Sunday, November 23, 2008

கங்கை காவிரி இணைப்பு:குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்.
2.நாட்டில் உள்ள‌ 10 கோடி வேல‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ளை கொண்டு சிறப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.அதை உப‌யோகித்து அனைத்து ந‌திக‌ளையும் இணைத்த‌ல்
4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ளின் ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்தி, நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை மேற்ப‌டி ச‌ங்க‌த்துக்கு குத்த‌கை அடிப்ப‌டையில் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் செய்த‌ல்
5.த‌ற்போதுள்ள‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அம‌ல் செய்த‌ல். ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள், அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிடியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிவ‌கை செய்த‌ல்