Monday, July 18, 2011

ஆண் பெண் வித்யாசங்கள்: 8 ஆம் பாவம் (3)


எட்டாம் பாவம் விபத்துகளையும் காட்டும். விபத்துல ரத்த சேதம் சகஜம். ஆனால் பெண்களுக்கு மாதவாரி ரத்த சேதம் நடக்கிறதால விபத்தும் தவிர்க்கப்படுது. (அதே நேரத்துல செவ் தோஷம் லேசா இருந்தாலும் - ஐ மீன் பரிகாரமே ஆகியிருந்தாலும் - "அந்த" விஷயத்துல இஷ்டாஆஆத்துக்குலொள்ளு பண்ணி குழந்தை பிறப்புல பிரச்சினை கொடுக்கிறதோட கருப்பை வாய்ல / கருப்பையில கேன்சர் வரை கொண்டு போயிருது. அது வேற மேட்டரு)

என்ன அண்ணே ! இப்படி ஊத்தறிங்க. விபத்துல பொம்பள சாகிறதே இல்லியா? ரத்த சேதம் நடக்கிறதே இல்லியானு கேப்பிக. சொல்றேன். பெண்ணுக்கு வீடுங்கறது சிறை. சிறையில இருக்கிறச்ச அவள் அடிமை. எட்டாம் பாவ எஃபெக்டே வேலை செய்யாது. விபத்து பிரயாணத்துலதானே நடக்குது. பிரயாணத்துல கால் காசு சுதந்திரத்தையாவது அனுபவிக்கிறாளே. அதனாலதேன் விபத்துங்கற ஆப்பு.

அஸ்குபுஸ்கு அப்ப வீட்ல விபத்து நடக்கிறதில்லையானு கேப்பிக. சொல்றேன்.எட்டாமிடம் அனானி கமெண்ட் /என் பேர்ல கமெண்ட் போடற இழவாட்டம் கெட்டு குட்டி சுவராகியிருந்தா வீட்லயும் நடக்குது. ஆனா டிமஸ்டிக் ஆக்சிடெண்ட்ஸ்ல எத்தீனி பர்சண்ட் உண்மையான விபத்துன்னும் ஒரு கேள்வி வருதே.


பெண்ணை பெத்தவனுக்கு கல்யாணத்துக்கு இன்னொரு பெண் இருந்தா / மாப்பிள்ளை வீட்ல ஆராச்சும் எஸ்.பி கிட்டே ட்ரைவரா இருந்தா கம்ப்ளெயிண்டே ஆகாது.

தப்பித்தவறி கம்ப்ளெய்ன் ஆனாலும் மாப்பிள்ளை தரப்புல மாஜி கவுன்சிலர் வந்து சிபாரிசு பண்ணாலே போலீஸ்ல எஃப்.ஐ.ஆரை மாத்திர்ராய்ங்க.

(இது மொதல் பகுதியிலயே வந்திருக்கவேண்டிய / விடுபட்டுப்போன பாய்ண்ட் இது .அதான் பொறுப்பானவர்கள் போடற மறுமொழிகளுக்கிடையில சில பிக்காலிங்க போட மரு மொழியா இருந்தாலும் பரவால்லைனு மொதல்ல சொல்ட்டேன்)

கடந்த பதிவுல என்ன சொல்லிட்டிருந்தோம்?

மனித குலம் பை பர்த் சுதந்திரத்தோட பிறக்குது.போக போக அடிமைப்பட்டு போகுது. கல்யாண் இந்த பதிவு ( ஐ மீன் கடந்த அத்யாயம்) பெண்களையே ஃபோக்கஸ் பண்ணுதுனு சொல்லியிருந்தாரு. பேலன்ஸ் பண்ணிருவம்.

ஆணும் அடிமைதேன். ஆஃபீசருக்கோ -பார்ட்னருக்கோ - ரவுடிக்கோ -தாதாவுக்கோ- கடன் காரனுக்கோ -சொத்துக்கார அப்பனுக்கோ எங்கயோ ஒரு இடத்துல அடிமையாயிர்ரான்.

