Tuesday, November 9, 2010

மம்மி ! ஐ லவ் யு!

மம்மிங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு. ஒன்னு எகிப்துல ஹ்யூமன் பாடில உள்ள மஷ்டுவை எல்லாம் எடுத்துட்டு பாடம் பண்ணின பிணம்.ரெண்டு தாய்.

தமிழ் ஆர்வலர்கள் மம்மிங்கற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாய்ங்க.

தாய்னு விளிச்சு முதியோர் ஆசிரமத்துல தள்றதை காட்டிலும், மம்மினு கூப்டு காலம் பூரா  வச்சு காப்பாத்தறதுதான் முக்கியம்.

செந்தமிழ்ல பேசி கழகமே குடும்பம்னு ஆரம்பிச்சு குடும்பத்தையே கழகமாக்கிக்கிட்டவுகளை விட பேச்சுத்தமிழ்ல கூட்டத்துக்கு வந்தவுகளையே காச்சு காச்சுனு காச்சின பெரியாரால தான்  வீட்டுக்கு லாபம் .நாட்டுக்கு லாபம்.

ரோஜாவை எந்த பேரால கூப்டாலும் ரோஜா ரோஜாதானே..

தாளி! தாய்த்தமிழ்ல விளிப்பு, கவைக்குதவாத கதைங்க, சென்டிமென்ட்ஸ், ஹிப்பாக்ரடிக் பிஹேவியரை விட நாம் என்ன செய்யறோம்ங்கறதுதான் முக்கியம்.

" பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா  பாவம் ரெண்டு நாளா இருமிட்டே இருக்கே.. எனக்கா மாசக்கடைசி பத்து பத்து ரூபாய்க்கு லாட்டரி - இவளுக்கா (மனைவி) உடம்பு சரியில்லை. இன்னும் நாலு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க.. டாக்டர் கிட்டே போயே தீர்ரம். இன்னைக்கு ஒரு வேளை மட்டும் பல்லை கடிச்சுக்கிட்டு சமைச்சுருமா"

இதை விட...............


"என்னாம்மே.. கெய்வி -தன் தாய்- இருமிக்கினே கடக்குது .. கெவுர்மிட்டு ஆஸ்பத்திரிக்கு கூட்னு போயி இன்னா கேடுகாலம்னு பாரு..இந்த கெய்விக்கு வைத்தியம் பார்த்தே நான் போண்டியாயிடுவன் போல கீது"

இது பெட்டர் இல்லியா?

ஒரு ஆண் (குழந்தை)  இந்த உலகத்துக்கு வந்த க்ஷணம் முதலா அவனுக்கு முலை தந்து, மடி தந்து, தன் பாதங்களை கழிவறையாக்கி, தூக்கி வச்சிக்கிட்டா இடுப்பு வலிக்குது, இறக்கி விட்டா மனசு வலிக்குதுனு வாழ்ந்த ஒரே மனித உயிர் அம்மா.

அவளை தெய்வமாக்கிர்ரது, கருப்பைய கோவிலாக்கறது ( தாளி கையோட கையா இவனை இவன் தெய்வமாக்கிக்கற பிக்காலித்தனம் இது) இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது.

குழந்தைகள் Vs பெற்றோர் ரிலேஷனை பல கோணத்துல அனலைஸ் பண்ணியிருக்கேன். ஆண் குழந்தைகள்ள  அன் மெச்சூர்டா இருக்கிறது ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸுக்கு இலக்காகும். தாய் மேல காதல் + தந்தை மேல ஒரு வித ஊமை கோபம் இருக்கிறதுதான் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்.

ஆனா ப்ராக்டிக்கலா பார்த்தா இவன் எதிர்காலத்துல ப்ளே பண்ணவேண்டியது அப்பனோட ரோலை. ஃபாலோ பண்ண வேண்டியதும் அப்பனைத்தான்.

இந்த காம்ப்ளெக்ஸ் மேட்டர் பெண்குழந்தை விஷயத்துல அப்பன் மேல காதல் அம்மா மேல பொறாமையா இருக்கும். இவள் எ.காலத்துல ப்ளே பண்ணவேண்டியது அம்மாவோட ரோலை. ஃபாலோ பண்ணவேண்டியதும் அம்மாவைத்தான்.

மெச்சூர்ட் மைண்டடா உள்ள குழந்தைகள் மேட்டர்ல யாரை ஃபோலோ பண்றதுங்கறது  கரீட்டா ஒர்க் ஆவுட் ஆயிருது.

ஜோதிஷப்படி பார்த்தா பித்ருகாரகன் (தந்தைக்கு பொறுப்பு)  சூரியன்,  மாத்ரு காரகன் (தாய்க்கு பொறுப்பு) சந்திரன். சூரியன் பலமா இருந்தா அப்பன், சந்திரன் பலமா இருந்தா ஆத்தாளை விரும்பி கவுண்டர் பார்ட்டை வெறுக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

நம்ம மேட்டர்ல பார்த்தா நம்முது கடக லக்னம், சிம்ம ராசி. ராசி நாதன் லக்னத்துல உட்கார்ந்து, லக்னாதிபதி ராசில உட்கார்ந்து பரிவர்த்தனமாகி ரெண்டு பேரும் செமை ஸ்ட்ராங்கு பாஸ்!

அதனால நமக்கு மம்மி,டாடி ரெண்டு பேர் மேட்டர்லயும் லொள்ளு கிடையாது. டீன் ஏஜ் காரணமா, விவரம் புரியாத காரணமா அப்பாவோட எளிமை, நேர்மை இத்யாதியை கேள்விக்குள்ளாக்கினது உண்டு. ஆனால் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கிடையாது.

அம்மாவுக்கும் எனக்கும் இருந்த குட் கம்யூனிகேஷன் அப்பா விஷயத்துலயும் இருந்தது. ஆனால் அப்பா தொடர்பான  விஷயங்களை எழுதினா யார் படிப்பாய்ங்கனு புரியலை.அதனால அம்மாவை பத்தியே எழுதிர்ரன்.

(அம்மாவாவே இருந்தாலும் -அவிகளும் பொம்பளை தானே -பொம்பளைன்னாலே நமக்கு ஒரு கியூரியாசிட்டி வந்துர்ரதை மறுக்க முடியுமா என்ன ?)

சரிங்க பாஸ்.. அடுத்த பதிவுல சந்திப்போம்..

Sunday, November 7, 2010

சூ மந்திரக்காளி: 2

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"ன்னு கவிஞர் தோராயமா எதுகை மோனைக்காக எழுதி  வச்சுட்டாரு.

உண்மையில பார்க்க்கப்போனா மூளையில உள்ள  நியூரான்ஸை மணலளவு பெருசாக்கினாலும் அடி முட்டாள் தலைல உள்ள நியூரான்ஸ் கூட ஒரு லோடுக்காகுமாம்.

அப்ப அறிவாளிங்க? ( நாம இந்த கேட்டகிரில இல்லிங்கண்ணா)

என்னடா ஒரு பக்கம் கௌதம புத்தர் ரேஞ்சுல  நீயே உன் ஒளியாய் இருனு  உபதேசிச்சிட்டிருந்த பார்ட்டி திடீர்னு ராம நாராயணன் சினிமா ரேஞ்சுக்கு பீலா விட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைச்சிருப்பிங்க.

ஆனா என்ன பண்றதுங்கண்ணா ஒரு தெலுங்கு  கவிதையில  நானே எழுதின மாதிரி

"வாழ்க்கை அத்யாயங்களில் தர்கம் தரிசனம் தந்தால்
என் அகந்தை  குளிர்கிறது.

அது தகர்ந்தாலோ என் சிந்தை குளிர்கிறது"

ஓகே மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.

