ஒய்.எஸ்.ஆரை கொன்ற சென்னை ஏவியேஷன்
ரகு நந்தன் என்ற பதிவர் ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தர்ம நியாயங்கள் செத்துப்போகவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். அது மரணமாக இருந்தால் பரவாயில்லை. ஒரு வகையில் சென்னை ஏவியேஷன் காரர்கள் கொலை செய்துள்ளார்கள்
Now you can see the openions of Sri Ragunandan and my clearification :
//ஆனால் எனது கேள்வி எல்லாம் ஹெலிகொப்ரர் வெடித்தது ஒரு மெக்கானிக் கையில் இருக்கும் போது, அதுவும் இந்த ஹெலிகொப்ரரின் நிலை மோசமானது என ஆரம்பத்தில் அறிக்கையே வந்தது, தர்மத்தின் கையில் பழிபோடுகிறீர்கள்.//
ஐயா !
நீங்கள் நக்கீரன் பரபரப்புக்காக வெளியிட்ட இணைய செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த பாயிண்டை சொல்கிறீர்கள். உண்மை நிலை வேறு. நக்கீரன் செய்தி டுபாக்கூர் செய்தி.
வேண்டுமானால் சேட்டிலைட் போனை வைத்துக்கொள்ள செய்யாததை வேண்டுமானால் மனித தவறாக கூறலாம். பாவம் பைலட் சென்னை ஏவியேஷனை தொடர்பு கொண்டு ஐயா நாலாபுறமும் மேகம் சூழ்ந்திருக்கிறது நான் 1,500 மீட்டர் உயரத்தில் பறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த உயரத்தில் விமானங்கள் தான் பறக்கலாமாம். சாதாரணமாக ஹெலிகாப்டர்கள் 500 மீட்டர் உயரத்தில் தான் பறக்க வேண்டுமாம். சென்னை ஏவியேஷன் அதிகாரிகள் ரெஸ்பாண்ட் ஆகாததை அடுத்து அவர் வடக்கு/தெற்கு திசைகளை ( ஐதராபாத் திரும்ப வேண்டுமானாலும்/ சித்தூர் நோக்கி வரவேண்டுமானாலும் இந்த திசைகளில் தான் பயணித்திருக்க வேண்டுமாம் விட்டு கிழக்காக திருப்பியுள்ளார்.
மேலும் நமது அதிகாரிகள் எந்த அளவுக்கு பணிவானவர்கள் என்றால் வானிலை,பாதுகாப்பு விஷயங்களில் கூட தலைவர்களின் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டார்கள். சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசர் என்றால் அவரை நியமித்தது அரசு. அரசு என்றால் மக்கள். அவர் சம்பளம் வாங்குவது மக்களின் வரிப்பணத்தில்.அவர் பணி தம்மிடம் ஒப்படைத்த தலைவரின் உயிரை காப்பாற்றுவது. வானிலை சரியில்லை என்றால் பிரயாணம் கூடாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் கூற வேண்டும். இந்த கோயான் கள் தலை சொறியத்தான் லாயக்கு.
நான் பைலட்டாகயிருந்தால் வானிலை சரியில்லாத போது பயணம் செய்யவேண்டும் என்று ஒரு தலைவர் கூறியிருந்தால் ஹெலிகாப்டர் சாவியை வீசியெறிந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டிருப்பேன்.
அல்லது நானே சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசராக இருந்திருந்தால் துப்பாக்கி முனையிலாவது கேம்ப் ஆஃபீசிற்கோ, தலைமை செயலகத்துக்கோ கொண்டு சேர்த்திருப்பேன்.
இந்த டுபாகூர்களின் ஜால்ரா தனத்தால் ஒரு பெட்டர் சாய்ஸை மக்கள் இழந்து விட்டனர்.// ஆனால் அதே ஹெலிகொப்ரர்கள் குண்டு வீச்சு விமானங்கள், ராடார்கள் அப்பாவித் தமிழர் (ஒரே நாளில் 20,000) தலையில் குண்டு போட்டபோது மட்டும் ஏன் தர்ம நியாயம்ம் பற்றி சிந்திக்கவில்லை. அதுவும் ‘புண்ணிய பூமி’ இந்தியா கொடுத்த கெலிகொப்டர், ராடார்கள் மிக நன்றாக வேலை செய்ததே!!!!//
அது நம் தமிழினத்தின் தலையெழுத்து. தமிழினத்தலைவர்கள் தொடை நடுங்கிகளாக, பதவி பிரியர்களாக, சுய நல பிசாசுகளாக இருக்கும் வரை கெலிகாப்டர்கள் என்ன துடைப்ப குச்சிகள் கூட குறி தவறாது பாய்ந்து தமிழனை கொல்லும்
//(துச்சமாக பேசுவது அசிங்கமா?//
நீங்கள் இரண்டு விஷயங்களையும் போட்டு குழம்பி/குழப்புகிறீர்கள். ஒய்.எஸ்.ஆரின் இழப்பு அதன் தீவிரம் பாதிக்கவிருப்பது முதற்கண் எங்களை (ஆந்திரம் வாழ் தமிழர்கள் )
ஏதோ வயிற்றெரிச்சலை சற்றே ஆற வைக்க ஒரு அவுட் லெட்டுக்காக தான் மேற்படி பதிவை எழுதினேன். பதிவிலான விஷயம் மனித அடிப்படையிலானது. அதில் ஈழத்தமிழர்கள் விசயத்தை ப்ரஸ்தாபிக்கலாம் . ஆனால் போகிறபோக்கில் இதுக்கு என்ன சொல்றிங்க என்று வினவியிருக்கலாம்.
மரணம் என்பது இழப்புதான். அது ஒரு தலைவரின் மரணமானாலும் சரி ஒரு சாமானியனின் மரணமானாலும் சரி. மரணத்திலோ , மரணம் ஏற்படுத்தும் இழப்பிலோ பேதமில்லை. இல்லை. இல்லவே இல்லை.
//. இந்தியாவில் எனக்கு வாக்குரிமை இல்லைங்க)//
அய்யா தனிமரம் தோப்பாகாது. உங்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை இருந்திருந்தால் காங். திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவே போட்டிருப்பீர்கள் இல்லை என்று கூறவில்லை. மற்றவர்கள் நிலை என்ன ? கோழி பிரியாணி, சில்லறை, சாராயம் தானே வேலை செய்தது
//அதுமட்டுமல்ல 25 நாடுகள் கொண்டுவந்த ஐ.நா மனித உரிமை விசாரனையை, கியூபா, சீனா, லிபியா போன்ற புண்ணிய பூமிகளுடன் கைகோர்த்து கவிழ்த்து ஸ்ரீலங்காவை பாராட்டும்படி முடிவைக் கொண்டுவந்ததை என்ன வகையில் சொல்லாம்?//
கடைந்தெடுத்த கயவாளித்தனம் எனலாம்.
இதற்குத்தான் நான் ஆரம்பம் முதலே பாராளுமன்ற ஜன நாயக முறையை எதிர்த்து வருகிறேன். ஜனாதிபதி ஜன நாயகம் அமலுக்கு வரவேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன். மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவனுக்கு இது போன்ற கேணத்தனமான முடிவுகளை எடுக்கவேண்டிய தலை எழுத்து இராது என்பது என் கருத்து.