Thursday, October 20, 2011

2012,மார்ச் 22 க்குள் உலகளாவிய புரட்சி?


நம்ம நாட்ல அசாரே தாத்தா உ.விரதம் , அட்வானிஜி ஜன சேதன் யாத்ரா இத்யாதியால எல்லாம் புரட்சி வரவே வராது. இது சர்வ நிச்சயம். இதுக்கு ஜோதிட ஞானம்லாம் தேவையில்லை. கிட்னியால ரோசிச்சாலே போதும்.

"பழைய நினைப்புடா பேராண்டி ..பழைய நெனப்புடா" ரேஞ்சுல அட்வானி வேட்டி வரிஞ்சு கட்டி / அடடே கீப்பாஸை இழுத்து செருகி புறப்பட்டுட்டாரு. வாழ்க்கையில எதுவுமே ஒரு முறை தான் . முதலிரவாகட்டும் , ரத யாத்திரையாகட்டும்.

தெலுங்கானா போராட்டத்தையே எடுத்துக்கங்க. முதல் கோனை முற்றும் கோனை.சேரமாட்டோம்னவுகளை சேர்த்தாய்ங்க. சேர்த்தது சேர்த்தாச்சு ஒயுங்கா நடத்தினாய்ங்களா? இல்லை. ஸ்பெஷலா அவிகளை வதைச்சது ஏதுமில்லை. அவிக கூவுனப்பல்லாம் சகட்டு மேனிக்கு வாக்கு தத்தம் பண்றது. சூடு ஆறினதும் காத்துல விடறது.

ஆந்திரா ராயலசீமால நிர்வாக சீர்கேட்டால் என்னெல்லாம் இழவெடுத்தாய்ங்களோ அதே இழவுதான் அங்கனயும்.ஆனால் கம்யூனிகேஷன் கேப். மோட்டிவேஷன் . சரியான தலை இல்லாமை காரணமா புரட்சின்னு எதை எதையோ செய்து கடேசியில கே.சி.ஆருக்கு தேவையான ஆளுக்கு போலவரம் டென்டர் கிடைச்சது . புரட்சி அம்பேல். ( விவரம் கடைசியில்)

இந்திய அளவுல எடுத்தா ஊழல் ஊழல் ஊழல்.ஊழலை விட ஊழலை எதிர்க்கிறவுகளோட லொள்ளு தாங்க முடியலை. எங்க பக்கம் சந்திரபாபு.

விலைவாசியா அண்டைவெளியை எல்லாம் தாண்டி சூனியத்துல எங்கனயோ போய் மாட்டிக்கிச்சு. நம்மாளுங்க ராக்கெட் விடறதே அந்த விலைவாசிய தேடிப்பிடிச்சு இறக்கதான்னும் ஒரு வதந்தி. இதுல வறுமைக்கோட்டை தீர்மானிக்கிறதுல கேலிக்கூத்து வேற.

நிற்க. உலகளாவிய புரட்சி வருமா?ங்கற கேள்விய நமக்குள்ள எழுப்பினது நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டை நோக்கிய சனங்களின் புறப்பாடுதேன். அதுலயும் அவிக எழுப்பின கோஷங்கள் தேன்.

நாமளும் நாலெழுத்து படிச்ச கேஸுதேன்.ஆனாலும் தாளி பங்கு மார்க்கெட் தாண்டி குதிக்குது - தனி நபர் வருமானம் உசந்து போச்சு -வாங்கும் சக்தி ஏறிப்போச்சு மாதிரி பீலாவையெல்லாம் நம்பறதே இல்லை. நம்ம ஊரை சுத்தி கிராமங்கதேன்.

ஒயுங்கா மழை பேஞ்சா தாளி பத்து வட்டிக்கு கூட கடன் வாங்கி பயிர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. வைன் ஷாப்ல , களி, போட்டி விக்கிற கடையில எல்லாம் ஈ ஓடுது. மளை இல்லைன்னா அக்குள்ள ஈ நாடு பத்திரிக்கையை செருகிக்கிட்டு டவுன் பக்கம் டைம் பாஸுக்கு வந்துர்ராய்ங்க. வைன் ஷாப்பெல்லாம் ஹவுஸ் ஃபுல், 12 மணிக்கே களி இல்லை. போட்டி இல்லை.

இந்த ஷேர் மார்க்கெட்டு ஷேர் மார்க்கெட்டுன்னு அலட்டிக்கிறாய்ங்களே. இது வயாக்ரா சாப்பிட்ட கணக்கா ஒரே தூக்கா தூக்கினா தேசம் சுபிட்சமாயிருமா என்ன? ஷேர் மார்க்கெட்டுங்கறது சில நூறு லிஸ்டட் கம்பெனிகளோட விவகாரம். அந்த கம்பெனிகளோட ஷேரை வாங்கி விக்கிற சூதாடிகளோட விவகாரம்.

அதுலயும் ஒரு கம்பெனிக்காரன் இன்னொரு கம்பெனியோட ஷேரை வாங்கறான்னா " நாலும்" ரோசிச்சு நாலும் கவனிச்சு வாங்குவான். கவனிச்சிக்கிட்டே இருப்பான். அவனால இவனுக்கு லாபம். இவனால அவனுக்கு லாபம்.

