Thursday, October 27, 2011

ஒரு தாய்குலத்தின் மிரட்டல் மெயில்


நெஜமாலுமே நமக்கு மிரட்டல் மெயில் தான் வந்திருச்சு போலன்னு பயந்துக்காதிங்க. மிரட்டலா ஒரு மெயில் அதுவும் தாய்குலத்துக்கிட்டேருந்து வந்ததை அவிக பர்மிசனோட இங்கன பப்ளிஷ் பண்றேன். போஃபர்ஸ் ஊழல் சீப்பட்டுக்கிட்டிருந்தப்ப ராம்ஜெத்மலானி ராஜீவ் காந்தியை தினசரி பத்து கேள்வி கேட்டு மிரட்டிக்கிட்டிருந்தாரு.அதைப்போல பல நாட்களா மெயில்ல கேள்விகள் மூலமா கலங்கடிச்ச கதை இது.

மெயிலுங்கறதால சுத்தி வளைக்கிறது, அனாவசிய மன்னாப்புகள் இத்யாதி யதேஷ்டமா இருந்ததால அதையெல்லாம் எடிட் பண்ணி பாய்ண்ட் டு பாய்ண்டா இங்கன தரேன்.,

1 பெண்கள் விஷயத்துல .நிஜமாவே இந்த உலகம் - சனம் மாறும்னு நம்பறிங்களா?

என்னங்க இது என்னென்னவோ கச்சா முச்சான்னு கேட்டு கலங்கடிக்கப்போறேன் - பேஜார் பண்ணப்போறேன்னுட்டு அரதப்பழசான கேள்வியை கேட்கறிங்க. சனம் மாறியிருக்காய்ங்க. நிச்சயமா மாறுவாய்ங்க. மொதல்ல புருசன் செத்ததும் உடன் கட்டை ஏற்றி கொன்னாய்ங்க - அப்பாறம் மொட்டை போட்டு இருட்டு மூலையில இருத்தினாய்ங்க - அப்பாறம் பூவைக்காதே,வெள்ளை புடவை மட்டும் உடுத்துன்னாய்ங்க - அப்பாறம் சின்னதா பூ போட்ட புடவை மட்டும் கட்டுன்னாய்ங்க. இப்பல்லாம் விதவையான 6 ஆவது மாசமே "இப்படியே இருந்தா எப்படி "ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. மாறுவாய்ங்க.மாறியே தீருவாய்ங்க.

என்ன கொஞ்சம் டைம் வாங்கும். என்னைப்போன்ற சாமானியர்கள் சொல்வதை விட அரசாங்கம் சட்டம் போட்டு சொன்னா சீக்கிரம் மாறுவாய்ங்க.


2.பெண்களை ஒரேயடியா தூக்கோ தூக்குன்னு தூக்கி எழுதறிங்க. உங்க அசலான நோக்கம் என்ன?

மொதல்ல ஒரு மேட்டரை க்ளியர் பண்ணிரனும். என்னோட அஜெண்டா வித்யாசமானது. ரெண்டே கால் நாள்ளயும் முடியும் - அஞ்சு வருசத்துலயும் முடியும் - மிஞ்சிப்போனா 15 வருசம். எங்க ஊரு ஒய்.எஸ்.ஆர் சொன்னாப்ல 60 வயசுல நிச்சயம் ஜகா வாங்கிப்பன்.

தாய்குலத்தை புகழ்ந்து பேசி ஓட்டுவாங்கனும்ங்கற அவசியம் எனக்கில்லை. நேரிடை ஜன நாயகம் அமலாகி பிரதமரை மக்களே டைரக்டா எலக்ட் பண்ற நாள் வர்ரச்ச தேர்தல்ல நின்னா நிக்கலாம். ஆனால் இதெல்லாம் ந........ட..க்கிற காரியமான்னு எனக்குள்ளயே ஒரு பட்சி சொல்லுது.

சரி.. பெண்களை உசத்தி எழுதினா அவிகல்லாம் வந்து என் ப்ளாகை படிச்சு ஹிட்ஸ் கொடுத்து - பிரபலமாக்குவாய்ங்கன்னும் நான் நினைக்கலை. ஏன்னா அவிகளுக்கு மெகாசீரியல் பார்க்கவே நேரம் போதலை. இதுல ப்ளாக் படிக்க வந்தாலும் கோவில்,குளம்,சமையல்னு எத்தனை டைவர்ஷன்ஸ் இருக்கு.

பெண் வீக்கர் செக்ஸ் நேரடி- அதிரடி உண்மைகளை படிச்சாலே ஜூரம் வந்துரும். நம்முது எக்ஸ்ரே ரேஞ்சு.ஆக சான்ஸே இல்லை.

சரி ஆன்லைன்ல சோசியம் கேட்டுக்கிட்டு என் வங்கி அக்கவுண்டை புஷ்டியாக்குவாய்ங்களான்னா அதுவும் கடியாது. நம்ம க்ளையன்ட்ஸுல பெண்களை விரல் விட்டு எண்ணிரலாம்.

பின்னே என்னாத்துக்கு இந்த இழவுன்னா பெண்களால ஒரு ஆணுக்கு உடலுறவை தவிர்த்து உபரியா என்னல்லாம் தரமுடியும் - அதை பெற்றால் ஒரு ஆண் எந்த அளவுக்கு சாதிக்கமுடியும்ங்கறதுக்கு நானே ஒரு உதாரணம்.