இயற்கை தனக்கு தந்த சுதந்திரத்தை விலையா கொடுத்து அந்த அடிமைத்தனத்தை வாங்கிக்கிட்டதும் இவன் தேன். ஆனால் அந்த அடிமைத்தனம் தனக்குள் விளைவிக்கிற் ஆற்றாமை -கோபம் - ஆங்காரம் எல்லாத்தையும் பொஞ்சாதி மேல காட்டிர்ரான்.

இவன் வெளியிடத்துல அடிமையா இருந்து தன் ஜாதகத்துல உள்ள எட்டாம் பாவ தோஷங்களுக்கு செய்துக்கிட்ட பரிகாரம்லாம் வீட்டுக்கு வந்ததும் ஃபணால் . ஆயிருது.. ஏன்னா இங்கன இவன் பாஸ் ஆகி -தன் பாஸை விட கோரமா பொஞ்சாதிய டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ரானே.

பொஞ்சாதி தன் புருசன் பண்ண டார்ச்சரையெல்லாம் பசங்க மேல காட்டிர்ரா. ஃபேமிலி போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிருது. சி.ஐ எஸ்.ஐயை பிடிச்சு ஏறியிருப்பாரு. எஸ்.ஐ ஏ.எஸ்.ஐ ய ஏறுவாரு. ஏ.எஸ்.ஐ ஏட்டை ஏறுவாரு.ஏட்டு கான்ஸ்டபிளை -கான்ஸ்டபிள் புகார் கொடுக்க வந்த ஏழை பாழைய ஏறுவாரு.

வீடு கோவில் மாதிரி இருக்கனும் - பல்கலை கழகம் மாதிரி இருக்கனும்னு பெரியவுக சொல்றாய்ங்க. (கோவிலா இருந்தா அவா நுழைஞ்சுருவா -பல்கலைகழகமா இருந்தா ஊழல் நுழைஞ்சிரும் அது வேற சங்கதி) ஆனா ஊடு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிட்டா என்ன கதி?

ஒரு இடத்துல நடக்கக்கூடிய நல்லது கெட்டதை அந்த இடத்தோட வாஸ்து மட்டுமில்லை -அங்கே வசிக்கிறவுகளோட எண்ண அலைகளும் நிர்ணயிக்குது.

பத்து வருசத்துக்கு மிந்தி வாஸ்துன்னா இன்னான்னே தெரியாது. அப்பல்லாம் ஊடு கட்னவுங்க வாஸ்து பார்த்தா கட்டினாய்ங்க.இல்லியே. ஆனால் ஓரளவுக்காச்சும் நிம்மதியாதானே வாழ்ந்தாய்ங்க. இப்பம் மட்டும் வாஸ்து ஏன் இப்படி கச்சா முச்சான்னு பாதிக்குது.?

எண்ண அலைகள் மாறிப்போச்சு. இன்னைக்குள்ள அதே பார்லிமெண்ட்ல தான் அரியலூர் ரயில் விபத்துக்காக சாஸ்திரி ராஜினாமா பண்ணாரு. இன்னைக்குள்ள மந்திரிங்களை பிரதமர் விபத்து ஸ்தலத்தை பார்வையிட சொன்னாலே சுணங்குறாய்ங்க.

என்ன ஆச்சு? எண்ண அலைகள் மாறிப்போச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல கைதி தூக்குப்போட்டு சாவு -லாக்கப் டெத் சம்பவங்கள் நடக்க காரணம் இந்த எண்ண அலைகள் தேன்.

அடிமைங்கறவனோட உடல் வேணம்னா அடிமைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனோட எண்ணங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறதில்லையே?

ஸ்கூல்ல படு ஸ்ட்ரிக்டா இருந்து பசங்களை ட்ராயர்லயே ஒன்னுக்கிருக்க வைக்கிற வாத்தியாருங்க பொயப்ப பாருங்க. பிள்ளையே இருக்காது. இருந்தாலும் உருப்படாது.உருப்பட்டாலும் வாத்யாரை திண்ணையில உட்கார வச்சுரும். அ நல்லவயசுல செத்துப்போயிரும். இதுக்கு ஏன் அந்த மாணவர்களோட எண்ண அலைகள் காரணமா இருக்கக்கூடாது?

