Sunday, October 30, 2011

ராதாவின் (40) ராவுகள்

ராதா இப்படி ஒரு வில்லங்கத்தை கொண்டு வந்து தன் தலையில் சுமத்துவாள் என்று எதிர்ப்பார்க்காத ராம நாதனுக்கு அவளுக்காக தான் போலீஸ் ஸ்டேஷன் படியேறப்போவதும் அங்கு திரவுபதி வஸ்த்ராபரணம் கணக்காய் அவமானம் நடக்கப்போவதும் தெரியாது போனது. எல்லாவற்றுக்கும் மேல் மனைவியின் மரணத்துக்கு பிறகு இத்தனை வருடம் புதைத்து வைத்திருந்த காமப்பேய் ஒரே இரவில் தலைவிரித்தாடப்போகிறது என்று சத்தியமாய் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நேரம் கெட்ட நேரத்தில் வந்த ராதாவை தன் அறையில் அனுமதித்திருக்கவே மாட்டார்.

ராம நாதன் ஒரு தனியார் சாக்லெட் கம்பெனியில் அக்கவுண்டன்டாக இருந்து ரிடையர் ஆனவர். மகளுக்கு வந்த வரன்கள் அவளுக்கு பொருந்துகிறதா என்று பார்க்க கற்றுக்கொண்ட ஜோசியம் ஃபெவிகாலாய் ஒட்டிக்கொள்ள மனைவியின் மறைவு , மகளின் பிரிவுக்கு பிறகு ஜோசியராகிவிட்டார்.
பிறப்பு கொடுத்த தகுதியோடு காலப்போக்கில் கை வந்த தொழில் நுணுக்கங்களும் அவரை வெற்றி கரமான ஜோதிடராக்கிவிட்டன.


ராதா இவருக்கு ராஜ போஷகர் மாதிரி. இவர் சொந்த ஊர் விட்டு சென்னையில் வந்து தொழில் ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டிருந்த சமயம் முதல் முதலாய் வந்து ஜாதகம் பார்த்துக்கொண்டு போனது ராதா தான் . வாரத்துக்கு நாலு பேரையாவது அழைத்துக்கொண்டு வந்து விடுவாள். இப்படி வந்தவர்கள் மூலம் கேள்விப்பட்டு வந்தவர்களால் ராம நாதனின் தொழில் செழித்தது.

ராதா கணவனை இழந்தவள் . இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்தவன் திருமணத்துக்கு பின் வைப்பாட்டி ஒருத்தியை சேர்த்துக்கொண்டு, வைப்பாட்டியை பெண்டாட்டி கணக்காய், பெண்டாட்டியை வைப்பாட்டி கணக்காய் வைத்துக்கொண்டு ஆட்டம் போட நொந்து கிடந்த ராதா சின்னவனாவது உருப்படுவானா, மகளுக்கு ஒரு நல்ல வழி கிடைக்காதா என்றுதான் ராம நாதனிடம் வந்து பலன் கேட்டுப்போவது வழக்கம்.

வீடென்னவோ சொந்த வீடு, கணவர் எஸ்.ஐ ஆக இருந்தவர் . பென்ஷன் தொகையயும், தெரிந்தவர்களுக்கு கடனாய் கொடுத்த தொகைகளின் பேரில் வரும் வட்டியையும் வைத்து வீட்டிலிருந்தே ஆள் அம்பு வைத்து வித விதமான வடாம், வற்றல், ரசம் பொடி ,சாம்பார் பொடி என்று தயாரித்து கடைகளுக்கு போட்டபடி காலம் தள்ளி வந்தாள். இந்நிலையில் தான் அகாலமாய் ராம நாதனை தேடி அவரது ரூமுக்கு வந்தாள்

ராதா. ராம நாதனின் ஒரே மகளுக்கு திருமணமான இரண்டாம் மாதமே அவர் மனைவி எந்த தேர்தலிலும் நிற்காமலே வைகுண்ட பதவி பெற்றுவிட்டாள். ஃபாரின் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை லீவுக்கு குழந்தைகளோடு வந்து போகும் மகள்,மருமகனை தவிர்த்து அவருக்கு வேறு யாரும் உறவென்று கிடையாது. தனிக்கட்டை. விடியலில் எழுந்து குளித்து பட்டை பட்டையாய் விபூதி தரித்து மணிக்கணக்காய் கந்தர் சஷ்டி கவசம் முதல் திருப்புகழ் வரை ஓதி மகிழ்ந்து பத்து மணியளவில் முன்னறையில் வந்து அமர்வார். அதுதான் அவருடைய அலுவலகம்.

