Wednesday, September 30, 2009

ஞானி சார் மறுமொழி போட்டாரோச் !


ஆமாம். டுபாக்கூர் என்ற வார்த்தைக்கு நான் கொடுத்த வியாக்யானத்தை தவறு என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு தொடர்பில்லாத விஷயம் என்றாலும் தவறான தகவல் பதிவுலகில் பரவிடக்கூடாது என்ற தாய் மனதுடன் திருத்தியுள்ளார். ஒரிஜினலில் உள்ளபடி (இது அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதையொன்றின் தலைப்பு) நான் சாதாரண வாசகன் . இன்னும் சொல்லப்போனால் அவரது சமூக பொறுப்புக்கும், நேர்மை துணிவிற்கும் ரசிகன். ஒரு வகையில் அவர் எனக்கு ரோல் மாடல் என்று கூட சொல்லலாம்.

ஒரு முறை அவர் பாலியில் கல்வி தொடர்பான தொடரை எழுதி வந்தபோது கல்கி அதை விமர்சித்து எழுதியது. அதை கண்டித்து நான் ஒரு பதிவு கூட எழுதியுள்ளேன்.

மேலும் தமிழ் எழுத்தாளர்களின் போக்கை கண்டித்து எழுதும்போது ஞானி அவர்களுக்கு விதி விலக்கு அளித்தவன் நான். பதிவர்களிடையில் சிலர் "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான்" பாணியில் ஞானியை குறை சொன்ன போது கூட கண்டித்துள்ளேன்.

எது எப்படியோ ஞானியின் மறுமொழி புத்துயிரை ஊட்டியுள்ளது. ஞானி அவர்களுக்கு நன்றி !

அப்துல் கலாம் குறித்த என் பதிவுகள் மீதான பதிவர் கருத்தறிய நடாத்திய கருத்து கணிப்பின் முடிவு :

பொறுப்பான எழுத்து : 3 சதவீதம்
பொறுப்பற்றது : 66 சதவீதம்
சரி:15 சதவீதம்
தவறு: 27 சதவீதம்

நீதி: கருத்துக்கணிப்பு மட்டும் கோரவே கூடாது. நான் சொன்னது சரிதான் என்று அடாவடி அடிக்கவேண்டும்.

கேள்வி: படித்தவர்கள் 330 பேர் (சொச்சம்)
வாக்களித்தவர்கள் :33 பேர்
வாக்களிக்காதவர்கள் : நான் கணக்குல வீக்குங்க


கடந்த பதிவில் சொல்லக்கூடாத ஜோக்கின் க்ளைமாக்ஸை பதிவில் வைக்கக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். செல் அழைப்புகளுக்கு பதில் சொல்லி மாய்ந்ததால் க்ளைமாக்ஸை இந்த தொடர்பில்லாத பதிவில் ஒளித்து வைக்கிறேன். பாவிகள்(?) கண்களுக்கு மட்டும் இது சிக்கட்டும்.

வெங்கடேஷ் பூனைக்கடி வாங்கி ஊரை விட்டு ஓடிப்போன பின் எப்படியோ பிடித்துவரச்செய்தாள் வெங்கடேஷின் மாமியான். என்னதான் கவுன்சிலிங் கொடுத்தாலும் பலனில்லை. மகளின் நல்வாழ்வு கருதி அந்த தியாகத்தை செய்தேவிட்டாள். காரியம் முடிந்ததும் மாப்பிள்ளை முதுகில் படர்ந்திருந்த வியர்வை துளிகளை துடைத்தபடி "பார்த்திங்களா மாப்பிள்ளை பல்லுமில்லை ஒரு இழவுமில்லே " என்று மகளின் முதலிரவுக்கு அடி போட்டாள்.

வெங்கடேஷ் " போங்க அத்தை உங்களுக்கு வயசாகிப்போச்சு.. பல்லெல்லாம் விழுந்திருக்கும். உங்க மகளுக்கு பல்லும் இருக்கு என்னை கடிக்கவும் செய்யுது. கடி வாங்கின எனக்கு தெரியாதா " என்றானே பார்க்கலாம்


வேண்டுகோள்: இந்த கதையில் வரும் வெங்கடேஷ் மட்டுமல்ல நம்மில் பலரும் பாலியல் தொடர்பாக பல்வேறு மூட நம்பிக்கைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அந்த மூட நம்பிக்கைகள் காரணமாக உள்ளடக்கி வைக்கப்பட்ட பாலியல் கோரிக்கைகளை வன்முறையாக வெளிப்படுத்திக் கொண்டு நாஸ்தி பண்ணுகிறோம். இவ்வகை மூ. ந. பற்றி தனியே ஒரு பதிவு போட உத்தேசம்

Tuesday, September 29, 2009

சொல்லக்கூடாத ஜோக்

வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் இன உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த வெங்கடேஷின் அம்மாவுக்கு பயங்கர கோபம் "விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் .. செத்து தொலைப்பேடா "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி விட்டாள்.

இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.

வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மன‌ம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.

மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.


வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.


கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.

(இது இத்துடன் முடிந்து போனதாக ஏமாந்து விடாதீர்கள் . மீதி கதையை சொன்னால் பதிவருக்கு அடி உதை என்று தினத்தந்தியில் செய்து வரும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் 9397036815 என்ற எண் செல் நெம்பருக்கு தொடர்பு கொண்டால் க்ளைமேக்ஸ் கூறப்படும்)

Sunday, September 27, 2009

சிரித்து வாழவேண்டும்

என் ந‌ண்ப‌ர் ச‌த்யா. வ‌ய‌து 50. Bachelor , குடிகார‌ன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்க‌ள். ச‌த்யா விஷ‌ய‌த்தில் செட்டியார் ஒழுக்க‌ம் இர‌வு 9 ஆனால் போச்சு என்று மாற்றி சொல்ல‌வேண்டும். (பார்த்துப்பா நாடிருக்கிற இருப்புல செட்டியார் சங்கத்துலருந்து நோட்டீஸ் எதுனா வந்துற போவுது) தினசரி காலை எழுந்து துள‌சி வாங்குவ‌தென்ன‌,பூ வாங்குவ‌தென்ன‌ ம‌ணிக்க‌ண‌க்கில் பூஜை போடுவ‌தென்ன‌..க‌ராறாய் வியாபார‌ம் செய்வ‌தென்ன‌..ஏழும‌லையானே சும்மா பார்த்துட்டு போக‌லாம்னு வ‌ந்தேன் என்று வ‌ந்தாலும் நோ அப்பாயிண்ட்மென்ட்.என்று கழட்டிவிடுவதென்ன..புதிதாய் பார்ப்பவன் இது 24 ஹவர்ஸ் சர்வீஸ் என்று ஏமாந்தே போய்விடுவான்.

இரவு 9 ஆனால் போதும் தண்ணி தொட்டி தேடிப்போகும் கன்னுக்குட்டி மாதிரி வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.

இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).

அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.

சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரிய‌ர் டெக்க‌ரேஷ‌ன் செய்ய‌ப்ப‌ட்ட‌ முத‌ல் க‌டை ச‌த்யாவின் க‌டைதான். சித்தூரில் உள்ள செட்டியார்க‌ளில் முத‌லில் ச‌ட்டையை இன்செர்ட் செய்த‌து ச‌த்யாதான். க‌டையை திற‌ந்து வைத்த‌து எஸ்.பி. இடையில் சில‌ கால‌ம் கிருஷ்ண‌கிரியில் அக்காவின் ப‌ல‌ச‌ர‌க்கு க‌டையில் பொட்ட‌ல‌ம் க‌ட்டிய‌ அனுப‌வ‌மும் உண்டு என்றாலும் இப்போது க‌டை மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்து கொண்டிருக்கிற‌து .

ஆறு மாத‌ங்க‌ளாய் அட‌கில் மூழ்கிய‌ வ‌ண்டியை ஓட்டி அலுத்து விட்ட‌ ச‌த்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ண‌ம் வ‌ந்து விட்ட‌து. வாங்கியாயிற்று. தீர்த்த‌ம் முடிந்த‌து.

தீனிக்கு விஷ்ணுப‌வ‌ன் சென்றோம். ச‌ர்வ‌ர் இறுதியில் கிடைக்க‌ப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக‌ ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.

ச‌த்யாவின் மூளை ப‌டுவேக‌த்தில் வேலை செய்யும். இத‌ற்கு சாட்சி ப‌ட‌ப‌ட‌த்துக் கொண்டே இருக்கும் கை விர‌ல்க‌ள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உத‌டுக‌ள்.

இத‌னால் ச‌த்யாவின் பேச்சு ஜெட் வேக‌த்தில் வெளிப்ப‌டும் .(ஆரம்ப கால ரஜினி காந்தை விட வேகமாய்) எதிராளிக்கு புரிவது ரொம்பவே க‌ஷ்ட‌மாகிவிடும். 5 வ‌ருட‌மாக‌ ப‌ழ‌கும் நானே ம‌வுன‌ப்ப‌ட‌த்தில் லிப் மூவ் மெண்ட் பார்த்து கெஸ் ப‌ண்ணுவ‌து மாதிரி உத‌ட்டை பார்த்துதான் டயலாகையே ஊகிப்பேன்

ச‌த்யா ச‌ர்வ‌ரை கிட்டே அழைத்து தன் பாணியில் ‌ "கொஞ்ச‌ம் மோர், கொஞ்ச‌ம் ர‌ச‌ம் கொண்டு வா" என்றார். அப்போது ச‌த்யாவின் பாடி லேங்குவேஜிலும் ஏதோ த‌வ‌று இருந்திருக்க‌ வேண்டும் .

இத‌ற்கிடையே எங்க‌ளிருவ‌ரிடையில் ப‌ந்த‌ய‌ம் வேறு
//" நீங்க‌ சொன்ன‌து புரிஞ்சே இருக்காது" //இது நான்.

//எல்லாம் புரிஞ்சிருக்கும். நீ சும்மாவே என்னை ல‌ந்து ப‌ண்றே// இது ச‌த்யா

ச‌ர்வ‌ர் ஒரே த‌ம்ள‌ரில் மோரையும்,ர‌ச‌த்தையும் ஊற்றி , கலக்கி ஆற்றிய‌ப‌டியே கொண்டு வ‌ந்த‌தை பார்த்து திருவிளையாட‌ல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இய‌ங்க‌ ஆர‌ம்பித்த‌தை சொல்லித் தானாக‌ வேண்டும்.

*ஆந்திரத்தில் பருப்பு விலையேற்றத்தை அடுத்து அரசு ரேஷன் கடைகள் மூலம் (சிவில் சப்ளைஸ்) மூலம் கு.விலையில் விற்க பருப்பு இறக்கு மதி செய்தது. (டெண்டர் மூலமாகத்தான்) ஆனால் வியாபாரிகள் வந்த பருப்பை பதுக்கி டுபாகூர் பருப்பு வந்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். பருப்பை இறக்குமதி செய்த அரசு கொஞ்சம் சமூக பொறுப்பையும் இறக்கு மதி செய்திருக்கலாம்.

*ஆந்திராவில் காங்.க‌ட்சி உறுப்பின‌ர் சேர்க்கை ந‌ட‌த்தி வ‌ருகிறது. மானில தலைவர் ஐ தரா பாதில் இருந்து மாவட்ட அலுவலகத்திலான தலை, தொண்டர்களூடன் டெலிகான்ஃபிரன்ஸ் நடத்தினார். இது தொடர்பாக க‌ம்ம‌ம் மாவ‌ட்ட‌ க‌ட்சி அலுவ‌ல‌க‌த்திற்கு மத்திய‌ ம‌ந்திரி ரேணுகா வ‌ர‌விருந்த‌ நிலையில் அடையாள‌ம் தெரியாத‌ ந‌ப‌ர்க‌ள் (?)அங்கிருந்த டிஜிட்டல் பேனரில் இருந்த ரேணுகாவின் த‌லையை கிழித்துள்ள‌ன‌ர். அப்போது அடுத்த‌ மூலையில் இருந்த‌ சோனியாவின் ப‌ட‌மும் கிழிந்துள்ள‌து. (ப‌ட‌ம் தாங்க‌) உட‌னே ப‌ர்க்க‌னுமே க‌ட்சி சீனிய‌ர்க‌ள் போட்ட‌ புலிவேஷ‌த்தை. முன்னாள் மாவ‌ட்ட‌ க‌ட்சி த‌லைவ‌ர் கேகே.ராவ் ஹிஸ்டீரியா வ‌ந்த‌வ‌ர் போல் க‌த்தினார். (மூணாவ‌து நாள்)வீட்டுக்கு வந்த நண்பனையா அல்லது வீட்டிலிருந்த நண்பனையா ஞா. இல்லை கேகே.ராவின் மகன் சுட்டே கொன்றுவிட்டார். அப்போது ஒய்.எஸ்.தான் எப்படியோ கரையேற்றி தில்லிக்கு ரயிலேற்றி விட்டார். (மாவட்ட தலைவர் போஸ்டை கழட்டிக்கிட்டுதான்) அந்த வெறுப்பா என்ன தெரியலை . "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" என்ற காலர் ட்யூன் எந்த நெட் வொர்க்கில் கிடைக்கிறது.

3.என் அண்ணனுக்கு எனக்கு 10 வயது வித்யாசம். அவன் படித்து முடித்து தண்டத்தீனி தின்று வந்த காலம். காலை அடச்சே ! மதியம் 12 மணி வரை தூங்குவான். பாதிராத்திரிதான் வீடு திரும்புவான். அப்பப்போ அப்பா பாக்கெட்லருந்து சின்ன நோட்டு பெரிய நோட்டு (சூப்பர் டைட்ட்லுப்பா !மல்டிஸ்டார் படம் தான். யாரை போடலாம்) காணாம போகும். ஒரு நாள் குடும்பமே சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. எவனும் மாட்டலயோ என்னவோ அண்ணனும் சாப்பிட்டுக்கிட்டிருக்கான். அப்பா "ராமாயணம் படிச்சது படிச்சதே" ஆனால் அண்ணன் காரன் ரெஸ்பாண்ட் ஆனாதானே. ஜெ.அறிக்கையை படிச்ச கலைஞர் மாதிரி "மவுனம் எனது தாய் மொழி" ஸ்டைல்ல இருக்கான். திடீர்னு அப்பாக்கு ப்ரஷர் எகிறிப்போச்சு. "அடத்தூ.. மானங்கெட்டவனே போடா வீட்டை விட்டு போடா" என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அப்போது வாயை திறந்த அண்ணன் " சாப்பிடறேன் இல்ல.. சாப்ட்டுட்டு போறேன்" என்றான் கூலாக. அன்றைக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறே ஈழத்தமிழர் நெஞ்சமாகி போச்சு.

வாய்+இன உறுப்பு நேரடி தொடர்பு

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்


மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ ‍ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்ப‌தென்ன‌ ? ம‌வுன‌மாக‌ பேசுத‌ல் தானே ! பேச்சை காட்டிலும் இத‌ன் அதிர்வுக‌ள் தான் ஆழ‌மாக‌ இருக்கும்.

"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.

