Thursday, September 24, 2009

காபரே ஆடிய சங்கராச்சாரி



பாலா அவர்களே !

பிரபல சினிமா டைரக்டர் ஹிட்சாக் சிறுவனாக இருக்கும் போது அவரது தாய் அவரை காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்து அச்சுறுத்த செய்தாராம். அதனால் அவரது சினிமாக்களில் குற்றமற்றவன் சிறைக்கு போகும் காட்சிகள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றதாம்.

அது போல் தி.க.காரர் யாரேனும் தங்களிடம் மீட்டர் வட்டி வசூலித்து விட்டாரா என்ன ? அவர்கள் மீது தங்களுக்கு ஏனிந்த கடுப்பு. ஒரு பெரியார் மட்டும் தமிழ் நாட்டில் தோன்றாதிருந்திருந்தால் பிராமணரல்லாதோர் மட்டுமல்ல சும்மா உட்கார்ந்து தின்று கொழுத்து , எதிர்ப்பில்லாததால் மூளை மழுங்கி பிராமண இனமே ஒழிந்து போயிருக்கும். ஏதோ பெரியார் வருகையால், அவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால் இரு பிரிவினரும் பலன் பெற்று தமிழகம் ஏதோ இந்த அளவுக்காவது இருக்கிறது.

அப்படியும் தமிழகத்தில் காபரே ஆடிய சங்கராச்சாரி, புலிகளிடம் பணம் பெற்று மணீ லாண்டரிங் செய்யும் திருமலைக்கோடி, மனைவியை நகராட்சி சேர்மனாக்கும் பங்காரு இப்படி நூறாயிரம் டுபாகூர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.பெரியார் உயிருடன் இல்லை என்ற தெகிரியத்தில் தான் கலைஞரே மஞ்சள் சால்வை போடும் ரேஞ்சுக்கு வந்திருக்கிறார். புட்டபர்த்தியிடம் மோதிரம் வாங்கும் ரேஞ்சுக்கு அவர் குடும்பம் வந்திருக்கிறது. பெரியாரே பிறக்காதிருந்திருந்தால் ?


கொஞ்சம் மாத்தி யோசிங்க பாலா சார்.

கலாம் பற்றி நான் எழுதியிருந்த விஷயங்கள் என்னை ஒரு நெகட்டிவ் திங்கராக காட்டியிருக்கலாம். ஆனால் நான் நல்லது கெட்டது இரண்டையும் முழுமையாக பார்க்கிறேன்.

காந்தி பிரதமராகியிருந்தால் நாட்டை ஜின்னாவிடமே அடகு வைத்திருப்பார் என்பது உங்கள் கருத்து ஆனால் ஆனானப்பட்ட அம்பேத்கரையே தம் உண்ணாவிரதத்தா பின் வாங்கச்செய்தவர் காந்தி. ஜின்னா எல்லாம் ஜுஜுபி.

//அப்புறம் ஆண்கள் அனைவரும் தாடி வைத்துக்கொண்டு அலைய வேண்டியது தான்;//

காந்தி தாத்தா எப்பவுமே தாடி வச்சதும் கிடையாது. வைக்க சொன்னதும் கிடையாது. இந்த பாயிண்ட் ஏன் வந்தது புரியலை

//பெண்களுக்கு தாடி/மீசை வளராது, கனிமொழியைப் போன்ற புறநாநூற்று வீராங்கனைகளைத் தவிர,//

இது தனிப்பட்ட விமர்சனம். இது போன்றவற்றை தவிர்க்கவும்.

//அதனால பர்தா போட்டு மூஞ்சியை மூடிவிடுவாங்க.எவ்வளவு கொடுமை?தேவை தானா இது?//

பர்தா என்பது ஏதோ ஒரு மதத்துக்கு மட்டும் தொடர்புள்ளது என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இந்து பெண்களும் முக்காடு அணிவது வழக்கில் உள்ளது. இந்தி சினிமால்லாம் பார்க்கிறதில்லயா ?

