Monday, September 7, 2009

நாட்டு "நடப்பு" -அஞ்சாம் துக்கம் தானா ?


சீயான்:
சாவு விழுந்த 5 ஆவது நாள் அஞ்சாம் துக்கம்னு செய்வாங்க. அதுக்கு இன்னொரு பேரு கூட உண்டு. அதான் நடப்பு. நாட்டு நடப்பும் அந்த கதியாதான் இருக்கு. நான் எந்த அநியாயத்தையும் ஓரளவு சகிச்சுப்பேன். ஆனால் மக்கள் உயிருக்கு உலை வைக்கிற வேலைகளை , அதையும் அந்த மக்களே செய்யும்போது நவ துவாரமும் எரியும். உசுரோட இருந்தா உப்பு வித்து பிழச்சுக்கலாம். உசுரே போச்சுனா எந்த மசுர வச்சி என்னாத்த பண்றது.

கோயான்:
என்னாத்த உசுரு சாமி ! ஒரு காலத்துல நம்ம தெருவுல பகல் 12 மணி வரை முனிசிபாலிட்டி குழாய்ல தண்ணி வரும் . இந்த பொட்டச்சிங்க கோணி பை முத கொண்டு அதுலயே தோய்ப்பாளுங்க . இப்ப பாருங்க பாயிட் தண்ணி ஒன்னர்ரரூபா

சீயான்:
செப்டம்பர் 2 ஆம் தேதி செத்துபோனாரே ஆந்திரா சி.எம். அவர் ஒரு கேன் மினரல் தண்ணியை ரூ.2க்கு தரதுக்கு ஏற்பாடு பண்ணாரு தெரியுமோ ?

கோயான் : ரெண்டு ரூபாயா ?

சீயான்: அடச்சீ வாய பொத்து .. ஒரு ஷாம்பூ பாக்கெட் 4ரூ, 5ரூ விக்கிரான் தெரியுமா ? தாளி அதுக்கு ரா மெட்டீரியல் என்ன தெரியுமா சோப் ஆயில்.அதை முதல்ல மெக்கானிக்குங்க கை கழுவ உபயோகிப்பாங்களாம்அதை இப்ப தலைக்கு போடறோம். இதுல மசுரு உந்து போரது ஒருபக்கம்னா தலைய அலசவே முக்கால் ப்யிட்டு தண்ணி ஆயிருது. அதை வாங்கும்போது மினரல் வாட்டர் அதுவும் ஒரு கேன் ரெண்டு ரூபாக்கு வாங்க நோகுதா?

கோயான்:
சாமி ! நான் தெரியாத கேக்கறேன் நம்ம நாடு ஏன் முன்னேறல சாமி ?

சீயான்:
தபார்ரா.. பாப்பாரவுக சர்க்குலேஷனுக்கு தொங்கற மாதிரி நான் ஹிட்சுக்கு தொங்கற நேரத்துல இப்படி ஒரு கேள்வியா ? இதுக்கெல்லாம் பதில் சொன்னா ஓடிப்போயிருவாங்கப்பா..

கோயான்:
சாமிசாமி நீ சொல்லித்தான் ஆகனும்

சீயான்:
சொல்லி தொலைக்கிறேன். உலகத்திலேயே உண்மையான ப்ரொடக்டிவிடி இருக்கிற செக்டர் விவசாயம் தான். மத்ததெல்லாம் கன்வெர்ஷன் தான். தகடை காரா மாத்தறது, தீவனத்தை முட்டையா மாத்தறது, புல்லை பாலா மாத்தறது இப்படி. அதுலயும் நம்ம நாட்டுல நூத்துக்கு 70 பேர் விவசாயத்தை நம்பி வாழறான். நம்ம நாடு விவசாயத்துக்கு ஏத்த பூமி. ஆனால் நம்ம ஆளுங்க அதை கண்டுகிடரது இல்லை

கோயான் :
என்னா சாமி காலம் கம்ப்யூட்டர்லயே பறக்குது. இப்போ போயி விவசாயம் அது இதுன்னிக்கிட்டு
சீயான்: பேருக்கேத்த மாதிரியே பேசறேப்பாஉலகத்துல நூத்துல 2 பேருதான் கம்ப்யூட்டர்/இன்டெர் நெட் உபயோகிக்கிறான். மேலும் கம்ப்யூட்டர் வந்து ஆள் காட்டும், இலை எண்ணும், தலை எண்ணும் அவ்ளதான். நல்ல கண்டிஷன்ல இருக்கிற சைக்கிளுக்கு போட்ட எண்ணை மாதிரி அது. லொடக்காணி சைக்கிளை எண்ணை கிணத்துலயே முக்கி எடுத்தாலும் ஓடுமா அது மாதிரிதான்.

கோயான்:
நீ இன்னாதான் சொல்றே சாமி.

சீயான்:
விவசாயங்கறது தங்க முட்டை இடற வாத்து மாதிரி. இப்போ விவசாயம் கொடுக்கிற அவுட் புட் வாத்து புழுக்கை மாதிரி. முதல்ல நேரிடை ஜன நாயகத்தை கொண்டாரனும். பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும். அந்த பிரதமர் அரசு இயந்திரத்தை ரீ ஃபிட்டிங் பண்ணனும். தாளி மொதல்ல வேலை வாய்ப்பு அலுவலகத்துல வேலைக்கு பதிவு பண்ண மொத்த பேரையும் அப்பாயிண்ட் பண்ணிக்கனும். சர்வீஸ்ல இருக்கிறவன் பக்கத்துல 3 மாசம் உட்கார வக்கனும். வேலை கத்துக்கிடற மாதிரி பார்க்கனும்(லஞ்சத்தை/ஊற போடரத இல்லே) அப்புறமா ஏற்கெனவே சர்வீஸ்ல இருந்த மொத்த கோயானையும் 3 மாசம் வீட்டுக்கு போச்சொல்லிட்டு மறு தேர்வு வைக்கனும் தேறினவனுக்கு மட்டும் வேலை. தேறாதவனுக்கு ஜூட் அப்புறமா வேணுமானா தேறாதவனுக்கெல்லாம் இன்னொரு 3 மாசம் கழிச்சு மறு தேர்வு வச்சுக்கட்டும். முதல்ல தேசீய அளவுல விவசாயிகள் சங்கங்களை ஏற்படுத்தனும். கிராம அளவுல இருக்கிற விளை நிலங்களை அதன் உரிமையாளர்கள் சங்கத்துக்கு லீசுக்கு தரனும் (கு.ப.99 வருடம்). அதுக்கப்புறம் அரசாங்கத்தோட உதவி,மேற்பார்வையில கூட்டுறவு பண்ணை விவ்சாயம் பண்ணனும். இயற்கை விவசாயம் பண்னனு. டோட்டல் அரசு இயந்திரத்தோட வேலை அந்த சங்கங்களை வழி நடத்தறதும், அவுட் புட்டை அதிகரிக்கிறதுமாவே இருக்கனும். பெரிய அள்வுல பண்றதால மெக்கனைசேஷன், க்ராப் இன்ஷியூரன்ஸ், இர்ரிகேஷன் எல்லாம் ஜுஜுபியாயிரும் கண்ணா.
அப்போ கம்ப்யூட்டர் /இன்டெர் நெட் உபயோகிக்கிறவனோட சதவீதம் கு.ப. 50 சதமாயிரும் புரியுதா

கோயான்:
புரியறதா கண்ணை கட்டுது சாமீ.. ஆள உடு சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