பேச்சு எழுத்து எல்லாமே ந‌க்க‌ல் வ‌கையை சார்ந்த‌வை. பேச்சும் எழுத்தும் உண‌ர்வுக‌ளை தூண்ட‌ உபயோப்‌ப்ப‌டுமே த‌விர‌ வ‌டிகாலை த‌ராது. (த‌னிப்ப‌ட்ட‌ சோக‌ம் இத்யாதிக்கு வ‌டிகாலாக‌லாம் எழுதுப‌வ‌னுக்கு அ எழுத்தில் த‌ன்னை அடையாள‌ம் காண்ப‌வ‌னுக்கு)

என் மாதிரி ஒன்ற‌ரையணா ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அல்ல‌ எழுத்தாள‌ன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த‌‌ விதி பொருந்தும்


எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. ப‌டைத்துக்காட்டும் செய‌ல்வீர‌ர்க‌ள் தேவை. மேற்ப‌டி செய‌ல்வீர‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளை தூண்டும் எழுத்துக்க‌ளை ம‌ன்னிக்க‌லாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி க‌ணிணி திரையையும் , காகித‌த்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட‌ ஒரு க‌ர்ப‌ம் த‌விர்க்க‌ப்பட்ட‌த‌ற்கு சாட்சியாகிற‌து. இன்ன‌ பிற‌ எழுத்துக்க‌ள் ?



முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.

2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.

3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஏக்க‌ர் நில‌ம் காய்கிற‌து. இள‌வ‌ரச‌ர்க‌ள் ந‌தி நீர் இணைப்பு சுற்றுச்சூழ‌லை பாதிக்கும் என்று வேத‌ம் ஓதி செல்கின்ற‌ன‌ர். இவ‌ர் தாத்தா க‌ட்டினாரே மெகா அணைக‌ள் அவ‌ற்றாலும் தான் சு.சூ பாதிக்க‌ப்ப‌ட்ட‌து. அதை க‌ட்ட‌ வந்த‌ கூலிக‌ள் த‌ங்கி விட்ட‌தால்தான் மாஃபியாவே ஏற்ப‌ட்ட‌து.


4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.

5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.


6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வ‌ட்டி வ‌சூலிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் ச‌ம்பாதிக்க‌ குறைந்த‌து 100 பேர் அவ‌ரை அண்டி,சுர‌ண்டி பிழைக்கிறார்க‌ள்.

இது மாதிரி இன்னும் 94 விஷ‌ய‌ங்க‌ள் கூற‌லாம். எழுத‌ வ‌ருப‌வ‌ர் இதையெல்லாம் ம‌ன‌தில் இருத்தி , த‌ன் எழுத்தை ப‌டிப்ப‌வ‌ர் இந்த‌ அமைப்பை மாற்ற‌ /சீர்திருத்த‌ முன் வ‌ரும் வ‌ண்ண‌ம், வாச‌க‌ரை மோட்டிவேட் செய்யும் வ‌ண்ண‌ம் எழுத‌ வேண்டும். இல்லாவிட்டால் பேசாம‌ல் ச‌ல‌வை க‌ண‌க்கு ம‌ட்டும் எழுதி கொள்வ‌து ந‌ல‌ம்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்


மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ ‍ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்ப‌தென்ன‌ ? ம‌வுன‌மாக‌ பேசுத‌ல் தானே ! பேச்சை காட்டிலும் இத‌ன் அதிர்வுக‌ள் தான் ஆழ‌மாக‌ இருக்கும்.

"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.

பேச்சு எழுத்து எல்லாமே ந‌க்க‌ல் வ‌கையை சார்ந்த‌வை. பேச்சும் எழுத்தும் உண‌ர்வுக‌ளை தூண்ட‌ உபயோப்‌ப்ப‌டுமே த‌விர‌ வ‌டிகாலை த‌ராது. (த‌னிப்ப‌ட்ட‌ சோக‌ம் இத்யாதிக்கு வ‌டிகாலாக‌லாம் எழுதுப‌வ‌னுக்கு அ எழுத்தில் த‌ன்னை அடையாள‌ம் காண்ப‌வ‌னுக்கு)

என் மாதிரி ஒன்ற‌ரையணா ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அல்ல‌ எழுத்தாள‌ன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த‌‌ விதி பொருந்தும்


எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. ப‌டைத்துக்காட்டும் செய‌ல்வீர‌ர்க‌ள் தேவை. மேற்ப‌டி செய‌ல்வீர‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளை தூண்டும் எழுத்துக்க‌ளை ம‌ன்னிக்க‌லாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி க‌ணிணி திரையையும் , காகித‌த்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட‌ ஒரு க‌ர்ப‌ம் த‌விர்க்க‌ப்பட்ட‌த‌ற்கு சாட்சியாகிற‌து. இன்ன‌ பிற‌ எழுத்துக்க‌ள் ?



முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.

2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.

3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஏக்க‌ர் நில‌ம் காய்கிற‌து. இள‌வ‌ரச‌ர்க‌ள் ந‌தி நீர் இணைப்பு சுற்றுச்சூழ‌லை பாதிக்கும் என்று வேத‌ம் ஓதி செல்கின்ற‌ன‌ர். இவ‌ர் தாத்தா க‌ட்டினாரே மெகா அணைக‌ள் அவ‌ற்றாலும் தான் சு.சூ பாதிக்க‌ப்ப‌ட்ட‌து. அதை க‌ட்ட‌ வந்த‌ கூலிக‌ள் த‌ங்கி விட்ட‌தால்தான் மாஃபியாவே ஏற்ப‌ட்ட‌து.


4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.

5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.


6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வ‌ட்டி வ‌சூலிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் ச‌ம்பாதிக்க‌ குறைந்த‌து 100 பேர் அவ‌ரை அண்டி,சுர‌ண்டி பிழைக்கிறார்க‌ள்.

இது மாதிரி இன்னும் 94 விஷ‌ய‌ங்க‌ள் கூற‌லாம். எழுத‌ வ‌ருப‌வ‌ர் இதையெல்லாம் ம‌ன‌தில் இருத்தி , த‌ன் எழுத்தை ப‌டிப்ப‌வ‌ர் இந்த‌ அமைப்பை மாற்ற‌ /சீர்திருத்த‌ முன் வ‌ரும் வ‌ண்ண‌ம், வாச‌க‌ரை மோட்டிவேட் செய்யும் வ‌ண்ண‌ம் எழுத‌ வேண்டும். இல்லாவிட்டால் பேசாம‌ல் ச‌ல‌வை க‌ண‌க்கு ம‌ட்டும் எழுதி கொள்வ‌து ந‌ல‌ம்.

Saturday, September 26, 2009

எனது கண்டுபிடிப்புகள்

ஜோதிடம்:

1.லாஜிக்கல் ஹோரா
ஜோதிடத்தில் ஹோரை என்பது கிழமைகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் அன்றாட நட்சத்திரத்தை அடிப்படியாக கொண்டு, முதல் ஹோரை அந்த நட்சத்திர நாதனாகிய கிரகத்தினுடையதாக கருதி அந்த நாளின் 24 மணி நேரத்தை / மேற்படி நட்சத்திரத்தின் மொத்த நாழிகையை கிரகங்களின் தசா காலங்களின் விகிதத்தில் பங்கிட்டு கணக்கிடப்படும் ஹோரா முறைக்கு லாஜிக்கல் ஹோரா என்று பெயரிட்டுள்ளேன்.
2.நவீன பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷத்துக்கு பழைய கிரந்தங்கள் முருகனை வழிப்படும்படி கூறுகின்றன. முருகனுக்கும், செவ்வாய்க்கும் என்ன தொடர்பு ? செவ்வாயுடன் தொடர்பு கொண்ட இதர விஷயங்கள் என்ன என்பதை அறியாத ஜோதிடர்கள் இன்னமும் முருகன் வழிபாட்டையே பரிகாரமாக கூறிவருகின்றன. நான் ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பரிகாரங்களின் அடிப்படையை அறிந்து ரத்த தானத்தை பரிந்துரைக்கிறேன். மேலு சனியின் கெடுபலன் குறைய ஊனமுற்றோருக்கு உதவும்படி கூறி வருகிறேன். இதை சமீப காலமாக பிரபல ஜோதிட சிகாமணிகளும் பின்பற்றிவருவது குறிப்பிட தக்கது
For more Details : http://www.anubavajothidam.blogspot.com
3.ஆஸ்ட்ரோ ந்யூமோ, நேமாலஜி:
ஜாதகரின் பெயரையே ஜாதகமாக கொண்டு பலன் கூறும் முறை இது. முதலில் ஜாதக‌ர் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதிலான எழுத்துக்களுக்கு உரிய எண்களை குறித்துக்கொண்டு , முதல் எழுத்துக்குரிய கிரகம் எங்கே உச்சம் பெறுமோ அந்த ராசியில் துவங்கி ராசிச்சக்கரத்தில் மேற்படி எண்களை எழுதிக்கொண்டு அந்தந்த ராசிகளில்/பாவங்களில் மேற்படி எண்களுக்குரிய கிரகம் இருப்பதாக கருதி பலன் கூற வேண்டும். இம்முறையில் வீட்டு/வாகன எண்களை வைத்தும் பலன் கூறலாம்.

பொருளாதாரம்:

1.ப்ளாக் ஹோல் தியரி: சந்தைக்கு வந்த பணம் சுழற்சிக்குள்ளாகாது தடை செய்யும் டம்பிங் ஜோன்களை ஒழித்துக்கட்டினாலன்றி பொருளாதாரம் சிறக்காது.
உம்: மது அடிமைகள், சூதாட்டக்காரர்கள், லாட்டரி பைத்தியங்கள்

2.மக்கள் உணவு,உடை,இருப்பிடம் மற்றும் செக்ஸை பெற்று சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை:

ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு3, 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 3 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
3.அனைவருக்கும் தனயோகம்:

ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே. எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம்

4.சனி மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்:
சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.மேலும் சனி பிடித்த காலத்தில் தான் ஆண்கள் ஒழுங்காய் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். பெண்கள் ஒழுங்காய் குடித்தனம் நடத்துகிறார்கள்

5.தெருக்குத்து :
தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.

இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.

சமூகம்:
1..ஆத்திகம் நாத்திகம் :
ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது

(To be continued

Friday, September 25, 2009

சவால் விட்ட அரசியல் பிரபலங்கள்

கானிப்பாக்க வினாயகரை தெரியுமா? உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு கிணற்றில் சுயம்புவாக தோன்றி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவரை தெலுங்கில் பிரமாணால தேவுடு என்று கூறுகிறார்கள். அதாவது இவர் சன்னிதானத்தில் வந்து பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார். கானிப்பாக்கத்தில் வந்து பொய் சத்தியம் போடத் தயார் என்று சவால் விட்ட அரசியல் பிரபலங்கள் பலர் தம் பிராபல்யத்தை இழந்து தவிப்பது கண்கூடாக நடந்து வருகிறது.

நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்

கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:

சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருப‌வர் கேது.

ஜ‌ல‌ கார‌க‌ன் ச‌ந்திர‌ன். கேதுவுக்கு அதி தேவ‌தையான‌ வினாய‌க‌ர் , ச‌ந்திர‌ன் கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் கிண‌ற்றில் தோன்றி வ‌ள‌ர்வ‌தால் கேதுவால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளை ம‌ட்டும‌ல்லாது ,ச‌ந்திர‌னால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளையும் நிவ‌ர்த்திக்க‌ வாய்ப்பு ஏற்ப‌ட்டுள்ள‌து. அடுத்த‌ப‌டியாக‌ ச‌ந்திர‌ கேது சேர்க்கை யால் ஏற்ப‌டும் கிட்னி ஃபெயிலிய‌ர்,க்ஷ‌ய‌ம்,பைத்திய‌ம் போன்ற‌ குறைபாடுக‌ளும் நீங்கும். ராகு கேதுக்க‌ள் ச‌தா ஒருவ‌ருக்கொருவ‌ர் 180 டிகிரியிலேயே ச‌ஞ்ச‌ரிப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தால் வினாய‌க‌ர் வ‌ழிபாடு ராகுவால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளையும் நீக்கும் என்று உறுதியாக‌ கூற‌லாம். ஆக‌ கானிப்பாக்க‌ம் வினாய‌க‌ரை வ‌ழிப‌டுவ‌தால் ராகு,கேது,ச‌ந்திர‌ன் ஆகியோர் கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் ச‌மாச்சார‌ங்க‌ள் யாவும் அனுகூல‌மாகும். மேலும் மேற்ப‌டி கிர‌க‌ங்க‌ளால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளும் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ப‌து உறுதி.


இந்த‌ மூன்று கிர‌க‌ங்க‌ளை ப‌ற்றி ம‌ட்டும‌ல்லாது இத‌ர‌ 6 கிர‌க‌ங்க‌ளை ப‌ற்றியும் முழுமையாக‌ அறிய‌ கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்ய‌வும்:

http://www.anubavajothidam.blogspot.com

Thursday, September 24, 2009

காபரே ஆடிய சங்கராச்சாரி



பாலா அவர்களே !

பிரபல சினிமா டைரக்டர் ஹிட்சாக் சிறுவனாக இருக்கும் போது அவரது தாய் அவரை காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்து அச்சுறுத்த செய்தாராம். அதனால் அவரது சினிமாக்களில் குற்றமற்றவன் சிறைக்கு போகும் காட்சிகள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றதாம்.

அது போல் தி.க.காரர் யாரேனும் தங்களிடம் மீட்டர் வட்டி வசூலித்து விட்டாரா என்ன ? அவர்கள் மீது தங்களுக்கு ஏனிந்த கடுப்பு. ஒரு பெரியார் மட்டும் தமிழ் நாட்டில் தோன்றாதிருந்திருந்தால் பிராமணரல்லாதோர் மட்டுமல்ல சும்மா உட்கார்ந்து தின்று கொழுத்து , எதிர்ப்பில்லாததால் மூளை மழுங்கி பிராமண இனமே ஒழிந்து போயிருக்கும். ஏதோ பெரியார் வருகையால், அவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால் இரு பிரிவினரும் பலன் பெற்று தமிழகம் ஏதோ இந்த அளவுக்காவது இருக்கிறது.

அப்படியும் தமிழகத்தில் காபரே ஆடிய சங்கராச்சாரி, புலிகளிடம் பணம் பெற்று மணீ லாண்டரிங் செய்யும் திருமலைக்கோடி, மனைவியை நகராட்சி சேர்மனாக்கும் பங்காரு இப்படி நூறாயிரம் டுபாகூர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.பெரியார் உயிருடன் இல்லை என்ற தெகிரியத்தில் தான் கலைஞரே மஞ்சள் சால்வை போடும் ரேஞ்சுக்கு வந்திருக்கிறார். புட்டபர்த்தியிடம் மோதிரம் வாங்கும் ரேஞ்சுக்கு அவர் குடும்பம் வந்திருக்கிறது. பெரியாரே பிறக்காதிருந்திருந்தால் ?


கொஞ்சம் மாத்தி யோசிங்க பாலா சார்.

கலாம் பற்றி நான் எழுதியிருந்த விஷயங்கள் என்னை ஒரு நெகட்டிவ் திங்கராக காட்டியிருக்கலாம். ஆனால் நான் நல்லது கெட்டது இரண்டையும் முழுமையாக பார்க்கிறேன்.

காந்தி பிரதமராகியிருந்தால் நாட்டை ஜின்னாவிடமே அடகு வைத்திருப்பார் என்பது உங்கள் கருத்து ஆனால் ஆனானப்பட்ட அம்பேத்கரையே தம் உண்ணாவிரதத்தா பின் வாங்கச்செய்தவர் காந்தி. ஜின்னா எல்லாம் ஜுஜுபி.

//அப்புறம் ஆண்கள் அனைவரும் தாடி வைத்துக்கொண்டு அலைய வேண்டியது தான்;//

காந்தி தாத்தா எப்பவுமே தாடி வச்சதும் கிடையாது. வைக்க சொன்னதும் கிடையாது. இந்த பாயிண்ட் ஏன் வந்தது புரியலை

//பெண்களுக்கு தாடி/மீசை வளராது, கனிமொழியைப் போன்ற புறநாநூற்று வீராங்கனைகளைத் தவிர,//

இது தனிப்பட்ட விமர்சனம். இது போன்றவற்றை தவிர்க்கவும்.

