்லத்தரசியின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம்/அதை பார்க்கு கிரகங்கள் எல்லாம் அவளுடைய கருமத்தை பொக்கி முக்தியை கொடுக்குது. ஆனால் ஆணின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம் /அதை பார்க்கும் கிரகங்கள் எல்லாம் அவனுடைய கருமத்தை கூட்டுகிறது.

சரி வேலைக்கு போற பெண்களோட நிலை என்ன? அவிக கைச்செலவுக்காகவோ -கால் செலவுக்காகவோ வேலைக்கு போனா அது அவிக கருமத்தை கூட்டவே செய்யும். ஆனால் பட்டா தாய்குலத்தை கேட்டா நூத்துக்கு 99.9%.. அப்பா போகச்சொன்னாரு அவர் கன்டின்யூ பண்ணச்சொன்னாருன்னுதேன் சொல்றாய்ங்க.


வருமான வரி ரெய்டுல மாட்டி வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா கேசை போட்டு மாட்டினவன் "இதெல்லாம் என் பொஞ்சாதி சம்பாரிச்சது'ன்னு சொல்லிர்ரான். கடன் காரன் வெட்ட வரேன்னா பொஞ்சாதியை விட்டு வாய்தா வாங்கறான். ஆஃபீசர் லீவு தரமாட்டேன்னா பொஞ்சாதியை விட்டு சொல்லச்சொல்றவன்லாம் இருக்கான்.

ஆக பெண்ணை ஆண் ஒரு மல்ட்டி ஸ்பானர் மாதிரி உபயோகிக்கிறான். அரசியல் வாதிங்க தப்பான முடிவுகளா எடுத்துட்டு -சரியான சமயத்துல சரியான முடிவை எடுக்காம கோட்டைவிட்டுட்டு -பிரச்சினை முத்திப்போய் கலவரம் நடந்தா உடனே ராணுவத்தை கூப்டுர்ராய்ங்க.

ஒரு கட்டட்த்துல ராணுவம் ங்கோத்தா நாம இல்லாம இவனுகளால ஆட்சியே பண்ணமுடியாது - அதுக்கு இவனுக என்ன பஞ்சாயத்து.. நாமே ஆண்டா என்னன்னு ரோசிக்க ஆரம்பிச்சுட்டா கஷ்டம். இங்கே ராணுவத்தோட இடத்துல பெண்களை வச்சு ரோச்சு பாருங்க. அவிக ரோசிக்க ஆரம்பிச்சா ரெம்ப கஷ்டம் இப்பமே ஆரம்பிச்சிட்டாய்ங்க.

Monday, August 1, 2011

ரஜினி வாயில் "நாதாரி" என்ற வார்த்தை


ஆமாங்ணா ரஜினி ஒரு படத்துல நாதாரிங்கற வார்த்தைய பஞ்ச்சாவே உபயோகிச்சிருக்காரு. என்ன படம் என்ன படம்னு கேப்பிக. (ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ற பார்ட்டிகளுக்கு பதில் தெரிஞ்சிருக்கலாம்) சொல்றேன்.

அதுக்கு மிந்தி நாதாரிங்கறதுக்கு என்ன அருத்தம்? ஆருனா சொல்லுங்கப்பு. ப்டையப்பாவுல என்ன பஞ்ச்? "என் வழி தனி வழி" இதை தெலுங்குல டப் பண்ணப்ப " நா தாரி ரஹதாரி"ன்னு வச்சிருந்தாய்ங்க. நா = என்னோட தாரி = வழி .

ரஹதாரின்னா = ராஜ பாட்டை /ஹைவே இப்படி அருத்தம்.

நம்ம ஜோலிக்கு வந்தா கோலி காலினு ஜா.ராவுக்கு சொல்லத்தேன் இந்த பதிவு. இது நாலு பேரை போய் சேரனும்ல அதுக்குத்தேன் வில்லங்க தலைப்பு+ லீடு. பதிவுக்கு போயிரலாமா?