ஒரு குடும்பத்தலைவி அகாலமா போயிட்டா அந்த இடத்தை வேறு ஒரு பெண் (மருமகளாவோ-மூத்த மகளாவோ) அந்த குடும்பம் எந்த கதியாகும்ங்கறதுக்கு எங்க குடும்பம் ஒரு உதாரணம்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ரெண்டு பெண்கள் இருக்காய்ங்க. 1. தினசரி வாழ்க்கையில நாம பார்க்கிற பெண் 2. இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இந்த உலகத்தையே ஒரு சொர்கமாக்கக்கூடிய பெண்.

துரதிர்ஷ்டவசமா அந்த இரண்டாவது பெண்ணை நூத்துக்கு 99.99 சதவீத ஆண்களால சந்திக்கவே முடியாம போயிருது.

சின்ன மேட்டர். ஆனால் டோட்டலா ஹ்யூமன் லைஃபே பிட்டர் ஆயிருது. முக்கியமா மனிதம் செத்துப்போகுது.

தனி மனிதன் செத்துப்போனான்ங்கற சேதிக்கு நான் என்னைக்குமே கவலைப்பட்டதில்லை.( சாக கிடக்காய்ங்கன்னா கொஞ்சம் டென்ஷன் ஆயிருவன் - அதுவேற மேட்டர்)

ஆனால் மனிதம் செத்துப்போச்சுன்னு தெரிஞ்சா மட்டும் கலங்கிருவன். இந்த மண்ணுலகில் மனிதம் சாகாம இருக்கனும்னா பெண்ணுக்குள் ஒளிஞ்சிருக்கிற அந்த ரெண்டாவது பெண் வெளிய வரனும்.அப்பத்தேன் மனிதம் பிழைக்கும்.


3.மனிதத்தை காப்பாத்தறதுல உங்களுக்கு என்ன இன்டரஸ்ட்?

நான் பலகீனன். இந்த பூமியில மனிதம் வாழும் வரைதான் என்னால வாழமுடியும். சர்வைவல் ப்ராப்ளம்ங்க.. இந்த கோணத்துல பார்க்கும் போது பெண்ணுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கு. மெல்ட் ஆறப்பத்தான் சிக்கலே வருது. மெல்ட் ஆகாம இருக்க முடியலை. பெண்களை பற்றி எழுதும்போது என்னை பற்றியும் எழுதறதா ஒரு சப் காஷியல் தாட் இருக்கும் மைண்ட்ல.

4.பெண்ணை பற்றி இவ்ள உயர்வா எழுதறிங்க. ஆனால் செக்ஸை நுழைக்கிறிங்க.ஏன்?

பெண்ணுக்கு செக்ஸ் தேவையில்லைங்கறிங்களா? அ பெண் இல்லாமயே செக்ஸ் சாத்தியம்ங்கறிங்களா? புரியலை

5.பெண்ணுக்கு செக்ஸ் முக்கியமே இல்லை..

இதை நானே பல தடவை சொல்லியிருக்கேன். இது நல்லதில்லை. அவள் அதுக்கு மாற்றா எதிர்பார்க்கிற அன்பு ,பாசம், சமூக பாதுகாப்பெல்லாம் தர்ர நிலையில இந்த சமூகம் இல்லை. அவள் தனக்கு செக்ஸ் முக்கியமில்லைன்னு இருக்கிறது டெம்ப்ரவரி . எனக்கும் செக்ஸ் தேவைன்னு அவள் எந்த வயசுல வேணா தன் நினைப்பை மாத்திக்கலாம். அது 30 வயசுல நடக்கலாம், 40 வயசுல நடக்கலாம்.ஏன் 50 வயசுல கூட நடக்கலாம்.அவள் பெண்ணுக்குள் ஒளிஞ்சிருக்கிற 3 ஆவது பெண். அவளை தாங்கற சக்தி ஆண் புழுக்களுக்கு இல்லை.

இந்த நிலையெல்லாம் வரதுக்கு மிந்தியே -அவள் தனக்கும் தேவைன்னு நினைக்கறதுக்கு மிந்தியே ஒழுங்கு மரியாதையா செக்ஸும் கிடைச்சா அந்த பெண்ணுக்குள்ள ரெண்டாவது பெண் வெளிவருவாள். அவள் வரனும்னு தான் செக்ஸை பத்தி எழுதறேன்.


அதையும் ஆண்களை முன்னிலைப்படுத்தித்தான் எழுதறேன். ஏன்னா செக்ஸ்ல கூட ஆண் தான் கமாண்டர்.

சமீப காலத்துல செக்ஸ்ல திருப்தி கிடைகக்லேங்கற ஒரே காரணத்தை காட்டி விவாகரத்துக்கு அப்ளை பண்ற பெண்களோட நெம்பர் அதிகரிச்சிருக்கிறதா ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. ஆணுக்கு சமமா வரணும்னு பெண்ணை ஆணாக்கிட்டாய்ங்க. அதனோட விளைவு தான் இது.

( கேள்வி பதில் தொடரும்)