கடந்த பதிவுல சாக்தேய சாதனைங்கற கேட்டகிரில நான் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிச்சதுதான்.

ஆனா அதுக்கே சில பல அற்புதங்கள் நடந்ததா கடைசி பத்தில கோடி காட்டியிருந்தேன்.

1.நம்ம மந்திர சக்திக்கு (?) வழில உள்ள மரத்து கிளிங்கல்லாம் வராம்பாரு வராம்பாருன்னு தங்களுக்குள்ள கம்யூனிக்கேட் பண்ணிக்கிட்டது,

- இப்ப சொல்லுமா? பார்க்க வரலாமானு சிலர் கேப்பிக. என்ன பண்றது தலை.. என் லைஃபே ஒரு டி.வி. ப்ரோகிராம் மாதிரி.ரிமோட் மட்டும் யார் கையிலயோ? படக்கு படக்குனு சானல் எகிறும்.  வந்ததை பதிவு தான் பண்ணி வைக்கமுடியுமே அதை கூட   நீங்க பார்க்க முடியாது. மேலும்  நினைச்சப்பல்லாம் சானல் மாத்தவும் முடியாது.

ஒவ்வொரு லைன் அப்பும் காதலியின் 1,116 ஆவது முத்தம் மாதிரி உறைக்காம போயிருதா நானும் கண்டுக்கிடாம விட்டுர்ரன். அந்த உணர்வு மையமே மரத்துப்போவுது. இவ்ள ஏன் அதை ரிகலெக்ட் பண்ணி சொல்லலாம்னா கூட சூடு ஆறிப்போவுது.

நூஸ்ஃபியர்ங்கற வார்த்தைய கேள்விப்படிருப்பிங்கனு நினைக்கிறேன்.  பஞ்ச பூதங்களால ஏற்படற சூழலை அட்மாஸ்ஃபியர்ங்கறோம். அது மாதிரி மனிதனோட எண்ணை அலைகளால் ஏற்படும் சூழலுக்கான வார்த்தை இது. இது மாறும்போது அகந்தை நிறைந்த மனிதர்களை வெறுக்கும் அ  நியூட்ரலா இருந்துரக்கூடிய ஜீவராசிகள் குஜிலி ஆகி குதூகலிச்சு குரல் கொடுக்கறதெல்லாம் சகஜம் பாஸ்.
நான் சொல்ற அகந்தைங்கறது ஜஸ்ட் ஈகோ மட்டுமில்லை இந்த படைப்புலருந்து தன்னை வேறா நினைக்கிற "சுயம்" உட்பட. இது ரெண்டும் எகிறிப்போனா அட்லீஸ்ட் சைடு கட்டினாலே அற்புதங்கள் நடக்குது வாத்யாரே.

அஸ்கு புஸ்கு ஆஃப்டர் ஆல் ஒரு மந்திரம் நூஸ்ஃபியரை மாத்திருமானு கேப்பிக.

மந்திரத்தோட சக்தி ஒரு பக்கம்னா நம்ம ஜீவியசரித்திரம் ஒரு பக்கம் ஒர்க் அவுட் பண்ணிருச்சுங்கண்ணா.

மந்திரத்துல கூட அந்த அளவுக்கு சரக்கு இல்லிங்கண்ணா மந்திரங்களுக்கு முந்தி ஆம்,ஹ்ரீம்,க்ரோம் அது இதுன்னு வருதே அதுகளை பீஜாக்ஷரம்ங்கறாய்ங்க. இதை பத்தி சுருக்கமா பார்ப்போம்.

அன்னையின்  சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவங்கறது இதன் அர்த்தம்

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்யுது.



எழுத்தோடு"ம்" சேரும்போது என்னாத்த அற்புதம் நடந்துரும்னு கேப்பிக

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவுங்கறது படிக்க அசூயையா இருந்தாலும் உண்மைதானே

ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்குங்கறாய்ங்க. வாய் "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுது.இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில்  நடக்குது. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடையுது.

அங்கே  பாம்பு வ‌டிவ‌த்துல  உற‌க்க‌ நிலையில் உள்ள‌தா யோக‌ நூல்க‌ள் சொல்ற  குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  குண்டலி மேல் நோக்கி  நகர ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படுது

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்னு கேப்பிக? ஏற்கெனவே ஒரு தாட்டி எழுதின மேட்டர்தான். இருந்தாலும் புது பார்ட்டிங்களுக்காக இந்த பார்ட்டை பதிவோட இறுதில தந்திருக்கேன்.

அது சரி குண்டலி யோகால்லாம் பல பிறவிகளுக்கு தொடரக்கூடிய ப்ராசஸாச்சே. அதெப்படி சில மாசங்கள்ளயே நூஸ்ஃபியர் எட்செட்ராவை எல்லாம் க்ரியேட் பண்ற ரேஞ்சுக்கு போயிருச்சுனு கேப்பிக.

மேற்சொன்ன‌ கிடு கிடு முன்னேற்ற‌த்துக்கு பெரிய்ய ஃப்ளாஷ் பேக் இருக்குங்கண்ணா.

பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "

ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)


இப்படியாக மேற்படி கிடு கிடு முன்னேற்றத்துக்கு  துணை நின்னது  ராம‌ நாம‌ம் தான்.( 1986)

முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.

டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி ஆத்தா ஆவாஹனம் ஆகி , அந்த பவரை சமாளிக்க முடியாம பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்கு பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.

பதிவின் இடையில் சொன்ன படி குண்டலி விழித்தல் மேலெழுதல் இத்யாதி நடக்கறச்ச ஏற்பட கூடிய மாற்றங்கள்:

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

குண்டலி மூலாதாரத்தில் விழிப்படைந்தால்:

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா .  குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு. இடையில் தான் பழிக்கு பழி - பைசா பொறுக்கறதுனு கொஞ்சம் பின்னடைவு. அதையும் இன்னொரு ரவுண்ட்ல பிக் அப் பண்ணிருவம்லே)

(தொடரும்)

மனைவியின் தங்கையை தேடும் நாய்கள்

மனைவியின் தங்கையை தேடும் நாய்கள்

ஒரு அரைகிறுக்குதனமான அதாவது... முன்னேற முடியாமல்... தன் பூர்வீக தன்மை இழந்து, மண் பாதையும், பனையோலை குடிசையும், டிஷ் டிவியும், செல்போனும், பெப்ஸி, கோலாவுமாக கிடந்து அல்லாடும் கிராமத்தின் வழியே இருந்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது...

ஒரு இளைஞன், ஒரு பெண், ஒரு குமரி... நல்ல கூட்டதினூடே ஏறினர்.

“ஹேய்... இந்த பக்கம் நில்லுடி... ஹேய்... நீ இப்படி வா”

தலை தூக்கி பார்க்கிறேன். ஒரு புது மணப்பெண்... அருகில் கணவன்... இன்னொருத்தி மணப்பெண்ணின் சகோதரி... முகம் ஒற்றுமை இருந்தது.

“ஹேய்... அங்கன கொஞ்சம் எடமிருக்குடி... அங்க போயிவேனா ஒக்காறேன்”

“இல்லீங்க... இங்கனயே இருக்கேன்...”

“ஆமா... என் கூடவே நில்லு...”

மணப்பெண் முகம் கலவரமானது... அவன் தொடர்ந்தான்...

“போடி.. அங்கன போய் பிரீயா உட்காரேன்”

அவள் தன் தங்கையை தள்ளிக்கொண்டு ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தாள். அவள் அமர்ந்த இடத்திலிருந்து, இவன் எதும் பேசினால்... பேருந்து இரைச்சலில் எதும் அவளுக்கு கேட்காது. அவனும், அந்த தங்கையும் என் இருக்கையின் வலது புறமாக நிற்க... அவர்களின் கைகள் என் முன்னிருக்கை மேலும், என் இருக்கையின் பின்புறத்திலும் இருந்தது.