நான் விரும்பி பார்க்கும் ஒரே சேனல் ஆதித்யா.எப்படியும் தாத்தா அழவைக்கிறாரு. நாமளாச்சும் சனத்தை கொஞ்சமா சிரிக்க வைப்போம்னு வச்சாய்ங்க போல. வாழ்க. அதுல (குழந்தைகள் கூட விரும்பி பார்க்கிறதை கவனிச்சிருக்கேன்) ஆம்பளை சோடா வேணமா பொம்பள சோடா வேணமா - பல்பு ஃப்யூஸ் ஆயிருச்சு - கோழி மிதிச்சு குஞ்சு சாகிறது மாதிரி காட்சியெல்லாம் கச்சா முச்சான்னு வருது.

குழந்தைங்களும் பார்க்கிற சானலே கோலி ஆடும்போது நிர்வாண உண்மைகள்னு பேரை வ்ச்சிருக்கிற ப்ளாக்ல கோலி மேட்டர் வரலாம் தான்.

நம்ம ஜோலிக்கு வந்த பிக்காலிகளுக்கு கோலி எப்படி காலியாச்சுங்கற கேள்விக்கு பதிலா இந்த பதிவு. ஆண் பெண் வித்யாசம் தொடர் ஞா இருக்குங்ணா. ஆன்லைன் கன்சல்ட்டன்சில 30 நாளுக்கு மேல வயசான ஜாதகம்லாம் பெண்டிங் இருக்கிறதால - அடுத்து எழுத வேண்டிய 10 ஆம் பாவம் சிக்கலான சப்ஜெக்டுங்கறதால இந்த பைபாஸ்.

நம்ம ராசா வேற இந்த மேட்டரை எழுதினா நல்லாருக்குமேன்னு கேட்டிருந்தாரு. அதான் இப்படி டைவர்ட் ஆயிட்டன்.

மார்க்கெட் சவுக்ல ஆஃபீஸ் ஓப்பன் பண்ணின புதுசு. எவனோ குடிகார நாயி செத்தான். அதுக்கு எவ்னோ ஒரு கு.நா போதையில நம்ம ஆஃபீஸ் பக்கம் வந்து " இன்னா.. சாமீ.. க.....டையெல்லாம் திறக்க ப்படாது.ஒடனே .மூடு"ன்னான் அம்புட்டுதேன். வேற ஒன்னும் பண்ணலை.

போலி பேர்ல வந்து கமெண்ட் போடலை. நம்ம பேர்ல போலி ஐடி கிரியேட் பண்ணலை. வேற ஒன்னும்.. ஒன்னும் பண்ணலை. ஜஸ்ட் போதையில என்ன பேசறோம் ஆருகிட்டே பேசறோம்ங்கற சொரணையில்லாம வாயு வெளியேறின கணக்கா வந்த பேச்சு இது.

அது இன்னா வருசம்? 1998 . இன்னி வரைக்கும் பாவம் தலை தூக்கலை. அண்ணன் தம்பி வெட்டி மடிஞ்சானுக. நாமதேன் பஞ்சாயத்து. அம்மா ஒரு தாட்டி கோச்சிக்கினு பூட்சி. நாமதேன் ப்ரஸ்னம். அண்ணன் காரன் கவுரதையா ஆட்டோ ஓட்டறான். இவன் கண்னெல்லாம் பஞ்சடைச்சுப்போய் -தாடி மீசையோட - சாயம் போன லுங்கி - ஹவாய் செருப்போட மாசம் ஒரு தாட்டி கிராஸ் ஆகிறான். அவ்ளதேன். நானும் எத்தனையோ தாட்டி ஆத்தா கிட்டே அப்பீல் பண்ணி பார்த்தேன். ஒன்னம் பேரலை.

இதுவாச்சும் பரவால்லை. இன்னொரு கேஸை சொன்னா நம்ம ஜா.ரா நொந்து நூடுல்ஸாயிருவாரு. ஒரு ஆசாமி. இவனோட குணச்சித்திரத்தை விவரிக்க ஒரே வரி போதும். எங்க ஏரியா வடிவேலுன்னு வச்சுக்கங்களேன்,

பெரிய டான் மாதிரி பயங்கர பந்தா பண்ணுவான். எவனாச்சும் வேர்க்குதே வேர்வையில சட்டைகாலர் நனையுதேன்னு கைய கழுத்துக்கு பின் புறமா விட்டா போதும் நம்மாளு ஒன் பாத்ரூம்தேன். ஒரு நாள் வேற ஒரு நண்பரோட வண்டிய பிச்சை எடுத்து எங்கயோ போகவேண்டி வந்தது ( நாம இல்லை.அந்த நாதாரி - அந்த வேலையில நமக்குதேன் கீ ரோல் )