இங்கன வாத்யாருங்கறதுக்கு பதில் புருசன்னு வச்சு ரோசிங்க. சர்க்கிள்ள பதிவிரதா சிரோன்மணினு பேர் வாங்கின இல்லத்தரசியோட புருசன் எல்லாம் வெளி உலகத்துல டம்மி பீசா இருப்பான்.

பொஞ்சாதிக்கு பயிட்டு தூக்கறவன்லாம் லட்சத்துல புரள்வான். ஆனால் படக்குனுஅவன் பொஞ்சாதி பேஷண்டாயிரும். இவனுக்கு இன்னொரு லட்டு கிடைக்கும்.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம் அடிமையாதலோ /அடிமைப்படுத்தலோ ஆன்மாவின் இயல்பில்லை.

ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரி.நாமெல்லாம் அந்த ஆத்தாவோட அம்சம். நாமும் சுதந்திரர்கள் தேன். அதான் நம்ம இயல்பும் கூட. ஆனால் நாம இயல்புக்கு மாறா பிஹேவ் பண்ண காரணம் மரண பயம் அ மரணத்தின் மீதான கவர்ச்சி. ஆன்மாவுக்கு மாதவிலக்கில்லை - ஸ்வப்ன ஸ்கலிதமில்லை - அடச்சீ மரணமில்லைங்கறது மொதல் பாய்ண்டா வந்திருக்கனும்.

ஆனால் நாம ஆன்மாவின் நினைவையே மறந்துர்ரம். ஈகோவை ஆன்மாவா-உசுரா நினைச்சு பிரமிச்சு அதை காப்பாத்த ஆன்மாவை மலினப்படுத்திக்கறோம். ஐ மீன் ஆன்மாவின் இயல்பான சுதந்திரத்தை இழந்துர்ரோம். ( நன்றி:ஓஷோ)

சுதந்திரத்தை அனுபவிக்கிறவனுக்குத்தேன் சுதந்திரத்தோட அருமை பெருமைல்லாம் தெரியும். சுதந்திரத்தை இழந்தவன் படிப்படியா அடிமைத்தனத்தையே ஆதர்ச வாழ்வா நம்ப ஆரம்பிச்சுர்ரான். அதுல அவனுக்கு சுகம் தெரிய ஆரம்பிச்சுருது. அதையே -அடிமைத்தனத்தையே தன்னை சேர்ந்தவங்களுக்கும் பரிசா தர ஆரம்பிச்சுர்ரான்.

சந்தோசத்துல உள்ளவன் சர்வஜகத்தையும் சந்தோசப்படுத்த நினைப்பான். அவனோட சந்தோசத்துக்கு ஒரு மசுரும் தேவையில்லை.

துக்கத்துல உள்ளவன் சகலரையும் துக்கப்படுத்தத்தான் நினைப்பான். அவனோட துக்கத்துக்கு சின்ன காரணம் போதும்.

உ.ம் கடுமையான மலச்சிக்கல் உள்ளவன் பஸ் ஸ்டாண்ட் கக்கூஸு காண்ட்ராக்ட் எடுத்தானு வைங்க. ரெட்டை கட்டணம் வாங்குவான். டப்பாவுல பெரிய ஓட்டையா போட்டுவைபபன், தண்ணியே இல்லாம பண்ணுவான். கதவுக்கு தாழில்லாம ஆக்கிருவான்.

சந்தோசத்தை தர்ரது சுதந்திரம். அது ஆன்மாவின் இயல்பு. இதைத்தேன் கிட்ண பரமாத்மா சுதர்மம்ங்கறாரு.

சுதந்திரத்தை விரும்பறவன் -தன் இயல்பு நிலைய மறக்காதவன் - ஆன்மாவில் நிலை கொண்டிருப்பவன் எதிராளியை அடிமைப்படுத்தனும்னு நினைக்கமாட்டான்.

அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் இல்லாத இடத்துல வாஸ்து மசுருல்லாம் மசுரு கூட வேலை செய்யாது,அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் உள்ள இடத்துல ஆதி சங்கரரே மறுபடி வந்து ஸ்ரீசக்கர ப்ரதிஷ்டை செய்தாலும் உருப்படாது.

அடிமைப்படுதலும் - அடிமைப்படுத்துதலும் செய்பவன் ஆன்மாவோட வாசனைய கூட அறியலைனு அர்த்தம். ஆன்மாவுக்கு ஆண்,பெண் வித்யாசமில்லை - சாதி ,மதமில்லை - ஆன்மா சுதந்திரத்துல தான் பரிமளிக்குது. ஆன்மா பரிமளிக்கும் போது அங்கே அனானி கமெண்டுகளுக்கோ - மண்டையில உள்ள மஷ்டுவையெல்லாம் நரகல் நடையில வெளிபப்டுத்தறதுக்கோ வாய்ப்பே கிடையாது.

ஏதோ படத்துல தமிழ் திரையிலகின் இரு துருவங்களில் ஒரு துருவமான சிவாஜி கொள்ளையடிச்சு கோவில் கட்டற ஆழ்வார் ரோல்ல நடிக்கிறாரு. புதுமுகமான சிவகுமார் பெருமாளா வர்ராரு.

சிவகுமார் -பெண்டாட்டி சகிதமா காட்டுவழியில வர சிவாஜி கொள்ளையடிக்கிறாரு. சிவகுமாரோட கால் விரல்ல ஏதோ ஆபரணம். அதை வாயால கழட்டி எடுக்கனும் .இதான் காட்சி.

சிவாஜி சிவகுமார் காலை நோக்கி குனிஞ்சப்போ ஒரு ஷாட் - நிமிர்ந்தப்போ வாய்ல அந்த ஆபரணத்தோட ஒரு ஷாட் எடுத்துட்டா மேட்டர் ஓவர்.

ஆனால் படத்துல அப்படியா வருது? இல்லையே சிவாஜி சிவகுமாரோட கால் விரல்ல இருந்து அந்த ஆபரணத்தை வாயாலயே கழட்டறாரு.

சிவாஜி தன்னோட ஆத்மாவை கொஞ்சமாச்சும் உணர்ந்திருக்கனும். அப்பத்தேன் ஈகோங்கறது தன் ஆன்மா இல்லை - உசுரு இல்லேங்கற தெளிவு அவருக்குள்ள பிறந்திருக்கும். அந்த தெளிவின் காரணமாத்தான் அதுமாதிரி ஒரு காட்சியில நடிச்சிருக்காரு.

அடிமையோட வாழறது பெரிய ரிஸ்கு .ஏண்டான்னா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணப்போறது நிச்சயம்.

இப்பம் டிசைட் பண்ணுங்க. அடிமைப்படப்போறிங்களா? உங்க எண்ணங்களோ உங்க எஜமானருக்கு ஆப்பாயிரும். உங்க எஜமானர் மேல உங்களுக்கு உண்மையிலயே லவ் இருந்தா - உடனே புரட்சிபண்ணுங்க. அட்லீஸ்ட் இந்த பதிவொட ப்ரிண்டை அவுட்டை படிக்க கொடுங்க. இது ஆன்மாவை நோக்கிய பயணத்துக்கு அவரை திருப்பட்டும்.

இப்பம் டிசைட் பண்ணுங்க அடிமைப்படுத்தப்போறிங்களா? தனிமைப்பட்டு போவிக. தனிமை மரணத்துக்கு ட்ரெய்லர் மாதிரி. அது உங்களை இருட்டுக்கு தள்ளும். இருட்டு மரணத்துக்கு பைலட் பிராஜக்டு.

ஆன்ம நிலையில அடிமைப்படுதலும் இல்லே -அடிமைப்படுத்தலும் இல்லே. இல்லவே இல்லை. பூர்வ கருமங்கள் எதுவும் உங்களை அண்டாது .ஒண்டாது. கிண்டாது.

(ஸ் .. அ..ப் ........பாடா.. இன்னைக்கு என்னாச்சு ? பதிவே நியூஸ் ரீல் மாதிரி ஆயிருச்சு)