//அதனால பர்தா போட்டு மூஞ்சியை மூடிவிடுவாங்க.எவ்வளவு கொடுமை?தேவை தானா இது?//

பர்தா என்பது ஏதோ ஒரு மதத்துக்கு மட்டும் தொடர்புள்ளது என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இந்து பெண்களும் முக்காடு அணிவது வழக்கில் உள்ளது. இந்தி சினிமால்லாம் பார்க்கிறதில்லயா ?

//இல்லையென்றால், தமிழ்நாட்டு பெரிய தாடி தீவிரவாதி சொல்வதை கேட்டு பிரிட்டிஷ் நாட்டானிடமே நாட்டை திருப்பி கொடுத்திருப்பார்.//

நீங்க பெரியாரை சொல்றிங்க போல. பெரியாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் உருப்பட்டிருப்போம். இன்னைக்கு பிரிட்டனுக்கு சமமா இந்தியா இருந்திருக்கும். என்ன ஒரு குறைன்னா பாராளுமன்றத்துலயும், சட்டமன்றத்துலயும் இது போல் மைக் உடைச்சு, டேபிளை தட்டி லந்து பண்ணியிருக்க முடியாது.

//நம்ம நாடு உருப்படணும்னா சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா ஒரு காரியம் செய்யணும்."இந்தியா 2000" என்பதற்கு பதிலாக "பாகிஸ்தான் 2010" என்ற திட்ம் தீட்டி //

தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா திட்டத்தை மட்டுமல்ல தாங்கள் மறுமொழிந்திருக்கும் எனது பதிவை கூட சரியா படிக்கவில்லை என்று பட்ட வர்த்தனமாகிவிட்டது.

கீழ் காணும் சுட்டியை சொடுக்கி என் திட்ட விவரங்களை புரட்டி இந்த கருத்தை உறுதி செய்யுங்கள்.

http://kavithai07.blogspot.com/2007/09/2000.html

//பாகிஸ்தான் தீவிரவாதிகளெல்லாம் தாடியை ஷேவ் செய்துவிட்டு ,தீவிரவாதத்தை விட்டு விட்டு மனம் திருந்தி மனிதர்களாக வாழச் செய்ய வேண்டும்.நம்ம நாட்டில்,ஏன் உலகம் பூராவுமே குண்டு வெடிப்பு,கொலை கொள்ளை கணிசமாகக் குறையும;'பாகிஸ்தானும் முன்னேறும்;நாமும் முன்ன்னேறுவோம்.//

ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு நிதி திரட்ட நான் கொடுத்த யோசனைகளில் ஒன்று இந்தியாவின் கையிலிருக்கும் காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைப்பது.(அப்போது அதன் பாதுகாப்பு சர்வ தேச ராணுவத்தை சேர்ந்ததாகிவிடும்) பின்பு பாக்கிஸ்தானும் தன் பிடியில் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துவது. இது மட்டும் நிறைவேறிவிட்டால் இரு நாடுகளும் தம் ராணுவ செலவை பாதியாக குறைத்துக்கொள்ளலாம். இதே ஃபார்முலாவை சீனத்துடனான எல்லை தகராறுகளுக்கும் உபயோகிக்கலாம்.

//அதே போல் "சீனா 2015" என்ற திட்டம் தீட்டி இந்த சீன கம்யூனிஸ்ட் பசங்களை திருத்தணும்.//

இதற்கான பதிலும் சென்ற பத்தியிலேயே உள்ளது.

//பிறகு தானாகவே நம்ம நாட்டில காட்டாமணக்கு,வெளியே மிதக்கும் அய்யா,ஏகலைவன்,பனியன் தியாகு,தமிழரங்கம்,அசுரன்,வர வர ராவ், போன்ற சீனா போடும் எச்சக் காசுக்காக
நாச வேலை செய்யும் நக்சல் கும்பல் திருந்தி வாழும்.//

இது போன்ற வரிகள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டும் என்று தாங்கள் நம்புவதாக தெரிகிறது. ரஷ்யா ஒளிர்ந்த காலத்தில் வேண்டுமானால் இது போன்ற சன்மானங்கள் கிடைத்திருக்கலாம். அங்கேயே காற்றடிக்கும் போது இது வெறுமனே சேறுவாரி இறைக்கும் செயலாகவே படுகிறது. மேலும் இந்த வரிகள் தங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாமையையே காட்டுகிறது.

ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளனின் வயிற்றிலடித்தால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் என்று கார்ல் மார்க்ஸ் ஆதார பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தாகிவிட்டது.

இன்னிலையில் தாங்கள் கம்யூனிசத்தை நக்கலடிப்பது தவறு, அதன் அமலில் தவறுகள் (ஏன் இமாலய தவறுகள் கூட நடந்திருக்கலாம்) ஆனால் கம்யூனிசம் ஒன்றே சரியான தீர்வு.

ரஷ்யாவில் என்ன நடந்ததென்றால் முன்னர் கூறிய "தொழிலாளி வயிற்றலடித்து கிடைத்த லாபத்தை" முதலாளிக்கு பதில் அரசு பெற்றது. பெற்ற லாபத்தை விண்வெளி ஆராய்ச்சி போன்ற பெருமைக்கு பன்றி மேய்க்கும் சில்லறை பணிகளில் நாசமாக்கியது. ஊர் பஞ்சாயத்துக்களில் தலை நுழைத்து விரயமாக்கியது. சீனம் இந்த தவறை தவிர்த்து, கிடைத்தலாபத்தை மக்கள் நல்வாழ்வுக்கும், நாட்டின் கட்டுமான பணிகளுக்கும் மட்டுமே செலவழித்தால் அமெரிக்கா எல்லாம் சீனத்தின் பூட்ஸ் காலுக்கு கீழே கரப்பான் தான்.

//நீங்க பேசாம பாகிஸ்தான்/சீனா சென்று சோசியத் தொழில் துவங்கினால் தான் இந்தியாவுக்கு சான்ஸ்.செய்வீர்களா?//

என் மேதைமை முதற்கண் என் தாய் நாட்டுக்கு பலன் தரவேண்டும் என்றுதான் இந்தியாவில் தங்கியுள்ளேன். என் தாய் நாட்டை பணக்கார நாடாக்கிவிட்டால் அடுத்த ப்ரோஜெக்ட் பாக்கிஸ்தான் தான். டோன்ட் வொர்ரி !

//என்னங்க இது?இந்த மாதிரி சொலுயூஷன்ஸ் கொடுக்கறீங்க.போகாத ஊருக்கு வழி காட்டறீங்களே.எனக்கு தெரிந்த வரை அளவிட முடியாத லெவலுக்கு பணமும்,ஏழுட்டு மனைவிகள்,பல துணைவிகள்,தவிர வைப்பாட்டிகள்,தவிர பொழுது போக்க பரத்தைகள் என்று அன்லிமிடெட் செக்ஸ் ஈடுபாடு கொண்டு அலைந்து சாதனை செய்தது தமிழ்நாட்டிலேயே இரண்டு பேர் தான்.//

இதுவும் தங்கள் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. நான் படைப்பின் ஆரம்பத்திலிருந்து ஆந்த்ரபாலஜி முதலாக எகனாமிக்ஸ் வரை ஆராய்ந்து கொடுத்துள்ள தீர்வு தவறு என்று பட்டால் ஏன் தவறு ? எப்படி தவறு என்று தங்கள் வாதத்தை எடுத்து வைக்கவேண்டும் . அதை விடுத்து தனி மனித தூஷனைக்கும், இரண்டு பேரின் வாழ்வை வைத்து என் பல்லாண்டு ஆராய்ச்சி முடிவை மூளியாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள்.

ஒவ்வொரு விதிக்கும் ஒரு விதிவிலக்குண்டு என்பதை நினைவுறுத்துகிறேன்.

மொத்தத்தில் என் முடிவை விமர்சித்தாலும், நக்கலடித்தாலும் அதன் பின்னுள்ள என் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி ! (சன் டிவி அசத்தப்போவது யார் பாதிப்புங்கண்ணா !)

Wednesday, September 23, 2009

உளறல்கள்



எல்லா பதிவுமே உளறல் தான் . இதில் என்ன தனித்தலைப்பு என்று சிலர் கூறலாம். அது அவர்கள் கருத்து. ஆனால் என் அனைத்து பதிவுகளின் ஊடே ஒரு ஒருங்கிணைப்பு இருப்பதை உணர பஞ்ச மகா புருஷ யோகங்கள் ஐந்தும் பெற்ற ஜாதகர்களால் தான் முடியும் (ச்சும்மா பீலாங்க)

என் அத்தனை பதிவுகளுக்கும் அடிநாதம் ஒன்றே ! மேக்கிங் திஸ் ப்ளானட் சம் வாட் பெட்டர்..கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று சரித்திரம் பிரிக்கப்பட்டதை போல் என் வரவும் இந்த சரித்திரத்தை பாதிக்க வேண்டும் என்ற பேராசை எனக்குண்டு.

அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் மாறலாம். முதல்வர் படம் மாறலாம். ஆனால் தாத்தா படம் மட்டும் மாறவே மாறது ( நான் சொல்வது காந்தி மகானை). இத்தனைக்கும் அவரை போன்ற ஹிப்பாக்ரட், செல்ஃபிஷ் ,மசாக்கிஸ்ட்,எஸ்கேப்பிஸ்ட் வேறு யாரும் கிடையாது

ஆம் பாலா போன்றவர்கள் திட்டின திட்டு திட்டாமல் திட்டி தீர்த்தாலும் சரி. சொல்லவந்ததை சொல்லி விடுகிறேன். தாத்தா மட்டும் தன் சொந்த புனிதத்தை பறைசாற்றும் நோக்கத்தில் தேங்கி விடாது , ஜார்ஜ் வாஷிங்டன் போல் இந்தியாவின் முதல் பிரதமராய் பதவியேற்றிருந்தால் இந்த கேடுகெட்ட நிலைக்கு நாடு வந்திராது. அவர் கொள்கைகளில் பாடாவதி கொள்கைகள் நூறிருந்தாலும் "கிராமங்கள் உற்பத்தி கேந்திரங்களாயும், நகரங்கள் விற்பனை மையங்களாகவும் இருக்கவேண்டும்" என்ற ஒரே ஒரு கொள்கை அவரால் அமலாக்கப்பட்டிருந்தாலும் இன்றைய நகரமயமாக்கம், வலசைகள், பொல்யூஷன், ஸ்பிரிச்சுவல் நத்திங் நெஸ் யாவும் தவிர்க்கப்பட்டிருக்கும்.அவர் மட்டும் தமது மசாக்கிசத்தால் (உண்ணாவிரதங்கள்) அம்பேத்கரையும், பாஸிசத்தால் சுபாஷ் போசையும் டைல்யூட் செய்யாதிருந்திருந்தால் சரித்திரமே மாறிப்போயிருக்கும்.

சரி கதம்! கதம் !

இத்த‌னை ப‌திவுக‌ளில் நான் சொன்ன‌வ‌ற்றின், சொல்ல முயன்றதின் சாராம்ச‌த்தை இங்கு த‌ருகிறேன். இந்த‌ ப‌டைப்பே ஒரு விப‌த்து. ம‌னித‌ வாழ்வு அக்மார்க் விப‌த்து. ஒரு எல‌க்ட்ரானிக் உப‌க‌ர‌ண‌த்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,த‌ற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ள‌ன‌.

அனைத்து உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா. ஒரே உயிராய் இருந்த போது இன் செக்யூரிட்டி இல்லை, காலமில்லை, தூரமில்லை, கம்யூனிகேஷன் பிரச்சினைகள் இல்லை. ஓருடல் ஓருயிராய் வாழ்ந்த காலத்து நினைவுகள் மக்களை மீண்டும் ஓருயிராக துடிக்கச்செய்கின்றன.

ஏற்கெனவே உயிர்களிடையில் உள்ளை இணைப்பை தம் ஈகோவின் காரணத்தால் பார்க்க மறுக்கும் மனிதன் மறு இணைப்புக்கு தடை தன் உடலே என்று நம்புகிறான். உடல்களை உதிர்க்க கொல்கிறான். அ கொல்லப்பட விரும்பி செயல்படுகிறான்.கற்கால மனிதனாய் வாழ்ந்த போது இதை ஸ்தூலமாகவே செய்தான். ஸ்திர வாசத்தில் செக்ஸில் வீரிய ஸ்கலனத்தின் போது கிடைக்கும் ப்ளாக் அவுட்டை
மரணமாய் கருதி திருப்தியைடைந்தான்.

சீர்திருத்தப்பட்ட விளை நிலம் சொத்தாக உருவானது. அது தன் வாரிசுக்கே கிடைக்க வேண்டும் என்று துடித்தான். பெண்ணின் யோனியை பூட்டி வைக்க முடியாது அவளை பூட்டி அடிமையாக்கினான். அடிமையுடன் உறவாட முடியாது, இணைய முடியாது , தன் பிரதான இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது (கு.ப. செக்ஸ் மூலம் நிச்சிந்தையாய்) அதற்கொரு மாற்று ஏற்பாடாக பணத்தை உபயோகிக்க துவங்கினான்.
( ஸ்திரவாசத்தால் கிடைத்த அடிஷ்னல் க்ராப் பணமானது) பணம் செக்ஸை தரும் என்று நம்பினான். அதற்காக (தற்காலிகமாய்) செக்ஸை கூட தவிர்த்தான்.

செக்ஸை துறந்து ஈட்டிய பணத்தை கொண்டு ம்ரணத்தின் நிழல்களுடன் (இருள், தனிமை, கல்வியின்மை, நிராகரிப்பு, ஏழ்மை) மோதி தோற்றான்.
இன்றைய சைக்காலஜிஸ்டுகளும் சொல்வது இதைத்தான்.
"ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான். 1.கொல்வ‌து 2.சாவ‌து. இவை இர‌ண்டுமே செக்ஸ்,மற்றும் ப‌ண‌த்தில் கைகூடுவ‌தால் தான் ம‌னிதனுக்கு செக்ஸ் ம‌ற்றும் ப‌ண‌த்தின் மீது இத்த‌னை காத‌ல். சரி ஏன் சாக, சாகடிக்க துடிக்கிறான். உடல்களின் எண்ணிக்கையை குறைத்து ஓருயிராக மாற.

இதற்கு தீர்வென்ன ?

ஓருயிர் பல்லுயிராய் மாறினாலும் உயிர்களிடையில் உள்ள இணைப்பை உணர்தலே. அதற்கு தடை உடல்களல்ல. அகந்தை. என்ற சத்தியத்தை உணர்தலே இதற்கு தீர்வு.

முக்தி என்ப‌து என்ன? எண்ண‌ங்க‌ள் இற‌த்த‌லே முக்தி. எண்ணங்களின் மையக்கரு என்ன " நான் இந்த ஸ்ருஷ்டியில் இருந்து வேறுபட்டவன் என்ற தவறான எண்ணம். இது தான் அகந்தை . அது விலகும்போது தான் படைப்பில் விலக்கப்பட முடியாத அங்கம். தான் இந்த பூமியில் இல்லாதிருந்த காலமே இல்லை என்று அனுபவ பூர்வமாக உணர்தல் .அதுவே முக்தி.

செக்ஸில் ஆர்காச‌ம் அடையும்போது எண்ண‌ங்க‌ள் இற‌க்கின்ற‌ன. அதாவது அகந்தை இறக்கிறது. ஒரு செக‌ண்ட் ப்ளாக் அவுட் ஏற்ப‌டுகிற‌து. இதை மீண்டும் மீண்டும் பெற‌த்தான் ம‌னித‌ன் செக்ஸில் ஈடுப‌டுகிறான்.