ராம நாதனை தேடி ராதா வந்தபோது நன்றாகவே இருட்டியிருந்தது. கடைசி கிளையண்ட் எழுந்து போயிருக்க தன்னிச்சையாய் நேரம் பார்த்த ராம நாதன் மணி 8க்கு மேல் ஆவதை பார்த்து வியந்தார்.

"என்னம்மா இது எல்லாத்தயும் கணக்கா ப்ளான் பண்ணி செய்ற ஆளு இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்திருக்கிங்க"

"என்ன பண்றது சார். எல்லா நேரமும் நம்ம நேரமாவாயிருக்கு. நாம நினைச்ச மாதிரி நடக்க. போலீசுக்கு பயந்து இங்க வந்திருக்கன். இன்னி ராத்திரி இங்கேதான் தங்கனும்"

ராம நாதனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் ஒன்றும் தொண்டு கிழமில்லை.வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும், உடலளவிலும், உள்ள அளவிலும் காமம் என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது அதை கட்டுப்படுத்த இன்றளவும் அவர் போராடிக்கொண்டுதான் இருந்தார்.

ராதாவும் அப்படி ஒன்றும் பாட்டி வயதில் இருப்பவளல்ல.. காதோரம் லேசாய் நரைத்திருக்கிறதே தவிர , நெற்றி வெறுமையாய் இருக்கிறதேதவிர, தள தளவென்றுதான் இருக்கிறாள் .ஒரு நொடியில் இத்தனை விசயங்கள் ராம நாதன் மனதில் மின்னி மறைய அவற்றை மறைத்துக்கொண்டு "என்னம்மா இது போலீசுக்கு நீங்க பயப்படறதாவது.. இங்க தங்கறதாவது" என்றார்.

"நீங்க முதல்ல ஒரு தம்ளர் தண்ணீ கொடுங்க " என்று கேட்டு வாங்கி குடித்தவள் . தன் மனதில் இருந்தவற்றை கொட்ட ஆரம்பித்தாள்.

"ராம நாதன் ! நான் இப்ப ரொம்ப பதட்டத்துல இருக்கேன். நான் இப்ப என்ன பேசினாலும் நீங்க மனசுல வச்சுக்கக்கூடாது. இந்த நிலைமையில் என்ன பண்ணலாம்னு நீங்க தான் சஜஸ்ட் பண்ணனும் . ஓகேவா"

"நான் அப்படி நீங்க என்னத்த பேசிரப்போறிங்க அப்படியே பேசினாலும் நான் ஏன் அதை மனசுல வச்சுக்கபோறேன்"

" என் பெரிய பையன்பத்தி சொல்லியிருக்கேனில்லையா . சின்னவன் மேல எவ்வளவோ ஹோப் வச்சிருந்தேன். இப்பத்தான் தெரிஞ்சது அவன் கல்யாணமான ஒரு பாப்பாத்திய வச்சிருக்கான்னு"

ராம நாதனுக்கு கடுப்பானது. எவளையோ வச்சிருக்கான் என்று சொன்னால் போதாதா? அவளோட சாதியை வேறு குறிப்பிட்டு சொல்ல வேண்டுமா? வேறு சாதிக்காரி எவளும் பேச்சிலரை வச்சுக்கறதே இல்லையா?
என்றாலும் ராதாவால் தான் அடைந்துள்ள அனுகூலங்களை நினைத்து எரிச்சலை அடக்கிக்கொண்டார்.

எதையாவது சொல்லவேண்டுமே என்று "அட கிரகச்சாரமே" என்று அனத்தினார் ராம நாதன்.

