Wednesday, September 23, 2009

உளறல்கள்



எல்லா பதிவுமே உளறல் தான் . இதில் என்ன தனித்தலைப்பு என்று சிலர் கூறலாம். அது அவர்கள் கருத்து. ஆனால் என் அனைத்து பதிவுகளின் ஊடே ஒரு ஒருங்கிணைப்பு இருப்பதை உணர பஞ்ச மகா புருஷ யோகங்கள் ஐந்தும் பெற்ற ஜாதகர்களால் தான் முடியும் (ச்சும்மா பீலாங்க)

என் அத்தனை பதிவுகளுக்கும் அடிநாதம் ஒன்றே ! மேக்கிங் திஸ் ப்ளானட் சம் வாட் பெட்டர்..கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று சரித்திரம் பிரிக்கப்பட்டதை போல் என் வரவும் இந்த சரித்திரத்தை பாதிக்க வேண்டும் என்ற பேராசை எனக்குண்டு.

அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் மாறலாம். முதல்வர் படம் மாறலாம். ஆனால் தாத்தா படம் மட்டும் மாறவே மாறது ( நான் சொல்வது காந்தி மகானை). இத்தனைக்கும் அவரை போன்ற ஹிப்பாக்ரட், செல்ஃபிஷ் ,மசாக்கிஸ்ட்,எஸ்கேப்பிஸ்ட் வேறு யாரும் கிடையாது

ஆம் பாலா போன்றவர்கள் திட்டின திட்டு திட்டாமல் திட்டி தீர்த்தாலும் சரி. சொல்லவந்ததை சொல்லி விடுகிறேன். தாத்தா மட்டும் தன் சொந்த புனிதத்தை பறைசாற்றும் நோக்கத்தில் தேங்கி விடாது , ஜார்ஜ் வாஷிங்டன் போல் இந்தியாவின் முதல் பிரதமராய் பதவியேற்றிருந்தால் இந்த கேடுகெட்ட நிலைக்கு நாடு வந்திராது. அவர் கொள்கைகளில் பாடாவதி கொள்கைகள் நூறிருந்தாலும் "கிராமங்கள் உற்பத்தி கேந்திரங்களாயும், நகரங்கள் விற்பனை மையங்களாகவும் இருக்கவேண்டும்" என்ற ஒரே ஒரு கொள்கை அவரால் அமலாக்கப்பட்டிருந்தாலும் இன்றைய நகரமயமாக்கம், வலசைகள், பொல்யூஷன், ஸ்பிரிச்சுவல் நத்திங் நெஸ் யாவும் தவிர்க்கப்பட்டிருக்கும்.அவர் மட்டும் தமது மசாக்கிசத்தால் (உண்ணாவிரதங்கள்) அம்பேத்கரையும், பாஸிசத்தால் சுபாஷ் போசையும் டைல்யூட் செய்யாதிருந்திருந்தால் சரித்திரமே மாறிப்போயிருக்கும்.

சரி கதம்! கதம் !

இத்த‌னை ப‌திவுக‌ளில் நான் சொன்ன‌வ‌ற்றின், சொல்ல முயன்றதின் சாராம்ச‌த்தை இங்கு த‌ருகிறேன். இந்த‌ ப‌டைப்பே ஒரு விப‌த்து. ம‌னித‌ வாழ்வு அக்மார்க் விப‌த்து. ஒரு எல‌க்ட்ரானிக் உப‌க‌ர‌ண‌த்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,த‌ற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ள‌ன‌.

அனைத்து உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா. ஒரே உயிராய் இருந்த போது இன் செக்யூரிட்டி இல்லை, காலமில்லை, தூரமில்லை, கம்யூனிகேஷன் பிரச்சினைகள் இல்லை. ஓருடல் ஓருயிராய் வாழ்ந்த காலத்து நினைவுகள் மக்களை மீண்டும் ஓருயிராக துடிக்கச்செய்கின்றன.

