Saturday, September 26, 2009

எனது கண்டுபிடிப்புகள்

ஜோதிடம்:

1.லாஜிக்கல் ஹோரா
ஜோதிடத்தில் ஹோரை என்பது கிழமைகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் அன்றாட நட்சத்திரத்தை அடிப்படியாக கொண்டு, முதல் ஹோரை அந்த நட்சத்திர நாதனாகிய கிரகத்தினுடையதாக கருதி அந்த நாளின் 24 மணி நேரத்தை / மேற்படி நட்சத்திரத்தின் மொத்த நாழிகையை கிரகங்களின் தசா காலங்களின் விகிதத்தில் பங்கிட்டு கணக்கிடப்படும் ஹோரா முறைக்கு லாஜிக்கல் ஹோரா என்று பெயரிட்டுள்ளேன்.
2.நவீன பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷத்துக்கு பழைய கிரந்தங்கள் முருகனை வழிப்படும்படி கூறுகின்றன. முருகனுக்கும், செவ்வாய்க்கும் என்ன தொடர்பு ? செவ்வாயுடன் தொடர்பு கொண்ட இதர விஷயங்கள் என்ன என்பதை அறியாத ஜோதிடர்கள் இன்னமும் முருகன் வழிபாட்டையே பரிகாரமாக கூறிவருகின்றன. நான் ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பரிகாரங்களின் அடிப்படையை அறிந்து ரத்த தானத்தை பரிந்துரைக்கிறேன். மேலு சனியின் கெடுபலன் குறைய ஊனமுற்றோருக்கு உதவும்படி கூறி வருகிறேன். இதை சமீப காலமாக பிரபல ஜோதிட சிகாமணிகளும் பின்பற்றிவருவது குறிப்பிட தக்கது
For more Details : http://www.anubavajothidam.blogspot.com
3.ஆஸ்ட்ரோ ந்யூமோ, நேமாலஜி:
ஜாதகரின் பெயரையே ஜாதகமாக கொண்டு பலன் கூறும் முறை இது. முதலில் ஜாதக‌ர் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதிலான எழுத்துக்களுக்கு உரிய எண்களை குறித்துக்கொண்டு , முதல் எழுத்துக்குரிய கிரகம் எங்கே உச்சம் பெறுமோ அந்த ராசியில் துவங்கி ராசிச்சக்கரத்தில் மேற்படி எண்களை எழுதிக்கொண்டு அந்தந்த ராசிகளில்/பாவங்களில் மேற்படி எண்களுக்குரிய கிரகம் இருப்பதாக கருதி பலன் கூற வேண்டும். இம்முறையில் வீட்டு/வாகன எண்களை வைத்தும் பலன் கூறலாம்.

பொருளாதாரம்:

1.ப்ளாக் ஹோல் தியரி: சந்தைக்கு வந்த பணம் சுழற்சிக்குள்ளாகாது தடை செய்யும் டம்பிங் ஜோன்களை ஒழித்துக்கட்டினாலன்றி பொருளாதாரம் சிறக்காது.
உம்: மது அடிமைகள், சூதாட்டக்காரர்கள், லாட்டரி பைத்தியங்கள்

2.மக்கள் உணவு,உடை,இருப்பிடம் மற்றும் செக்ஸை பெற்று சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை:

ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு3, 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 3 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
3.அனைவருக்கும் தனயோகம்:

ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே. எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம்

4.சனி மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்:
சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.மேலும் சனி பிடித்த காலத்தில் தான் ஆண்கள் ஒழுங்காய் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். பெண்கள் ஒழுங்காய் குடித்தனம் நடத்துகிறார்கள்

5.தெருக்குத்து :
தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.

இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.

சமூகம்:
1..ஆத்திகம் நாத்திகம் :
ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது

(To be continued