Showing posts with label Copier. Show all posts
Showing posts with label Copier. Show all posts

Tuesday, August 2, 2011

போலியின் ஆணவம் (ஆவணம்)


சமீபகாலமாக ஒரு எழுத்துப்புரட்சி, பின்னூட்டங்களாக வந்து கொண்டிருப்பதை அன்பர்கள் அறிவார்கள்... அச்சில் ஏற்றமுடியாததையும், வலை ஏற்றி எங்களை மிக நன்றாக கவனித்து, கவனித்து பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்கும் அந்த போலி... இப்பொழுது தன் வேசம் மாற்றிவிட்டார்... கருப்பு ஆடு, வெள்ளாடாகிக்கொண்டிருக்கிறது... என்றாலும் நாங்கள் அந்த போலியை வாழ்த்துகிறோம்..

நமக்கெல்லாம் கோபம் வந்தால் தெருவில் போகிறவனையும், வருகிறவனையும், திட்டவோ அடிக்கவோ முடியுமா? நமக்கு வேண்டிய மனிதர்களிடம் தான் அதை திருப்பி செலுத்த முடியும். அதைத்தான் அந்த போலி செய்து கொண்டிருக்கிறார்... அதோடு... உலகமகா கோபத்தை காட்ட வேண்டுமென்றால், உங்களுக்கு மிக பிரியமான வாழ்க்கை துணையிடம் தான் முடியும். மிக அன்பு எங்கிருக்கிறதோ, அங்கேதான் மிகுந்த கோபமும் பிறக்கும்... அதாவது மிகுந்த அக்கறை....

எங்கள் மேல் அக்கறை காட்டும் அந்த போலியை, அந்த அன்பை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.

ஆனால்... ஒரு வரம்பு மீறி ஒரு ஆள் மாறாட்டம் நடந்துகொண்டிருப்பதை எச்சரிக்கவேண்டிய கட்டாயம் இப்பொழுது இருக்கிறது... ஒரு சட்ட சிக்கலில் அவர் சீக்கிரம் சிக்கிவிடுவதற்காண முயற்சியில் அந்த போலி இறங்கியிருகிறார்... அதற்கான ஆதாரங்கள் திரட்டும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது... அவர் மீதான அக்கறையில் இந்த விளக்கம் தர வேண்டி இந்த பதிவை தருகிறோம்.

இதன் மூலமாக சித்தூர். எஸ். முருகேசன் என்ற பெயரில் வரும் போலியின் பின்னூட்டங்களை அன்பர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

ஒரு விளக்கம்... ஒளிப்படம் வாயிலாக...

இது ஒரிஜினல்...

இது போலி

அன்பர்கள் வித்தியாசம் காண வேண்டுகிறேன்