உயிர்வாழும் இச்சை ப‌டைப்புக்கு தூண்டுகிற‌து. ப‌டைப்பால் ம‌னித‌ன் பார்ஷிய‌லாக‌ இற‌க்கிறான். டூ இன் வ‌ன். ம‌னித‌ உட‌லில் இருப்ப‌து ஒரே ச‌க்தி தான். அது காம‌ ச‌க்தி. அவ‌ன‌து செய‌ல்பாடுக‌ளை பொருத்து அது யோக‌ ச‌க்தியாக‌ மாறுகிற‌து.

செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செல‌வ‌ழித்து விட‌ முடியாத‌ அள‌வுக்கு ஆண்மை உள்ள‌வ‌னே ப‌டைப்பு தொழிலுக்கு வ‌ருகிறான். அங்கும் முழுமையாக செல‌வ‌ழியாத‌ காம‌ ச‌க்தி தான் அவ‌னை முக்திக்கு தூண்டுகிற‌து.


ப‌ண‌ம்,செக்ஸ் உத‌வியால் ஒரு ம‌னிதன் முழுமையாக‌ சாக‌வும் முடியாது ,எதிராளியை முழுமையாக‌ கொல்ல‌வும் முடியாது. தியான‌த்தால் இவைஇர‌ண்டுமே சாத்திய‌ம்.

இந்த‌ உண்மையை அனைவ‌ரும் அறிய‌ முத‌ற்க‌ண் அவ‌ர்க‌ளுக்கு செக்ஸும்,ப‌ண‌மும் த‌ங்கு த‌டையின்றி கிடைக்க‌ வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிர‌க‌ங்க‌ளின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்த‌வ‌ன் என்ற‌ முறையில்) ம‌க்கள் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌ உத‌வுவ‌தே என் ப‌திவுக‌ளின் நோக்க‌ம்.

மனித‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்றால் ப‌ய‌ம். இருட்டு ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். த‌னிமை ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். இதனால் தான் ராத்திரியில் ப‌வ‌ர் க‌ட்டானால் கூட‌ மின் நிலைய‌ங்க‌ளுக்கு போன் மேல் போன். இத‌னால் தான் 6 முத‌ல் 60 வ‌ய‌து வ‌ரை ம‌னித‌ன் காத‌லித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக‌ இரு என்றான் புத்த‌ர். எத்த‌னை பேரால் இப்ப‌டி வாழ‌ முடியும். ஏழ்மையும்,த‌னிமையும் ம‌னித‌னை வெருட்ட‌ ஆர‌ம்பிப்ப‌தால் தான் ம‌க்க‌ள் ப‌ண‌ம் ப‌ண‌ம் என்று ப‌ற‌க்கிறார்க‌ள்.ஈவ் டீசிங்,க‌ற்ப‌ழிப்புக‌ள்,க‌ள்ள‌ உற‌வுக‌ள் எல்லாமே இத‌ன் விளைவுதான்.

இத‌ற்காக‌த்தான் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை தீட்டினேன். அத‌ன் அம‌லுக்கு 1986 முத‌லாக‌ உழைத்து வ‌ருகிறேன். பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ருகிறேன்.

த‌ன‌து அடிம‌ன‌தில் உள்ள‌ ,அடிப்ப‌டை கோரிக்கைக‌ள் (சாவ‌து,சாவ‌டிப்ப‌து) செக்ஸிலோ,ப‌ண‌த்தாலே நிறைவேறாது, அது தியான‌த்தின் மூல‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம் என்று ம‌னித‌ன் அனுபவ பூர்வமாக உண‌ர‌ வேண்டுமானால் ப‌ண‌ம்,செக்ஸ் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் கிடைத்தாக‌ வேண்டும். என் நாடு சித்த‌ர்க‌ள் சூட்சும‌ வ‌டிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருமே ஞான‌ம் பெற‌வேண்டும். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌
ப‌ணம் மற்றும் செக்ஸை முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வமான வ‌ழியில் பெற‌வேண்டும். இதுவே என் கடந்த அறு நூற்று சில்லரை பதிவுகளின் சாரம்.

Tuesday, September 22, 2009

அனுப‌வ‌ ஜோதிட‌ம்

நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் என்ற இந்த பதிவுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கதை அவர் சொன்னபடியே முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான். அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம். நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வந்த சிறுவன் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?

பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் அவை அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.

பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின.

பின்பு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.
பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.


2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். ஆசிரியர் தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவ , சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்து அது ஜோதிட பூமி மாத இதழில் முழுமையாக வெளிவந்தது ஒரு துணைக்கதை. பிரிண்டிங் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாய் புத்தகம் அச்சிட பெண்டாட்டி தாலியை அடகு வைக்கவேண்டிய‌அவசியமில்லாத காரணத்தாலும், சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ், தேஜா ஸ்வீட்ஸ், துர்கா ஸ்வீட்ஸ், ஆற்காடு ஸ்வீட்ஸ், துர்கா மோட்டார் டிரைவிங் ஸ்கூல் போன்ற விளம்பரதாரர்களின் பெரியமனதாலும் லோக்கல் மாதமிருமுறை நடத்திய அனுபவம் கை கொடுக்க, தினத்த‌தந்தியின் அபயக்கரம் ரொட்டி வேட்டைக்கு தள்ளாதிருக்க இந்த நீள் பதிவு தொடங்குகிறது.

"விருந்துண்ணப் போகும்போது விருந்து குறித்த விளக்கம் ஏதுக்கு" என்பது தெலுங்கு

பழமொழி. எனவே குதியுங்கள் புதிய வெள்ளத்தில். அடித்து செல்லட்டும் ஜோதிடம் குறித்த தவறான நம்பிக்கைகள்.

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்களை விவரிக்க துவங்குகிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார். உதாரணமாக:
தங்கம்: குரு
இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:


ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.

(To be Continued

Monday, September 21, 2009

அப்துல் கலாமின் மனைவி ‍- 2

முன்னுரை:
கலாம் குறித்த மரு(அச்சுப்பிழை அல்ல) மொழிகளுக்கும், மறு மொழிகளுக்கும் என் மறு மொழிகளை இப்பதிவில் போட்டுள்ளேன். நடு நிலையாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தால் நலம்.


பாலா

சித்தூர் முருகேசன் அய்யா,

நீங்கள் எப்போது ரெளடி ரெட்டியை மாகாத்மா காந்தி லெவலுக்கு உயர்த்த் வைத்து பேசினீங்களோ அப்போதே புரிந்து விட்டது உங்களுக்கு அறிவு சிறிதும் கிடையாது என்று,சோசிய அறிவு உட்பட.ஆகையால், இந்த பதிவில் கூட நீங்கள் ரெட்டிகாருவை போற்றி,விஞ்ஞானி கலாமை இகழ்ந்து கீழ்த்தரத்தின் எல்லைக்கே சென்று விட்டது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை.

பாலா

பாலா அவர்களே !
நான் ஒய்.எஸ்.ஆரை மகாத்மா அளவுக்கு ஏற்றியும், அவரோடு ஒப்பிட்டு கலாமை இழிவு படுத்தியும் எழுதியதாக ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் சொல்லவந்தது இதுதான். கேடுகெட்ட மற்றவர்களுடன் ஒப்பிட்டு ஒரு மனிதரை ஆதர்ஸ புருஷராக அங்கீகரிப்பது வழக்கமாகிவிட்டது. இது இன்றைய தேதிக்கு சரியாக இருக்கலாம். கைம்பெண்ணுக்கு மொட்டையடிப்பது போல். ஆனால் நாளை ?

உலகமே திவாலாக போகிறது. சைனா போனுக்கு நாம் தடை போட்டால் அவர்கள் எல்லையில் வேலை காட்டுவார்கள். நாம் அவர்களது விளையாட்டு பொம்மைகளுக்கு தடை போட்டால் பாக்கிஸ்தானுக்கு இன்னும் ரெண்டு போர்சாமான் அதிகம் கொடுப்பார்கள் இலவசமாக கொடுப்பார்கள்.

தண்ணிருக்காக யுத்தங்கள் நடக்கப்போகின்றன. ஐ.டி.பூம், ரியல் பூம் எல்லாம் ஃபணால். ஸ்டீல் விலை ஃபணாலாகிவிட்டது. அமெரிக்காவில் டாலர் குப்பையுடன் வருவோம் என்று போனவர்கள் எல்லாம் குப்பையாய் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.

வரவிருப்பது பஞ்ச காலம். அந்த நேரத்தில் கலாம் மாதிரி உலவுலாகாட்டி உத்தமர்களால் வேலைக்காகாது. அட நீங்கள் இகழும் ரெட்டிகாருக்கள்
மனம் திரும்பி வந்து அதிகாரத்தை கைப்பற்றினால் கூட எதிர்கால நரகத்தை ஸ்வர்கமாக மாற்றாவிட்டாலும் ஏதோ காலத்தை தள்ளலாம்.

அந்த நேரத்தில் கலாம் போன்ற உட்டாலக்கடி மஞ்சி( நல்ல) மனிதர்களால் நயா பைசா லாபம் இருக்காது.

எனக்கு அறிவு இல்லை என்றும் சோசிய அறிவும் இல்லை என்று தீர்ப்பளித்து கற்றவை கையளவு, கல்லாதவை கடலளவு என்றும் நான் கற்க வேண்டியவை ஏராளம் என்றும் அறிவுறுத்தியமைக்கு நன்றி பாலா அவர்களே !

ப்ளாகர் நக்கீரன்:
பெர்ஃபெக்ட் மிஸ்டர் .முருகேசன் !

ஒய்.எஸ்.ஆர் மகாத்மா. அவர் என்றும் எறும்பை கூட கொல்லாதவர். எதிர்கட்சியினரை அவர் தம் அடக்குமுறைக்கு ஆளாக்கியதே இல்லை.

ஆனால் கலாம் நீங்கள் இதுவரை பார்க்காத அளவுக்கு வொர்ஸ்டான மனிதர்.

நீங்கள் மீடியாவை பற்றி பேசுகிறீர்கள். இதே மீடியா தான் ஆந்திராவில் மிஸ்டர் .ரெட்டியை மகாத்மாவாக சித்தரித்தது
நீங்கள் சொல்லியிருப்பதை போல் இதற்கு பின்னும் மீடியாவை விலைக்கு வாங்கிய அம்சம் இருப்பதாக சொல்லலாமா?

வெரி குட் ரவுடிரெட்டியின் தொண்டரே !

September 20, 2009 8:21 AM
நக்கீரன் அவர்களே !
தென்னாடுடைய சிவனையே நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று துணிந்து நின்ற நக்கீரன் பெயர் கொண்ட தாங்கள் பெயரளவில் நக்கீரனாக இருப்பது. வருத்தம் தருகிறது.

சரி ஒழியட்டும். பெயர் தங்களிடம். அதற்குரிய செயல் என்னிடம். இதுவும் விதியின் விளையாட்டுதான்.

ஒய்.எஸ்.ஆர் மகாத்மா என்றும், எறும்பை கூட கொல்லாதவர் என்றும் நான் சொல்லவே இல்லை. அவர் தாம் பிறந்து ,வளர்ந்த என்விரான்மென்டல் ஃபேக்டர்ஸை ஓவர் லுக் செய்து , தம் கடந்த காலத்துக்கு தொடர்பில்லாத சிகரங்களை அடைந்தார் என்றே குறிப்பிட்டுள்ளேன். கலாமையும், ஒய்.எஸ்.ஆரையும் ஒப்பிட்டால் ஒய்.எஸ்.ஆர் பெட்டர் என்றே தோன்றுகிறது. அவர் மக்களை சந்தித்தாக வேண்டும். அந்த மக்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேடு கெட்ட சகாக்களை சமாளித்தாக வேண்டும். தில்லிக்கு காவடி எடுக்க வேண்டும். முக்கியமாய் அரசியல் செய்தாக வேண்டும்.

கலாமுக்கு அந்த தலை எழுத்தில்லையே. அவர் வாக்கை தேசமே வேதவாக்காக எடுத்துக்கொண்ட நிலையில் அவர் கிழித்தது என்ன ? கனவு காணச்சொன்னார். ஜாக்ஸன் தனமாய் பிள்ளைகளுடன் கும்மி யடித்தார். ஜிம்மிக்குகள் செய்து தனது இமேஜை உயர்த்திக்கொள்ள பார்த்தார்.

கிராம மக்களின் சடங்கு சம்பிரதாயங்களை ,முக்கியமாய் பிறபடுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோரை கலாய்க்கும் காமெடிகள் செய்யும் விவேக் போன்ற பார்ப்பன மேதைகளை சந்தித்து அளவளாவிக்கொண்டிருந்தார்.
சமீபத்தில் ஆந்திரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் வீட்டில் காவலர்கள் அவ்வீட்டு பெண்மணிகளுக்கு கேர்ஃப்ரீ வாங்கி தந்துக்கொண்டிருந்த ஆர்டர்லி முறையை ஒழித்து அரசு ஒரு உத்தரவு போட்டது. இது மாதிரி கலாம் ஒரே ஒரு சின்ன புரட்சியை செய்ததாக நிரூபியுங்கள் . பார்க்கலாம். கலாம் எல்லாம் சும்மா ஃப்ளவர் பொக்கே மாதிரி. மீடியா புண்ணியத்தில் மணக்கலாம். ஆனால் ஒய்.எஸ்.ஆர் கறிவேப்பிலை கொத்து மாதிரி. மீடியா என்ன தான் சேறு வாரி இறைத்தாலும் அந்த வாசத்தை ஒன்றும் செய்ய முடியாது.

Blogger ஜோசப் பால்ராஜ் said...

// இப்டி ஒரு கேடுகெட்ட அரசியல் பதிவு எழுதி என்னத்த சாதிக்க போறீங்க சித்தூர் முருகேசன்?//

உத்தமர் என்பதற்கான அளவு கோலை சற்றே கரெக்ட் செய்துள்ளேன். கெட்டதை செய்பவன் மட்டும் கெட்டவனல்ல. கெட்டதை தடுக்காதவனும் கெட்டவனே ! நல்லதை செய்யாதவனும் கெட்டவனே ! என்று நிரூப்த்துள்ளேன்.

// வலையுலகம் மிக கேவலமான உங்கள் போன்றோரின் வாந்திகளுக்கும் இடம் தருது.//

சரியாக சொல்லியுள்ளீர்கள். ஜீரணித்துக்கொள்ள முடியாத கச்மலங்களை தான் வாந்தி எடுக்கிறோம். அது போல் செரித்துக்கொள்ள முடியாத டுபாக்கூர் உத்தமர்களின் செயல்பாடுகளை மனம் செரித்துக்கொள்ளாது பட்ட அவதியே இந்த பதிவானது.(உங்கள் வொக்காபலரியில் வாந்தி )

// அதையும் நாலு பேரு படிக்க வேண்டியிருக்கு.//
நாலு பேரில்லை தலை 344 பேர் படிச்சுருக்காங்க. 10 பேர் தான் விமர்சிச்சிருக்கிங்க. அப்போ 333 பேர் ஒத்துண்டாப்ல தானே அர்த்தம். வேணம்னா வாக்கெடுப்பு வைக்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பில்லையா.