இங்கே... இவன் ஆரம்பித்தான்... கடலை வாசம் ஆரம்பித்தது...

“நாம போயி சேர்ரதுக்கு எவ்வளோ நேரமாகுன்னு நினைக்கிற...”

“ரெண்டு மணி நேரமாகும்...”

“போடி... இந்த பஸ்ஸு போறதுக்கே ரெண்டு மணி நேரமாகும்... அங்க இருந்து ஒன்ற மணி நேரம்... தெரியுமா?”

“ஓ”

“இந்த சுவீட்லாம் கொண்டு வந்தீல... சாப்டலாம்ல...”

“ம்..ம்..”

அவன் பேருந்தின் கூட்டத்தினை பயன்படுத்தி அவளுக்கருகில், அவன் நின்ற விதம்... அந்த தங்கச்சியை சூடு படுத்திருக்குமோ என்னவோ... தலையை குனிந்தபடி நின்றிருந்தாள்... நான் அந்த மணப்பெண்ணை பார்க்க... அவள் சாலையோரங்களை பார்த்தபடி... சும்மா இவர்களை பார்த்து புன்னகைத்து வைத்தாள்...

எனக்கு DTS ல் பின்பக்கமாக வளையல் சிணுங்கல் இடக்காதிலும், வலக்காதிலும் அலைபாய்ந்தது...

பேருந்து அவனை மட்டும் நல்லா ஆட்டிவிட்டதாக கருதினேன்... அவ்வப்போது தடுமாறாமல் இருப்பதற்க்காக... அவளின் வலது தோளை இறுக்க பிடித்துக்கொண்டான். நான் தலையிலடித்துக்கொண்டேன்... (டேய்... போதும்டா... சாமி...) கடலை வாசம் ஆளை தூக்கியது...

அடுத்த அரைமணியில் வந்த நிறுத்தத்தில் சிலர் இறங்க... மணப்பெண்...

“ஏங்க... இங்க வாங்களேன்...”

“ஒங்க அக்கா... விடவே மாட்டாளாடி” இவன்

மீண்டும் வலது தோளை இறுக்க பிடித்துக்கொண்டே அந்த இருக்கைகள் நோக்கி தள்ளிக்கொண்டு(?!) போனான். அவனும், அவன் மனைவியுமாக ஒரு இருக்கையின் ஓரத்திலும், அந்த பெண் எதிர் இருக்கையின் ஓரத்திலும் அமர, மீண்டும் அவன் கடலைபோட ஆரம்பித்தான்... அந்த மணப்பெண் எதும் பேசாது... இவர்களிருவரையும் மாறி, மாறி பார்த்தவாறே இருந்தாள்.
பயண களைப்பிலும், இதுவரை கவனித்தாலும் மேற்க்கொண்டு காண சகிக்காமல் நான் கண் மூடி தியானிக்க ஆரம்பித்தேன்... (வழக்கமாக பயணத்தின் பொழுது...)

ஆனால்...

1) காய்ந்து போனவனுக்கு பொண்டாட்டி சுகம் கிடைத்து விட்டது...
2) கூடவே இலவச இணைப்பு...
3) பொண்டாட்டி பழகி விட்டாள்... இன்னொரு புதுசு எப்படியிருக்கும்...
4) ரொம்ப கடினமில்லை... சுலபமாக கவிழ்த்து விடலாம்...
5) வயது குறைவு... பயன் படுத்திக்கலாம்
6) யாரும் தப்பா நினைக்க வாய்ப்பில்லை

மனம் கணக்கு போட்டுக்கொண்டிருக்க... நான் விழித்தேன்...
ப...நா... கோவிலுக்கு போனவன் ____ நினைத்த மாதிரி இந்த நாயை நான் யோசித்துக்கொண்டிருக்கிறேனே...

Saturday, November 6, 2010

ச்சூ மந்திரகாளி : இது நாத்திகர்களுக்கான பதிவல்ல

அண்ணே வணக்கம்ணே,
சில பல காலத்துக்கு முந்தி என்னோட சாக்தேய சாதனைய ஷேர் பண்ணிக்கலாம்னு அவள்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு அம்போனு விட்டுட்டன். உங்களுக்கு மேற்படி பதிவோட அவுட் லைன் கூட மறந்தே போயிருக்கும்னு நினைக்கிறேன். அதனால இங்கன அழுத்தி அதை ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

அதனோட கடைசி பாராவ பாருங்க.

//அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட் //

பெருசா ஒன்னுமில்லை சக்தி உபாசனை ஆரம்பிச்சதும் கோபம் கொஞ்சம் அதிகமாயிருச்சு.( ஏற்கெனவே நமக்கு 'மனுஷனுக்கு' வராப்ல வரும்.) "செல்லாவிடத்து சினந்தீது"ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே. தாளி ..காசு பணமில்லாத அந்த காலத்துல கோபப்பட்டா  நம்ம பிழைப்புத்தான் நாறிப்போவும். மேலும் உஷ்ண கோளாறுகள் அதிகமாச்சு .

சரி ஆத்தா சான்னித்தியத்தாலதான் இதெல்லாம் நடக்குதுன்னு நானே ஒரு கணக்கு போட்டு ஆத்தாளை சாந்தப்படுத்த ஒரு கிளாஸ்ல மஞ்சத்தண்ணி வைக்க ஆரம்பிச்சேன்.

இந்த மேட்டர்ல ஆத்தா தன் மொதல்  திருவிளையாடலை காட்டினா. எங்கப்பன் அல்சர் பார்ட்டி எனக்கும் அல்சர் வந்துரும்ங்கற உள்ளுணர்வோ அ ஜன்ம குரு உச்சமாகி பிராமண நாக்கை கொடுத்துட்டாரோ அ செயின் ஸ்மோக்கர்ங்கற காரணத்தால நாக்கு மேல இருந்த கவரேஜ் எல்லாம் போய் காரம் அதிகமா தெரிய ஆரம்பிச்சுட்டதாலயோ காரம்ங்கறதை விலக்க ஆரம்பிச்சு வீரவன்னியத்திருமகளான என் மனைவியே "அய்யராத்து" சமையலுக்கு பழக்கப்பட்டுட்டா.

இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல திடீர்னு சாப்பாட்ல காரம் அதிகமாகி நாக்குல மூக்குல தண்ணி கொட்ட ஆரம்பிச்சா என்னனு நினைக்கிறது. எத்தனைதாட்டி தான் பொஞ்சாதிய வார்ன் பண்றது?

ஒரு நாள் ஏதோ ஸ்பார்க் ஆச்சு. ஆத்தாளுக்கு கலக்கி வச்ச மஞ்ச தண்ணிய ஒரு துளி வாய்ல விட்டு பார்த்தேன் சால்னா மாதிரி அப்படி ஒரு காரம் . படுபாவிங்க மிளகாயை அரைச்ச மிஷின்ல ஒடனே மஞ்சளை போட்டு அரைச்சாப்ல இருக்கு.

மஞ்ச தூளை மாத்தினேன். மறு நாள்ள இருந்து சமையல் ஓகே.