"வச்சிருந்தாலும் பரவாயில்லை. அந்த லோலாயி வீட்டன்டை போய் அவளுக்கு ஏதோ சைகை பண்ணியிருக்கான். அதை அவன் அப்பங்காரன் பார்த்துட்டு நேர ஸ்டேஷனுக்கு போய் ஈவ் டீசிங்குனு கேஸை கொடுத்துட்டான்'

"கல்யாணமானவன்னு சொன்னிங்க. அப்பங்காரன் கேஸ் கொடுத்தாங்கறிங்க"

"அவள் புருசன் வெளி நாடு போயிருக்கான். இவள் அப்பன் வீட்ல தான் இருக்கா"

"அப்ப சரியா போச்சு"

"என்னத்த சரியா போச்ச்''

"அவள் வயசு பொண்ணு. ருசிகண்ட பூனை . உங்க பையனும் வயசுப்பையன். காஞ்ச மாடு"

"என்னசார் பேசறிங்க நீங்க..அப்படி உனக்கு வெறி இருந்தா அதுக்குன்னே இருக்காளுகள்ள அஞ்சு பத்துனு கொடுத்து அவளுககிட்டே போய் வரவேண்டியதுதானே..இப்படி கல்யாணமாகி ,பெத்து வச்சிருக்கவளை போய் ''

"நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல. பெத்த பையனை ப்ராஸ்டிட்யூட் கிட்டே போகட்டும் பரவால்லங்கறிங்களா?"

"அய்யோ.. உங்க மகன் இப்படி ஒரு காரியத்தை பண்ணி போலீஸ் காரன் லத்திய சுழட்டிகிட்டு வீட்டண்டை வந்து ரவுசு பண்ணியிருந்தா நீங்களும் இதைதான் பேசுவிங்க..இதுவே அவன் ஒரு ப்ராஸ் கிட்டே போயிருந்தானுவைங்க ..என் வீட்டண்டை போலீஸ் வராதுல்லயா ..எல்லாம் என் தலையெழுத்து"

"போலீஸ் வந்து என்ன கேட்டாங்க?"

"ராத்திரி 9 மணிக்குள்ள உங்க பையனை கூட்டிட்டு வாங்க .இல்லாட்டி நீங்க வந்து எஸ்.ஐ கிட்டே பேசிட்டு போங்கனு சொல்றான்.இவன் கொழுப்பெடுத்து அலைஞ்சதுக்கு நான் போலீஸ் ஸ்டேஷன் போய் என்ன தலை எழுத்து இதெல்லாம் . நான் ஒரு ரிட்டையர்ட் எஸ்.ஐயோட மனைவி எனக்கே இந்த நிலை. நாலு வீட்ல பத்து பாத்திரம் தேச்சு வயித்தை கழுவறவ நிலை என்ன? நான் போகப்போறதில்லே.போலீசே அவனை தேடிப்பிடிக்கட்டும் . எலும்பை முறிக்கட்டும்."

"என்னங்க இது இப்படி பேசறிங்க ..பையன் எதிர்காலம் என்ன ஆகறது?"

"ஹய்யோ..உங்களுக்கு எப்படி சொல்வேன். இது இன்னிக்கு நேத்தி சமாச்சாரமில்லே. இவன் அப்பங்காரன் கூட இப்படித்தான். நான் வீட்ல கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு காத்திருப்பேன். எவகூடவோ உருண்டுட்டு வந்து மல்லாந்து படுத்துக்கிட்டு கொர்ர் கொர்ர்ர், ஏன் ..இவனுங்களுக்குதான் உணர்ச்சியா எனக்கில்லயா. அப்பனுக்கு தப்பாத பிறந்திருக்கானுங்க பாருங்க.பெரியவனும் இப்படித்தான் கிளி மாதிரி பெண்டாட்டி வீட்ல தேவுடு காத்துக்கிட்டிருந்தா இவன் தேவடியா வீட்டு முன்னே தவமா இருந்து அவளோட கூத்தடிச்சுட்டு விடியல்ல வந்து படுத்துக்கிட்டு பத்து மணிவரை தூங்குவான். ஒரு பெண்ண பெத்து வச்சிருக்கனே அது மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு குடித்தனக்காரன் ஒருத்தனோட படுத்துட்டு பாதிராத்திரி வந்து படுக்குது. அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. ஏன் இதுகளுக்குதான் உணர்ச்சி உண்டா ? எனக்கு இல்லயா என்ன? உங்களை எனக்கு பத்து வருசமா தெரியும் .. ஒரு நாளாவது தப்பா பேசியிருப்பமா"