நீங்க தலைமேல வச்சு கொண்டாடற கலாமை ஒரு எம்.பி. தொகுதியில சுயேச்சையா நின்னு ஜெயிக்கச்சொல்லுங்க பார்ப்போம்

// தலைப்புக்கும் நீங்க பதிவுல ஏதோ ஒரு போதை தலைக்கேறி எடுத்துருக்க அருவருப்பான வாந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.//

கலாமை பத்தி நான் சொன்ன ஒரே ஒரு பாசிட்டிவ் பாயிண்ட் அதான் தலை.
அதை கூட புரிஞ்சுக்கலன்னா நான் என்ன பண்றது?
//உங்களையெல்லாம் திருத்த யாராலும் முடியாது. த்தூ//
வேணாம்னே .. நானும் திருந்திட்டன்னா உண்மைய எவன் தான் சொல்றது. உங்களுக்கு இந்த நாட்டு மக்கள் மேல ஏன் இந்த அளவு கொலைவெறி.

September 20, 2009 10:40 AM
Blogger Ilan said...

hope everyone ll avoid ur blog, kevalamana pathivu;

இலன் அவர்களே !
தெலுங்கில் ஒரு கவிதை உண்டு. "ஏனடா எழுதுகிறீர்கள் தடை செய்ய தகுதியற்ற கவிதைகளை" என்று. ஏற்கெனவே ஆன்மீகம் மாத இதழ் ஒரே நேரத்தில் துவக்கிய என் 2 தொடர்களை நிறுத்தி என் எழுத்துக்களை தகுதியுள்ளதாக்கியது. தட்ஸ் தமிழ் என் பதிவை தடை செய்து பெருமைப்படுத்தியது. தாங்களும் என் பதிவை தவிர்க்க சொல்லி கனப்பட்டுத்தியுள்ளீர்கள். நன்றி

September 20, 2009 11:45 AM
Blogger Raja said...

Very stupid writing. Nonsense.

September 20, 2009 6:40 PM

ப்ளாகர் ராஜா அவர்களே !
உங்களது ஹிப்பாக்ரட் உலகத்தில் எது சென்ஸ் எனப்படுமோ அது என் பார்வையில் நான் சென்ஸ். நீங்கள் என் பதிவை நான் சென்ஸ் என்று குறிப்பிட்டுள்ளதை பாராட்டாகவே ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.


Blogger கிரி said...

// உங்களுக்கு உலகத்துல NTR தவிர்த்து அனைவரும் கிறுக்கனுக தான்..//
இல்லிங்க தலை என்.டி.ஆரே பெரிய கிறுக்கன். லட்சுமி பார்வதிய கல்யாணம் கட்டாம சும்மா வச்சுக்கிட்டிருந்தா இன்னைக்கும் அவர் தான் சி.எம்.

// எழுதறக்கு ஒரு பிளாக் இருக்குத்துன்னு கண்ட கருமாந்தரத்தையும் எழுதறீங்க எல்லோரும்..//

பிறப்புக்கு ஆதியுலும், கருமத்துக்கு (சாவு) அந்தத்திலும் (முடிவுலும்) என்ன உண்டோ அதை அறிவது தான் தேடல். அது தான் ஞானம்,. இப்படியாக பாராட்டிய தங்கள் பாராட்டுக்கு நன்றி. இன்னும் யாரெல்லாம் இந்த ரேஞ்சி எழுதுகிறார்களோ ஒரு லிஸ்ட் கொடுத்தால் நலம்.

//கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும்//

// எப்படி சார் இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? ரூம் போட்டு யோசிப்பீங்களா?//

இல்லிங்கணா காலைல கக்கா போவும்போது தோணும்

// அவர் அளவிற்கு எளிமையாக இருந்தாலும் அவர் பதவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தான் ஆக வேண்டும். இனி அவரை ஒரு பிளாட்டில் போய் இருக்க சொல்றீங்களா!//

நான் சொல்லலிங்கணா அவர் போட்ட சீனுக்கு இந்த பில்டப் கூட இல்லன்னா எப்படிங்கணா

// அடுத்த நாட்டுல இருந்து யாராவது வந்தால் அவர்களையும் எங்க ஜனாதிபதி ரொம்ப எளிமை அதனால அவரு இங்க தான் இருப்பாரு! வேணும்னா இங்கே வந்து பாருங்கண்ணா சொல்ல முடியும்?//

தப்பான இடத்துலதான் இருக்கக்கூடாதுங்கணா.. ப்ளாட்ல இருக்கலாம்னா. அதுனால நம்ம நாட்டோட பெருமைதான் அதிகரிக்கும்னா


சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் என்று கேள்விப்பட்டதில்லிங்களான்னா !


நல்லா சொல்றாங்கய்யா டீடைலு...

//ஏன் தம் பதவி காலத்திலேயே அதை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாகமாற்ற அடம்பிடித்திருக்கலாமே.//

அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல ..சத்தியமா!

September 20, 2009 7:37 PM
Blogger மோனி said...

இந்த கருமத்த முழுசா வேற படிச்சிட்டு
பின்னுஉட்டம் வேற ...
ம்..ஹூம்....
காலக்கொடுமைடா மோனி...

September 20, 2009 9:26 PM

மோனி அவர்களே !
மொத்தம் 344 பேர் படிச்சுருக்காங்க .மறு மொழி 10 பேர்தான் (திட்டி) அதுலயும் ஒருத்தர் சில விஷயம் உண்மைனு சொல்றாரு. மறு மொழி போடாதவங்க .. எத்தனை பேரு. மவுனம் அங்கீகாரத்துக்கு அறிகுறி. எதுக்கு லொள்ளு ஒரு தேர்தல் வச்சு முடிவு பண்ணிருவமா ?
Blogger குழலி / Kuzhali said...

சூப்பர் தலைவா உங்க சர்ப்ப தோஷம் பதிவை படிச்சி டர்ஜ் ஆகி கிடந்தேன், இந்த பதிவை படித்தவுடன் சர்ப்ப தோஷ பதிவே தேவலாம் போல... ஆனால் நீங்கள் சொன்னதிலும் சில உண்மைகள் உண்டு, கலாம் பல இடங்களில் சலாம் போட்டிருக்கிறார்... அதுக்காக கலாமை இம்புட்டு கேவலப்படுத்தியிருக்க கூடாது... ஆமா உங்க 'மகாத்மா'ரெட்டி காரு பையன் ஜெகன் மகாத்மா ரெட்டி முதல்வர் ஆயி(ய்)டுவாரா?

September 20, 2009 9:54 PM

குழலி அவர்களே ! தங்கள் பாராட்டுக்கு நன்றி. கலாமை நான் கேவலப்படுத்தலிங்க. சும்மா சீன் போடறத விட்டு உருப்படியா எதையாவது செய்தா அவர் சீனுக்கும் , செய்கைக்கும் பொருத்தமிருந்தா கோயில் கட்டுவம்ல ..

நீங்க தமிழ் நாட்ல சொல்லுவிங்கல்ல. இப்படை தோற்கின் எப்படை வெல்லுமுன்னு. அப்படி ஜகன் சி.எம். ஆகலைன்னா வேட்டி கிழியும். ஜகன் மக்கள் மத்தியில பயணம் ஆரம்பிச்சுட்டாருங்க. தில்லி தலைமை டர்ருங்க

Blogger Sri said...

fucker... Enjoy your freedom of expression ..

September 20, 2009 10:24 PM

அண்ணா கருத்து சுதந்திரத்தை என்னை விட நீங்கதான் ஓவர் ட்ராஃப்ட்ல எஞ்சாய் பண்றாப்ல இருக்குங்கணா !
Blogger Revolt said...

இது வரை இப்படி கேடு கேட்ட ஒரு பதிவை நான் கண்டது இல்லை. வரும் சந்ததி மட்டும் அல்ல இன்றைய சந்ததியும் இந்த தலைப்பை மலத்தை பார்ப்பது போல் தான் பார்க்க நேரிடும்.

September 20, 2009 11:19 PM

ரெவால்ட் அண்ணே !
நக்கீரனுக்கு கொடுத்த மறுமொழி தான் உங்களுக்கும். விரைவில் வருகிறது கருத்து கணீப்பு பார்ப்பம்ணே

Sunday, September 20, 2009

அப்துல் கலாமின் மனைவி

உலகமே போற்றும் மனிதரை விமர்சிப்பது ஒரு மனோ வியாதி என்று சைக்காலஜி சொல்கிறது. ஆனால் நான் சைக்காலஜியையோ, என் சமகாலத்தவர்களையோ கருத்தில் வைத்து எழுதுவதில்லை. நாளை ஒருவன் வரப்போகிறான். அவன் மனதில் கடந்த நூற்றாண்டுகளின் வாசனை கூட இருக்காது. அவன் இன்றைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் எடை போட இருக்கிறான். வைர முத்து சொன்னது போல் "பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கிலிடப்போகிறான்.

இன்று நாம் உடன் கட்டையேறுதல், விதவைக்கு மொட்டை போடுதல் இத்யாதியை எப்படி காட்டுமிராண்டி தனம் என்று கொதிக்கிறோமோ.. அதே போல் இன்றைய நமது முற்போக்கான (?) எழுத்துக்களை நாளை வரப்போகிறவன் காட்டுமிராண்டித்தனம் என்று காட்டுக்கூச்சல் போடப்போகிறான். இன்று நாம் யார் பிரதமர், யார் முதல்வர், யார் என்ன ஜாதி, செய்தித்துறை மந்திரியில் சின்ன வீடு எந்த ஜாதி, அவர்கள் வீட்டு ட்ரைவர் என்ன ஜாதி, மாவட்ட பி.ஆர்.ஓ யார் என்றெல்லாம் கணக்கு போட்டு எழுதுகிறோமே..இந்த எழுத்துக்களை , இவை அச்சான காகிதங்களை கறைபடிந்த கேர்ஃப்ரீயை விட கேவலமாக தூக்கி போட்டு எரிக்கப்போகிறார்கள். நாலு பேரில் நாராயணா என்று கோசம் போட என்னால் முடியாது. எனவே ஒரு புதிய விவாதத்தை துவக்கி வைக்கிறேன்.

சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமை அமெரிக்க அதிகாரிகள் சோதனை போட்டதை பத்திரிக்கைகள் தீவிரமாக விமர்சித்து எழுதியிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த விசயத்தில் மக்கள் வழியே என் வழி. கலாமே அல்ல சித்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் திராட்சை விற்கும் சலாமுக்கு இந்த நிலை ஏற்பட்டாலும் நான் கண்டிப்பேன்.


அதே சமயம் நான் அறிவிக்கிறேன் பதவி சுகத்துக்கு குலாம்(அடிமை) அப்துல் கலாம். நான் மற்றெந்த அரசியல்வாதியையும்(இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை கண்டு கொள்ளாதவர்களை கூட பெரிதாய் விமர்சித்ததில்லை. காரணம் அவர்கள் புலிகள்.(தமிழ் புலிகள் அல்ல) மக்கள் ரத்தம் குடிக்கும் புலிகள். நான் கவலைப்படுவது கலாம் போன்ற பசுத்தோல் போர்த்த புலிகளைப் பற்றித்தான்.

பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம் என்பதை நான் என்றோ அறிவேன். ஆனால் உலகம் அவரை ஆதர்ச புருஷராக கொண்டாடியது. இதற்கு பார்ப்பன ஆதிக்கம் மிக்க மீடியாவும் ஒரு காரணம். மைனாரிட்டி வர்கத்தை சேர்ந்த கலாமுக்கு உரிய முக்கியத்துவம் தராவிட்டால் தம் சுயமுகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும்,குற்ற மனப்பான்மையிலும் சற்று அதிகமாகவே முக்கியத்துவம் தரப்பட்டு விட்டது.

என்னதான் நாடு முன்னேறினாலும் அச்சில் வந்ததெல்லம் உண்மை என்று நம்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். (ஒரு வழக்கில் ஆந்திரஹை கோர்ட்டு நீதிபதி முன்பு பத்திரிக்கை கட்டிங்குகளை ஆதாரமாக சம்ர்ப்பித்தபோது அவர் ரூபாய் செலவழித்தால் எந்த செய்தி வேண்டுமானாலும் பத்திரிக்கையில் வெளிவரும் என்பது எங்களுக்கு தெரியும் என்று சொன்னாராம்.)

சமீபத்தில் கூட இண்டியா டுடே க்ரூப்பை சேர்ந்த மெயில் டுடே என்ற பத்திரிக்கை எங்கள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.இறந்த துக்கம் தாளாது இறந்தவர்களின் இறப்புகள் கற்பிதம் என்று செய்தி வெளியிட்டு புயலை கிளப்பியது. அதற்கு எந்த நாய் மகன் இந்த யோசனை தந்தானோ? அவன் எந்த நாய் மகனின் கைக்கூலியாக செயல்பட்டானோ தெரியாது.

எனவே பத்திரிக்கைகளில் கலாம் பற்றி பத்திரிக்கைகளில் படித்தவற்றை மறந்து விட்டு (தற்காலிகமாகவேனும்) இந்த பதிவை படியுங்கள்.நிற்க..கலாம் கதைக்கு வருவோம். அரசுத்துறை நிறுவனங்கள்,அவற்றில் நிலவும் சிகப்பு நாடாத்தனம்.ஊழல் குறித்து அறியாதவர்கள் இல்லை. ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் யாதொரு முரண்பாடும் இல்லாது நீண்ட காலம் பணியாற்றியதை கொண்டே கலாமின் ஜாதகத்தை கணித்துவிடலாம்.

சரி ஒழியட்டும் இவர் உந்துதலில் அரசு செய்த அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவித்தவர்கள் மறக்க முடியுமா? இதையும் மேரா பாரத் மகான் கோஷங்கள் மழுப்பிவிட்டன.

இதுகூட போகட்டும்..நான் எளிமையானவன்,அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ளும் கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும். செய்தாரா இல்லை.(ஒரே ஒரு அறையை உபயோகித்துக்கொண்டாராம். பஸ் நிலையத்து நாற்றம் பார்த்து பயணிகள் மூக்கைப்பொத்திக்கொண்டால் புரிந்து கொள்ளலாம் . மேயரே அந்த வேலையை செய்தால். மற்ற 1999 அறைகளை கலாம் உபயோகிக்காத மாத்திரத்தில் அரசுப்பணம் மிச்சமாகிவிட்டதா ? ஏன் தம் பதவி காலத்திலேயே அதை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாகமாற்ற அடம்பிடித்திருக்கலாமே.)


அதுவும் ஒழியட்டும் அந்த மாளிகையின் வியர்த்த செலவுகளையாவது பாதிக்கு குறைத்திருக்க வேண்டாமா? கு.ப. அதை மாறுபட்ட,ஆக்கப்பூர்வமான வழிகளில் உபயோகித்திருக்கலாமே. இன்று கணக்கெடுக்க சொல்லுங்கள் ஜ.மாளிகையில் கலாமை சந்தித்த பிர‌முகர்களை..இதில் வயிறு நிறைந்தவர்கள் எத்தனை பேர்? பார்ப்பன அ.ஜீவிகள் எத்தனை பேர்,ஆளும்,அதிகார வர்க முதலைகள் எத்தனை பேர்?

பீகார் சட்டமன்ற கலைப்பு விவகாரம் ஒன்று போதுமே கலாம் பதவி சுகத்துக்கு குலாம் என்பதை நிரூபிக்க.எம்.பி.க்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார்கள்..தொகுதி நிதியில் விளையாடினார்கள் .கலாம் கழட்டியது என்ன? குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கு.ப.உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டவாவது செய்தாரா? இல்லை.
சரி ஒழியட்டும் வந்த மாதிரியே போயிருந்தாலும் மன்னித்திருக்கலாம். போகும்போது ஆந்திரத்து தந்திர பாபு(அச்சுப்பிழையல்ல) மீண்டும் போட்டியிட கோரியபொது வெற்றி நிச்சயம் என்றால் ஓ.கே என்று வாயை விட்டார்..பின் ஜ.மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிட்டு மேலுதட்டில் பட்ட மண்ணை துடைத்துக் கொள்ள வேண்டி வந்தது.