//இல்லையென்றால், தமிழ்நாட்டு பெரிய தாடி தீவிரவாதி சொல்வதை கேட்டு பிரிட்டிஷ் நாட்டானிடமே நாட்டை திருப்பி கொடுத்திருப்பார்.//

நீங்க பெரியாரை சொல்றிங்க போல. பெரியாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் உருப்பட்டிருப்போம். இன்னைக்கு பிரிட்டனுக்கு சமமா இந்தியா இருந்திருக்கும். என்ன ஒரு குறைன்னா பாராளுமன்றத்துலயும், சட்டமன்றத்துலயும் இது போல் மைக் உடைச்சு, டேபிளை தட்டி லந்து பண்ணியிருக்க முடியாது.

//நம்ம நாடு உருப்படணும்னா சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா ஒரு காரியம் செய்யணும்."இந்தியா 2000" என்பதற்கு பதிலாக "பாகிஸ்தான் 2010" என்ற திட்ம் தீட்டி //

தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா திட்டத்தை மட்டுமல்ல தாங்கள் மறுமொழிந்திருக்கும் எனது பதிவை கூட சரியா படிக்கவில்லை என்று பட்ட வர்த்தனமாகிவிட்டது.

கீழ் காணும் சுட்டியை சொடுக்கி என் திட்ட விவரங்களை புரட்டி இந்த கருத்தை உறுதி செய்யுங்கள்.

http://kavithai07.blogspot.com/2007/09/2000.html

//பாகிஸ்தான் தீவிரவாதிகளெல்லாம் தாடியை ஷேவ் செய்துவிட்டு ,தீவிரவாதத்தை விட்டு விட்டு மனம் திருந்தி மனிதர்களாக வாழச் செய்ய வேண்டும்.நம்ம நாட்டில்,ஏன் உலகம் பூராவுமே குண்டு வெடிப்பு,கொலை கொள்ளை கணிசமாகக் குறையும;'பாகிஸ்தானும் முன்னேறும்;நாமும் முன்ன்னேறுவோம்.//

ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு நிதி திரட்ட நான் கொடுத்த யோசனைகளில் ஒன்று இந்தியாவின் கையிலிருக்கும் காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைப்பது.(அப்போது அதன் பாதுகாப்பு சர்வ தேச ராணுவத்தை சேர்ந்ததாகிவிடும்) பின்பு பாக்கிஸ்தானும் தன் பிடியில் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துவது. இது மட்டும் நிறைவேறிவிட்டால் இரு நாடுகளும் தம் ராணுவ செலவை பாதியாக குறைத்துக்கொள்ளலாம். இதே ஃபார்முலாவை சீனத்துடனான எல்லை தகராறுகளுக்கும் உபயோகிக்கலாம்.

//அதே போல் "சீனா 2015" என்ற திட்டம் தீட்டி இந்த சீன கம்யூனிஸ்ட் பசங்களை திருத்தணும்.//

இதற்கான பதிலும் சென்ற பத்தியிலேயே உள்ளது.

//பிறகு தானாகவே நம்ம நாட்டில காட்டாமணக்கு,வெளியே மிதக்கும் அய்யா,ஏகலைவன்,பனியன் தியாகு,தமிழரங்கம்,அசுரன்,வர வர ராவ், போன்ற சீனா போடும் எச்சக் காசுக்காக
நாச வேலை செய்யும் நக்சல் கும்பல் திருந்தி வாழும்.//

இது போன்ற வரிகள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டும் என்று தாங்கள் நம்புவதாக தெரிகிறது. ரஷ்யா ஒளிர்ந்த காலத்தில் வேண்டுமானால் இது போன்ற சன்மானங்கள் கிடைத்திருக்கலாம். அங்கேயே காற்றடிக்கும் போது இது வெறுமனே சேறுவாரி இறைக்கும் செயலாகவே படுகிறது. மேலும் இந்த வரிகள் தங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாமையையே காட்டுகிறது.

ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளனின் வயிற்றிலடித்தால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் என்று கார்ல் மார்க்ஸ் ஆதார பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தாகிவிட்டது.

இன்னிலையில் தாங்கள் கம்யூனிசத்தை நக்கலடிப்பது தவறு, அதன் அமலில் தவறுகள் (ஏன் இமாலய தவறுகள் கூட நடந்திருக்கலாம்) ஆனால் கம்யூனிசம் ஒன்றே சரியான தீர்வு.

ரஷ்யாவில் என்ன நடந்ததென்றால் முன்னர் கூறிய "தொழிலாளி வயிற்றலடித்து கிடைத்த லாபத்தை" முதலாளிக்கு பதில் அரசு பெற்றது. பெற்ற லாபத்தை விண்வெளி ஆராய்ச்சி போன்ற பெருமைக்கு பன்றி மேய்க்கும் சில்லறை பணிகளில் நாசமாக்கியது. ஊர் பஞ்சாயத்துக்களில் தலை நுழைத்து விரயமாக்கியது. சீனம் இந்த தவறை தவிர்த்து, கிடைத்தலாபத்தை மக்கள் நல்வாழ்வுக்கும், நாட்டின் கட்டுமான பணிகளுக்கும் மட்டுமே செலவழித்தால் அமெரிக்கா எல்லாம் சீனத்தின் பூட்ஸ் காலுக்கு கீழே கரப்பான் தான்.

//நீங்க பேசாம பாகிஸ்தான்/சீனா சென்று சோசியத் தொழில் துவங்கினால் தான் இந்தியாவுக்கு சான்ஸ்.செய்வீர்களா?//

என் மேதைமை முதற்கண் என் தாய் நாட்டுக்கு பலன் தரவேண்டும் என்றுதான் இந்தியாவில் தங்கியுள்ளேன். என் தாய் நாட்டை பணக்கார நாடாக்கிவிட்டால் அடுத்த ப்ரோஜெக்ட் பாக்கிஸ்தான் தான். டோன்ட் வொர்ரி !

//என்னங்க இது?இந்த மாதிரி சொலுயூஷன்ஸ் கொடுக்கறீங்க.போகாத ஊருக்கு வழி காட்டறீங்களே.எனக்கு தெரிந்த வரை அளவிட முடியாத லெவலுக்கு பணமும்,ஏழுட்டு மனைவிகள்,பல துணைவிகள்,தவிர வைப்பாட்டிகள்,தவிர பொழுது போக்க பரத்தைகள் என்று அன்லிமிடெட் செக்ஸ் ஈடுபாடு கொண்டு அலைந்து சாதனை செய்தது தமிழ்நாட்டிலேயே இரண்டு பேர் தான்.//

இதுவும் தங்கள் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. நான் படைப்பின் ஆரம்பத்திலிருந்து ஆந்த்ரபாலஜி முதலாக எகனாமிக்ஸ் வரை ஆராய்ந்து கொடுத்துள்ள தீர்வு தவறு என்று பட்டால் ஏன் தவறு ? எப்படி தவறு என்று தங்கள் வாதத்தை எடுத்து வைக்கவேண்டும் . அதை விடுத்து தனி மனித தூஷனைக்கும், இரண்டு பேரின் வாழ்வை வைத்து என் பல்லாண்டு ஆராய்ச்சி முடிவை மூளியாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள்.

ஒவ்வொரு விதிக்கும் ஒரு விதிவிலக்குண்டு என்பதை நினைவுறுத்துகிறேன்.

மொத்தத்தில் என் முடிவை விமர்சித்தாலும், நக்கலடித்தாலும் அதன் பின்னுள்ள என் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி ! (சன் டிவி அசத்தப்போவது யார் பாதிப்புங்கண்ணா !)