அப்பாறம் நம்ம மந்திர சக்திக்கு (?) வழில உள்ள மரத்து கிளிங்கல்லாம் வராம்பாரு வராம்பாருன்னு தங்களுக்குள்ள கம்யூனிக்கேட் பண்ணிக்கிட்டது,

சுக முனிவர் (கிளி மூஞ்சி) கிளி ரூபத்துல வீட்டுக்குள்ளாற வந்து கேம்ப் போட்டது.( புவனேஸ்வரி அம்மனோட அந்தப்புரத்துக்குள்ள போற கப்பாசிட்டி ஒரு ஆஞ்சனேயருக்கு அப்பாறம் சுக மகரிஷிக்குத்தேன் உண்டாம்)

மீடியம் மூலமா ஃப்யூச்சர்ல என்டர் ஆனப்ப ஒரு மியூசியத்துல பெரிய வாள்  அதுமேல நம்ம பேரு பொறிச்சிருந்தது மாதிரி மேட்டர்லாம் அடுத்தடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா

Friday, November 5, 2010

நம்ம ப்ளாகை நயனதாரா படிக்கிறாங்கங்கோ..

27/10/2010 தேதியிட்ட ஆனந்த விகடன்ல இன் பாக்ஸ் பகுதியில (பக்கம் 46) நயனதாரா பத்தி வந்த துணுக்கை பார்த்தா அப்படித்தான் தோணுது." காதலர்கள் தோற்றுப்போகலாம். காதல் தோற்பது இல்லை" என ஃபீலிங் மெசேஜ்களாக நண்பர்களுக்கு அனுப்பிக்கிட்டிருக்காய்ங்களாம். ஹாஜராகாய் ஜிக்காங்கற தலைப்புல நாம போட்ட பதிவுல " காதல் புனிதமானது . காதலர்கள் துரோகம் செய்யலாம்னு எழுதியிருந்தது ஞா இருக்கா பாஸ்!


நான் வீட்டோட கனெக்சன் வாங்கறதுக்கு முந்தி மத்தவுக ப்ளாக்ஸை படிக்கிறது ரெம்ப குறைச்சல். ஆனால் சமீப காலமா அக்கம்பத்து பேட்டைகள்ள ஒதுங்கறதால ஒரு சிலது கண்ல படுது.

சிலர் ட்விட்டர்ல போட வேண்டிய சைஸ்ல பதிவே போட்டுர்ராய்ங்க. சிலர்னா இன்னம் மோசம் நக்கலடிக்கவே பதிவு போடறாய்ங்க அதுவும் நம்ம தமிழி சினிமா நடிகைகளோட உடையளவுல.

ஆனானப்பட்ட சுஜாதாவே ஒர் ஸ்க்ரீன் அளவுக்கு எழுதினா போதும்னு சொல்லியிருக்காரு. ஆனா சனம் ட்விட்டர்,எஸ்.எம்.எஸ் ரேஞ்சுல பதிவு போட்டு கடுப்படிக்கிறாய்ங்க.

நம்மை மாதிரி பக்கம் பக்கமா எழுதச்சொல்லலே. அட்லீஸ் ஒரு ப்ளேட் பானி பூரி அளவுக்காச்சும் எழுதலாம்லியா?

"பலான மேட்டர்ல" அப்படி சுருக்கமா முடிச்சு முடிச்சு எல்லா மேட்டர்லயும் அதே பழக்கம் வந்துட்டாப்ல இருக்கு.

தீபாவளி வாழ்த்து சொன்னவுகளுக்கு நன்றி. நமக்கென்னங்கண்ணா தீபாவளி. பட்டாசு கொளுத்தலாம்னா உதறுது ,ஸ்வீட் சாப்பிடலாம்னா ராத்திரி ரெண்டு தாட்டி அதிகமா மூச்சா போயிட்டா ஷுகரானு உதறல், புதுதுணி போடலாம்னா
கண்ணாலமான புதுசுல ஒரு பேண்ட் பத்து ரூபா ஒரு ஷர்ட் அஞ்சு ரூபானு வித்து வயித்தை நிரப்பின காலம் ஞா வந்துருது.

என்ன தீபாவளியோ என்னமோ? ( ஹும்..வயசாயிருச்சு) கூடிய சீக்கிரம் நம்ம ஸ்டைல்ல ஒரு ஃபுல் மீல்ஸ் சைஸ்ல ஒரு பதிவோட வரேங்கண்ணா

எச்சரிக்கை:
சில அறிவாளிகள் ஆ.வி வெளி வந்த தேதியென்ன நீ பதிவு போட்ட தேதி என்னன்னு க்ராஸ் பண்ணுவாய்ங்க. அவிகளுக்கு தெரியாது பாவம்.. நம்ம வயசு 43 . ஒரே விஷயத்தை ரிப்பீட்டு பண்றது கிழவாடிகளோட கல்யாணகுணம். தமிழ் ஓவியா ஷீர்டி பத்தி போட்ட பதிவுக்கான கமெண்ட்லயும் இதே மேட்டரை சொல்லியிருக்கேன். அதுக்கு பல வருஷம் முந்தியிலிருந்தே நம்ம பஞ்ச் டயலாக் இது.

இப்போ சொல்லுங்க நம்ம ப்ளாகை நயன தாரா படிச்சிருப்பாய்ங்களா அ அந்த துணுக்கை எழுதின பார்ட்டி படிச்சிருக்குமா?

Thursday, November 4, 2010

அடங்கமறு... அத்துமீறு...

அடங்கமறு... அத்துமீறு...
இதை யாரு சொன்னாங்கன்னு அப்புறம் பார்க்கலாம். இப்ப இந்த வார்த்தைகளில் இருக்கிற ஆற்றலை ஆராய்வோம். இந்த பதிவு எழுதும் நேரம் மாலை 6 மணி. இப்பொழுது கொஞ்சம் பசி இருக்கிறது. வழக்கமான இரவு உணவு நேரம் 9 மணி... சாப்பிட்ட பிறகு தூக்கம்... மறுநாள் இறைவன் எனக்கு ஒரு நாளை அளித்திருந்தால் மீண்டும் காலை 6 மணிக்கு பசிக்கும்... அப்புறம்... மதியம் 1.30 மணி.... இது ஒரு தொடர்கதை... நமக்குளிருக்கிற காமத்தைப்போலவே...

நிமிர்ந்து உட்கார்ந்தாயிற்றா?

ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டால்... “அப்பாடா, என்ன சுகம், அருமையான சாப்பாடு... மறக்கமுடியாத சாப்பாடு” என்றாலும் அடுத்த 5 மணி நேரத்தில் பசியெடுக்கும்...

99.9 சதவீத ஆண்களும், பெண்களும் இதிலிருந்து தப்ப நினைத்தால்... மீண்டும், மீண்டும், ஆரம்பித்த இடத்திலேயே நிற்ப்பார்க்ள். இப்பொழுது நெஞ்சில் கை வைத்து... இல்ல சும்மாவே சொல்லுங்க... திருப்தியான காமத்திற்கு பிறகும் மனம் ஏங்குகிறது தானே? உடல் தளர்ந்து போனாலும்... அப்ப இது வரையில் இயங்கியதற்கு அர்த்தம்?

காரணம்... கொலை... அல்லது கொல்லப்படுதல்... ஞாபகம் வந்தாகணுமே... திரு. முருகேசன் சொல்லியிருக்கிறாரே... அதேதான்... அது நடந்தாலன்றி நீங்கள் அடுத்த நிலை போகவே முடியாது.

காலிப்பாத்திரத்தை கீழே போட்டால்தான் சப்தம் வரும்...

உனக்குள் இருக்கிற காமத்தை கவனி... காமத்தோடு ஒன்றாகிப்போ... தடுக்கும் மனதை எதிர்கொள்... கோஷம் போடு... அடங்கமறு... அத்துமீறு...