என்ன ஒரு ஆறுதல் என்றால் இன்றைய ஜனாதிபதி போல் கலாம் மணமானவர் அல்ல. கலாமின் மனைவி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருக்கவில்லை தட்ஸ் ஆல்.

Friday, September 18, 2009

பிசாசாகவே வாழ்ந்தவன்.


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்!

இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமய அனுபவங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம்.நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு.
அதற்கு முன்பு இருந்த கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன்.

நடந்ததை கூறினால் உங்களால் நம்ப கூட முடியாது. அவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,விளம்பர பணத்தை லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை.


ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து ஆச்சாரி,ஆச்சாரிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.
உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். ஆச்சாரி ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ ஆச்சாரி நான் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் ஆச்சாரிக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் (இன்னாள் முதல்வர்)ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

அவுசாரி என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.


"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன்..சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். த‌ற்ச‌ம‌ய‌ம் காங்கிர‌ஸ் எம்.எல்.ஏ வாக‌வும் இருக்கிறார். என‌வே அவ‌ர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார் எங்க‌ள் மேனேஜ‌ர். நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம்.கட்டமஞ்சி ,குழந்தேஸ்வரர் கோவிலை அடுத்துள்ளது சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாழ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 54 வயது.. அப்போ 50 ஆ) .
தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது செல்லப்பெயரை குறிப்பிட்டு "அவர் தானே" என்றார்.


அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் செல்லப்பெயர் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் தேவைன்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?"
"ஹெட் கான்ஸ்டபிள் சார்"
உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார். " உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் ஆச்சாரி திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆச்சாரி திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

பி.கு: இந்த மாதிரி ஃப்ளாஷ் பேக் சீனுங்க ஆயிரம் இருக்குங்கணா.. சத்தியம் எரிக்கும்னு சொல்ல‌

ஆஞ்சனேயரும் ஏசு நாதரும்


ஜோதிடம் உண்மை. ஜோதிடம் என்பதும் ஒரு விஞ்ஞானமே. ஜோதிடர்கள் கூட (முக்காலே மூணூ வீசம்) தாங்கள் சொன்னது நடக்க வேண்டுமே என்ற அக்கறையில் கணக்கு போட்டுத்தான் சொல்கிறார்கள் ஆனாலும் சில நேரம் ஜோதிடம் பொய்க்கிறது. இதற்கு என்ன காரணம்.

எங்கள் சி.எம்.ஒய்.எஸ்.ஆர் கடப்பாவில் பிறந்தவர்.கடப்பா என்றாலே வெடிகுண்டு தான் நினைவுக்கு வரும், அவரது தந்தை ராஜா ரெட்டி ஒரு ஃபேக்ஷன் லீடர். அவர் மீது பல வழக்குகள் இருந்தது. ஒய்.எஸ் .ஆரும் உத்தமர் அல்ல. ஒரு கட்டத்தில் காங்கிரசிலிருந்து பிரிந்து ரெட்டி காங்கிரஸ் ஏற்பட்ட போது இவர் ரெட்டி காங்கிரசில் இருந்தார். அப்போது இந்திரா கடப்பா வந்தபோது அவர் ஓய்வெடுக்க விருந்த கஸ்ட் ஹவுசை முற்றுக்கையிட்டு விட இந்திரா அம்மையார் குறைந்த பட்சம் பூத்தா போயிட்டு புடவை கூட மாத்திக்க முடியாம ஓட வேண்டி வந்தது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படிப்பட்ட கடந்த காலம் கொண்ட ஆசாமி மானிலமெங்கும் பாத யாத்திரை செய்தார்.மக்களில் 70 சதம் பேர் விவசாயத்தின் மேல் டெப்பென்ட் ஆகியிருப்பதையும், பாசன நீர் பற்றாக்குறை காரணமாய் அவதிபடுவதையும் கண்ணார கண்டார். அப்போது அறிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கான மின் கட்டண பாக்கியை ரத்து செய்வோம் இலவச மின்சாரம் தருவோம், லட்சம் கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டி கோடி ஏக்கர் நிலத்துக்கு பாசன நீர் தருவோம் .

ஒரே வருடத்தில் காலம் மாறியது.காட்சி மாறியது. அவரே சி.எம்.ஆனார். தேர்தல் கால வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதுதானே சரித்திரம். ஆனல் அவரோ கொடுத்த வாக்கை நிறைவேற்ற முழுமூச்சாய் பாடுபட்டார். தேர்தல் அறிக்கையில் சொன்னது (பெண்களுக்கு நூற்றுக்கு நாலணா வட்டியில் கடன் முதலானவை)சொல்லாதது(இரண்டு ரூபாய்க்கே கிலோ அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ முதலானவை)அனைத்தையும் நிறைவேற்றினார். அவரது நலதிட்டங்களை பட்டியலிட்டால் அதுவே ஒரு தனிப்பதிவாகிவிடும். முதல் டெர்மில் தான் அமல் படுத்திய வளர்ச்சி, நல திட்டங்களை மட்டும் நம்பி தேர்தலுக்கு போனார். புதிய வாக்குறுதிகள் இல்லை.எந்த கட்சியுடனும் கூட்டு இல்லை. இதர தலைவர்கள் பிரச்சாரம் கூட செய்யவில்லை. ஒண்டிக்கு ஒண்டி மோதினார். ஒரு புறம் சிரஞ்சீவி,அவருக்கு இருந்த சினிமா கவர்ச்சி, மறுபுறம் சந்திரபாபுவுடன் அனைத்து எதிர்கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டாலும், ஈனாடு, ஆந்திர ஜோதி என்ற இரண்டு மேஜர் நாளிதழ்கள் ஒரு தலை பட்ச துஷ் ப்ரச்சாரம் அனைத்தையும் மீறி ஜெயித்தார்.

இத்தனைக்கும் மானிலத்திலேயே என் ஒருவனை தவிர எந்த ஜோதிடரும் ஒய்.எஸ்.ஆர் முதல்வராவார் என்று கூறவே இல்லை. நான் கூட சிரஞ்சீவி ஜாதகத்தில் உள்ள அதே அவயோகங்கள் சிஎம் ஜாதகத்திலும் உண்டு. ஆனால் அவை வெடித்து போன குண்டு என்று வியாக்யானம் செய்தது நினைவுக்கு வருகிறது.


ஒரே விதமான தோஷங்கள் உள்ள இருவர் தலைமையில் இரண்டு கட்சிகள் மோதின.அப்போது (கடந்த தேர்தலின் போது) ஒய்.எஸ் ஜாதகத்தில் தோஷத்தை தந்து கொண்டிருந்த கிரகங்க‌ள் வேலை செய்யவில்லை.ஆனால் இப்போது சொல்கிறேன். தோஷம் தரும் கிரகங்கள் எத்தனை முறை நஷ்டம் விளைவித்தாலும் மீண்டும் மீண்டும் நஷ்டம் தந்து கொண்டேதான் இருக்கும். சிரஞ்சீவி தேர்தலில் தோற்றார். அவர் கட்சி மட்டுமல்ல அவரும் ஒரு தொகுதியில் தோற்றுப்போனார். ஆனால் இன்று அவர் கட்சி கடலில் விழுந்த உப்பு பொம்மை போல் கரைந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் (டெக்கலி) பிரஜா ராஜ்ஜியத்துக்கு டெப்பாசிட் காலி.

ஆக இந்த சம்பவங்களுக்கு ஜோதிடனாக நான் தரும் விளக்கம் என்னவென்றால் சிரஞ்சீவி ஆஞ்சனேயர் பக்தர். ஆஞ்சனேயர் சஞ்ஜீவினி வேர் கொண்டு வந்து ராம லட்சுமணர்கள் உயிரை காத்தவர் அல்லவா. பழக்க தோஷத்தில் சிரஞ்சீவியை தேர்தலில் தோற்க செய்து உயிரை காப்பாற்றிவிட்டார்.

வை.எஸ்.ஆர் கிறிஸ்தவர். கிறிஸ்துவை நம்பி வணங்கியவர். ஏசு எப்படி தம் மக்களுக்காக தம் உயிரை அர்ப்பணீத்தாரோ அப்படி தமது பக்தரையும் உயிர் தியாகம் செய்து பெரும்புகழ் பெறச்ச்ய்துவிட்டார்.சிரஞ்சீவி ஜாதகத்திலான தோஷம் தரும் கிரகங்கள் மட்டும் வேலை செய்தன. அதை நான் வெடிக்காத குண்டு வெடிச்சுருச்சு என்று வியாக்யானம் செய்தேன்.

Thursday, September 17, 2009

ஆண்களில் ஆண்மையில்லை

அப்பாடா எப்படியோ கவிதை07 ங்கற வலைப்பூ பேருக்கு ஏத்தாப்ல ஒரு கவிதைய எழுதி விட்டுட்டாரப்பா சி.எம். என்று துள்ளி குதிக்காதீர்கள். வில்லங்க பதிவுகள் தொடரும். அருஞ்சொற்பொருள்:
சி.எம்: சித்தூர்.முருகேசன்

நீங்கள் எழுதும் கவிதையில் வாழ்க்கை இல்லை.
உங்கள் வாழ்க்கையில் கவிதை இல்லை
நீங்கள் பூட்டிவைக்கும் கோவில்களில் தெய்வம் இல்லை
உங்கள் தெய்வங்களில் மனிதம் இல்லை
ஆண்களில் ஆண்மையில்லை
பெண்களில் தாய்மை இல்லை
உங்களை பெற்றோர் வலிவும்,பொலிவும் பெற்றோரில்லை
அதனால் தான் உங்கள் இதயம் மலரவில்லை
நிலத்தின் ரத்த ஈரம் உலரவில்லை
பத்தோடு பதினொன்று உங்கள் பிறப்பு
இதற்கு பொறுப்பில்லாத உங்கள் பெற்றோரும் பொறுப்பு
அவர்களின் வளர்ப்பில் நீங்கள் வளர்ந்தீர்களே
தவிரஉங்களில் எதுவும் வளரவில்லை
உங்கள் பள்ளிகளில் கல்வி இல்லை
உங்கள் கல்வியில் ஞானமில்லை
உங்கள் வியாபாரங்களில் நேர்மையில்லை
உங்கள் நேர்மையிலும் வியாபாரம் இல்லாமல் இல்லை.
உங்கள் அரசில் நிர்வாகமில்லை.
நிர்வாகத்தில் நீதியில்லை
உங்கள் நீதியில் பேதம் இல்லாமல் இல்லை.
உங்கள் காமத்தில் காதல் இல்லை
உங்கள் காதலில் காமம் தவிர வேறில்லை.
நீங்கள் என்னை முழுமையாக மறுக்கும் முன்
நானே உங்களை மறுத்துவிட்டேன்.
உங்களுடனான் தொடர்பை அறுத்துவிட்டேன்

Wednesday, September 16, 2009

வரவு எவ்வழி செலவு அவ்வழி


நாய் விற்ற காசு குரைக்காது என்பார்கள் அது தவறு. நிச்சயம் குரைக்கிறது. அதாவது பணம் எந்த வழியில் வந்ததோ அதே வழியில் போய் விடுகிறது. என்ன ஒரு லிட்டிகேஷன் என்றால் வந்த வழியே போனது என்பதை உணர 10 சதம் ஜோதிட அறிவு தேவைப்படுகிறது.

சுக்கிரனும் வெள்ளியும்:
என் நண்பன்..........அவர்களுக்கு வெள்ளி வியாபாரம். வெள்ளியே அல்ல தங்கம் கூட நீங்க வாங்கினா ஒரு ரேட்டு வித்தா ஒரு ரேட்டு. அதிலயும் வெள்ளி விஷயத்துல வித்யாசம் ஜாஸ்தி. அதிலயும் தங்கம் வாங்குறவனை விட வெள்ளி வாங்கறவன் நொந்த பார்ட்டி. அதிலயும் தங்கம் விக்கிறவனை விட வெள்ளி விக்க வர்ரவன் நொந்து நூடுல்ஸான பார்ட்டி என்பதை நினைவில் வைக்கவும். வீட்டின் பெண் ஜனத்தொகை, மனைவி ,வெள்ளி இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாய் தோன்றினாலும் இந்த மூன்றுக்கும் சுக்கிர கிரகமே அதிபதி. சத்யா குடும்பத்தினர் ஊரான் வீட்டு வெள்ளியை வாங்கி விற்று கொழுத்தார்கள்

சத்யாவின் அப்பாவுக்கு 2 மனைவி. ஒரு மனைவிக்கு பக்கவாதம். இரண்டு தங்கைகள் விதவைகள். இவனுக்கு கல்யாணமே ஆகலே. இப்போ வயசு 50. 3 வருசத்துக்கு முன்னாடி இவன் தம்பி திருட்டு நகை வாங்கி வித்து மாட்டிக்கிட்டான். சத்யாவும் அகல கால் வச்சு பண நெருக்கடில இருந்தான். ரெண்டும் சேர்த்து அழுத்தவே ஊரை விட்டே ஓடிப்போயிட்டான். (சோத்துக்கே லாட்டரி/சோத்துக்கு சுக்கிரன் அதிபதி , சென்னை மா நகரை கால் ந்டையாவே சுத்தினான் /வாகனத்துக்கு அதிபதி சுக்கிரன், வீடுவாசலுக்கும் சுக்கிரன் அதிபதி வீடு வாசலை விட்டு ஓடிப்போய் நாயடிப்பட்டான்.

எப்படியோ ஊர் திரும்பினான். துளிர்த்தான். என்ன மீண்டும் பழைய குருடி கதவை திருடி. வெள்ளில சம்பாதிக்க சம்பாதிக்க இன்னொரு அக்கா புருசன் தராசுல‌ அடி வாங்கி போயிட்டான். இப்போ பெட் ரூமை அலங்கரிக்கறதும், ப்ரிட்ஜ்,கேஸு வாங்கறதுமா இருக்கான். இதுக்கெல்லாத்துக்கும் சுக்கிரந்தான் அதிபதி. இப்போ சத்யாவுக்கு ஷுகர். (ஷுகர் வந்தவனுக்கு அந்த ஆர்வம் ,பொட்டன்ஷியாலிட்டி குறைஞ்சுரும் இல்லியா. சுக்கிரனுடைய முக்கிய காரகத்துவம் செக்ஸ். அதுவே போச்.

இந்த மாதிரி எல்லா பன்னாடை பயல்களும், அலிகிரி நாய்களும் எந்த வழில சம்பாதிக்குதோ அதே வழில தான் இழக்குதுங்க. நியாயமா சம்பாதிச்சாலே இந்த விதி பொருந்துது. இதுல ஊரை அடிச்சு உலைல போடற சொறி நாய்ங்க கதி என்னாக போகுதோ..