ஏற்கெனவே உயிர்களிடையில் உள்ளை இணைப்பை தம் ஈகோவின் காரணத்தால் பார்க்க மறுக்கும் மனிதன் மறு இணைப்புக்கு தடை தன் உடலே என்று நம்புகிறான். உடல்களை உதிர்க்க கொல்கிறான். அ கொல்லப்பட விரும்பி செயல்படுகிறான்.கற்கால மனிதனாய் வாழ்ந்த போது இதை ஸ்தூலமாகவே செய்தான். ஸ்திர வாசத்தில் செக்ஸில் வீரிய ஸ்கலனத்தின் போது கிடைக்கும் ப்ளாக் அவுட்டை
மரணமாய் கருதி திருப்தியைடைந்தான்.

சீர்திருத்தப்பட்ட விளை நிலம் சொத்தாக உருவானது. அது தன் வாரிசுக்கே கிடைக்க வேண்டும் என்று துடித்தான். பெண்ணின் யோனியை பூட்டி வைக்க முடியாது அவளை பூட்டி அடிமையாக்கினான். அடிமையுடன் உறவாட முடியாது, இணைய முடியாது , தன் பிரதான இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது (கு.ப. செக்ஸ் மூலம் நிச்சிந்தையாய்) அதற்கொரு மாற்று ஏற்பாடாக பணத்தை உபயோகிக்க துவங்கினான்.
( ஸ்திரவாசத்தால் கிடைத்த அடிஷ்னல் க்ராப் பணமானது) பணம் செக்ஸை தரும் என்று நம்பினான். அதற்காக (தற்காலிகமாய்) செக்ஸை கூட தவிர்த்தான்.

செக்ஸை துறந்து ஈட்டிய பணத்தை கொண்டு ம்ரணத்தின் நிழல்களுடன் (இருள், தனிமை, கல்வியின்மை, நிராகரிப்பு, ஏழ்மை) மோதி தோற்றான்.
இன்றைய சைக்காலஜிஸ்டுகளும் சொல்வது இதைத்தான்.
"ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான். 1.கொல்வ‌து 2.சாவ‌து. இவை இர‌ண்டுமே செக்ஸ்,மற்றும் ப‌ண‌த்தில் கைகூடுவ‌தால் தான் ம‌னிதனுக்கு செக்ஸ் ம‌ற்றும் ப‌ண‌த்தின் மீது இத்த‌னை காத‌ல். சரி ஏன் சாக, சாகடிக்க துடிக்கிறான். உடல்களின் எண்ணிக்கையை குறைத்து ஓருயிராக மாற.

இதற்கு தீர்வென்ன ?

ஓருயிர் பல்லுயிராய் மாறினாலும் உயிர்களிடையில் உள்ள இணைப்பை உணர்தலே. அதற்கு தடை உடல்களல்ல. அகந்தை. என்ற சத்தியத்தை உணர்தலே இதற்கு தீர்வு.

முக்தி என்ப‌து என்ன? எண்ண‌ங்க‌ள் இற‌த்த‌லே முக்தி. எண்ணங்களின் மையக்கரு என்ன " நான் இந்த ஸ்ருஷ்டியில் இருந்து வேறுபட்டவன் என்ற தவறான எண்ணம். இது தான் அகந்தை . அது விலகும்போது தான் படைப்பில் விலக்கப்பட முடியாத அங்கம். தான் இந்த பூமியில் இல்லாதிருந்த காலமே இல்லை என்று அனுபவ பூர்வமாக உணர்தல் .அதுவே முக்தி.

செக்ஸில் ஆர்காச‌ம் அடையும்போது எண்ண‌ங்க‌ள் இற‌க்கின்ற‌ன. அதாவது அகந்தை இறக்கிறது. ஒரு செக‌ண்ட் ப்ளாக் அவுட் ஏற்ப‌டுகிற‌து. இதை மீண்டும் மீண்டும் பெற‌த்தான் ம‌னித‌ன் செக்ஸில் ஈடுப‌டுகிறான்.