நீ காமத்திலிருந்து விலகிச்செல்ல அது உன் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். ஏற்றுகொண்டால் உன் தலையிலிருந்து படிப்படியாக கீழிறங்கிச்சென்றுவிடும்... காமத்தை கையாள சில பக்குவங்கள் உள்ளன... அவை... கூகுளாண்டவரிடம் கூட கிடைக்காது... அது உனக்குள்தான் இருக்கிறது... நீ எதிராளியை காமத்தினால், காமத்திற்க்காக நெருங்கும் போது... உன்னை கவனி... (யோவ்... ஜி.. அதுக்கெல்லாம் எங்கேய்யா நேரமிருக்க போகுது...)

முன்னறக் கரவாது தன்பிழை இழக்கியான்
பின்னூறு இரங்கி விடும்

அப்பவே சொல்லிட்டான்யா... நம்ம வள்ளுவன்...

காமத்தை பொறுத்தவரை... அவசரப்படுதல் கூடாது, தெரியுமா? இதைமட்டும் பழகிக்கொண்டால் வயகராவா... ந... தாரா கூட தேவையில்லை...

ஒருநாளில்லை ஒருநாள்... நீ காமத்தை கொல்லுவாய்... அல்லது காமத்தால் கொல்லப்படுவாய்...

இன்னமும், மீறலாமா? கோடு போடுங்கப்பு...

Wednesday, November 3, 2010

ஹாஜரகாய் கா ஜிக்கா

ஏதோ ஒரு படத்துல ல்தகா சைஆ இருக்கானு விஜய் கேட்பாரு.குட்டிங்க தலையை பிச்சிக்கும். இந்த ஹாஜரகாய் கா ஜிக்காவும் அந்த சாதின்னு நினைச்சுரப்போறிங்க பாஸ். இது சுத்த சைவம். இருந்தாலும் அந்த டீன் ஏஜ்ல  நம்ம மத்தில செலாவணில இருந்த ஒக்காபுலரி, கோட் நேம் ( பத்தாம் நெம்பர்,ஸ்பேடு ,மாஞ்சாலருந்து டீலக்ஸ்,சூப்பர் டீலக்ஸுனு எக்கச்சக்கம்)

1967ல பிறந்த நான் பிறக்கறச்சயே வெள்ளை தாடியோட பிறந்திருக்க முடியாதில்லையா? 1991 வரை அப்படி ஒரு கூத்துக்கும் நம்ம லைஃப்ல இடமிருந்தது.

எத்தனை வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சிங்கனு கேப்பிக அதிருக்கும் 1977ல. ஆங் ச்சொம்மா விடாதிங்க தலை.. அப்ப என்ன வயசு பத்திருக்குமா.. நாலாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்திருப்பிக. அப்ப போயி லவ்வாவது இன்னொன்னாவதுனு கேப்பிக.

இல்லை பாஸ் நெஜம் தான். சீக்கிரம ஆரம்பிச்சதால தான் சீக்கிரம் அலுத்துப்போச்சு போல.1986லருந்தே  கேள்விகள் ஆரம்பமாயிருச்சுங்கண்ணா.ஆமா அதென்ன ஹாஜரகாய் கா ஜிக்கா இப்பயாச்சும் சொல்லலாம்லியானு கேட்கறிங்க மிடிமாலமா திரிஞ்ச காலத்துல பேட்ச்ல ஹாய் ஹலோங்கறமாதிரி தான் இதுவும். நாம ஹாஜரகாய்னா எதிராளி ஜிக்காம்பான்.

லவ் பத்தி சுகுமார்ஜி போட்ட பதிவு இதையெல்லாம் ஞா படுத்தி இப்படி ஒரு பதிவை போட வச்சுருச்சுண்ணே.

//கண்களை தொலைத்தால் காதல் கிடைக்கும்//ங்கறாரு சுகுமார்ஜி.  "கொஞ்சி சிரித்தாள் என்  நெஞ்சை பறித்தாள்"னு சினிமா கவிஞர் எழுதுவார். என்னமோ பச்சை பசேல்னு இருக்குமாமேனு காதல் கரை பக்கம் ஒதுங்கினா  ஒரே ரத்தக்களறியா கிடக்கு.

இதயத்தை துளைச்சிட்டாங்கறாய்ங்க, என்ன ஆயுதத்தை உபயோகிச்சாங்கனு கேட்டா பார்வையாம்.. கண்களாம். இன்னாபா இது கூத்தா கீது.

இதுல பார்வையாலே கொல்றாங்கற கம்ப்ளெயிண்ட் வேற. எல்லாம் கிரைமாவே கிடக்குப்பா. , இதுல கண்ணை வச்சு  கண்ணை கொள்ளையடிக்கிறது, நெஞ்சை திருடறது மாதிரி மொள்ளமாரி வேலையெல்லாம் கூட உண்டு.

அப்பபோ அந்தம்மா ஜெயிலர் வேலை கூட பார்ப்பாய்ங்க. (சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்),  காதல் உலகமே தனி. சுடுகாட்டுக்கபாறம் சமத்துவம் கொலுவிருக்கிறது அங்கனதான்.  காதல்னு இறங்கிட்டா ஞானியும் முட்டாளாயிர்ரான். லாஜிக் இல்லாத உலகம் இது .பொருளோட விலையெல்லாம் படக்குனு படக்குனு எகிறிக்கும். ( குண்டு மல்லி ,குச்சி ஐஸ் உட்பட)

ஆன்மீகத்தை டீன் ஏஜர் சீந்தவே மாட்டான். ஆனால் காதலை பத்தி சொன்னா பல்லு போன கிழவாடியும் கிளுகிளுப்பா கேட்பான். ஏன்? இவன் ( டீன் ஏஜர்)  தான் கிழவாடியாகவே போறதில்லைனு நம்பறான். அவன் (கிழவாடி)  தான் காதலிச்ச காலம் இளமை பூத்துக்குலுங்குன காலம். சக்தி ஊற்றா சீறிக்கிளம்பின காலம், நெஞ்சம்ல்லாம் எதிர்காலம் பற்றின நம்பிக்கையோ கனவு ஓவர் ஃப்ளோ ஆன காலம்  திரும்பவே  போறதில்லைன்னு   உணர்ந்துக்கிட்டான்.

அதானலதான் ஆன்மீகத்தை டீன் ஏஜர் சீந்தவே மாட்டான். ஆனால் காதலை பத்தி சொன்னா பல்லு போன கிழவாடியும் கிளுகிளுப்பா கேட்பான்.

சுகுமார்ஜி " காதலை தொலைத்தால் மோட்சம் கிடைக்கும்"ங்கறார். இதை கொஞ்சம் ரோசிப்போம். ( ரெம்ப ரோசிக்க வைக்கிறாய்ங்கப்பா) .

மோட்சம்னா விடுதலை. ஜனன மரண சக்கரத்துலருந்து விடுதலை. இது கிடைக்கனும்னா உங்க கணக்குல கர்மம் இருக்கக்கூடாது. கர்மத்தை தொலைக்கனும்னா கர்ம வினைய அனுபவிக்கனும். இதை அனுபவிக்க வைக்கிறதுல  காதலிகள் தான் எக்ஸ்பெர்ட்ஸ்.

தாளி கொஞ்சம் போல காஞ்சானா இருந்திங்கனா ஏதோ படத்துல வடிவேலுவை பண்றாப்ல செப்டிக் டாங்கை க்ளீன் பண்ண வச்சுருவாளுங்க .சரிப்பா காதலி இருந்தா  நாறடிச்சு கர்மம் தொலைப்பா மோட்சம் கிடைக்கும்ங்கறே. பாயிண்ட் ஓகே அப்போ சுகுமார்ஜி சொன்னது (" காதலை தொலைத்தால் மோட்சம் கிடைக்கும்" )
தப்பானுட்டு கேப்பிக .