ராம நாதனுக்குள் ஒரு தீபாவளி. கூடவே என்னடா இது தேவையில்லாத வம்பு என்றும் ஒரு எண்ணம். மேலுக்கு "ச்சே ச்சே.. உங்க கம்பீரமென்ன..உங்க ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட்னெஸ் என்ன" என்று உச்சு கொட்டினார். பின்பு எப்படியோ ராதாவை சம்மதிக்க வைத்து உப்புமா கிண்டி கொடுத்து சாப்பிட வைத்து ஸ்டேசனுக்கு அழைத்து சென்றார். எஸ் ஐ யிடம் ராதா குடும்பத்துக்கு தூரத்து உறவு என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

"ஆண்பிள்ளை இல்லாத வீடு ..அகாலத்தில் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டால் எப்படி ? தப்பு பண்ணினவனை பிடிச்சு நெல்லி கழட்டுங்க. பாவம் இந்தம்மா விடோ. பெரிய பையனும் சரியில்லே. பெண்ணுக்கு அலையன்ஸ் பார்க்கிறாங்க " அது இது என்று எஸ்.ஐ மனதை கரைக்க பார்த்தார்.

ஆனால் எஸ்.ஐ. "யோவ் ! நீ என்ன இவளுக்கு வக்காலத்தா? இந்த பொம்பளைய வச்சிருக்கயா ? அதான் பையன் கூட அப்டியே தயாராயிருக்கான். மரியாதையா நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள அந்த பையனை கொண்டுவந்து சரண்டர் பண்ணு.இல்லேன்னா உன்னை கூட தூக்கியாந்து உள்ள வச்சிருவேன்" அது இது என்று கண்டமேனிக்கு பேசிவிட்டார். ராம நாதனுக்கு முகமெல்லாம் சிவந்துவிட்டது. கோபத்தால் உடல் சூடேறியது. நாக்கு வறண்டது. சரி எப்படியோ நாளை சாயந்திரம் வரை வாய்தா கொடுத்தானே மகராசன் என்று பெரிதாய் கும்பிடு போட்டுவிட்டு ராதாயை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

வெளியே வந்த ராதா காலியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி ராம நாதன் வீட்டுக்கே விடச்சொன்னாள். சரி ட்ராப் செய்கிறாள் போல என்று மவுனமாக இருந்தது தவறாகிப்போனது. அவளும் இறங்கினாள். சரி சாலையில் வாக்குவாதம் எதற்கு என்று உள்ளே அழைத்து சென்றார்.

ராதா எஸ்.ஐ பேச்சை நினைத்து நினைத்து பொங்கினாள். என்னதாவது பெத்தபாவம் நீங்க என்ன பாவம் பண்ணிங்க என்று கண்ணீர் விட்டாள். நாளை சாயந்திரம் வரை கூட மகன் வராவிட்டால் என்ன செய்ய ? என்று மருகினாள்.

ராம நாதனின் மூளையில் ஒரு பெயர் மின்னியது. ஆங் ! முகேஷ். உடனே முகேஷுக்கு போன் போட்டார். அவன் ஒரு பிரபல பத்திரிக்கையில் நிருபனாக இருக்கிறான். ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. ராம நாதனுக்கும் அவனுக்கும் இடையில் வயது வித்யாசத்தை கடந்த ஒரு நட்பு. பத்து நிமிடத்தில் வந்தான் முகேஷ்.

யார் என்ன என்று விசாரித்தான். "அட அந்த பொண்ணா அது சரியான பஸ் ஸ்டாப்பாச்சே. காலேஜ்ல படிக்கறப்பவே பத்துகை மாறின கேசு அது.அவள் அப்பன் இன்னும் திருந்தலியா அந்த காலத்துலயும் அப்படித்தான். புசுக் புசுக்குனு போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துருவான். சரி சரி.. டூடவுன் தானே . அங்கே நம்ம சுப்ரமணியம் ரெட்டிதான் ஏ.எஸ்.ஐ பழைய ஆளு . அவள் வண்டவாளமெல்லாம் தெரியும்.அவருக்கு விசயத்தை ஊதிவிட்டா போதும் . உங்க பையனை கூட சில இடங்கள்ள பார்த்திருக்கேன். அவனுக்கும் அவனோட ஃப்ரெண்ட்ஸ் மூலமா கன்வின்ஸ் பண்ண பார்க்கிறேன். அவனை நானே ஸ்டேஷன் கூட்டிப்போய் செட்டில்மென்ட் பண்ணிர்ரன் .இனிமே ஸ்டேஷன்லருந்து எந்த பிரச்சினையும் வராது" என்று சொல்லி தன் செல்ஃபோனை டயல் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