அந்த வண்டிக்காரன் வீடு ஒரு காம்ப்ளெக்ஸ்ல இருக்கு. தலைவாசல்ல பெரிய கேட்டு. நம்மாளு கேட்டை திறந்துக்கிட்டு போய் வண்டிய தள்ளி ஸ்டார்ட் பண்ணிட்டான். கேட் சாத்தியிருக்கு. நம்ம பக்கம் பார்த்தான் . அந்த பார்வைக்கு அர்த்தம் "கேட்டை திற"ங்கறது.

நமக்கு தான் இந்த போலி கமெண்டு மாதிரியே போலி கவுரதையும் பிடிக்காதே. ஒழிஞ்சு போனுட்டு கேட்டை திறந்துவிட்டேன். அம்புட்டுதேன்.

என்னாச்சுங்கறிங்க? நாம போன வேலை பத்து நிமிச வேலை . கழண்டுகிட்டோம். பார்ட்டி ஆரோ பார்ட்டி தராய்ங்க - ஓசில குடிச்சு கூத்தடிக்கலாம்னு இன்னொரு வில்லங்க பேர்வழியை சோடி போட்டுக்கிட்டு போயிருக்கான்.

திரும்பி வர்ர வழியில ஆக்சிடெண்ட். கூடப்போனவனுக்கு தாடை நகர்ந்து போச்சு. சவுக்குல என்னடா பேச்சாயிருச்சுன்னா கூட போன வில்லங்க பேர் வழி ஊரெல்லாம் கடன். நம்மாளா சரியான ஆள் காட்டி. இவன் எங்கயோ ஆள் காட்டிட்டான்யா.ப்ளான் போட்டு கூட்டுப்போய் மாட்டிவிட்டுட்டானு அகுடாயிருச்சு. அவன் பொயப்பை பார்க்கனுமே. நா.........றிருச்சு. ஃபைனான்ஸ் கொடுத்துக்கிட்டிருந்த பார்ட்டி ஃபைனான்ஸ் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துட்டான். இதுல டீஃபால்ட்டர் வேற.

ஆடி அமாவாசை ஸ்பெசலா ஒரு சில கவிதைகளை பதிவா போட்டிருந்தோம். ஒரு பார்ட்டி அம்மன் பக்தர்னு எஸ்டாப்ளிஷ் ஆன கிராக்கி. சரி இவ்ளோ பணம் விரயமாக்கறானே. பார்ஷியலா ஸ்பான்ஸர் பண்ணா இன்னம் ரெண்டு பார்ட்டிகளை பிக் அப் பண்ணி அம்மன் கவிதைகளை மலிவு பதிப்பா போட்டு சனத்துக்கு இலவசமா வினியோகிப்போம்னு ஒரு போஸ்ட் கார்டை தட்டிவிட்டேன். லோக்கல் பார்ட்டிதேன்.

பார்ட்டி கண்டுக்கிடலை. போடாங்கொய்யால ஒனக்கு கொடுத்துவைக்கலைன்னு விட்டுட்டன். ஆனால் காலப்போக்குல என்னாச்சுடான்னா சாவற வரை நாம இஷ்யூ போட்டப்ப எல்லாம் ரூ.500 மொழி எழுத வேண்டி வந்துருச்சு.இப்பம் அந்தாளு இல்லை.ஆனாலும் மகன் எழுதிக்கிட்டுதான் இருக்காப்ல.

நாம இன்டர் காஸ்ட் பண்ணிக்கிட்டு வெளிய வந்துட்டம். பெரிய அண்ணன், தம்பி எல்லாம் வெளி ஊரு. சின்ன அண்ணன் தான் வீட்ல .அவன் பொஞ்சாதி இம்சைக்கு அப்பா ஒரு ஓட்டல்ல சாப்பிடறதை வழக்கமா வச்சிருந்தாரு.