இல்லை பாஸ்! அவர் சொன்னதும் கரெக்டுதான்.உங்க காதல் உண்மையான காதலா இருந்து காதலுக்காக அ காதலிக்காக ( அவிக வீட்டுக்காரருக்காக இல்லிங்கண்ணா) காதலையே தொலைச்சிங்கனு வைங்க உங்க உயிரோட எக்ஸெடென்ஷனான அந்த காதல் சாகிறப்ப உங்களுக்குள்ளயும் ஏதோ செத்துப்போகுது .

ஈகோ எகிறிப்போகுது. ஆத்ம சாக்ஷாத்காரமே கிடைச்சாலும் கிடைக்கலாம். அப்போ மோட்சம் கியாரண்டி தானே.

//இப்பொழுதெல்லாம் கவிதை வாசித்தால் நான் ஏதோ புதன் கிரகத்தில் வசிப்பதான மயக்கம் ஏற்படுகிறது... எனக்கு இந்த புவியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றது.//

ஹய்யா சுகுமார்ஜிக்கு வயசாயிருச்சுங்கோ.மூளையில ஏதோ சப்டிவிசன்ஸ் இருக்காம். ஒரு டிவிஷன் கணக்கு,இரசாயணம்,துரோகம், சுய நலத்தை வச்சிருக்க, இன்னொரு டிவிசன் தாய்,தாய் நாடு, கவிதை, இலக்கியம் இத்யாதிய வச்சிருக்காம்.

இந்த ரெண்டு டிவிசனும் தராசு தட்டுமாதிரியாம். குறள் படிக்காத்தால முள்ளு நேர நிக்காதாம். அது அந்தப்பக்கம் சாயுமா இந்தப்பக்கம் சாயுமாங்கறது ஆளாளுக்கு மாறுபடும். அதே போல வயசு வயசுக்கும் மாறுபடும்போல.

//எப்போதாவது என் நண்பரோடு விவாதம் நடத்துவதுண்டு//
ஹி ஹி நான் மட்டும் எப்பவும் என்னோடயே

//"எல்லா காதலுக்கும் அடிப்படை; சுயநலமும், ஆக்கிரமிப்பும் தான்"//
இங்கே நான் முரண் படறேன், 

நம்ம சித்தாந்தம் ஞா இருக்கில்லா? அமீபா - செல் காப்பி - பல்லுயிர் - குரங்கு-மனிதன் - ஒரே உடல்ல ஒரே உயிரா இருந்த ஞா -அன்னைக்கு ஒரே உயிரா இந்ததால காலம்-  நேரம் -உறவு-பிரிவு- அபத்திரம்- கம்யூனிகேஷன் இப்படி எந்த பிரச்சினையும் இல்லாத நிச்சிந்தையான நிலை - அதை திரும்பப்பெறும் வேட்கை- ஒரே உடல் ஒரே உயிர் என்ற நிலை -  செல் காப்பி +  ஜீன்ஸ் மூலமா இது ஒவ்வொரு உயிரோட அடிமனசுக்கும் ப்ளாண்ட் ஆகி ஸ்ப்ரெட்  ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்.

இதுதான் மனிதனோட ஒவ்வொருசெயலுக்கு பின்னாடியும் கொல்லுதல் ,கொல்லப்படுதல்ங்கற இச்சையை ஒளிச்சு வச்சிருக்கோ என்னவோ? (உடலோட இணையறது காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளை இணைக்கிற மாதிரி கஷ்டமான வேலையில்லையா? - உடல்களை உதிர்த்துட்டா ச்சோ ஈஸிங்கற தாட். சனம் பிணத்துக்கு ( மாமிசம்)  அலையறத கூட இதுக்கு ஆதாரமா கொள்ளலாம்.

ஈருடல் ஓருயிரா மாற  உடலுறவு( சில நிமிசமாகிலும்) ,கர்பம் (சில மாசமாகிலும்) உதவும்ங்கற சப் கான்ஷியல் தாட்டும் காதலுக்கு ஒரு காரணமா இருக்கலாம். அவன் கைகொடுத்துட்டான்னா சமுதாயத்துல செருப்படி வாங்கனும்னு அந்த பெண்ணுக்கு தெரிஞ்சும் ஏன் திறந்து காட்டறா ( நான் மனசுல உள்ள காதலை சொன்னேன் பாஸ்!) ஈருடல் ஓருயிராகற துடிப்புத்தான் இதுக்கு காரணமா இருக்கும்.

அவளோட அம்மாவ பார்த்தாலே இவனுக்கு பத்திக்கிட்டு வரும். அவளும் அந்த வயசு வரும்போது அவ அம்மாவ போலத்தான் மாறுவானு தெரியாதா?

அவனோட அப்பாவை பார்த்தாலே இவளுக்கு பத்திக்கிட்டு வரும். அவன்மும் அந்த வயசு வரும்போது அவனோட  அப்பாவ போலத்தான் மாறுவானு தெரியாதா?

அப்பாறம் என்னாத்த லவ்வு?

இந்த படைப்பு விசாலமானது. இங்கன மனித உயிர்தான் அனாதையா கிடக்கு. மத்த உயிர் எல்லாம் இணைஞ்சிருந்தாலும் இவன் தான் ஈகோ காரணமா தீவாகி கிடக்கான். இவனுக்கு இன்செக்யூரிட்டி - இவன் உசுராத்தான் இருக்கானான்னு இவனுக்கு சந்தேகம் - அதை நினைவுப்படுத்திக்கத்தான் லவ் பண்றான்.

நீங்க உசுரோடத்தான் இருக்கிங்களாங்கற சந்தேகத்தை உங்களுக்குள்ள உருவாக்கிர்ர அளவுக்கு லைஃப்ல யந்திரத்தன்மை அதிகரிச்சுருச்சு பாஸ்.அதானாலதான் தான் உசுரோட இருக்கிற மேட்டரை தனக்கு கன்ஃபார்ம் பண்ண ஒரு பார்ட்டி தேவைப்படுது. அதுக்குத்தான் லவ்ஸ் பண்றான். சரவணபவன் அண்ணாச்சியெல்லாம் லவ்ஸ் பண்ண இதைவிட வேற காரணம் என்னவா இருக்கும்?

//1, அன்பு ஆவேசம் கொண்ட நிலைகள் வெளிப்பாடு காதல்.//

ப்ரெய்ன்ல லெஃப்ட் டிவிசனின் வேலை  இது

//2, மனம் சார்ந்த தேவையும், உடல் சார்ந்த தேவையும்.//

வெறும் உடல் சார்ந்த தேவைன்னா எஸ்கேப்பிஸ்டுங்க  தன் கையே தனக்குதவினு வாழ்ந்துருவாய்ங்க பாஸ். அட்வெஞ்சரஸா இருக்கிறவன் இரவு ராணிகளின் வேட்டையில இறங்கிருவான். செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கா குறைச்சல்? உடல் சார்ந்த தேவைங்கறது உபரி -இலவச இணைப்பு மாதிரி . மனம் சார்ந்த தேவைதான் காதலுக்கு காரணம்.