உயிர்வாழும் இச்சை ப‌டைப்புக்கு தூண்டுகிற‌து. ப‌டைப்பால் ம‌னித‌ன் பார்ஷிய‌லாக‌ இற‌க்கிறான். டூ இன் வ‌ன். ம‌னித‌ உட‌லில் இருப்ப‌து ஒரே ச‌க்தி தான். அது காம‌ ச‌க்தி. அவ‌ன‌து செய‌ல்பாடுக‌ளை பொருத்து அது யோக‌ ச‌க்தியாக‌ மாறுகிற‌து.

செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செல‌வ‌ழித்து விட‌ முடியாத‌ அள‌வுக்கு ஆண்மை உள்ள‌வ‌னே ப‌டைப்பு தொழிலுக்கு வ‌ருகிறான். அங்கும் முழுமையாக செல‌வ‌ழியாத‌ காம‌ ச‌க்தி தான் அவ‌னை முக்திக்கு தூண்டுகிற‌து.


ப‌ண‌ம்,செக்ஸ் உத‌வியால் ஒரு ம‌னிதன் முழுமையாக‌ சாக‌வும் முடியாது ,எதிராளியை முழுமையாக‌ கொல்ல‌வும் முடியாது. தியான‌த்தால் இவைஇர‌ண்டுமே சாத்திய‌ம்.

இந்த‌ உண்மையை அனைவ‌ரும் அறிய‌ முத‌ற்க‌ண் அவ‌ர்க‌ளுக்கு செக்ஸும்,ப‌ண‌மும் த‌ங்கு த‌டையின்றி கிடைக்க‌ வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிர‌க‌ங்க‌ளின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்த‌வ‌ன் என்ற‌ முறையில்) ம‌க்கள் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌ உத‌வுவ‌தே என் ப‌திவுக‌ளின் நோக்க‌ம்.

மனித‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்றால் ப‌ய‌ம். இருட்டு ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். த‌னிமை ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். இதனால் தான் ராத்திரியில் ப‌வ‌ர் க‌ட்டானால் கூட‌ மின் நிலைய‌ங்க‌ளுக்கு போன் மேல் போன். இத‌னால் தான் 6 முத‌ல் 60 வ‌ய‌து வ‌ரை ம‌னித‌ன் காத‌லித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக‌ இரு என்றான் புத்த‌ர். எத்த‌னை பேரால் இப்ப‌டி வாழ‌ முடியும். ஏழ்மையும்,த‌னிமையும் ம‌னித‌னை வெருட்ட‌ ஆர‌ம்பிப்ப‌தால் தான் ம‌க்க‌ள் ப‌ண‌ம் ப‌ண‌ம் என்று ப‌ற‌க்கிறார்க‌ள்.ஈவ் டீசிங்,க‌ற்ப‌ழிப்புக‌ள்,க‌ள்ள‌ உற‌வுக‌ள் எல்லாமே இத‌ன் விளைவுதான்.

இத‌ற்காக‌த்தான் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை தீட்டினேன். அத‌ன் அம‌லுக்கு 1986 முத‌லாக‌ உழைத்து வ‌ருகிறேன். பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ருகிறேன்.

த‌ன‌து அடிம‌ன‌தில் உள்ள‌ ,அடிப்ப‌டை கோரிக்கைக‌ள் (சாவ‌து,சாவ‌டிப்ப‌து) செக்ஸிலோ,ப‌ண‌த்தாலே நிறைவேறாது, அது தியான‌த்தின் மூல‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம் என்று ம‌னித‌ன் அனுபவ பூர்வமாக உண‌ர‌ வேண்டுமானால் ப‌ண‌ம்,செக்ஸ் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் கிடைத்தாக‌ வேண்டும். என் நாடு சித்த‌ர்க‌ள் சூட்சும‌ வ‌டிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருமே ஞான‌ம் பெற‌வேண்டும். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌
ப‌ணம் மற்றும் செக்ஸை முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வமான வ‌ழியில் பெற‌வேண்டும். இதுவே என் கடந்த அறு நூற்று சில்லரை பதிவுகளின் சாரம்.