Friday, November 21, 2008

துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்

முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.

என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்

நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது

ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு

ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்

நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது

என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது

நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்

திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.

புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்

நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்

நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை

என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்

நான் அவள் புகல்
நான் அவள் நகல்

நகல் என்ன நகல் நானே அவள்