ராம நாதன் பால் சுடப்பண்ணி கொடுக்க சாப்பிட்டு விட்டு கிளம்பினான் முகேஷ். ராதா "ஹும்.. எனக்கும் இருக்கு புள்ள.. எல்லாம் நான் செய்த பாவம்" என்று பெருமூச்சு விட்டாள்.

ராம நாதன் மெல்ல அவளை வீட்டுக்கு கிளப்ப பார்க்க "இல்லே சார்.. எனக்கு மனசு சரியில்லை. நான் இங்கே படுத்துட்டா ஒன்னும் குடிமுழுகிராது. என் பெரிய பையன் விடியல்ல வர்ரதுக்கு பதில் மறு நாள் பத்து மணிக்குவரப்போறான். என் பொண்ணு பக்கத்து போர்ஷன் காரன் கூட படுத்துட்டு பாதி ராத்திரில வரது .. விடியல்ல வரப்போறா. அவ்ளதானே.. எப்படியோ ஒழிஞ்சு போகட்டும். பீரோ சாவி என் கிட்டே தான் இருக்கு. இந்த காலத்துல நிஜமான புருஷன் நிஜமான உதவி பணம், நகைதான்.. நான் இங்கயே படுத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டாள்.

ராம நாதன் சட்டை மாட்டிக்கொள்ள " நீங்க எங்கே போறிங்க?" என்றாள் ராதா. "எப்பயாச்சும் டென்ஷனா இருந்தா ஒரு சிகரட் பிடிப்பேன்..அதுக்குத்தான்" என்றார் ராம நாதன். "இது உங்க வீடு நீங்க ஏன் வெளிய போகனும். இங்கயே புடிங்க " என்றாள் ராதா.

சிகரட் பிடிக்கும் ராம நாதன் யாரோ போல் தோன்றினார். ராம நாதனுக்கும் ராதா யாரோ போல் தோன்றினாள்.

"இது மட்டும் தானா இதுக்கு மேலயும்"

"ச்சே சே.. அதெல்லாம் பழக்கமில்லேம்மா.. "

"அதுக்கு மேல "

"அய்யோ ..அதெல்லாம் கிடையவே கிடையாது. எல்லாம் பெண்டாட்டியோட போச்சு"

"அதிர்ஷ்ட சாலி அவங்க. ஆமா உங்க மனைவி செத்து பத்து வருசம் ஆகுமில்லிங்களா? எப்படி சமாளிக்கிறிங்க"

"ஹும்.. எல்லாம் சுயம்பாகம்தான்"

" நான் சாப்பாட்டை சொல்லலே"

"நானும் சாப்பாட்டை சொல்லலே"

"ச்சீய்..இந்த வயசுலயா?"

"என்ன செய்ய ..எவள் மேலயாவது பாய்ஞ்சுட்டா மறு நாள் தினத்தந்தில செய்தியா வந்துருவன். ஆமா உங்களவரும் போய் ரொம்ப காலமாகறாப்ல இருக்கே"

"ஹும்.. எனக்கு பதினாறு வயசுல கல்யாணமாய்ருச்சு.. பத்து வருச திருமண வாழ்க்கைல இவர் தேடிப்போன தேவடியாளுக்கு பீரியட்ஸ் டைமா இருந்தப்ப மாத்திரம்தான் நானு"

"என்னங்க உங்களுக்கென்ன குறைச்சல்?"

"அளந்து பார்த்திருந்தா நிறை குறை எல்லாம் தெரிஞ்சுருக்கும். அளைஞ்சு போட்டு போற ஆசாமிக்கு என்னா தெரியபோகுது?"

"அப்போ இருபது வருசமா நீங்க எப்படி சமாளிக்கிறிங்க?"