இப்பம் என்னடா ஆச்சுன்னா வேலைக்கு போற பொஞ்சாதி கிடைச்ச சோடா புட்டியெல்லாம் ஷேர் வாங்கறேங்கறான்.இவனுக்கென்ன மசுரா தெரியும்? நீச்சல்டிப்பது எப்படினு புஸ்தவம் விடறாப்ல ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது எப்படின்னு புஸ்தவங்க வருது.

இந்த சோடா புட்டிகளாலயே ஷேர் மார்க்கெட் நாமம் போட்டுக்கிச்சினு நினைக்கிறேன். ஹர்ஷத் மேத்தா இவனுகளோட "அதி மேதாவித்தனத்தை" முதலீடா வச்சு கிரிமினலா ப்ளான் பண்ணி கழிசடை ஷேரையெல்லாம் விலை ஏற வச்சு - படக்குனு ஒரு கட்டத்துல வித்து ஏமாத்தினான்.

இந்த பன்னாடைங்க அப்படியும் திருந்தலை. ஏறுது ஏறுது ஏறுது - வித்துரு. இறங்குது இறங்குது வாங்கிரு இதான் இவிக தாரகமந்திரம். இந்த இழவுல மார்க்கெட் விழுதுன்னா ஒடனே நிதி மந்திரி முட்டு கொடுக்கனும். ஆன தகிடு தத்தம்லாம் பண்ணனும்.

( ஷேர் மார்க்கெட்டை பற்றி ஆதி காலத்துலயே நிறைய கிறுக்கியிருக்கம் - அப்பம் கண்டுக்கிடாதவுக கீழ்காணும் தொடுப்புகளை சொடுக்கி படிச்சு வைக்கலாம்- முக்கியமா பதிவு போடப்பட்ட தேதிகளை கவனிங்க - எந்தளவுக்கு அட்வான்ஸா ரோசிச்சிருக்கன்னு புரியும்.)

1. ட்ரிங்கிங் வாட்டர் ஃப்ரம் அலாஸ்கா

http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_08.html

2.கருந்துளை (Black Hole)நோக்கி விரைந்து செல்லும் இந்திய பொருளாதாரம்

http://kavithai07.blogspot.com/2007/12/black-hole.html


உலகமே - உலக அரசாங்கங்களே ஷேர் மார்க்கெட்டை சுத்தி வராப்ல ஆயிருச்சு. இதுல சனத்தோட பிரச்சினையை எவன் கவனிச்சான். சனம் பூனை மாதிரி . அதை அடிக்க அடிக்க ஒளிஞ்சுக்க /தப்பி ஓட வழி இருக்கிற வரை அலை பாயும். அப்படி ஒரு சாய்ஸ் இல்லேன்னா தாளி புலிப்பாய்ச்சல்தேன்.

சனத்துக்கு இப்பம் தப்பி ஓட வழியே இல்லை பாய ஆரம்பிச்சுட்டாய்ங்க. இத்தீனி நாளு கார்ப்பரேட் நிறுவனங்களோட கவசமா செயல் பட்ட அரசாங்கங்கள் இனி குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியதுதேன்.

புரட்சி வருமான்னு குத்து மதிப்பா பார்ப்போம். உழைக்கும் வர்கத்துக்கு காரகன் சனி. இவரு நவம்பர் 17 ஆம் தேதி கன்னியிலருந்து துலாத்துக்கு வரப்போறாரு. இது அவருக்கு உச்ச ராசி. ஆக அடுத்த இரண்டரை வருசத்துக்கு தொழிலாளிகளோட கை ஓங்கனும். அதுக்கு புரட்சி தானே வழி. பார்ப்போம்..

மேலும் 2011 ,செப் ,10 லருந்தே கடகத்துல நீசமாகிக்கிடக்காரு. யுத்தகிரகமான செவ் நீசமான போதெல்லாம் "இமிசை" தேன். இது இத்தோட முடியலை.

நெருப்பு கிரகமான சூரியனோட ராசி சிம்மம். இந்த சிம்மத்துக்கு நெருப்பு கிரகமான செவ்வாய் அக்டோபர் 31 ஆம் தேதி வர்ராரு,( 45 நாள்ள ராசி மாற வேண்டிய கிரகம் இது) 2012 ஜனவரி 23 வரைக்கும் சிம்மத்துலயே கேம்ப். இது மட்டுமா ஜனவரி 24 முதல் வக்ரமாகிறாரு.மார்ச் 22 வரைக்கும் வக்ரமே .( பஞ்சாங்கம் முடிஞ்சு போச்சு - அடுத்த பஞ்சாங்கம் கடைக்கு வந்ததும் எதுவரைக்கும் வக்ரம்னு கரீட்டா சொல்றேன்.