ஆனால் ஒன்னு பாஸ் சனம் பலரகம். மயில்கறியே சாப்பிடற பார்ட்டியெல்லாம் இருக்கு. வெறுமனே உடலளவுல  வாழ்ந்துர்ர சனத்துக்கு வேணம்னா நீங்க சொன்ன பாய்ண்ட் ஓகே

//3, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பொண்ணு.
4, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பையன்.//

ஓஷோ இதை வித்யாசமா சொல்றாரு. தவறான முனைதான் உடனே கவருதாம்

5, மிக முழுவதுமான முற்றிவிட்ட ஆர்வக்கோளாறு. (இருபாலருக்கும்)

//ஆர்வக்கோளாறுன்னா ரெண்டு பாலாருமே ( எந்த வயசுலயும்) அரை குறை - பயாலஜிக்கலாவே  - ஆணில் பெண் தன்மை -பெண்ணில் ஆண் தன்மை - ஷார்ட்டேஜ் ப்ராப்ளம்-  அரைக்குடம் நிச்சயம் தளும்பும். தங்களையே முழுக்க தெரிஞ்சுக்க முடியாத  கடுப்புல தாளி "பலானதை" கூட தெரிஞ்சிக்கிடலைன்னா எப்படிங்கற எரிச்சலா,இர்ரிடேஷனாத்தான்  நான் பார்க்கிறேன்

//6, எல்லாரும் செய்யும் போது, நமக்கென்ன? (இருபாலருக்கும்)//
இது ஐ.பி போடற , க்ரெடிட் கார்ட் வாங்கற மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகலாம். ஆனால் காதலை பொறுத்தவரை காதலிக்கிறவனோட உடல்ல,அசைவுல, முகத்துல,கண்ல ஒரு வித பளபளப்பு,  நான் உயிர்ப்போட இருக்கேன் பாருங்கற அறிவிப்பு, உடலளவுலயோ ,உயிரளவுலயோ இன்னொரு உயிரோட இணையப்போறென் பாரு இனி எனக்கு  காலம்-  நேரம் -உறவு-பிரிவு- அபத்திரம்- கம்யூனிகேஷன் இப்படி எந்த பிரச்சினையும் கிடையாதுங்கற அறிவிப்பு  தெரியும். ஒவ்வொரு பையனுக்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் கனலா இருக்கிற ல்தகா சைஆ வை இது தூண்டி தீயா வளர்க்குதுனு வேணம்னா சொல்லலாம்.

எச்சரிக்கை:
காதலிக்கற ஆசைங்கறத விட காதலிக்கப்படனுங்கற ஆசை தான் அவிகளை உந்துது. ஆனால் யாரோ ஒருத்தருக்காச்சும் காதலிக்க தெரிஞ்சாதான்  அடுத்தவராச்சும் காதலிக்கப்படற சுகத்தை பெற முடியும். அதானாலதான் நிறைய காதல் டப்பாக்குள்ளயே சுருண்டுருது.


//7, திட்டமில்லாத எதிர்கால, நிசப்தமான நம்பிக்கையின் வெளிப்பாடு. (!?)//

இதுக்கு கண்ணை மூடிக்கினு  ஜே போடறேன் பாஸ்.இதுக்கு காரணம் சக்தியின் ஊற்று மற்றும் வாழ்க்கை சிக்கல்களை பற்றிய அறியாமை

//8, வெறுமனே பொழுதைக்களிக்கும் மனோநிலை.//

சக்தி ஊற்றெடுக்கும் போது அதை ஏதோ ஒரு விஷயத்துல எங்கேஜ் பண்ணனும். இல்லாட்டி தான் உருவான கலத்தை  நாறடிச்சுரும்.  நாம யூத்துக்கு என்னெல்லாம் பண்ணக்கூடாதுனு தான் பாடம் படிச்சு  கடுப்பேத்தறமே தவிர இதை செய்யலாம்,அதை செய்யலாம்னு கோடி காட்டறதே கிடையாது. பொழுதை கழிக்கும் நிலைங்கறத விட உயிரின் அடிப்படை உணர்வான பரவுதலுக்கான உந்துதல், சக்தியின் வெளிப்பாடுங்கலாம்.

இங்கே எவருக்கும் இந்த நிகழ்காலம் சம்மதமில்லே. இந்த சமுதாயம் சம்மதமில்லை.கொலைகாரன் கூட குறிப்பிட்ட ஆசாமி இல்லைன்னா சமுதாயம் பெட்டராயிரும்னுதான் போட்டுத்தள்ளிர்ரானாம்.

நிகழ்காலத்தை மறக்க செய்யப்படும் முயற்சினு வேணம்னா சொல்லலாம்.  நிகழ்காலம் & சமூகத்திற்கெதிரான கண்டன தீர்மானம்னு சொல்லலாம். செக்யூரிட்டிய ஒதுக்கித்தள்ற புரட்சி (தற்கொலை முயற்சி)ன்னும் சொல்லலாம்

//9, ஆர்ப்பாட்டமான மறைமுக பால் எழுச்சி.//

பால் எழுச்சிக்கு காரணமே இன்செக்யூரிட்டிதான்.  அவிகவிக இன உறுப்போட வடிவத்தால வர்ர பிரச்சினை இது. பார்க்க இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழம்பதிவு.


10, சமுதாய அங்கீகாரத்தேவை

சமுதாயம்னு ஒட்டு மொத்தமா சொல்லாதிங்க பாஸ். சர்க்கிள்னு வேணம்னா சொல்லுங்க.*யூத் சர்க்கிள். சமுதாயத்தை லீட் பண்ற, இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பார்ட்டிகள்ள கிழவாடிங்க தான் சாஸ்தி. அவனவன் வாழ்க்கை போராட்டத்துல  ஜெயிச்சு நிக்கறதுக்குள்ள வழுக்கை, தொந்தி பிருஷ்டமெல்லாம் வாங்கிர்ரான். அவன் பார்வையில காதல்ங்கறது கிரைம் . அவனால முடியாதே அதான். இவிக லீட் பண்ற சொசைட்டில காதலால அங்கீகாரம் கிடைக்கும்ங்கறது கனவு. வேணம்னா காதலன் சினிமாட்டிக்கா காசு புரட்டிட்டா அதுக்காக அரைமனதான  அங்கீகாரம் கிடைச்சா கிடைக்கலாம்.

//"வாழ்ந்தவன், வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான், அதிலும் காதலிக்காதவன்" //

வாழ்ந்தவன்னு மொட்டையா சொல்லக்கூடாது பாஸ்!  வாழ்க்கை கடலின் ஓரமா சங்கு பொறுக்கிக்கிட்டிருந்தவனு சொல்லனும் தலை ! அவன் தான் வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான்,

காதலிக்காதவன்னா ஒலகத்துலயே கிடையாதே ..சரியா காதலிக்காதவன்னு வேணம்னா சொல்லலாம் துரை !

//இந்த தலைப்பில் எழுதும் போதும் ஒருவர் சொன்னார், "ஹோட்டலில் எப்படி   தோசை   சுடுறாங்கன்னு தெரிஞ்சா என்னைக்குமே, எங்கயுமே தோசை சாப்பிடமாட்டீங்க, தம்பி" என்றார்.
ருசி இருக்கும் போது...?//

சுகுமார்ஜி.. வழக்கமான பஞ்சை கொண்டு உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

நட்பு புனிதமானது நண்பர்கள் தான் அதை நாஸ்தி பண்ணிர்ராய்ங்க.

இணையம்  உபயோகமானது. சில நாசமுத்து போனவிகதான் அதை உபத்திரவமாக்கிர்ராய்ங்க.

காதலும் அப்படித்தான் பாஸு.. காதலர்கள் தான் அதை கலீஜு பண்ணிர்ராய்ங்க.

இந்த படைப்புல எல்லாமே டாப்பு. மன்சன் தான் டூப்பு ( ஜஸ்ட் இந்த ஈகோனால டூப்பாயிட்டான் ..இல்லைன்னா மன்சனும் டாப்பு தான்..

ரெம்ப ரோசிக்க வச்சிட்டிங்க.. அரை பாயிட்டு சிகரட்டு காலி. ஒரு கட்டு பூபால் பீடி சாம்பல்.

வாழ்த்துக்கள்.