"அந்த மனுஷன் செத்து ஒரு ஆறு மாசம் மனசுல ஒரு குரூர திருப்தி. என்னை தனிமைல விட்டுட்டு நீ கூடிகுலவினேல்ல இப்போ மண்ணுக்குள்ள குலவுன்னு. ஆறு மாசத்துக்கப்புறம் உடம்புல இருந்த உணர்ச்சி, மனசுக்குள்ள இருந்த உணர்ச்சிய மங்க வச்சிருச்சு. இருந்திருந்தானு நினைக்க ஆரம்பிச்சுருச்சு"

"அடப்பாவமே !"

"அப்போ உங்களுக்கு எல்லாம் நிறைவா கிடச்சது போல"

"என்ன நிறைவு போங்க..அவள் ஏதோ பாதம்கீர் ஊத்தி வச்ச சாஸர் போலவும் .. நான் ஏதோ நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையுற நாய் போலவும்"

"நீங்க சொல்றது ? "

"ஆமாங்க ஒன்னு பெத்து இறக்கிறவரைக்கும் "அது"க்குன்னா போதும் வலிக்குது வலிக்குது புராணம்தான்.

மனைவியின் மறைவுக்கு பிறகு எப்போதோ புத்தி வக்கரித்தபோது ராம நாதன் நாலாந்தர செக்ஸ் புத்தகங்களை படிப்பது வழக்கம். அதில் வரும் காட்சிகள் நம்பத்தகாதவையாக ரொம்ப செயற்கையாக இருப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் ராதா இவர் அமர்ந்திருந்த சோஃபாவுக்கு வந்து தொடை மேல் கைவத்து அவர் கழுத்தில் சூடான மூச்சை விட்ட போது நிசத்திலும் இப்படியெல்லாம் நடக்கும் போல என்று நினைத்துகொண்டார்.

ராதா பாலுக்காக பசு மடியை முட்டும் கன்று மாதிரி முட்டினாள் . நிறை மாத கர்பிணி போல் நிலை கொள்ளாமல் தவித்த மழை மேகம் ஒன்று கோடை மழை கணக்காய் பொழிந்து தீர்த்தது.

மறு நாள் ராதா விடியலில் எழுந்து குளித்து ராம நாதனின் மனைவி பீரோவில் அடுக்கி வைத்திருந்த சேலை ஒன்றை உடுத்தி ஃப்ரிட்ஜில் இருந்த பாலில் காபி போட்டு பெட் காஃபியுடன் ராம நாதனை எழுப்பினாள். பின் நான் வீடு வரைக்கும் போய் வரேன் என்று கிளம்பினாள். அவள் இப்படி கிளம்பி போனது இவருக்கு சற்று நிராசையாக இருந்தாலும் , சற்று ரிலீஃபாகவும் இருந்தது.

குளித்து பூஜை முடித்து முன்னறையில் வந்து உட்கார்ந்தார். சற்று நேரத்தில் முகேஷ் வந்தான். அவனுடன் ஒரு இளைஞன். "ராம நாதன் சார் ! இவன் தான் ராதா மேடத்தோட பையன். ஸ்டேஷன்ல பேசி வச்சிருக்கேன். எஸ்.ஐயும் ஸ்டேஷன்ல இருக்கார்.பேசி முடிச்சுட்டு வந்துருவம் . கிளம்புங்க" என்றான் முகேஷ்.

ஸ்டேஷன் சம்பிரதாயங்கள் முடிய மதியம் இரண்டாயிற்று.

எஸ்.ஐ.வாங்க வேண்டியதையும் வாங்கிக்கொண்டு பத்தினித்தனமாய் ராதாவின் மகனை பளீர் பளீர் என்று அறைந்து "இன்னொரு தடவ கம்ப்ளெயிண்ட் வந்தா மவனே என் கவுண்டர்தான்" என்று எச்சரித்தார்.