எங்க ஊர்ல அப்படிதான் ஒரு நாய் புலி வேஷம் போட்டுக்கிட்டு இருக்கு. எல்லாம் நில விவகாரம்தான். இதுக்கு அதிபதி செவ்வாய். செவ்வாய் கத்திக்குத்து,ரத்தக்களறி, வெடிகுண்டு, துப்பாக்கிக்கெல்லாம் அதிபதி. வொர்க் அவுட் ஆனபிறகு சிறப்பு பதிவு ஒன்னு போட்ருவம்

Tuesday, September 15, 2009

சொல்லக்கூடாத ஜோக்(குகள்)

சொல்லக்கூடாத ஜோக்குகள்
1.தான் திருடி பிறனை நம்பான் கூத்தி கள்ளன் மனைவியை நம்பானு ஒரு பழமொழி உண்டு. லிங்கம் என்பவனும் அப்படி தான்.அவன் பெரிய மொள்ளமாறி. பிஞ்சுல பழுத்தவன். அதே மாதிரி வைஃப் வந்துட்டா என்ன பண்றதுனு தனக்கு மணமகள் கேட்டு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தான். வந்த அல்லையென்ஸெல்லாம் வடி கட்டினான். வரவ அடி பட்ட கேசா இருக்க கூடாதுனு. கடைசில மூணு டிக்கட் தேறுச்சு. அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு ........காட்டி இது போல எப்பனா பார்த்திருக்கிங்களானும் கேட்டுட்டான். ஒருத்தி போட்டோல பார்த்தேன்னிட்டா. ரிஜெக்டட். அடுத்தவ வீடியோல பார்த்தேன்னா. அவளும் ரிஜெக்டட். மூணாவது பார்ட்டி மட்டும் பார்த்ததே இல்லேனு சாதிச்சுட்டா. லிங்கம் திருப்தியாகி கல்யாணமும் பண்ணீக்கிட்டான். அப்புறம் பார்க்கணுமே கூத்தை. மனைவி பெரிய கேப்மாரினு தெரிஞ்சுபோச்சு. லிங்கம் புலம்பியே விட்டான் அடிப்பாவி அவுத்தே காட்டினேனே பார்த்ததே இல்லேனு சாதிச்சியே என்றான்

"யோவ் நீ என்னய்யா கேட்டே"
"இது போல பார்த்திருக்கியானு கேட்டேன்"
"நான் என்ன சொன்னேன்"
"இது போல பார்த்ததே இல்லேண்ணேன்"
"அதுக்கு என்னய்யா அர்த்தம் ?"
"பார்த்ததே இல்லேனுதான் அர்த்தம்"
" அட தூ.. துப்பு கெட்டவனே.. இது போலன்னா.. நீ காட்டினியே அந்த சுண்டுவரலை போலனு அர்த்தம்..அதை போல என் லைஃப்ல பார்த்தது கிடையாதுனு நிஜத்தைதானய்யா சொன்னேன்"

Monday, September 14, 2009

அவ‌ன் பெண்டாட்டிய‌ நீ க‌ட்டிக்க‌ற‌யா ?

வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி. ஆனால் நாம் அனைவருமே திட்டமிடுகிறோம். நம் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி

எங்கள் சந்திரபாபு முதல்வராக இருந்த போது விஷன் 2020 என்று ஒரு உட்டாலக்கடியை பற்றி தொண்டை வறள பேசிக்கொண்டிருந்தார். அதன் சாராம்சம் என்னவென்றால் இப்போ 10 பன்னி இருக்கு இது வருசத்துல இத்தினி குட்டி போடும். அடுத்த வருசம் அந்த குட்டிங்க குட்டி போடும்னு கணக்கு. நோய் வந்து எல்லாம் செத்துப்போயிட்டா ? எல்லாத்துக்கும் வெறி புடிச்சு சந்திரபாபுவையே கடிச்சு குதறிட்டா என்ன பண்றதுங்கற கேள்விக்கெல்லாம் பதில் இல்லாத திட்டம் அது .கம்யூனிஸ்டுகள் அதை விஷன் 420 என்று கிண்டலடித்து வந்தனர். அதே கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்காளத்தில் விவசாயிகளின் விளை நிலங்களை பறிக்க திட்டமிட்டதும் தெரிந்ததே !

நிற்க என் நண்பன் ஒருவனின் திட்டமிடல் பற்றியும் வாழ்க்கை அவனை எப்படி லொள்ளு செய்தது என்பதை பற்றியும்தான் இந்த பதிவு. அவன் பெயர் ..வேண்டாம். ஏடுகொண்டலு என்று வைத்து கொள்வோம். பட்சி தோஷம்(?) காரணமாய் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத உருவம். பள்ளி ஆசிரியரான அப்பா. அவரது உப தொழில் இலவசமாய் வரன் பார்த்தல். அம்மா ஹவுஸ் வைஃப். அந்த காலத்து கலப்பு திருமண தம்பதி. கச்சாமுச்சான்னு பசங்க. நம்ம ஏடுகொண்டலு சின்ன வயசுலயே வறுமை நிலைக்கு பயந்துட்டான். திறமை இருக்குங்கறதை மறந்துட்டான்.

இதில் அவன் ராசி வேறு ரிஷப ராசியாச்சா.. பேச்சுன்னா வெல்லம். பெண்கள் என்றால் ஜொள், தீனிப்பண்டாரம்,கல்யாணம், காரியம் ஒன்னு விடமாட்டான். மேலும் வேலி தாண்டி மேய்வதில் ஒரு ருசி.

பாகாலாவில் ரயில்வே எம்ப்ளாயியின் ஆசைநாயகி, தங்கள் காலனி லாரி ட்ரைவரின் மனைவி,(அந்த நேரம் நம் ஏடு கொண்டலு பிரைவேட் எலக்ட்ரிக்கல் வைர் மேனிடம் உதவியாள்தான்),பாகாலாவிலேயே கோர்ட்டு குமாஸ்தாவின் மனைவி. அவன் மேய்வதும்,பிடிபட்டு அவதி படுதல்,உதைபடுதல் ஏதோ ஒரு வகையில் நான் அவனை காப்பாற்றியோ,ஒப்பேற்றியோ விடுதலும் தொடர்ந்து நடந்து வந்தது.

இதெல்லாம் ஒரு புறம் என்றால் அவன் திட்டமிடல் தான் எரிச்சலூட்டும் விஷயம். டவுனிலிருந்து காலனிக்கு செல்லும் டவுன் பஸ்ஸின் நேரத்தை கூட தெரிந்து வைத்துக் கொண்டு பத்து முறை நேரம் பார்த்து பார்த்து பேசுவது நம்மை பைல்ஸ் நோயாளி போலாக்கிவிடும். சரி ஒழியட்டும்.

லாரி ட்ரைவ‌ர் ம‌னைவி விஷ‌ய‌த்தில் கால‌னிக்கே போக‌ முடியாத‌ நிலைமை ஆகிவிட்ட‌து. இவன் புத்தூரில் ஒரு எலக்ட்ரிக்கல் ஷாப்பின் ஆஸ்தான் எலக்ட்ரிஷியனாக வேலை செய்துவந்தான்.அப்போதெல்லாம் டவுனிலிருந்து காலனி வீட்டு வரை அவனுக்கு ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி ரேஞ்சில் நண்பர்கள் செக்யூரிட்டி கொடுத்தாக வேண்டும்.

எப்படியோ இ.பி.யில் வேலை கிடைத்துவிட்டது. பாகாலாவில் போட்டார்கள். இதற்கிடையில் நான் கலப்புதிருமணம் செய்து கொண்டுசித்தூரில் வாழமுடியாது, சத்தியவேடு போய் அங்கிருந்து கும்மிடிபூண்டியில் இலை எடுத்து ,பின் சித்தூர் வந்து திருப்பதி போய் மீண்டும் சித்தூர் வர வெட்கப்பட்டு பாகாலாவில் இறங்கி விட்டேன். ஏடுகொண்டலு உஷார் பார்ட்டி.
தான் இருக்கும் காம்ப்ளெக்ஸில் வீடு காலி இல்லை என்று தூரமாக ஒரு போர்ஷன் சூ காட்டினான். சித்தூரிலிருந்து வரும் அப்பாவின் எம்.ஓ. ஜோதிடராக ஈட்டும் சொற்ப பணத்தில் காலத்தை ஓட்டிய காலம் அது.

மாலை நேரத்தில் ஏ.கொ.ரூமுக்கு போவேன். ப‌ய‌ங்க‌ர‌மாய் சாமி கும்பிடுவான் . என்ன‌டா வேண்ட‌றே என்றால் பதிலி்ல்லை . ரொம்பவே மெனக்கெட்டு அவன் வாயை பிடுங்கினேன் . கடைசியில் சொன்னான் "லாரி ட்ரைவ‌ர் செத்துட‌னும்"னு வேண்ட‌றேன் என்றான்.

"ச‌ரிப்பா நீ அவ‌ன் ம‌னைவியை அனுப‌விச்சே,அவ‌னுக்கு தெரிஞ்சு போய் வெட்ட‌ வ‌ந்தான் ஓடி வ‌ந்துட்டே..இப்போ அவ‌ன் சாக‌னும்னு சாமி கும்பிட‌றே, அவ‌ன் செத்துட்டா அவ‌ன் பெண்டாட்டிய‌ நீ க‌ட்டிக்க‌ற‌யா/இல்லை வ‌ச்சுக்க‌றயா/ச‌ரி போவ‌ட்டும் அவ‌ளுக்கு ப‌ச‌ங்க‌ வேற‌ இருக்காங்க‌ அதுல‌ யாரையாவ‌து த‌த்தெடுத்துக்க‌ற‌யா/ உன் டீல் என்ன‌ சொல்லு நானும் உன‌க்கு ச‌ப்போர்ட்டா வேண்டிக்கிறேன்."என்றேன்.

ஊஹூம் என்று விட்டான். இன்றைய தேதிக்கு சித்தூருக்கே மாற்றலாகி கல்யாணமோ என்று பரிதவித்து ,திரும‌ண‌மாகி ஒரு பெட்டை குட்டி போட்டு,சுக‌ர் வாங்கி க‌டைக‌ளில் தூசு த‌ட்டும் குச்சி மாதிரி ஆகிவிட்டிருக்கிறான். பிஸ்டன் ,பேட்டரி ஏதும் வேலை செய்வதில்லையாம். ஊரில் உள்ள‌ எல்.ஐ.சி. எல்லாம் க‌ட்டி (சாவு ப‌ய‌ம்?) குடும்ப‌ செல‌வுக்கு கூட‌ யோசிக்க‌ வேண்டிய‌ நிலை .

நான் ஓஷோவின் ஏகலைவ சீடன் என்ற முறையில் அவனது இழவெடுத்த முன்னேற்பாடுகளை கிண்டலடிப்பதுவழக்கம் .


இந்நிலையில் திருவ‌ள்ளூரில் ஒரு திரும‌ண‌த்துக்கு போக‌ வேண்டிவ‌ந்த‌து. நான் ஒன்றும் கூகுள் எர்த் மேதை இல்லாவிட்டாலும் குன்ஸாக‌ ஒரு குன்ஸ் வைத்திருப்பேன். நாய‌க்க‌ரே! பஸ்ஸுல திருத்த‌ணி போயிட்டு அங்கிருந்து ர‌யில் பிடிச்சுர‌லாம் என்றேன். "அய்யய்யோ அது சிங்கிள் ரோடு , மேலும் த‌னியார் பஸ் மரத்துக்கு மரம் நின்னு நின்னு போவான்.ரோடு ந‌ல்லாருக்காது அது இது என்று டூர் புரோக்ராம‌ர் ஆகிவிட்டான். என‌க்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை. நீதான் டீம் லீட‌ர் ,நீ சொல்லு நாய‌க்க‌ரே..நீ எப்ப‌டி சொன்னா அப்ப‌டி என்று விட்டேன். பிற‌கு பாருங்க‌ளேன் நாயடி.

வ‌யா திருத்த‌ணி சென்னை ப‌ஸ் என்றான்/பின் காட்பாடி போய் அர‌க்கோண‌ம் ட்ரெயின், அங்கிருந்து ப‌ஸ்ஸுல‌ திருவ‌ள்ளூர் என்றான். எல்லாத்துக்கும் ஓகே என்றேன். காட்பாடி ஸ்டேஷன் போனோம் ம‌ணி ம‌திய‌ம் 2.40. இனி 6 ம‌ணிக்குத்தான் ர‌யில் என்று விட்டார்க‌ள். பின் வேலூர் ப‌ஸ் ஸ்டாண்டு. அங்கிருந்து அர‌க்கோண‌ம் . ர‌யிலில் திருவ‌ள்ளூர். திரும‌ண‌ம‌ண்ட‌ப‌ம் சென்ற‌தும் மாப்பிள்ளையையும், மாப்பிள்ளை அண்ணனையும் மூக்குக்கு நேராய் ரூம் சாவி கேட்டு அரிக்க‌ ஆர‌ம்பித்து விட்டான். வாங்கியும் விட்டான்.ரிச‌ப்ஷ‌ன் ஆச்சு.விடிய‌ல்
திரும‌ண‌ம். நான் ந‌ள்ளிர‌வு வ‌ரை சென்னை ந‌ண்ப‌ரை வ‌ர‌வ‌ழைத்து வைத்துக் கொண்டு அவ‌ர் க‌தைக‌ளை கேட்டுக் கொண்டிருந்து விட்டேன். கல்யாண வீட்டுல‌ குடித்த‌ காப்பி தொண்டை குழிவ‌ரையாவ‌து இற‌ங்கிய‌தோ இல்லையோ..ர‌யில் ர‌யில் என்று ஜெபிக்க‌ துவ‌ங்கினான். அதென்ன‌மோ என‌க்கு ர‌யில் என்றாலே அல‌ர்ஜி. என்னைப்பொருத்த‌வ‌ரை அந்த ரயில்வே உல‌க‌மே புராதன‌மான‌து,ம‌ர்ம‌ம் நிறைந்த‌து. ஆப‌த்து நிறைந்த‌து.நம் செல்வாக்கு எதுவும் வேலை செய்யாத தீவு அது .

க‌டைசி பெட்டியில் ஒரு எக்ஸ் சிம்ப‌ல் இருக்கும் அது எத‌ற்கு தெரியுமா ஒவ்வொரு ஸ்டேஷ‌னிலும் டார்ச் அடித்து பார்க்கும் போது எக்ஸ் இல்லாவிட்டால் பெட்டி ஏதோ க‌ழ‌ன்டுகிச்சு என்று தேட‌ ஆர‌ம்பிப்பார்க‌ளாம்.இது போன்ற‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் என‌க்கு ர‌யில் ப‌ய‌ண‌ம் என்றாலே வ‌யிறு க‌ல‌ங்கும் (அந்த‌ க‌ல‌க்க‌ம் இல்லிங்க‌)

நான் சொல்லி பார்த்தேன் நாய‌க்க‌ரே ரொம்ப‌ சுக‌ம் தேடாதே.. இண்டிய‌ன் ரோட்ஸ் எப்ப‌டி இருக்குனு தெரிஞ்சுக்க‌லாம் ப‌ஸ்ல‌யே போலாம் என்றேன் ப‌ல‌வீன‌ குர‌லில். ஊஹூம். அலைந்து ப‌றை சாற்றி டிக்க‌ட் வாங்கினான். சென்னை ந‌ண்ப‌ர் வில்லிவாக்க‌ம் செல்ல‌ ர‌யிலேறினார். அர‌க்கோண‌ம் செல்லும் ர‌யில் வ‌ந்த‌து. வில்லிலிருந்து புற‌ப்ப‌ட்ட‌ அம்பு மாதிரி ஏறிக்கொண்டு என்னையும் டென்ஷ‌ன்ப‌டுத்தி ஏற்றினான்.

ந‌ம‌க்கு ஏற்கென‌வே அல‌ர்ஜி. ர‌யில் உல‌க‌ ச‌மாச்சார‌ம்னாலே மூளை க‌த‌வு ஹ‌வுஸ் புல் போர்டு போட்டுரும். பலியாடு மாறி ஏறிக்கொண்டேன். அந்த ரயிலே ஐஸ்வர்யா ராய் தனமாய் இருந்தது (அதிலும் திருமண்த்துக்கு முந்திய) நான் நாயக்கரே இது ஏதோ பணக்கார ரயில் மாதிரி இருக்கு இது சரியான ரயில்தானா என்றேன் கிசுகிசுப்பாய்.