அந்த முதலாளிக்கு பெரியபெரிய பின்னணில்லாம் உண்டு. ஆனால் நமக்கு அதெல்லாம் கணக்கில்லை. நாம புள்ளையா இருந்தும் நம்ம அப்பனுகு இவன் சோறு போட்டானேங்கற ஃபீலிங் /கில்ட்டி நமக்கு. அந்த பக்கம் போறச்சல்லாம் இது ஞா வந்துரும்.

என்னாச்சுங்கறிங்க? அந்தாளுக்கு திடீர்னு பாடி பீடி மாதிரி ஆயிருச்சு. அந்தாளுக்குள்ள பெரிய பின்னணியில நாமளும் ஒரு அங்கம். அதனால நம்மை கேர் டேக்கரா போட்டு ஒரு நர்சிங் ஹோம்ல அட்மிட் பண்ணிட்டாய்ங்க. அங்கன நாமதான் பார்ட்டிக்கு சோறாக்கி போட்டோம்.

நானே நினைச்சுக்கறது " ஆத்தா.. இது இன்னா நியாயம்? ஆக்சுவலா அந்தாளு நல்லதை தான் செய்தான். அப்பனுக்கு சோறு போடவேண்டியது மகனா என் கடமை.அதை செய்யமுடியாத நிலைமையில காசு வாங்கிக்கிட்டு தான் போட்டான்னாலும் சோறு போட்டான். எனக்கு லேசா கில்ட்டி. இதுக்குப்போயி அவன் பாடியை ஏன் பீடியாக்கனும்.அவன் ஏன் அட்மிட் ஆகனும்.அவனுக்கு நானே ஏன் கேர் டேக்கரா போகனும். சோறாக்கி போடனும்னு ஆத்தாவை பல தாட்டி கேட்டிருக்கேன். பதில்தான் இல்லை.

இப்படியாகொத்த இன்சிடென்டுங்க நூத்துக்கணக்குல இருக்கு. 1986 ல தேன் ராம நாம ஜெபம் ஆரம்பிச்சோம். 2000 டிசம்பர் 23க்கு அப்பாறம்தேன் ஹ்ரீங்கார பீஜ ஜபம் ஆரம்பிச்சோம். ஆனால் விவரம் தெரியறதுக்கு மிந்தியே.. ரெம்ப சின்ன வயசுலருந்தே நம்மை ஆருனா சீண்டினா - தங்களோட
கண்ட்ரோல்ல கொண்டு வரனும்னு நினைச்சாலே பல்புதேன்.

இதுக்கு ஜோதிட ரீதியா என்ன காரணம்னு அப்பாறம் சொல்றேன். நான் நினைக்கிறது என்னன்னா நம்ம மைண்ட் க்றிஸ்டல் க்ளியரா இருக்கு. நேத்து இன்னைக்குல்ல அம்புலி மாமா,ரத்னபிரபா படிக்கிற காலத்துலருந்தே நம்ம கான்செப்ட் ஒன்னுதேன். கொய்யால .. சரித்திரத்துல நின்னுரனும். அதுக்கு எதுனா செய்துரனும்.

நாளைக்கு பரீட்சைன்னா இன்னைக்கு நோட்ஸ் இரவல் கேட்டாலும் தந்துருவன். இப்படி ஒரு எண்ணம் இருந்ததால இப்படி ஒரு பவர் ஏற்பட்டுதாங்கற சந்தேகமும் நமக்குண்டு. காமம் தலைக்கேறி இருந்த காலத்துல அட .. நாலணா தேவடியாளா இருந்தாலும் நம்ம மொத கேள்வி "சாப்டியா? ஹோட்டல் போலாமா வரவச்சுரலாமா"

ஒரு பன்னாடைன்னா பல்பு வாங்கி வாங்கி நொந்து நோக்காடா போயி - எத்தனை நாளு மனசுல வச்சு குமைஞ்சுதோ - வந்து கேட்டுருச்சு - நீ என்னமோ பண்றே - இந்த கேள்விய கேட்க தில் வர்ரதுக்கு ஒரு ஃபுல் அடிக்க வேண்டி வந்துருச்சாம்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான அனுபவங்கள். இதை வச்சுத்தேன் ஆடி அமாவாசை ஸ்பெசல்ல ஆத்தாளுக்கு

" உன் தாள் பிடித்தவர்களையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை அள்ளி அணைத்த கையை காட்டு"ன்னுட்டு கவிதை எழுதினோம்.