Tuesday, November 2, 2010

தீபாவளி பரிசாக

தீபாவளி பரிசாக
கவிதை07 ஆர்வலர்களுக்கு மட்டுமே...

 






 இந்த வடிவமைப்புக்களில் உங்கள் பெயரை இணைத்து உங்கள் பிரியமானவர்களுக்கு அனுப்புங்கள்.
அனுமதி உண்டு.



 இது உங்கள் புன்னகைக்காக...






தீபாவளியை கொண்டாடுங்கள்...

அப்ப... காதலிக்க ஆரம்பிக்கலாமா?

காதலை தொலைத்தால் என்ன கிடைக்கும்?

கண்களை தொலைத்தால்
காதல் கிடைக்கும்
காதலை தொலைத்தால்
மோட்சம் கிடைக்கும்

இப்படி எழுதினா
உங்ககிட்ட
அடியும் கிடைக்கும்

பயப்படாதீங்க... கவிதை07ல் நான் கவிதை எழுதமாட்டேன்... இப்பொழுதெல்லாம் கவிதை வாசித்தால் நான் ஏதோ புதன் கிரகத்தில் வசிப்பதான மயக்கம் ஏற்படுகிறது... எனக்கு இந்த புவியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றது.

காதலுக்கு வரலாம்...

காதல் , காதல், காதல்...

எப்போதாவது என் நண்பரோடு விவாதம் நடத்துவதுண்டு. ஒரு சமயத்தில்
"எல்லா காதலுக்கும் அடிப்படை; சுயநலமும், ஆக்கிரமிப்பும் தான்" என்பது குறித்து நீண்ட விவாதம். அதில் கிடைக்கப்பெற்ற சில கருத்துக்கள்...

காதல் என்பது ...

1, அன்பு ஆவேசம் கொண்ட நிலைகள் வெளிப்பாடு காதல்.
2, மனம் சார்ந்த தேவையும், உடல் சார்ந்த தேவையும்.
3, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பொண்ணு.
4, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பையன்.
5, மிக முழுவதுமான முற்றிவிட்ட ஆர்வக்கோளாறு. (இருபாலருக்கும்)
6, எல்லாரும் செய்யும் போது, நமக்கென்ன? (இருபாலருக்கும்)
7, திட்டமில்லாத எதிர்கால, நிசப்தமான நம்பிக்கையின் வெளிப்பாடு. (!?)
8, வெறுமனே பொழுதைக்களிக்கும் மனோநிலை.
9, ஆர்ப்பாட்டமான மறைமுக பால் எழுச்சி.
10, சமுதாய அங்கீகாரத்தேவை

இப்படி கருத்துக்களை எடுத்துக்கொண்டிருக்கையில் இருவருக்குமே ஒன்று தோன்றியது. காய்சலும், தலைவலியும், காதலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

ஆனால் மிக முக்கியமான ஒன்று...
"வாழ்ந்தவன், வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான், அதிலும் காதலிக்காதவன்" என்பதுதான்.

ஆக, நாங்களும் தயார் காதலிக்க. காத்திருக்கிறோம்.

நீங்களும் கை தூக்குவது எனக்கும் தெரிகிறது.

இந்த தலைப்பில் எழுதும் போதும் ஒருவர் சொன்னார், "ஹோட்டலில் எப்படி   தோசை   சுடுறாங்கன்னு தெரிஞ்சா என்னைக்குமே, எங்கயுமே தோசை சாப்பிடமாட்டீங்க, தம்பி" என்றார்.

ருசி இருக்கும் போது...

அப்ப... காதலிக்க ஆரம்பிக்கலாமா?

Monday, November 1, 2010

வளைவு, நெளிவு, உருண்டு, திரண்டிருத்தல்

வளைவு, நெளிவு, உருண்டு, திரண்டிருத்தல்

ஒரு ஆணாக இருக்கும் ஒருவனுக்கு பெண்ணை பிடிக்கும். (சிலருக்கு ஆணை பிடிக்கும்... அது அப்புறம் பார்க்கலாம்) எந்த ஆணின் மனதிலும் ஒரு பெண் இருப்பாள்.. அது போன்ற, அந்த திட்ட அறிக்கைக்கு உட்பட்ட பெண்களை மட்டுமே பிடிக்கும்.

இதற்கு மாறான பெண்கள் நிலை நான் அறியாதது. ஓஷோ சொன்னது போல் ஒரு ஆண் பெண்ணாக மாற உலகம் ஒரு மருந்து கண்டு பிடிக்குமெயனால் அதை உட்கொள்ளும் இரண்டாவது நபராக நானிருப்பேன். அப்பொழுதுதான் பெண்கள் உலகம் எனக்கு அறிய வரும்.

வளைவு, நெளிவு, உருண்டு, திரண்டிருத்தல்... அப்படின்னா என்னவா? வீட்டு தொல்லைகாட்சியில் மானாட, மயிலாட பார்த்ததில்லையா?

முன் சுருக்கம் போதும்...

ஒரு பெண்ணை ஒருவன் பார்க்கும் பொழுதே, அந்த பெண் அவனின் நோக்கத்தை அறிந்து கொள்கிறாள். ஆணின் கண்கள் அலைந்தால் ஒரு பெண்ணும் அவனை நெருங்கமாட்டாள். முகத்தை பாராமல்... அதிலும் கண்களை பாராது பேசுபவனையும் அவள் தூரவைப்பாள்.

அப்படி அவர்கள் அன்பை பெற என்ன செய்ய வேண்டும்? பக்குவம் பெற வேண்டும்... எப்படி?

ஒரு ஓவியனாக பார்த்து பழகவேண்டும். ஓவியகல்லூரியில் பாடங்களிருக்கும்... ஒரு நிர்வாண மாடல் அமர்ந்தோ, நின்றோ இருக்க மாணவ, மாணவர்கள் அவர்களின் உடலை படித்து, கைகளில் வருவித்து காகிதத்தில் பதிவார்கள். அந்த அறை மிகுந்த அமைதியாக, கோவில் போல காட்சியளிக்கும். இந்த மாணவ, மாணவர்கள் போலான பார்வை அவசியம்.

இந்த குறியீடுகளை பாருங்கள்...


இந்த குறியீடுகளில் ஒரு பெண்ணை உணர்ந்தால் உங்களுக்கு அத்தகைய பார்வை இருக்கிறது... இல்லையானால் நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.







இப்பொழுது கவனியுங்கள்...


 
உருண்டு, திரண்டிருத்தல்... இந்த வார்த்தை கண்ணதாசன் வரிகளில் கிடைத்தது...

“வளைந்து நெளிந்து செல்லும், உருண்டு, திரண்டிருக்கும் வடிவங்கள் உண்டு... ”

இந்த பாடலின் சரணத்தில் அருமையான செய்தி இருக்கிறது...அது...
“எத்தனை கிண்ணத்தில் இட்டாலும், மது அத்தனையும் சுவை ஒன்றாகும்...இத்தனை கிண்ணத்தில் பேதமில்லை... உன் சிந்தையிலேதான் பேதமடா”

ஆனால்... இப்பொழுது இதெல்லாம் மாற்றம் அடைந்து விட்டது... திரைப்படங்களும், கணிணியும், கை பேசிகளும் ஆண், பெண் தூரத்தை குறைத்து விட்டன. எந்த வயதாக இருப்பினும்...
எல்லோருமே பருவத்தின் விளிம்பில் இருப்பதாக ஒரு மயக்கம்.

ரொம்ப போதையிலிருப்பவனுக்கு ஊறுகாய் கிடைத்தால்... விரலையா கடிப்பான்?

(கவனிக்க: ஓவியங்கள் என்னுடையவை... அனுமதி பெறவும்...) 
 .