Thursday, November 20, 2008

ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்

ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.

அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.