அடுத்த மூன்று மாதங்களில் ராதாவும் ராம நாதனும் மனசளவிலும் நெருங்கி விட்டனர். ராம நாதன் மட்டும் "பாருங்க நான் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற ஸ்தானத்துல இருந்துக்கிட்டு இதை தொடர்ரது கொஞ்சம் கூட நல்லதில்லை. நான் என் கடமைகளை முடிச்சுட்டன். நீங்களும் உங்க கடமைகளை முடிச்சுட்டா இதை லீகலைஸ் பண்ணிரலாம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

" நான் என் கடமைகளை முடிக்கனும்னா முதலில் பெரிய பையனை திருத்தி ஆகனும். மகள் கதை காம்பவுண்டுக்குள்ளேயே இருந்தாலும் அவன் கதை ஊரெல்லாம் நாறியிருக்கு. இதை தெரிஞ்சவன் எவனும் சம்பந்தமுனு வீட்டுப்படியேற மாட்டான்"

முகேஷுடன் கலந்து பேசி ராதா மகளுடன் தொடர்பு வைத்திருந்தவன் குடும்பத்தை ஏதோ நொண்டி சாக்கு வைத்து காலி செய்வித்தனர். மேரீட் பர்சனோட காண்டாக்ட்னா அது நிச்சயம் உடலளவு தொடர்பாதான் இருக்கும் என்று முகேஷ்தான் தெரியம் கொடுத்து இதை பைசல் செய்தான்.

பெரிய பையன் கதையை வேறு மாதிரி முடித்தார்கள். அவன் நகராட்சி அலுவலக ஊழியன் என்பதால் முகேஷ் மூலம் தொகுதி அளவில் டான் ரேஞ்சில் இருந்த எம்.எல்.ஏவிடம் சொல்லி அவர் மூலம் சேர்மனுக்கு சொல்லி வெளி தொடர்பை துண்டித்து தனிக்குடித்தனம் அனுப்பியாயிற்று.

இது தீரவும் மகளுக்கு சம்பந்தம் பார்க்க ஆரம்பித்தாள் ராதா நல்ல சம்பந்தமாய் அமைய சிம்பிளாய் முடித்தார்கள். சின்னவன் கதை கொஞ்சம் நொண்டியடித்தாலும் முகேஷ் மூலம் ஒரு கிரானைட் ஃபேக்டரியில் சூப்பர் வைசராக சேர்த்து அவனுக்கும் ஒரு கல்யாணத்தை செய்து முடித்தனர்.

ராம நாதனும் தனக்கு ஃபேக்டரியிலிருந்து வரவேண்டிய பெனிஃபிட்ஸ் இத்யாதிக்கு ரிமைண்டர் மேல் ரிமைண்டர் போட்டு முகேஷ் மூலம் ப்ரஷர் கொடுத்து பணம் கைக்கு வந்ததும் ராதாவுடன் சேர்ந்து ஊருக்கு வெளியே ஃபேக்டரி மாதிரி ஏற்படுத்தி ,மார்க்கெட்டிங்கை பலப்படுத்தி அவள் செய்து வந்த வடாம்,வற்றல், சாப்பாட்டு பொடிகள் தயாரிப்பை விரிவு படுத்தினார். ராதா ஃபேக்டரிக்கு போக வர கஷ்டமா இருக்கு என்று ஒரு ஸ்கூட்டி வாங்கினாள். ராம நாதனை தன் காம்பவுண்டுக்குள்ளேயே குடிவைத்து விட்டாள். ராதா ஸ்கூட்டியை ஓட்ட , ராம நாதன் பின்னால் உட்கார்ந்து ஃபேக்டரிக்கு செல்வது வழக்கமான காட்சியாயிற்று.

பெரியவன், சின்னவன்,மகள் எல்லோருக்கும் இவர்களிடையிலான உறவு அரசல் புரசலாக தெரிந்தாலும் "கர்மம்! கர்மம்!" என்று தலையில் அடித்துக்கொண்டார்களே தவிர மேலுக்கு ஏதும் பேசவில்லை. இந்த விவகாரம் அமெரிக்காவிலிருந்த ராம நாதன் மகள் வரை எட்ட அவள் மட்டும் " டாடி ! பேசாம அவங்களை மேரேஜ் பண்ணிக்கோயேன்" என்றாள். "இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் தாயி " என்றார்

ராம நாதன். ராதாவின் ஆஸ்மா பிரச்சினை தன்னையும், தனது கேஸ் ட்ரபுள் ராதாவையும் " அந்த "நேரத்தில் அருவறுக்க செய்வதையும் - அதே சமயம் "அந்த" அவுட் லெட் நிச்சயம் தேவைப்படுவதையும் பெற்ற மகளிடம் எப்படி சொல்ல முடியும்?