சே சே லாலு வந்த பிறகு ரயில்வேயே ஜொலிக்குதுப்பா என்றான் ஏ.கொண்டலு.வ‌ந்தாருயா டிக்க‌ட் செக்க‌ர் நீ ஆர்டின‌ரிக்கு டிக்க‌ட் வாங்கி,எக்ஸ்பிர‌ஸ்ல‌ வ‌ந்துட்ட‌ வைய்யா ஆளுக்கு 265 னுட்டார். கூட‌ என் ம‌க‌ள் வேறு.

அவ‌ன் முக‌த்தை பார்க்க‌ வேண்டுமே அப்ப‌டியே பேஸ்த‌டித்து,க‌ருத்து..பே பே என் கிறான். பின் நான் க‌ள‌மிற‌ங்கி லாலு நமக்கு க்ளையண்டு,வேலு நமக்கு க்ளோஸ் அது இதுன்னு பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி மூணு டிக்கெட்டுக்கும் சேர்த்து 265க்கு செட்டில் செய்து வெளி வ‌ந்தோம்.கையில் கால‌ணா இல்லை. அதுவ‌ரை அவ‌ன் காட்டிய க‌ம்பீர‌ம்,த‌ன்ன‌ம்பிக்கை,திட்ட‌மிட‌ல்,அலைய‌ல் எல்லாமே புஸ் ஆகிவிட்ட‌து.

ந‌ம‌க்கு அட‌கு வ‌ச்சு காசு வாங்கிற‌துல‌ எக்க‌ச்ச‌க்க‌ அனுப‌வ‌மாச்சே ! கையில‌ செல் இருக்கு சேட்டு க‌டை யில்லாத‌ ஊர் எதுங்க‌ற‌து என் தைரிய‌ம். ஏடுகொண்ட‌லுவுக்கு பேதியாகிவிட்ட‌து. பின் எப்ப‌டியோ சித்தூரில் உள்ள ஒரு பாவாவுக்கு (வைசிய‌ ந‌ண்ப‌ன்) போன் போட்டு அவ‌ன் அர‌க்கோண‌ம் பாவாவுக்கு போன் போட்டு சொல்ல ரூ 150 வாங்கினான்.

ரூ.150 கைக்கு வ‌ந்த‌துமே ஆரம்பிச்சுட்டான்யா! ஆரம்பிச்சுட்டான் "க‌ணேஷ் ப‌வ‌ன்ல , நல்ல வெளிச்சத்துல , ஃபேன் இருக்கிற டேபிள்ள உட்கார்ந்து மூணே மூனு இட்லி ம‌ட்டும் சாப்பி்ட்டுட்டு புறப்பட்டுரலாம் ."

திருத்த‌ முடியாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள். எப்படியோ இட்லி சாப்பிட்டுட்டு தான் ஊர் வ‌ந்து சேர்ந்தோம்.

தாளி ..திட்ட‌மிட‌ற‌வ‌ன் நாஸ்திக‌ன். வாழ்க்கையைப் ப‌ற்றிய‌ புரித‌ல் இல்லாத‌வ‌ன் என்ற‌ என் க‌ருத்து உறுதிப்ப‌ட்ட‌து.

Friday, September 11, 2009

வன்கொடுமை வழக்குகளில் பாதி டுபாகூர்

வன்கொடுமை வழக்குகளில் பாதி டுபாகூர்தான். ஆம் சமுதாயத்தில் உயர் சாதி, கீழ் சாதி என்றிருப்பதைபோல் தலித்திலும் இரண்டு சாதி ஏற்பட்டுவிட்டது. பிரியாணி சாப்பிட்டு பீடாவுக்கு போராடும்சாதி ஒன்று. கஞ்சிக்கு இல்லாது தத்தளிக்கும் சாதி ஒன்று. இதில் பிரியாணிக்கு பின் பீடாவுக்கு போராடும் சாதி வன் கொடுமை வழக்குகளை ஒரு அஸ்திரமாக உபயோகிப்பது தொடர்ந்து வருகிறது.

இவன் என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்யலாம். அதிகாரி நடவடிக்கைக்கு இறங்கினாலோ, எச்சரித்தாலோ உடனே வன் கொடுமை வாக்கு. இது போன்ற டுபாகூர் வழக்குகளால் புலி வருது கதையாய் வன் கொடுமை வழக்கு என்றாலே சந்தேகத்துடன் பாருக்கும் நிலை வந்துவிடும். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு கோர்ட்டுக்கு வரும் நபருக்கும் நீதி மறுக்கப்பட்டு விடும் ஆபத்தும் உள்ளது.

என்னை பொறுத்தவரை சாதி வேறுபாடு என்பது அருவறுப்பூட்டும் செயல். என் சாதிக்காரர்கள் அனைவருமே குலத்தை கெடுக்க வந்த கோடாரிப்பாம்பு என்று தான் என்னை குறிப்பிடுவார்கள். ஆனால் அனலைசைசேஷன் என்று வரும்போது இந்த அலகையும் எடுத்துக்கொள்ள வேண்டியதாய் உள்ளது. நான் வாழும் சித்தூர் ஒன்றும் குக்கிராமம் அல்ல. நான் வாழும் இந்த காலம் ஏதும் கிமுவோ, 10 அ 15 ஆம் நூற்றாண்டோ அல்ல. இருந்தாலும் தலித்துகளின் நிலையில் பெரிதாக ஏதும் மாற்றமில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் , சில குடும்பங்கள் கரையேறினாலும், உயர் வகுப்பு மக்கள் செய்யும் அதே தவறுகளை தாமும் செய்து ஷெட் ஆகிவிடுகிறார்கள்.(திவால்) ஒரு தலித் வாழ்வில் ஒரு படி மேலேறியதும் அடுத்த படியில் உள்ள உயர் சாதியினருடன் கைகுலுக்க முயல்கிறானே தவிர தன்னை விட கீழ் நிலையில் உள்ள தன் சகோதரனை கை தூக்கி விடுவதில்லை. எங்கள் மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர் எஸ்.சி. அவரது பி.ஏ. ஒரு பிராமணர். தலித் கைக்கு அரசியல் அதிகாரம் கிட்டினாலும் அதை அனுபவிப்பதென்னவோ ஒரு ஐயர் தான்.

ஈதிப்படியிருக்க. மேற்படி S.C எம்.எல்.ஏ கதையையே எடுத்துக்கொள்வோம். அவரை போன்றே உயர் வகுப்பை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ உள்ளார்.அவ்ர் தந்தை ஒரு அரசியல்வாதி. அவரது கணவர் பெரிய தொழிலதிபர். யாதவர்கள் தலைமுறை தலைமுறையாய் மேச்சல் காடாக உபயோகித்துவந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை உருட்டி மிரட்டி வாங்கி விட்டார். வருடம் ஒரு புது தொழிற்சாலை கட்டிவருகிறார். கடந்த ஆட்சியிலும் மந்திரி. இந்த ஆட்சியிலும் மந்திரி. கட்சி டிக்கெட் வீடு தேடி வந்தது. மேற்சொன்ன எஸ்.சி. பெண்மணி விஷயத்தில் மந்திரி பதவி நை. உதவி சபா நாயகராய் போட்டார்கள். இந்த தேர்தலின் போது தில்லி வரை போய் புலி வேஷம் போட்டுத்தான் டிக்கெட் வாங்க முடிந்தது.அதற்காக எஸ்,சி,உத்தமர், ஓ.சி.அதமர் என்று கூறவில்லை. எல்லாம் ஒரேகுட்டையில் ஊறின மட்டைதான். ஆனால் டிக்கெட்,பதவி என்று வரும்போது பாராபட்சம் வந்து விட முதல் காரணம் சாதி. அட பாவிகளா !

சரி.எதையோ சொல்ல வந்து ரொம்பவே சுற்றி வளைத்துவிட்டேன். நேற்று நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து நகராட்சி வைஸ் சேர்மன் மீது வன் கொடுமை வழக்கு பதிவு செய்ய ஆயத்தங்கள் நடந்து வருவதாக தகவல். சம்பவத்தை அடுத்த பாராவில் சொல்கிறேன். நியாயத்தை நீங்களே சொல்லுங்கள்.

லட்சுமய்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ஒரு எஸ்.சி.துணை கருவூல அதிகாரி. சித்தூர் மாவட்டத்தில் பணி புரிகிறார். நகராட்சி ஊழியர்கள் மானில அளவில் தங்களுக்கு சம்பளம் கருவூலம் மூலமாக வழங்கப்பட வேண்டுமென்று பல காலமாய் போராடி வந்தனர். ( அதுவரை நகராட்சி பொது நிதி, கிராண்ட் போதுமான அளவு வந்தாலன்றி சம்பளம் தரப்படாது. மானிலமெங்கும் நகராட்சிகள் நலிந்த நிலையில் உள்ள நிலையில் 6 மாத சம்பளம் ஒரே தவணையில் வழங்கப்பட்டதும் உண்டும் அதற்கு முன்னான 6 மாதம் ஊழியர்கள் பிச்சை எடுக்காத குறையாய் காலத்தை தள்ள வேண்டியதுதான்)

மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ஆர் 2009 ஏப்ரலில் இதை ஏற்றுக்கொண்டு அரசு ஆணை வெளியிட்டார். இதற்கான விதிகள் குறித்த குழப்பத்தில் ஏப்ரல்,மே,ஜூன் மாத சம்பளம் ஜூன் மாதம் தான் மொத்தமாக வழங்கப்பட்டது. ஜூலை மாதமும் பிரச்சினை இல்லை.ஆகஸ்டுமாத சம்பளம் தொடர்பான பில் கருவூலம் சென்றது. மேற்படி அதிகாரி எதையோ எதிர்பார்த்து நொட்டை விட்டபடி சுற்றியடித்திருக்கிறார். நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலோர் எஸ்.சி வகுப்பைசேர்ந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஏதோ ஒண்ணு ரெண்டு தேதிகளில் சம்பளம் கிடைக்கும் என்றுதான் பல வருடம் போராடினார்கள். முதல்வர் ரெண்டாம் தேதி காணாமல் போனார். மூன்றாம் தேதி இறந்தார். ஒருவாரம் துக்கதினம். எல்லாம் போனாலும்... நேற்று கூட சம்பளம் தொடர்பாக இழுத்தடித்துள்ளார். நகராட்சி ஊழியர்கள் கடுமையாக பேசியுள்ளனர்.


உடனே மேற்படி லட்சுமய்யா " சீ சீ..அந்த பெரிய மனுஷன் (சி.எம்.) போறவன் சும்மா போய் சேராம இந்த குப்பைகளை எங்க தலை மேல கவிழ்த்துட்டு போயிட்டான்" என்று சீறியுள்ளார்.
நகராட்சி காங் வசம் உள்ளது. காங் வசம் என்பதை விட எம்.எல்.ஏ வசம் உள்ளது. எம்.எல்.ஏ வுக்கு ஒய்.எஸ்.ஆர் கடவுள் மாதிரி. இன்னிலையில் இந்த பேச்சு ஊழியர்கள் மூலம் எம்.எல்.ஏ காதுக்கு போனதோ அல்லது வைஸ் சேர்மனே கிளம்பினாரோ தெரியாது. சேர்மன், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் , யூனியன் தலைவர்கள் அனைவ்ரும் சென்று லட்சுமய்யாவை வாங்கு வாங்கு என்று வாங்கியுள்ளனர். (வாய் பேச்சில்தான்) இதற்கு வன் கொடுமை வழக்கு போட லட்சுமய்யா தரப்பு முடிவு செய்துள்ளதாய் தகவல். இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

Thursday, September 10, 2009

கன்னி சனியால் ஐ டி துறை ஃபணால்

ஆம் இந்த முறை திருக்கணிதப்படி செப்.9 ஆம் தேதி சனி கன்னிக்கு வந்தாச்சு. வாக்கிய பஞ்சாங்கப்படி செப்ட்.26 கன்னிக்கு வரார். சிம்மத்துல இருந்தப்ப இதய கோளாறுகள், மலை ,மலைப்பகுதி மக்கள், தலை,தலைவர்கள் ,மேடான பகுதிகள் விளம்பரத்துறை இத்யாதியை பாதித்த சனி இப்போ கன்னிக்கு வந்து ஐ.டி.துறையை ஒழித்துக்கட்ட உள்ளார். மேலும் கன்னி புதனுக்குரிய வீடு என்பதால் புதன் காரகத்வம் வகிக்கும் எல்லா விஷயங்களிலும் சனி தன் வேலையை காட்ட இருக்கிறார். டேக் கேர் ! ஓவர் டு புதன்
புதன்
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். பரிகாரங்கள்1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.

Wednesday, September 9, 2009

சனிப்பெயர்ச்சி ரகசியங்கள்


சனி பெயர்ச்சி என்றாலே நம்மவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுவது சகஜம். அதிலும் நம் ஜோதிடதிலகங்கள் பேதிக்கு கொடுத்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள். நம் நாட்டில் நிமிடத்துக்கு 4 குழந்தைகள் பிறக்கின்றனர். சுமார் 120 நிமிடங்களுக்கு அதாவது 2 மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். அதாவது ஒரே ஜாதகம். அதாவது பெரியார் பிறந்த அதே ஜாதகத்தில் பிறந்த 119 இன்ட்டு 4 குழந்தைகள் என்னாச்சு ? ஒரே ஒருபெரியார் தான் பஞ்சக்கச்சங்களை எதிர்த்து ஏறக்குறைய செஞ்சுரி அடிக்க முடிகிறது. ( நான் அப்படித்தான் என் தெலுங்கு வலை தளத்தில் ஐயர்களுடன் மோதி ஆப்பு வைத்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் திரட்டியில் என் வலைப்பூ தடை செய்யப்பட்டுவிட்டதென்றால் பாருங்களேன்) ஒரே ஒரு .....................................................................................................................................................(இந்த கோடிட்ட இடத்தை/ சீ புள்ளி வைத்த இடத்தை உங்களுக்கு பிடித்த சாதனையாளர் பெயர் போட்டு நிரப்பிக்கொள்ளவும். ஆக ஜாதகமே ஒன்று என்றாலும் இயற்கை மனித யத்தனத்துக்கும் வாய்ப்பு வைத்து தான் செயல்படுகிறது. இந்த அழகில் இரண்டே கால் நாட்களுக்கு ஒரே ராசி தான் எனும்போது , ஒவ்வொரு ராசியிலும் எத்தனை கோடி பேரை அடைக்கிறார்கள் பாருங்கள். இதுவே முடிவான உண்மை என்றால் இந்திய மக்களின் வாழ்வுக‌ள் 12 விதமாகத்தானே இருக்க முடியும். உண்மையில் அப்படியா உள்ளன. நோ !

ஜாதகம் என்பது வாகனம் மாதிரி. ஜாதகப்படி நடக்கும் தசாபுக்திகள் ரோடு மாதிரி , இவர்கள் கூறும் சனி/குரு/ராகு/கேது பெயர்ச்சி எல்லாம் அவ்வப்போது ட்ராஃபிக்கில் ஏற்படும் சிறுமாற்றங்கள் போன்றது. (முதல்வர் வரும்போது ட்ராஃபிக்கை நிறுத்தலியா அது மாதிரி. )

சரி நான் எதற்கு குறுக்கே சனி பகவானையே உங்களுடன் பேசச்சொல்லி விடுகிறேனே. உங்கள் ஜாதகமே இல்லாமல், பிறப்பு விவரங்களும் இல்லாமல் உங்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் உள்ளாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நிலையில் இலை என்றால் குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்துகொள்ளுங்கள்

பலன் பெற்றால் பத்து பேருக்கு இந்த கட்டுரை பற்றி இமெயில் மூலம் தெரிவியுங்கள் . ஓகே

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ் போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.