Wednesday, September 2, 2009

சி.எம்.பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயம்

ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானதை அடுத்து மானிலமெங்கும் தீவிர பதட்டம் நிலவுகிறது. சித்தூர் மாவட்டம், அனுப்பு பல்லியில் நடக்க விருந்த கிராம சபையில் கலந்து கொள்ள ஒய்.எஸ்.இன்று காலை 8.35க்கு ஹைதராபாத் ,பேகம்பெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஆனால் காலை 9.35 லிருந்து ஹெலிகாப்டருடனான செய்தி தொடர்பு அறுந்து விட்டது. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே .பாபு வீட்டில் காலை சிற்றுண்டி முடித்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டிய முதல்வர் 10.35 வரை சித்தூர் வந்து சேரவில்லை. இதையடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இதற்கிடையில் மத்திய விமானத்துறை மந்திரி முதல்வர் இருக்கும் இடத்தை லொக்கேட் செய்தாகிவிட்டது என்று ஒரு தகவலை கொடுத்தார்.

ஐதராபாத் தலைமைச்செயலகத்தில் நீண்ட நேர ஆய்வுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நிதி மந்திரி ரோசய்யா முதல்வர் இருக்கும் இடத்தை லொக்கேட் செய்ய முடியவில்லை என்றும் , வனப்பகுதிகளில் உள்ள மக்கள் சுயேச்சையாய் வனப்பகுதிகளுக்கு சென்று சி.எம்.சென்ற ஹெலிகாப்டரையும், முதல்வரையும் தேடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மானில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும்,ராணுவத்தை சேர்ந்த ஹெலிகாப்டர்களும், தனியார் ஹெலிகாப்டரும், குறைந்த உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்களும் , ஆளில்லா விமானங்களும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.

முதல்வரின் ஹெலிகாப்டர் மெகபூப் நகர் ஜில்லாவில் உள்ள நல்லமலை காடுகளில் இறங்கியிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது . அங்கு அடை மழை பொழிந்து வருவதும், இரவின் இருட்டும் தேடுதல் வேட்டையை பாதித்துள்ளது. மேலும் மேற்படி நல்லமலை காடுகள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன‌

கோடி ஏக்கர்களுக்கு பாசன நீர் வழங்க லட்சம் கோடி ரூபாய்கள் செலவில் அணைகள் கட்டியபடி மானிலத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு சமூக நலதிட்டங்களை அமல்படுத்தி வரும் ஒய்.எஸ்.இரண்டாம் முறை முதல்வராகி 4 மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது காங்.கட்சியனர் மற்றும் அவரது ஆதரவாளர்களை மட்டுமல்லாது
சமூக நலதிட்ட பயனாளிகளையும், பொது மக்களையும் ஏகமாய் பாதித்துள்ளது.

சந்திரபாபு ஆண்ட 9 வருட ஆட்சியுடன் ஒப்பிட்டால் பஞ்சம்,வறட்சி ஏதுமின்றி , ஒரு புறம் வளர்ச்சி திட்டங்களையும், மறு புறம் சமூக நலதிட்டங்களையும் பேலன்ஸ் செய்தபடி நல்லாட்சி வழங்கி வந்த ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனது என்ற செய்தி தர்மத்தின் நியாயத்தின் பேரில் நம்பிக்கை கொண்டவர்களை சலிப்புக்குள்ளாக்குகிறது.

சந்திரபாபு அனைத்து தரப்பு மக்களையும் வெவ்வேறு வகைகளில் தொல்லைகளுக்குள்ளாக்கியவர். அவர் மீது திருமலை செல்லும் வழியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி மூலம் தாக்குதல் தொடுத்தது நினைவிருக்கும். வெடிப்புக்கு பின் சில நொடிகளில் சற்றே தள்ளாடியபடி வெளியே வந்து இரண்டு விரலை காட்டினார் (இன்னும் இரண்டு தேர்தல்களில் தோற்க போகிறேன் என்று சிம்பாலிக்காக சொன்னாரோ என்னவோ) சந்திரபாபு பிழைத்து வந்தது குறித்து எனக்கேதும் பிரச்சினையில்லை.

அவர் பிழைத்து வந்ததால் தான் முன் கூட்டி தேர்தலுக்கு சென்றார். மக்களுக்கு ஒய்.எஸ்.ஆரின் நல்லாட்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயம் சந்திர பாபுவை காப்பாற்றிய தெய்வம் ஒய்.எஸ்.ஆரை காப்பாற்றாவிட்டால் நிச்சயம் நீதிவிசாரணிக்குட்பட வேண்டியதுதான். (உட் படுத்துவேன்)

சந்திரபாபு வந்தது சாம்பார் பின்னணி. ஆனால் ஒய்.எஸ்.ஆரின் பின்னணி ? மாஃபியா பின்னணி. முதல்வரின் சொந்த ஊர் கடப்பா என்றாலே வெடிகுண்டுதான் நினைவுக்கு வரும். அவரது தந்தை ஒரு மாஃபியா டான். அவரை கொன்றவர்கள் சில மணி நேரங்களில் சந்திரபாபுவை சந்தித்து பேசியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ஒய்.எஸ்.ஆர் காந்தீய வழியில் ஏழை மக்களை கருத்தில் கொண்டு நல்லாட்சி நடத்தி வந்தார் . இறைவன் அவரை எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றி மானிலத்தையும், மானில ஏழை மக்களையும் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்