சூரியன் ராஜாவை ( பிரதமர்/அதிபர்) காட்டும் கிரகம். செவ் ராணுவத்தை காட்டும் கிரகம். ராஜா வீட்டுக்கு ராணுவம் வரலாம். ஏதோ நல்லது கெட்டது நடக்கறச்சா நாலு நாள் காவலுக்கிருந்துட்டு கழண்டுக்கனும்.ஆனால் இங்கன பார்த்தா 98 நாள் ஹால்ட் ஆயிர்ராரு. ( வக்ர காலத்தை சேர்த்தா 98+60 = 158 நாள்.

செவ் சாதாரணமா சஞ்சரிச்சாலே ஆப்பு. இதுல தன் இயல்புக்கு மாறா அதிக காலம் சஞ்சரிக்கப்போறாரு. இதுல வக்ரம் வேற .

செவ் வக்ரமாறதுக்கு மிந்தி வேணம்னா அரசாங்கங்களுக்கு ராணுவங்களின் மேல கண்ட்ரோல் இருக்கலாம். வக்ரமாகி தொலைச்சா?

ராணுவ புரட்சி கணக்காவும் எதுனா நடக்கலாம். எங்கே நடக்கும்னு கேப்பிக .ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ராசி இருக்கு இதன் படி ஜப்பான் சிம்ம ராசி . புரட்சி ஜப்பான்ல மட்டும் நடக்கும் - அல்லது ஜப்பான்ல புரட்சிதான் நடக்கும்னுல்ல.

ஜப்பான்ல எரிமலை வெடிக்கலாம்/அணு உலை வெடிக்கலாம் /வரலாறு காணாத தீ விபத்து நடக்கலாம். அதே நேரத்துல மேஷம், விருச்சிகத்தை ராசியா கொண்ட நாடுகள்ள புரட்சி/ மேற்சொன்ன பலன்கள் நடக்கலாம்.

சூரியன் நடு பாகத்தை குறிக்கும் கிரகம் அதனால உலகத்தின் மையப்பகுதியில் உள்ள நாடுகள்ள நடக்கலாம். செவ்வாய்னா தெற்கு திசை ஆக தெற்கு திசையில் உள்ள நாடுகள்ளயும் நடக்கலாம்.

சூரியன்னா லீடர். அதனால உலகப்புகழ் பெற்ற தலைவர்கள் டிக்கெட் கூட வாங்கலாம். அல்லாம் செரி தலை .. இந்த செவ்வாயோட ஸ்தம்பனம் ( வழக்கத்தை விட அதிககாலம் தங்குவது) வக்ரம் - அதிலும் சிம்மத்துல வக்ரமாறதால நம்ம ராசிக்கு என்ன நடக்கும்னு சொல்லவே இல்லையேன்னு கேப்பிக.

சொல்றேன். இன்னொரு நாள் ஆடியோ ஃபைல்ல அக்கு வேறு ஆணி வேறா சொல்லிர்ரன்.

கொசுறு:

1.தனித்தெலுங்கானா கேட்டு அதகளம் செய்த கே.சி.ஆர் மேல ஒரு திடுக்கிடும் புகாரை எழுப்பியிருக்காய்ங்க. போலவரம் அணை டெண்டரை தன் ஆளூங்களுக்கு வாங்கிக்கிட்டு சைடு கொடுத்துட்டாருங்கறாய்ங்க.

(இத்தனைக்கும் போலவரம் கூடவே கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கினவுக அவிக - கொய்யால கொள்கை வேற வியாவாரம் வேறன்னு அலார்ட்டா இருக்காய்ங்க)

2.சோனியாகாந்தி 2004 ஆந்திர சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துல தெலுங்கானா தருவோம்னு டிக்ளேர் பண்ணாய்ங்க. 2009 நவம்பர் 9 ஆம் தேதி தெலுங்கான மானில ஏற்பாட்டுக்கான நடைமுறைகள் துவக்கப்படுகின்றனனு சிதமப்ரத்தை வச்சு அறிக்கையும் விட்டாய்ங்க.ஆனால் இப்பம் தெலுங்கானா மேட்டரை திராட்ல விட்டுட்டாய்ங்க. சோனியா வாக்கு கொடுத்து நிறை வேற்றாத காரணத்தால 800 பேருக்கு மேல தற்கொலை செய்துக்கிட்டாய்ங்க - இதனால இவிகளை தற்கொலைக்கு தூண்டினதா சோனியா மேல வழக்கு பதிவு செய்யனும்னு ஹைதராபாதை சேர்ந்த அருண் என்ற லாயர் பெட்டிஷன் போட்டார்.( பாட்டியாலா கோர்ட்ல) . இதை விசாரணைக்கு ஏத்துக்கிட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 15 க்கு தள்ளி வச்சிருக்காராம். கனி, ராசா அண்ட் கோ வும் இந்த கோர்ட்டுக்கு தானே வந்து போறாய்ங்க.

3.ஏழுமலையானுக்கு ரஜினி எடைக்கு எடை கல் கண்டு கொடுத்தாராம். தன்னோட உசுரோட மதிப்பு அவருக்கு நெல்லாவே தெரிஞ்சிருக்கு. சனங்களுக்கு அல்வா .ஏழுமலையானுக்கு கல்கண்டு.