வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் இன உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த வெங்கடேஷின் அம்மாவுக்கு பயங்கர கோபம் "விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் .. செத்து தொலைப்பேடா "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி விட்டாள்.
இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.
வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மனம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.
மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.
வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.
கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.
(இது இத்துடன் முடிந்து போனதாக ஏமாந்து விடாதீர்கள் . மீதி கதையை சொன்னால் பதிவருக்கு அடி உதை என்று தினத்தந்தியில் செய்து வரும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் 9397036815 என்ற எண் செல் நெம்பருக்கு தொடர்பு கொண்டால் க்ளைமேக்ஸ் கூறப்படும்)