என் நண்பர் சத்யா. வயது 50. Bachelor , குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். சத்யா விஷயத்தில் செட்டியார் ஒழுக்கம் இரவு 9 ஆனால் போச்சு என்று மாற்றி சொல்லவேண்டும். (பார்த்துப்பா நாடிருக்கிற இருப்புல செட்டியார் சங்கத்துலருந்து நோட்டீஸ் எதுனா வந்துற போவுது) தினசரி காலை எழுந்து துளசி வாங்குவதென்ன,பூ வாங்குவதென்ன மணிக்கணக்கில் பூஜை போடுவதென்ன..கராறாய் வியாபாரம் செய்வதென்ன..ஏழுமலையானே சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் என்று வந்தாலும் நோ அப்பாயிண்ட்மென்ட்.என்று கழட்டிவிடுவதென்ன..புதிதாய் பார்ப்பவன் இது 24 ஹவர்ஸ் சர்வீஸ் என்று ஏமாந்தே போய்விடுவான்.
இரவு 9 ஆனால் போதும் தண்ணி தொட்டி தேடிப்போகும் கன்னுக்குட்டி மாதிரி வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.
இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).
அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.
சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரியர் டெக்கரேஷன் செய்யப்பட்ட முதல் கடை சத்யாவின் கடைதான். சித்தூரில் உள்ள செட்டியார்களில் முதலில் சட்டையை இன்செர்ட் செய்தது சத்யாதான். கடையை திறந்து வைத்தது எஸ்.பி. இடையில் சில காலம் கிருஷ்ணகிரியில் அக்காவின் பலசரக்கு கடையில் பொட்டலம் கட்டிய அனுபவமும் உண்டு என்றாலும் இப்போது கடை மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது .
ஆறு மாதங்களாய் அடகில் மூழ்கிய வண்டியை ஓட்டி அலுத்து விட்ட சத்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ணம் வந்து விட்டது. வாங்கியாயிற்று. தீர்த்தம் முடிந்தது.
தீனிக்கு விஷ்ணுபவன் சென்றோம். சர்வர் இறுதியில் கிடைக்கப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.
சத்யாவின் மூளை படுவேகத்தில் வேலை செய்யும். இதற்கு சாட்சி படபடத்துக் கொண்டே இருக்கும் கை விரல்கள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உதடுகள்.
இதனால் சத்யாவின் பேச்சு ஜெட் வேகத்தில் வெளிப்படும் .(ஆரம்ப கால ரஜினி காந்தை விட வேகமாய்) எதிராளிக்கு புரிவது ரொம்பவே கஷ்டமாகிவிடும். 5 வருடமாக பழகும் நானே மவுனப்படத்தில் லிப் மூவ் மெண்ட் பார்த்து கெஸ் பண்ணுவது மாதிரி உதட்டை பார்த்துதான் டயலாகையே ஊகிப்பேன்
சத்யா சர்வரை கிட்டே அழைத்து தன் பாணியில் "கொஞ்சம் மோர், கொஞ்சம் ரசம் கொண்டு வா" என்றார். அப்போது சத்யாவின் பாடி லேங்குவேஜிலும் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும் .
இதற்கிடையே எங்களிருவரிடையில் பந்தயம் வேறு
//" நீங்க சொன்னது புரிஞ்சே இருக்காது" //இது நான்.
//எல்லாம் புரிஞ்சிருக்கும். நீ சும்மாவே என்னை லந்து பண்றே// இது சத்யா
சர்வர் ஒரே தம்ளரில் மோரையும்,ரசத்தையும் ஊற்றி , கலக்கி ஆற்றியபடியே கொண்டு வந்ததை பார்த்து திருவிளையாடல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இயங்க ஆரம்பித்ததை சொல்லித் தானாக வேண்டும்.
*ஆந்திரத்தில் பருப்பு விலையேற்றத்தை அடுத்து அரசு ரேஷன் கடைகள் மூலம் (சிவில் சப்ளைஸ்) மூலம் கு.விலையில் விற்க பருப்பு இறக்கு மதி செய்தது. (டெண்டர் மூலமாகத்தான்) ஆனால் வியாபாரிகள் வந்த பருப்பை பதுக்கி டுபாகூர் பருப்பு வந்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். பருப்பை இறக்குமதி செய்த அரசு கொஞ்சம் சமூக பொறுப்பையும் இறக்கு மதி செய்திருக்கலாம்.
*ஆந்திராவில் காங்.கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. மானில தலைவர் ஐ தரா பாதில் இருந்து மாவட்ட அலுவலகத்திலான தலை, தொண்டர்களூடன் டெலிகான்ஃபிரன்ஸ் நடத்தினார். இது தொடர்பாக கம்மம் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு மத்திய மந்திரி ரேணுகா வரவிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் (?)அங்கிருந்த டிஜிட்டல் பேனரில் இருந்த ரேணுகாவின் தலையை கிழித்துள்ளனர். அப்போது அடுத்த மூலையில் இருந்த சோனியாவின் படமும் கிழிந்துள்ளது. (படம் தாங்க) உடனே பர்க்கனுமே கட்சி சீனியர்கள் போட்ட புலிவேஷத்தை. முன்னாள் மாவட்ட கட்சி தலைவர் கேகே.ராவ் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்தினார். (மூணாவது நாள்)வீட்டுக்கு வந்த நண்பனையா அல்லது வீட்டிலிருந்த நண்பனையா ஞா. இல்லை கேகே.ராவின் மகன் சுட்டே கொன்றுவிட்டார். அப்போது ஒய்.எஸ்.தான் எப்படியோ கரையேற்றி தில்லிக்கு ரயிலேற்றி விட்டார். (மாவட்ட தலைவர் போஸ்டை கழட்டிக்கிட்டுதான்) அந்த வெறுப்பா என்ன தெரியலை . "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" என்ற காலர் ட்யூன் எந்த நெட் வொர்க்கில் கிடைக்கிறது.
3.என் அண்ணனுக்கு எனக்கு 10 வயது வித்யாசம். அவன் படித்து முடித்து தண்டத்தீனி தின்று வந்த காலம். காலை அடச்சே ! மதியம் 12 மணி வரை தூங்குவான். பாதிராத்திரிதான் வீடு திரும்புவான். அப்பப்போ அப்பா பாக்கெட்லருந்து சின்ன நோட்டு பெரிய நோட்டு (சூப்பர் டைட்ட்லுப்பா !மல்டிஸ்டார் படம் தான். யாரை போடலாம்) காணாம போகும். ஒரு நாள் குடும்பமே சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. எவனும் மாட்டலயோ என்னவோ அண்ணனும் சாப்பிட்டுக்கிட்டிருக்கான். அப்பா "ராமாயணம் படிச்சது படிச்சதே" ஆனால் அண்ணன் காரன் ரெஸ்பாண்ட் ஆனாதானே. ஜெ.அறிக்கையை படிச்ச கலைஞர் மாதிரி "மவுனம் எனது தாய் மொழி" ஸ்டைல்ல இருக்கான். திடீர்னு அப்பாக்கு ப்ரஷர் எகிறிப்போச்சு. "அடத்தூ.. மானங்கெட்டவனே போடா வீட்டை விட்டு போடா" என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அப்போது வாயை திறந்த அண்ணன் " சாப்பிடறேன் இல்ல.. சாப்ட்டுட்டு போறேன்" என்றான் கூலாக. அன்றைக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறே ஈழத்தமிழர் நெஞ்சமாகி போச்சு.