Thursday, November 20, 2008

குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை

வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:

" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"


இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்த‌றான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.

எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.

அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்க‌ளா என்றும் மற்றொரு சம்சயம்.